Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர் போய் வந்தவனின் அனுபவங்கள்.. 42.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஜீவன் சிவா said:

இதே யாழில் நான் இங்கு வந்த புதிதில் - யாழில் இராணுவம் ஆயுதங்களுடன் தெரிவதில்லை என்று எழுதியதும் எத்தனை காலாவதியான படங்களை இணைத்து பொய் என்று எழுதியிருப்பார். இப்ப நேர வந்து பார்த்தபோது அதைப்பற்றி எதையும் குறிப்பிடவில்லை

ஆனையிறவை அண்டி முதுகில் கவுட்டுப் போட்ட துவக்கோடு சொறீலங்கா இராணுவம் சைக்கிள் சவாரி விடுகுது. அதை ஏலவே சொல்லிட்டம். யாழ் தொடரூந்து நிலையத்தில்.. ஆயுதங்களோடு சொறீலங்கா இராணுவம்.. கடற்படை வந்து போகக் கண்டிருக்கிறம். எல்லா காவலரண்களிலும் ஆயுதம் தரித்த சிங்கள இராணுவம்.. அல்லது பொலிஸ் நிற்குது.  அது அங்க சகஜம் என்பதால்.. பெரிசாக் கதைக்கேல்ல. யாழ் நகருக்கு விசிட் அடிக்கும் சிங்கள இராணுவத்தினர்... கடற்படையினர்.. விமானப்படையினர்.. ஆயுதம் தரித்த நிலையில்.. வாகனங்களில் அமர்ந்திருக்க அவதானித்திருந்தேன். ஆக்கிரமிப்பு தேசம் ஒன்றில்.. சொறீலங்கா இராணுவம் சும்மா நிற்குது என்று கதையளக்க நாம் ஒன்றும் மக்களை ஏமாளிகளாக நினைக்கவில்லை. tw_blush::rolleyes:

  • Replies 349
  • Views 28.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரதி said:

மீரா, நீங்கள் எல்லோரும் புலத்தில நீண்ட காலத்தில் வசிப்பதால் இங்கத்தைய தகுதி,தராதரம்[சரியான சொல் தெரியவில்லை] எதிர் பார்க்கிறீர்கள்...மேலே தும்ஸ் சொன்ன மாதிரி இலங்கை வளர்ச்சி அடைந்த நாடு இல்லை. வளர்ந்து வரும் நாடு...ஒருவரை எதிர்க்க வேண்டும் என கோபத்தில் எழுதாமல் நிதானமாக சிந்தித்து எழுதுங்கள்.

மேலே நான் எழுதியது எனது அனுபவம், இதில் நிதானமாக சிந்தித்து எழுத என்ன இருக்கிறது? மேலும் தகுதி தராதரம் எங்கு வருகிறது? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

உண்மைதான்,

1) திருமண எழுத்து முடிந்தவுடன் புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பத்திருந்தார் வாழ்க்கைத்துணை, ஒரு 6 மாதம் கழித்து புதிய அடையாள அட்டை வந்தது அதனை கொண்டு வங்கிக்கு சென்ற போது பிரச்சனை கிளம்பியது, புதிய அடையாள அட்டை புதிய இலக்கத்துடன் வந்திருந்து. அங்கு உப முகாமையாளராக இருந்தது எனது சகா ஆகவே வங்கிப்பிரச்சனை சுமூகமாக முடிந்தது.

பழைய அடையாள அட்டையின் நிழல் பிரதியையும் புதிய அடையாள அட்டையையும் கொண்டு கொழும்பில் இருந்த தலமைத்திணைக்களத்திற்கு சென்றோம், அவர்களுக்கோ அதிர்ச்சி, எப்படி புதிய இலக்கம் வந்தது என்று, ஒரு நாலைந்து பேர் மாறி மாறி அடையாள அட்டையையும் நிழல் பிரதியையும் பார்த்தார்கள். பின்னர் அவர்களுடைய பெண் பொறுப்பதிகாரி வந்து " சேர் ஒரு பிழை நடந்து விட்டது இரண்டு இலக்கங்களும் ஒருவருடையதுதான் என கடிதம் தருகிறோம், கடிதம் ரைப் பண்ணும் ஆள் லீவு உங்களுக்கு இரண்டு நாளில் அனுப்பி வைக்கின்றோம்" என்றார். அவர் கூறிய மாதிரி ஒரு மாதம் கழித்து கடிதம் வந்தது " lack of information " ஆல் புதிய இலக்கம் வந்ததாக. அடுத்த தடவை சென்ற போது அந்த கடிதத்தையும் கொண்டு போனபோது அதே பெண்மணி இருந்தார், எங்களை ஞாபகப்படுத்தி " சேர் பிழை எங்களுடையது தான், எங்கட பிழை என்று கடிதம் தர ஏலாது, தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று தனது அலைப்பேசி இலக்கத்தையும் தந்து ஏதவது உதவி தேவை என்றால் தன்னை வந்து சந்திக்கும் படி கூறினார்.

நீங்கள் கூறியது போன்ற அதிகாரிகளின் அசமந்த  விடயங்கள் நடக்கின்றன. எமது தமிழ்ப்பகுதி அரசாங்க அதிகாரிகளான பிரதேச செயலாளர்கள், கிராமசேவையாளர்கள் மிகவும் அசமந்தப் போக்குடன் நடந்து கொள்கிறார்கள். தமது ஊருக்கு, தமது பிரதேசத்துக்கு சேவை செய்கிறோம் என்ற எண்ணமே அவர்களிடம் இல்லை. போனவருட இறுதியில் நடந்த சம்பவம் ஒன்று. லண்டனில் பல வருடங்கள் வசித்துவிட்டு சில வருடங்களாக நெல்லியடியில் போயிருக்கும்  எனது நண்பன் ஒருவன் ஒரு வியாபாரத்தை கரவெட்டி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப் பார்த்தான். நாளைக்கு வாங்கோ அடுத்த கிழமை வாங்கோ என்று அவனை அலைக்கழித்துக்ன் கொண்டிருந்தார்கள். இதனைப்பற்றி ஒரு முகப்புத்தக பதிவு எழுதி அங்கு வேலை செய்யும் ஒருவரையும் tag பண்ணிவிட்டான். அடுத்தநாளே பிரதேச செயலாளரின் கோல். "தம்பி அந்தப் பதிவை கொஞ்சம் எடுத்துவிடுங்கோ". அவனது அலுவல் முடிந்தது. எமது அதிகாரிகள் பலர் கதிரைக்குப் பாரமானவர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

மேலே நான் எழுதியது எனது அனுபவம், இதில் நிதானமாக சிந்தித்து எழுத என்ன இருக்கிறது? மேலும் தகுதி தராதரம் எங்கு வருகிறது? 

