Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர் போய் வந்தவனின் அனுபவங்கள்.. 42.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ராசவன்னியன் said:

பரவாயில்லை, இன்னும் சில வருடங்களில் ஈழம் என்ற சொல்லும் மறந்துவிடும்,அடுத்த தலைமுறையில் முற்றிலும் மறைந்தும் விடும்..இதை இதைத்தான் வல்லரசுகளும், நல்லரசுகளும் எதிர்பார்த்தன..! smiley-with-glasses32.gif

மாற்றம் ஒன்றே மாறாதது..!! smiley-with-glasses23.gif

மன்னிக்க வேண்டும் ஐயா, நீங்கள்  என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. பிரபாகரன் போன்ற ஒரு ஆளுமை மிக்க தலைமையின் கீழ் சாத்தியமாகாத ஈழம் இனி எப்போவாவது சாத்தியப்படும் எனக் கருதுகிறீர்களா?

உங்கள் பார்வையில், அங்கிருப்பவர்கள் என்ன செய்யலாம் எனக் கருதுகிறீர்கள்?

உரிய முறையில் பதில் அளிப்பீர்கள் என நம்புகிறேன்!

  • Replies 349
  • Views 28.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Thumpalayan said:

மன்னிக்க வேண்டும் ஐயா, நீங்கள்  என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. பிரபாகரன் போன்ற ஒரு ஆளுமை மிக்க தலைமையின் கீழ் சாத்தியமாகாத ஈழம் இனி எப்போவாவது சாத்தியப்படும் எனக் கருதுகிறீர்களா?

உங்கள் பார்வையில், அங்கிருப்பவர்கள் என்ன செய்யலாம் எனக் கருதுகிறீர்கள்?

உரிய முறையில் பதில் அளிப்பீர்கள் என நம்புகிறேன்!

சக தமிழனாக மிக்க வருந்தவே முடிகிறது..!

இரு இனங்களுக்கிடையே சிறிதாக இருந்த முரண்கள்,அவநம்பிக்கைகள் தற்பொழுது மிக ஆழமாக வேரூன்றி, தீர்வில்லாமல், பழைய நிலைமையைவிட மோசமான நிலைமைக்கு திரும்பவா இவ்வளவு, உயிர் இழப்புகளும், சொத்திழப்புகளும், உரிமையிழப்புகளும் நடந்தேறின..? வாழ்வா, சாவா என்ற நிலையிலும் ஒன்றுபடாத இனம் தமிழனமாகவே இருக்க முடியும், இதில் ஈழமும், தமிழ்நாடும் சேர்ந்துதான் பொறுப்பாளிகள்..

இப்பொழுது மோசமான இழிநிலைக்கு வந்தாகிவிட்டது, ஆனால் தேனும், பாலும் ஓடுவதாக பல்வேறு தரப்பால் உருவகபடுத்தப்படும் செயற்கை பிம்பத்தை ஏற்க முடியவில்லை..மறக்கவும் முடியவில்லை. ஒருவேளை இலங்கையர்களுக்கு இவை ஏற்பாக இருக்கலாமென எண்ணுகிறேன். வாய்ப்பை தவறவிட்டபின், இனி விதிவிட்ட வழியே..!

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

2010_Yelagiri_6.JPG    llo.JPG

தனித்துவமாக இருந்த தமிழ்நாடு, இனி ஈழம்போல் கிளர்ந்தெழவேண்டிய நேரமும் வரும்போல் சில நிகழ்வுகள் தெரிகின்றன..ஏனெனில் இலங்கையில், தமிழர்களை ஒடுக்கியாகிவிட்டது, இனி தமிழ்நாடு மட்டும்தான் மீதி, அதையும் திட்டமிட்டு ஒடுக்குவோம் என்பது அண்டை நாட்டவனின் ஆக்கிரமிப்பு சதி, அதை மதியால், ஒற்றுமையாய் வெல்வோமா? இல்லை, விதியென வீழ்வோமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, சுவைப்பிரியன் said:

புத்தர் நீங்கள் சொன்னது தான் ஈழம் கிடைத்திருந்தாலும் நடக்கும்.ஆனால் எனது சொந்த அனுபவத்தில் பலர் அங்கு போய் வாழ்கிறார்கள்.சிலர் எப்பவும் இங்கு திரும்பி வரும் விசாவிலும் இன்னும் சிலர் அறுதியாகவும் அங்கு போய் வாழ்கிறார்கள்.எனது இடத்தில் மட்டும் 4 குடும்பங்கள்.

