Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சித் தலைவர் மட்டு. விஜயம்

Featured Replies

எதிர்க்கட்சித் தலைவர் மட்டு. விஜயம்
 
image_fef20873da.jpgசுவாமி விபுலானந்தரின் 125ஆவது பிறந்ததின நினைவு நிகழ்வு, மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்தின் நடராஜானந்தா நினைவு மண்டபத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல் 1.30க்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கலந்துகொள்ளவுள்ளார்.

அகில இலங்கை இந்துமா மன்றமும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/எதிர்க்கட்சித்-தலைவர்-மட்டு-விஜயம்/73-201457

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்தாளை எதிர்க்கட்சி தலைவர் எண்டு சொல்ல வெட்கமாய் கிடக்கு...
35வருசத்துக்கு முந்தி இல்லாத அரசியல் சாணக்கியம் இப்ப என்னெண்டு வரும்????

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

உந்தாளை எதிர்க்கட்சி தலைவர் எண்டு சொல்ல வெட்கமாய் கிடக்கு...
35வருசத்துக்கு முந்தி இல்லாத அரசியல் சாணக்கியம் இப்ப என்னெண்டு வரும்????

மட்டக்களப்பு தமிழர்கள் ஏன் கிழக்கு தமிழர்கள் ஏமாந்த தருணம் இது எனலாம்   கூட்டணி அப்படி 

1 hour ago, தனி ஒருவன் said:

மட்டக்களப்பு தமிழர்கள் ஏன் கிழக்கு தமிழர்கள் ஏமாந்த தருணம் இது எனலாம்   கூட்டணி அப்படி 

இந்த முறை மாகாண சபை தேர்தல் நிலவரம் எப்படி?

முஸ்லிமிடம் இருந்து ஆட்சியை கைபற்ற வேண்டும் என்ற நோக்குடன் பலர் செயல்படுவதாகவும் தெரியுது !!

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Dash said:

இந்த முறை மாகாண சபை தேர்தல் நிலவரம் எப்படி?

முஸ்லிமிடம் இருந்து ஆட்சியை கைபற்ற வேண்டும் என்ற நோக்குடன் பலர் செயல்படுவதாகவும் தெரியுது !!

உன்மைதான் ஆனால் அவர்கள் வகுக்கும் வியூகம் வேற மாதிரியும் இருக்கு தமிழரசுக்கட்சி மீது  ஈர்ப்பை இழந்த மக்கள் வேற எதயாவது செய்து    ஒருவரை தேர்தெடுக்க வேண்டும் என்றுடன் முனைப்பில் செய்ற்பட்டு கொண்டு இருக்கிறார்கள்  அது வரைக்க்கும் சில நடவடிக்கைகள் மொளனமாக இருக்கட்டுமே  

5 minutes ago, தனி ஒருவன் said:

உன்மைதான் ஆனால் அவர்கள் வகுக்கும் வியூகம் வேற மாதிரியும் இருக்கு தமிழரசுக்கட்சி மீது  ஈர்ப்பை இழந்த மக்கள் வேற எதயாவது செய்து    ஒருவரை தேர்தெடுக்க வேண்டும் என்றுடன் முனைப்பில் செய்ற்பட்டு கொண்டு இருக்கிறார்கள்  அது வரைக்க்கும் சில நடவடிக்கைகள் மொளனமாக இருக்கட்டுமே  

நல்ல விடயம்

5 hours ago, குமாரசாமி said:

உந்தாளை எதிர்க்கட்சி தலைவர் எண்டு சொல்ல வெட்கமாய் கிடக்கு...

எனக்கும்தான் தேசிய தலைவர் எண்டு சிலர் சொல்ல வெட்கமாயும் அவமானமாயும் இருக்குது - என்ன பண்ணலாம் 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

உந்தாளை எதிர்க்கட்சி தலைவர் எண்டு சொல்ல வெட்கமாய் கிடக்கு...
35வருசத்துக்கு முந்தி இல்லாத அரசியல் சாணக்கியம் இப்ப என்னெண்டு வரும்????

