Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்

Featured Replies

Tamil_News_large_1664287_318_219.jpg

 

சென்னை: மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.
துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரூம் மூத்த பத்திரிக்கையாளருமானவர் சோ.ராமசாமி. 82 வயதான இவர் உடற்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று(07-12-16) அதிகாலை சுமார் 3.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1664287&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+(Dinamalar.com+|முதல்+பக்கம்)

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம்..... ஜெயலலிதா மறைந்த.... அதிர்ச்சியில்,  இவரும் செத்துப் போனார்.

சோ ராமசாமி உடலுக்கு முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் அஞ்சலி

ops_1_11344.jpg

மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி உடலுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி இன்று அதிகாலை மாரடைப்பாளர் மரணம் அடைந்தார். அவரது உடல் எம்.ஆர்.சி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ministers_11210.jpg

இந்த நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோர் சோ ராமசாமி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

http://www.vikatan.com/news/tamilnadu/74354-cm-ops-pays-homage-to-veteran-actor-playwright-cho-ramaswamy.art

சோ ராமசாமி உடலுக்கு பிரபலங்கள் நேரில் அஞ்சலி (படங்கள்)

stalin_10288.jpg

மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி உடலுக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

vaiko_11137.jpg

உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி  இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக எம்.ஆர்.சி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,  பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

rajini_10435.jpg

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக எம்பி கனிமொழி, நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், நெப்போலியன், பாஜக எம்பி இல.கணேசன், சூர்யா, கார்த்தி, எஸ்.வி.சேகர், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், திரைப்பட தயாரிப்பாளர் ஏவி.எம் சரவணன், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

kanimoli_10528.jpg

மேலும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் எம்எல்ஏ எச்.வசந்தகுமார்,  நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், பத்திரிகை உலகில் மிகப்பெரிய ஜாம்பவனாக விளங்கியவர் சோ ராமசாமி என்று கூறினார்.

vasanthakumar_11346.jpg

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு உற்ற நண்பராக விளங்கியவர் சோ என்று கூறினார்.

திமுக எம்பி கனிமொழி கூறுகையில், சோ ராமசாமியின் இறப்பு வருத்தம் அளிக்கிறது என்று கூறினார்.

நடிகர் சிவகுமார் கூறுகையில், அகில இந்திய அளவில் அரசியல் தலைவர்களின் நன்மதிப்பை பெற்றவர். அரசியலில் எந்த பதவியையும் வகிக்காமல் நன்மதிப்பை பெற்றவர். தனக்கு சரி என்று தோன்றினால் அதை துணிச்சலோடு சொல்லக் கூடியவர் சோ" என்று புகழாரம் சூட்டினார். 

சோ ராமசாயின் உடல் இன்று மாலை 4 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/74345-celebrities-paid-their-final-respect-to-cho.art

சோ உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சசிகலா

 

sasima_14469.jpg

மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் எம்.ஆர்.சி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் ஒபிஎஸ்-ஐ தொடர்ந்து, சோ உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் சோவின் குடும்பத்தினரை சந்தித்து சசிகலா ஆறுதல் கூறினார். 

http://www.vikatan.com/news/tamilnadu/74386-sasikala--paid--last-respect-to-cho-ramaswamy.art

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல நடிகரும், எழுத்தாளருமான சோ ராமசாமி இன்று உயிரிழந்துள்ளதாக தமிழக ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தனது 82வது வயதில் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தனது துக்ளக் பத்திரிக்கையிலும் நாடகங்களிலும் அரசியல் விமர்சனம் செய்தது புகழ் பெற்ற ஒருவராவார்.

மேலும், சோ ராமசாமி தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் என்பதேடு, அவரின் சிறந்த ஆலோசகாக இருந்து வந்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதான உயிரிழந்து இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில், சோ ராமசாமி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/special/01/127348?ref=editorpick

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

சோ உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சசிகலா

 

sasima_14469.jpg

மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் எம்.ஆர்.சி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் ஒபிஎஸ்-ஐ தொடர்ந்து, சோ உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் சோவின் குடும்பத்தினரை சந்தித்து சசிகலா ஆறுதல் கூறினார். 

http://www.vikatan.com/news/tamilnadu/74386-sasikala--paid--last-respect-to-cho-ramaswamy.art

ஆரம்பம்

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் ஒரு நல்ல செய்தி பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி.
ஒரு மரணத்தில் மகிழ முடியுமா?
ஆம் 
இவன் போன்றவர்களின் மரணமே
மரணத்தில் மகிழ்தற்கு உதாரணம்.
போ
வராதே.

