Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிபதி இளஞ்செழியனை சந்தித்த முன்னாள் இராணுவ ஜெனரலான தேரர்

Featured Replies

நீதிபதி இளஞ்செழியனை சந்தித்த முன்னாள் இராணுவ ஜெனரலான தேரர்

முன்னாள் இராணுவ ஜெனரல் ஆனந்த வீரசேகர என்று அழைக்கப்படும் ஆனந்த தேரர் யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ilanchaliyan.jpg

யாழ். மாவட்ட மேல்நீதிமன்ற கட்டடத்தொகுதிக்குச் சென்ற ஆனந்த தேரர், அங்கு வைத்து நீதிபதி இளஞச்செழியனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ilanchaliyan-Thero.jpg

யாழ்.மாவட்ட நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையடுத்து அவர் உயிரிழந்தார். 

ilanchaliyan-Thero1.jpg

இந்நிலையில் அவரின் பிரிவை தாங்கமுடியாது யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி அனைவர் முன்னிலையிலும் கண்ணீர் விட்டு அழுதிருந்தார்.

ilanchaliyan-Thero2.jpg

குறித்த சம்பவத்தை அவதானித்த முன்னாள் இராணுவ ஜெனரல் ஆனந்த வீரசேகர என்று அழைக்கப்படும் ஆனந்த தேரர், நீதிபதியின் இவ்வாறான செயற்பாடு குறித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/22861

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதிக்கு புத்தரின் சிலையை பரிசாக கொடுக்கின்றனர்.....நீதிபதி ஜனாதிபதி தேர்தலில் நின்றால் வெற்றியடைவார் போல இருக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதிக்கு நீதிசம்பந்தமான பரிசு ஒன்றைப் பரிசளிப்பதே பொருத்தமானதாகும். Bildergebnis für நீதி அடையாளம்

இலங்கையில் பல இலட்சம் உயிர்கள் காவுகொள்ளப்படக் காரணமாக இருக்கும் புத்தரைப் பரிசளிப்பது கொடுமையானது.

2 hours ago, நவீனன் said:

ilanchaliyan-Thero1.jpg

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

நீதிபதிக்கு நீதிசம்பந்தமான பரிசு ஒன்றைப் பரிசளிப்பதே பொருத்தமானதாகும்

நீதிபதியும் மனிதர் தானே ஏன் அவர் புத்தரை    வாங்கிகொள்ளலாம் தானே   கன சிங்களவர்களின் வீட்டில் தமிழ் தெய்வங்கள் இருக்கிறதே

  • தொடங்கியவர்

மா.இளஞ்செழியனைச் சந்தித்தார் ஆனந்த தேரோ

மா.இளஞ்செழியனைச் சந்தித்தார் ஆனந்த தேரோ
 
இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியான பிக்கு ஆனந்த தேரோவுக்கும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கும் இடையில் நல்லெண்ண அடிப்படையிலான சந்திப்பு இன்று நடந்துள்ளது.

காலை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

அதில் மேல் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலரான உப பொலிஸ் பரிசோதகர் சரத் ஹேமச்சந்திரவின் இழப்புக் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்த சம்பவத்தின்போது நீதிபதி இளஞ்செழியன் நடந்துகொண்ட விதத்தையிட்டு தான் பெருமையடைகின்றேன் என்று பிக்கு குறிப்பிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

IMG_9401-750x400.jpg

IMG_9409-750x400.jpg

http://newuthayan.com/story/17461.html

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனி ஒருவன் said:

நீதிபதியும் மனிதர் தானே ஏன் அவர் புத்தரை    வாங்கிகொள்ளலாம் தானே   கன சிங்களவர்களின் வீட்டில் தமிழ் தெய்வங்கள் இருக்கிறதே

சிங்களவர்களின் வீட்டில் தமிழ் தெய்வங்களை யாரும் திணித்ததில்லையே.! தமிழர்களே வாழ்ந்திராத, வாழாத இடங்களில் தமிழ்த் தெய்வங்களுங்கான கோவில்களை உருவாக்கி அங்குள்ள இனங்களுக்கு உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்படுத்தியதும் இல்லையே.!