நீங்க  பென்சனில் ஊருக்கு போகலை போல...

போனால் போராளிகள் மீது தான் வெட்கமும் அவமானமும்  வருகுது இப்ப...

சம்பந்தன் தேர்தல் பிச்சைப்பாத்திரத்துடன் நகர்வலம் ஆரம்பித்துள்ளார்.

அவரை வைத்து சுயலாபம் பெற்ற கனடியர்கள் கைவிட்டுவிட்டார்களோ? அல்லது அவர்களது பிள்ளைகளுக்கு இந்திய கல்லூரிகளில் இப்போதைக்கு இடம் தேவையில்லையோ? தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஜீவன் சிவா said:

எனக்கும்தான் தேசிய தலைவர் எண்டு சிலர் சொல்ல வெட்கமாயும் அவமானமாயும் இருக்குது - என்ன பண்ணலாம் 

உண்மை பொய்யை வெளிக்கொண்டுவர விவாதங்கள் அவசியம். ஆனாலும் மனச்சாட்சியை மறுத்து வரும் விவாதங்கள் விவாதிப்பவரின் மனத்துடன் கேட்போருக்கும் மனவலியை ஏற்படுத்தும். தேசியத் தலைவரை எதிர்த்த கருணா அம்மான்கூட அந்தத் தலைவரைப்பற்றி ஒரு கருத்தைத்தானும் இழிவாக, இன்றுவரை கூறியது கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் வெட்டி சம் மட்டுநகருக்குப் போனார்.. என்பது வடிவில்லை என்று தான் எதிர்க்கட்சி தலைவர் என்று போட்டு சில ஊடகங்கள் தப்பித்துக் கொள்கின்றன விடுவியளா. அந்தாளின் கடைசிக்கால ஆசைகளை ஏன் கெடுப்பான். tw_blush:

50 வருச கால அரசியலில் மக்களுக்காக மண்ணுக்காக.. எதனையும் இழக்காத சம்பந்தனும்.. எல்லாத்தையும் நாட்டுக்காக மக்களுக்காக இழந்தவர்களையும் ஒப்பிடவே முடியாது. ஒப்பிடுவதே தவறு.. என்பதை மனச்சாட்சி உள்ள எல்லா மனிதர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் தமிழர்கள் அல்லாதோரும் இருப்பதை நேரில் காண்கிறோம். அதுவே போதும்.. அவர்களின் தியாகத்திற்கு. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 7/29/2017 at 9:01 AM, ஜீவன் சிவா said:

எனக்கும்தான் தேசிய தலைவர் எண்டு சிலர் சொல்ல வெட்கமாயும் அவமானமாயும் இருக்குது - என்ன பண்ணலாம் 

இலங்கையில்தானே இருக்கிறீர்கள் ...........

பிரபாகரனால் அதிகம் நொந்து நூடில்ஸ் ஆனது 
பேரினவாத பிக்குகள்தான்.

அவர்கள் இப்போ சுதி  மாறி பிரபாபகரன் மாதிரி 
தலைவர் வேண்டும் என்கிறார்கள்.
(அது இப்ப வேண்டாம்.)

இந்த பிரச்சனையில் என்ன செய்வது என்ற முன்னாள் அனுபவம் 
கொண்டவர்கள் அவர்கள்தான் 
அவர்களுடன் பேசி பாருங்கள் 
நல்ல வழிமுறைகள் வைத்திருப்பார்கள். 

On 29.7.2017 at 9:20 PM, விசுகு said:

நீங்க  பென்சனில் ஊருக்கு போகலை போல...

போனால் போராளிகள் மீது தான் வெட்கமும் அவமானமும்  வருகுது இப்ப...

இவருக்கு எப்பவுமே கருத்தை கருத்தால் எதிர் கொள்ள முடியாமல் சொந்த வாழ்க்கை + சொந்த பிரச்சனையைக் கொண்டுவந்து அடி வாங்கிறதே வேலையா போச்சுது.

