Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மீனவர் சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் : இலங்கை கடற்படை மறுப்பு

Featured Replies

இந்திய மீனவர் சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் : இலங்கை கடற்படை மறுப்பு

இந்திய மீனவர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் தகவலை, இலங்கை கடற்படை பேச்சாளர், லுத்தினன் கொமான்டர் சமிந்த வலகுலுகே இன்று மறுத்துள்ளார். 

indian-fisherman-shot_650x400_4148885344

தமிழகத்தின் ராமேஸ்வர மாவட்டத்தின் தங்கச்சிமடம் பகுதியிலிருந்து கச்சத்தீவு அருகேவந்து மீன்பிடியில் பிரிட்கோ எனப்படும் மீனவர் நேற்றிரவு 8.30 மணியளவில் சுடப்பட்ட நிலையில் இறந்துள்ளதாகவும், அவருடன் வந்த சரவணன் என்பவர் காயமுற்றுள்ளதாகவும் இந்திய மீனவ திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் குளஞ்சிநாதன் இந்திய ஊடகங்களுக்கு செவ்வியளித்துள்ளார். 

இருப்பினும் கண்காணிப்பில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் யார் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை என கடற்படை பேச்சாளர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/17461

  • தொடங்கியவர்

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு: ராமேசுவரம் மீனவர் பலி- தமிழக அரசு கண்டனம்

fishermen_3137620f.jpg
 
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்று இரவு (திங்கள்கிழமை இரவு) துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.

ராமேசுவரத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப் படகுகளில் மீன்பிடிக்க நேற்று மாலை கடலுக்குச் சென்றனர். இவர்கள் இலங்கை கடல் எல்லை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த டிட்டோ (21) என்பவர் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை கைவிட்டு அவசர அவசரமாக கரைக்குத் திரும்பினர்.

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூட்டில், மற்றொரு மீனவர் சரன் காயமடைந்தார்.

கடலோர காவற்படைக்கு தகவல்:

இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதும் மீனவ சங்க தலைவர்கள் பி.சேசு ராஜா மற்றும் எமிரேட்டை தொடர்பு கொண்ட மீனவர்கள் சம்பவம் குறித்து தெரிவித்திருக்கின்றனர். மேலும், கடலோர காவற்படைக்கு தகவல் தெரிவித்து தங்களை காப்பாற்றுமாறும் கோரியிருக்கின்றனர். ஆனால், கடலோர காவற்படை அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்ததால், மீனவர்கள் அங்கிருந்தே தப்பி வந்துள்ளனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/இலங்கை-கடற்படை-துப்பாக்கிச்-சூடு-ராமேசுவரம்-மீனவர்-பலி-தமிழக-அரசு-கண்டனம்/article9572772.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக்கடா பொய் பேசி இருக்கீங்க, புத்தா சத்தியா உண்மையத் தவிர வேறில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

17097234_743989575775239_100920926663747

  • தொடங்கியவர்

இந்திய மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இலங்கை அதிபர் சிறீசேனாவிடம் இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி பேசியுள்ளார்.

’மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு இனி நடக்காது’ - துணைக் குடியரசுத் தலைவரிடம் கூறிய இலங்கை அதிபர்
 
ஜகார்த்தா:

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று இந்திய கடல் எல்லையில் ஆதாம் பாலம் என்ற இடத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இந்தத் தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ கழுத்தில் குண்டு பாய்ந்த்து பலியானார்.

34C0E0ED-627C-4389-9440-4151EF83335C_L_s

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், இந்தோனேசிய நாட்டின் தலைநகரான ஜகார்தா-வில் 20-ஆவது இந்தியப் பெருங்கடல் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி பங்கேற்றுள்ளார்.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா-வும் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ள நிலையில், இந்திய மீனவர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறீசேனாவிடம் ஹமீது அன்சாரி பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது, இது போன்ற சம்பவம் இனிமேல் நிகழாது என சிறீசேனா வாக்குறுதி அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/07223438/1072409/Hamid-Ansari-takes-up-fisherman-killing-issue-with.vpf

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நவீனன் said:

இந்திய மீனவர் சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் : இலங்கை கடற்படை மறுப்பு

இந்திய மீனவர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் தகவலை, இலங்கை கடற்படை பேச்சாளர், லுத்தினன் கொமான்டர் சமிந்த வலகுலுகே இன்று மறுத்துள்ளார்.

http://www.virakesari.lk/article/17461

இலட்சக்கணக்கில் சொந்த நாட்டுமக்களையே கொன்று குவித்து, பிணத்தோடு புணரும் இனமாகிய நீங்கள், இக்கொலையை மட்டும் ஒத்துக்கொள்ளவா போகிறீர்கள்..?

உங்களுக்கேற்ற மொழியில் பாடம் புகட்டியவர்களையும் ஒழித்துக்கட்ட உதவிய தமிழர்களை செருப்பால் அடிக்க வேண்டும்..

உலகில் கடல் எல்லை தாண்டி வரும் அயல் நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லும் ஒரே நாடு: இலங்கை

தன் நாட்டு மீனவரை சுட்டுக் கொன்றதுக்கு எந்த எதிர்ப்பும் காட்ட வக்கில்லாத உலகில் உள்ள ஒரே ஒரு கையாளாகாத நாடு: இந்தியா

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிழலி said:

உலகில் கடல் எல்லை தாண்டி வரும் அயல் நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லும் ஒரே நாடு: இலங்கை

தன் நாட்டு மீனவரை சுட்டுக் கொன்றதுக்கு எந்த எதிர்ப்பும் காட்ட வக்கில்லாத உலகில் உள்ள ஒரே ஒரு கையாளாகாத நாடு: இந்தியா

அதெப்படி, மலையாளி மீனவரை சுட்டு ஓடின இத்தாலிக்காரனை திரத்திப் பிடித்தார்களே. அதுக்கு மட்டும் எப்படி.

ஒரே காரணம் இது தமிழன்.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இந்திய மீனவர் சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் :

நீங்க கிந்திய மீனவன் என்று வீரகேசரி சொல்லுது .. இங்க இருக்கிற எல்லா மீடியாவும் தமிழ்நாடு .. தமிழ்மீனவன் என்று சொல்லுது ..!! அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை..!! ஒரு வேளை வானத்தில் இருந்து மொத்தமா லேண்ட் ஆகிபோட்டமா ..? ரெல் மீ ..! tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

17190488_1389063197781503_75242266528537

  • கருத்துக்கள உறவுகள்

ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடத்தியவர்கள் ஏழை மீனவர்களின் உயிர்களை பறித்தவர்களுக்கு எதிராக  ஏன் போராட்டம் செய்யவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, வாத்தியார் said:

ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடத்தியவர்கள் ஏழை மீனவர்களின் உயிர்களை பறித்தவர்களுக்கு எதிராக  ஏன் போராட்டம் செய்யவில்லை

தோழர்..!

