Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படுபயங்கரமாக ரெக்கி எல்லாம் எடுத்திருக்கிறீங்கள்..... கடைசி வரைக்கும் பெட்டைக்குயிலனுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதே என்று மனம் கவலைப்பட்டுப்போச்சு கிருமி. இயல்பான சுபாவத்தால் இயற்கையால் மாறுபட்ட குண அம்சங்களைக் கொண்டவர்கள் சமூகவெளியில் நிறையவே மனக்காயங்களை அடைந்து கொண்டிருப்பவர்கள் எனக்கு ஏனோ நீங்கள் ஆரம்பத்திலிருந்து பெட்டைக்குயிலனை தாக்கவேண்டும் என்று கதைப்படுத்திக் கொண்டு செல்லும்போதே என்னை அறியாமலே பெட்டைக்குயிலனுக்காக மனம் கவலை கொள்ளத் தொடங்கிவிட்டது. ஒன்று உங்களுடைய எழுத்தின் தன்மை மற்றது சராசரி இயல்பிழந்த கதாப்பாத்திரம் இவை இரண்டும் பெரும் தாக்கத்தை எனக்குள் கொடுத்து விட்டது கிருமி; நல்ல பதிவு.

  • Replies 66
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடியெண்டாலும் கட்டையன் ஒரு அப்பாவியை போட்டு இப்பிடி அடித்திருக்கக்கூடாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Paanch said:

கதை... கற்பனை ஆகட்டும், நிகழ்வு ஆகட்டும், கதையைக்கொண்டு கதை வடிப்பவரின் உள்ளத்தைப் புரிந்து கொள்ளலாம். இங்கு கதை முடிவு கிருபனின் பண்பை வெளிப்படுத்துகிறது. 

பாஞ்ச் ஐயா, கதையின் முடிவை வைத்துத்தான் மற்றவற்றைப் பின்னினேன்.

படித்துக் கருத்துக் கூறியமைக்கு நன்றிகள்.

20 hours ago, ஈழப்பிரியன் said:

கிருபன் நாங்கள் படிக்கும் காலத்தில் ரொம்ப ரொம்ப பிரபலமாக இருந்த ஒரு சொல்.

இங்கே கே என்ற சொல்லை தாங்க முடியாதவர்கள் அந்த நேரமே இவைகளுக்கு பெயர் போனவர்கள் இருந்தார்கள் என்றால் நம்பவா போகிறார்கள்.  

கடைசியில் பெட்டைக் குயிலன் செத்தான் என்று பார்த்தா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறீர்கள்.

என்ன செய்வது! விதி அப்படி ஆகிவிட்டது?

19 hours ago, வாத்தியார் said:

இருட்டடி வர்ணனை அருமையாக இருந்தது.
இருந்தாலும் அடித்தவனுக்கு அடி வாங்கியதற்கான காரணம் தெரியவில்லை .
அவன் எப்படித் திருந்துவான்.
உண்மையிலேயே கிருபனின் சுபாவம் இது தான் என்று நினைக்கின்றேன்  
அதற்காகச் சொத்தையென்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை.

அவனுக்காகப் பரிதாபப்பட்ட கிருபனாவது  குரலை மாத்தி அவனுக்கு அவன் செய்த பிழையை சுட்டிக்காட்டியிருக்கலாம்.
அதன் பிறகு பெட்டைக் குயிலான் திருந்தியிருக்கலாம்
இருட்டடிக்குப் பின்னர் அவனின் நிலைமை தெளிவில்லை.

ஆனால் இங்கு  இருட்டடிதான் பிரதான விடயம் என்பதால் இவற்றை விட்டு  விடலாம்

பெட்டைக் குயிலன் திருந்துவதை விட திட்டம் எப்படி பிசகியது என்பதைத்தான் கதையின் கருவாக எடுத்திருந்தேன். மிச்சம் உங்கள் கற்பனைக்கே!

வாசித்துக் கருத்துக் கூறியமைக்கு நன்றிகள் வாத்தியார்?

