Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நுரையீரல் தொற்று காரணமாக கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி #Update

Featured Replies

நுரையீரல் தொற்று காரணமாக கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி #Update

karunadhi_00223.jpg

12:30 மணி

தற்போது, திமுக எம்.எல்.ஏவும், துணை பொது செயலாளருமான துரைமுருகன், மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று இருக்கிறார்.

12:04 மணி

காவேரி மருத்துவமனை நிர்வாகம், தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில், 'திமுகவின் தலைவரும், தமிழக முன்னாள் முதல் அமைச்சருமான கருணாநிதி காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.நுரையீரல் மற்றும் தொண்டை தொற்று காரணமாக , சுவாசக் கோளாறு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.தொற்றை சரிசெய்வதற்கான சிகிச்சைகள் தரப்படுகிறது. மருத்துவர்கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

_00477.jpg

11:58 மணி

தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் கருணாநிதியைப் பார்க்க டி.ஆர்.பாலு மருத்துவமனைக்கு வந்து இருக்கிறார். 

11:30 மணி

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி தற்போது காவேரி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, சளி தொந்தரவு அதிகரித்ததன் காரணமாகவே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

டிசம்பர் 1-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி, கடந்த 7-ம் தேதி  உடல் நலம் தேறியதைத் தொடர்ந்து வீடு திரும்பினார். இந்நிலையில் இப்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/75037-dmk-chief-karunanidhi-admitted-again-in-hospital.art

  • தொடங்கியவர்

கருணாநிதிக்கு ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை

66e08c2d-2ee2-47d4-9d6e-c7172aa89bc2_135

உடல்நலக்குறைபாடு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் நேற்று இரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில். 'சுவாசக் கோளாறு மற்றும் தொண்டை, நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மூச்சுத் திணறல் பிரச்னையை சரி செய்ய அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது.  அவருக்கு நோய் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு, மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்' என காவேரி மருத்துவமனை கூறியுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/75091-tracheostomy-treatment-for-karunanidhi.art

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட அதே ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சையில் கருணாநிதி!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தொண்டை மற்றும் நுரையீரல் நோய் தொற்றுக் காரணமாக கருணாநிதிக்கு ஐசியூவில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு, ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சையளிக்கப்படுவதாக காவிரி மருத்துவமனை வெள்ளிக்கிழமை மதியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரக்கியோஸ்டோமி என்பது சுவாச பிரச்சினை இருப்பவர்களுக்கு கடைசி கட்ட முயற்சியாக கொடுக்கப்படும் ஒரு சிகிச்சை முறையாகும்.

ட்ரக்கியோஸ்டோமி என்றால்.. தொண்டையின் நடு பகுதியில் பெரிய துளையிட்டு, அதற்குள் டியூப்பை நுழைத்து, டியூப் மூலம் காற்று குழாயை இணைத்து நுரையீரலுக்கு நேரடியாக ஆக்சிஜனை கொண்டு சேர்க்கும் சிகிச்சை நடைமுறை ட்ரக்கியோஸ்டோமி என்று அழைக்கப்படுகிறது.

மூச்சு குழாய் தொண்டையிலுள்ள மூச்சு குழல் சேதமடைந்திருந்தால் இதுபோன்ற செயற்கை முறையிலான சுவாசம் அவசியப்படுகிறது. நோய் தொற்று காரணமாக தொண்டையிலிருந்து நுரையீரல் செல்லும் குழாய் பாதிக்கப்பட்டிருக்கும்போதும், ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை கொடுக்கப்படுகிறது.

தொண்டையில் அறுவை சிகிச்சை தொண்டையில் ஓட்டை போட்டு டியூபை பெருத்திய பிறகு அந்த பகுதியை சுற்றிலும் தையல் போடப்படும். தொண்டையில் பொருத்தப்படும் டியூபை தேவைப்படும்போது எடுத்துவிடுவார்கள். தேவைப்படும்போது பொருத்திக்கொள்வார்கள். ஆனால் தொண்டையில் பொருத்தப்பட்ட இணைப்பு குழாய் அப்படியே இருக்கும்.

குணமடையும்போதே அகற்றம்

கையில் ட்ரிப்ஸ் போடும்போது, அவ்வப்போது டியூப்பை எடுத்துவிட்டாலும், கையில் பொருத்தப்பட்ட இணைப்பு குழாய் அப்படியே விட்டிருப்பார்கள். அதைப்போலவே ட்ரக்கியோஸ்டோமி குழாயும் கழுத்தில் அப்படியே இருக்கும் என கூறப்படுகிறது. முழுமையாக நோயாளி குணமடையும்போதுதான், அந்த இணைப்பு குழாய் எடுக்கப்படும்.