  • தொடங்கியவர்
சந்திப்பு......
 
image_b006b9742f.jpgimage_e775b0d2bd.jpgimage_66bd47427a.jpgimage_f7497ce21f.jpgimage_cf05fa8913.jpgimage_90a6079bfa.jpgஅம்பாறையைச் சேர்ந்த தேரரான ஆனந்த வீரசேகர, யாழ். மாவட்ட இராணுவத் தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி ஆகியோர், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை, யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதியில், இன்று (08) சந்தித்துக் கலந்துரையாடினர்.

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/சந்திப்பு/46-202015

  • தொடங்கியவர்

சிங்கள விதவையின் காலில் வீழ்ந்து சிறந்த பாடத்தைப் புகட்டியுள்ளார் நீதிபதி : ஆனந்த தேரர் பாராட்டு

சிங்கள விதவையின் காலில் வீழ்ந்து சிறந்த பாடத்தைப் புகட்டியுள்ளார் நீதிபதி : ஆனந்த தேரர் பாராட்டு
 
புத்தன்கல ஆனந்த தேரர் நீதிபதி மா. இளஞ்செழியனை சந்தித்து பாராட்டினார்

அம்பாறை புத்தன்கல ஆனந்த தேரர் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை சந்தித்து, நீதிபதியின் செயற்பாடுகளைப் பாராட்டியுள்ளார்.

யாழ். மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று நீதிபதியை சந்தித்த அம்பாறை புத்தன்கல ஆனந்த தேரர், அண்மையில் மெய்ப்பாதுகாவலர் கொலை செய்யப்பட்ட போது நீதிபதி செயற்பட்ட விதத்தைப் பாராட்டியுள்ளார்.

ஆனந்த தேரர் 2005 ஆம் ஆண்டு வரை இராணுவத்தில் பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் யாழ். படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியும் கலந்து கொண்டிருந்தார்.

இதேவேளை, புத்தன்கல ஆனந்த தேரர் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

ஒரு சிங்கள விதவையின் காலில் வீழ்ந்து மண்டியிட்டமை மூலம் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு சிறந்த பாடத்தை நீதிபதி புகட்டியுள்ளதாக தேரர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தேரர் நீதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கண்ணீருக்கு இனம் இல்லை
உணர்வுகளுக்கு இனம் இல்லை
நாம் சுவாசிக்கும் காற்றுக்கும் இனம் இல்லை
பருகும் நீருக்கும் இனம் இல்லை.
சூரியக் கதிர்களுக்கும் இனம் இல்லை.

என தெரிவித்து, அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டியதன் அவசியத்தை தேரர் வலியுறுத்தியுள்ளார்.

http://newsfirst.lk/tamil/2017/08/சிங்கள-விதவையின்-காலில்/

  • கருத்துக்கள உறவுகள்

இனி  இளஞ்செழியன்  மாறி மாறி  காலில்  விழத்தான் சரி...

தமிழன்  நம்பும்  அனைவரும்  இவ்வாறு தான்  மாறிவிடுகிறார்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, விசுகு said:

இனி  இளஞ்செழியன்  மாறி மாறி  காலில்  விழத்தான் சரி...

தமிழன்  நம்பும்  அனைவரும்  இவ்வாறு தான்  மாறிவிடுகிறார்கள்..

image_b006b9742f.jpg

ஈழத்தமிழன் மற்றவனுக்கு செய்த குற்றம் என்ன????
ஈழத்தமிழன் மற்றவனுக்கு செய்த துரோகம் என்ன????
இது தமிழினத்திற்கு யார் கொடுத்த சாபம்?
எமது இனம் எந்தவகையில் குறைந்து விட்டது?????

சிக்கோயினார் அல்லது ரோமா இன வரிசையில் நாமும் தள்ளப்பட்டு விட்டோமா?
 
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழன் மற்றவனுக்கு செய்த குற்றம் என்ன????

ஈழத்தமிழன் மற்றவனுக்கு செய்த துரோகம் என்ன????
இது தமிழினத்திற்கு யார் கொடுத்த சாபம்?
எமது இனம் எந்தவகையில் குறைந்து விட்டது?????

இப்போதாவது கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறிர்களே?

இனித் தான் நீங்கள் சிந்திக்க ஆரம்பிப்பீர்கள்.