  • கருத்துக்கள உறவுகள்

பெட்டைக் குயிலனுக்கு தானும் அடித்தேன் என்டு கிருபன் எழுதியிருந்தால் அது உண்மையுடன் சேர்ந்த கற்பனை கதையாகத் தான் இருந்திருக்கும்..."எனக்கு எழுதத் தெரியாது என்டு சொல்லிப் போட்டு" எழுத கிருபனால் மட்டுமே முடியும்.:101_point_up:

கதை அருமை . திட்டமிடல் எல்லாம் பெரியளவில் இருந்தது, இந்த விசயத்திற்கு இவ்வள திட்டமிடல் அவசியம் தானா என்று நினைக்கையில் முடிவில் |ஏற்பட்ட திருபம் பதிலாக இருந்தது. ஒருவன் எம்மை அடித்து விட்டால் அதற்கான பாதிலடி|யும் வன்மமும் எமது நல்ல பக்கங்களை மறைத்து விடுகின்ற|து. அதை உண|ரும் தருணம் காலம் கடந்து விடுகின்றது, பெட்டைக்குயிலனுக்\கு அடி மாதிரி பல இடங்களில் எமக்|கு துயரங்கள். முடிவு  அருமை. குயிலனை விட வலி உங்களுக்க அதிகம். பல இடத்தில் எங்க|ளுக்கும் இந்த நிலைமை தான். 

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த முறையில் திட்டமிட்டு எழுதியிருக்கிறியள், வாழ்த்துக்கள். ரசித்து வாசித்தேன். பெட்டைக்குயிலனுக்கு அடி விழும் என நான் நினைத்திருக்கவில்லை, வேறு பலரும் அதைத்தான் கூறியிருக்கிறார்கள். பெரும் திட்டமிடலுடன் நடந்த தாக்குதல் பிசுபிசுத்துப் போகும் என்ற வாசகனின் எதிர்பார்ப்புக்கு நேர்மறையான முடிவை தந்தது உங்களின் கதையின் உச்சப்புள்ளி.வாசிக்கும் எமக்கும் தாக்குதலில் ஈடுபட்ட உங்கள்  நண்பர்களின் பார்வையிலும் தாக்குதல் வெற்றி, அவரவர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை சரியாக முடித்திருந்தார்கள் ஆனால் உங்களது பார்வையில் திட்டம் தோல்வி.

"சாப்பாடு தேடுவது" - கனகாலத்தின் பின்னர் வாயினுள் புகுந்து புன்னகையாக வெளியேறிய சொல். வடமராட்டிசியில் பரவலாக பாவிக்கப்பட்டாலும் ஏனைய யாழ்குடாவின் பகுதிகளில் பாவிக்கப்படுகிறதா எனத் தெரியவில்லை.

கிருபன், கதை வாசிப்பதற்கு விறுவிறுப்பாய் இருந்தது. எனக்கு சகாறா அக்கா கூறியதுபோல் பெட்டைகுயிலன் மீது அனுதாபமே ஏற்பட்டது. இப்போது பெட்டைகுயிலன் எப்படி, எங்கே இருக்கிறார் என்று அறிந்தீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

 செம்பகத்தின் அலகுக்குள் அகப்பட்டு உயிரைவிடப் போகும் மசுக்குட்டியைப் போல நெளிந்துகொண்டு, 

இந்தக் கதைக்கும் சம்பவத்துக்கும் ஏற்ற பொருத்தமான உவமை. ஒரு கிராமத்துக்குள் பனங் கூடல்களுக்குள் கும்மாளம் இடுபவர்களுக்குத்தான் இந்த உவமைகள் வசப்படும்....!  tw_blush:

இந்த உவமையை எடுத்துவிடுவோமா என்று பலதடவை நினைத்தேன். ஆனால் செம்பகம் மசுக்குட்டி விருந்து சாப்பிடுவதை நீக்கிவிடமுடியவில்லை.?

பனங்கூடல்களும் தோட்டவெளிகளும் புரண்டுபடுத்த இடங்கள்!