மீரா,உண்மையை எழுதுவதில் தப்பில்லை...எழுதத் தான் வேண்டும்...இலங்கையை,லண்டனோடு ஒப்பிட்டு பார்ப்பது தான் பிழை என சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Thumpalayan said:

நீங்கள் கூறியது போன்ற அதிகாரிகளின் அசமந்த  விடயங்கள் நடக்கின்றன. எமது தமிழ்ப்பகுதி அரசாங்க அதிகாரிகளான பிரதேச செயலாளர்கள், கிராமசேவையாளர்கள் மிகவும் அசமந்தப் போக்குடன் நடந்து கொள்கிறார்கள். தமது ஊருக்கு, தமது பிரதேசத்துக்கு சேவை செய்கிறோம் என்ற எண்ணமே அவர்களிடம் இல்லை. போனவருட இறுதியில் நடந்த சம்பவம் ஒன்று. லண்டனில் பல வருடங்கள் வசித்துவிட்டு சில வருடங்களாக நெல்லியடியில் போயிருக்கும்  எனது நண்பன் ஒருவன் ஒரு வியாபாரத்தை கரவெட்டி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப் பார்த்தான். நாளைக்கு வாங்கோ அடுத்த கிழமை வாங்கோ என்று அவனை அலைக்கழித்துக்ன் கொண்டிருந்தார்கள். இதனைப்பற்றி ஒரு முகப்புத்தக பதிவு எழுதி அங்கு வேலை செய்யும் ஒருவரையும் tag பண்ணிவிட்டான். அடுத்தநாளே பிரதேச செயலாளரின் கோல். "தம்பி அந்தப் பதிவை கொஞ்சம் எடுத்துவிடுங்கோ". அவனது அலுவல் முடிந்தது. எமது அதிகாரிகள் பலர் கதிரைக்குப் பாரமானவர்கள் 

மைத்துனி காணிப் பதிவு சம்பந்தமாக வருடக்கணக்காக UC க்கு அலைந்து கொண்டிருந்தார், நவம்பரில் போன போது நானும் கூடச் சென்று அங்கிருந்த ஒருவருக்கு ஆயிரம் வெட்டினேன், அடுத்த நாளே வீடு தேடிவந்து கொடுத்து விட்டுச் சென்றார். மைத்துனி ஆட்டோவிற்கு மட்டுமே ஆயிரத்திற்கும் மேல் செலவழித்திருப்பார். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

மேலே நான் எழுதியது எனது அனுபவம், இதில் நிதானமாக சிந்தித்து எழுத என்ன இருக்கிறது? மேலும் தகுதி தராதரம் எங்கு வருகிறது? 

மீரா, ரதி சொல்லுவது benchmarking - ஒப்பீடு என நினைக்கிறேன். அதாவது இலங்கையின் நிலையை உடைய இன்னொரு நாட்டினை ஒப்பீடு செய்ய வேண்டும். பாஸ்போர்ட் அலுவலகம், சாரதி அனுமதிப்பத்திர அலுவலகம், ஆட்பதிவு திணைக்களம் (நீங்கள் கூறிய அடையாள அட்டை சம்பவம்) போன்றவற்றில் வேலை செய்பவர்களின் அசமந்தப் போக்கு  நாம் அனைவரும் அறிந்தது தான்.

வடமாகாண சபையின் அசமந்தப் போக்கும் நிர்வாகத் திறனற்ற தன்மையும் நமக்குத் தெரிந்தது தானே. ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை ஒழுங்காக செலவு செய்யத் தெரியாமல் மில்லியன் கணக்கான நிதி திறைசேரிக்கு திரும்புவது பலதடவை நடந்து விட்டது. முறையாகத் திட்டமிடவோ, திட்டங்களை நடைமுறைப் படுத்தத் தெரியாதவர்களே உயர் பதவிகளில் இருக்கிறார்கள். தமது அசமந்தப் போக்கான நிர்வாகத் திறனற்ற நடைமுறைகளை மறைக்க அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் தான் அரசியல். யாழ் மாவட்டத்தின் திண்மைக் கழிவுகளை உரிய முறையில் அகற்ற முடியாத நிலையில் பல மாநகர சபைகள் இருக்கின்றன. யாழ் நகர மீள்சுழற்சி செய்யக் கூடிய கழிவுகளை மீள்சுழற்சி  செய்ய ஒரு தனியார் நிறுவனம் முன்வந்தது. அதில் அவர்களுக்கு ஒரு லாபமும் இருந்தது. இலாப நோக்கற்று தனியார் நிறுவனம் மீள்சுழற்சி செய்ய முன் வருமா? நகர சபைக்கும் அந்த தனியார் நிருவத்திற்கும் win - win நிலை. நகரசபை, குப்பையை நாங்கள் பத்துக்கொள்ளுகிறோம் என்று சொல்லி அந்தத் திட்டத்தை குப்பையில் போட்டு விட்டார்கள். விளைவு, காக்கை தீவுப் பகுதியை மேலும் நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். யாழ் நகர சபையில் இருப்பது தமிழ் அதிகாரிகள் தானே? 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, MEERA said:

மைத்துனி காணிப் பதிவு சம்பந்தமாக வருடக்கணக்காக UC க்கு அலைந்து கொண்டிருந்தார், நவம்பரில் போன போது நானும் கூடச் சென்று அங்கிருந்த ஒருவருக்கு ஆயிரம் வெட்டினேன், அடுத்த நாளே வீடு தேடிவந்து கொடுத்து விட்டுச் சென்றார். மைத்துனி ஆட்டோவிற்கு மட்டுமே ஆயிரத்திற்கும் மேல் செலவழித்திருப்பார். 

உண்மை தான், தாம் எங்கே காசடிக்கலாம் என்றுதான் பார்க்கிறார்கள். அலுவலகத்திற்கு அரைமணித்தியாலம் பிந்திப் போவது, பிறகு மத்தியானம் சாப்பிட ரெண்டு மணித்தியாலம், பின்னேரம் அரைமணித்தியாலம் வெள்ளன எண்டு வெளிக்கிட்டால் வேலை செய்ய எங்கே நேரம் வரும்? எப்படா வீட்டை போய் சன்டீவியப் போட்டிட்டு குந்தலாம் என்று இருப்பவர்கள் இவர்கள்.

