Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகளின் திருமணப் பரிசாக வீடில்லாத 90 பேருக்கு வீடு வழங்கும் தொழிலதிபர்

Featured Replies

மகளின் திருமணப் பரிசாக வீடில்லாத 90 பேருக்கு வீடு வழங்கும் தொழிலதிபர்

houses.jpg
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய மகளின்  திருமணப் பரிசாக வீடற்ற 90 பேருக்கு வீடுகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.   2 ஏக்கர் பரப்பளவில் நகரம் ஒன்றை  உருவாக்கி அதில் வீடுகளை அமைத்துக்  கொடுத்துள்ளார்.

ஆடைத் தொழிற்சாலை நடத்திவரும் தொழிலதிபரான  அஜய் முனாத் என்பவர்  தனது  மகள் ஸ்ரேயாவின் திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்டார்.
அதன்படி சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 1.5 கோடி ரூபா செலவில் 90 வீடுகளை கட்டி  வீடில்லாதவர்களுக்கு  பரிசாக வழங்கி உள்ளார்.
ajay-munot.jpg
வீடுகளை யாருக்கு வழங்குவது  என்பது தொடர்பில்  தனிநபர் ஏழையாக இருக்கவேண்டும், குடிசையில் வசிப்பவராக இருக்கவேண்டும், போதைக்கு அடிமையாகாதவராக இருக்க வேண்டும்  போன்ற   நிபந்தனைகளைக்  கொண்டு பயனாளர்களை தேர்வு செய்துள்ளார். அவர்   அமைத்து வழங்கியுள்ள  வீடுகளில் இதுவரை  40 குடும்பங்கள் குடியேறியுள்ளனர்.
daughter-1.jpg
இந்நடவடிக்கையை தான் பெரிதும் பாராட்டுவதாக தெரிவித்துள்ள இதுகுறித்து முனாத் மகள் ஸ்ரேயா இதை தனது  திருமண பரிசாக நினைக்கின்றேன் என மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/10416

தம்பதிகளுக்கு பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகள், இன்னும் பல ஏழைகளுக்கு உங்கள் வாழ்நாளில் உதவிடுங்கள்

5 hours ago, நவீனன் said:

அதன்படி சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 1.5 கோடி ரூபா செலவில் 90 வீடுகளை கட்டி  வீடில்லாதவர்களுக்கு  பரிசாக வழங்கி உள்ளார்.

மிகவும் நல்ல விடயம்- வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!

ஒரு முறையான...நீதியான...வரி வசூலிக்கும் திட்டம் ஒன்று நாட்டில் இருக்கும் எனில்...இப்படியான 'இரந்து வாழும் நிலை' நாட்டில் இருக்கத் தேவையில்லை!

இந்தச் சூழ்நிலை இருக்கும் வரை...நாட்டில்..எம்.ஜி.ஆர்களும், ஜெயலலிதாக்களும், கருணாநிதிகளும் தோன்றிக்கொண்டேயிருப்பார்கள்!

இலவச அரிசிகளும், இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கும் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்!

கர்ணனைப் போல...இவர்கள் 'பாரிகளாகவே' என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்!

வீடுகள் கட்டிக்கொடுத்ததை நான் வரவேற்கிறேன்! 

எனினும் என்னுள் புதைந்திருக்கும் ஏதோ ஒன்று...இவர்களை மனந்திறந்து பாராட்ட மறுக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஜீவன் சிவா said:

மிகவும் நல்ல விடயம்- வாழ்த்துக்கள்.

நானும் வாழ்த்துகிறேன்   ஆடம்பரமாக கல்யாணம் நடத்தி கோடிக்கணக்கான பணத்தை இறைத்தாலும் குடியிருக்க வீடுகளை அமைத்துக்கொடுத்து அதில் அழகு பார்க்கும் தொழிலதிபரை  வாழ்த்துகிறேன் 

9 hours ago, புங்கையூரன் said:

ஒரு முறையான...நீதியான...வரி வசூலிக்கும் திட்டம் ஒன்று நாட்டில் இருக்கும் எனில்...இப்படியான 'இரந்து வாழும் நிலை' நாட்டில் இருக்கத் தேவையில்லை!