அவங்களுக்கும் (மாணவர்களுக்கும்) இறுதி தேர்வு இருக்கிறது .  தேர்வு எழுதவேண்டாமா ..? இளைஞர்கள் ..? பிழைப்பை பார்க்க வேண்டாமா ..?  தினமும் போராட்டம் ..தினமும் அழைப்பு ... ஒரு மே மாதம் என்றாலும் பரவாயில்லை!

இதில் எனக்கு தெரிந்த கல்லூரி நிர்வாக பணியாளர்களிடம் பேசும் போது அரியர் வைத்தாலும் பரவாயில்லை .. களத்தில் இறங்குவம் ..!! இது அவுங்க வாதம்...! பேசமா மாணவர்களையே அந்த இடத்தில்(முதலமைச்சர்) உட்கார வைத்திடுங்கள்..!

Quote

டிஸ்கி :

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு - ஒகேனக்கல். விவசாயிகள் போராட்டம்
- ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த புதுக்கோட்டை அரசு கல்லூரி மாணவர்கள்
- தாமிரபரணியை காக்க வாருங்கள் இளைஞர்களே... அழைக்கிறார் நல்லக்கண்ணு
- வாடிவாசலுக்காக போராடிய மாணவர்களே.. எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வாங்க.. ராமேஸ்வரம் மீனவர்கள்

அடுத்து வர இருப்பவை..

- நீட் தேர்வு பிரச்சனை.
- ரேசன் பொருட்கள் வழங்கபடாமை ..
- காவிரி நீர் சிக்கல் - விவசாயிகள் தற்கொலை சிக்கல்
- பவானி அணை பிரச்சனை ..
- நியூட்ரினோ சிக்கல் .
- பாலாறு பிரச்சனை ..

- மாதம் ஒன்றுக்கு 4 முறைக்கு மேல் ATM  கார்டு பயன்படுத்தினால் - அபராதம்
- வங்கிகணக்கில் 5000 ரூபாய்க்கு குறைவாக சேமிப்பு இருந்தால் - அபராதம்

எல்லா பிரச்சனைகளுக்கும் இளைஞர்களும் மாணவர்களும் போராட வேணும் என்றால் மக்கள் பிரதிநிதி எவன் இருக்கான் ? ஓட்டுக்கு காசு வாங்கிய மாக்கள் தான் திங்க் பண்ண வேணும் ..!!

ஏதோ குறி வைத்து அடிக்கிறான் என்று மட்டும் தோணுது ..!  :rolleyes:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்

துப்பாக்கிச்சூடு நடத்தவேயில்லை

p22-f448a392e0325636a1406455c91df79d1c4b73c4.jpg

கடற்படை ஆணித்தரம்
 (எம்.எப்.எம்.பஸீர்)

கச்­ச­தீவு கடற்­ப­ரப்பில் வைத்து இந்­தி­யாவின் ராமேஸ்­வர மீன­வர்கள் மீது இலங்கை கடற்­ப­டை­யினர் துப்­பாக்கிச் சூடு நடத்­தி­ய­தாக கூறப்­ப­டு­வதை கடற்­படை முற்­றாக மறுத்­துள்­ளது.

 எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் இலங்­கைக்­க­டற்­ப­டை­யினர் எவர் மீதும் துப்­பாக்கிச் சூடு நடத்­த­வில்லை எனவும் அதற்­கான அனு­மதி கடற்­ப­டை­யி­ன­ருக்கு வழங்­கப்­ப­ட­வில்லை எனவும் கடற்­ப­டையின் ஊடாகப் பேச்­சாளர் லெப்­டினன் கொமாண்டர் சமிந்த வலா­கு­லுகே கேச­ரி­யிடம் தெரி­வித்தார்.

எனினும் இந்­திய மீன­வர்கள் இலங்கை கடற்­ப­டை­யினர் மீது தொடர் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி இருப்­பதன் கார­ண­மாக கடற்­படை மட்­டத்தில் தாம் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இரா­மே­சு­வரம் மீன்­பிடித் துறை­மு­கத்­தி­லி­ருந்து நூற்­றுக்கும் மேற்­பட்ட விசைப்­ப­ட­கு­களில் 500க்கும் மேற்­பட்ட மீன­வர்கள் நேற்று முன் தினம் திங்­கட்­கி­ழமை கட­லுக்குச் சென்­றுள்­ளனர். அன்று இரவு 10 மணி­ய­ளவில் கச்­சத்­தீவு அருகே தங்­கச்­சி­ம­டத்தைச் சார்ந்த தாசன் என்­ப­வ­ருக்குச் சொந்­த­மான விசைப்­ப­டகில் படகில் பிரிட்ஜோ, ஜெரோன், அந்­தோனி, கிளிண்டஸ், சாம் பிரிட்ஜோ, ரிமோட்சன் ஆகிய 6 மீன­வர்கள் மீன்­பி­டித்துக் கொண்­டி­ருந்­துள்­ளனர்.

அப்­போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்­ப­டையின் ரோந்து கப்­ப­லி­லி­ருந்து நான்கு வாட்டர் ஸ்கூட்டர் பைக்­கு­க­ளி­லி­ருந்த கடற்­ப­டை­யினர் வானத்தை நோக்கிச் சுட்­ட­வாறு தாசனின் பட­கினை சுற்றி வளைத்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. பின்னர் படகை நோக்கிச் சுட்­டதில் பட­கி­லி­ருந்த பிரிட்ஜோ (21) என்ற மீன­வரின் கழுத்தில் குண்­ட­டிப்­பட்டு மயங்கி விழுந்­தா­கவும் படகின் செலுத்­துனர் ஜெரோ­னுக்கு தொடையில் காயம் ஏற்­பட்­ட­துடன் படகில் இருந்த மற்ற மீன­வர்கள் கட­லோர காவல்­ப­டை­யி­னரை உத­விக்­காக தொடர்பு கொண்டு தெரி­வித்­துள்­ளனர். . ஆனால் கட­லோர காவல்­ப­டையின் உதவி கிடைக்­கா­ததால் காயத்­துடன் பட­கோட்டி பட­கினை கரையை நோக்கி திருப்­பி­ய­தா­கவும் இந்­திய மீன­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

கரையை அடை­வ­தற்கு முன்­ன­தா­கவே நடு­வ­ழியில் பிரிட்­ஜோவின் உயிர் பிரிந்­த­த­தா­கவும் அவர்கள் தெரி­வித்­தனர். பட­கோட்டி காய­ம­டைந்து சிகிச்சைப் பெறு­வ­தா­கவும் அவர்கள் சுட்­டிக்­காட்­டினர்.