ஒரு சிலர் வந்து  குடியேறுகிறார்கள் அண்மையில் ஒரு சுவிஸ் குடும்பம் ஆரம்பம் கொஞ்சம் தடுமாற்றம் ஆனால் தற்போது பழகிவிட்டார்கள் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

2010_Yelagiri_6.JPG    llo.JPG

தனித்துவமாக இருந்த தமிழ்நாடு, இனி ஈழம்போல் கிளர்ந்தெழவேண்டிய நேரமும் வரும்போல் சில நிகழ்வுகள் தெரிகின்றன..ஏனெனில் இலங்கையில், தமிழர்களை ஒடுக்கியாகிவிட்டது, இனி தமிழ்நாடு மட்டும்தான் மீதி, அதையும் திட்டமிட்டு ஒடுக்குவோம் என்பது அண்டை நாட்டவனின் ஆக்கிரமிப்பு சதி, அதை மதியால், ஒற்றுமையாய் வெல்வோமா? இல்லை, விதியென வீழ்வோமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஈழ கோரிக்கைக்கு முன்பே தனி தமிழ் நாடு கேட்டார்கள் .... அப்போதே தனி தமிழ் நாடு கிடைத்திருந்தால் இலகுவாக தமிழ் ஈழமும் கிடைத்திருக்கும். வியாக்கியானம் பேசுபவர்களுக்கு அதன் அவசியமும் அனைவருக்கும் புரிந்திருக்கும். இன்று இந்த நிலையம் ஏற்பட்டிருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்குப் போயிட்டு வந்து அங்க மக்கள் சொல்லேலாத கஸ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்டு சொன்னால் இங்கே கொஞ்ச பேருக்கு சந்தோசம் பொங்கும்

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:

ஊருக்குப் போயிட்டு வந்து அங்க மக்கள் சொல்லேலாத கஸ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்டு சொன்னால் இங்கே கொஞ்ச பேருக்கு சந்தோசம் பொங்கும்

அப்ப அங்கு மக்களுக்கு கஸ்டம் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

அப்ப அங்கு மக்களுக்கு கஸ்டம் இல்லையா?

தமிழ்நாட்டின் கிராமப் புறங்களோடு ஒப்பிடுகையில் ஈழம் ரொம்பவே வளர்ச்சியடைந்து கொண்டு வருகுது...ஊரில் தேனும்,பாலும் ஓடவில்லை ஆனால் ஓரளவுக்கு மக்கள் நிம்மதியாய் இருக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

தமிழ்நாட்டின் கிராமப் புறங்களோடு ஒப்பிடுகையில் ஈழம் ரொம்பவே வளர்ச்சியடைந்து கொண்டு வருகுது...ஊரில் தேனும்,பாலும் ஓடவில்லை ஆனால் ஓரளவுக்கு மக்கள் நிம்மதியாய் இருக்கினம்

வளர்ச்சி v நிம்மதி

இதை ஒருதடவை எனக்கு விளங்கப்படுத்துங்கள்.

உங்கள் கருத்தின் படி

ஈழத்தில் வளர்ச்சியும் ஓரளவு நிம்மதியும் தமிழ்நாட்டில் வளர்ச்சியின்றி நிம்மதி.

  • கருத்துக்கள உறவுகள்

எழுபதுகளில், ஈழ அரசியல்வாதிகளின் இரத்தப்பொட்டுகள், குடுமிப்பிடி, குழாயடிச் சண்டை இயங்கங்களின் தோற்றதிற்கு முன்(thanksgiving017.gif ) இப்போதிருக்கும் நிலையைவிட ஈழமக்கள், மிக, மிக நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இன்னும் சொல்லப்போனால், சிங்கப்பூருக்கு இணையாக வாழ்ந்தார்கள்தானே, பின் ஏன் அவர்கள் தங்கள் தலையிலேயே மண்ணைவாரி போட்டுக்கொண்டார்கள்..?