 

20 hours ago, putthan said:

கிருபன் கதை அந்தமாதிரியிருக்கு.....ஈழப்பிரியன் கே.கே என்ற சொல்லை தாங்குவினமோ:10_wink:

நன்றி புத்தன் ஐயா! படத்தைப் பார்த்த பின்னரும் அண்ணை என்று சொல்ல வருகுதில்லை?

மே.கே. மாதிரியான சொற்கள் இப்பவும் புழக்கத்தில் இருக்குத்தானே.?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

 

 

நன்றி புத்தன் ஐயா! படத்தைப் பார்த்த பின்னரும் அண்ணை என்று சொல்ல வருகுதில்லை?

மே.கே. மாதிரியான சொற்கள் இப்பவும் புழக்கத்தில் இருக்குத்தானே.?

உதுக்கு தான் கந்தப்பு சொன்னவர் மேல காட்டதையுங்கோ கீழ காட்டுங்கோ என்று....தப்பு பண்ணிப்போட்டனோ?:rolleyes:அது சரி மே கே என்றால் என்ன? மெகா....கே யோ?

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

கதையை முடித்த விதம் நன்றாக இருந்தது. விசரங்கள் அடிக்காமல் விட்டிட்டு ஓடப்போறாங்கள் என்று பதட்டமாயுமிருந்துது வாசித்து முடியும் மட்டும். பச்சை இல்லைப் போட.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2017 at 11:00 AM, புங்கையூரன் said:

கதாசிரியன் ஒருவன்.....கதையாக மாறிய கதை போல உள்ளது!

கிருபன் நீங்கள் மிகவும் மென்மையான மனம் படைத்தவராக இருக்க வேண்டும்!

உங்கள் கதையின் மொழி நடையும், அதில் வந்து விழுந்த நாட்டுச் சொற்களும் எம்மை விசாப் பிரச்சனை இல்லாமலே ஊருக்கு ஒரு முறை அழைத்துச் சென்று விட்டன!

கூப்பிட்டுக் குத்தி....நான் கேள்வியே பட்டிராத வார்த்தை!

ஒரு வேளை நான் வளர்ந்த இடங்களில் .....வளர்ந்த செடி கொடிகள் எல்லாமே மிகவும் நல்லவை போல இருக்கின்றது!

ஆனால் என்ன காரணத்தாலோ...எனக்கு இந்தப் பெயர் நன்றாகப் பிடித்துப் போய் விட்டது!

ஒரு வேளை ...நல்ல வடிவான பூவாய்ப் பூத்து...அதை ஆசையாய்..பிடுங்கப் போகும் போது முள்ளுக் குத்தி விடுமோ..?

பல பெண்களுக்கும் இது பொருந்தும் போல உள்ளது!:cool:

புங்கை அண்ணா, நான் விளாம்பழக் கதை சொல்லித்தான் வாழ்க்கையே ஆரம்பித்தேன்!:cool:

கதையில் சில ஊர் வழக்குகளையும் எங்கள் பிரதேசத்துக்கேயுரிய தனித்துவமான சொற்களையும் கவனமாகப் புகுத்தியது உண்மைதான். ஆனால் பலவற்றை நினைவுக்குக் கொண்டுவர நேரம் எடுத்தது. ஒவ்வொருநாளும் 3 - 4 மணித்தியாலம் காரில் வேலைக்குப் போகவருவதால் சொற்களை நினைவுபடுத்த முடிந்தது.

கூப்பிட்டுக் குத்தி என்று நாங்கள் சொல்வது ஊரில் பரவலாக தோட்டங்களில் இருக்கும். நீங்கள் வேறு பெயரில் அறிந்திருக்கலாம். படம் தேடித்தான் எடுக்கவேண்டும்.

On 3/30/2017 at 11:29 AM, விசுகு said:

வணக்கம்  கிருபன் ஐயா

கதாயாசிரியராக வெளி  வந்திருக்கின்றீர்கள்

வாழ்த்துக்கள்..

ஒரு வாசகனாக பெரிய  கதைகள்

தொடர்கள்

விபரித்தல் போன்றவற்றில் நாட்டமில்லை

இன்றைய உலக ஒழுங்கு அதற்கு இடம் தரவில்லையோ என்னவோ...