இந் நிலையில் இது குறித்து கடற்­படை ஊடகப் பேச்­சாளர் லெப்­டினன் கொமாண்டர் சமிந்த வலா­கு­லு­கே­யிடம் கேசரி கேள்வி எழுப்­பி­யது. அவர் தெரி­வித்­த­தா­வது,

' நாம் பொது­வா­கவே துப்­பா­ககி வேட்­டுக்­களை தீர்க்க கடற்­ப­டை­யி­ன­ருக்கு எச்­சந்­தர்­பத்­திலும் அனு­மதி வழங்­க­வில்லை. குறிப்­பாக 2009 ஆம் ஆண்டின் பின்னர் நாம் தாக்­குதல் ஒன்­றினை நடத்­தவே இல்லை.

 குறிப்­பாக , இந்­திய மீன­வர்கள் விட­யத்தில் நாம் தெளி­வான கட்­ட­ளை­களை கடற்­ப­டை­யி­ன­ருக்கு வழங்­கி­யுள்ளோம். அவர்கள் எல்லை தாண்டி வந்­தாலும் சட்ட விரோத மீன் பிடியில் ஈடு­பட்­டாலும் கூட துப்­பா­ககிப் பிர­யோகம் நடத்த வேண்டாம் என்ற தெளி­வான உத்­த­ரவு கடற்­ப­டை­யி­ன­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. மாற்­ற­மாக அவர்­களைக் கைது செய்ய மட்­டுமே உத்­த­ர­விட்­டுள்ளோம்.

 இந் நிலையில் எச்­சந்­தர்ப்­பத்­திலும் நாம் துப்­பாக்கிச் சூடொன்­றினை நேற்றோ அல்­லது நேற்று முன் தினமோ எவர் மீதும் நடத்­த­வில்லை. அதற்­கன எந்த உத்­தர்வும் பிறப்­பிக்­கப்­ப­ட­வில்லை. இதனை உறு­தி­யாக கூறு­கிறேன்.

 எனினும் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் மற்­றொ­ருவர் காய­ம­டைந்­துள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது. அது எப்­ப­டி­யென்று எமக்கு தெரி­யாது. எனினும் எமது கடற்­ப­ரப்பில் அப்­படி எதும் நடக்­க­வில்லை. மாற்­ற­மாக இந்­திய கடற்­ப­ரப்­புக்குள் ஏதும் நடந்­ததா என்­பது எமக்கு தெரி­யாது.

 எனினும் அவர்கள் பய­ணித்த அப­ட­கு­களில் கண்­டிப்­பாக ஜீ.பி.எஸ். தொழில் நுட்பம் இருந்­தி­ருக்கும். எனவே அதனை மையப்­ப­டுத்தி விசா­ரித்தால் கூட எந்த இடத்தில் துப்­ப­ககிச் சூடு நடத்­தப்­பட்­டது என்­பதை தெளி­வாக அறி­யலாம்.

 அதே நேரம் இந்­திய கடல் எலையை ஊடு­ருத்து எம்மால் சென்று தாக்­குதல் நடத்த முடி­யாது. ஏனெனில் அங்கும் இந்­திய கடற்­ப­டை­யி­னரும் கட­லோர காவல் துறையும் ரோந்தில் இருப்பர். எனவே அது சாத்­தி­ய­மற்­றது. சில வேளை இந்­திய குற்றக் குழுக்கள் எவை­யி­னதும் உறுப்­பி­னர்கள் பட­கு­களில் பய­ணித்து துப்­பாக்கிச் சூடு நடத்தி இருக்­கலாம். இது ஒரு ஊகம் மட்டுமே. என்றாலும் அது குறித்து எமக்கு எதுவும் சொல்ல முடியாது.

 எவ்வாறாயினும் எமக்கு எதிராக குற்றச்சாட்டு ஒன்று முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் நாம் அது தொடர்பில் விஒசாரணைகளை செய்கிறோம். இந்திய கடற்படை, மத்திய அரசுடன் எமக்கு சிறந்த உறவு உள்ளது. அவர்கள் எதுவும் எம்மிடம் விசாரணை செய்ய உத்தரவிடவில்லை. எனினும் எமது பொறுப்பாக கருதி நாம் எமக்கெதிரான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை செய்கிறோம்.' என தெரிவித்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-08#page-1

கடற்படைக்கு தொடர்பில்லை : வெளிவிவகார அமைச்சு திட்டவட்டம்

mangala-ef297cdcafaaad841a7d532c26df9ad502128f80.jpg

இந்­திய மீன­வர்கள் மீதான துப்­பாக்கிப் பிர­யோகம் தொடர்பில் அர­சாங்கம் கவனம் செலுத்தி­யுள்­ளது. மீன­வர்­களின் பாது­காப்பு முக்­கி­ய­மா­ன­தாக கரு­தப்­பட வேண்டும். இத­ன­டிப்­ப­டை யில் கைதுக்­குள்­ளாகும் அனைத்து 

 சந்­தர்ப்­பங்­க­ளிலும் இந்­திய மீன­வர்­களை மனி­தா­பி­மான முறை­யு­ட­னேயே நடத்­தி­யுள்­ளது என வெளி­வி­வ­கார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இந்த துப்­பாக்கி சூட்­டு­சம்­ப­வத்­துடன் கடற்­படை தொடர்­புப்­பட வில்லை. சம்­பவம் தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் ஜிபிஸ் தொழில்­நுட்­பத்தின் ஊடான விசா­ர­ணை­களில் உண்மை தெரிய வரும் ஆகவே இந்­திய அதி­கா­ரி­களும் விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என வெளி­வி­வ­கார அமைச்சின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

நேற்­றைய தினம் இரவு இந்த துப்­பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-08#page-1

தீவிர விசாரணை நடத்தப்படும்

Mahinda-Amaraweera-3704fc5df6e84ca7e42bf28e7ac8178508ca076a.jpg

இந்தியாவுக்கு உறுதி வழங்கியது மீன்பிடி அமைச்சு
(லியோ நிரோஷ தர்ஷன்)

இந்­திய மீன­வர்கள் மீது முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் துப்­பாக்கிச் சூட்டு சம்­பவம் தொடர்பில் பாது­காப்பு அமைச்சு முழு­மை­யான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து உண்­மை­களை கண்­ட­ றியும் என இந்­திய மத்­திய அர­சிற்கு அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­துள்­ளது.  