பேராசையினாலா..? think_smiley_13.gif

think_smiley_11.gif தெளிவுபடுத்தினால் நன்று!

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ராசவன்னியன் said:

1965இல் சிங்கப்பூரின் சிருஷ்டி .....
எந்த மூலாதாரமும் இல்லாத ஒரு சிறிய தீவாக 
பிரிந்து நிற்கிறோமே என்று மக்கள் ஏங்கி கொண்டு நிற்கையில் ....
பேசுகிறார் ...............

"இந்த நாட்டை நான் சிலோன் போல ஆக்கி காட்டுவேன் என்று."

இப்போ யாழ்ப்பாணத்துக்கு யாழ்தேவி வரவில்லை என்று ஆயுதங்கள் 
இளைஞர் கையில் எடுத்தார் என்ற கணக்காவும் ....
இப்போ யாழ்தேவி வருகிறது என்ற விதமாகவும் 
சிலருக்கு அரசியலும் ...
எம்மினத்தின் அழிவும் ... புரிந்து இருக்கிறது.

நாம் பேசாமல் கொஞ்சம் ஓரமாக ஒதுங்குவதே ...
நேரத்தை மிகுதி ஆக்க என்றாலும் பயன் தரும்!! 

  • கருத்துக்கள உறவுகள்

நாயிடம் கடிபடுவதை விட ..........
நாய்க்கு வழி விடுவதே மேல் !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் உங்கள் அனுபவப் பகிர்விற்கு நன்றி.

கலைஞனுக்கு ஏற்பட்ட அனுபவமே எல்லோருக்கும் ஏற்படும் என்றும் இல்லை. அவர் போன வேளையில்.. சந்தித்த அதிகாரிகள்.. உள்ளிட்ட பல்வேறு காரணிகள்.. இதனை தீர்மானிக்கும்.

அதற்காக.. எமக்கு நேர்ந்தவை நிகழவில்லை என்று அர்த்தமில்லை.  ஊர் போகும் மக்கள் எல்லா வகையிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

இதில் வேடிக்கை என்னவென்றால்... இப்படியான இமிகிரேசன் காசு பறிப்புப் பற்றி வெளிநாடுகளில் இருந்து செல்லும் சிங்களவர்களே தங்கள் அனுபவங்களைச் சொல்கிறார்கள். ஆனால்.. நம்மவர்கள் சிலரோ.. சொறீலங்கா மீது தீவிர வெள்ளை அடிப்பில்.. இருக்கிறார்கள். நன்மையாகத் தெரியவில்லை. tw_blush:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎04‎/‎2017 at 6:09 AM, MEERA said:

வளர்ச்சி v நிம்மதி

இதை ஒருதடவை எனக்கு விளங்கப்படுத்துங்கள்.

உங்கள் கருத்தின் படி

ஈழத்தில் வளர்ச்சியும் ஓரளவு நிம்மதியும் தமிழ்நாட்டில் வளர்ச்சியின்றி நிம்மதி.

ஈழத்திலே கக்கூசும் நல்ல தண்ணியும்  99% வீடுகளிலும் இருப்பதால் வளர்ச்சி + நிம்மதி <_<

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தின் எல்லைகளை கிழக்கு, மேற்காக பார்த்தாலே நாட்டின் எல்லை முடிவுகளை கண்களாலேயே அளந்துவிட முடியும். அங்கு வாழும் மக்களையும், ஊர்களையும் விரல்விட்டு எண்ணிவிட முடியும்.. அதற்கான வளங்கள் இன்னும் முழு அளவில் பயன்படுத்தப்படாமலேயே இருப்பதால் மக்களின் வாழ்க்கை தரம், வெகுஅளவில் பரந்துபட்ட தமிழகத்தை விட நிச்சயம் உயர்வாகவே இருக்கும்.. தமிழகம், அண்டைநாடான(?) இந்தியாவை சார்ந்திருப்பதாலும், பொருளாதார வளங்கள் திசைதிருப்பபடுவதும் காரணமாகும்

தமிழகத்தில் எங்கும் எதிலும் ஊழல்,  இயற்கை வளங்களின் அளவிற்கு மீறிய பயன்பாடு, மிக அதிகமான மக்கள் தொகை இவற்றையும் கணக்கில் கொள்ளவேண்டும்.. எழுந்தமானத்திற்கு இரண்டு பகுதிகளையும் ஒப்பீடு செய்வது நகைப்பிற்குரியது,  சிறுபிள்ளைத்தனமானது.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Thumpalayan said:

