Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை என்னும் பூங்காற்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

" உயர்தர பரீட்சை எடுத்தவுடன் ண்பர்களுடன் ஊர் சுற்றி  திறியும் பொழுது , இப்ப இருப்பது போல் கையடக்க தொலைபேசி ஒன்றுமில்லைதானே ஆனபடியால் நாலுக்கும் நாலரை மணிக்குமிடையில் எல்லோரும் பாடசாலை முன்றலில் ஒன்றுகூடுவோம் ,குறைந்தது ஐந்து சைக்கிளில் நண்பர்களுடன் ஊர் உலாத்தலுக்கு வெளிக்கிடுவோம் முதலில் போவது மருதடிக்கு .சைக்கிளை எம் மீது சாய்த்துக்கொண்டு மருதடியானை வணங்குவோம் உள் சென்று தரிசிப்பதை தவிர்த்து கொள்வோம் ,வேறு  தரிசனங்கள் செய்வதற்காக.,.சந்தனம்,விபூதி மறக்காமல் பூசிகொள்வோம் காரணம் வீட்டை போகும் பொழுது அம்மா கேட்டால் பள்ளிகூடத்தில விளையாடிவிட்டு, கோவிலுக்கு  போயிற்று வாறோம் என்று சொல்லி நல்ல பிள்ளைகள் என்று பெயர் எடுப்பதற்காக  அந்த திருவிளையாடலை செய்வோம்..

நாலு திசையும் தரிசனம் செல்வோம் .சில நாட்களில் இரண்டு திசைகள் தான் சாத்தியப்படும் தரிசிக்க வேண்டிய ஆட்கள் அதிகமாக இருப்பதால்.தரிசிக்க வேண்டிய ஆட்களின் இயற்பெயர்களை சொல்லி தரிசிக்க செல்வதில்லை பட்ட பெயர்களை சொல்லி தான் செல்வது வழக்கம்.இயற்பெயர் சொல்லாமைக்கு முக்கிய காரணம் காலாச்சார காவலர்களின் இருட்டடிக்கு ஆளாக வேண்டும் என்ற பயம். முடி கட்டையாக வெட்டியிருந்தால் "கிப்பி",முடியை அவிட்டு விட்டிருந்தால் "சடைச்சி",முடி  சுருளாக இருந்தால் "சுருளி",ஆள் வெள்ளையாக்விருந்தால் "கோதுமை", முகத்தில் புள்ளியிருந்தால் "புள்ளி", கட்டையாகவும் கொஞ்சம் மொத்தமாகவும் இருந்தால்" வாத்து "அல்லது "தாரா" , நாங்கள் கிண்டல் பண்ண அவர்கள் முறைத்து பார்த்தால் "காளி", எதிர்த்து கதைத்தால் "வாயாடி"அல்லது "கறிக்காரி"இப்படி அழகாக பட்டங்களை சூட்டி..  கெளரவித்து... மகிழ்வது எங்களது வழக்கம்.

அப்படி ஊர் சுற்றிதிருந்தவர்கள் அநேகர் சொந்தநாட்டிலேயே பட்டங்கள் பெற்று புலம் பெயர்ந்து விட்டார்கள் .இன்னும் சிலர் புலர் பெயர்ந்த பின்பு பட்டங்கள பெற்றார்கள்...சிலர் பட்டங்கள் பெறாமலே வாழ்க்கையை கொண்டு போகிறார்கள். இப்பொழுது அவ‌ர்களில்  அநேகர் ஐம்பது வயதை தாண்டிவிட்டார்கள்.

வட்ஸப்பில்...குறுந்தகவல் வந்துள்ளது என கைத்தொலைபேசி மின்னிமின்னி அறிவித்தது. செய்தியை படித்தான்.

"மீட் அட் த ரெஸ்டொரன்ட்  அட் சிக்ஸ்"

 லண்டனிலிருந்து வந்திருக்கும் நண்பனை சந்திப்பது என்று ஏற்கனவே முடிசெய்திருந்தார்கள் ஆனால் இடம் தெரிவு செய்வில்லை தற்பொழுது தெரிவு செய்துவிட்டு குகன் குறுந்தகவல் அனுப்பியிருக்கிறான். சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு குறுந்தகவல் வந்தது.ரெஸ்டொரன்டில் கார் பார்க் வசதி குறைவாக இருக்கும் தன்னையும் வந்து அழைத்து செல்லுமாறு கேட்டிருந்தான் குகன்.

காரை பார்க் பண்ணிவிட்டு லண்டன் நண்பனை ஒடி போய்கட்டிபிடித்து நீண்ட நாட்களின் பின்பு சந்தித்தது மகழ்ச்சி என்று ரஜனி ஸ்டைலில் அன்பை தெரிவித்தேன்.