ரிஸ்க்கான சிகிச்சை

ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை முறை கொஞ்சம் ரிஸ்க்கானது. அனுபவம் மிக்க டாக்டர்கள்தான் அதை மேற்கொள்ள வேண்டும். பக்க விளைவுகள் ஏற்படாமல் தொடர்ச்சியாக கண்காணிப்பில் வைக்க வேண்டும். எனவேதான், டாக்டர்கள் பொதுவாக இந்த சிகிச்சை முறையை கடைசி ஆப்ஷனாக பயன்படுத்துவது வழக்கம்.

ஜெயலலிதாவுக்கும் சிகிச்சை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் நுரையீரல் நோய் தொற்று காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் உதவியோடு அவர் பேசினார் என அப்பல்லோ ஒருமுறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/what-is-tracheostomy-treatment-how-it-is-performing/slider-pf216744-269869.html

  • தொடங்கியவர்

கருணாநிதியின் உடல்நலத்தில் என்னதான் பிரச்னை? #KauveryUpdates

கருணாநிதி

காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார் தி.மு.க தலைவர் கருணாநிதி.  கடந்த ஏழாம் தேதிதான் உடல்நலம் பெற்று காவேரி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் மீண்டும் நேற்று இரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கருணாநிதி. காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 'கருணாநிதிக்கு நுரையீரல் தொற்று இருப்பதால் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் உடல்நலத்தில் என்னதான் பிரச்சனை?

93 வயதைக் கடந்தும் நல்ல ஆரோக்கியத்துடன் கருணாநிதி செயல்பட்டு வருவதற்கான ரகசியம் அவரது ஓயாத உழைப்பும், சுறுசுறுப்பும்தான்.  ஆனால், தற்போது முதுமையின் தாக்கம் கருணாநிதியையும் கொஞ்சம் சோர்வடையச் செய்திருக்கிறது. 
'கருணாநிதியின் இத்தனை ஆண்டுகால பொதுவாழ்க்கையில், வீட்டில் இத்தனை நாட்கள் முடங்கிக் கிடந்ததே கிடையாது. இதுவே அவருக்கு மனரீதியாக பெரும் சோர்வினை  ஏற்படுத்திவிட்டது. உடல்நலத்தின் மீது அதிக அக்கறை கொண்ட கருணாநிதிக்கு ஒவ்வாமைப் பிரச்னையால் உடலில் கொப்புளங்கள் உருவானது. இந்தக் கொப்புளங்கள் ஏற்படுத்திய வலியால் துடித்துப் போனவர் சிகிச்சைக்குப் பின்னர் நலம் பெற்றார். ஆனால், இப்போது அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளது' என்கிறார்கள் கருணாநிதிக்கு நெருக்கமானவர்கள்.

இன்றைய இளைய தலைமுறையினர் 30 வயதுக்குள்ளேயே ரத்த அழுத்தம், சர்க்கரை பாதிப்பு, இதய பிரச்சனை என்று பல்வேறு நோய்களுடன் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். ஆனால் 93 வயதாகும் கருணாநிதிக்கு இதுவரை சர்க்கரை நோய் இல்லை, ரத்த அழுத்தமும் ஓரே சீராகத்தான் இருக்கிறது.

ஆனால், சமீப நாட்களாக உணவு எடுத்துக்கொள்ளவதில் மட்டும் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. இருமல் அதிகம் இருந்ததால் உணவு எடுத்துக்கொள்ள முடியாமல் தவித்தார். உணவு சாப்பிடும் நேரத்தில் இருமல் வருவதால்,  செருமல் ஏற்பட்டு மூச்சுத் திணறல் அதிகமாகிவிடுகிறது. நுரையீரலில் சளி அதிகம் இருந்ததால் மூச்சுவிடுவதற்கும் சிரமப்பட்டுள்ளார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இரண்டு நாட்கள் நலமாக இருந்தார். அதன்பின்னர் அவருக்கு மூச்சுத் திணறல் பிரச்னை வந்துவிட்டதால்,

கடந்த சில நாட்களாக கோபாலபுரம் வீ்டே மினி மருத்துவமனையாக மாறிவிட்டது. வீட்டுக்கே வந்து பரிசோதித்த மருத்துவர்கள் 'நுரையீரலில் சளி இருப்பதால்தான் மூச்சுத்திணறல் வருகிறது' என்று கூறி அதைச் சரிசெய்ய  மூக்கில் டியூப் செலுத்திய பின்னர்தான் கருணாநிதிக்கு சீரான சுவாசம் கிடைத்துவந்தது. ஆனாலும் இரவு நேரங்களில் மறுபடியும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தூக்கம் இல்லாமல் தவித்து வந்தார்.  இரவு நேரங்களில் அதிகரிக்கும் பனி மற்றும் காற்றின் ஈரப்பதம் ஆகியவற்றால், இந்தத் தொந்தரவு மேலும் அதிகரித்துள்ளது. 

