Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 3k
  • Views 276.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினிக்கு சொந்தமாக சிந்திக்க மூளை இல்லை; அவருக்கு மோடி தான் இயக்குநர்: சீமான் விமர்சனம்

Published :  11 Apr 2019  13:01 IST
Updated :  11 Apr 2019  13:01 IST
நாகப்பட்டினம்
 
downloadjpg

ரஜினிகாந்த் - சீமான்: கோப்புப்படம்

ரஜினி நடிகர்,  மோடி இயக்குநர் என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து சமீபத்தில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நதிநீர் இணைப்பு திட்டத்தை வரவேற்றார்.

ரஜினியின் இந்த வரவேற்பை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

நாகையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து நேற்று (புதன்கிழமை) சீமான் பேசியதாவது:பாஜகவின் தேர்தல் அறிக்கையில் புதிதாக திட்டங்கள் ஏதேனும் இருக்கிறதா? மோடி சொல்வது ரஜினிக்கு மட்டுமே புரிகிறது. பாஜக தேர்தல் அறிக்கையை ரஜினி வரவேற்றிருக்கிறார். ரஜினி நடிகர்; மோடி இயக்குநர். இயக்குநர் சொல்வதை நடிகர் கேட்டுத்தான் ஆக வேண்டும். ரஜினிக்கு சொந்தமாக சிந்திக்க மூளை இல்லை"

இவ்வாறு சீமான் பேசினார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article26803567.ece

Edited by ஏராளன்
space reduce

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் கருத்துக்கணிப்பு 😀

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

😂👌

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு ஆதரவு 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👌👌👌

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ் மீனவனை அழித்து வரும் இந்திய பாராளுமன்றத்தில் தோழர் காளியம்மாவின் பேச்சு அதிர வேண்டும்...

அவர் வெற்றி பெற வாழ்த்துவோம்!

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீரெட்டிகிட்ட விட வேண்டிய சவாலை சீமான் கிட்ட விடுவதா?”...ராகவா லாரன்ஸை சந்தி சிரிக்க வைக்கும் தயாரிப்பாளர்...

lawrance.jpg

சவால் விடணும்... மோதிப் பார்க்கணும்னா நீங்க சவால் விட வேண்டியது ஸ்ரீரெட்டிகிட்டதான்...அவங்க சொன்ன குற்றச்சாட்டுக்கு முதல்ல பதில் சொல்லுங்க... அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க லாரன்ஸ்... அதை விட்டுட்டு சீமான் கிட்ட  வந்து ஏன் முட்டணும்” என்று படு காரசாரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் பிரபல தயாரிப்பாளரும் நாம் தமிழர் கட்சிப் பிரமுகருமான சுரேஷ் காமாட்சி.

அவரது அறிக்கை இதோ...நண்பர், நடன இயக்குநர், இயக்குநர், நடிகர் திரு. ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு, முகவரியற்ற ஒரு கடிதத்தை நேற்று சூசகமாக எடுத்தாள விடுகிறேன் பேர்வழி எனக் கருதிக்கொண்டு பளிச்சென்றே பரப்பி விட்டிருந்தீர்கள். நல்லது. இதற்கு நீங்கள் பெயர் போட்டு, முகவரியிட்டு நேரடியாகவே செய்தியாக்கியிருக்கலாம்.

அதனால் அண்ணன் சீமானுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடப்போவதில்லை. கருத்தியல் ரீதியான பல எதிர்மறைக் கேள்விகளை தன் பொதுவாழ்வில் சந்தித்தும்... பதிலளித்துமே வருகிறார். ஓடி ஒளிந்ததில்லை.

