Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண கோட்டைக்குள் அநாகரிக செயற்பாடு – கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா ?

Featured Replies

IMG_2945.jpg

யாழ்ப்பாண கோட்டை பகுதிகளில் சிலர் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கோட்டையில் பணி புரியும் பணியாளர்கள் தெரிவித்தனர்.  அது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில் ,

யாழ்ப்பணத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக யாழ்ப்பாண கோட்டை உள்ளது. தற்போது கோட்டை தொல்லியல் திணைக்களத்தால் பராமரிக்கப்பட்டு வருவதுடன் நெதர்லாந்து அரசாங்க உதவியுடன் புனரமைப்பு வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

அந்நிலையில் தினமும் பெருமளவான உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகள் கோட்டை பகுதிக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர்.  அதில் சிறுவர்கள் முதியோர்கள் என பாகுபாடின்றி வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் சிலர் கோட்டை பகுதியில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு என வருகின்றார்கள். அவ்வாறு அநாகரிக செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபடுவதனால் சுற்றுலா வருவோர் முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதுடன் சௌகரியங்களையும் எதிர்நோக்குகின்றனர்.

அவ்வாறு அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவ மாணவிகள் ஆவார்கள்.  குறிப்பாக வார இறுதி நாட்கள் , விடுமுறை நாட்களில் அவ்வாறானவர்களின் வரவுகள் கோட்டை பகுதியில் அதிகரித்து காணபடுகின்றது.

பெரும்பாலும் வெளியூர்களில் இருந்து யாழ்.நகர் பகுதியில் உள்ள தனியார் வகுப்புக்களுக்கு வரும் மாணவ மாணவிகள் வகுப்புக்களுக்கு செல்லாது கோட்டை பகுதிக்கு வந்து அநாகரிக செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அது தொடர்பில் எமது தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியபடுத்தியும் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுவர்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

அந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எமது சக பணியாளர்கள் அவ்வாறு அநாகரிக செயற்பாட்டில் ஈடுபட்டவர்களை எச்சரித்து கோட்டை பகுதியில் இருந்து வெளியேற்றி இருந்தனர்.

அன்றைய தினம் இரவு வாள்களுடன் வந்த நபர்கள் கோட்டையில் இருந்த எமது சக பணியாளர்கள் மீது வாள் வெட்டினை மேற்கொண்டனர். அதில் இரு பணியாளர்கள் காயமடைந்து இருந்தனர். அந்த சம்பவத்தின் பின்னர் எமது பணியாளர்கள் அவ்வாறு அநாகரிகமான செயற்பாடுகளில் ஈடுபடுவர்களை எச்சரிக்க பயம் காரணமாக பின் நிற்கின்றார்கள்.

அது தொடர்பில் பொலிஸ் முறைப்பாட்டினை எமது திணைக்களம் சார்ந்து செய்ய முடியாதமையால் பொலிசாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. யாழ்.நகருக்கு தனியார் வகுப்புக்களுக்கு வரும் மாணவ மாணவிகளின் பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் உரிய கரிசனை கொண்டு அவர்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

அதேவேளை இரவு 6 மணியுடன் பார்வையிடும் நேரம் முடிவடைந்த பின்னர் கோட்டையின் பிரதான பாதை தவிர்ந்த ஏனைய பாதைகள் ஊடாக ஊடுருவும் நபர்கள் கோட்டை சுவர்களில் ஏறி இருந்து மது அருந்துகிறார்கள். அதனை தடுக்க முடியாது உள்ளது.

அதேவேளை போதை பொருட்கள் கைமாற்றும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. அத்துடன் கோட்டை சுவர்கள், அரண்களில் ஏறி இருந்து இரவு வேளைகளில் போதை பொருட்களையும் நுகர்கின்றனர். அவற்றினை தடுக்க முடியாது உள்ளது.  அவர்களை தடுக்க முயன்றால் அவர்களால் தமதுக்கு ஏதேனும் ஆபத்துக்கள் ஏற்பட்டு விட்டு விடுமோ என பணியாளர்கள் அஞ்சுகின்றார்கள் என தெரிவித்தார்.

யாழ்ப்பாண கோட்டையில் இவ்வாறாக காலச்சார சீர்கேடுகள் , அநாகரிக செயற்பாடுகள் மது அருந்துதல்,   போதை பொருள் பாவனை மற்றும் கைமாற்றல் , என்பன இடம்பெற்று வருகின்ற நிலையில் தொல்லியல் திணைக்களத்தால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என குற்ற சாட்டு முன் வைக்கப்படுகின்றது.

அதேவேளை கோட்டை பகுதியில் இருந்து 100 மீற்றர் தூரத்திற்கு உட்பட்ட பகுதியில் தான் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையம் உள்ளது.  இருந்த போதிலும் இவை தொடர்பில் பொலிசாரும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனவும் குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.