பசித்தாலும், உணவு உட்கொள்ள முடியாத பிரச்னையால், உடல் சோர்வும் ஏற்பட்டது. திட உணவுகளை எடுத்துக்கொள்ள முடியாமல் போனதால், கடந்த சில நாட்களாக டியூப் வழியாகவே திரவ உணவு வகைகளை அவருக்கு கொடுத்துவந்துள்ளனர். இரண்டு நாட்களாக தொடர் மருத்துவக் கண்காணிப்பிலேயே இருந்துவந்தார். மருத்துவர் தேவராஜனின் ஆலோசனையின்பேரில், இப்போது மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.

தற்போது நுரையீரலில் இருந்து சளியை அகற்றும் சிகிச்சையை மேற்கொண்டு  வந்தார்கள். மூக்காலும், வாயாலும் சுவாசிக்க முடியாத நிலை இருந்ததால், மருத்துவர்கள் ஆலோசனை செய்து ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சையை தற்போது மேற்கொண்டுள்ளனர். நுரையீரலின்  பணியை இந்த இயந்திரம் செய்யும். 

 ''முதுமையின் காரணமாக உடல் இயக்கங்களும் குறைந்துவிட்டதால், வீரியமான மருத்துவமுறைகள் அளிக்கமுடியவில்லை. இதயத்துக்கு செல்லும் ரத்தமானது இயல்பை விட குறைவான வேகத்தில்  செல்கிறது; மேலும் நுரையீரலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதிலும் குறைவு ஏற்பட்டிருப்பதால் கருணாநிதிக்கு உடல் சோர்வு ஏற்படுகிறது. ஆனால், இது இயற்கையாகவே முதுமையில் எற்படக்கூடிய பிரச்னைதான் என்பதால் இப்போது நுரையீரல் தொற்றை சரி செய்தாலே போதும் என்று அதற்கான சிகிச்சைகளில் தீவிரம் காட்டிவருகிறோம்'' என்கிறார்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள். 

விரைவில் நலம்பெற்று வீடு திரும்பட்டும்!

http://www.vikatan.com/news/tamilnadu/75098-karunanidhi-health-report-kauvery-updates.art

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவை ஒரு தடவை அப்பல்லோ டாக்டர்களிடம் காட்டினால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

ஆனால், சமீப நாட்களாக உணவு எடுத்துக்கொள்ளவதில் மட்டும் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. இருமல் அதிகம் இருந்ததால் உணவு எடுத்துக்கொள்ள முடியாமல் தவித்தார். உணவு சாப்பிடும் நேரத்தில் இருமல் வருவதால்,  செருமல் ஏற்பட்டு மூச்சுத் திணறல் அதிகமாகிவிடுகிறது. நுரையீரலில் சளி அதிகம் இருந்ததால் மூச்சுவிடுவதற்கும் சிரமப்பட்டுள்ளார்.

சுற்றுச் சூழலை கருத்தில் கொள்ளாமல், சென்னையில் பல நிறுவனங்களுக்கும் பட்டா எழுதிக் கொடுத்தார். காற்று மாசடைந்து, இன்று அவருக்கே இருமல் வந்துவிட்டது.tw_anguished:

இருமலுக்கு தண்ணீரைக் குடிக்கலாம் என்றாலும் காவிரி ஒப்பந்தத்தை 1974 இல் புதுப்பிக்காமல் கிடப்பில் போட்டதால் இப்ப தண்ணீர் கிடைக்க மாட்டெண்டுது. கூவம் ஆற்றில் சாக்கடையை கலக்க் அனுமதித்தார். இப்ப அதையும் குடிக்க முடியாது. tw_cold_sweat:

காவிரிக்கு குறுக்கே கர்நாடகா அணை கட்டக் கூடாது என்று மன்னை நாராயணசாமி (திமுக) 70களில் போட்ட வழக்கை மீளப் பெறச் செய்தார் கலைஞர். இன்று காவிரி ஓடாமல் ஒரே தூசியும் வரட்சியும்தான். இருமல், சளி தொல்லை வராமல் என்ன செய்யும்?! tw_astonished: 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இசைக்கலைஞன் said:

karunadhi_00223.jpg this+day+june+30%252C+2001.jpg

"அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்று அறுக்கும்"
இதன் பொருள்... 
ஒருவர் நீதி நியாயத்துக்கு புறம்பாக நடந்து கொண்டதை அறிந்தால், 
அரசன் உடனே தண்டனை கொடுத்து விடுவான்.