"இத்தாலியன்,இந்தியன் ,தாய்,சைணிஸ் எந்த ரெஸ்ரோர‌ன்ட்டிற்கு போகப்போறீயள்"

"மலேசியனுக்கு புக் பண்ணிபோட்டேன் அதை கான்சல் பண்ணுவோமா".

எல்லோருமாக‌ மலேசியனுக்கு போவதாக முடிவெடுத்தோம்.

 மலேசியன் பணிப்பெண் வரவேற்றாள்.

 "எத்தனை பேர்"

"ஐந்து பேர் "

மேசையை காட்டியவள் மெணுப்புத்தகத்தையும் தந்து சென்றாள்.

கலர் கலராக படங்கள் ஒவ்வோரு சாப்பாட்டுக்கும் ஓவ்வோரு பெயர்கள்,சாப்பாட்டை தெரிவு செய்வதே ஒரு குழப்பமாக இருந்தது.

ஆல் இன் ஆல் கந்தர்.

 கந்தையா கடையில் கந்தர் அரைக்கை பெனியனுடன் சார்த்தை மடிச்சு கட்டிக்கொண்டு டி மாஸ்டர்,கசியர்,சேவர் மூன்று வேலையும் பாரத்துகொள்வார் ஆல் இன் ஆல் கந்தர். அவரின்ட கடைக்குள் போனால் மூன்று வடை இரண்டு போன்டா ஒவ்வொரு தடவையும் இதை தான் கொண்டு வந்து வைப்பார்.பத்து பேர் போனாலும் அதே அளவுதான் ஐந்து பேர் போனாலும் அதுதான் அவரின் கணக்கு. அண்ணே டீ என்று மேசையிலிருந்து கத்துவோம் ஐந்து பேர் போனால் மூன்று பேருக்கு போட்டுமேலதிகமாக‌ இரண்டு கிளாஸும் கொண்டுவந்து வைப்பார். அவருக்கு தெரியும் எங்களது பொருளாதார நிலமை.

IMG_1462.jpg

படம் காப்புரிமை ஜீவன் சிவா

கடைக்கு முன்னால் கண்ணாடி அலுமாரியுண்டு அதில் இடியப்பம்,புட்டு,இரண்டுவிதமான வடை உழுந்து வடை ,கடலை வடை  ,போன்டா,சூசியம் இதுதான் அவரின் ஒவ்வொரு நாளைய மெணு.இவற்றுடன் சிகரட்டும் சுருட்டும் கல்லாவிற்கு பக்கத்தில் வைத்திருப்பார். பழைய செய்திதாளை வெட்டி கத்தையாக கட்டி தொங்கவிட்டிருப்பார்.அதுதான் செவியட்.

 கடைக்குள்ளிருந்து சிகரட்டும் தேனீரும் அருந்தும் ஐயா மாரை பார்த்தவுடன் நண்பர்களுக்கும் அந்த எண்ணம் வந்து ,தம் அடிக்க சுத்தந்திரம் கிடைக்கவில்லையே என்று புறு புறுத்தபடி ஒதுக்குப்புறம் தேடுவார்கள்...ஆரம்பகாலங்களில் திருட்டு தம் அடிக்க கல்லுண்டை வெளிவரை சென்றிருக்கிறோம்.சிகரட் வாங்குவதில் எங்களுக்கு கொஞ்சம் தயக்கம் யாராவது பெரிசுகள் வீட்டாருக்கு சொல்லி போடுவார்கள் என்ற பயம். ,தம் அடிக்க வேணும் என்று ஒரு சிலருக்கு ஆசை ஆனால் பல‌ உத்தம புத்திரர்களுக்கு விருப்பமிருக்காது.தம் அடிக்கிற கோஸ்டிகள் ஒசியில் பிளேன் டி குடிச்சு போட்டு அந்த காசுக்கு சிகரட் ஒன்று இரண்டை  வாங்கி பொக்கற்றில் வைத்து கொண்டு மறைவிடம் தேடி ஒதுங்குவார்கள். உந்த சிகரட்டிலும் தராதரம் இருந்தது கண்டியளோ மிகவும் மலிவானது வோர் எசஸ்,பிறகு திரி ரோசஸ்,பிரிஸ்டல், விலை உயர்ந்தது கொல்ட்லீவ். மால்பரொ என்ற ஒரு பிராண்ட்டிருந்தது அதை கொழும்புக்கோஸ்டிகள் தான் அதிகம் பாவிப்பினம்.25 சதத்திற்கு   இரண்டு வொர் எசஸ் சிகரட் வாங்கலாம். இப்படிதான் நானும் தம் அடிச்சு பார்ப்போம் என்று ஒன்றை வாயில வைச்சு இழுத்தேன் பிரக்கடிச்சு கண்னிலிருருந்து கண்ணீர் வரத்தொடங்கி விட்டது.வாயும் ஒரு கச்சலாக இருந்தது .அதன்பின்பு சிகரட்டை கைவிட்டு கள்ளை தழுவிகொண்டேன்.