22 minutes ago, விசுகு said:

காலையில் ஒரு நல்ல செய்தி பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி.
ஒரு மரணத்தில் மகிழ முடியுமா?
ஆம் 
இவன் போன்றவர்களின் மரணமே
மரணத்தில் மகிழ்தற்கு உதாரணம்.
போ
வராதே.

மற்றவர்களின் மரணத்தில் மகிழ்ப்பவர்கள், மனிதரா?

நிச்சயமாக இல்லை மிருகமேதான்.

"உடைத்தார்... இணைத்தார்... !" ஆம்...இவர் உண்மையிலேயே ராஜதந்திரிதான்..!! 

 

ராஜதந்திரி

'துக்ளக்' இதழின் ஆசிரியரும், நாடக நடிகர், எழுத்தாளர், வழக்கறிஞர், ராஜதந்திரி என பன்முகத் திறமை கொண்டவருமான சோ. ராமசாமி, உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று தனது 82-வது வயதில் காலமானார்.வழக்கறிஞரான சோ, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறிது காலம் வழக்கறிஞராக இருந்துள்ளார். அதன் பின்னர் டி.டி.கே குழுமத்தில் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

இளமைக் காலத்திலேயே 23-க்கும் மேற்பட்ட நாடகங்களுக்கு கதை எழுதி இயக்கியுள்ளார் சோ. இவரது, 'முகமது பின் துக்ளக்' என்ற நாடகம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இது, பின்னாளில் திரைப்படமாகவும் வெளியானது. 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சோ, ஒருசில படங்கள் தவிர மற்ற அனைத்திலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களிலேயே நடித்துள்ளார். தனது புகழ்பெற்ற நாடகத்தில் இடம்பெற்ற 'துக்ளக்' என்ற பெயரில் இதழைத் தொடங்கி, அதற்கு இன்றளவும்நிரந்தர வாசகர்களைக் கொண்டுள்ளார். அதன் ஆசிரியராக திகழ்ந்த சோ-வின் நகைச்சுவையுடன் கூடிய அரசியல் கருத்துகளுக்காகவே இவரது இதழைப் படிப்போர் ஏராளம்.

எல்லாராலும் சோ என்று அறியப்பட்ட இவர், தமிழக முதலமைச்சராக இருந்து 5.12.2016 அன்று மறைந்த ஜெ. ஜெயலலிதாவுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். ஜெயலலிதா மறைந்து, 2 நாட்களில் சோ-வும் மரணம் அடைந்திருப்பது, இருவருக்கும் இடையே இருந்த நட்பை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. திரைத்துறையில் இருந்த காலத்திலேயே ஜெயலலிதாவுக்கும், சோ-வுக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது.

சோகல்லூரி நாட்களில் சோ, அமெச்சூர் நாடகக்குழுவில் உறுப்பினராகப் பங்கேற்று நடித்துக் கொண்டிருந்த போது, அந்த நாடகக்குழுவிற்கு தனது தாயார் சந்தியாவுடன் சிறுமியாக இருந்த ஜெயலலிதா வருவாராம். அப்போதிருந்தே, ஜெயலலிதாவும், சோ-வும் நட்பு பாராட்டியவர்கள். சோ-வை தனது சகோதரர் என்று ஜெயலலிதா பல தருணங்களில் குறிப்பிட்டுள்ளார். இந்தியா முழுவதும் உள்ள அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும், ஜெயலலிதா மீது சோ-வுக்கு எப்போதுமே தனியான சகோதரப் பாசம் உண்டு. ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆலோசகராகவும் சோ செயல்பட்டார்.

தனது அரசியல் ஆசானாக ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆருடன் முதல் முறையாக ஜெயலலிதா நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கான ஷூட்டிங்கின்போது, எம்.ஜி.ஆர் வந்தபோது, படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் எழுந்து நிற்க, ஜெயலலிதாவோ, 'அவர் என் அருகில் வந்தால் நான் வணக்கம் தெரிவிக்கிறேன். அவர் இப்படத்தின் கதாநாயகன் என்றால், நான் கதாநாயகி அவ்வளவுதான்' என்று தனக்கே உரித்தான கம்பீரத்துடன் அந்தக்காலத்திலேயே தைரியமாகவும், வெளிப்படையாகவும் கூறியவர்.