ஆனால் கடவுளோ....
 "மானாட மயிலாட"  ஸ்ரைலில்... 
 "எருமை வாகனம்,  வருது... வருது, விலகு... விலகு...." என்று மரண பயம் காட்டிக்  கொண்டே  இருப்பார்.

அத்துடன்... மேல் உள்ள படத்தில்,  ஆள்... ஆவென்று, வாயை திறந்து கொண்டு இருக்கும் படத்தை பிரசுரித்து, அதன் மூலம்  வர இருக்கும்,   உள்ளுராட்சி தேர்தலில்.... அ. தி.மு.க. விற்கு இருக்கும்  வெற்றிடத்தை பயன் படுத்தி.... தான்  அனுதாப ஓட்டுக்களை பெறும் முயற்சியாகவும் இருக்கலாம்.   

இவர்.... முன்பு  செய்த, கோமாளிக் கூத்துக்களில் இதுவும்  ஒன்றே.....   

ஜெயலலிதா இவரை கைது செய்து சிறையில் அடைக்கும் போது,  ஐயோ... கொல்றாங்களே..... ,  ஐயோ... கொல்றாங்களே...  என்று  கத்திக்  கொண்டு போனதை, சன் ரீ வி  தமது தொலைக்காட் சியில் போட் டு அனுதாபம் தேட முயன்றது, உங்களுக்கும்  நினைவு  இருக்கும் என நினைக்கின்றேன். :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

15355561_1384841651528336_22012132095235

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

karunadhi_00223.jpg this+day+june+30%252C+2001.jpg

அத்துடன்... மேல் உள்ள படத்தில்,  ஆள்... ஆவென்று, வாயை திறந்து கொண்டு இருக்கும் படத்தை பிரசுரித்து, அதன் மூலம்  வர இருக்கும்,   உள்ளுராட்சி தேர்தலில்.... அ. தி.மு.க. விற்கு இருக்கும்  வெற்றிடத்தை பயன் படுத்தி.... தான்  அனுதாப ஓட்டுக்களை பெறும் முயற்சியாகவும் இருக்கலாம்.   

கலைஞர் ஆவென்று போறாரே. அந்த வண்டிலே, அவர் பின்னால ஜெயலலிதா ஆவி நின்னு தலைய இழுக்குது பார்த்தீர்களா?

தெரியலீன்னா, எம்ஜிஆரை நினைத்து, மனதார கும்புடு போட்டு விட்டு பாருங்கள், தெரியும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஒரிஜினல்,  தமிழ் பெண்மணியான...  சசிகலா  நடராஜனுக்கு  எதிராக, 
களமிறங்க.... தயாராக,  பல அண்டை மாநில மக்கள் தயாராக இருக்கிறார்கள். அது, இனி  வேண்டாம்.
எட்டுக் கோடி  தமிழனுக்கும்... ஒரு தமிழ் பெண் மணியே.... தலைமை தாங்குவது தான், புத்திசாலித்தனம். :)

  • கருத்துக்கள உறவுகள்

அம்மையார் மேல்லோகத்திலும் முதலமைச்சர் போல. ஐயாவ... உடனடியா அழைக்கிறா.. எதிர்கட்சி தலைவர் பதவி காலியா இருக்கோ என்னமோ..?!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

கருணாநிதியை நேரில் சந்தித்தேன்; நலமாக இருக்கிறார்: ராகுல்

ராகுல் காந்தி. | கோப்புப் படம்.
ராகுல் காந்தி. | கோப்புப் படம்.
 
திமுக தலைவர் கருணாநிதியை தாம் நேரில் சந்தித்ததாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு சளித் தொந்தரவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னை ஆழ்வார்பேட்டை யில் உள்ள காவேரி மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தொண்டை, நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு டிரக்யாஸ்டமி கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை நேரில் பார்த்து நலன் விசாரிப்பதற்காக ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) சென்னை வந்தார்.

சென்னை விமானநிலையத்திலிருந்து அவர் காரில் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் இருந்தனர்.