இந்தச் சூழ்நிலை இருக்கும் வரை...நாட்டில்..எம்.ஜி.ஆர்களும், ஜெயலலிதாக்களும், கருணாநிதிகளும் தோன்றிக்கொண்டேயிருப்பார்கள்!

இலவச அரிசிகளும், இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கும் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்!

புங்கை இந்த கருத்துக்குத்தான் பச்சை போட்டேன். மற்றும்படி இவ்வாறான நாட்டில் இந்த பணத்துக்கு ஆடம்பரமாக திருமணத்தை நடத்தி இருந்திருப்பார்கள். ஆனாலும் 90 வீடுகளை கட்டி வீடில்லாதவர்களுக்கு கொடுக்கவும் ஒரு மனம் வேண்டும் - அதுக்குத்தான் வாழ்த்துக்கள்.

இலகுவில் மறக்கக் கூடியதா - நடு வீதியில் நகை மாளிகை நடந்து வந்ததை.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயம்

புலம் பெயர் தமிழர்கள் ஒவ்வொரு திருமணத்துக்கும் 

ஒவ்வொரு வீட்டை தாயகத்தில் கட்டிக்கொடுத்திருந்தால்...?

நல்லதொரு விடயத்தை என்னுள் விதைத்திருக்கிறது இந்த திருமணம்.

பார்க்கலாம்.

5 minutes ago, விசுகு said:

நல்லதொரு விடயம்

புலம் பெயர் தமிழர்கள் ஒவ்வொரு திருமணத்துக்கும் 

ஒவ்வொரு வீட்டை தாயகத்தில் கட்டிக்கொடுத்திருந்தால்...?

நல்லதொரு விடயத்தை என்னுள் விதைத்திருக்கிறது இந்த திருமணம்.

பார்க்கலாம்.

சீதனம் கேளுங்கள் - ஊரில் ஒரு வீடு சொந்த காணியுடன். அதை வீடில்லாத எவருக்காவது கொடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஜீவன் சிவா said:

சீதனம் கேளுங்கள் - ஊரில் ஒரு வீடு சொந்த காணியுடன். அதை வீடில்லாத எவருக்காவது கொடுங்கள்.

இல்லை

இது எதிர்மாறான விளைவைத்தான் தரும்

ஒரு நல்லது செய்ய

ஒரு கெட்டதை விதைக்கமுடியாது

அடுத்த தலைமுறையுடன் பேசித்தான் இதை செய்யமுடியும்

ஆனால் சீதனம் என்று பேசத்தொடங்கினாலே

தொடர்ந்து பேசமாட்டார்கள்.

காரியம் கெட்டுவிடும்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயம், வாழ்த்துக்கள்...!

2 hours ago, விசுகு said:

புலம் பெயர் தமிழர்கள் ஒவ்வொரு திருமணத்துக்கும் 

ஒவ்வொரு வீட்டை தாயகத்தில் கட்டிக்கொடுத்திருந்தால்...?

இது நடக்குமென்றா நினைக்கிறீங்கள்?  சந்தர்ப்பம் மிக மிக குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Surveyor said:

இது நடக்குமென்றா நினைக்கிறீங்கள்?  சந்தர்ப்பம் மிக மிக குறைவு.

விளக்கமாக எழுதுங்கள் தம்பி.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

நல்லதொரு விடயம்

புலம் பெயர் தமிழர்கள் ஒவ்வொரு திருமணத்துக்கும் 

ஒவ்வொரு வீட்டை தாயகத்தில் கட்டிக்கொடுத்திருந்தால்...?

நல்லதொரு விடயத்தை என்னுள் விதைத்திருக்கிறது இந்த திருமணம்.

பார்க்கலாம்.

என்னது ஒவ்வொரு திருமணத்திற்கா????? 

44 minutes ago, விசுகு said:

விளக்கமாக எழுதுங்கள் தம்பி.