ஆணாதிக்க அரசியல்களத்தில் எத்தனையோ துரோகங்களையும், துயரங்களையும் எதிர்கொண்டு, எதிர்நீச்சல் போட்டு, தன்னை முடக்க நினைத்த சக்திகளை முடங்கிப் போகச் செய்த ஜெயலலிதா, யாருக்காகவும் எந்த நிலையிலும் தனது நிலையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காமல் துணிச்சலுடன் வாழ்நாள் இறுதிவரை போராடியவர். எந்தச் சூழ்நிலையிலும் யாரிடமும் எதற்காகவும் தலைவணங்காதவர் ஜெ. ஆனால், ஒரே ஒருவரிடம் தலைகுனிந்து ஆசி பெற்றார் என்றால், அவர் சோ மட்டுமே. தனது சகோதரராகக் கருதும் சோ-வின் 60 மற்றும் 80-வது வயது பிறந்த நாள் விழாக்களின் போது, ராஜதந்திரியான அவரிடம் தலைவணங்கி ஆசி பெற்றார் ஜெயலலிதா.

எந்தவொரு முக்கிய அரசியல் முடிவானாலும் சோ-வின் ஆலோசனையின் பேரிலேயே ஜெயலலிதா எடுப்பார். பலமுறை சோ-வை அவரது அலுவலகத்திலும், வீட்டிலும் தனியாக சந்தித்து, முக்கிய விஷயங்கள் குறித்தும், அரசியல் நிலவரம் குறித்தும் ஜெ உரையாடுவார். அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவிருக்கும் கட்சிகள், கூட்டணியில் யாரைச் சேர்த்துக் கொள்ளலாம் என்பது உள்பட இந்திய அரசியல், உலக அரசியல் என சோ-வுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து, பல தருணங்களில் ஆலோசனை நடத்தியவர். 

ஜெயலலிதாவுடன் ராஜதந்திரி சோ1996-ம் ஆண்டில் ஜி.கே. மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உருவானதில் பெரும்பங்கு சோ-வுக்கு உண்டு. அந்த நேரத்தில் சிறிது காலம், ஜெயலலிதாவுடன் முரண்பாடு கொண்டிருந்தார் சோ. ஜெயலலிதா மீது அவருக்கு ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், பல ஆண்டுகளாக கருணாநிதியைச் சந்திக்காமல் இருந்தவர், 1996-ல் சந்தித்துப் பேசினார். ரஜினியையும் நேரில் சந்தித்து, த.மா.கா-விற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அந்த வகையில், த.மா.கா உருவானதிலும், 1996-ல் தி.மு.க- த.மா.கா கூட்டணி அமைந்ததிலும், முக்கியப் பங்காற்றினார். அந்த தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்தது. சில காலம் ஜெயலலிதாவுடன் நேரடித் தொடர்பு இல்லாமல் இருந்த சோ, சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடனான நட்பை மீண்டும் ஏற்படுத்திக் கொண்டார். அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்பதற்காக காங்கிரசை விட்டு வெளியேறி, மூப்பனார் தலைமையில் த.மா.கா உருவாக முக்கியப் பங்காற்றிய சோ, அதே த.மா.கா, 2001 தமிழக சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதற்கும் ராஜதந்திரியாக இருந்து செயல்பட்டார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ், த.மா.கா, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் அ.தி.மு.க தலைமையில் பலமான கூட்டணி அமைய ராஜதந்திரம் வகுத்துக் கொடுத்த பெருமையும் சோ-வையே சேரும். இத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்று ஜெயலலிதா, இரண்டாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார். 

1999 முதல் 2005 வரை பாரதிய ஜனதா சார்பில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவி  வகித்தவர் சோ. பாரதிய ஜனதாவுக்கும் - அ.தி.மு.க-வுக்கும் இடையே பல்வேறு கருத்துகளில் முரண்பாடு ஏற்பட்ட போதெல்லாம் சோ, ஜெயலலிதாவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல் நலக்குறைவால் சோ, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது உடல்நிலை குறித்து, மருத்துவமனைக்கே நேரில் சென்று நலம் விசாரித்தார் ஜெயலலிதா. அப்போது, சோ-வுக்கு தைரியம் அளித்து ஜெ. பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 'உங்களுக்கு சரியாகி விடும் என டாக்டர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர். கவலைப்படாதீர்கள்." என்று ஜெயலலிதா சோ-விடம் கூறுவார். பதிலுக்கு ஜெயலலிதாவிடம் உடல்நலம் விசாரிப்பார் சோ. இருவரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். மிகச்சிறந்த நண்பர்களாகவும், சகோதரப் பாசத்துடனும் அரசியலிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல்வேறு ஆலோசனைகளையும், கருத்துகளையும் பகிர்ந்து கொண்ட இருவருமே இன்று இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டனர். ஒருவர் ராஜகுருவாக விளங்கியவர். மற்றவர் மக்கள் சக்திமிக்க தலைவராகத் திகழ்ந்து, அனைவரது மனங்களிலும் நீங்கா இடம்பிடித்தவர். ஆம். காலம் மிகக் கொடியது தான்! வேறென்ன சொல்ல முடியும் !!

