Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டால் அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப நேரிடும் – இரா.சம்பந்தன்

Featured Replies

தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டால் அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப நேரிடும் – இரா.சம்பந்தன்

 

தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டால் அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப நேரிடும் – இரா.சம்பந்தன்
 

தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டால் அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.

யுத்தத்தால் இடம்பெயர்ந்து, பூந்தோட்டம் நலன்புரி முகாமில் தங்கியுள்ள 150 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைக் கையளிப்பதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார்.

http://newsfirst.lk/tamil/2017/04/தமிழ்-மக்கள்-தொடர்ந்தும-2/

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை பார்ரா... சிங்கம் உறுமுது tw_dizzy:  

 

  • தொடங்கியவர்

தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டால் அரசாங்கத்தை மக்கள் வெறுக்கும் சூழ்நிலை உருவாகும் – இரா.சம்மந்தன்

 

sam.jpg

தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டால் அரசாங்கத்தை மக்கள் வெறுக்கும் சூழ்நிலை உருவாகும் எனவும்  இதனை இந்த அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்  ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தினரால் வவுனியா, நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்ன அடம்பன் இரசபுரத்தில் 150 வீடுகளை பயனாளிகளிடத்தில் கையளிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள தேசியப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்பட்டு ஒரு புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அதனூடாக  நாங்களும் சமமாக, ஒற்றுமையாக, சுயமரியாதையுடன் வாழ வேண்டுமென்று இந்த நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு கோரிக்கையை முன்வைத்து வருகிறோம் எனத் தெரிவித்த அவர்   அம்முடிவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அந்த கோரிக்கையுடன்  காணாமல் போனோர் தொடர்பான பிரச்சனைகள், காணிகள் சம்பந்தமான பிரச்சனைகள், மக்களின் மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் சம்பந்தமான பிரச்சனைகள், புனர்வாழ்வு, தொழில் வாய்ப்பு போன்ற பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தமிழ் மக்கள் ஒரு பெரும் பங்களிப்பை செய்தார்கள் எனவும்  தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் பங்களிப்பும் பாரியதாக இருந்தது. ஆனால் அரசாங்கத்தின் போக்கானது அவர்களுடைய கொள்கைகளைப் பொறுத்த வரையில், அவர்களுடைய பேச்சைப்பொறுத்த வரையில் பழைய அரசாங்கத்திற்கும் புதிய அரசாங்கத்திற்குமிடையில் ஒரு மாற்றத்தை காண்கிறோம். இருந்தாலும் எமது மக்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் என அவர் தெரிவித்தார்.

காணாமல் போனோர் சம்பந்தமாக ஒரு முடிவு விரைவில் கிடைக்கவேண்டும், அரசாங்கம் துரிதமாக செயற்படவேண்டும் என்பது அத்தியவசியமாக இருக்கிறது. அது அவர்களின் கடமை அரசாங்கம் பதவி ஏற்று இரண்டு வருடகாலமாகி விட்டது. மக்களுடைய காணிகள் மக்களுக்கு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். இராணுவம் மக்களுடைய காணியில் விவசாயம் செய்து அதில் வியாபாரம் செய்து தொழில்செய்து உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். எமது மக்கள் நலன்புரி நிலையங்களிலும், முகாம்களிலும், இன்னொருவர் வீடுகளிலும், அவர்களின் தயவில் தங்கி வாழ முடியாது தவிர்க்கின்றார்கள்.

எமது மக்கள் தங்களுடைய காணிகளுக்கு திரும்ப வேண்டும். ஓரளவுதான் அரசு மக்களின் காணிகளை விடுவித்திருக்கிறது. மன்னாரில், வவுனியாவில், கிளிநொச்சியில், திருகோணமலையில், மட்டக்களப்பில், அம்பாறையில் கூட காணிகள் விடப்பட வேண்டியிருக்கிறது. ஆனபடியால் இனியும் தாமதிக்காமல் அரசாங்கம் மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும். அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டால் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என சொல்லப்படுகின்றது.