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த ராகுல் காந்தி, "திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலன் விசாரித்தேன். அவர் நலமாக இருக்கிறார்.

அவர் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர். அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர். இது ஒரு நல்ல விஷயம்.

கருணாநிதி விரைவில் குணம்பெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்தார். கருணாநிதி தமிழகத்தின், தமிழக மக்களின் தலைவர். அவர் விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவார்" என்றார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது திமுக பொருளாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினும் இருந்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/கருணாநிதியை-நேரில்-சந்தித்தேன்-நலமாக-இருக்கிறார்-ராகுல்/article9432258.ece?homepage=true

  • தொடங்கியவர்

சசிகலா சார்பில் கருணாநிதியை நலம் விசாரிக்க வந்தோம்- காவேரி மருத்துவமனையில் தம்பிதுரை

thampi_durai_long_1_13356.jpg

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அதிமுக எம்பி தம்பிதுரை மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் விசாரித்தனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க அ.தி.மு.கவைச் சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் இன்று மருத்துவமனைக்கு வந்தனர். அங்கிருந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம், கருணாநிதியின் உடல் நலம் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, அதிமுக, சசிகலா சார்பில் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்தோம். கருணாநிதி நலமாக இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர். அவர் விரைவில் வீடு திரும்ப வாழ்த்துகள்" என்றார்.

இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்தார்.

http://www.vikatan.com/news/tamilnadu/75192-admks-thambidurai-and-jayakumar-in-kauvery-hospital-to-meet-karunanidhi.art

  • கருத்துக்கள உறவுகள்

பாட்ஷா படம் சிறிது நேரம் பார்த்தார் கருணாநிதி !

சென்னை: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்ச பெற்று வருகிறார். கருணாநிதிக்கு நேற்று இரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கான சிசிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மருத்துவர்களின் சிகிச்சைக்கு பின்னர் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்து வருகின்றனர். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று மாலை சற்று உடல்நிலை தேறிவந்த நிலையில் சிறிது நேரம் பாட்ஷா படம் பார்த்துள்ளார் கருணாநிதி. லேப்டாப்பில் சிறிது நேரம் பாட்ஷா படம் பார்த்தாக காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நன்றி : தட்ஸ் தமிழ்

டிஸ்கி :

நான் 100 வருசம் வாழ்ந்தால் ஒரு வருடம் வாழ்ந்த மாறி !!

  • தொடங்கியவர்

கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்கச் சென்ற வைகோவுக்கு திமுக-வினர் எதிர்ப்பு

vaiko_1_19226.jpg

திமுக தலைவர் மு.கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை குறித்து விசாரிக்க ராகுல் காந்தி, அதிமுக-வின் தம்பிதுரை போன்ற தலைவர்கள் தொடர்ந்து வந்து சென்றனர். இந்நிலையில், அவர் உடல் நலம் குறித்து விசாரிக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவரை மருத்துவமனைக்கு உள்ளே விடாமல், திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மருத்துவமனைக்கு உள்ளே போகாமல் திரும்பிச் சென்றார் வைகோ.

இந்த விஷயம் பற்றி,'வைகோ முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால், நாங்கள் அவரை நேரடியாக வந்து அழைத்து சென்றிருப்போம். வைகோவை அழைத்துச் செல்லும் முன், கட்சியினர் உணர்ச்சிவசப்பட்டதால் அவர் திரும்பிச் சென்றுவிட்டார். இதற்காக, திமுக-வின் சார்பில் வருத்தம் தெரவித்துக் கொற்கிறோம்.' என்று டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/75224-dmk-members-oppose-vaiko-as-he-tried-to-visit-kauvery-hospital.art

  • தொடங்கியவர்

கருணாநிதியை நலம் விசாரிக்க வந்த வைகோவுக்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு: வாகனம் மீது தாக்குதல்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரிக்க வந்த வைகோவுக்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கருணாநிதியை நலம் விசாரிக்க வந்த வைகோவுக்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு: வாகனம் மீது தாக்குதல்
 
சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. எனவே, உடனடியாக அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்று ஏற்பட்டதால் அவர் சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டார். இதனால் அவருக்கு “டிரக்யாஸ்டமி” சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ள நிலையில், பல்வேறு தலைவர்கள் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வந்து கருணாநிதியை சந்தித்து உடல்நலம் பற்றி விசாரித்தார். அ.தி.மு.க. சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
6F7FE38C-7306-4A9A-B2ED-0F660CD88B38_L_s
இந்நிலையில், தி.மு.க.வையும் அக்கட்சியின் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்று சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க முடிவு செய்தார். இந்த செய்தி வெளியானது முதலே, மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருந்த தி.மு.க.வினர் சிலர் வைகோவுக்கு எதிராக பேசத் தொடங்கினர். வைகோ வந்ததும் இந்த எதிர்ப்பு பூதாகரமாக வெடித்தது.