"நண்பர்களை கண்ட சந்தோசம் பழைய கந்தர் கடை என நினைத்து "அண்ணே ஒடர் ரெடி"

என்று கத்த வாய் வந்தது இருந்தும் சுதாகரித்துகொண்டேன் .

மேசைக்கு அருகிலிருந்த மணியை அடிக்க நவீன கருவியுடன் வந்தவள்

"ஒர்டெர் பிளிஸ்" என்றாள்

ஐந்து பேரும் ஐந்து விதமான உணவு வகைகளை ஒடர் கொடுத்தோம்.

prawn mee, prawn noodles

ஒரு நண்பன் சொன்னான் ஐந்து பிளேட் எடுத்து ஐந்து விதமான சாப்பாடுகளையும் எல்லொரும் பகிர்ந்து உண்போம் என்று, அவன் விருப்பபடி பகிர்ந்துண்டோம்.

 சலாட்டுக்குள்ளிருந்த தக்காளி துண்டை முள்ளுக்கரண்டியால் கூத்தி எடுத்தபடியே

"எங்களோட படிச்ச தக்காளி இப்ப எங்கயடாப்பா"

"அவள் இப்ப கனடாவில் இருக்கிறாள்,இரண்டு  மகள் மெடிசின் செய்யினம்"

"மனிசிமார் பக்கத்தில இல்லை என்ற துணிவில பழைய காய்களை பற்றி கதைக்கிறீயள் "

"மனிசிக்கு நான் எல்லா கதையும் சொல்லி போட்டன்,"

"நீ என்ன தக்காளியை காதலிச்சனீயோ"

"நான் காதலிச்சனான் அவள் காதலிக்கவில்லை இரண்டு மூன்று லவ் லெட்டர் கொடுத்தனான் அவள் வாசிக்காமல் கிழிச்சுபோட்டாள்"

"பிறகு ஏன்டா அவளின்ட சரித்திரத்தை இப்பவும் அறிஞ்சு வைச்சிருக்கிறாய்"

"I don't know....I think that's also a kind of love"

தக்காளி,முருங்கை ,வாத்து,கிப்பி,காளி எல்லோரினதும் அப்டெட் வந்து போயின.

பில் கொண்டு வந்தாள் எல்லோரும் போட்டி போட்டு கொண்டு கொடுக்க போனோம் ,எதை எடுப்பது என்பது காசாளருக்கு பெரிய தலையிடியாக இருந்திருக்கும்.கடைசியில் ஒருத்தர் வெற்றி பெற்றார்.

வெளியே சிகரட் பிடித்துக்கொண்டு இருவர் நின்றனர்.மூக்கை மற்ற பக்கம் திருப்பிகொண்டு எல்லோரும் சென்றோம்.பப்ளிகா சிகரட் பிடிக்கிறதை தடை செய்ய வேணும் எண்டு பேசிய படி நடந்து செல்லும் பொழுது பப்புக்கு வெளியே மது கிண்ணத்துடன் ஆண்கள் பெண்கள் வயது வித்தியாசமின்றி இயற்கையை ரசித்தபடி இருந்தனர்.

நாம் அதையும் தாண்டி எமது காரை நோக்கி சென்றோம்...

இளமை எனும் பூங்காற்று....என்ற பாடாலை விசிலடித்த படி வீட்டு கதைவை திறந்தேன்

"என்னப்பா 30 வயது குறைந்த மாதிரி துள்ளி கொண்டு வாறீயள்"

அந்த நாள் ஞாபகங்கள் வந்ததே வந்ததே  கண்மணி கண்மணி..

  • கருத்துக்கள உறவுகள்

மலாயன் கஃபே வடையையும் வாழை இலையையும் கண்ட உடனே பழைய ஞ<பகங்கள் வந்திட்டுதாக்கும் .....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

பழைய காய் கனிகளை மறக்கால் வைத்து இருக்குறியளே  அதுவும் அந்த பட்டங்கள் சூப்பர் புத்தன்  எங்களின் பங்குக்கு நாங்கள் வைத்தது அப்பம்,  பின்னல் , வண்டு ,  இன்னும் பல இருக்கு எல்லாம் அடுத்தவன் தோட்டத்து மலராக tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, putthan said:

 "நான் காதலிச்சனான் அவள் காதலிக்கவில்லை இரண்டு மூன்று லவ் லெட்டர் கொடுத்தனான் அவள் வாசிக்காமல் கிழிச்சுபோட்டாள்"