நான் அறிந்தவரை,புலம் பெயர்ந்த தமிழ் மக்களில் குறைந்த சதவிகித மக்கள் மட்டும் மிகவும் வசதி வாய்ப்புகளுடன் வாழ்கின்றார்கள். பெரும்பாலான புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் வருமானம் அவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் செலவு செய்தது போக மிக குறைந்த பணமே கையிருப்பாக மிஞ்சும். இப்படி சிறுக சிறுக மிச்சம் பிடித்த பணத்தின் மூலம் தான் அவர்கள் வீட்டு நன்மை தீமை காரியங்களுக்கு பயன் படுத்துகினம். ஆகவே மிடில் கிளாஸ் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் இந்த விடையத்தில் ஈடுபடுவது என்பது மிக குறைந்த சதவிகிதத்தில்தான் சந்தர்ப்பம் உண்டு. 

சில வேளைகளில் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பிள்ளைகள் வசதியாக வாழ்ந்தாலும், அவர்கள் இப்படியான விடயங்களில் ஈடுபட அக்கறை காட்டுவார்கள் என்பதற்கான  சந்தர்ப்பம் மிக மிக குறைவு.

ஆகவே, (மிகவும்) வசதியாக வாழும் மிக்க குறைந்த சதவிகிதத்தில் உள்ள மக்கள் மட்டும்  இப்படியான விடயங்களில் ஈடுபட சந்தர்ப்பம் உள்ளது, அதுவும் அவர்களது மனதைப் பொறுத்தது.

ஆகவே, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, ஒவ்வொரு திருமணத்துக்கும் ஒரு புது வீடு கட்டிக்க கொடுப்பதென்பது சாத்தியப்பாடு குறைந்த நிகழ்வு. ஆனால், ஒவ்வொரு திருமணத்தின்போதும், தங்களால் முடிந்தளவு தாயாக மக்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்யலாம். எது எவ்வாறயினும் முடிவு என்பது அவரவர் மனதைப் பொறுத்தது.

குறிப்பு: மேலே கூறிய விடயங்களில் விதிவிலக்கான சந்தர்ப்பங்களும் உண்டு.
 
எனது அனுபவப்படி, 600 சதுர அடி (2 ரூம், ஹால், Kitchen) பரப்பளவு கொண்ட ஒரு சாதாரண வீடு கட்ட காணியை விட 17-20 லட்சம் இலங்கை ரூபாய் தேவை.

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Surveyor said:

அருமையான...அதே நேரம் நிதர்சனமான கருத்து உங்களது!

ஆனால் எமது இனத்தவரிடம் ஒரு சொறிக் குணம் ஒன்றும் உண்டு! அதனை நாள் எமது நோக்கத்துக்காகப் பயன்படுத்துவதில் தவறில்லை!

அதாவது எடுப்புக்காட்டுவதைத் தான் சொன்னேன்! காரண, காரியங்களை அவர்கள் ஆராய்வதில்லை! எந்தத் தெய்வம் என்று அவர்கள் குறிப்பிட்டோ, தேடியோ கும்பிடுவதில்லை! எல்லோரும் அல்லது சமூகத்தில் அந்தஸ்து உள்ளாவர்கள் எதைச் செய்கிறார்களோ அதையோ அவர்கள் கண்ணை மூடியபடி செய்வார்கள்! அவர்கள் கும்பிடும் தெய்வங்கள் ஆரிய தெய்வங்களா அல்லது ஐரோப்பிய தெய்வங்களா என்பதை அவர்கள் ஆராய்வதில்லை! அந்தஸ்துள்ளவர்களாகாகக் கருதப் படுபவர்கள் கும்பிடுகிறார்கள்...அதனால் நாமும் கும்பிடுவோம் என்ற மனநிலை தான் எங்களுக்கு உள்ளது! ரலி சைக்கிள் தான் முதன் முதலாக ஊருக்கு வந்தது எனில்...எல்லோருமே ரலி சைக்கிள் தான் வாங்குவார்கள்! அல்லது சிங்கர் மெசின் தான் வாங்க வேணும் என்று அடம் பிடிப்பார்கள்! ஒருவர் மகளை பென்ஸ் காரில் வைத்து ஊர்வலம் நடத்தினால் மற்றவர் பென்ஸ் காரிலோ அல்லது அதை விடவும் பெரிய காரிலோ தான் ஊர்வலம் நடத்துவார்!