இதிலும்  விதி விலக்குகள் உண்டு. என்னுடைய வகுப்புத் தோழன் ஒருவன் யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று இலங்கை நிர்வாக சேவை  பரீட்சயிலும் தேறி கரைச்சி பிரதேச சபையில் நல்ல பதவியில் வேலை பார்த்தான், இப்போது மன்னார் மாவட்ட  கல்வித் திணைக்களத்தில் AD (Assistant Director யாக இருக்கிறான். பல விடயங்களில் மாற்றங்களைப் புகுத்தியிருக்கிறான். இப்படியான மாற்றங்களை கொண்டுவருவது எவ்வளவு கஷ்டம் எனவும் கூறுவான். ஆனால் we have to start some where! அவனைப் போன்ற பலர்தான் எமக்குத் தேவை. ஒவ்வொரு முறை போகும் போதும் அவனை ஊக்குவிக்கத் தவறுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Thumpalayan said:

உண்மை தும்ஸ் இளையவர்கள் சரியான பாதையில் பயணிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

மைத்துனி காணிப் பதிவு சம்பந்தமாக வருடக்கணக்காக UC க்கு அலைந்து கொண்டிருந்தார், நவம்பரில் போன போது நானும் கூடச் சென்று அங்கிருந்த ஒருவருக்கு ஆயிரம் வெட்டினேன், அடுத்த நாளே வீடு தேடிவந்து கொடுத்து விட்டுச் சென்றார். மைத்துனி ஆட்டோவிற்கு மட்டுமே ஆயிரத்திற்கும் மேல் செலவழித்திருப்பார். 

மீரா, நீங்கள் ஆயிரத்தை வெட்டி அலுவலை முடிச்சிருக்கலாம்!

ஆனால் நாளைக்கு அங்குள்ளவர்கள்..ஆயிரத்துக்கு எங்கே போவது?:unsure:

உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன்! நான் ஒரு நாள் தங்கச்சியுடன் கொ ழும்புத் துறைக்கு மீன் வாங்கப் போயிருந்தேன்!

ஒரு 'கூறு' மீனுக்கு விலை கேட்டபோது..அவள் சொன்ன விலையை நான் கொடுக்கப் போகும் போது தங்கச்சி என்னை மறித்தாள்!

ஏனென்று கேட்க அவள் உங்களைப் பார்த்து 'இரட்டை' விலை கூறுவதாகக் கூறினாள்!

நானும் அவளிடம் வாங்காமல் வேறு மீன் காரியிடம் போய் வாங்கினேன்!

அப்போது முதலாவது மீன் காரி கூறியது தெளிவாக எனது காதில் விழுந்தது!

தம்பி....பிரான்ஸ் காறர் வந்து வாங்குவினம்!

நாங்கள் சில வேளைகளில்...எங்களை அறியாமலே ....அங்கு வாழும் எமது உறவுகளில் வாழ்க்கைச் செலவைக் கூட்டி விடுகின்றோம் போல உள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்
On 2/23/2017 at 4:42 PM, முனிவர் ஜீ said:

இரண்டு பிள்ளைகளும் கொண்ட நான்கு பேருக்கு அங்குள்ள ஒரு மாத வாழ்க்கை செலவு எவ்வளவு என்று ஊர் போய் வந்தவர்களுக்கு தெரியுமா ? அல்லது அங்கு ஊருக்கு நல்லது செய்கிறன் என்று சுண்ணாம்பும்வாளியுமா திரிபவர்களுக்கு தெரியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

மீரா, நீங்கள் ஆயிரத்தை வெட்டி அலுவலை முடிச்சிருக்கலாம்!

ஆனால் நாளைக்கு அங்குள்ளவர்கள்..ஆயிரத்துக்கு எங்கே போவது?:unsure:

உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன்! நான் ஒரு நாள் தங்கச்சியுடன் கொ ழும்புத் துறைக்கு மீன் வாங்கப் போயிருந்தேன்!

ஒரு 'கூறு' மீனுக்கு விலை கேட்டபோது..அவள் சொன்ன விலையை நான் கொடுக்கப் போகும் போது தங்கச்சி என்னை மறித்தாள்!

ஏனென்று கேட்க அவள் உங்களைப் பார்த்து 'இரட்டை' விலை கூறுவதாகக் கூறினாள்!

நானும் அவளிடம் வாங்காமல் வேறு மீன் காரியிடம் போய் வாங்கினேன்!

அப்போது முதலாவது மீன் காரி கூறியது தெளிவாக எனது காதில் விழுந்தது!

தம்பி....பிரான்ஸ் காறர் வந்து வாங்குவினம்!

நாங்கள் சில வேளைகளில்...எங்களை அறியாமலே ....அங்கு வாழும் எமது உறவுகளில் வாழ்க்கைச் செலவைக் கூட்டி விடுகின்றோம் போல உள்ளது!

புங்கை நான் செய்ததை சரி என வாதிடவில்லை, ஆனால் இந்த பிரச்சனை இவ்வளவு காலமும் இழுபட காரணம் ஒரு முன்னாள் GS.

(2010 இல் மகி மாத்தையா அவசரவசரமாக) மைத்துனியின் வீட்டிற்கு இலக்கம் இடும் போது தவறுதலாக 18 இற்கு பதிலாக 19 ஐ இட்டுவிட்டார்கள், அவரும் 19 இலக்கத்தை கூறியே வரி செலுத்தி வந்தார், 8000/= மேல் கட்டிவிட்டார் பக்கத்தில் காணியில் குடிவந்த பிறகே இந்த பிரச்சனை வெளிச்சத்துக்கு வந்தது. பக்கத்தில் குடியிருக்க வந்த முன்னாள் GS உம் UC இல் வேலை செய்த தனது உறவுக்கார பெண்மணியூடாக தனது பிரச்சனையை தீர்த்து இவர் கட்டிய 8000/= கழித்து தனது வரியைக் கட்டி அந்த பெண்மணியூடாக புதிய இலக்கம் வழங்குவதற்கும் முட்டுக்கட்டை போட்டுவிட்டார். UC இடம் 18 ம் இலக்கத்திற்குரிய சீட்டை தா என்றால் UC அதையும் கொடுக்கவில்லை.