உங்களுடைய  கதையையும் சில இடங்களில்  (பந்தி) தாவி  தாவித்தான் வாசித்தேன்

கதையை  சொல்லு

முடி என்பது எனது பாணி

யாரும்  எதையாவது என்னிடம் சொல்ல வந்தால் கூட இழுக்க விடமாட்டேன்

நேரே விசயத்துக்கு வா என்று தான் சொல்வேன்

ஆனால் உங்களுடைய  கதையில் பல எமது தாயக விடயங்களை  கொண்டு வந்தீர்கள்

அதை பலரும் ரசித்தார்கள்

நான் மீண்டும்  ஒருமுறை திருப்பி அவற்றை வாசிக்கும் அளவுக்கு அவை பேசப்பட்டன

வாழ்த்துக்கள்

நமக்கு நேரமிருக்கோ

வாசிக்கின்றோமா என்பதைவிட

அவை பேசப்படணும்

மீள மக்கள் முன் வைக்கப்படணும்

உலா வரணும்.

 

கதையின்படி திட்டம் போடுவது இலகு

ஆனால் செயல் என்று வரும் போது ..??

நன்றி  ஐயா.

நன்றிகள் விசுகு ஐயா.

உலகம் அவசரமாக ஓடினாலும், கதையை ஒரு வரியில் சொல்லமுடியாது. அது வெறும் சம்பவத்தைச் சொல்லுவதாகத்தான் முடியும்.

விபரிப்பு, சித்தரிப்பு எல்லாம் கதைக்கு வேண்டுமென்று பெரும் பெரும் கதையாசிரியர்கள் சொல்லுகின்றார்கள். அதனால் ஒரு சிறு சம்பவத்தை கதையாக்க முயற்சித்தேன். படிக்க 1000 பக்கங்கள் தாண்டிய புத்தகங்கள் 20க்கு மேல் உள்ளன. அதைவிட இன்னும் 100 புத்தகங்கள் உள்ளன. எனவே அவையெல்லாவற்றையும் படிப்பதுதான் இனிப் பொழுதுபோக்கு!!

ஜெயமோகன் சித்தரிப்பைச் பற்றி குறிப்பிட்டதை கீழே தருகின்றேன். நீங்கள் எழுதும் விடயங்களையும் சுவாரசியமான கதைகளாக மாற்றலாம் :)

இதையெல்லாம் மனதில்கொண்டு நான் கதையை எழுதவில்லை!!!

 

 

Quote

 

சிறுகதைகள் எழுதத் தொடங்குபவர்கள் முதலில் செய்யும் தவறு என்ன? சொல்ல உத்தேசிப்பதை சுருக்கமாகச் சொல்வதுதான். அதாவது நேரில் பேசினால் சொல்வது போல சொல்வது. அது சிறுகதைக்குப் போதாது. ஏன்?

”நேற்று காலையில் சாலையில் ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டேன். கையில் நல்ல அடி. அப்போது சாலையில் யாருமே இல்லை. மழைவேறு பெய்தது. அதனால் வண்டியின் என்ணைப் பார்க்க முடியவில்லை. ” இப்படி நடந்த விஷயத்தை சுருக்கமாகச் சொல்லலாம். இப்படித்தான் நாம் சாதாரணமாகப் பேசுவோம். நடந்ததை பிறருக்கு ‘தெரிவிக்க’ இது போதும்.

ஆனால் இலக்கியம் நடந்ததை தெரிவித்தால் போதாது. நடந்த நிகழ்ச்சியை வாசிப்பவருக்கு ‘அனுபவமாக’ ஆக்க வேண்டும். அவரும் தனக்கு உண்மையில் நிகழ்ந்தது போல அதை உணரவேண்டும். அதற்குத்தான் ‘சித்தரிப்பு ‘ தேவையாகிறது.