இதுக்கு எதுக்கு பச்சை போட்டான் எண்டு முழுசுறது புரியுது 

மருதற்ற அரை விடயம் இவருக்கும் பொருந்துவதால் ஒரு பச்சை - அம்புட்டுத்தான்.

I went to the liquor store yesterday on my bicycle, bought a bottle of whisky and put it in the bicycle basket.

As I was about to leave, I thought to myself that if I fell off the bicycle, the bottle would break. So I drank all the whisky before I cycled home. 

Finally, it turned out to be a very good decision, because I fell off my bicycle seven times on the way home.

புரிந்தவர்க்கு ஒரு சலாம்

புரியாதவர்களுக்கு - நான் என்ன டியூசன் டீச்சரையா வைக்க முடியும்.:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 29.7.2017 at 1:09 PM, தனி ஒருவன் said:

உன்மைதான் ஆனால் அவர்கள் வகுக்கும் வியூகம் வேற மாதிரியும் இருக்கு தமிழரசுக்கட்சி மீது  ஈர்ப்பை இழந்த மக்கள் வேற எதயாவது செய்து    ஒருவரை தேர்தெடுக்க வேண்டும் என்றுடன் முனைப்பில் செய்ற்பட்டு கொண்டு இருக்கிறார்கள்  அது வரைக்க்கும் சில நடவடிக்கைகள் மொளனமாக இருக்கட்டுமே  

அப்ப....... தமிழர்விடுதலைகூட்டணி இராஜதுரைக்கு குடுத்த சீட்டை காசி ஆனந்தனுக்கு குடுத்திருந்தால் தமிழ்/தமிழர் சார்புகளும் கொஞ்சம் வலிமை பெற்றிருக்கும். அமிர்தலிங்கம் போன்ற அருவருடிகளால் இராஜதுரைக்கு சீட் குடுத்து வெற்றியும் கிடைக்க வைத்தார்கள்....அந்தாளும் வெற்றியை வைச்சு எம்பியாகி .....பிறகு யூன்பிக்கு ஜம்ப் பண்ணி மாண்புமிகு அமைச்சரானால் எல்லோ! 
எனவே உண்மையான தமிழின பற்றாளனை தேர்ந்தெடுங்கோ.....கட்சிபேதம் வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

அப்ப....... தமிழர்விடுதலைகூட்டணி இராஜதுரைக்கு குடுத்த சீட்டை காசி ஆனந்தனுக்கு குடுத்திருந்தால் தமிழ்/தமிழர் சார்புகளும் கொஞ்சம் வலிமை பெற்றிருக்கும். அமிர்தலிங்கம் போன்ற அருவருடிகளால் இராஜதுரைக்கு சீட் குடுத்து வெற்றியும் கிடைக்க வைத்தார்கள்....அந்தாளும் வெற்றியை வைச்சு எம்பியாகி .....பிறகு யூன்பிக்கு ஜம்ப் பண்ணி மாண்புமிகு அமைச்சரானால் எல்லோ! 
எனவே உண்மையான தமிழின பற்றாளனை தேர்ந்தெடுங்கோ.....கட்சிபேதம் வேண்டாம்.

நீங்கள் சொல்வதும் உன்மைதான் பழைய தேர்தல்களில் மக்க்கள கொடுத்த வாக்குக்ளை விற்று பிழைத்த கூட்டமும்மிருக்கு  உதாரணமாக போனஸ் எம்பி , ஏறாவூருக்கு வாக்குகளை காவு கொடுத்த  அமிரலி போன்றவரின் எலும்புகளுக்கு வேலை செய்யும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறது  ஆனால்    அதையும் தாண்டி இறங்க  வேலை செய்ய ஆட்கள் இல்லை  நல்லவன் இருக்குறான் அவன் வல்லவன் இல்லை வல்லவன் இருக்கிறான் ஆனால் அவன் நல்லவன் இல்லை  தமிழர் தலை விதி  இப்படித்தான் கழிய போகிறது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.