அச்சட்டமும் நீக்கப்படவில்லை. அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இந் நிலமை தொடர முடியாது. புதிய அரசாங்கம் இரண்டு வருடமாக ஆட்சியில் இருக்கின்றது. எமது மக்கள் இன்னும் பொறுமையாக இருக்க முடியாது. நீதியை கேட்டு காணாமல் போனோர் சம்பந்தமாக முடிவைக் கேட்டு காணிகள் மற்றும் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் என கேட்டும் போராடுகிறாhடகள். ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வேலைவாய்ப்புக் கோரி போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் எமது இளைஞர்களுக்கு போதிய அளவிற்கு வேலைவாய்ப்பு இருக்கவில்லை. இப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். இவ்விதமான புறக்கணிப்பு தொடர முடியாது. இந்நிலமை தொடருமாக விருந்தால் இவ் அரசாங்கத்தை மக்கள் வெறுக்க வேண்டிய நிலமை ஏற்படும் இதனை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

https://globaltamilnews.net/archives/23825

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die stehen, Himmel und im Freien

  • தொடங்கியவர்

Kein automatischer Alternativtext verfügbar.

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Himmel und im Freien

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen auf einer Bühne, Himmel, Baum und im Freien

 

 

Bild könnte enthalten: Himmel, Haus und im Freien

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die stehen, Menschenmasse und im Freien

 

Bild könnte enthalten: 8 Personen, Menschenmasse und im Freien

 

 

 

Bild könnte enthalten: 9 Personen, Personen, die stehen, Menschenmasse und im Freien

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die stehen, Personen gehen spazieren, Menschenmasse, Himmel und im Freien

 

Bild könnte enthalten: 2 Personen, Personen, die stehen und im Freien

Bild könnte enthalten: 3 Personen, Personen, die stehen

 

 

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Innenbereich

 

 

Bild könnte enthalten: 6 Personen, Personen, die stehen und im Freien

 

 

Bild könnte enthalten: 6 Personen

 

 

Bild könnte enthalten: 8 Personen, Personen, die stehen

 

 

 

Bild könnte enthalten: 8 Personen, Personen, die sitzen

 

Bild könnte enthalten: 13 Personen, Personen, die stehen und Menschenmasse

 

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen

 

Bild könnte enthalten: 10 Personen, Menschenmasse

லைக்கா ஞானம் கிராமத்தில்   தீபம் குழுவினர்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

இஞ்சை பார்ரா... சிங்கம் உறுமுது tw_dizzy:  

 

இது வவுனியாவில்....

  • தொடங்கியவர்

உள்நாட்டுப் போரில் இறந்தவர்கள் குறித்து நீதியான விசாரணை இடம்பெற வேண்டும் – பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் பெரி

DSC05185-1024x576.jpg

உள்நாட்டு போரில் இறந்தவர்கள் குறித்து இந்த அரசாங்கம் பொறுப்புக் கூறல் அடிப்படையில் நீதியான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என  பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவருமான ஜேம்ஸ் பெரி தெரிவித்துள்ளார்.

வவுனியா, நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்ன அடம்பன் இரசபுரத்தில் 150 வீடுகளை பயனாளிகளிடத்தில் கையளிக்கும் நிகழ்வில் இன்று  கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எமது நாட்டின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து உங்களுடைய முதலமைச்சருடன் பேசியிருந்தார். இங்குள்ள அவலங்கள் குறித்து அறிந்து கொண்டார். இது தொடர்பில் அவர் கவனம் செலுத்தி ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்திருந்தார்.

இங்கு நடந்த மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் அவர் வலியுறுத்தியிருந்தார். இலங்கைக்கு சில நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். 2015 ஆம் ஆண்டு ஜெனீவா கூட்டத்தொடரிலும், ஏன் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரிலும் உங்கள் தொடர்பில் நானும் குரல் கொடுத்தேன். சில விடயங்களையும் குறிப்பிட்டிருந்தேன். அவரும் நாங்களும் சேர்ந்து உங்கள் பிரச்சனைகள் தொடர்பில் தொடர்ந்தும் கரிசனை செலுத்தி வருகின்றோம் எனத் தெரிவித்தார்.