இந்தக் கடிதம் அவர் பதில் சொல்லுமளவிற்கு தகுதியில்லாததாலும்... ஏதோ ரெண்டாங் கிளாஸ் பிள்ளை... மிஸ் இவன் என்னை கிள்ளி வச்சிட்டான் மிஸ்ஸுன்னு சொல்ற அளவு அமெச்சூராக இருந்ததாலும்...அண்ணனுக்கு பதிலாக அவரின் எண்ணற்ற தம்பிகளுள் ஒருவனான சுரேஷ் காமாட்சி என்கிற நானே இதற்கு பதில் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன்...

lawrance.jpg

அதுசரி... எச்சரிக்கையும் சவாலும் விடுமளவிற்கு என்னதான் நடந்தது? அப்படி எங்குதான் உங்களிடம் சீமானின் தம்பிகள் மோதினார்கள்? ஒன்றும் புரியவில்லை. நான் பத்திரிகை, தொலைக்காட்சி, முகநூல், ட்விட்டர், வலைதளங்கள், எல்லாவற்றிலும் வரக்கூடிய செய்திகளில் அப்டேட்டாக இருப்பவன். எனக்கே தெரியவில்லை நீங்கள் சொல்லியுள்ள எந்த சம்பவமும்..!! எங்கு நடந்தது? சீமானின் தம்பிகள் எங்கு சீண்டினார்கள்?

மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட்டது மாதிரி ஒரு கடிதம்.. அதில் என்ன புரிந்து கொண்டு யாரைக் கண்டிப்பது? முதலில் உங்களை சீண்டுமளவிற்கு எங்கள் தம்பிகளுக்கும் அண்ணன்களுக்கும் வேலை இல்லாமலில்லை. எங்கள் நோக்கம் போராட்டம் எல்லாம் வேறு இலக்கைத் தொட்டு நிற்பவை.

தமிழ்த் தேசிய நோக்கோடு ஓடும் அண்ணன் பிரபாகரனின் பிள்ளைகளுக்கு தமிழ்த் தேசிய இலக்கும்... தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டமும்.. சுரண்டப்பட்ட இயற்கை வளங்களை மீட்டெடுக்கும் பெரும்பணிகளில் ஈடுபடவே நேரம் போதுமானதாக இருக்கிறது. இதில் உங்களைப் பற்றி நினைக்க எங்கே நேரம் இருக்கிறது? உங்களை எதிர்த்து அரசியல் செய்ய நீங்கள் ஏதேனும் அரசியல் அங்கம் வகிப்பவரா என்ன?

ஏதோ சும்மா மெரினா பீச்சில் டீ வாங்கிக் கொடுத்துவிட்டு அடி விழப்போகுது எனத் தெரிந்ததும் ஓடி ஒளிந்துகொள்ளும் போலிப் புரட்சி செய்ய எம் பிள்ளைகளுக்கு தெரியாது.வீர வழி வந்த எம்பிள்ளைகளில் எத்தனை பேர் சமூக அவலங்களை எதிர்த்து சிறைபட்டு அடிபட்டு மிதிபட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

அது தெரிந்தால் ஏன் வாருங்கள் ஒரேமேடையில் நீங்கள் செய்த நல்லதும் நான் செய்த நல்லதையும் பேசுவோம் என என் அண்ணனிடம் சவால் விடப் போகிறீர்கள்..?நீங்கள் நல்லது செய்வதைப் போல நாங்களும் செய்கிறோம். ஆனால் மீடியாவுக்கு அதை ஒவ்வொரு முறையும் அனுப்பிக் கொண்டிருப்பதில்லை.

உங்களைச் சொல்லியும் குற்றமில்லை. நாம்தமிழர் செய்தி என்றாலே பாதி மீடியாவினருக்கு கசப்பு... அப்புறம் எப்படி உங்களுக்குத் தெரிந்திருக்கும்?
ஆனால் யாரையும் முன்னிருத்தி காசு வாங்கி பிழைப்பு நடத்துவதில்லை. நாங்களும் நல்லது செய்கிறோம். அப்படி செய்வதைப் பற்றி தம்பட்டம் அடிக்காமல் இருப்பதே மேல் என நகர்கிறோம்.

உங்களைப் பற்றி எழுதியது யார்? திட்டியது யார்? உங்க கூட மோதவா நாங்க வேலை செய்றோம்? நாங்க என்ன வேலை செய்கிறோம்? நீங்க என்ன வேலை செய்றீங்க? உங்களோட மோத என்ன அவசியம் எங்களுக்கு?உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்?சம்பந்தமில்லாமல் ஏன் இந்த விவகாரத்தை பேசணும்? யார் தூண்டிவிட்டு இந்த அறிக்கை?