ஈழத்திலே கக்கூசும் நல்ல தண்ணியும்  99% வீடுகளிலும் இருப்பதால் வளர்ச்சி + நிம்மதி <_<

ஏன் பருத்தித்துறையில் நகரசபையினர் வீடுவீடாக கக்கூசு அள்ளியது உங்களுக்கு தெரிந்திருக்கும். கக்கூசு வண்டில்கள் தும்பளை வீதியில் தானே நிறுத்தி வைக்கப்படுவது.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, MEERA said:

ஏன் பருத்தித்துறையில் நகரசபையினர் வீடுவீடாக கக்கூசு அள்ளியது உங்களுக்கு தெரிந்திருக்கும். கக்கூசு வண்டில்கள் தும்பளை வீதியில் தானே நிறுத்தி வைக்கப்படுவது.

உண்மை, 20 வருடங்களுக்கு முன்னர். பருத்தித்துறையில் மட்டுமல்ல,  யாழ் குடாவின் பல இடங்களிலும் "வாழிக்கக்கூஸ்" பாவனையில் இருந்தது, அந்த தொழில் செய்தவர்களுக்கு அரசாங்கம் சம்பளமும் ஓய்வூதியமும் கொடுத்தது. யாழ்குடாநாட்டு "வீதிகளிலும்", "குச்சொழுங்கைகளிலும்", "மின்மாற்றிகளின் பின்னாலும்" யாரும் இயற்கை கடன்களை கழிக்கவில்லை :mellow: - புரியும் என நம்புகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Thumpalayan said:

யாழில் 20 வருடங்களுக்கு முன்னர் இருந்தது இன்று இல்லையோ அதேபோல் தான் தமிழ்நாடும். ஆனால் யாழில் சனத்தொகை குறைந்துவிட்டது தமிழ்நாட்டில் அதிகரித்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

கலைஞன் உங்கள் அனுபவப் பகிர்விற்கு நன்றி.

கலைஞனுக்கு ஏற்பட்ட அனுபவமே எல்லோருக்கும் ஏற்படும் என்றும் இல்லை. அவர் போன வேளையில்.. சந்தித்த அதிகாரிகள்.. உள்ளிட்ட பல்வேறு காரணிகள்.. இதனை தீர்மானிக்கும்.

அதற்காக.. எமக்கு நேர்ந்தவை நிகழவில்லை என்று அர்த்தமில்லை.  ஊர் போகும் மக்கள் எல்லா வகையிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

இதில் வேடிக்கை என்னவென்றால்... இப்படியான இமிகிரேசன் காசு பறிப்புப் பற்றி வெளிநாடுகளில் இருந்து செல்லும் சிங்களவர்களே தங்கள் அனுபவங்களைச் சொல்கிறார்கள். ஆனால்.. நம்மவர்கள் சிலரோ.. சொறீலங்கா மீது தீவிர வெள்ளை அடிப்பில்.. இருக்கிறார்கள். நன்மையாகத் தெரியவில்லை. tw_blush:tw_angry:

உங்களுக்கு இந்தச் சம்பவம்  யாருமே கூறவில்லை. நானறிய யாழ்களத்தில் இருந்து பின்வருவோர் போய் வந்திருக்கிறார்கள். சொல்லாமல் கொள்ளாமல் போய்வந்தவர்களும் இருப்பார்கள். ஆனால் உங்களுக்கு மட்டுமே இந்த துன்பியல் சம்பவம் நடந்தது துரதிஷ்டமான விடயம் தான்.

சுவைப்பிரியன்
ஜீவன் சிவா
நுணாவிலான்
நிழலி
கிருபன்
ரதி
புங்ஸ் 
புத்ஸ்
தும்ஸ்
மீரா
நெடுக்ஸ் 
கலைஞன்
மோகன்

5 minutes ago, MEERA said:

யாழில் 20 வருடங்களுக்கு முன்னர் இருந்தது இன்று இல்லையோ அதேபோல் தான் தமிழ்நாடும். ஆனால் யாழில் சனத்தொகை குறைந்துவிட்டது தமிழ்நாட்டில் அதிகரித்துவிட்டது.