நேற்று முன் தினம் திங்­கட்­கி­ழமை இரவு இலங்கை கடற்­ப­ரப்பில் வைத்து இந்­திய மீன­வர்கள் மீது சிலர் துப்­பாக்கி பிர­யோகம் மேற்­கொண்­டுள்­ளனர். இதில் மீனவர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் மேலும் இரண்டு மீன­வர்கள் காய­ம­டைந்­துள்­ளனர். இந்த துப்­பாக்கி சூட்டு சம்­ப­வத்தை இலங்கை கடற்­ப­டை­யி­னரே மேற்­கொண்­ட­தாக இந்­திய மீன­வர்கள் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.

இது குறித்து கடற்­றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அம­ர­வீர வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது ,

இலங்கை கடற்­ப­ரப்பில் இந்­திய மீன­வர்கள் மீது துப்­பாக்கி பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக எழுந்­துள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் விரி­வான விசா­ர­ணைக்கு அர­சாங்கம் உத்­தர விட்­டுள்­ளது.

இந்த சம்­பவம் தொடர்பில் விரி­வான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறு கடற்­றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அம­ர­வீர பாது­காப்பு செய­லா­ள­ருக்கு கடிதம் அனுப்பி வைத்­துள்ளார்.

தமி­ழ­கத்தின் இரா­மேஸ்­வரம் தங்­கச்­சி­மடம் பகு­தி­யி­லி­ருந்து கச்­சத்­தீவு அருகே வந்து மீன்­பி­டியில் ஈடுப்­பட்ட பிரிட்கோ எனப்­படும் மீன­வரே துப்­பாக்கி சூட்டில் உயி­ரி­ழந்­துள்ளார். இத­னை­ய­டுத்து தமி­ழக மீனவர் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ள­துடன் இலங்கை கடற்­ப­டை­யி­ன­ருக்கு எதி­ராக குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.

இந்­திய மீன­வர்­களின் குற்­றச்­சாட்­டினை கடற்­ப­டை­யினர் நிரா­க­ரித்­துள்­ளனர். எவ்­வா­றா­யினும் சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்க வேண்டும். உண்­மை­களை கண்­ட­றி­வது மிகவும் முக்­கி­ய­மாகும். மேலும் இலங்­கைக்­கான இந்­திய உயர்ஸ்­தா­னிகர் தரன்ஜித் சிங் சந்­து­விடம் தொலைப்­பே­சியில் தொடர்புக் கொண்டு இவ்வாறான சம்பவங்கள் இரு நாட்டு ஆழமான உறவுகளை பாதித்து விடாது என கூறியுள்ளேன்.

மேலும் இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து உண்மைகளை கண்டறியும் . 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-08#page-1

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

அதெப்படி, மலையாளி மீனவரை சுட்டு ஓடின இத்தாலிக்காரனை திரத்திப் பிடித்தார்களே. அதுக்கு மட்டும் எப்படி.

ஒரே காரணம் இது தமிழன்.

மலையாளி இந்தியாவோடு இணைந்தவன். இணைவதற்குத் தமிழன் இன்றும் முரண்டுபிடிக்கிறான் அதுதான் காரணம். மற்றும்படி இந்­தி­யாவின் மீன­வர்களை இலங்கை கடற்­ப­டை­யினர் துப்­பாக்கிச் சூடு நடத்­தி­ய­தாக கூறப்­ப­டு­வதை கடற்­படை முற்­றாக மறுத்­துள்­ளதில் உண்மையுள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களைச் சுட்டுக்கொன்றதாகத் தெரிவித்திருந்தால் மறுப்பின்றி ஏற்றுக்கொண்டிருப்பார்கள். :shocked:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இது நடந்திருந்தால் இலகுவாக புலிகளின் தலையில் பழியை போட்டுவிட்டு சோலியை முடித்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, இசைக்கலைஞன் said:

ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இது நடந்திருந்தால் இலகுவாக புலிகளின் தலையில் பழியை போட்டுவிட்டு சோலியை முடித்திருப்பார்கள்.

இப்போதும் முடியும் ஐயா, வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் 14,000 முன்னாள் போராளிகள் இருக்கின்றார்கள் என்பதை கருணா அம்மான் கன கட்சிதமாகக் கண்டுபிடித்துள்ளாரே....:cool:  

மீனவர்கள் தங்களை தாங்களே சுட்டு செத்ததாகவும் சொறிலங்கா நேவி கூறினாலும் கூறும். அதை ஆமா போடவும் இந்திய அரசியில் ஒரு கூட்டம் இருக்குது.

இது தொடர்பாக என் முகநூலில் நான் எழுதிய பதிவை இங்கு மீள் பதிகின்றேன்

------------

தமிழக மீனவர்கள் தமிழக கடற்கரைகளில் எந்த சர்வதேச சட்டங்களையும் மதிக்காது தடை செய்யப்பட் ட மீன்பிடி வலைகள், படகுகள் மற்றும் உபகரணங்கள் கொண்டு எவ்வாறு மீன் வளத்தினை நாசமாக்கின்றார்கள் என்பது தொடர்பாக இந்து தமிழ் நாளிதழில் சமஸ் என்பவர் தொடர் ஒன்றை சில வருடங்களுக்கு முன்பாக எழுதி இருந்தார். அதில் இதற்கு பின்னால் இருக்கும் மிக மோசமான சர்வதேச வர்த்தகத்தினையும் அதை நடத்துவதில் இந்திய மத்திய அமைச்சர்களுக்கும் (உதாரணம்: தி.மு.க முன்னாள் அமைசர் டி. ஆர்.பாலு - இவர் கப்பல் துறை அமைசராக இருந்தவர்), ஆளும் எதிர் கடசிகளை சார்ந்த வியாபாரிகளுக்கும் இருக்கும் பங்கினையும் விபரித்து இருந்தார்.தமிழக மீனவர்களின் அநேகமான பெரிய படகுகளுக்கும் தடை செய்யப்படட வலை மற்றும் உபகாரங்களுக்கும் உரிமையாளர்களாக இவர்களே இருப்பதையும் அவர்களது பேராசை தான் தமிழக மீன் வளத்தினை இல்லாது செய்தது என்பதையும் தெளிவாக காட்டியிருந்தார்.