”காலையில் நெடுஞ்சாலையில் யாருமே இல்லை. சன்னமான மழை ஒரு பாலிதீன் திரை போல கரிய தார்பரப்பை மூடியிருந்தது. கார்களின் ஹெட்லைட் ஒளிகள் நீரின் அடியில்தெரிவதுபோல கலங்கி தெரிந்து தாண்டி மறைந்துகொண்டிருந்தன. நான் இருபக்கமும் பார்த்தேன், வண்டிகள் வரும் ஒலி கேட்கவில்லை. என் மனதில் காலைநேரக் கவலைகள். ஆபீஸில் ஒரு சின்ன நிதிச்சிக்கல். ஒரு தைரியத்தில் சட்டென்று சாலையைக் கடந்தென்.யாரோ கையை ஓங்கி தட்டுவது போலிருந்தது. சுழன்று விழுந்தேன். ஒரு கார் என்னைத்தாண்டிச் சென்றது. அதன் பின் விளக்குகளின் சிவப்பு சீறிசீறி அணைவதை மட்டும்தான் கண்டேன். ஒரு கணம் என் மனதில் எதுவுமே இல்லை. என்ன நடந்தது என்பது பொழுதுவிடிவது போல மெல்லத்தான் தெளிவாகியது. ஆபீஸ¤க்கு நேரமாகிவிடுமே என்ற எண்ணமும் கையில் வலியும் சேர்ந்தே எழுந்தன….”

இது ஒரு கதையின் தொடக்கமாக அமையலாம். வேறுபாட்டை கவனித்திருப்பீர்கள். என்னென்ன சிறப்பம்சம்ங்கள் இரண்டாவது சித்தரிப்பில் உள்ளன?

முக்கியமாக இரண்டு. 1. காட்சி விவரிப்பு 2. உள்ள விவரிப்பு.

”காலையில் நெடுஞ்சாலையில் யாருமே இல்லை. சன்னமான மழை ஒரு பாலிதீன் திரை போல கரிய தார்பரப்பை மூடியிருந்தது. கார்களின் ஹெட்லைட் ஒளிகள் நீரின் அடியில்தெரிவதுபோல கலங்கி தெரிந்து தாண்டி மறைந்துகொண்டிருந்தன” — இது காட்சி விவரிப்பு. துல்லியமான தகவல்கள் மூலம் அந்த சாலையை அப்படியே வாசகனின் கற்பனையில் எழுப்ப முயலப்பட்டுள்ளது.

இந்த காட்சி விவரிப்பில் இரு கூறுகள் உள்ளன. அ.. தகவல், ஆ. உவமை முதலிய அணிகள்

”காலையில் நெடுஞ்சாலையில் யாருமே இல்லை.” ” வண்டிகள் வரும் ஒலி கேட்கவில்லை. ” இது தகவல். நுட்பமான தகவல்கள் ஒரு கதையை நம் கண்முன் நிறுத்துபவை.

”சன்னமான மழை ஒரு பாலிதீன் திரை போல கரிய தார்பரப்பை மூடியிருந்தது. கார்களின் ஹெட்லைட் ஒளிகள் நீரின் அடியில்தெரிவதுபோல கலங்கி தெரிந்து தாண்டி மறைந்துகொண்டிருந்தன” — இவை இரண்டும் உவமைகள். உவமைகள், உருவகங்கள் மூலம் காட்சிகளை மேலும் துல்லியமாக வாசகனின் கற்பனையில் எழுப்பலாம். இன்றும் சிறந்த கதைகளில் இத்தகைய அணிகளுக்கு பெரிய இடமிருப்பதைக் காணலாம்.

பொதுவாக வழக்கமான உவமைகளை பயன்படுத்தக் கூடாது. அவை எந்த வாசகனில் விளைவையும் ஏற்படுத்தாது. வெறும் அலங்காரமாகவே நின்றுவிடும். புதிய உவமைகள் வாசகனின் கற்பனையை தூண்டும்.

சித்தரிப்பில் இரண்டாவது கூறு ,உள்ளம் செயல்படுவதைச் சொல்வது. பெரும்பாலும் மையக்கதாபாத்திரத்தின் மனத்தை சித்த்ரிப்பது வழக்கம். ஒன்றுக்குமேல் மனங்களை சித்தரிக்க ஆரம்பித்தால் கதையின் ஒருமை இல்லாமலாகும்.