உங்கை கனபேர் கவனிக்க வேண்டிய வசனம் .:cool:

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, putthan said:

இயற்பெயர் சொல்லாமைக்கு முக்கிய காரணம் காலாச்சார காவலர்களின் இருட்டடிக்கு ஆளாக வேண்டும் என்ற பயம். முடி கட்டையாக வெட்டியிருந்தால் "கிப்பி",முடியை அவிட்டு விட்டிருந்தால் "சடைச்சி",முடி  சுருளாக இருந்தால் "சுருளி",ஆள் வெள்ளையாக்விருந்தால் "கோதுமை", முகத்தில் புள்ளியிருந்தால் "புள்ளி", கட்டையாகவும் கொஞ்சம் மொத்தமாகவும் இருந்தால்" வாத்து "அல்லது "தாரா" , நாங்கள் கிண்டல் பண்ண அவர்கள் முறைத்து பார்த்தால் "காளி", எதிர்த்து கதைத்தால் "வாயாடி"அல்லது "கறிக்காரி"இப்படி அழகாக பட்டங்களை சூட்டி..  கெளரவித்து... மகிழ்வது எங்களது வழக்கம்.-----

 கந்தையா கடையில் கந்தர் அரைக்கை பெனியனுடன் சார்த்தை மடிச்சு கட்டிக்கொண்டு டி மாஸ்டர்,கசியர்,சேவர் மூன்று வேலையும் பாரத்துகொள்வார் ஆல் இன் ஆல் கந்தர். அவரின்ட கடைக்குள் போனால் மூன்று வடை இரண்டு போன்டா ஒவ்வொரு தடவையும் இதை தான் கொண்டு வந்து வைப்பார்.பத்து பேர் போனாலும் அதே அளவுதான் ஐந்து பேர் போனாலும் அதுதான் அவரின் கணக்கு. அண்ணே டீ என்று மேசையிலிருந்து கத்துவோம் ஐந்து பேர் போனால் மூன்று பேருக்கு போட்டுமேலதிகமாக‌ இரண்டு கிளாஸும் கொண்டுவந்து வைப்பார். அவருக்கு தெரியும் எங்களது பொருளாதார நிலமை.

கடைக்கு முன்னால் கண்ணாடி அலுமாரியுண்டு அதில் இடியப்பம்,புட்டு,இரண்டுவிதமான வடை உழுந்து வடை ,கடலை வடை  ,போன்டா,சூசியம் இதுதான் அவரின் ஒவ்வொரு நாளைய மெணு.இவற்றுடன் சிகரட்டும் சுருட்டும் கல்லாவிற்கு பக்கத்தில் வைத்திருப்பார். பழைய செய்திதாளை வெட்டி கத்தையாக கட்டி தொங்கவிட்டிருப்பார்.அதுதான் செவியட்.----

ஊரில்... பட்டப் பெயர் வைப்பது வழமை என்றாலும், இவ்வளவு காலமும்  அதனை மறக்காமல் நினைவு வைத்துள்ளது ஆச்சரியமாக மாக உள்ளது.
ஊரில் உள்ள தேனீர் கடையை... மீண்டும் கண் முன்னே கொண்டு வந்த காட்சிகள் மிக அழகு புத்தன்.:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, suvy said:

மலாயன் கஃபே வடையையும் வாழை இலையையும் கண்ட உடனே பழைய ஞ<பகங்கள் வந்திட்டுதாக்கும் .....!  tw_blush:

அதே: அத்துடன் எனது நண்பன் லண்டனிலிருந்து வந்திருந்தார் இரண்டையும் சேர்த்து ஒரு சிறு கற்பனை

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்....ஒரு படைப்பாளியின் ஊக்கசத்து  பச்சைகளும் பாராட்டுக்களும் :10_wink:

7 hours ago, முனிவர் ஜீ said:

பழைய காய் கனிகளை மறக்கால் வைத்து இருக்குறியளே  அதுவும் அந்த பட்டங்கள் சூப்பர் புத்தன்  எங்களின் பங்குக்கு நாங்கள் வைத்தது அப்பம்,  பின்னல் , வண்டு ,  இன்னும் பல இருக்கு எல்லாம் அடுத்தவன் தோட்டத்து மலராக tw_blush:

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் ...எல்லா தோட்டத்து மலரும் பூத்து குழுங்கட்டும்:10_wink:

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஜி.சி.இ, ஓ/எல் படிக்கும்போது மகேந்திரா மாஸ்டரின் (எலியர்)  வகுப்பு. நான் புத்தகத்துள் "காதம்பரி" என்றொரு புத்தகம் வைத்துப் படித்துக் கொண்டிருந்தேன். அவர் கண்டுட்டார். அப்படியே என் காதில பிடித்து முறுக்கி இஞ்ச வா காதம்பரி என்று இழுத்துக் கொண்டு போய் பிளாக் போட்டுக்கு முன்னால் புத்தகத்தை தலையில வைத்துக் கொண்டு நிக்க விட்டார். அன்றில் இருந்து நான் போகும் இடமெங்கும் அசரீரியாக காதம்பரி என்ற பெயர் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஒரு பயலும் கண்ணில தென்பட மாட்டான்.....!  :rolleyes:  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, suvy said:

இனி சுவியை நாம் காதம்பரி என்று யாழில் .................