இதுமட்டும் அல்லாது இவர்களின் கடிதம் அவரின் வீட்டிற்கு போக அவர் எப்போதும் கடிதத்தை வாசித்து விட்டே கொண்டு வந்து தருவார், ஒரு முறை இவர்களின் வங்கிக் கடிதம் கிடைக்கவில்லை, சில மாதங்களின் பின்னர் எனக்கு இரண்டு இலட்சம் தேவைப்படுகிறது 3 மாதத்தில் தருகிறேன் என்று இவர் கூற இவர்களோ முழுச உடன் இப்பத்தான் உங்கட வங்கிக் கடிதம் ஞாபகம் வந்தது என்று அதை கொடுத்துள்ளார். அந்த கடித்த்திலிருந்த தொகையை வைத்தே அவர் கடன் கேட்டது, சென்ற வருடம் எனக்கு வந்த கடிதம் ஒன்றையும் இவர் இதே மாதிரி விளையாட்டுக் காட்டவே நான் இப்படி செய்தேன்.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, MEERA said:

நன்றி...மீரா!

புரிந்து கொண்டேன்!

சொறிக் குணம் தமிழனதும், குரங்கினதும்  தனிக்குணம்!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

மீரா, நீங்கள் ஆயிரத்தை வெட்டி அலுவலை முடிச்சிருக்கலாம்!

ஆனால் நாளைக்கு அங்குள்ளவர்கள்..ஆயிரத்துக்கு எங்கே போவது?:unsure:

உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன்! நான் ஒரு நாள் தங்கச்சியுடன் கொ ழும்புத் துறைக்கு மீன் வாங்கப் போயிருந்தேன்!

ஒரு 'கூறு' மீனுக்கு விலை கேட்டபோது..அவள் சொன்ன விலையை நான் கொடுக்கப் போகும் போது தங்கச்சி என்னை மறித்தாள்!

ஏனென்று கேட்க அவள் உங்களைப் பார்த்து 'இரட்டை' விலை கூறுவதாகக் கூறினாள்!

நானும் அவளிடம் வாங்காமல் வேறு மீன் காரியிடம் போய் வாங்கினேன்!

அப்போது முதலாவது மீன் காரி கூறியது தெளிவாக எனது காதில் விழுந்தது!

தம்பி....பிரான்ஸ் காறர் வந்து வாங்குவினம்!

நாங்கள் சில வேளைகளில்...எங்களை அறியாமலே ....அங்கு வாழும் எமது உறவுகளில் வாழ்க்கைச் செலவைக் கூட்டி விடுகின்றோம் போல உள்ளது!

அவர்களும் ஆட்களை பார்த்துதான் விலை சொல்கிறார்கள் என்று எண்ணுகிறேன்....

2005இல் கொழும்பில் ஒரு உடுப்பு கடையில் .... என்னோடு வேறு ஒரு வெளிநாட்டில்  இருந்து வந்த 
பெண்ணும் வந்திருந்தார் அவருக்கு ஒரு உடுப்பு வாங்கி கொடுக்கவே போயிருந்தேன்.

மிகவும் அழகான ஒரு பஞ்சாவி (சுடிதார்) இருந்தது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது 
அவருக்கு அதி வாங்கும்படி சொன்னனேன் ...
அவர் கடையில் நின்றவரை கேட்டார் என்ன விலை என்று 
அவர் 70 ஆயிரம் என்கிறார் ... உங்களுக்கு கொஞ்சம் குறைத்து தரலாம் என்றும் சொன்னார் 
கூட வந்தவர் விலையை கேட்டுவிட்டு வேண்டாம் என்கிறார். 

நான் லூசு மாதிரி .... முன்னைய இலங்கை ஞாபகத்தில் இருக்கவில்லை 
கூட வந்தவருக்கு சொன்னேன் .. மிக அழகாக இருக்கிறது 
போட்டுப்பாருங்கள் உங்களுக்கு அளவு எனில் வாங்கலாம் ... நான்தானே வாங்க போகிறேன் என்று.
இது அந்த கடை வேலை ஆளும் கேட்டுக்கொண்டு இருந்தார்.

போய் போட்டு பார்த்தால் ...மிகவும் அளவாகவும் இன்னும் கொஞ்சம் அழகாகவும்  இருந்தது 
கடைக்காரரிடம் கேட்ட்டேன் எவ்ளவு குறைப்பீர்கள் என்று ?
அவர் ஒரு கால்குலேடடேரில் எதோ தட்டி விட்டு சொன்னார் 
65 ஆயிரத்திற்கு தர முடியும் என்று.

நான் வாங்குவதட்கு ரெடி இரண்டு காரணம் நேரம் இன்மை கடை கடையாக ஏறி இறங்க 
மற்றது எனக்கு உண்மையிலே பிடித்து இருந்தது 
சுடிதார் பொதுவாகவே பல கலர்களில் இருக்கும் .... இது தனி வெள்ளை கலர் அதில் ஒரு பழுப்பு 
வெள்ளை நிறத்தில் டிசைன் இப்படி வேறு இடத்தில் இருக்குமா ? என்ற கேள்வி ஒருபுறம் 

கூட வந்தவர் இந்த விலையில் வேண்டாம் என்று மறுத்துவிட்டார் 
நாம் இருவரும் அவர் உண்மையான விலைதான் சொல்கிறார் என்று நம்பி இருந்தோம். 
அப்போ வேறு கடைக்கு போகலாம் என்று நாம் வெளிக்கிட .... திரும்பவும் கொஞ்சம் பொறுங்கோ 
என்றுவிட்டு ... கால்கொலேடரை எடுத்து தட்டிப்போட்டு 50 ஆயிரத்திற்கு தரலாம் என்றார். 
அதட்கும் கூட வந்தவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் ....
நாமும் வெளிக்கிட்டு நகர தொடங்கினோம் ..
அங்கு இன்னொரு சிறுவன் இருந்தான் ... அவன் அதை கொண்டுவந்து 30 ஆயிரத்திட்கு தரலாம் என்றான்.
நாம் மேலே இருந்து முதலாம் மாடிக்கு வந்துவிடடோம் ......சிறுவன் பொறுங்கோ பொறுங்கோ என்று 
எம்மை மறித்து விட்டு கசியரில் நின்றவருடன் எதோ பேசி விட்டு வந்து சொன்னான் ... கடைசி விலை 25 ஆயிரம் என்று.
எனக்கு இப்போதான் கொஞ்சம் கோவம் வர தொடங்கியது ....
25 ஆயிரம் சுடிதாரை கடைசி ஒரு 10 ஆயிரம் கூட்டி வித்திருக்கலாம் ஓரளவு ஏற்று கொள்ளலாம்.
70 ஆயிரத்திட்கு விற்க பாத்திருக்கிறான் ??
அங்கு வசிக்கும் மக்களுக்கு அப்படி செய்வார்கள் என்று எண்ணவில்லை ...
மற்றது ....... அவர்கள் இறுதிவரை பேரம் பேசித்தான் வாங்குவார்கள்.
நாம் இங்கிருந்து போய் கடைக்காரர் சொல்வதுதான் விலை என்று எண்ணிவிடுகிறோம். 