இவ்வாறு தமிழக கடற்கரைகளில் இருந்த மீன் வளத்தினை அழித்து விட்டு தான் இப்ப இலங்கையின் வடக்கு கடற்கரைகளில் கொள்ளை அடிக்க இவர்கள் வருகின்றனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மிக மோசமான விளிம்பில் தவித்துக் கொண்டு இருக்கும் எம் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை நாசமாக்க வருகின்றனர். தன் வீட்டில் இல்லை என்றவுடன் பக்கத்து வீட்டில் திருடிப் பிழைக்க வருகின்றனர். இங்கு இவர்கள் என்பது மீனவர்கள் மட்டும் அல்ல. அவர்களுக்கு பின்னால் இருக்கும் பெரும் வியாபாரிகள் மற்றும் மத்திய அரசை சார்ந்த வியாபாரக் கூட்டமும் ஆகும். இதை / இக் கொள்ளையை எதிர்த்து இந்திய ஊடகங்களோ அல்லது சீ(ய்)மான்/ திருமா/ வைகோ/ நெடுமாறன் போன்ற இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்யும் தமிழக அரசியல் வியாதிகளோ வாய் திறப்பதும் இல்லை

இவர்களுக்கு எதிரான காத்திரமான சட்ட நடவடிக்கைகளாக எடுக்க கூடிய விடயங்கள் படகுகளையம் மீன் பிடி வலைகள் மற்றும் உபகரணங்களையும் பறிமுதல் செய்து எக்காலத்திலும் திருப்பி கொடுக்காமல் கையகப்படுத்துவது தான். அத்துடன் இதில் ஈடுபடும் மீனவர்களை ஆக குறைந்தது 3 இல் இருந்து 5 வருடங்களாவது இலங்கை சிறையில் தள்ள வேண்டும். ஆனால் இவற்றுக்கு பதிலாக மீனவர்களை சுட்டுக் கொல்வது அல்ல. திருட்டுக்கு கொலை ஒரு காலத்திலும் தண்டனையாக அமையாது. இதற்காக தமிழக மீனவர்களை கொல்லப்படுவதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அம்புகளை கொல்வதால் வில்லுகள் ஓயப் போவதும் இல்லை.

நேற்று முன்தினம் இலங்கை கடற்படையால் 21 வயது இளம் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட செயலை ஆதரித்து எம்மில் சிலர் எழுதி வருவதை கவலையுடன் அவதானிக்க கூடியதாக உள்ளது. இவர்கள் இலங்கை அரசின் கொலை இயந்திரமான இலங்கை கடற்படை தமிழ் மக்களின் மேல் உள்ள ஆதரவினால் தான் / வடக்கின் வளம் கொள்ளை போகின்றது எனும் உண்மையான அக்கறையினால் தான் தமிழக மீனவரை சுட்டுக் கொன்றது என நம்புகின்றார்களா?
இதே கடற்படை தினமும் கேரளா கடல் வழி நடக்கும் கஞ்சா கடத்தலை பார்த்தும் பார்க்காமல் இருக்கும் காரணத்தை சொல்வார்களா?
முல்லைத்தீவு / கொக்கிளாய் / சுண்டிக்குளம் போன்ற பகுதிகளில் வாழ்ந்து வந்த தமிழ் மீனவர்களை விரட்டி அடித்து விட்டு (நல்லிணக்க அரசின் காலத்தில்) அத்து மீறி குடியேறியுள்ள சிங்கள மீனவர்களுக்கு இலங்கை கடற்படை பாதுகாப்பு கொடுப்பதும் தமிழ் மக்கள் மீதான அக்கறையினால் என நினைக்கின்றார்களா ?

------------

  • கருத்துக்கள உறவுகள்
தமிழக மீனவர்கள் மீது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிடும் இலங்கை மீது போர்த்தொடுக்க வேண்டும்! - சீமான் சீற்றம்!

தமிழக மீனவர்கள் மீது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிடும் இலங்கை மீது போர்த்தொடுக்க வேண்டும்! – சீமான் சீற்றம்!

தமிழக மீனவர்கள் மீது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிடும் இலங்கை மீது போர்த்தொடுக்க வேண்டும்! – சீமான் சீற்றம்!

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று 07-03-2017 வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட ஆதம்பாலம் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிங்கள இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ பெர்னாண்டஸ் என்ற 21 வயதே நிரம்பிய மீனவ இளைஞர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி தமிழர் இதயங்களை இடிப்போலத் தாக்கி இருக்கிறது.

ஏற்கனவே, தமிழக மீனவர்கள் மீது சிங்கள இராணுவம் நடத்தி வரும் தொடர் வன்முறைத்தாக்குதல்களும், தமிழர் படகுகளைப் பறித்து அரசுடைமையாக்கிக் கொள்ளும் அராஜகமும், வலையறுப்பு நிகழ்வுகளும், துப்பாக்கிச்சூடுகளும் தொடர்கதையாகி வருகின்ற இச்சூழலில் இந்தப் படுகொலை நிகழ்ந்திருக்கிறது. மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை நடுக்கடலிலே வைத்து அடிப்பது, உதைப்பது, நிர்வாணப்படுத்துவது, கடலுக்குள் தள்ளி விடுவது, ஆயுதத்தைக் கொண்டு துன்புறுத்துவது, அவர்களது உடைமைகளைப் பறித்துக்கொள்வது, மீன்களைக் கடலிலே வீசியெறிவது, வலைகளை அறுத்தெறிவது, படகுகளைச் சேதப்படுத்துவது,சிறைப்பிடிப்பது எனச் சிங்கள இராணுவம் அரங்கேற்றிவரும் கொடுமைகள் சொல்லி மாளக்கூடியதல்ல. அன்றாட நிகழ்வுகளாகிப் போன இத்துயரத் துன்பங்களிலிருந்து பாதுகாக்க வேண்டிய இந்தியக் கடற்படையோ சிங்கள இராணுவத்தின் வன்முறை வெறியாட்டங்களைக் கைகட்டி வேடிக்கைப் பார்த்து, இந்தியப் பெருநாட்டில் வரி செலுத்தி,வாக்கு செலுத்தி வாழ்கிற 8 கோடித் தமிழர்களின் உணர்வுகளையும் அவமதித்து வருகிறது.