அவை தொடர்பில் பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தடவைகள் கோட்டையில் பணியாற்றும் பணியாளர்கள் பொலிசாரிடம் கோரிய போது உரிய முறையில் முறைப்பாடு பதிவு செய்தாலே தாம் நடவடிக்கை எடுப்போம் என பொலிஸ் தரப்பினர் கூறியதாக பணியாளர் தரப்பில் கூறப்படுகின்றது.

முறைப்பாடு செய்யுமாறு தமது திணைகளத்தினரிடம் கோரினால் தொல்பொருள் சின்னத்திற்கு ஏதேனும் பதிப்பு, சேதம் ஏற்படுத்தப்பட்டால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யலாம் தவிர ஏனைய விடயங்களுக்கு முறைப்பாடு செய்ய முடியாது என திணைக்களத்தினர் பின் நிற்கின்றார்கள் எனவும் ஊழியர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது.

http://globaltamilnews.net/archives/10618

அநாகரீக செயற்பாடுகள் என்றால் என்ன? பொது இடங்களை அசுத்தமாக வைத்திருத்தல். பொது இடங்களில் துப்புதல். பொதுக்கழிப்பறைகள் அத்தனையையும் மக்கள் பாவிக்கமுடியாதபடி அசுத்தமாக வைத்திருத்தல். இவை போன்ற அநாகரிக செயற்பாடுகள் தானே? இது கோட்டையில் மட்டுமா நடக்கிறது. யாழ்பபாணம் உட்பட இலங்கை முழுவதும் இந்த அநாகரிக செயற்பீடு நடக்கிறதே. அதைப்பற்றி ஒருவரைக்கும் கவலை இல்லை. அது தொடர்பாக யாரும் முகம் சுழிப்பதில்லையே. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

அநாகரிய செயற்பாடுகள் என்றால் அத்து மீறலாக இருக்கும் உதாரணம் காதலர் என்ற போர்வையில் வந்து போர்த்து விட்டு .............. நடந்து கொள்ளும் ஆட் கள் செய்யும் வேலையாக இருக்குமோ??:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய வீரகேசரி பத்திரிகையில்  இது பற்றிய  கட்டுரை வந்திருக்கிறது நான் நினைத்த ஊகம் சரியானது பாடசாலை மாணவிகள் , உட்பட பலரின்  வருகை  ஏன் எதற்க்காக என்பது பற்றி நல்ல விளக்கமாக எழுதப்பட்டிருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, tulpen said:

அநாகரீக செயற்பாடுகள் என்றால் என்ன? பொது இடங்களை அசுத்தமாக வைத்திருத்தல். பொது இடங்களில் துப்புதல். பொதுக்கழிப்பறைகள் அத்தனையையும் மக்கள் பாவிக்கமுடியாதபடி அசுத்தமாக வைத்திருத்தல். இவை போன்ற அநாகரிக செயற்பாடுகள் தானே? இது கோட்டையில் மட்டுமா நடக்கிறது. யாழ்பபாணம் உட்பட இலங்கை முழுவதும் இந்த அநாகரிக செயற்பீடு நடக்கிறதே. அதைப்பற்றி ஒருவரைக்கும் கவலை இல்லை. அது தொடர்பாக யாரும் முகம் சுழிப்பதில்லையே. 

ரொம்ப குசும்பு:)

2 hours ago, சுவைப்பிரியன் said:

ரொம்ப குசும்பு:)

ஏனங்க ரொம்ப குசும்பு. உண்மையைத் தானே கூறினேன். மேற்சொன்ன அநாகரிக விடயங்களுககு முகம் சுழிககாதவர்கள் காதலர் இருவர் தம் விருப்பப்படி கைகோர்தது சென்றால் முகம் சுழிக்கிறார்களாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சில ஆக்களுக்கு குப்பை கொட்டுறது துப்புறது மட்டும்தான் அநாகரீக செயல் எண்டு தெரியிற படியாலைதான் வாள்வெட்டும் கத்திக்குத்தும் அங்கை கோலோச்சுது....:(

கைகோர்த்து நடக்கிறது பிரச்சனையில்லை...... பொது இடத்திலை கோர்த்த கையை வேறை எங்கையும் கொண்டுபோய் வைக்கிறதுதான் அசிங்கம் ...... அநாகரீகம்.:)

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

கைகோர்த்து நடக்கிறது பிரச்சனையில்லை...... பொது இடத்திலை கோர்த்த கையை வேறை எங்கையும் கொண்டுபோய் வைக்கிறதுதான் அசிங்கம் ...... அநாகரீகம்.:)