  • கருத்துக்கள உறவுகள்

 இளமை  காலத்தை ஆசை போட்டுப் பார்ப்பதும் ஒரு வகை சுகம்.  பகிர்வுக்கு நன்றி

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

பழைய ஞாபகம் புத்தனையம் விட்டுவைக்கவில்லை... ஆமா புத்தன் உங்களுக்கு பெண்கள் பக்கம் இருந்து என்ன பட்டம் வைத்திருந்தார்கள் அதையும் எழுதினாத்தானே சுவார்சியமாக இருக்கும்.....தெரியாது என்றால் உங்களுடைய விடலைப் பருவப்புகைப்படம் ஒன்றை இங்கு இணைத்து விடுங்கள் நாங்கள் கெஸ்ப் பண்ணிக் கொள்கிறோம். :):cool:

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இளமைக்கால இனிமையான நினைவுகளை எடுத்துவந்து அனைவரையும் கனவுகளில் மிதக்கவைத்த புத்தனின் ஆக்கம் மிக அருமை. மீண்டும் வராத அந்த வசந்தகால நினைவுகளில் வசமாகா இதயமேது?

  • கருத்துக்கள உறவுகள்
On 4/23/2017 at 9:01 AM, putthan said:

முடி கட்டையாக வெட்டியிருந்தால் "கிப்பி",முடியை அவிட்டு விட்டிருந்தால் "சடைச்சி",முடி  சுருளாக இருந்தால் "சுருளி",ஆள் வெள்ளையாக்விருந்தால் "கோதுமை", முகத்தில் புள்ளியிருந்தால் "புள்ளி", கட்டையாகவும் கொஞ்சம் மொத்தமாகவும் இருந்தால்" வாத்து "அல்லது "தாரா" , நாங்கள் கிண்டல் பண்ண அவர்கள் முறைத்து பார்த்தால் "காளி", எதிர்த்து கதைத்தால் "வாயாடி"அல்லது "கறிக்காரி"இப்படி அழகாக பட்டங்களை சூட்டி..  கெளரவித்து... மகிழ்வது எங்களது வழக்கம்.

புத்தன் பாடசாலை வாழ்வு என்பது ஆணோ பெண்ணோ எவராக இருந்தாலும் எந்த ஒரு காலமும் மறக்கமாட்டார்கள்.அந்த அளவுக்கு நெஞ்சிலே பதியும் அளவுக்கு ஒவ்வொருவருக்கும் பல சம்பவங்கள் நடந்திருக்கும்.

இன்னும் முக்கியமாக ஆசிரியர்களில் இருந்து மாணவர்கள் வரை பலருக்கும் பட்டப் பெயர்கள் இருக்கும்.சிலருக்கு அதுவே நிரந்தரமாகி உண்மையான பெயரைச் சொன்னால் பலருக்கு ஆளைத் தெரியாது.

சரி உங்களது பட்டப் பெயர் என்னவோ?

நான் முதன் முதல் புகைக்க தொடங்கியது பத்மா கபேயில் (யாழ் இந்து) மற்றகோன்.9ம் வகுப்பு அந்தநேரம் பிறெப் என்று சொல்வது இப்ப அந்த வகுப்பு இருக்கோ தெரியாது.இப்ப தொடங்கியது நாள் போக பிறிஸ்டலில் நிரந்தரமாகி 40 வயதில் நெஞ்சுக்குள் இரும்பு வலை வைக்கும் வரை தொடர்ந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நனவிடை தோய்தல் மத்திய வயதைத் தாண்டும்போது எல்லோருக்கும் சம்பவிக்கின்றதா??

இளமை கால நினைவுகள் பசுமையாக இருக்கும் என்பதை இப்போதைய  வாட்ஸ் குறூப்களின் சாற்றிங்களில் இருந்து நானும் கண்டுகொண்டேன். ?