மனதையும் இருவகையில் சித்தரிக்கலாம். அ.நேரடியாக ஆ. அணிகல் மூலம். ”என் மனதில் காலைநேரக் கவலைகள்.” இது நேரடியான உள்ளச் சித்தரிப்பு ”என்ன நடந்தது என்பது பொழுதுவிடிவது போல மெல்லத்தான் தெளிவாகியது. ” இது உவமை அணி.

காட்சி சித்தரிப்பு புற உலகை காட்டுகிறது. உள்ளச் சித்தரிப்பு அக உலகைக் காட்டுகிறது. இவை இரண்டையும் மாறிமாறி தேவைக்கேற்ப பிணைத்து புனையும்போது கதையின் அனுபவம் உண்மையாகவே வாசகனுக்குள் நிகழ்கிறது.


 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையைப் படித்தவர்களுக்கும், கருத்துகளைக் கூறியவர்களுக்கும், விருப்பப்புள்ளிகளை இட்டவர்களுக்கும் நன்றிகள்.

ஒரு பிற்சேர்க்கையை (கதையாக இல்லை) பின்னர் எழுதுகின்றேன்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 30/03/2017 at 11:58 AM, முனிவர் ஜீ said:

கிருபன் இன்னும் நீட்டியிருந்தால்  என்று கேட்கிறது மனது  ஆயிரம் பச்சைகள்  உங்களுக்கு  தொடரட்டும்  கதைகள் :97_raised_hand:

ஏற்கனவே நீட்டி முழக்கிவிட்டேன் என்று நினைக்கின்றேன் முனி! 

On 30/03/2017 at 2:42 PM, வல்வை சகாறா said:

படுபயங்கரமாக ரெக்கி எல்லாம் எடுத்திருக்கிறீங்கள்..... கடைசி வரைக்கும் பெட்டைக்குயிலனுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதே என்று மனம் கவலைப்பட்டுப்போச்சு கிருமி. இயல்பான சுபாவத்தால் இயற்கையால் மாறுபட்ட குண அம்சங்களைக் கொண்டவர்கள் சமூகவெளியில் நிறையவே மனக்காயங்களை அடைந்து கொண்டிருப்பவர்கள் எனக்கு ஏனோ நீங்கள் ஆரம்பத்திலிருந்து பெட்டைக்குயிலனை தாக்கவேண்டும் என்று கதைப்படுத்திக் கொண்டு செல்லும்போதே என்னை அறியாமலே பெட்டைக்குயிலனுக்காக மனம் கவலை கொள்ளத் தொடங்கிவிட்டது. ஒன்று உங்களுடைய எழுத்தின் தன்மை மற்றது சராசரி இயல்பிழந்த கதாப்பாத்திரம் இவை இரண்டும் பெரும் தாக்கத்தை எனக்குள் கொடுத்து விட்டது கிருமி; நல்ல பதிவு.

அடிக்கடி பெட்டை என்ற வார்த்தையை உபயோகித்தால் அனுதாபம் வரும்தானே.. ஆனால் பதின்ம வயதில் "மெலியாரைத் தண்டித்தல்" பெரிய பிரச்சினைகளாகத் தெரிவதில்லைத்தானே.

ரெக்கி எடுத்ததெல்லாம் பெட்டைகளைப் பார்க்கமட்டும்தான்?

On 30/03/2017 at 5:13 PM, வாதவூரான் said:

எப்பிடியெண்டாலும் கட்டையன் ஒரு அப்பாவியை போட்டு இப்பிடி அடித்திருக்கக்கூடாது

அப்படித்தான் நானும் நினைத்தேன். ஆனால் அடிபோடாமல் கதையை முடித்தால் சப்பென்று போயிருக்கும்?