இந்நாட்டின் குடிமக்களாகிய தமிழர்களை இன்னொரு நாட்டைச் சேர்ந்த இராணுவம் சுட்டுக்கொலை செய்கிறபோதும் இந்தியாவின் கூட்டு மனசாட்சியும், இந்திய இறையாண்மையும் அமைதி காக்கிறதென்றால் தமிழர்கள் இந்திய நாட்டின் ஓர் அங்கத்தினர்தானா என்ற ஐயம் இயல்பாய் நமக்குள் தொற்றிக்கொள்கிறது. சீனாவும், பாகிஸ்தானும் எல்லைத்தாண்டி அத்துமீறும்போதெல்லாம் அதனை எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் எனக் கண்டிக்கிற பாரதப்பிரதமர் மோடியும், இந்தியப் பெருந்தேசத்தின் தலைவர்களும் இன்றைக்கு இந்திய எல்லைக்குள் தமிழர்கள் தாக்கப்பட்ட இந்நிகழ்வினை எப்படிப் பார்க்கிறார்கள்? எல்லைத் தாண்டியதால்தான் தாக்கப்பட்டார்கள் எனும் பழைய பல்லவியைப் பாடியே காலங்கடத்திய இவர்கள் இந்நிகழ்விற்கு எத்தகைய எதிர்வினையாற்றக் காத்திருக்கிறார்கள்? அண்டை நாடான பாகிஸ்தானுடனான விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி தோற்றாலே அதனைத் தேசிய அவமானம் எனக் கருதி வெட்கித் தலைகுனிகிற தேசப்பற்றாளர்கள், இத்தேசத்தின் குடிமகன் அந்நிய நாட்டின் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதற்கு எவ்வித நடவடிக்கை கோரப்போகிறார்கள்? இந்திய இராணுவத்தின் தலையைக் கொய்த பாகிஸ்தான் இராணுவத்தினரின் தலையை வெட்டியெடுக்க வேண்டும் என்ற அம்மையார் சுஷ்மா சிவராஜ் போன்றவர்கள் இப்போது யாருடைய தலையைப் பலியாகக் கேட்கப் போகிறார்கள் என்கிற கேள்விகளுக்கான பதில்கள் இவர்களிடம் இருக்கிறதா?

தற்போது மத்தியில் ஆளுகின்ற பாஜகவும், ஏற்கனவே ஆண்டுத் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரசும் தமிழர்களுக்கு எதிராக ஒரே வகையான சிங்கள ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து, 850 க்கும் மேலான தமிழ் மீனவர்களைக் கொன்றுகுவித்த சிங்கள இராணுவத்திற்குப் பயிற்சியளித்து, அவர்களுக்குப் போர்க்கப்பலைப் பரிசளித்து, நாம் செலுத்துகிற வரிப்பணத்தை வாரி வழங்கித் தமிழர்களின் உணர்வுகளைக் கிள்ளுக்கீரையாக நினைத்து சீண்டிப்பார்த்து வந்தன. தமிழர்களைத் துன்புறுத்தும் இலங்கை என்ற ஒரு சின்னஞ்சிறிய நாட்டின் அத்துமீறலை தட்டிக்கேட்காமல், இலங்கையினை நட்பு நாடு எனக் கட்டிக்காக்கத் துடித்தன.

அதுபோல, தற்போதும் தமிழர்களின் தேசிய நோயான மறதி எனும் பெருங்குணத்தைக் கொண்டு இக்கொடிய சம்பவத்தைக் கடத்தி விடலாம் என்று இந்திய வல்லாதிக்கமும், அதன் தலைவர்களும் நினைப்பார்களென்றால் அது அவர்களுக்கு ஏமாற்றமாய் முடியும் என்பதைப் புரியவைக்காமல் நாங்கள் ஓயப்போவதில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ‘கடல் தாமரை’ மாநாடு போட்டு மீனவர்களுக்கெனத் தனி அமைச்சகம் அமைப்போம் என்ற பாஜகவின் போலி வாக்குறுதி போல இப்போதும் வெற்று வாக்குறுதிகளாலும், பசப்பு வார்த்தைகளாலும் தமிழர்களின் சிந்தையை மழுங்கடிக்கலாம் என்று எண்ணினால் அது அவர்களுக்கே விபரீதமாய்ப் போகும் எனக் கடுமையாய் எச்சரிக்கிறேன்.

தொடர்ச்சியாகத் தமிழக மீனவர்களைக் கொன்று குவித்து வரும் சிங்கள கடற்படையைத் தடுக்க வக்கற்றுப் போனத் இந்தியக் கடற்படையை நம்பி நமது மீனவர்களை இனி கடலுக்கு அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது.

எனவே, தமிழக அரசும் இந்தப் படுகொலை விவகாரத்தில் சமரசம் கொள்ளாமல் தமிழ்நாடு ஊர்க்காவல் படை போலச் சிறப்பு மாநிலச் சட்டத்தின் வாயிலாகத் தமிழ்நாடு கடலோரக் காவல் படை ஒன்றினை ஏற்படுத்தி ஒரு சீருடை அணிந்த அரசு பாதுகாப்புப்படையை ஏற்படுத்தி, அப்படைக்கு நவீன ஆயுதங்களை வழங்கி நமது மீனவர்களை நாமே காத்திட உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். இந்திய கடற்படையின் சர்வதேச எல்லைப் பாதுகாப்புப் பணிகளுக்கு எந்த இடையூறும் இல்லாத வகையிலும், மீனவர்கள் மற்றும் படகுச் சுற்றுலாவிற்குச் செல்பவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும் தமிழகக் கடற்பகுதிகளில் இருந்து கடலினுள் செல்லும் அனைத்துப் படகுகளையும் இந்தப் பாதுகாப்புப் படை கண்காணிக்கும். அவர்களின் பாதுகாப்பிற்குத் துணை புரியும். ஒரு மாநில அரசாக இதுபோன்றே சட்டரீதியாகக் கடலுக்குச் செல்லும் தமிழ் மீனவர்களின் உயிருக்குப் பாதுகாப்பைத் தரமுடியும்.