இன்று இரவு 7.30 மணியளவில் வைகோ காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவரது கார் மருத்துவமனையை நெருங்கியபோது தி.மு.க.வினர் காரை மறித்து எதிர்ப்பு கோஷமிட்டனர். மேலும், காரை மருத்துவமனைக்கு வராதபடி மறித்து தாக்கத் தொடங்கினர். கற்களை வீசி தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே, கருணாநிதியை சந்திக்காமலேயே வைகோ திரும்பிச் சென்றார்.
6B2BF9C9-823D-4AD0-9BD7-1C5A318DD48A_L_s
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்தனர். மேலும், அசம்பாவித சம்பங்கள் நடக்காதவாறு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக டி.கே எஸ். இளங்கோவன்,  திருச்சி சிவா ஆகியோர் தெரிவித்தனர்.

http://www.maalaimalar.com/News/TopNews/2016/12/17201955/1056749/dmk-workers-attacked-vaiko-vehicle-when-he-comes-to.vpf

 இத் திரியில் செய்தியினை முழுமையாக இணைக்காமல் வெறுமனே URL இனை மாத்திரம் இணைத்த சில பதில்கள் மறைக்கப்பட்டன. 

அத்துடன் நகைச்சுவை என்ற பெயரில் ஒருவரின் மரணத்தினை / நோயினை வரவேற்று எழுதப்படும் கருத்துகளும் இத் திரியில் இருந்து அகற்றப்படுகின்றன.

  • தொடங்கியவர்

கருணாநிதியை பார்க்க வந்த வைகோ கார் மீது தாக்குதல்: வருத்தம் தெரிவித்தார் ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க வந்த வைகோவின் கார் தாக்கப்பட்டது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். தொண்டர்களின் செயலையும் கண்டித்துள்ளார்.

கருணாநிதியை பார்க்க வந்த வைகோ கார் மீது தாக்குதல்: வருத்தம் தெரிவித்தார் ஸ்டாலின்
 
சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்று ஏற்பட்டதால் அவர் சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டார். இதனால் அவருக்கு “டிரக்யாஸ்டமி” சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், தி.மு.க.வையும் அக்கட்சியின் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக இன்று சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்தார். ஆனால், மருத்துவமனைக்கு வெளியே சாலையில் திரண்டிருந்த தி.மு.க. தொண்டர்கள், வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதுடன் அவரது கார் மீதும் தாக்குதல் நடத்தினர்.

பின்னர் இரு கட்சி தொண்டர்களிடையே கைகலப்பும் ஏற்பட்டது. இந்த களேபரம் காரணமாக, கருணாநிதியை சந்திக்காமலேயே வைகோ திரும்பிச் சென்றுவிட்டார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் திருச்சி சிவா எம்.பி., தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் அந்த இடத்திற்கு வந்து நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தனர்.

இதுபற்றி அவர்கள் நிருபர்களிடம் கூறும்போது, ‘தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க ம.தி.மு.க. தலைவர் வைகோ வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரை வரவேற்று அழைத்து வருவதற்காக நாங்களும் தயாராக காத்திருந்தோம். வைகோவை அழைத்து வரும்படி கட்சியின் பொருளாளர் ஸ்டாலின்தான் எங்களை அனுப்பினார்.

ஆனால் நாங்கள் மருத்துவமனையில் இருந்து வெளியே வருவதற்குள், துரதிர்ஷ்டவசமாக இந்த சம்பவம் நடந்துவிட்டது. வைகோவின் கார் திரும்பிச் சென்றுவிட்டது. அதனால் அவரை அழைத்துச் செல்ல முடியவில்லை. நடந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். பொருளாளர் ஸ்டாலினும் வருத்தம் தெரிவித்துள்ளார்” என்றனர்.