On 30/03/2017 at 7:22 PM, ரதி said:

பெட்டைக் குயிலனுக்கு தானும் அடித்தேன் என்டு கிருபன் எழுதியிருந்தால் அது உண்மையுடன் சேர்ந்த கற்பனை கதையாகத் தான் இருந்திருக்கும்..."எனக்கு எழுதத் தெரியாது என்டு சொல்லிப் போட்டு" எழுத கிருபனால் மட்டுமே முடியும்.:101_point_up:

தெரியாத விடயங்களைத் தெரிந்தமாதிரி காட்டுவதில் நான் ஒரு விண்ணன் என்று நண்பர்கள் சிலர் அப்பவே கண்டுபிடித்துச் சொலிவிட்டார்கள்?

அதனால் நானும் அடித்தேன் என்று கதைவிடமுடியவில்லை?

On 31/03/2017 at 5:55 AM, கலைஞன் said:

கிருபன், கதை வாசிப்பதற்கு விறுவிறுப்பாய் இருந்தது. எனக்கு சகாறா அக்கா கூறியதுபோல் பெட்டைகுயிலன் மீது அனுதாபமே ஏற்பட்டது. இப்போது பெட்டைகுயிலன் எப்படி, எங்கே இருக்கிறார் என்று அறிந்தீர்களா?

மென்மையானவர்களுக்கு அனுதாபம் வரும்தானே!

அவரைப் பற்றித் தெரியாது. ஆனால் எங்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கமாட்டார் என்றே நினைக்கின்றேன்.

22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கதையை முடித்த விதம் நன்றாக இருந்தது. விசரங்கள் அடிக்காமல் விட்டிட்டு ஓடப்போறாங்கள் என்று பதட்டமாயுமிருந்துது வாசித்து முடியும் மட்டும். பச்சை இல்லைப் போட.

கதையின் முடிவில்தான் திருப்பத்தைக் கொண்டுவரவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பதட்டம் வருமளவிற்கு எழுதியதாய் நினைக்கவில்லை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 30/03/2017 at 11:27 PM, சண்டமாருதன் said:

கதை அருமை . திட்டமிடல் எல்லாம் பெரியளவில் இருந்தது, இந்த விசயத்திற்கு இவ்வள திட்டமிடல் அவசியம் தானா என்று நினைக்கையில் முடிவில் |ஏற்பட்ட திருபம் பதிலாக இருந்தது. ஒருவன் எம்மை அடித்து விட்டால் அதற்கான பாதிலடி|யும் வன்மமும் எமது நல்ல பக்கங்களை மறைத்து விடுகின்ற|து. அதை உண|ரும் தருணம் காலம் கடந்து விடுகின்றது, பெட்டைக்குயிலனுக்\கு அடி மாதிரி பல இடங்களில் எமக்|கு துயரங்கள். முடிவு  அருமை. குயிலனை விட வலி உங்களுக்க அதிகம். பல இடத்தில் எங்க|ளுக்கும் இந்த நிலைமை தான். 

திட்டம் இல்லாமல்தான் கதையை முன்னர் எழுதி வைத்திருந்தேன். ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு திரும்ப எடுத்து வாசித்தபோது கதையில் சுவாரசியம் இல்லாமல் இருந்தது. அதனால் சேர்த்துவிட்டேன்.

பாராட்டுக்களுக்கு நன்றிகள் சண்டமாருதன் (சுகன்)

 

On 31/03/2017 at 1:19 AM, Thumpalayan said:

சிறந்த முறையில் திட்டமிட்டு எழுதியிருக்கிறியள், வாழ்த்துக்கள். ரசித்து வாசித்தேன். பெட்டைக்குயிலனுக்கு அடி விழும் என நான் நினைத்திருக்கவில்லை, வேறு பலரும் அதைத்தான் கூறியிருக்கிறார்கள். பெரும் திட்டமிடலுடன் நடந்த தாக்குதல் பிசுபிசுத்துப் போகும் என்ற வாசகனின் எதிர்பார்ப்புக்கு நேர்மறையான முடிவை தந்தது உங்களின் கதையின் உச்சப்புள்ளி.வாசிக்கும் எமக்கும் தாக்குதலில் ஈடுபட்ட உங்கள்  நண்பர்களின் பார்வையிலும் தாக்குதல் வெற்றி, அவரவர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை சரியாக முடித்திருந்தார்கள் ஆனால் உங்களது பார்வையில் திட்டம் தோல்வி.