யாரிடம் அடிமை வேலை செய்துகொண்டு எங்கள் கட்டுப்பாடான கூட்டுக்குள் கல்லெறிந்து பார்க்கும் ஈன வேலையைச் செய்கிறீர்கள் என்பது எம்மக்களுக்கு நன்றாகவே தெரியும்...அதற்கு வேறு நல்ல காரணத்தை தேடிப்பிடித்திருக்கலாம். வலுவான வேறு யாரையாவது அவர்கள் அனுப்பியிருக்கலாம்.. பேய்ப் படத்தில் கூட இடுப்பிலேறி உட்கார்ந்துகொண்டு காமெடி செய்கிற உங்களைப் போய் இறக்கியிருக்காங்க பாருங்க... சிரிக்கிறதா? அழுறதான்னு தெரியலை.

அப்புறம்... இந்த சவால் விடுறது மோதிப்பார்க்கிறதுன்னு வந்துட்டா.. தம்பிக... பிள்ளைகளை காட்டி பணம் பண்ணுகிற இடம்... நீங்க எதுல வீக்குன்னும் எல்லோருக்கும் தெரியும்.. அங்கே எல்லாம் மூக்கை நுழைச்சி ஆதாரத்தை எடுத்துட்டு வந்து அசிங்கப்படுத்திடுவாங்க... தேவையா??நாம உண்டு நம்ம வேலையுண்டு படத்தை ரிலீஸ் பண்ணிட்டு போலாமே... படம் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் பப்ளிசிட்டிக்கு உங்களுக்கு யாராவது வேணும் என்ன?

சவால் விடணும்... மோதிப் பார்க்கணும்னா நீங்க சவால் விட வேண்டியது ஸ்ரீரெட்டிகிட்டதான்...அவங்க சொன்ன குற்றச்சாட்டுக்கு முதல்ல பதில் சொல்லுங்க... அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க லாரன்ஸ்... அதை விட்டுட்டு இங்கே வந்து ஏன் முட்டணும்?? அவங்க சொன்ன குற்றச்சாட்டை வாய்ப்பு கொடுத்து வாயடைச்ச நீங்களெல்லாம் என்ன பேச முடியும்??

எதையும் ஆராய்ந்தறிந்து பேசுகிற பிள்ளைகள் உங்களை என்ன தவறாகப் பேசினார்கள் என்பதை சீமான் அண்ணனுக்கு போனில் அழைத்து சொல்லியிருக்கலாம். அவரை நீங்கள் அழைத்திருந்தால் நேரடியாகக்கூட வந்திருப்பார்.என் அண்ணன் தன்னை வந்து பாருங்கள் என்றுகூட சொல்லமாட்டார். நானே வருகிறேன் என்று பண்பு காட்டும் சிறந்தவன்.

தம்பிகளை பண்பாளர்களாகவே வளர்க்கவும் நினைக்கிறார். முனைகிறார். தவிர... சீமான் தம்பிகள் என போலி முகங்களோடு சிண்டு முடிக்கும் பிற கட்சிக்காரர்களும் உண்டு என்பதை நினைவில் கொண்டு எங்கள் உயரிய பணியினை இடையூறு செய்யாமல் விலகி நிற்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எங்களைப் போன்ற களத்தில் நிற்கும் பிள்ளைகளை சீண்டுவது தேவையற்றது.

மற்றபடி உங்கள் படத்திற்கு பப்ளிசிட்டி தேவைப்பட்டால் சொல்லுங்கள்... அண்ணனிடம் சொல்லி ஒரு வீடியோ விளம்பரம் வாங்கித் தருகிறேன்...
காசு பாருங்கள்.. அல்லது உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்காக பிரச்சாரம் செய்யுங்கள்... ஜல்லிக்கட்டு.. சமூகசேவை என நாடகம் போட்டு நல்லவன் என வெளிக்காட்டிக் கொள்ளுங்கள்... வேண்டாமெனவில்லை.. அது எங்களுக்கு அவசியமே இல்லை... நீங்கள் எங்கள் இலக்கல்ல.. நாங்கள் மோடி... ராகுல் காந்தி என மோதிக்கொண்டிருக்கிறோம்.. உங்களை எங்கள் எதிரிப்பட்டியலின் இறுதியில்கூட வைக்கவில்லை . ஆனால், அதற்காக தேன் கூட்டில் கைவைக்காதீர்கள்.