  • கருத்துக்கள உறவுகள்

பழைய நினைவுகள் எல்லாருக்கும் நினைவு தடுமாறும்வரை வந்துபோகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 24/04/2017 at 11:40 AM, குமாரசாமி said:

உங்கை கனபேர் கவனிக்க வேண்டிய வசனம் .:cool:

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

On 24/04/2017 at 1:01 PM, தமிழ் சிறி said:

ஊரில்... பட்டப் பெயர் வைப்பது வழமை என்றாலும், இவ்வளவு காலமும்  அதனை மறக்காமல் நினைவு வைத்துள்ளது ஆச்சரியமாக மாக உள்ளது.
ஊரில் உள்ள தேனீர் கடையை... மீண்டும் கண் முன்னே கொண்டு வந்த காட்சிகள் மிக அழகு புத்தன்.:)

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கு நன்றிகள் தமிழ்சிறி .அந்த தேனீர்கடையை இந்ததடவை தேடினேன் கிடைக்கவில்லை

On 25/04/2017 at 5:06 AM, நிலாமதி said:

 இளமை  காலத்தை ஆசை போட்டுப் பார்ப்பதும் ஒரு வகை சுகம்.  பகிர்வுக்கு நன்றி

இளமை காலம் ஒரு அற்புதம் ...வருகைக்கும் கருத்து பகிர்வுக்கு நன்றிகள் நிலாமதி

On 25/04/2017 at 7:15 AM, வல்வை சகாறா said:

பழைய ஞாபகம் புத்தனையம் விட்டுவைக்கவில்லை... ஆமா புத்தன் உங்களுக்கு பெண்கள் பக்கம் இருந்து என்ன பட்டம் வைத்திருந்தார்கள் அதையும் எழுதினாத்தானே சுவார்சியமாக இருக்கும்.....தெரியாது என்றால் உங்களுடைய விடலைப் பருவப்புகைப்படம் ஒன்றை இங்கு இணைத்து விடுங்கள் நாங்கள் கெஸ்ப் பண்ணிக் கொள்கிறோம். :):cool:

பெண்கள் எனக்கு பட்டம் வைப்பதற்கு ஏற்ற கீரோவாக இருக்கவில்லை ...ஆனால் "கோசப்பங்கள்" என்று சொல்லுவார்கள்....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கு நன்றிகள் வல்வை.....

On 25/04/2017 at 9:19 AM, Kavallur Kanmani said:

இளமைக்கால இனிமையான நினைவுகளை எடுத்துவந்து அனைவரையும் கனவுகளில் மிதக்கவைத்த புத்தனின் ஆக்கம் மிக அருமை. மீண்டும் வராத அந்த வசந்தகால நினைவுகளில் வசமாகா இதயமேது?

உண்மையிலயே இளமைக்காலம் ஒரு வசந்தகாலம் தான்...வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/04/2017 at 10:56 AM, ஈழப்பிரியன் said:

சரி உங்களது பட்டப் பெயர் என்னவோ?

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கு நன்றிகள் ஈழப்பிரியன்...பாடசாலை காலத்திலும் எனது பட்டப்பெயர் புத்தன் தான்.....:10_wink:

On 26/04/2017 at 4:29 PM, கிருபன் said:

நனவிடை தோய்தல் மத்திய வயதைத் தாண்டும்போது எல்லோருக்கும் சம்பவிக்கின்றதா??

 ?

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கு நன்றிகள்.....கிருபன் ...மத்திய வயதினர் முதுமைக்கு போகமல் இருப்பதற்காக இளமையை திரும்பி பார்க்கின்றனர்.:10_wink:

12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பழைய நினைவுகள் எல்லாருக்கும் நினைவு தடுமாறும்வரை வந்துபோகும்.

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கு நன்றிகள்...சுமே..உண்மை பழைய நினைவுகள் எல்லாருக்கும் நினைவு தடுமாறும்வரை வந்துபோகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

  1. மெசொபொத்தேமியா சுமேரியர்

  2. Sabesh

  3. கிருபன்

  4. தமிழினி

  5. Athavan CH

  6. தமிழ் சிறி

  7. ஈழப்பிரியன்

  8. Kavallur Kanmani

  9. வல்வை சகாறா

  10. Paanch

    பெருமாள்
  11. நவீனன்

  12. நந்தன்

  13. குமாரசாமி

  14. புங்கையூரன்

    பச்சை புள்ளிகள் வழங்கியும் கருத்து எழுதி ஊக்கபடுத்தும்,சகலருக்கும் நன்றிகள்

.

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்...இண்டைக்குத் தான் உங்கட கதையை ஆறுதலாக வாசித்துச் சீரணிக்கக் கூடியதாக இருந்தது!

அந்தக் காலத்தில பெரிய ..பிரளிக் காரராய் இருந்திருப்பீங்கள் போல கிடக்கு!:113_tongue:

எங்களுக்கு...விடுதிகளில் இருந்த படியால இப்படியான சுதந்திரங்கள் வலு குறைவு!