மேலும் கடந்த 2013 ஆம் வருடத்தில் பிலிப்பைன்ஸ் கடற்படை, தைவான் நாட்டின் 60 வயது மதிக்கதக்க மீனவரை எல்லைத்தாண்டினார் என்ற காரணத்திற்கான அந்த மீனவரை சுட்டுக்கொன்றது. இந்தச் செய்தியைக் கேட்டதும்,
தனது கடல் எல்லையில் தைவான் இராணுவம் 10 நாட்கள் போர்க்காலப் பயிற்சியை மேற்கொண்டதும், தைவான் அரசு பிலிப்பைன்ஸ்க்கு கடவுச்சீட்டு வழங்கத் தடை விதித்ததும், பிலிப்பைன்ஸ் மீது 9 விதமான பொருளாதாரத் தடைகளை விதித்ததும் ,இது எல்லாவற்றுக்கும் மேலாகத் தைவானில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரக அதிகாரிகளை உடனடியாக வெளியேற்றி, பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தைவான் தூதரகத்தைத் திரும்ப்பெற்றதும் செய்திகளாக வந்தன.
அதிர்ந்துபோன பிலிப்பைன்ஸ் அரசு, அந்நாட்டின் தூதரின் மூலம் , படுகொலை செய்யப்பட்ட மீனவரின் வீட்டிற்குச் சென்று அவரின் மனைவியிடம் மன்னிப்புக் கோரியது. பின்னர்ப் பிலிப்பைன்ஸ் தாமாக முன்வந்து சில முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தைவான் அரசுடன் கையெழுத்துப் போட்டுக்கொண்டது. அதுபோல, இந்திய அரசும் தமிழக மீனவரைப் படுகொலை செய்த சிங்களப் பேரினவாத அரசைக் கடுமையாகக் கண்டித்து, சிங்கள அரசின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தும். சிங்கள அரசுக்கு இராணுவ ரீதியிலான கடும் நெருக்கடிக்களைக் கொடுத்தும் , பன்னாட்டு நீதிமன்றத்தில் இதுபோன்ற கொலைகளுக்காகச் சிங்களப் பேரினவாத அரசை நிறுத்தியும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும், கேரளாவைச் சேர்ந்த மலையாளி மீனவர்கள் இருவரை இத்தாலிக் கடற்படை சுட்டு வீழ்த்தியதற்குப் போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுத்தது போல, தமிழ் மீனவரைச் சுட்டுக்கொலை செய்த சிங்கள இராணுவத்தினரையும் உடனடியாகக் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க மத்திய அரசு சிங்கள அரசை வலியுறுத்த வேண்டும் எனவும், அத்துமீறி தமிழ் மீனவர்களைத் தாக்கி வரும் இலங்கையுடான அத்தனை உறவுகளையும் துண்டித்து, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகோர வேண்டும். இத்தோடு தமிழ் மீனவர்கள் மீது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டு வரும் இலங்கை மீது போர்தொடுத்துக் கச்சத்தீவினை மீட்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

சிங்களக் கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ள இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதோடு தமிழகக் மீனவர் பிரிட்சோவை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தினரின் துயரில் நாம் தமிழர் கட்சி முழுமையாகப் பங்கேற்கிறது. சிங்களரின் தொடர்ச்சியான வன்முறை வெறியாட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் முறையாகக் கண்டறியப்பட்டு, சேதாரங்கள், இழப்புகள் ஆகியவை கணக்கெடுக்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் உரிய இழப்பீடு வழங்கவும் மத்திய அரசை நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

– இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

http://www.naamtamilar.org/தமிழக-மீனவர்கள்-மீது-வன்/

  • தொடங்கியவர்

குண்டு பாய்ந்த நிலையில் ஒரு மணிநேரம் போராடிய மீனவர்! நடுக்கடலில் என்ன நடந்தது?

ராமேஸ்வரம் மீனவர்

ழக்கம்போல் மீன் பிடிக்கக் கிளம்புவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிய மீனவர் பிரிட்ஜோ, மறுநாள் சடலமாகத்தான் ராமேஸ்வரத்தில் உள்ள தங்கச்சிமடத்துக்கு வந்தார். பிரிட்ஜோவுக்கு வயது 22. இன்னும் திருமணம் ஆகவில்லை. ஒவ்வொரு நாளும், ‘பார்த்துப் போயிட்டு வாப்பா’ என்று அறிவுரை சொல்லி வழியனுப்பும் பெற்றோரிடம், ‘‘இப்போலாம் அந்தப் பிரச்னை கிடையாதும்மா... பயப்படாதீங்க’’ என்று சொல்லிவிட்டுத்தான் கிளம்புவாராம் பிட்ஸோ. 

பிரிட்ஸோ

கடைசியாக, 2011-ல்தான் நாகப்பட்டினம் வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர், இதேபோல் இலங்கைக் கடற்படையினரால் சுடப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு உயிர்ப் பலி இல்லையென்றாலும்... காயத்தோடும், படகுகள் பறிக்கப்பட்டு வெறுங்கையுடனும் மீனவர்கள் திரும்பும் சம்பவங்கள் அடிக்கடி நடந்துகொண்டுதான் இருந்தன. இப்போது பிரிட்ஜோவின் கொலை, தமிழக மீனவர்கள் மத்தியில் பேரலையை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், தங்களுடன் வந்து தீவைச் சுற்றிப்பார்த்துவிட்டு, இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் உறுதியளித்த பிறகுதான் பிரிட்ஜோவின் சடலத்தை வாங்குவோம்’ என்று போராட்டத்தில் குதித்துவிட்டனர். அதேபோல், இதற்குக் காரணமான ஸ்ரீலங்காவின் கடற்படையைச் சேர்ந்தவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் போராடுகின்றனர் மீனவர்கள்.

விஷயம் இப்படிப் போய்க்கொண்டிருக்க, ஸ்ரீலங்கா கடற்படையின் அதிகாரி கமாண்டர் சமிந்தா வாலகுளுகே, ‘‘இந்தக் கொலைக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.’’ என்று பல்டி அடித்து பேட்டி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

இன்று காலை தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘இறந்ததாகச் சொல்லப்படும் நபருக்கு புல்லட் காயம் எப்படி வந்தது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், நாங்கள் இந்திய அதிகாரிகளிடம் தொடர்பில்தான் இருக்கிறோம். இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் எங்களையே குற்றம் சாட்டுவது வாடிக்கையாகி விட்டது. எங்கள் படகிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தவோ, வேறு விஷயங்களுக்கோ எங்களுக்கு அரசு அனுமதி இல்லை. சொல்லப் போனால், எங்கள் படகில் துப்பாக்கிகளே கிடையாது. இந்திய மீடியாக்களில்தான் இதுபோன்ற தவறான செய்திகள் வருகின்றன. எங்களைப் பொறுத்தவரை, சுடுவதற்கு அதிகாரம் இல்லை. அவர்களைக் கைது செய்து, படகுகளை சீஸ் பண்ணுவது மட்டும்தான் எங்கள் வேலை. அதுவும் பார்டரை க்ராஸ் செய்தால் மட்டும்தான்!" என்று சொல்லியிருக்கிறார் வாலகுளுகே.

பிரிட்ஸோ

இதைக் கேள்விப்பட்டதும் கொதித்தெழுந்து விட்டார்கள் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள். ‘‘அவங்க பொய் சொல்றாங்க; நடந்தது என்னனு நான் சொல்றேன்!’’ என்றார், இறந்துபோன பிரிட்ஜோவின் சித்தப்பா ஜஸ்டின். 