எப்போதும் அன்புடன்
சுரேஷ் காமாட்சி
தயாரிப்பாளர்.

https://tamil.asianetnews.com/cinema/producer-suresh-kamatchi-warns-lawrance-pq1acu

டிஸ்கி :

ரசுனியின் அம்பு செம்புகள் இப்போதே அலப்ஸ் ஐ கூட்டுவதை பார்த்தால் 'மேலிட'  உத்தரவுப்படி விரைவில் சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும் போல் கிடக்கு..! 🤔

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஏழை வேட்பாளர்கள்: 31 பேரின் பட்டியல்

Published :  15 Apr 2019  17:36 IST
Updated :  16 Apr 2019  10:58 IST
 
 
download-3jpg

தெஹ்லான் பாகவி, சு.வெங்கடேசன், சிவரஞ்சனி, காளியம்மாள்

 

பணம் இருந்தால்தான் வெற்றி என்கிற நிலையில் கோடீஸ்வரர்கள் மட்டுமே போட்டியிடும் நாடாளுமன்றத் தேர்தலில் ஏழை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

நாடாளுமன்றtஹ் தேர்தலில் போட்டியிடும் முக்கியக் கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, தேமுதிக , அமமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் பெரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதில் டாப் 30 வேட்பாளர்களின் பெயர் நேற்று வெளியிடப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் ரூ.70 லட்சம் வரை செலவழிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் கோடிக்கணக்கில் செலவழிக்கும் வேட்பாளர்கள் உள்ளனர். ஆனால் 70 லட்சத்தில் 7 லட்சம்கூட செலவழிக்க முடியாத வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

இவர்களின் மொத்த சொத்து மதிப்பு சில ஆயிரங்கள்தான். மாத வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் இவர்களுக்கு சொந்தமாக கார் கூட கிடையாது.

இந்த நிலையில் உள்ள முதல் 31 ஏழை வேட்பாளர் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் நாம் தமிழர் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி, மக்கள் நீதி மய்யத்தில் உள்ளனர்.

கீழ்க்கண்ட பட்டியலில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, பாமக, பாஜக, தேமுதிக கட்சிகளின் வேட்பாளர்கள் இல்லை.

ஏழை வேட்பாளர்கள் பெயர், கட்சி, சொத்து மதிப்பு:

1. சிவரஞ்சனி (நாம் தமிழர் கட்சி) காஞ்சிபுரம் தொகுதி ரூ. 15,000.

2. மதிவாணன் (நாம் தமிழர் கட்சியை) தென்காசி தொகுதி - ரூ 21,000 .

3. மாலதி (நாம் தமிழர் கட்சி) நாகப்பட்டினம் தொகுதி – ரூ.1.19 லட்சம்

4. அன்பின் பொய்யாமொழி ( மக்கள் நீதி மய்யம்) விழுப்புரம் தொகுதி- ரூ.1.22 லட்சம்.

5. பாண்டியம்மாள் (நாம் தமிழர் கட்சி) மதுரை தொகுதி – ரூ.1.5 லட்சம்

6. வெற்றிச்செல்வி (நாம் தமிழர் கட்சி) திருவள்ளூர் தொகுதி – ரூ.3.10 லட்சம்.

7. சாந்தி (நாம் தமிழர் கட்சி) பெரம்பலூர் தொகுதி- ரூ 1.11 லட்சம்.

8. சுபாஷினி (நாம் தமிழர் கட்சி) மயிலாடுதுறை தொகுதி - ரூ 5.25 லட்சம்.