அதே போல இப்படியான சமூக அந்தஸ்துள்ளதாகக் கருதப்படும் ஒருவர்...இந்த வீடு கட்டும் அல்லது வீடு கட்ட உதவும்  செயலை முன்மாதிரியாகச் செய்வாரெனின் மற்றவர்கள் அதை நிச்சயம் தொடர்வார்கள்! ஒரு சின்ன விஷயம்..அந்த வீட்டின் முன்னர் இது இரு மரபும் துய்ய ....சைவ வேளாள குலத்தில் உதித்த ....என்பவரால் அன்பளிப்பாகக் கொடுக்கப் பட்டது என்று எழுதி விட வேண்டும்!

புலம் பெயர்ந்து வாழ்பவர்களில்....மனமுள்ளவனிடம்  பணமில்லை! பணமுள்ளவனிடம் மனமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Surveyor said:

 சிந்திக்கத்  தூண்டிய,  நல்ல... கருத்து,  சேர்வயர். :)

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புங்கையூரன் said:

அருமை... புங்கை, என்னிடம் சொல்ல வார்த்தை இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, புங்கையூரன் said:

அருமை....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 15.12.2016 at 8:17 PM, நவீனன் said:

மகளின் திருமணப் பரிசாக வீடில்லாத 90 பேருக்கு வீடு வழங்கும் தொழிலதிபர்

கொடுக்க நினைப்பவனுக்கு....
உதவி செய்ய விரும்புவனுக்கு....

பிறந்தநாளும்,திருமண நாளும் , சொந்த உறவுகளின் நினைவு நாளும் அவசியமில்லை.
என்றும் எப்போதும் உதவி செய்யலாம்.

அந்த முதலாளி செய்தது....ஒருவகை விளம்பரம் இல்லையேல் ஏதாவது பிராயசித்தமாக இருக்கலாம்.

வலக்கை கொடுப்பது இடக்கையுக்கு தெரியாமல் கொடுப்பதுதான் உண்மையான உபயம்.

முன்னரெல்லாம் செல்வச்சன்னதியில்  ரியூப் லைட்டில் "உபயம் குமாரசாமி குடும்பத்தினர்" என்று லைட்டை விட பெரிதாக எழுதி தொங்கவிட்டிருப்பர்.

இப்பவும் தொங்குதா???? :cool:

14 hours ago, புங்கையூரன் said:

அருமையான...அதே நேரம் நிதர்சனமான கருத்து உங்களது!

ஆனால் எமது இனத்தவரிடம் ஒரு சொறிக் குணம் ஒன்றும் உண்டு! அதனை நாள் எமது நோக்கத்துக்காகப் பயன்படுத்துவதில் தவறில்லை!

அதாவது எடுப்புக்காட்டுவதைத் தான் சொன்னேன்! காரண, காரியங்களை அவர்கள் ஆராய்வதில்லை! எந்தத் தெய்வம் என்று அவர்கள் குறிப்பிட்டோ, தேடியோ கும்பிடுவதில்லை! எல்லோரும் அல்லது சமூகத்தில் அந்தஸ்து உள்ளாவர்கள் எதைச் செய்கிறார்களோ அதையோ அவர்கள் கண்ணை மூடியபடி செய்வார்கள்! அவர்கள் கும்பிடும் தெய்வங்கள் ஆரிய தெய்வங்களா அல்லது ஐரோப்பிய தெய்வங்களா என்பதை அவர்கள் ஆராய்வதில்லை! அந்தஸ்துள்ளவர்களாகாகக் கருதப் படுபவர்கள் கும்பிடுகிறார்கள்...அதனால் நாமும் கும்பிடுவோம் என்ற மனநிலை தான் எங்களுக்கு உள்ளது! ரலி சைக்கிள் தான் முதன் முதலாக ஊருக்கு வந்தது எனில்...எல்லோருமே ரலி சைக்கிள் தான் வாங்குவார்கள்! அல்லது சிங்கர் மெசின் தான் வாங்க வேணும் என்று அடம் பிடிப்பார்கள்! ஒருவர் மகளை பென்ஸ் காரில் வைத்து ஊர்வலம் நடத்தினால் மற்றவர் பென்ஸ் காரிலோ அல்லது அதை விடவும் பெரிய காரிலோ தான் ஊர்வலம் நடத்துவார்!