இதுபற்றி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தலைவர் கலைஞர் அவர்களின் உடல் நலம் விசாரிக்க வந்த மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்களை தடுத்து நிறுத்தியதை நான் கண்டிக்கிறேன். மருத்துவமனையில் நான் இல்லாத நேரத்தில் வைகோ அவர்களுக்கு நேர்ந்த இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

தி.மு.க.விற்கு எதிரான பிரச்சாரங்களில் யார் ஈடுபட்டு வந்ததாலும் கழக தோழர்கள் அவர்களுக்கு எதிராக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தலைவர் கலைஞர் அவர்களுக்கோ, எனக்கோ எக்காலத்திலும் உடன்பாடானது அல்ல. கழகத்திற்கு எதிரான பிரச்சாரங்களை அரசியல் ரீதியாக ஜனநாயக முறையில் எதிர்கொள்ளும் சக்தி மிக்க தொண்டர்கள் நிறைந்த இந்த இயக்கத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கழக தோழர்கள் தவிர்த்து அமைதி காக்குமாறு கண்டிப்புடன் கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2016/12/17205315/1056752/Stalin-expressed-regret-for-vaiko-vechicle-attaced.vpf

3 hours ago, நவீனன் said:

கருணாநிதியை நலம் விசாரிக்க வந்த வைகோவுக்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு: வாகனம் மீது தாக்குதல்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரிக்க வந்த வைகோவுக்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கருணாநிதியை நலம் விசாரிக்க வந்த வைகோவுக்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு: வாகனம் மீது தாக்குதல்
 
சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. எனவே, உடனடியாக அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்று ஏற்பட்டதால் அவர் சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டார். இதனால் அவருக்கு “டிரக்யாஸ்டமி” சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ள நிலையில், பல்வேறு தலைவர்கள் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வந்து கருணாநிதியை சந்தித்து உடல்நலம் பற்றி விசாரித்தார். அ.தி.மு.க. சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
6F7FE38C-7306-4A9A-B2ED-0F660CD88B38_L_s
இந்நிலையில், தி.மு.க.வையும் அக்கட்சியின் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்று சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க முடிவு செய்தார். இந்த செய்தி வெளியானது முதலே, மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருந்த தி.மு.க.வினர் சிலர் வைகோவுக்கு எதிராக பேசத் தொடங்கினர். வைகோ வந்ததும் இந்த எதிர்ப்பு பூதாகரமாக வெடித்தது.

இன்று இரவு 7.30 மணியளவில் வைகோ காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவரது கார் மருத்துவமனையை நெருங்கியபோது தி.மு.க.வினர் காரை மறித்து எதிர்ப்பு கோஷமிட்டனர். மேலும், காரை மருத்துவமனைக்கு வராதபடி மறித்து தாக்கத் தொடங்கினர். கற்களை வீசி தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே, கருணாநிதியை சந்திக்காமலேயே வைகோ திரும்பிச் சென்றார்.
6B2BF9C9-823D-4AD0-9BD7-1C5A318DD48A_L_s
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்தனர். மேலும், அசம்பாவித சம்பங்கள் நடக்காதவாறு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக டி.கே எஸ். இளங்கோவன்,  திருச்சி சிவா ஆகியோர் தெரிவித்தனர்.

http://www.maalaimalar.com/News/TopNews/2016/12/17201955/1056749/dmk-workers-attacked-vaiko-vehicle-when-he-comes-to.vpf

கலைஞர் கருணாநிதி சாதி பற்றி  வைகோ தவறாக கூறினார்

3 hours ago, நவீனன் said:

கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்கச் சென்ற வைகோவுக்கு திமுக-வினர் எதிர்ப்பு

vaiko_1_19226.jpg

திமுக தலைவர் மு.கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை குறித்து விசாரிக்க ராகுல் காந்தி, அதிமுக-வின் தம்பிதுரை போன்ற தலைவர்கள் தொடர்ந்து வந்து சென்றனர். இந்நிலையில், அவர் உடல் நலம் குறித்து விசாரிக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவரை மருத்துவமனைக்கு உள்ளே விடாமல், திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மருத்துவமனைக்கு உள்ளே போகாமல் திரும்பிச் சென்றார் வைகோ.

இந்த விஷயம் பற்றி,'வைகோ முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால், நாங்கள் அவரை நேரடியாக வந்து அழைத்து சென்றிருப்போம். வைகோவை அழைத்துச் செல்லும் முன், கட்சியினர் உணர்ச்சிவசப்பட்டதால் அவர் திரும்பிச் சென்றுவிட்டார். இதற்காக, திமுக-வின் சார்பில் வருத்தம் தெரவித்துக் கொற்கிறோம்.' என்று டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/75224-dmk-members-oppose-vaiko-as-he-tried-to-visit-kauvery-hospital.art

கலைஞர் கருணாநிதி சாதி பற்றி  வைகோ தவறாக கூறினார்

  • தொடங்கியவர்

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கோஷமிட்ட மதிமுகவினர்!