இந்த பேரம் பேசுற முறைமையை ஒழிக்க வேண்டும்.
அதனால் விற்பவர்களும் பாதிக்க படுகிறார்கள் ...
நாம் சுடிதார் வாங்கவில்லை ...
புங்கை மீன் வாங்கவில்லை .....
உண்மையான விலையை உடனேயே சொல்லி இருந்தால் நாமும் வாங்கி இருப்போமே ?

4 minutes ago, Maruthankerny said:

மருதர், எங்களுக்கு இனி அந்த பெண்ணைப்பற்றி விரிவான தகவல்களை தாருங்கள். அதைக்கேட்காவிட்டால் மண்டை வெடித்துவிடும். 

  • கருத்துக்கள உறவுகள்

மருதர் நீங்கள் ஒரு முறை 'பாங்கொக்' உங்கள் வருங்காலத் துணையுடன் போக வேண்டும்!

அங்குள்ள பெரிய சுப்பர் மார்க்கட்டுகளில் சொப்பிங் செய்ய வேண்டும்! அங்கு அரைக் காச்சட்டையுடன் நிற்கும் அழகிய இளம் பெண்கள் உங்கள் கவனத்தைத் திருப்பக் கூடும்! அவர்களுக்கு ஆங்கிலம் அதிகம் தெரியாது! ( வெள்ளைக்காரன் என் அந்தப் பக்கம் காலனித்துவத்தை விரிவு படுத்தவில்லையோ தெரியாது)!

ஒரு கால்குலேட்டரில் அவர்கள் ஒரு விலை சொல்லுவார்கள்! பின்னர் நீங்கள் அந்தக் கால்குலேட்டரை வாங்கி ,நீங்கள் உங்கள் விலையைத் தட்டிக் காட்டலாம்! அந்த விலைக்கு அவர்கள் தந்தால்.. உங்களுக்கு வலு சந்தோசமாக இருக்கும்!

பின்னர் இன்னொரு சுப்பர் மார்கட் தொகுதியில் அதே சாமான்........அரை விலைக்கும் குறைவாக இருக்கும்! அதைக் கவனித்தாலும்... நீங்கள் கவனிக்காத மாதிரி...உங்கள் துணை அந்த விலையைக் கவனிக்காதவாறு..அவரது கவனத்தை வேறு பக்கம் திருப்பிய படி..நடந்து தொடர்ந்து கொண்டிருக்கவேண்டும்!

இல்லா விட்டால்.. உங்கள் அன்றைய நாள் முழுவதும்..சில உடுப்புக்கள் வாங்குவதிலேயே கழிந்துவிடும்!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கலைஞன் said:

மருதர், எங்களுக்கு இனி அந்த பெண்ணைப்பற்றி விரிவான தகவல்களை தாருங்கள். அதைக்கேட்காவிட்டால் மண்டை வெடித்துவிடும். 

அது ஒரு அக்கா ... என்னிலும் இரண்டு வயது கூட 
தனது நாட்டில் மருத்துவம் செய்கிறார்  இங்கு ஒரு மேற்படிப்பு படிக்க வந்திருந்தார் 
அதனால்தான் தெரியும் .... அவர் குடுப்பத்துடன் இலங்கை போவதாக எனக்கு ஏற்கனவே சொல்லி இருந்தார் 
நான் சுனாமி நடந்ததால் திடீரெனவே சென்று இருந்தேன் 
அங்கு சென்று ஈமெயில் மூலம் எனது இலங்கை நம்பரை கொடுத்து இருந்தேன் 
நான் கொழும்பில் இருந்த போது அவர்களும் அவர்கள் நாட்டில் இருந்து வந்திருந்தார்கள்.
அதனால் சந்திக்க நேர்ந்தது. தலை சொறியிற மாதிரி ஒன்றும் இல்லை ....

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புங்கையூரன் said:

மருதர் நீங்கள் ஒரு முறை 'பாங்கொக்' உங்கள் வருங்காலத் துணையுடன் போக வேண்டும்!

அங்குள்ள பெரிய சுப்பர் மார்க்கட்டுகளில் சொப்பிங் செய்ய வேண்டும்! அங்கு அரைக் காச்சட்டையுடன் நிற்கும் அழகிய இளம் பெண்கள் உங்கள் கவனத்தைத் திருப்பக் கூடும்! அவர்களுக்கு ஆங்கிலம் அதிகம் தெரியாது! ( வெள்ளைக்காரன் என் அந்தப் பக்கம் காலனித்துவத்தை விரிவு படுத்தவில்லையோ தெரியாது)!

ஒரு கால்குலேட்டரில் அவர்கள் ஒரு விலை சொல்லுவார்கள்! பின்னர் நீங்கள் அந்தக் கால்குலேட்டரை வாங்கி ,நீங்கள் உங்கள் விலையைத் தட்டிக் காட்டலாம்! அந்த விலைக்கு அவர்கள் தந்தால்.. உங்களுக்கு வலு சந்தோசமாக இருக்கும்!

பின்னர் இன்னொரு சுப்பர் மார்கட் தொகுதியில் அதே சாமான்........அரை விலைக்கும் குறைவாக இருக்கும்! அதைக் கவனித்தாலும்... நீங்கள் கவனிக்காத மாதிரி...உங்கள் துணை அந்த விலையைக் கவனிக்காதவாறு..அவரது கவனத்தை வேறு பக்கம் திருப்பிய படி..நடந்து தொடர்ந்து கொண்டிருக்கவேண்டும்!

இல்லா விட்டால்.. உங்கள் அன்றைய நாள் முழுவதும்..சில உடுப்புக்கள் வாங்குவதிலேயே கழிந்துவிடும்!

நன்றி அனுபவ பகிர்விற்கு .....
நெடுக்கரின் திரியில் பல உலக பயணங்களை பகிர கூடியதாக வந்துவிட்ட்து.
இன்னொரு திரியை திறந்து .... இப்படியான அனுபவங்களை பகிர்ந்தால் 
மிகவும் பிரியோசனமாக இருக்கும்.

பார்க்க வேண்டிய அழகான இடங்கள் ..
உணவு .. ஸ்பெஷல் 
சுத்து மாத்து ... களவு 
குறைந்த விலையில் எப்படி கோட்டால் எடுப்பது 
என்று மற்றவர்களும் பகிர்ந்தால் 
எல்லோருக்கும் உதவும். 