அதிலும் பார்க்க அசிங்கம் அவர்கள் எங்கே கை வைக்கிறார்கள்,:112_lips: அங்கே என்ன தெரிகிறது என்று நீங்கள் உத்து உத்து பார்ப்பது தான். :116_eye:

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna Fort - main entrance.JPG  

ஒல்லாந்தர்  கோட்டை கட்டின.... 1625´ ம் ஆண்டில்   இருந்தே.....  கடந்த 391 ஆண்டுகளாக,
எமது முப்பாட்டன் காலத்தில் இருந்தே....  இப்படியான அநாகரிக செயல்கள் நடந்து கொண்டு தான் வருகிறது.
அப்படியிருக்க... இப்ப ஏன் துள்ளிக் குதிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
கோட்டை... சந்து, பொந்துகள் உள்ள மறைவான இடம். அதற்குள் போனால்... யாருக்கும் "மூட்"   வரத்தான் செய்யும்.  :grin:

Edited by தமிழ் சிறி

On 18/12/2016 at 3:35 AM, Athavan CH said:

யாழ்ப்பாண கோட்டைக்குள் அநாகரிக செயற்பாடு – கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா ?

சமூகப் பொறுப்புள்ள ஒருவரின் நியாயமான ஆதங்கம்!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Jude said:

அதிலும் பார்க்க அசிங்கம் அவர்கள் எங்கே கை வைக்கிறார்கள்,:112_lips: அங்கே என்ன தெரிகிறது என்று நீங்கள் உத்து உத்து பார்ப்பது தான். :116_eye:

பொது இடத்தில் வைத்து இப்படி நடப்பதை பார்ப்பது அசிங்கமா?????? நாலு சுவருக்குள் நடக்க வேண்டியதை பொதுவெளியில் நடத்துபவர்கள் நாயிலும் கேவலமானவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

பொது இடத்தில் வைத்து இப்படி நடப்பதை பார்ப்பது அசிங்கமா?????? நாலு சுவருக்குள் நடக்க வேண்டியதை பொதுவெளியில் நடத்துபவர்கள் நாயிலும் கேவலமானவர்கள்.

இந்த  இனங்கள்  செய்வதை ஒளிந்திருந்து கமறா போணில் சூட் பண்ணும் ஒரு கும்பலும் உள்ளதாம் அங்கு நெலமை அப்படி போகுது 

  • கருத்துக்கள உறவுகள்

.....போன்றவர்கள், இவரது சகோதரங்களது பெண் பிள்ளைகள் இப்படி பார்க்கில் பொது இடத்தில் கொஞ்சிக் கொண்டு நின்டாலும் நாகரீகம் கருதி திரும்பிப் பார்க்காமல் எக் கேடாவது கெடட்டும் என்று சென்று விடுவார்களாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம்................!
எதையும் எழுதப்போனால் ..... இவர்கள் எல்லாமும் செய்யலாம் 
யாழில் மக்கள் மகிழ்ச்சியா இருந்தால்தான் இவர்களுக்கு பிரச்சனை என்று 
ஒரு குரூப் இறங்கும். எதோ நாங்கள் தற்கொலை செய்தால் தாங்களும் கூட வாற மாதிரி. 

என்னத்தை என்றாலும் செய்து தொலையுங்கோ !

நிலைமை இந்த அளவில் முத்திய பின்பும் 
பார்க்காமல் போகிறீர்கள் உங்களுக்கு கண் இல்லையா ..... காது  இல்லையா 
என்று காட்டு காத்து கத்தாமல் இருந்தால் சரி !

சமூக சீரழிவு 
சமூக சீர்திருத்தம் 

இரண்டுக்கும் நிறைய இடைவெளி இருக்கிறது.
இது புரியாத புத்திகளுடன் தள்ளி நிற்பதே மேல்.


கொழும்பில் 1980இல் இருந்து குடை பிடிக்க ஒரு கூட்டம் கோல்பேஸ் புத்தர் சிலை 
அருகாக வந்துகொண்டே இருக்கிறது .........இது தலை முறை முறையாக தொடர என்ன காரணம் ?
முன்னையவர்களின் வழி காட்டுதல்தான் முக்கிய காரணம். 

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ  தெரியவில்லை

இந்த கோட்டைக்காக நாம் கொடுத்த விலைகள் தான் ஞாபகம் வருகிறது...

ஒவ்வொரு அடிக்காகவும்  ஒரு உயிர் பிரிந்திருக்கு...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

என்னவோ  தெரியவில்லை

இந்த கோட்டைக்காக நாம் கொடுத்த விலைகள் தான் ஞாபகம் வருகிறது...

ஒவ்வொரு அடிக்காகவும்  ஒரு உயிர் பிரிந்திருக்கு...

அந் நேரம் இவர்கள் பிறந்திருக்க மாட்டார்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.