ஓ உங்களுக்கு புரியவில்லை - வாழிக்கக்கூஸ் வீட்டினுள் இருப்பது, அங்கு நடப்பது நான்கு சுவற்றினுள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Thumpalayan said:

உங்களுக்கு இந்தச் சம்பவம்  யாருமே கூறவில்லை. நானறிய யாழ்களத்தில் இருந்து பின்வருவோர் போய் வந்திருக்கிறார்கள். சொல்லாமல் கொள்ளாமல் போய்வந்தவர்களும் இருப்பார்கள். ஆனால் உங்களுக்கு மட்டுமே இந்த துன்பியல் சம்பவம் நடந்தது துரதிஷ்டமான விடயம் தான்.

சுவைப்பிரியன்
ஜீவன் சிவா
நுணாவிலான்
நிழலி
கிருபன்
ரதி
புங்ஸ் 
புத்ஸ்
தும்ஸ்
மீரா
நெடுக்ஸ் 
கலைஞன்
மோகன்

தும்ஸ், நிழலியும் கலைஞனும் ஓர் சிறிய இடைவெளியில் தான் சென்று வந்துள்ளார்கள், இருவரும் நீண்டகாலம், கனேடிய கடவுச்சீட்டு ஆனால் நிழலியிடம் கேட்கப்பட்ட கேள்விகள் கலைஞனிடம் கேட்கப்படவில்லை. (என்னிடம் கூட எனது இலங்கைக் கடவுச்சீட்டை பற்றி எதுவும் கேட்கவில்லை) நிழலி எல்லா ஏற்பாடுகளுடனே சென்று வந்துள்ளார். 

எல்லாம் அங்கு இருக்கும் அதிகாரிகளை பொறுத்து. அனுபவம் என்பது ஒரேமாதிரி இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

எல்லாம் அங்கு இருக்கும் அதிகாரிகளை பொறுத்து. அனுபவம் என்பது ஒரேமாதிரி இருக்காது.

எல்லோரும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம் மீரா

எங்க கலைஞன் மீதியை சொல்லி முடிக்கவும் பிளீஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, MEERA said:

தும்ஸ், நிழலியும் கலைஞனும் ஓர் சிறிய இடைவெளியில் தான் சென்று வந்துள்ளார்கள், இருவரும் நீண்டகாலம், கனேடிய கடவுச்சீட்டு ஆனால் நிழலியிடம் கேட்கப்பட்ட கேள்விகள் கலைஞனிடம் கேட்கப்படவில்லை. (என்னிடம் கூட எனது இலங்கைக் கடவுச்சீட்டை பற்றி எதுவும் கேட்கவில்லை) நிழலி எல்லா ஏற்பாடுகளுடனே சென்று வந்துள்ளார். 

எல்லாம் அங்கு இருக்கும் அதிகாரிகளை பொறுத்து. அனுபவம் என்பது ஒரேமாதிரி இருக்காது.

எனக்கும் மற்றும் சிலருக்கும் எதுவும் நடக்கவில்லை என்பதால் உங்களுக்கும் நடந்திருக்காது......நடக்கவும் கூடாது என்பதுதான் லொஜிக் வாதம்.:cool:

9 hours ago, Thumpalayan said:

சுவைப்பிரியன்
ஜீவன் சிவா
நுணாவிலான்
நிழலி
கிருபன்
ரதி
புங்ஸ் 
புத்ஸ்
தும்ஸ்
மீரா
நெடுக்ஸ் 
கலைஞன்
மோகன்

தும்ஸ்

எனக்கு தெரிய இன்னமும் நாலு பேர் மிஸ்ஸிங் :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஜீவன் சிவா said:

தும்ஸ்

எனக்கு தெரிய இன்னமும் நாலு பேர் மிஸ்ஸிங் :grin:

ஆராய் இருக்கும்...confused0006.gif

2 minutes ago, குமாரசாமி said:

ஆராய் இருக்கும்...confused0006.gif

பாஞ்ச் வந்தது எல்லாருக்குமே தெரியும் -- மிகுதியை நான் சொல்லமாட்டேன்.:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.