சப்பட்டைகளுடன் நான் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கிறானான் 
எனக்கு ஒருமுறை நியூ யோர்க் சைனா மார்க்கெட்டில் ஆப்பு வைத்து விடார்கள் 

கோச் ஹாண்ட் பாக்  என்று விற்றுவிடடார் நானும் $30 மலிவு என்று வேண்டி விட்டேன் 
பின்பு அடுத்த தெருவில் ஒரு பெண் சொன்னார் ... தன்னிடம் உண்மையான கோச் பாக் 
இருக்கிறது என்று ... நான் சொன்னேன் எனக்கு ஒன்றுதான் வேண்டும் 
நான் ஏற்கனவே வேண்டிவிட்டேன் என்று ..... அவர் சொன்னார் இது மாதிரி இல்லை 
எண்னிடம் உண்மையான பாக் இருக்கிறது என்று .... எனக்கு புரியவில்லை .
அவர் எனது பாக்கை வாங்கி காட்டினார் அதில் இருக்கும் சி எழுத்து இறுதியில் ஜி மாதிரி 
முடிகிறது இது கோச் இல்லை என்று .... அப்போதான் நானும் கவனித்தேன் அது ஜி மாதிரியே இருக்கிறது.

அது ஒருவருக்கு கிரிஸ்மாஸ் பரிசுக்கு வாங்கி இருந்தேன் நல்லவேளை அந்த பெண் எனக்கு 
சுட்டி காட்டியது ...... பின்பு அவர் ஒரு உள் தெருவால் கூட்டி சென்று ஒரு மாடியில் ஏறி கொஞ்ச 
பாக்குகள் காட்டினார் அது உண்மையிலேயே கோச்தான் அவர் $50 என்றார் ...
அந்த $30க்கு வாங்கியது இப்போதும் இங்கு கிடக்கிறது ......

  • கருத்துக்கள உறவுகள்

நான் இலங்கை போனதும் Shopping list ஐ சகலனிடம் கொடுத்துவிடுவேன். அவர் ஓர் ஆணி வாங்குவது என்றாலும் நாலு கடையில் விசாரித்துதான் வாங்குவார், ஆத்துக்காரி தனது list ஐ தமக்கையிடம் கொடுத்துவிடுவார். மற்றும்படி House of Fashion இல் நேரம் கிடைத்தால்.  

அவசரமாக ஏதாவது தேவையெனில் food city, விலை கூடினாலும் ஏமாறவில்லை என்ற சந்தோசம். 

சீலை,சுடிதார், வேட்டி அடிக்கடி இந்தியா போகும் உறவினர் வாங்கி வருவார்.

12 hours ago, Thumpalayan said:

எமது அதிகாரிகள் பலர் கதிரைக்குப் பாரமானவர்கள் 

உண்மை

11 hours ago, Thumpalayan said:

.

இதிலும்  விதி விலக்குகள் உண்டு. என்னுடைய வகுப்புத் தோழன் ஒருவன் யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று இலங்கை நிர்வாக சேவை  பரீட்சயிலும் தேறி கரைச்சி பிரதேச சபையில் நல்ல பதவியில் வேலை பார்த்தான், இப்போது மன்னார் மாவட்ட  கல்வித் திணைக்களத்தில் AD (Assistant Director யாக இருக்கிறான். பல விடயங்களில் மாற்றங்களைப் புகுத்தியிருக்கிறான். இப்படியான மாற்றங்களை கொண்டுவருவது எவ்வளவு கஷ்டம் எனவும் கூறுவான். ஆனால் we have to start some where! அவனைப் போன்ற பலர்தான் எமக்குத் தேவை. ஒவ்வொரு முறை போகும் போதும் அவனை ஊக்குவிக்கத் தவறுவதில்லை.

இப்படியானவர்களை இனம் கண்டு முன்னிலைப் படுத்த வேண்டும்

2 hours ago, Maruthankerny said:

அவர்களும் ஆட்களை பார்த்துதான் விலை சொல்கிறார்கள் என்று எண்ணுகிறேன்....

2005இல் கொழும்பில் ஒரு உடுப்பு கடையில் .... என்னோடு வேறு ஒரு வெளிநாட்டில்  இருந்து வந்த 
பெண்ணும் வந்திருந்தார் அவருக்கு ஒரு உடுப்பு வாங்கி கொடுக்கவே போயிருந்தேன்.

மிகவும் அழகான ஒரு பஞ்சாவி (சுடிதார்) இருந்தது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது 
அவருக்கு அதி வாங்கும்படி சொன்னனேன் ...
அவர் கடையில் நின்றவரை கேட்டார் என்ன விலை என்று 
அவர் 70 ஆயிரம் என்கிறார் ... உங்களுக்கு கொஞ்சம் குறைத்து தரலாம் என்றும் சொன்னார் 
கூட வந்தவர் விலையை கேட்டுவிட்டு வேண்டாம் என்கிறார். 

நான் லூசு மாதிரி .... முன்னைய இலங்கை ஞாபகத்தில் இருக்கவில்லை 
கூட வந்தவருக்கு சொன்னேன் .. மிக அழகாக இருக்கிறது 
போட்டுப்பாருங்கள் உங்களுக்கு அளவு எனில் வாங்கலாம் ... நான்தானே வாங்க போகிறேன் என்று.
இது அந்த கடை வேலை ஆளும் கேட்டுக்கொண்டு இருந்தார்.

போய் போட்டு பார்த்தால் ...மிகவும் அளவாகவும் இன்னும் கொஞ்சம் அழகாகவும்  இருந்தது 
கடைக்காரரிடம் கேட்ட்டேன் எவ்ளவு குறைப்பீர்கள் என்று ?
அவர் ஒரு கால்குலேடடேரில் எதோ தட்டி விட்டு சொன்னார் 
65 ஆயிரத்திற்கு தர முடியும் என்று.