http://www.vikatan.com/news/tamilnadu/74392-cho-is-the-real-diplomat-in-politics.art

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஜீவன் சிவா said:

மற்றவர்களின் மரணத்தில் மகிழ்ப்பவர்கள், மனிதரா?

நிச்சயமாக இல்லை மிருகமேதான்.

மிருகத்துக்கு மிருகம் அவ்வாறு தான் நன்றி சொல்லும்

பல லட்சம் உயிர்களின் அழிப்பில் மகிழ்பவரகளல்லவா..

4 minutes ago, விசுகு said:

மிருகத்துக்கு மிருகம் அவ்வாறு தான் நன்றி சொல்லும்

பல லட்சம் உயிர்களின் அழிப்பில் மகிழ்பவரகளல்லவா..

ஒரு மிருகத்தின் பேரால் ஆயிரக் கணக்கில் அழித்தது நீங்களா? சோவா?

சோ  என்ன செய்தார் - உங்கள் கொள்கைகளுக்கு முரணாக நின்றதை தவிர. 
சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் அவரையும் அழித்திருப்பீர்கள் - முடியவில்லை.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, வந்தியதேவன் said:

சென்னை: மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.

நான் எதிர்பார்த்த நல்ல செய்திகளில் இதுவும் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஜீவன் சிவா said:

ஒரு மிருகத்தின் பேரால் ஆயிரக் கணக்கில் அழித்தது நீங்களா? சோவா?

சோ  என்ன செய்தார் - உங்கள் கொள்கைகளுக்கு முரணாக நின்றதை தவிர. 
சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் அவரையும் அழித்திருப்பீர்கள் - முடியவில்லை.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

உங்களுக்கு 

எதற்கெடுத்தாலும்  புலிகளை எதற்கு ஞாபகம் வருகிறது

அதென்ன எங்கள் கொள்கை????

எனக்கு வகுப்பெடுப்பதை நிறுத்தி

விரும்பினால் நீங்கள் உங்க கருத்தையும் அனுதாபத்தையும் எழுதலாம்.

Edited by விசுகு

2 minutes ago, குமாரசாமி said:

நான் எதிர்பார்த்த நல்ல செய்திகளில் இதுவும் ஒன்று.

 

Just now, விசுகு said:

உங்களுக்கு 

எதற்கெடுத்தாலும்  புலிகளை எதற்கு ஞாபகம் வருகிறது

அதென்ன எங்கள் கொள்கை????

எனக்கு வகுப்பெடுப்பதை நிறுத்தி

விரும்பினால் நீங்கள் உங்க கருத்தையும் அனதாபத்தையும் எழுதலாம்.

பிரபாகரன் இறந்தபோது அதற்கு வெடி கொளுத்தியவர்களுக்கும் உங்களுக்கும் எனக்கு வேறுபாடு தெரியவில்லை.

சபை நாகரீகம் கருதி இதற்குமேல் வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

பிரபாகரன் இறந்தபோது அதற்கு வெடி கொளுத்தியவர்களுக்கும் உங்களுக்கும் எனக்கு வேறுபாடு தெரியவில்லை.

சபை நாகரீகம் கருதி இதற்குமேல் வேண்டாம்.

அது உங்கள் நிலைப்பாடு

அதற்காக உங்களை மிருக வகைக்குள் நான்சேர்க்கப்போவதில்லை.

அது எனது சபை நாகரீகம்.

1 hour ago, ஜீவன் சிவா said:

ஒரு மிருகத்தின் பேரால் ஆயிரக் கணக்கில் அழித்தது நீங்களா? சோவா?