இருந்தாலும் நல்லூர்த் திருவிழா காலத்திலை எங்கடை விளையாட்டுக்களைக் காட்டத் தவறுவதில்லை!

இந்து மகளிர் கல்லூரி பக்கம் அவ்வளவாக வாலாட்டுவதில்லை! 

ஒரே காரணம்...சபாலிங்கத்தார் வீடு... கல்லூரிக்கு முன்னாலை இருந்தது தான்! வேற ஒரு விஷேச காரணமும் இல்லை!

எங்கட காலத்தில....ராசையா என்று ஒரு இஞ்சுப்பெக்ரர் இருந்ததாக நினைவு! ஆள் வட்டுக்கோட்டைப் பக்கம்!

சைக்கிளுகளுக்குக் காத்துத் திறந்து விடுகிறது....பெட்டையள் பக்கம் திருவிழாவிலை போனால்...எங்களைக் கூப்பிட்டு முழங்காலில விடுகிறது போன்ற வேலைகளைச் செய்வதில் இவருக்கு வலு சந்தோசம்!

ஆனால்...ஒரு நாள்...மோட்டர் சைக்கிளில் இருந்து..கள்ளமாய் (போலிஸ் ஸ்டேசனில் அடித்த பெற்றோலை) விக்கிற நேரம் எங்களின்ர குறுப்பிட்டை, எக்கச் சக்கமாய்ப் பிடி பட்டுப் போனார்! (தமிழன் தானே...இந்தக் கள்ளக் குணமும் இல்லாவிட்டால்..எப்படி ஸ்டேட்டஸை மெயின்ரைன் பண்ணுறதாம்)

எங்கை ...எப்பிடிப் பிடிபட்டார் என்ற கேள்விகள் கேட்கக் கூடாது!

மொத்தத்தில்...இன்னுமொரு புத்தனின் அனுபவக் கதை...!

வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
On 24.4.2017 at 11:15 PM, வல்வை சகாறா said:

பழைய ஞாபகம் புத்தனையம் விட்டுவைக்கவில்லை... ஆமா புத்தன் உங்களுக்கு பெண்கள் பக்கம் இருந்து என்ன பட்டம் வைத்திருந்தார்கள் அதையும் எழுதினாத்தானே சுவார்சியமாக இருக்கும்.....தெரியாது என்றால் உங்களுடைய விடலைப் பருவப்புகைப்படம் ஒன்றை இங்கு இணைத்து விடுங்கள் நாங்கள் கெஸ்ப் பண்ணிக் கொள்கிறோம். :):cool:

ஆகா.... அருமையான கேள்வி...  வல்வை சகாறா.
இந்தக் கோணத்தில், நாங்கள் சிந்திக்கவேயில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 25.4.2017 at 2:56 AM, ஈழப்பிரியன் said:

நான் முதன் முதல் புகைக்க தொடங்கியது பத்மா கபேயில் (யாழ் இந்து) மற்றகோன்.9ம் வகுப்பு அந்தநேரம் பிறெப் என்று சொல்வது இப்ப அந்த வகுப்பு இருக்கோ தெரியாது.இப்ப தொடங்கியது நாள் போக பிறிஸ்டலில் நிரந்தரமாகி 40 வயதில் நெஞ்சுக்குள் இரும்பு வலை வைக்கும் வரை தொடர்ந்தேன்.

அட.... ஈழப்பிரியன், கிட்ட நெருங்கி விட்டார் போலுள்ளது.
"பத்மா கபே"  மனோகரா தியேட்டர்  சந்தியில் இருந்தது தானே.  

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

அட.... ஈழப்பிரியன், கிட்ட நெருங்கி விட்டார் போலுள்ளது.
"பத்மா கபே"  மனோகரா தியேட்டர்  சந்தியில் இருந்தது தானே.  

இல்லையே சிறி கல்லூரிக்கு அருகாமையில் இருந்தது.கே கே எஸ் வீதியைக் கடந்தால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

இல்லையே சிறி கல்லூரிக்கு அருகாமையில் இருந்தது.கே கே எஸ் வீதியைக் கடந்தால் சரி.

ஓமோம்..... ஈழப் பிரியன்.  கல்லூரியின், பிரார்த்தனை மண்டபத்துக்கு, எதிரில்  இருக்கும் கடை.
இடைக்கிடை.... அங்கு,  மதிய  சாப்பாட்டு  இடைவேளையின் போது....  
சக  நண்பர்களை... "காய் வெட்டி விட்டு,"  :D:
வெள்ளை இடியப்பமும், சொதியும், சம்பலும்  சாப்பிடப் போவேன்.