‘‘மார்ச் 6-ம் தேதி 5.55-க்குத்தான் போட் கிளம்பினது. மொத்தம் 6 பேர் கிளம்பினாங்க. ரெண்டு படகு. அதுல ஒண்ணுலதான் பிரிட்ஜோ இருந்தான். நைட் கடல்ல ரொம்ப இருட்டா இருக்கும். எப்பவுமே நாங்க நைட் படகுல போகும்போது, விளக்கு போட்டுக்கிட்டுத்தான் போவோம். அப்போதான் ஸ்ரீலங்கா காரங்களுக்கு நாங்க என்ன பண்றோம்னு தெரியும். லைட் போடாமப் போனவங்களைக் கண்மூடித்தனமா சுட்ட சம்பவம்லாம் இருக்கு. 9 மணி இருக்கும். அப்போ திடீர்னு 10 பைக்ல நேவி ஆஃபீஸர்ஸ் வந்து எங்க படகைத் துரத்த ஆரம்பிச்சாங்க. நாங்களும் பதற்றத்துல வலையை அறுத்துட்டு படகை ஓட்டினோம். இத்தனைக்கும் நாங்க நம்ம நாட்டு எல்லைக்குள்ளேயேதான் படகை விரட்டினோம். திடீர்னு அவங்க எங்களைச் சுத்தி வளைச்சு துப்பாக்கி எடுத்துச் சுட ஆரம்பிச்சுட்டாங்க. பயந்து போன எல்லாரும் உள்ள ஒளிஞ்சுக்கிட்டாங்க. கொஞ்ச நேரம் துப்பாக்கிச் சத்தம் கேட்கலைன்னதும், அவங்க போயிட்டாங்களான்னு பார்க்க பிரிட்ஸோ எந்திரிச்சான். அந்த நேரம் பார்த்து குறி வெச்சு அவனோட கழுத்துல சுட்டாங்க நேவிகாரங்க! அப்போ டிரைவர் ஜரோன், பதற்றமா எங்க மீனவர் சங்கத் தலைவருக்கு போன் பண்ணிச் சொன்னார். படகு ஓடிக்கிட்டேதான் இருக்கு. தப்பிக்கவே முடியலை. கோஸ்ட் கார்டு வந்தா மட்டும்தான் காப்பாத்த முடியும். உடனே கோஸ்ட்கார்டுக்குத் தகவல் சொன்னார் தலைவர். அவங்க எடுக்கவே இல்லை. அப்புறம் ஒருவழியா அவங்களே போன் பண்ணிக் கேட்டு, அவங்க வர்றதுக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு! 55 நிமிஷம் உயிரோட இருந்துருக்கான் பிரிட்ஸோ. கோஸ்ட்கார்டு கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தாகூட காப்பாத்தி இருக்கலாம்!’’ என்று ஸ்பாட் ரிப்போர்ட் கொடுத்தார்.

நம் ஊரில் மட்டும்தான் மீன் பிடிக்கச் சென்றால், மீன்களுக்குப் பதில் மீனவர்கள் குறையும் சம்பவம் நடக்கிறது. 5 லட்சம் உதவித்தொகை கொடுப்பதோடு நின்றுவிடாமல், மீனவர்கள் பிரச்னையில் அரசு தலையிட்டால் நல்லது!

http://www.vikatan.com/news/miscellaneous/82980-indian-fisherman-shot-dead-by-sri-lankan-navy--happenings-at-the-mid-of-the-sea.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Paanch said:

இப்போதும் முடியும் ஐயா, வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் 14,000 முன்னாள் போராளிகள் இருக்கின்றார்கள் என்பதை கருணா அம்மான் கன கட்சிதமாகக் கண்டுபிடித்துள்ளாரே....:cool:  

சிங்களவன் புலிகளை சாட்டி இன்னும் சாதிக்க அந்த ஒரு வசனமே போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது மோடி செய்த தில்லாலங்கடி வேலையாகத்தான் இருக்கமுடியும் ..! அவுரு பீர்பால் தத்துவத்தின் படி செய்யுறாராம் ... மீத்தேன் எடுக்க நெடுவாசலை விட்டு இளைஞ்சர்களை கிளப்பவேணும்..!

தாமிரபரணி நீர் சிக்கல் :

அரிச்சந்திரனின் எதிர் வீட்டில் குடியிருக்கும்  மாண்புமிகு நீ(நி)தி அரசர்கள் வழங்கிய தீர்ப்பின் படி ஆற்றில் கிடைக்கும் உபரிநீரை எடுத்து பயன்படுத்த தீர்ப்பு வழங்கி போட்டார்கள் . அவுங்க மினரல் வாட்டர் பேமிலி ..! விளைவு என்ன ?அங்க உள்ளவர்கள் போராட அழைக்கிறார்கள் .. ஆனால் ஒவ்வொரு சிக்கலுக்கும் வருகிறோம்.. முதலில் இது தீரட்டும் என்கிறார்கள்

ராமேஸ்வரம் :

இங்கும் அழைக்கிறார்கள்!!
எதை பற்றவைத்தால் உடனே எரியும் என்று மோடிக்கு தெரியாதா ..? ஏற்கனவே குஜராத்தில் எரியவிட்டவர் தானே ..? அறிக்கைவிட்டு .. சமாளிக்கும் திறம் உள்ள ஆளுமைகள் இங்கு தற்போது இல்லை அது மோடிக்கு நன்றாகவே தெரியும்.

டிஸ்கி :
அண்ணன் சொல்லாமல் தம்பி சுட்டு இருப்பான் என்று நம்பினால் நாமதான் பேக்கு .. லூசு..! இன்னும் ஒவ்வொன்றாக வரிசைகட்டி வர இருக்கு..!!ஏதோ மாநிலத்தின் பெயரில் அண்ணாவின் கையலாகததனத்தின் வெளிபாடாக இரண்டு எழுத்து ஒட்டி கொண்டு இருக்கு ..! காலம் விரைவில் தீர்ப்பு எழுதும்..!  :cool:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
On ‎07‎/‎03‎/‎2017 at 5:39 PM, நிழலி said:

உலகில் கடல் எல்லை தாண்டி வரும் அயல் நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லும் ஒரே நாடு: இலங்கை

தன் நாட்டு மீனவரை சுட்டுக் கொன்றதுக்கு எந்த எதிர்ப்பும் காட்ட வக்கில்லாத உலகில் உள்ள ஒரே ஒரு கையாளாகாத நாடு: இந்தியா

உது எல்லாம் ஒரு வகை அரசியல்.பாவம் அந்த அரசியலில் பலியானது அப்பாவி மீனவன்...கடல் தாண்டிப் போனால் சுடுவார்கள் எனத் தெரிந்தும் ஏன் கடல் தாண்டுகிறார்கள்?...கேணையர்கள் என்ன செய்யப் போகிறார்கள் ஒன்டு வானத்தை பார்த்து சுடுவார்கள் அல்லது பிடிச்சு வைச்சிட்டு விட்டு விடுவார்கள் என்ட எண்ணம் தானே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.