போராட்டத்தில் போராடியும் அதற்க்கு சார்பாக இருந்தவர்களையும் மரணித்தபின்பும் கொச்சைப்படுத்தும் உங்களை எந்த வகையில் சேர்ப்பது?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியத்தின் புத்துயிர்ப்புக்கும் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் எதிரானவர்களின் வாய் மூடப்படுவது மகிழ்ச்சிக்குரிய விடயமே.  அது எவ்வகையில் நடக்க வேண்டுமென்பதைக் காலம் தீர்மானிக்கிறது.  நாம் அதற்குப் பொறுப்பாளிகளல்ல.  சோ ஒரு நல்ல பகுத்தறிவுப் பத்திரிகையாளர்.  அவரது எழுத்துக்களை சிறு வயதில் நானும் விரும்பிப் படித்திருக்கிறேன்.  அவர் எப்போது ஈழத்தமிழர்களுக்கெதிராகச் செயற்படத் தொடங்கினாரோ அப்போதே அவரை வெறுத்து அவரது எழுத்துகளைப் பறக்கணிக்க வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டேன்.

“கார்ட்டூன் போடவாவது ஆட்சி நீடிக்க வேண்டும்!” செம கெத்து சோ

 

சோ

றைந்த பத்திரிகையாளர்... அரசியல் விமர்சகர் சோ, தி.மு.க தலைவர் கருணாநிதியை அரசியல்ரீதியாக கடுமையாக எதிர்த்தவர். கருணாநிதி ஒருமுறை அமெரிக்கா சென்றபோது, 'வாஷிங்டனில் நல்லதம்பி' என்று துக்ளக்கில் ஒருதொடர் எழுதினார். அதில் கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்தார். 

துக்ளக் இதழின் தலையங்கங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர்களில் கருணாநிதியும் ஒருவர். அட்டைப்படத்திலும் கருணாநிதிக்கு எதிரான கார்டூன்கள் இடம்பெறத் தவறுவதில்லை. துக்ளக் ஆண்டு விழாக்களிலும் கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்வார். ஆனால், பிரதமர் இந்திரா காந்தி, 'எமர்ஜென்சியை' அறிவித்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தார் கருணாநிதி. இந்த விவகாரத்தில் சோ, கருணாநிதியுடன் உடன்பட்டார். எமர்ஜென்சிக்கு எதிராக துக்ளக்கில் எழுதினார். அரசியல் ரீதியாக தனக்கு சரி எனப் பட்டதை எழுத சோ ஒருபோதும் தயங்கியதில்லை. எனினும், கருணாநிதிக்கு எதிரான அரசியல் விமர்சனங்களை அவர் குறைத்துக் கொள்ளவில்லை.

1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, ஜெயலலிதா மீது கடும் அதிருப்தியில் இருந்த ரஜினிகாந்தை மூப்பனார், கருணாநிதிக்கு ஆதரவாகத் திருப்பி விட்டவர். அந்தக் காலகட்டத்தில் பல ஆண்டுகளாக சந்திக்காத கருணாநிதியை அறிவாலயத்துக்கே நேரில் சென்று சந்தித்தார் சோ. இருவருக்கும் இடையேயான நட்பு மீண்டும் துளிர் விட்டது. எனினும், அப்போதைய தி.மு.க ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்ட அவர் தயங்கவில்லை. 2010-ம் ஆண்டு நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில், ஒரு வாசகர் இப்படி கேள்வி கேட்டார், 'தி.மு.க ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்க வேண்டுமா?' என்று கேட்டார். இதற்குப் பதிலளித்த சோ, "ஆம் நிச்சயமாக நீடிக்க வேண்டும். அப்போதுதான் ஆட்சியை விமர்சித்து கார்டூன்கள் போட மேட்டர் கிடைக்கும்" என்று கூறி கலகலப்பை ஏற்படுத்தினார். 

இன்னொரு சமயம், சேது சமுத்திரத் திட்டம் குறித்து ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கருணாநிதி, 'ராமர் யார்? அவர் எந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தார்?' என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு சோ, கருணாநிதிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். எந்த நிலையிலும் தன் மனதில் பட்டதை... தான் எழுத நினைத்ததை அச்சமின்றி, பதிவிடாமல் அவர் இருந்ததில்லை.. அத்தகைய மிகச்சிறந்த எழுத்தாளர் இன்று நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.

http://www.vikatan.com/news/tamilnadu/74415-this-government-must-continue-then-only-we-can-sketch-parody-cartoon---cho.art

திருகு தாளங்களிலும், கபட சூழ்ச்சிகளிலும், பொய்களை செய்தியாக்குவதிலும் வல்ல சகுனி "சோ"வின் மரணம் மானிடர்களுக்கு மட்டற்ற மகிழ்வை ஏற்படுத்துவது இயல்பானதே!