"சாப்பாடு தேடுவது" - கனகாலத்தின் பின்னர் வாயினுள் புகுந்து புன்னகையாக வெளியேறிய சொல். வடமராட்டிசியில் பரவலாக பாவிக்கப்பட்டாலும் ஏனைய யாழ்குடாவின் பகுதிகளில் பாவிக்கப்படுகிறதா எனத் தெரியவில்லை.

நன்றி தும்பளையான். திட்டம் போட்டுச் செய்வதெல்லாம் எப்போதும் பிழைக்கக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வு இருப்பதனால் முடிவை ஊகிக்கக்கூடாது என்பதில் கவனம் எடுத்திருந்தேன்?

எனக்கு வடமராட்சியைத் தவிர வேறு இடங்கள் தெரியாது. 87 இல் தென்மராட்சிக்கு ஒருமாதம் இடம்பெயர்ந்திருந்தபோதுதான் எங்கள் வட்டாரமொழி வேறானது என்று புரிந்தது?

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த காலம் என்று சொல்வார்கள். ஆனால் இறந்த காலத்தை உயிரோடு நிகழ்காலத்தில் கொண்டுவந்தது காட்டியது இருட்டடி. மரம் செடி கொடிகளின் அழகான பெயர்களை தமிழில் சொல்ல வாய் இனிக்கிறது.:) 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிற்சேர்க்கை:

பெட்டைக் குயிலன் (உண்மையான பெயர் வேறு) ஒரு பொடியனுக்கு சேட்டை விட்டது உண்மைதான். அன்று பின்னேரம் அவன் திரும்பி வர நாங்கள் நாலு பேர் மறிச்சு அடிக்கவெளிக்கிட்டதும் உண்மைதான். ஆனால் 'சொக்கி' பிடிக்க கட்டையன் தன் கண்ணை சேர்ட்டால் சுத்திக் கட்டி மறைத்து குருடன் பெண்டாட்டிக்கு அடித்தமாதிரி அடித்ததைத் தவிர வேறு ஒன்றும் பெரிதாகச் செய்யவில்லை.  அதனால் பெரிய அடிகள் ஒன்றும் விழவில்லை!

நான் ஒரு அடிகூட கொடுக்கமுடியாமல் தடுமாறிப்போனது உண்மை. ஆனால் காரணம் என்னவென்று இன்றுவரை பிடிபடவில்லை!

பெட்டைக் குயிலனை அடுத்த நாளே பார்த்தோம். ஆனால் வெட்டைக்குள்ளால் வராமல் கல்லுரோட்டால் சுத்திப் போனான். அதுதான் எங்களுக்கு கிடைத்த வெற்றி புளுகிக்கொண்டோம்!

கட்டையன் இப்போது உயிரோடு இல்லை. ஏதோ காரணத்திற்காக தற்கொலை செய்துவிட்டான். கதையில் வந்த மற்றவர்கள் (புனைபெயர்கள்) எல்லாம் வெளிநாடுகளில் இருக்கின்றார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

நான் ஒரு அடிகூட கொடுக்கமுடியாமல் தடுமாறிப்போனது உண்மை. ஆனால் காரணம் என்னவென்று இன்றுவரை பிடிபடவில்லை                                                                                                                  

 

கிராமிய மணம் தலைமைத்தவத்தின் பண்பு (நேரம்பிந்தாது போதல்) மொத்தப்புத்தகங்களைப்படித்து விளங்காத இஸங்களைபேசுதல் பலவகை மரங்கள் செடிகளென ஒரு கிராமத்தை உலவவிட்டு சுவையாக் கதையைநகர்த்திச் சென்றமை அழகு. வாழ்த்துகள். இளமைக்காலங்களை மீட்டுச்செல்கிறது.  ஒருமனம் அடியென்னும் ஒருமனம் அதை தடுக்கின்ற சூழல்  மனிதத்தின் இயல்பாக  உலகை நகர்த்துகிறது.

 

 

 

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.