Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் தீவகத்தை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்

Featured Replies

யாழ் தீவகத்தை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்

(ஆர்.வி.கே)

யாழ்ப்பாணம் தீவகப் பகுதியை நோக்கி பெருமளவிலான வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது.unnamed-_5_.jpgஊர்காவற்துறை, அல்லைப்பிட்டி, சாட்டி, வேலணை, மண்டைதீவு ஆகிய பிரதேசங்களைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளையும் அங்குள்ள நீ்ர் நிலைகளையும் நுாக்கி பெருமளவிலான வெளிநாட்டு பறவகைளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது.unnamed-_1_.jpgunnamed-_2_.jpgunnamed-_3_.jpgunnamed-_4_.jpgunnamed-_6_.jpgunnamed-_7_.jpgunnamed-_8_.jpg

http://www.virakesari.lk/article/14550

1 hour ago, நவீனன் said:

யாழ் தீவகத்தை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்

இந்த வருடம் இருதடவை தொண்டைமானாறு போய் வெறும் கையுடன் வந்தாச்சு. இந்த சந்தர்ப்பத்தை விடமாட்டான் ஜீவன். ஆனாலும் எனது 600  - 1300  mm lens ( with 2X Extender ) 23 ம் திகதிதான் கைக்கு வரும் என்பது கவலை.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஜீவன் சிவா said:

இந்த வருடம் இருதடவை தொண்டைமானாறு போய் வெறும் கையுடன் வந்தாச்சு. இந்த சந்தர்ப்பத்தை விடமாட்டான் ஜீவன். ஆனாலும் எனது 600  - 1300  mm lens ( with 2X Extender ) 23 ம் திகதிதான் கைக்கு வரும் என்பது கவலை.

இந்த செய்தியை பார்த்தவுடன் உங்களைத்தான் நினைத்தேன், சிங்கன் ஊரில் நின்றால் ஒரு எட்டு போய் பார்த்து சுட்டு வருவார் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

சொர்க்க பூமியை நாலு சனம் தேடி வரத்தான் செய்யும்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

சொர்க்க பூமியை நாலு சனம் தேடி வரத்தான் செய்யும்

எங்க நாடு அப்படி <_<

இன்று மாலையில் மண்டைதீவில் புலம் பெயரும் பறவைகளை தேடியபோது புலனில் சிக்கியது இவைதான். நாளை காலை திரும்பி வருமென சந்தித்த சிலர் கூறினர். 

"இன்று போய் நாளை வாறன்" என்று பறவைகள் எஸ் எம் எஸ் கொடுத்திருக்குமோ?:grin:

- பார்க்கலாம்  - 

IMG_5374.jpg

IMG_5389.jpg

IMG_5375.jpg

IMG_5377.jpg

IMG_5378.jpg

IMG_5381.jpg

IMG_5386.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் உறங்கும் நேரம் அவைகளும் உறங்க சென்று இருப்பார்கள் கால நேரம்பார்த்து   கைது (கிளிக் ) செய்யவும்.  

நாங்களும்  கண் குளிர பார் க்கும்  ஆவலுடன் :)

  • கருத்துக்கள உறவுகள்

மணிரத்தினத்தின் லெவலுக்கு வந்து விட்டிர்கள்... படங்கள் இருட்டினுள் ஒளிருது.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 20/12/2016 at 2:54 PM, ஜீவன் சிவா said:

இன்று மாலையில் மண்டைதீவில் புலம் பெயரும் பறவைகளை தேடியபோது புலனில் சிக்கியது இவைதான். நாளை காலை திரும்பி வருமென சந்தித்த சிலர் கூறினர். 

"இன்று போய் நாளை வாறன்" என்று பறவைகள் எஸ் எம் எஸ் கொடுத்திருக்குமோ?:grin:

- பார்க்கலாம்  - 

IMG_5374.jpg

IMG_5389.jpg

IMG_5375.jpg

IMG_5377.jpg

IMG_5378.jpg

IMG_5381.jpg

IMG_5386.jpg

அப்படியே 

எமது ஊர்ப்பக்கம் எட்டிப்பாருங்கள்

லட்சக்கணக்கில் காணலாம்...

இது அவர்களின் காலம்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
On 20/12/2016 at 8:16 AM, நந்தன் said:

சொர்க்க பூமியை நாலு சனம் தேடி வரத்தான் செய்யும்

பறவைகளுக்கு விழங்குது.:unsure:

9 hours ago, suvy said:

மணிரத்தினத்தின் லெவலுக்கு வந்து விட்டிர்கள்... படங்கள் இருட்டினுள் ஒளிருது.....!  tw_blush:

இன்னமும் படிக்க நிறையவே உண்டு. இந்த கத்துக்குட்டியையும் வாழ்த்தி வளரவைக்கும் உறவுகளுக்கு நன்றி.