ஜெனீவா கூட்டத் தொடரில் உங்கள் பிரச்சனை தொடர்பில் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.  கௌரவ எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டது போல தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தை விட மாறுபட்ட அரசாங்கமாக இருக்கிறது. தமிழ் மக்களுடைய பிரசிசனைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தி வருவதனை நாங்கள் அறிகின்றோம். நாம் இந்த அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்ப்பது ஒரளவு நடவடிக்கைகளை அல்ல. மேலும் பல நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. உங்களுடைய சாதாரண வாழ்க்கை வழமைக்கு திரும்பவும் இந்த அரசாங்கம் நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும். இங்குள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட வேண்டும். அங்கிருக்கின்ற முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்பது குறித்தும் நாங்கள் கூடிய கவனம் செலுத்துகின்றோம்.

உங்களுடைய இடங்கள் குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என இந்த இடத்தில் கேட்டுக் கொள்கின்றோம். அதனை முறையாக செயற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம். உங்களுடைய வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். அந்த வகையில் உங்கள் சொந்தக் காணியில் நீங்கள் குடியேற அனுமதி வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். அனைத்து மக்களும் உடனடியாக மீள்குடியேற்றப்பட வேண்டும். இது தான் கடைசி மீள்குடியேற்றம் எனக் கூறும் அளவுக்கு நிலமை மாற வேண்டும். உள்நாட்டுப் போரில் இறந்தவர்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் என்ற அடிப்படையில் ஒரு நீதியான விசாரணை நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் மனிதவுரிமை பேரவையில் இலங்கை அரசாங்கமும் இணை அனுசரனை வழங்கி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இவை எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை அரசாங்கம் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.

இங்கு இருக்கின்ற உங்களுடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்று நாங்கள் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திலும் ஜெனீவாவிலும் உங்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்போம். இப்படி இப்படி செய்யுங்கள் என நாங்கள் இந்த அரசாங்கத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். தனிநபர்களாக இவ்வாறான பெரிய பணிகளைச் செய்வது கடினமானதாக இருக்கலாம். ஆனால் லைக்கா சுபாஸ்கரன் அவர்கள் ஒரு தனிநபராக இருந்து இவ்வாறு  ஒரு வேலையை செய்திருப்பது இங்கு சிறப்புக்குரியது. நீண்டகாலமாக இடம்பெயர்ந்து இருந்த மக்களுக்கு இவ்வாறான வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டதையடுத்து நான் மகிழ்வடைகின்றோம்.

இனி நீங்கள் யுத்த சூழலில் வளரப்போவதில்லை. இங்கு சிறுவர் பூங்கா இருக்கிறது. அமைதியான சூழல் இருக்கிறது. இந்த சூழலில் தான் உங்களுடைய பிள்ளைகள் வளரப் போகிறார்கள். அதேபோன்று இந்த நாடு வெறுமனே அமைதியாய் மட்டும் தோன்றாமல் மத நல்லிணக்கம் மற்றும் ஏனைய நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் டயஸ்போராக்களுக்கும் அல்லிராஜா சுபாஸ்கரன் ஒரு எடுத்துக் கட்டாக இருக்கிறார். இங்குள்ள பொதுப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அவர்கள் முன்வர வேண்டும் எனத் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/23828

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இது வவுனியாவில்....

கொழும்பு போனவுடன் சுருதி மாறும் 

  • தொடங்கியவர்

லைக்கா நிறுவனத்தினால் கட்டப்பட்ட 150 வீடுகளும் மக்களிடம் கையளிக்கப்பட்டன

 

வவுனியா - சின்ன அடம்பன் பகுதியில் லைக்கா ஞானம் அறக்கட்டளையினால் அமைக்கப்பட்டுள்ள 150 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவர் ஞானாம்பிகை அல்லிராஜா, நிறுவுனர் சுபாஸ்கரன் அல்லிராஜா ஆகியோர் இணைந்து குறித்த வீடுகளை பயனாளிகளிடம் கையளித்துள்ளனர்.

குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்கள், விசேட அழைப்பாளர்கள் என பலரும் கலந்துகொண்டு, மக்களுக்கான வீடுகளை கையளித்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

லைக்கா ஞானம் அறக்கட்டளையினால் 150 வீடுகளும் சுமார் 23 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

லைக்காக ஞானம் அறக்கட்டளையானது வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வுக்கு நடிகர் ரஜினிகாந்த் வருகைதருவார் என முன்னதாக கூறப்பட்டாலும், பல சர்ச்சைகளைத் தொடர்ந்து குறித்த பயணம் தடைப்பட்டது.

இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி குறித்த நிகழ்வுகள் இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளன.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/development/01/142252?ref=lankasri-home-dekstop

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, நவீனன் said:

தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டால் அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப நேரிடும் – இரா.சம்பந்தன்

அதுமட்டுமில்லை சம்பந்தன் ஐயா!

நாங்கள் பழைய விளையாட்டை காட்டுவம் எண்டும் கொஞ்சம் கர்ஜித்து இருக்க வேணும்.

அதுதான் வெடிக்கும்..

சிதறும்..

ஆண்ட தமிழன் மீண்டும் ஆளுவதில் என்ன தப்பூ......

உதய சூரியன் பார்வையிலே.....

அடங்கா சிங்கம்...

எல்லைக்காவலன்...

சிங்களம் கதைச்சால் மாட்டுவண்டில் ரோட்டிலை போற மாதிரித்தான் இருக்கும்.....

எண்டு கனக்க விட்டிருக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நவீனன் said:

தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டால் அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தலைவருக்கு ஆர்டர் பண்ணின பிராடோவும் ,உத்தியோக பூர்வ வாசஸ்தலமும்  இன்னும் கைக்கு வரையில்லை போல....தொற பிலிம் காட்டுறாரு
 

  • தொடங்கியவர்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 ம் லைக்காவுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும் இன்னும் நிறைய வீடுகள் கட்டிக்கொடுங்கோ மக்களுக்கு  

( இந்த தொகுப்பாளர்கள் வேண்டாம் நிகழ்ச்சி) )  

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா கோவத்தில அவசரபட்டு ஏதாவது செய்திடப் போறார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஞானம் அக்காவிற்கும் சுபாஸ்கரனுக்கும் " கெளரவ" என்ற பட்டத்தை / பதத்தை கொடுத்தது யார்? 

கெளரவ என்பது ஆங்கிலத்தில் Honourable ஆ?

https://en.m.wikipedia.org/wiki/The_Honourable

Sri Lanka

In Sri Lanka, the following people are entitled to the style The Honourable :

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

வீழ்க சம்பந்தர் ஐயா
இப்படி ஒரு அறிக்கையை வேறு இந்தத் தமிழனால் விட  முடியும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, முனிவர் ஜீ said:

 ம் லைக்காவுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும் இன்னும் நிறைய வீடுகள் கட்டிக்கொடுங்கோ மக்களுக்கு  

( இந்த தொகுப்பாளர்கள் வேண்டாம் நிகழ்ச்சி) )  

உதவி மனப்பான்மை உள்ளவன் விளம்பரத்தை விரும்பமாட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

உதவி மனப்பான்மை உள்ளவன் விளம்பரத்தை விரும்பமாட்டான்.

நிகழ்வை தொகுத்து வழங்க தெரியாதவ்ரகள்  அந்த நிகழ்ச்சி த்குப்பை வழங்கிய  மூன்று பெண்கள் 

42 minutes ago, முனிவர் ஜீ said:

நிகழ்வை தொகுத்து வழங்க தெரியாதவ்ரகள்  அந்த நிகழ்ச்சி த்குப்பை வழங்கிய  மூன்று பெண்கள் 

 

[5:55] அவர்களினால் முதல் முதலாக பொங்கல் நிகழ்த்தப்பட்டு ...

Edited by Knowthyself

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Knowthyself said:

 

[5:55] அவர்களினால் முதல் முதலாக பொங்கல் நிகழ்த்தப்பட்டு ...

எல்லாம் பட்டு  பட்டாக முடிகிறது   கலாச்சாரமான முறையில் என்று  டெனிம் ரவுசர் டீ சேட்  சரி நமக்கேன் வம்பு சுதந்திரம் 

42 minutes ago, முனிவர் ஜீ said:

எல்லாம் பட்டு  பட்டாக முடிகிறது   கலாச்சாரமான முறையில் என்று  டெனிம் ரவுசர் டீ சேட்  சரி நமக்கேன் வம்பு சுதந்திரம் 

இப்பதான் கவலையாகவுள்ளது, இவர்கள் அருமையான போராட்டத்திலிருந்தும் போராளிகளிடமிருந்தும் ஒன்றையும் கற்கவில்லை. 

இப்படியான கஞ்சல் கானொளிகளை யாழில் பதிவதை தவிர்த்தால் நல்லது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.