9. சனுஜா (நாம் தமிழர் கட்சி) பொள்ளாச்சி தொகுதி - ரூ 5.5 லட்சம்.

10. சித்ரா (நாம் தமிழர் கட்சி) கடலூர் தொகுதி – ரூ.6.40 லட்சம்.

 

11. தீபலட்சுமி (நாம் தமிழர் கட்சி) வேலூர் தொகுதி – ரூ.6.58 லட்சம்.

12. சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) மதுரை தொகுதி – ரூ.7.7 லட்சம்.

13. புவனேஷ்வரி (நாம் தமிழர் கட்சி) ராமநாதபுரம் தொகுதி – ரூ.7 .93 லட்சம்.

14. செங்கொடி (அமமுக) நாகப்பட்டினம் தொகுதி – ரூ. 8.33 லட்சம்.

15. கல்யாணசுந்தரம் (நாம் தமிழர் கட்சி) கோவை தொகுதி – ரூ.8.55 லட்சம்.

16. மணிமேகலை (நாம் தமிழர் கட்சி) நீலகிரி தொகுதி – ரூ.9. 02 லட்சம்.

17. காளியம்மாள் (நாம் தமிழர் கட்சி) வட சென்னை தொகுதி – ரூ.9.17 லட்சம்.

18. எம். சிவஜோதி (நாம் தமிழர் கட்சி) சிதம்பரம் தொகுதி - ரூ 10.37 லட்சம்.

19. முனீஸ்வரன் (மக்கள் நீதி மையம்) தென்காசி தொகுதி – ரூ.10.96 லட்சம்.

20. பிரகலதா (நாம் தமிழர் கட்சி) விழுப்புரம் தொகுதி – ரூ.12.53 லட்சம்.

 

21. ருக்மணி தேவி (நாம் தமிழர் கட்சி) தருமபுரி தொகுதி – ரூ.13.7 8 லட்சம்

22. வடிவேல் ராவணன் (பாமக) விழுப்புரம் தொகுதி –ரூ. 19.25 லட்சம்.

23. ஸ்ரீ காருண்யா சுப்பிரமணியம் (மக்கள் நீதி மய்யம்) கிருஷ்ணகிரி தொகுதி – ரூ. 20.1 லட்சம்

24. அருள் (மக்கள் நீதி மய்யம்) திருவண்ணாமலை தொகுதி - ரூ.20.4 லட்சம்

25. தெகலான் பாகவி (எஸ்டிபிஐ) மத்திய சென்னை தொகுதி – ரூ.21.73 லட்சம்

26. விஜயபாஸ்கர் (மக்கள் நீதி மய்யம்) ராமநாதபுரம் தொகுதி- ரூ. 26.36 லட்சம்

27. பிரபு மணிகண்டன் (மக்கள் நீதி மய்யம்) சேலம் தொகுதி –ரூ. 27.5 லட்சம்

28. ரவி (மக்கள் நீதி மய்யம்) சிதம்பரம் தொகுதி- ரூ. 28.54 லட்சம்

29. தமிழரசி (நாம் தமிழர் கட்சி) ஆரணி தொகுதி – ரூ. 29.33 லட்சம்

30. ஏ.ஜெ.ஷெரின் (நாம் தமிழர் கட்சி) தென் சென்னை தொகுதி – ரூ. 34.66 லட்சம்

31. பாவேந்தன் (நாம் தமிழர் கட்சி) அரக்கோணம் தொகுதி – ரூ. 35.20  லட்சம்

இந்தப் பட்டியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒருவரும், அமமுகவில் ஒருவரும், மக்கள் நீதி மய்யத்தில் 7 பேரும், பாமகவில் ஒருவரும், எஸ்டிபிஐ கட்சியில் ஒருவரும், நாம் தமிழர் கட்சியினர் 20 பேரும் உள்ளனர். இதில் பாமக, அமமுக வேட்பாளர்கள் தனித்தொகுதியில் நிற்பவர்கள் ஆவர்.

https://tamil.thehindu.com/tamilnadu/article26843682.ece?utm_source=taboola

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணையமா..? நாடக கொம்பனியா.. ? 😎

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.