இதில் உள்ள படங்கள் Ultra wide 10 -18 mm லென்ஸ் + CIR -PL  பில்டர் கொண்டு எடுக்கப்பட்டவை. படங்களின் அடிப்பகுதி lens  distortion காரணமாக இருட்டாக உள்ளது தவறு. பிளாஷ் பாவித்திருக்க வேண்டும் இந்த முட்டாள் - இப்படித்தான் தவறுகள் திருத்தப் படுகின்றன. இனிமேல் கவனமாக இருக்க வேண்டும்.

அதுக்குள்ளே மணிரத்தினம் ரேஞ்சுக்கு பீலா விடுவதெல்லாம் அதிகம் சுவியரே.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 20.12.2016 at 2:54 PM, ஜீவன் சிவா said:

இன்று மாலையில் மண்டைதீவில் புலம் பெயரும் பறவைகளை தேடியபோது புலனில் சிக்கியது இவைதான். நாளை காலை திரும்பி வருமென சந்தித்த சிலர் கூறினர். 

"இன்று போய் நாளை வாறன்" என்று பறவைகள் எஸ் எம் எஸ் கொடுத்திருக்குமோ?:grin:

- பார்க்கலாம்  - 

வாவ்.... மிக அழகிய படங்கள் ஜீவன்சிவா. படப் பிடிப்பில்.... உங்களிடம் திறமை உள்ளது, என நிரூபித்து விட்டீர்கள். :)
மெராவை  வ்விக் கொண்டு போக ஏதாவது வரும்.... கவனம். :grin: tw_blush:

Bild könnte enthalten: Text

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு சாதாரண மாற்றமா.. அல்லது சுற்றுச் சூழல் மாற்றத்தின் விளைவா.. என்று ஆராயப்படுதல் அவசியம்.  வழமையில்.. தீவகப் பகுதி ஆழம் குறைந்த கடற்பகுதியில்.. மற்றும் மழை நீர் தங்கி நிற்கும் தாழ்நிலப் பிரதேசங்களில்... மாரி காலத்தில்.. இப்பறவைகளுக்கான உணவு அதிகம் கிடைக்கும் என்பதால்.. இவை வந்து உண்டு இனப்பெருக்கிச் செல்வது வழமை. ஆனால்.. வல்லைவெளியில்.. இவர்களின் வரவு குறைந்து.. இங்கு அதிகரிக்க என்ன காரணம்.. வல்லைவெளி.. வரண்டு போய் விட்டதா.. அல்லது நீரின் தன்மை மாறி.. இவற்றிற்கான உணவு கிடைக்கும் தன்மை குறைந்திருக்கா... இவை ஆராயப்படுவதும்..

இந்தப் பறவைகளின் பழக்க வழக்கம் ஆராயப்பட்டு.. அவற்றின் வரவை அதிகரிக்கும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு அம்சங்கள் அமுலாக்கப்படுவது அவசியம். அது இயற்கை பாதுகாப்பு மட்டுமன்றி.. உல்லாசப் பயணத்துறைக்கும் உதவும். வருவாயைப் பெற்றுத் தரும்.  

எங்கப்பா.. வடக்கில் ஒரு பல்கலைக்கழகம் இருக்கல்ல. அது என்ன செய்துகிட்டு இருக்கு....ஓ அது அரசியல் செய்துகிட்டு இருக்கில்ல. :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

செங்கோலை தூக்குவதிலேயே எங்கள் அரசியல்வாதிகளுக்கு நேரம் செலவாகிறது. இதற்குள் சுற்று சூழலை பற்றி ஆராய அவர்களுக்கு நேரமேது??

10 hours ago, nedukkalapoovan said:

இந்தப் பறவைகளின் பழக்க வழக்கம் ஆராயப்பட்டு.. அவற்றின் வரவை அதிகரிக்கும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு அம்சங்கள் அமுலாக்கப்படுவது அவசியம். அது இயற்கை பாதுகாப்பு மட்டுமன்றி.. உல்லாசப் பயணத்துறைக்கும் உதவும். வருவாயைப் பெற்றுத் தரும்.  

உண்மைதான் நெடுக்ஸ் 

இந்தமுறை தொண்டமானாறு பகுதியில் பறவைகள் இல்லை என்றே சொல்லுமளவுக்குத்தான் உள்ளதாம். ஆனால் நாவாந்துறையை அண்மித்த, அராலி   பகுதியில்தானாம் அதிகமாம் - காக்கைதீவும் குப்பையும் எனோ ஞாபகத்துக்கு வருகுது.

10 hours ago, nunavilan said:

செங்கோலை தூக்குவதிலேயே எங்கள் அரசியல்வாதிகளுக்கு நேரம் செலவாகிறது. இதற்குள் சுற்று சூழலை பற்றி ஆராய அவர்களுக்கு நேரமேது??

கவனம் 
இதை சொன்னால் பிரச்சனை எண்டுதான் நானும் வாயை மூடிக்கொண்டு இருக்கின்றேன்.

நீங்கள் வேற ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.