விடைகள் கிடைக்க நீண்ட பயணம் போக வேண்டி இருக்கிறது.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தேயிலை தோட்டத்து தமிழரை “வடக்கத்தையான்”, “தோட்டக்காட்டான்” என்று ஒதுக்கிவைத்து, முஸ்லிம்களை “தொப்பி பிரட்டி” என்று விரட்டி விட்டு, தமது மக்களுக்குள்ளேயே தீண்ட தகாதவர்கள் என்று ஒருவரை ஒருவர் தாழ்த்தி வைத்து - ஆறுமுக நாவலர் முதல் ஜி ஜி பொன்னம்பலம் வரை செய்தது முதல் பின்னர் போராளிகள் என்று ஆயுதம் தாங்கி செய்தது எல்லாம் இன்று வட்டியும் முதலுமாக கிடைக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, Jude said:

இப்போதாவது கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறிர்களே?

இனித் தான் நீங்கள் சிந்திக்க ஆரம்பிப்பீர்கள்.

விடைகள் கிடைக்க நீண்ட பயணம் போக வேண்டி இருக்கிறது.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தேயிலை தோட்டத்து தமிழரை “வடக்கத்தையான்”, “தோட்டக்காட்டான்” என்று ஒதுக்கிவைத்து, முஸ்லிம்களை “தொப்பி பிரட்டி” என்று விரட்டி விட்டு, தமது மக்களுக்குள்ளேயே தீண்ட தகாதவர்கள் என்று ஒருவரை ஒருவர் தாழ்த்தி வைத்து - ஆறுமுக நாவலர் முதல் ஜி ஜி பொன்னம்பலம் வரை செய்தது முதல் பின்னர் போராளிகள் என்று ஆயுதம் தாங்கி செய்தது எல்லாம் இன்று வட்டியும் முதலுமாக கிடைக்கிறது.

ஓ....திட்டுறதே உங்கடை தொழிலாய் இருக்கும் போலை கிடக்கு??????
முந்தி ஒரே புலிவாந்தியாய் நாறிச்சுது...... இப்ப அங்கை தொங்கல்  ஆறுமுகநாவலரிலை  போய் நிக்கிறீங்க!!!!!
என்ன விசயம்???????
உங்கடை காலிலை அடிகிடி ஒண்டும் படேல்லையே??? 

எதுக்கெடுத்தாலும் நொண்டிக்கொண்டு திரிய...:grin:

Edited by குமாரசாமி
ஆறுமுகநாவலரிலை.....

12 hours ago, நவீனன் said:
சந்திப்பு......
 
image_cf05fa8913.jpg

உணர்ச்சி வசப்படுபவர்களை எளிதில் கவிழ்த்துவிடலாம் என்ற தத்துவம் அரங்கேற்றப்படுகிறது! அதில் விதிவிலக்காக இளஞ்செழியன் தப்புவாரா என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும்!

சிங்கள-பௌத்த பயங்கரவாதத்தின் சின்னமான புத்தர் சிலையை கொடுத்ததன் மூலம் சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகள் என அழைப்பதே தகும் என மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

திட்டமிட்ட கொலை முயற்சியில் தப்பியிய நீதிபதி இளஞ்செழியனை கவிழ்ப்பதற்கு திட்டமிட்ட புதிய அணுகுமுறையாகவே இவற்றை பார்க்க வேண்டும். அவர் சமூகவிரோதிகளுக்கு எதிராக அடுத்த தீர்ப்பை வழங்கும்வரை இந்த நவீன சதி முயற்சிகள் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

எனது தமிழின மக்களை படுகொலை செய்த, எனது தமிழின சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த, எனது  தமிழின மக்களின் சொத்துக்களை ஆக்கிரமித்து வைத்துக்கொண்டிருக்கும் பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்த  ஒருவர் இவ்வாறான ஒருசிலையை என்னிடம் தந்தால் நான் அதை உடனடியாகவே குப்பைக் கூடையில் தான் போடுவேன். கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் போடும் வேடங்களை என்னால் அங்கீகரிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Rajesh said:

நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்  ஆனால் சம்பந்தர் ஐயா சொல்கிறார் மகிந்தவுடன்  சேர்ந்து  , இணைந்து  சேர்ந்து  செய்வோம் என 

5 minutes ago, தனி ஒருவன் said:

நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்  ஆனால் சம்பந்தர் ஐயா சொல்கிறார் மகிந்தவுடன்  சேர்ந்து  , இணைந்து  சேர்ந்து  செய்வோம் என 

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சம்பந்தனின் பம்மாத்துக்களை நாங்கள் அறிந்தவர்கள் தான்! கருணாவிடம் ஏதாவது ஆலோசனை கேட்டாரோ தெரியவில்லை.

