Jump to content

உப்புக்கஞ்சி.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யாருக்காவது உப்புக்கஞ்சி செய்முறை தெரிந்தால் சொல்லுங்கள். அவசரம் தேவை :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, குமாரசாமி said:

யாருக்காவது உப்புக்கஞ்சி செய்முறை தெரிந்தால் சொல்லுங்கள். அவசரம் தேவை :cool:

சோற்றுக் கஞ்சியில் சிறிது உப்பு சேர்த்துவிட்டால் உப்புக்கஞ்சி தயார்.  mange7.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பச்சரிசியை தண்ணீர் விட்டு அவிய விட்டு அவிந்தவுடன் தேங்காய்பாலும் உப்பு போட்டுக் குடிக்கிறது...அடிக்க வாறேல்ல சொல்லிப்போட்டன்

சில பேர் றால்,முருங்கையிலை எல்லாம் போட்டுக் காச்சுவினம்...அதையா அண்ணா கேட்கிறீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கும் இது சரியாய் தெரியவில்லை ஆனால் ஊரில காடாத்து செய்து போட்டு வந்ததும் உப்புக் கஞ்சி என்று சகோதரி ரதி சொன்னதுபோல் முருங்கை இலை போட்டுக் காச்சுவார்கள். அதை வருபவர்களுக்கு கொடுப்பார்கள்....!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எமது வீட்டில் குத்தரிசியில் தான் கஞ்சி.வழமையாக சோறு ஆக்குவது போல் கொஞ்சம் கூடுதாக தண்ணீர் விட்டு உப்பு கொஞ்சம் சுண்ட போட்டால் சரி.

இதற்குள் தேங்காய் பால் விடலாம்.வெங்காயம் பச்சை மிளகாய் சிறிது தூளாக வெட்டிப் போடலாம்.

இதுவே நல்ல தடிமன் மூக்கடைப்பு என்றால் கொஞ்ச றால் முருங்கை இலையும் போட்டு நிறைய தேசிக்காயும் விடலாம்.

சுவை இருப்பின் நண்பர்களிடம் கூறுக

குறை இருப்பின் என்னிடம் கூறுக.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காச்கல் தடிமன் வந்தால் மேலே ஈழப்பிரியன்சொன்னதுபோல் செய்வது புளிக்கஞ்சி. தனிய குத்தரிசியை நல்லா அவியவிட்டு உப்பு மட்டும்போட்டு மசித்து குடிப்பது உப்புக்கஞ்சி. இதற்கு வேறுஎதுவும் சேர்ப்பதில்லை. வயிற்றைப் பிரட்டினால் இது நல்லது என்று சொல்வார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, குமாரசாமி said:

யாருக்காவது உப்புக்கஞ்சி செய்முறை தெரிந்தால் சொல்லுங்கள். அவசரம் தேவை :cool:

ஏன் தாத்தா ப்ளு வந்திச்சா...?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, யாயினி said:

ஏன் தாத்தா ப்ளு வந்திச்சா...?

இங்கு பரவலாக... ஒரு வைரஸ் காய்ச்சல்  பரவுகின்றது யாயினி.
தாத்தாவுக்கும் வந்திட்டுது போலை கிடக்கு... 
காய்ச்சலுக்கு, உப்புக்  கஞ்சி குடிக்க... அந்தமாதிரி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, தமிழ் சிறி said:

இங்கு பரவலாக... ஒரு வைரஸ் காய்ச்சல்  பரவுகின்றது யாயினி.
தாத்தாவுக்கும் வந்திட்டுது போலை கிடக்கு... 
காய்ச்சலுக்கு, உப்புக்  கஞ்சி குடிக்க... அந்தமாதிரி இருக்கும்.

ஒரு எட்டு பார்த்திட்டு வராமல் என்ன குசும்பு வேண்டி கிடக்குtw_blush: 

அப்படி என்ன அவசரமா இருக்கும்  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பச்சரிசியை தண்ணீர் விட்டு அவிய விட்டு அதனுடன் கொஞ்ச வெந்தயமும் போட்டு நன்கு அவிந்ததும் தேவையான உப்பு சேர்த்து தேவை என்றால் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி கொதித்ததும் இறக்கி பரிமாறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, முனிவர் ஜீ said:

ஒரு எட்டு பார்த்திட்டு வராமல் என்ன குசும்பு வேண்டி கிடக்குtw_blush: 

அப்படி என்ன அவசரமா இருக்கும்  :rolleyes:

போய்  பார்க்கலாம் தான்.... 
ஆனா.... எனக்கு... அவரின், வைரஸ் காய்ச்சல்  தொத்தீடும்  என்று பயமாக இருக்கிறது. :grin:

குமாரசாமி அண்ணை...  விரைவில் நலம் பெற்று, 
யாழ்களத்துக்கும், முகநூலுக்கும்  வர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, தமிழ் சிறி said:

போய்  பார்க்கலாம் தான்.... 
ஆனா.... எனக்கு... அவரின், வைரஸ் காய்ச்சல்  தொத்தீடும்  என்று பயமாக இருக்கிறது. :grin:

குமாரசாமி அண்ணை...  விரைவில் நலம் பெற்று, 
யாழ்களத்துக்கும், முகநூலுக்கும்  வர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