நான் வாங்குவதட்கு ரெடி இரண்டு காரணம் நேரம் இன்மை கடை கடையாக ஏறி இறங்க 
மற்றது எனக்கு உண்மையிலே பிடித்து இருந்தது 
சுடிதார் பொதுவாகவே பல கலர்களில் இருக்கும் .... இது தனி வெள்ளை கலர் அதில் ஒரு பழுப்பு 
வெள்ளை நிறத்தில் டிசைன் இப்படி வேறு இடத்தில் இருக்குமா ? என்ற கேள்வி ஒருபுறம் 

கூட வந்தவர் இந்த விலையில் வேண்டாம் என்று மறுத்துவிட்டார் 
நாம் இருவரும் அவர் உண்மையான விலைதான் சொல்கிறார் என்று நம்பி இருந்தோம். 
அப்போ வேறு கடைக்கு போகலாம் என்று நாம் வெளிக்கிட .... திரும்பவும் கொஞ்சம் பொறுங்கோ 
என்றுவிட்டு ... கால்கொலேடரை எடுத்து தட்டிப்போட்டு 50 ஆயிரத்திற்கு தரலாம் என்றார். 
அதட்கும் கூட வந்தவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் ....
நாமும் வெளிக்கிட்டு நகர தொடங்கினோம் ..
அங்கு இன்னொரு சிறுவன் இருந்தான் ... அவன் அதை கொண்டுவந்து 30 ஆயிரத்திட்கு தரலாம் என்றான்.
நாம் மேலே இருந்து முதலாம் மாடிக்கு வந்துவிடடோம் ......சிறுவன் பொறுங்கோ பொறுங்கோ என்று 
எம்மை மறித்து விட்டு கசியரில் நின்றவருடன் எதோ பேசி விட்டு வந்து சொன்னான் ... கடைசி விலை 25 ஆயிரம் என்று.
எனக்கு இப்போதான் கொஞ்சம் கோவம் வர தொடங்கியது ....
25 ஆயிரம் சுடிதாரை கடைசி ஒரு 10 ஆயிரம் கூட்டி வித்திருக்கலாம் ஓரளவு ஏற்று கொள்ளலாம்.
70 ஆயிரத்திட்கு விற்க பாத்திருக்கிறான் ??
அங்கு வசிக்கும் மக்களுக்கு அப்படி செய்வார்கள் என்று எண்ணவில்லை ...
மற்றது ....... அவர்கள் இறுதிவரை பேரம் பேசித்தான் வாங்குவார்கள்.
நாம் இங்கிருந்து போய் கடைக்காரர் சொல்வதுதான் விலை என்று எண்ணிவிடுகிறோம். 

இந்த பேரம் பேசுற முறைமையை ஒழிக்க வேண்டும்.
அதனால் விற்பவர்களும் பாதிக்க படுகிறார்கள் ...
நாம் சுடிதார் வாங்கவில்லை ...
புங்கை மீன் வாங்கவில்லை .....
உண்மையான விலையை உடனேயே சொல்லி இருந்தால் நாமும் வாங்கி இருப்போமே ?

2 hours ago, Maruthankerny said:

அது ஒரு அக்கா ... என்னிலும் இரண்டு வயது கூட 
தனது நாட்டில் மருத்துவம் செய்கிறார்  இங்கு ஒரு மேற்படிப்பு படிக்க வந்திருந்தார் 
அதனால்தான் தெரியும் .... அவர் குடுப்பத்துடன் இலங்கை போவதாக எனக்கு ஏற்கனவே சொல்லி இருந்தார் 
நான் சுனாமி நடந்ததால் திடீரெனவே சென்று இருந்தேன் 
அங்கு சென்று ஈமெயில் மூலம் எனது இலங்கை நம்பரை கொடுத்து இருந்தேன் 
நான் கொழும்பில் இருந்த போது அவர்களும் அவர்கள் நாட்டில் இருந்து வந்திருந்தார்கள்.
அதனால் சந்திக்க நேர்ந்தது. தலை சொறியிற மாதிரி ஒன்றும் இல்லை ....

2004 இல 70 ஆயிரம் - அதுவும் சுடிதார்

அந்த நேரம் நல்லூரில் ( இன்று யாழில் மிகவும் விலைகூடின வசிப்பிடம்) ஒன்றைரைப் பரப்பு காணியே வாங்கி இருக்கலாம்.

நீங்கெல்லாம் எங்கய்யப்பா இருக்கிறீர்கள் இந்த அண்டப்புளுகை அவிழ்த்துவிட?

உங்களை மாதிரி நாலுபேர் சீச்சீ நீங்கள் ஒருவரே போதும் - தமிழர் முன்னேற

தும்பளையான் ஏற்கனவே கூறியதை நான் மீண்டும் கூறி விடை பெறுகின்றேன்.

1kml5c.jpg

Edited by ஜீவன் சிவா

39 minutes ago, ஜீவன் சிவா said:

மிகவும் அழகான ஒரு பஞ்சாவி (சுடிதார்) இருந்தது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது 
அவருக்கு அதி வாங்கும்படி சொன்னனேன் ...
அவர் கடையில் நின்றவரை கேட்டார் என்ன விலை என்று 
அவர் 70 ஆயிரம் என்கிறார் ...

சுனாமி நடந்ததால் திடீரென்று சென்றவர் 70 ஆயிரத்துக்கு தெரிஞ்ச அக்காவுக்கே சுடிதார் வாங்கி கொடுக்க ரெடி எண்டால் - நம்ம ஊர் சனத்துக்கு எவ்வளவு கொடுத்திருப்பார்!!!

வாழ்க மருது - உங்கள் பணிக்கு தலை வணங்குகிறேன்.

(இது நடிப்பில்லை சத்தியமா உண்மைதான் மருது அண்ணை)

1 hour ago, ஜீவன் சிவா said:

2004 இல 70 ஆயிரம் - அதுவும் சுடிதார்

அந்த நேரம் நல்லூரில் ( இன்று யாழில் மிகவும் விலைகூடின வசிப்பிடம்) ஒன்றைரைப் பரப்பு காணியே வாங்கி இருக்கலாம்.

நீங்கெல்லாம் எங்கய்யப்பா இருக்கிறீர்கள் இந்த அண்டப்புளுகை அவிழ்த்துவிட?

உங்களை மாதிரி நாலுபேர் சீச்சீ நீங்கள் ஒருவரே போதும் - தமிழர் முன்னேற

தும்பளையான் ஏற்கனவே கூறியதை நான் மீண்டும் கூறி விடை பெறுகின்றேன்.

என்னது 2004ம் ஆண்டு நல்லூர்ல 1 1/2 பரப்பு காணி 70ஆயிரமா????????????????????

நாங்களும் 2004ம் ஆண்டு திருநெல்வேலில தான் இருந்தோம். தெரிந்திருந்தால் ஒரு 10, 20 பரப்பு காணி வேண்டிவிட்டிருக்கலாம். தெரியாமல் போச்சு tw_cry:

உண்மையில், அந்த நேரம், நல்லூர், திருநெல்வேலி பகுதிகளில்  1 பரப்பு காணி 7 லச்சத்துக்கு மேலே தான் இருந்தது.