கையில் பணம் புழங்கினால்...  
மனோகரா சந்தியில் உள்ள கடையில் (பெயர் நினைவு வரவில்லை), நண்பர்களுடன்... சாப்பிட்டு,  சிகரெட்  பத்துவோம். :)

இன்னுமொரு கடை... விளையாட்டு  மைதானத்தில் உள்ள, வைரவர் கோவிலுக்கு அருகில், 
கஸ்தூரியார் வீதியில், இருந்தது. அதில் விற்கும்...  (25 சதம்.)  கீரை வடை மிகவும், பெரியது ருசியானது.

பாடசாலைக்  காலங்களில், அம்மா.... எவ்வளவு மினக்கெட்டு, சமைத்து.. சமையல் செய்து தந்தாலும்,
கடை  சாப்பாடுகளையும், சாப்பிட எப்படி மனம் வந்ததோ... என்று. இப்ப... நினைக்க கவலையாக உள்ளது.  

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

கஸ்தூரியார் வீதியில், இருந்தது. அதில் விற்கும்...  (25 சதம்.)  கீரை வடை மிகவும், பெரியது ருசியானது.

சிறி இதே வடை 10 சதத்திற்கு வாங்கி சாப்பிட்டதாகவே ஞாபகம்.

உங்கள் கல்லூரி எதுவோ?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி இதே வடை 10 சதத்திற்கு வாங்கி சாப்பிட்டதாகவே ஞாபகம்.

உங்கள் கல்லூரி எதுவோ?

ஈழப் பிரியன்ஸ்.... :)
எனது கல்லூரி,  "வாழிய.... யாழ் நகர், இந்துக் கல்லூரி"  தான். :18_kissing_heart: tw_heart:
நீங்கள்... பத்து சதத்துக்கு, கீரை வடையை  வாங்கியிருந்தால், எனக்கு, "சீனியர்"  ஆன ஆள். :119_busts_in_silhouette: :24_stuck_out_tongue:
அல்லது... கடைக்காரன், என்னை சின்னப் பெடியன் என்று நினைத்து... tw_warning:
கீரை வடையின் விலையை... உயர்த்தி, என்னை பேய்க் காட்டிப் போட்டார் என்று, நினைக்கின்றேன். :grin:

எதுக்கும்... இந்த வடையை பற்றி, முன்பு... புங்கையூரான்,  சுவியர் ஆகியோரிடம்   உரையாடியதாக நினைவு உள்ளது. :)
அவர்கள்... அந்த நேரம்... கீரை வடை,  என்ன விலை விற்றது என்று, விரல்  நுனியில் கணக்கு வைத்திருப்பார்கள். :grin: :D: 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, புங்கையூரன் said:

###### இருந்தாலும் நல்லூர்த் திருவிழா காலத்திலை எங்கடை விளையாட்டுக்களைக் காட்டத் தவறுவதில்லை!

இந்து மகளிர் கல்லூரி பக்கம் அவ்வளவாக வாலாட்டுவதில்லை! 

ஒரே காரணம்...சபாலிங்கத்தார் வீடு... கல்லூரிக்கு முன்னாலை இருந்தது தான்! வேற ஒரு விஷேச காரணமும் இல்லை!

எங்கட காலத்தில....ராசையா என்று ஒரு இஞ்சுப்பெக்ரர் இருந்ததாக நினைவு! ஆள் வட்டுக்கோட்டைப் பக்கம்!

சைக்கிளுகளுக்குக் காத்துத் திறந்து விடுகிறது....பெட்டையள் பக்கம் திருவிழாவிலை போனால்...எங்களைக் கூப்பிட்டு முழங்காலில விடுகிறது போன்ற வேலைகளைச் செய்வதில் இவருக்கு வலு சந்தோசம்!

ஆனால்...ஒரு நாள்...மோட்டர் சைக்கிளில் இருந்து..கள்ளமாய் (போலிஸ் ஸ்டேசனில் அடித்த பெற்றோலை) விக்கிற நேரம் எங்களின்ர குறுப்பிட்டை, எக்கச் சக்கமாய்ப் பிடி பட்டுப் போனார்! (தமிழன் தானே...இந்தக் கள்ளக் குணமும் இல்லாவிட்டால்..எப்படி ஸ்டேட்டஸை மெயின்ரைன் பண்ணுறதாம்)

எங்கை ...எப்பிடிப் பிடிபட்டார் என்ற கேள்விகள் கேட்கக் கூடாது!

மொத்தத்தில்...இன்னுமொரு புத்தனின் அனுபவக் கதை...!

வாழ்த்துக்கள்!

புங்கை......  :)  tw_heart:
சபாலிங்கத்தாரின் வீடு, யாழ். இந்து மகளிர் கல்லூரியின் முன்பாக,  அரசடி  வீதியில் இருந்தது.  :grin:

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.