அதே போல இப்படியான சமூக அந்தஸ்துள்ளதாகக் கருதப்படும் ஒருவர்...இந்த வீடு கட்டும் அல்லது வீடு கட்ட உதவும்  செயலை முன்மாதிரியாகச் செய்வாரெனின் மற்றவர்கள் அதை நிச்சயம் தொடர்வார்கள்! ஒரு சின்ன விஷயம்..அந்த வீட்டின் முன்னர் இது இரு மரபும் துய்ய ....சைவ வேளாள குலத்தில் உதித்த ....என்பவரால் அன்பளிப்பாகக் கொடுக்கப் பட்டது என்று எழுதி விட வேண்டும்!

புலம் பெயர்ந்து வாழ்பவர்களில்....மனமுள்ளவனிடம்  பணமில்லை! பணமுள்ளவனிடம் மனமில்லை!

நீங்கள் சொல்வது சரி. ஆனாலும் பெரும்பாலான மக்களுக்கு கோவில், வாசிகசாலை போன்றவற்றுக்கு பணம் பொருள் என்பவற்றை கொடுக்கும் போது இருக்கும் உற்சாகம் உத்வேகம், கஷ்டப்பட்ட மக்களுக்கு  உதவி கொடுக்கும்போது இருப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை.tw_anguished:

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Surveyor said:

நீங்கள் சொல்வது சரி. ஆனாலும் பெரும்பாலான மக்களுக்கு கோவில், வாசிகசாலை போன்றவற்றுக்கு பணம் பொருள் என்பவற்றை கொடுக்கும் போது இருக்கும் உற்சாகம் உத்வேகம், கஷ்டப்பட்ட மக்களுக்கு  உதவி கொடுக்கும்போது இருப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை.tw_anguished:

கோவிலும் வாசிகசாலையும் உங்களுக்கு குழி பறிக்காது ஆனால் உதவி பெற்றவர்கள் குழி பறிப்பதும் ஆப்படிப்பதும் சொல்லி மாளாது.

பி.கு: சொந்த அனுபவம் - நாலுகால் வாழ்வாதார உதவி இரண்டு சில்லு மோட்டார் வண்டியானது. 

  • கருத்துக்கள உறவுகள்

மிக அர்த்தமுள்ள

தேவையான கருத்துக்களும் ஆலோசனைகளும்..

நன்றி  சகோதரர்களா..

தம்பி சேவையர்

அடிக்கடி தாயகம் போய் வருபவர்

அத்தோடு புலத்துக்கும் அடிக்கடி வந்து செல்பவர்

அதனால் தான் விளக்கமாக கேட்டேன்...

எந்த ஒரு தொடக்கமும் 

தனி ஒருவரிடமிருந்தே

ஒரு பொறியிலிருந்தே தொடங்குகிறது..

அந்தவகையில் இதுவும் எம் எவரையாவது தொட்டிருந்தால்

நிச்சயம் நல்லது நடக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

கோவிலும் வாசிகசாலையும் உங்களுக்கு குழி பறிக்காது ஆனால் உதவி பெற்றவர்கள் குழி பறிப்பதும் ஆப்படிப்பதும் சொல்லி மாளாது.

பி.கு: சொந்த அனுபவம் - நாலுகால் வாழ்வாதார உதவி இரண்டு சில்லு மோட்டார் வண்டியானது. 

மிகவும் மனதை  பாதித்த சம்பவங்கள் உள்ளது...

வேண்டாம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.