2002ம் ஆண்டு எ9 வீதி திறக்க முதலே நல்லூர், திருநெல்வேலி பகுதிகளில்  1 பரப்பு காணி 2 - 3 லச்சத்துக்கு மேலே தான் போனது.

நீங்கள் சொல்லுற புளுகுகளை மட்டும்தான் எல்லோரும் நம்பவேண்டும்:unsure:

6 minutes ago, Surveyor said:

நீங்கள் சொல்லுற புளுகுகளை மட்டும்தான் எல்லோரும் நம்பவேண்டும்:unsure:

45 minutes ago, ஜீவன் சிவா said:

சுனாமி நடந்ததால் திடீரென்று சென்றவர் 70 ஆயிரத்துக்கு தெரிஞ்ச அக்காவுக்கே சுடிதார் வாங்கி கொடுக்க ரெடி எண்டால் - நம்ம ஊர் சனத்துக்கு எவ்வளவு கொடுத்திருப்பார்!!!

வாழ்க மருது - உங்கள் பணிக்கு தலை வணங்குகிறேன்.

(இது நடிப்பில்லை சத்தியமா உண்மைதான் மருது அண்ணை)

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

இரண்டு பிள்ளைகளும் கொண்ட நான்கு பேருக்கு அங்குள்ள ஒரு மாத வாழ்க்கை செலவு எவ்வளவு என்று ஊர் போய் வந்தவர்களுக்கு தெரியுமா ? அல்லது அங்கு ஊருக்கு நல்லது செய்கிறன் என்று சுண்ணாம்பும்வாளியுமா திரிபவர்களுக்கு தெரியுமா ?

பெருமாள் இருக்கும் இடத்தைபொறுத்தே வாழ்க்கை செலவு விகிதத்தை சொல்லலாம் 2000,5000 ரூபாய்க்குள் வாழ்கிற, வாழ்ந்தே ஆகவேண்டிய குடும்பமும் இருக்கிறது.

வாளிக்கொம்பனி காரர்கள் கணக்கு எனக்கு தெரியாது

 அண்மையில் வயோதிபர்களுக்காக அரசுனால் கொடுக்கப்படும் மாதச்செலவு காசு குறிப்பிட்ட சின்ன ஒரு தொகைக்காக அஞ்சல் அலுவலகத்தில் வரிசையில் நிற்கும்வயோதிபர்களை பார்க்க நேர்ந்தது அவர்களுக்கான காசு வந்தும் அதை மாற்றி அஞ்சல் அலுவலகத்தில் வைக்காமல் காசு தீர்ந்து விட்டது போய் நாளை வாருங்கள்  என்று சொல்லு நம்ம நம்ம அரச தமிழ்வாளி ஒன்று 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பெருமாள் said:

இரண்டு பிள்ளைகளும் கொண்ட நான்கு பேருக்கு அங்குள்ள ஒரு மாத வாழ்க்கை செலவு எவ்வளவு என்று ஊர் போய் வந்தவர்களுக்கு தெரியுமா ? அல்லது அங்கு ஊருக்கு நல்லது செய்கிறன் என்று சுண்ணாம்பும்வாளியுமா திரிபவர்களுக்கு தெரியுமா ?

பிள்ளைகளுக்கு:

ஏல்.. ஓல் அல்லாத கணிதமும்.. ஆங்கிலமும் படிக்க.. ரியுசன் செலவு... பிள்ளைக்கு.. ரியூசன் செலவு மாதம் : 1500 x 2 = 3000 (இதே அனைத்துப் பாடங்களுக்கும் போவதானால்.. செலவு எகிறும்)

நாங்க எல்லாம் ரியுசனுக்கு கூடச் செலவழித்த மாதத் தொகை.. வெறும் 300. கனகாலம் இல்லை... மகிந்த அரசுக்கு முந்தி. 

ஆக இன்று.. சொறீலங்கா மக்களின் வாழ்க்கைச் செலவை.. யுத்த வெற்றியில் குளிர்காய.. 10 மடங்கு அதிகரித்து வைத்துள்ளார்கள். சொறீலங்கா மக்களும் சாப்பாடு தண்ணி போகுதோ இல்லையோ.. யுத்த வெற்றி பசியாற்றும் என்று நம்பி சீரழிகிறார்கள். அவ்வளவே. செலவை கட்டுப்படுத்த முடியாமல்.. மக்களும் அதிகாரிகளும் வியாபாரிகளும் பகற்கொள்ளை அடிப்பதை அப்பட்டமாகவே காண முடிகிறது.  :rolleyes:

இது உண்மைச் சம்பவம்.

கொழும்பில்.. நடைபாதையில்.. பயணிக்கும் போது ஒரு மாற்றுத்திறனாளி உருவில் இருந்தவர் உதவி கேட்டார். கையில் இருந்த 2 ரூபா குத்தியை கொடுத்தேன். திருப்பி மூஞ்சியில் எறியாத குறையா வீதியில் விட்டெறிந்தார்.  எனக்குப் புரியவில்லை. 1 ரூபா தங்க நிறத்தில் வந்திருக்குது.. 2 ரூபா வெள்ளின்னு எறிராரோ என்று.  பக்கத்தில் வந்த உறவுக்காரரிடம் கேட்டேன்.. என்ன சங்கதின்னு. அந்தாளுக்கு ஏலுமென்றால்.. உங்களுக்கு எழும்பி அடிச்சிருக்கும்.. இப்ப எல்லாம்.. 2 ரூபா க்கு மதிப்பே இல்லை. 100 ரூபா தான் குறைஞ்ச பிச்சை என்று. 

ஆனால்.. நான் வெளிநாட்டுக்கு வரும் போது.. 2 ரூபாயில்.. வெள்ளவத்தையில் இருந்து தெகிவளைக்குப் போயிருக்கிறேன். ஒரு 10 வருட காலத்தில்.. நாட்டை வெகுவாக பொருண்மிய ரீதியில் சீரழித்திருக்கிறார்கள். ஆனால்.. அந்தச் சுமையை தாக்க முடியாமல்.. உள்ள அடித்தட்ட மக்களிடம்.. யுத்த வெற்றி என்ற ஒரு போதையை ஊட்டி... அதில் அவர்களை போலியாக வாழ வைத்திருப்பது அப்படியே தெரிகிறது. 

சிங்கள மக்களில் சிந்திக்கக் கூடிய மக்கள்.. இந்த யுத்த வெற்றி பற்றி புகழ்வதாக இல்லை. மாறாக.. யுத்தம் முடிந்தது என்று மகிழ்ந்தாலும்.. வாழ்க்கைச் செலவை எண்ணியே அதிகம் கவலைப்படுகிறார்கள். 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.