படுகொலையான இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களின் ஆன்ம பலத்தால் இவரின் ஆன்மா நீண்ட நரக வேதனைகளை அனுபவிக்கட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

"ராஜபக்சேவின்.... இலங்கை அரசுக்கு, இந்தியா இன்னும்.... உதவாமல் போனது வருத்தம்.
சிங்கள இராணுவம், அப்பாவி தமிழர்களை கொல்வதை தவிர வேறு வழி இல்லை." - சோ.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

"ராஜபக்சேவின்.... இலங்கை அரசுக்கு, இந்தியா இன்னும்.... உதவாமல் போனது வருத்தம்.
சிங்கள இராணுவம், அப்பாவி தமிழர்களை கொல்வதை தவிர வேறு வழி இல்லை." - சோ.

என்ன செய்வது சிறித்தம்பி? 
நாத்தம் பிடித்த பூனைகள் எம்காலடியிலேயே இருந்து வக்காளத்து வாங்கும் போது....... 
சோ போன்ற அருவருப்புகள் இதற்கு மேலேயும் கதைக்கத்தான் செய்வார்கள்.


இன்னும் நான்கு நற்செய்திகளை எதிர்பார்த்திருக்கின்றேன்.:grin:

1 hour ago, குமாரசாமி said:

என்ன செய்வது சிறித்தம்பி? 
நாத்தம் பிடித்த பூனைகள் எம்காலடியிலேயே இருந்து வக்காளத்து வாங்கும் போது....... 
சோ போன்ற அருவருப்புகள் இதற்கு மேலேயும் கதைக்கத்தான் செய்வார்கள்.


இன்னும் நான்கு நற்செய்திகளை எதிர்பார்த்திருக்கின்றேன்.:grin:

http://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-condolence-cho-ramasamy-death/slider-pf216114-269208.html 

???????????

Edited by raja.m1982

42 minutes ago, raja.m1982 said:

பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை சோ ராமசாமி... சீமான் இரங்கல்

துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி மறைவிற்கு சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 
 
 

சென்னை: மறைந்த துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சோ மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் சீமானும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்ந்த நகைச்சுவை நடிகர், நாடக ஆசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், அரசியல் விமர்சகர், வழக்கறிஞர் என்று பல துறைகளில் தன் அறிவாற்றலால் உச்சத்தைத் தொட்ட ஆளுமை சோ இராமசாமி அவர்களின் மரணச் செய்தி மனவருத்தத்தைத் தருகிறது.

 

 
 
துணிச்சல் மிக்கவர் சோ

துணிச்சல் மிக்கவர் சோ

தான் கொண்ட கருத்தை எதற்கும் அஞ்சாமல் எடுத்து வைக்கும் துணிச்சல், அதற்கு அவர் சேர்க்கும் வலுவான வாதங்கள், எள்ளல் கலந்த எழுத்துக்கள் போன்றவை அக்கருத்திற்கு எதிரானவர்களையும் கவரும் தன்மை உடையது.

 

46 ஆண்டுகள் பத்திரிகை நடத்தி சாதித்தவர்

46 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக ஒரு இதழ் நடத்தி இன்றளவும் பல வாசகர்கள் துக்ளக்கில் அவர் எண்ணங்களையும் எழுத்துக்களையும் படிக்கக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதே அவரின் எழுத்தாளுமைக்குச் சான்று. திரைத்துறையில் பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் சோ அவர்கள் அதில் தனி முத்திரை பதித்தவர்.

 

கூர்மையான அரசியல் விமர்சகர்

திரையில் அவரின் தனித்தன்மையான உடல்மொழி பலரை கவர்ந்தது. அதே போல் அவரது அரசியல் விமர்சனங்களும் வித்தியாசமானவை, மிகக் கூர்மையானவை. தன்னுடைய விமர்சனங்களில் தவறிருப்பின் அதைத் தயங்காமல் ஒப்புக் கொண்ட நேர்மையாளராக இருந்தார்.

 

தமிழக அரசியலில் சோவின் பங்கு

கடந்த தமிழக அரசியல் வரலாற்றில் பல நேரங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஐயா சோ அவர்களின் பங்கு இருந்தது என்பது அனைவரும் அறிந்தது. அவரின் பல நிலைபாடுகளில் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தாலும் அவரின் ஆளுமையை மதிக்காமல் இருக்க முடியாது.

 

இரங்கல்கள்

ஐயா சோ இராமசாமி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் துக்ளக் வாசகர்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன் என்று சீமான் கூறியுள்ளார்.

http://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-condolence-cho-ramasamy-death-269208.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.