ஓ வைரஸ் காய்ச்சலா அண்ணை மீண்டும் கஞ்சி குடிச்சி தெம்பாக வாங்கோ என்ன 

நன்றாக தண்ணீர் அல்லது இளநீர் பருகவும் அங்கே இளநீர் கிடைக்குமா என்ன??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20.3.2017 at 3:27 PM, ராசவன்னியன் said:

சோற்றுக் கஞ்சியில் சிறிது உப்பு சேர்த்துவிட்டால் உப்புக்கஞ்சி தயார்.  mange7.gif

அது சோத்துக்கஞ்சி.:grin:

On 20.3.2017 at 7:57 PM, ரதி said:

பச்சரிசியை தண்ணீர் விட்டு அவிய விட்டு அவிந்தவுடன் தேங்காய்பாலும் உப்பு போட்டுக் குடிக்கிறது...அடிக்க வாறேல்ல சொல்லிப்போட்டன்

சில பேர் றால்,முருங்கையிலை எல்லாம் போட்டுக் காச்சுவினம்...அதையா அண்ணா கேட்கிறீங்கள்?

உது சாம்பாரின் ஆரம்பக்கட்டம் தங்கச்சி

On 20.3.2017 at 8:17 PM, suvy said:

எனக்கும் இது சரியாய் தெரியவில்லை ஆனால் ஊரில காடாத்து செய்து போட்டு வந்ததும் உப்புக் கஞ்சி என்று சகோதரி ரதி சொன்னதுபோல் முருங்கை இலை போட்டுக் காச்சுவார்கள். அதை வருபவர்களுக்கு கொடுப்பார்கள்....!  

மனிசன் தலையிடி காய்ச்சலுக்கு மருந்து கேட்டால் இந்தாள் காடாத்துறதிலை நிக்கிறார்.tw_tounge_xd:

On 20.3.2017 at 9:29 PM, ஈழப்பிரியன் said:

எமது வீட்டில் குத்தரிசியில் தான் கஞ்சி.வழமையாக சோறு ஆக்குவது போல் கொஞ்சம் கூடுதாக தண்ணீர் விட்டு உப்பு கொஞ்சம் சுண்ட போட்டால் சரி.

இதற்குள் தேங்காய் பால் விடலாம்.வெங்காயம் பச்சை மிளகாய் சிறிது தூளாக வெட்டிப் போடலாம்.

இதுவே நல்ல தடிமன் மூக்கடைப்பு என்றால் கொஞ்ச றால் முருங்கை இலையும் போட்டு நிறைய தேசிக்காயும் விடலாம்.

சுவை இருப்பின் நண்பர்களிடம் கூறுக

குறை இருப்பின் என்னிடம் கூறுக.

செய்முறைக்கு நன்றி ஈழம்பிரியன் :grin:

On 20.3.2017 at 9:44 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

காச்கல் தடிமன் வந்தால் மேலே ஈழப்பிரியன்சொன்னதுபோல் செய்வது புளிக்கஞ்சி. தனிய குத்தரிசியை நல்லா அவியவிட்டு உப்பு மட்டும்போட்டு மசித்து குடிப்பது உப்புக்கஞ்சி. இதற்கு வேறுஎதுவும் சேர்ப்பதில்லை. வயிற்றைப் பிரட்டினால் இது நல்லது என்று சொல்வார்கள். 

ரொம்ப தாங்ஸ் 

On 20.3.2017 at 10:23 PM, யாயினி said:

ஏன் தாத்தா ப்ளு வந்திச்சா...?

வந்திச்சே! வந்து சிப்பிலி ஆட்டிச்சே!
ஒரு மருந்துக்கும் சொல்லுக்கேக்கேல்லை...
அதுவா வந்திச்சு....அதுவா போயிடிச்சு..

On 21.3.2017 at 4:45 AM, தமிழ் சிறி said:

இங்கு பரவலாக... ஒரு வைரஸ் காய்ச்சல்  பரவுகின்றது யாயினி.
தாத்தாவுக்கும் வந்திட்டுது போலை கிடக்கு... 
காய்ச்சலுக்கு, உப்புக்  கஞ்சி குடிக்க... அந்தமாதிரி இருக்கும்.

நான் குடிச்சது கோழிசூப்பு....கிட்டத்தட்ட உப்பு கஞ்சி நிவாரணம்.:)

On 21.3.2017 at 7:27 AM, ராசவன்னியன் said:

   4.gifsmileys-praying-622061.gif

thank you

On 21.3.2017 at 0:18 PM, முனிவர் ஜீ said:

ஒரு எட்டு பார்த்திட்டு வராமல் என்ன குசும்பு வேண்டி கிடக்குtw_blush: 

அப்படி என்ன அவசரமா இருக்கும்  :rolleyes:

நலம் விசாரிக்க யாழ்களம் இருக்கும் போது நெடுந்தூர பயணம் ஏன்?:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 21.3.2017 at 0:54 PM, தமிழரசு said:

பச்சரிசியை தண்ணீர் விட்டு அவிய விட்டு அதனுடன் கொஞ்ச வெந்தயமும் போட்டு நன்கு அவிந்ததும் தேவையான உப்பு சேர்த்து தேவை என்றால் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி கொதித்ததும் இறக்கி பரிமாறலாம்.

ம்....இப்போது ஞாபகம் வருகின்றது tw_thumbsup:.......ஊரில் குடித்திருக்கின்றேன். நல்ல சுவையானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.