WhatsApp_Image_2016-12-17_at_10.29.26_PM

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால், நேற்று முன் தினம் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை நலம் விசாரிக்க பல கட்சித் தலைவர்களும் வந்து செல்கின்றனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மாலை கருணாநிதியை நலம் விசாரிக்க வந்தபோது, திமுக தொண்டர்கள் அவரின் வாகனத்தை வழிமறித்து உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் வைகோ, கருணாநிதியைச் சந்திக்காமலேயே திரும்பி விட்டார். பின்னர் வைகோ அளித்த பேட்டியில், இந்தச் சம்பவம்   தூண்டுதலாலே தான் நடந்திருக்கிறது என்றார். இந்தச் சம்பவத்துக்கு திமுக தரப்பிலிருந்து மு.க.ஸ்டாலின், டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

இந்திலையில் தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டியில் மதிமுக தொண்டர்கள், வைகோ அவமதிக்கப்பட்டதாக கூறி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கோஷம் எழுப்பி, உருவப் பொம்மையை எரித்துள்ளனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/75239-mdmk-party-members-protest-against-stalin.art

  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடகத்தில் அடி அடியென்று அடிக்க எது வித சலனமும் இல்லாமல் அடியை வாங்கும் தமிழன்
 ஒரு அகிம்சாவழித் தலைவரைக் கண்டவுடன் தடிகள் பொல்லுகளுடன் நிற்பது ரொம்ப வேதனைக்குரியது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதி நல்லவர்....

தமிழ் இனத்திற்காக போராடியவர்......

ஒரு சில மணிநேர உண்ணாவிரதத்தின் மூலம் ஈழத்தமிழினத்தையே அழிவிலிருந்து காப்பாற்றியவர்.

இவரை நான் தமிழினத்தின் தேசியதலைவர் என்றே புகழ்வேன்.

இவர் இன்னும் நூற்றாண்டுகாலம் வாழ்ந்து அகில தமிழினத்தையும் வழிநடத்தி செல்வார் என நம்புகின்றேன்.
சிவனே யேசுவே அல்லாவே அந்த நல்லவரை வல்லவரை எந்த நோய்நொடியுமில்லாமல் மீட்டு தமிழ்மக்களின் மேய்ப்பனாக சக்திகளும் கொடுத்து வாழ வைப்பீராக.

  • தொடங்கியவர்

"தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார்" - ஸ்டாலின்

karuba_12395.jpg

திமுக தலைவர் கருணாநிதி  உடல்நலக் குறைவு காரணமாக வியாழன் இரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டிரக்கியோஸ்டோமி சிக‌ச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. தற்போது அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதுமட்டுமின்றி  இன்று காலை நிகழ்ச்சியொன்றில் பேசிய திமுக பொருளாளர் ஸ்டாலின்  கருணாநிதி நலமுடன் இருப்பதாக குறிப்பிட்டார். இந்நிலையில் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க காங்கிஸ் கட்சியின் தங்கபாலு, த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனை வந்தனர். நலம் விசாரித்த தங்கபாலு, ‘கருணாநிதி உடல்நிலை குறித்து அழகிரியிடம் விசாரித்தேன். கருணாநிதி விரைவில் குணமடைந்து மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும்’, எனத் தெரிவித்துள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/75273-karunanidhi-is-recovering-says-stalin.art

  • கருத்துக்கள உறவுகள்

Image result for tracheostomy definition

12 hours ago, குமாரசாமி said:

கருணாநிதி நல்லவர்....

தமிழ் இனத்திற்காக போராடியவர்......

ஒரு சில மணிநேர உண்ணாவிரதத்தின் மூலம் ஈழத்தமிழினத்தையே அழிவிலிருந்து காப்பாற்றியவர்.

இவரை நான் தமிழினத்தின் தேசியதலைவர் என்றே புகழ்வேன்.

இவர் இன்னும் நூற்றாண்டுகாலம் வாழ்ந்து அகில தமிழினத்தையும் வழிநடத்தி செல்வார் என நம்புகின்றேன்.
சிவனே யேசுவே அல்லாவே புத்தரே  அந்த நல்லவரை வல்லவரை எந்த நோய்நொடியுமில்லாமல் மீட்டு தமிழ்மக்களின் மேய்ப்பனாக சக்திகளும் கொடுத்து வாழ வைப்பீராக.

குட்டியா ஒரு சிறு திருத்தம்

மிச்சம் ஓகே 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.