அவர் பதவிக்கும், பணத்துக்கும், சுயநலத்துக்கும் எங்கென்றாலும் விலைபோகக் கூடியவர் என்பது புதிய செய்தியில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Rajesh said:

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சம்பந்தனின் பம்மாத்துக்களை நாங்கள் அறிந்தவர்கள் தான்! கருணாவிடம் ஏதாவது ஆலோசனை கேட்டாரோ தெரியவில்லை.

அவர் பதவிக்கும், பணத்துக்கும், சுயநலத்துக்கும் எங்கென்றாலும் விலைபோகக் கூடியவர் என்பது புதிய செய்தியில்லை.

நீங்கள் சம்பந்தரை தானே சொல்கிறீர்கள் 

1 minute ago, தனி ஒருவன் said:

நீங்கள் சம்பந்தரை தானே சொல்கிறீர்கள் 

அவரே தான்!

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Rajesh said:

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த

இங்கே தான் நீங்களும் நிற்கிறீர்கள் ஹாஹாஹா :104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் எது நல்லது செய்தாலும், தமிழர்கள் நம்பத்தயாரகயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, colomban said:

சிங்களவன் எது நல்லது செய்தாலும், தமிழர்கள் நம்பத்தயாரகயில்லை.

இதுவரை செய்ததை பட்டியலிடமுடியுமா கொழும்பான் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Jude said:

தேயிலை தோட்டத்து தமிழரை “வடக்கத்தையான்”, “தோட்டக்காட்டான்” என்று ஒதுக்கிவைத்து, முஸ்லிம்களை “தொப்பி பிரட்டி” என்று விரட்டி விட்டு, தமது மக்களுக்குள்ளேயே தீண்ட தகாதவர்கள் என்று ஒருவரை ஒருவர் தாழ்த்தி வைத்து - ஆறுமுக நாவலர் முதல் ஜி ஜி பொன்னம்பலம் வரை செய்தது முதல் பின்னர் போராளிகள் என்று ஆயுதம் தாங்கி செய்தது எல்லாம் இன்று வட்டியும் முதலுமாக கிடைக்கிறது.

இது இன்னும் நடக்கின்றது. சமீபத்தில் கச்சை சிவம் என்பவர் ஜெர்மனியில் இருந்து மிகவும் மோசமாக மலையக தமிழர்களை இழிவாபேசியிருந்தார். பல தமிழர்கள் அவர் கூறியதை சரி என வாழ்ந்தியிருந்தார்கள். இது மிகவும் மனவருத்ததை தர்க்கூடிய செயல்.

5 minutes ago, தனி ஒருவன் said:

இதுவரை செய்ததை பட்டியலிடமுடியுமா கொழும்பான் :unsure:

இந்த பிக்கு செயல் என்னைபொருத்தவரை நல்லேண்னத்துடனேயே செய்த்தாக காணப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, colomban said:

இந்த பிக்கு செயல் என்னைபொருத்தவரை நல்லேண்னத்துடனேயே செய்த்தாக காணப்படுகின்றது.

20729524_1949417558663300_22142082491226

1 minute ago, தனி ஒருவன் said:

இதுவரை செய்ததை பட்டியலிடமுடியுமா கொழும்பான் :unsure:

நானும் இதே கேள்வியை நினைத்தேன்!

இதில் நல்லது ஒன்றும்மில்லை. தமிழர் வெளிப்படுத்திய மனிதாபிமானதால் தெற்கில் அப்பாவியாக உள்ள சிங்களவர்கள் குழம்பிவிடுவார்களோ என்ற பயத்தில் பிக்குமார் அலைகிறார்கள். அவர்கள் குழம்பினால் தங்கள் மதவெறி வியாபாரம் கெட்டுவிடும் என அவர்களுக்கு நல்லா தெரியும்.

எனது தமிழின மக்களை படுகொலை செய்த, எனது தமிழின சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த, எனது  தமிழின மக்களின் சொத்துக்களை ஆக்கிரமித்து வைத்துக்கொண்டிருக்கும் பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்த  ஒருவர் எதற்காக தமிழர் ஒருவருக்கு முருகன் சிலையையோ, சரஸ்வதி சிலையையோ, நடராஜர் சிலையையோ, பிள்ளையார் சிலையையோ கொடுக்காமல் புத்தர் சிலையை கொடுக்கோணும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.