Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

A-380 விமானம் இன்று முதல் சேவையில்

Featured Replies

A-380  விமானம் இன்று முதல் சேவையில்

உலகின் மிகப்பெரிய விமானத்தின் மூலம் விமான போக்குவரத்தில் ஈடுபட இன்று முதல் இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதற்கமைய கட்டுநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கும், மிகப்பெரிய விமானம் இன்று முதல் உத்தியோகபூர்வமாக அதன் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை மிகப்பெரும் பொருட் செலவில் புனரமைக்கப்பட்டது. அதற்கமைய உலகின் மிகப்பெரிய விமானமான A-380 என்ற விமானமே கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்றைய தினம் தரையிறங்கவுள்ளது.

குறித்த விமானம் தனது விமான சேவையை பொதுவான முறையில் தொடர்ந்து மேற்கொள்ளும் என போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

http://newuthayan.com/story/19231.html

  • தொடங்கியவர்

உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம் இன்று முதல் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்படவுள்ளது

உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமாக கருதப்படும் ஏ-380 விமானம் இன்று முதல் உத்தியோகபூர்வமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படவுள்ளது.

குறித்த விமானத்தில் கண்காணிப்பு செயற்பாடுகள் ஏனைய பயணிகள் விமான சேவைகளுக்கு ஒத்தாற் போல முன்னெடுக்கபடவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுதளம் புனரமைக்கப்பட்டதன் பின்னர் நவீன விமானங்கள் தரையிறக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் 500 பயணிகளுக்கும் அதிகமானவர்கள் பயணிக்ககூடிய ஏ-380 விமானம் தினந்தோறும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்படும் எனவும் போக்குவரத்து பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

டுபாயிலிருந்து இந்த விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

http://newsfirst.lk/tamil/2017/08/உலகின்-மிகப்-பெரிய-பயணிக/

image_1502717869-aa2c58e1b6.jpg

image_1502717927-ef93326c04.jpg

  • தொடங்கியவர்
புதிய வருகை…
 
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக எமிரேட்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏ380 ரக விமானம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (14) வந்தடைந்தது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் பாரிய இடவசதியில் தரித்து நிற்கக் கூடிய வகையில் மிகப்பெரிய விமானம் தரையிறங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்பிரகாரம் இன்றைய தினம் தரையிறங்கிய எமிரேட்ஸ் ஏ380 ரக விமானத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

image_d7621dc29e.jpgimage_63e1b2ffdf.jpgimage_64cb12ff2e.jpgimage_426491a212.jpgimage_347058dc3e.jpgimage_0d2c9e444b.jpg

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/புதிய-வருகை/46-202381

  • கருத்துக்கள உறவுகள்

பேரு தான் பெத்தம் பெரிய விமானம்..!

இருமுறை சிக்கன வகுப்பில் பயணம் செய்தபொழுது ஏற்பட்ட அனுபவம்..பயண வசதிகளைப் பற்றி குறிப்பிடும்படி ஒன்றுமில்லை!!

பெரிய விமானம் இடவசதி நல்ல விசாலமாக இருக்குமென நினைத்தால், முன்னிருக்கைகும் நம் கால்களுக்குமிடையேயான இடம்(Leg Room) மற்ற சிறிய ரக விமானத்தை போலவே இறுக்கமாக உள்ளது.. மற்ற விமானத்திற்கும் இதற்கும் ஒரு வேறுபாட்டையும் காண இயலவில்லை.

ஒருவேளை அனைத்து நவீன வசதிகளும் முதல் வகுப்பு பயணிகளுக்கு மட்டுமே இருக்குமென எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

நீங்கள் சொல்வது உண்மை

நீங்க துபாயிலதானே நிற்கிறியள் ஒரு கம்ளைன் பண்ணகூடாது  எமிரேட்ஸ் காராக்களிடம் பெரிசா வைக்க சொல்லி 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

சிக்கன வகுப்பில் எல்லாமே சிக்கனம் தான் ராசவன்னியன் அண்ணா.. அது எந்தப் பெரிய விமானம் வந்தாலும்.. இதுதான் கதி. அதிலும் பக்கத்தில இருக்கிறது கையக் கால அகட்டிற பேர்வழின்னா.. நாங்க ஆடி ஒடுங்கி இருக்க வேண்டியான்.. காசையும் கொடுத்து.. அசெளகரியமான பயணங்கள்.  ஏதோ காரியம் முடியனுன்னு.. போய் வர வேண்டி இருக்குது. tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனி ஒருவன் said:

நீங்க துபாயிலதானே நிற்கிறியள் ஒரு கம்ளைன் பண்ணகூடாது  எமிரேட்ஸ் காராக்களிடம் பெரிசா வைக்க சொல்லி 

முறைப்பாடு செய்தும் ஒரு பயனும் இல்லை.

முன்பெல்லாம் எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்தால் நாம் விரும்பும் இருக்கைகளை பயணம் செய்யும் திகதிக்கு இருதினங்கள் முன்பு வரை தெரிவு செய்யலாம்.. இப்பொழுது ஒவ்வொரு இருக்கை தெரிவுக்கும் 50திர்ஹாம் அதிகமாக செலவழிக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு பயண முன்பதிவு திகதி மாறுதலுக்கும் மேலதிக தண்ட பணம் செலுத்த வேண்டும்.. 

13 hours ago, ராசவன்னியன் said:

பேரு தான் பெத்தம் பெரிய விமானம்..!

இருமுறை சிக்கன வகுப்பில் பயணம் செய்தபொழுது ஏற்பட்ட அனுபவம்..பயண வசதிகளைப் பற்றி குறிப்பிடும்படி ஒன்றுமில்லை!!

பெரிய விமானம் இடவசதி நல்ல விசாலமாக இருக்குமென நினைத்தால், முன்னிருக்கைகும் நம் கால்களுக்குமிடையேயான இடம்(Leg Room) மற்ற சிறிய ரக விமானத்தை போலவே இறுக்கமாக உள்ளது.. மற்ற விமானத்திற்கும் இதற்கும் ஒரு வேறுபாட்டையும் காண இயலவில்லை.

ஒருவேளை அனைத்து நவீன வசதிகளும் முதல் வகுப்பு பயணிகளுக்கு மட்டுமே இருக்குமென எண்ணுகிறேன்.

இது விமான சேவைக நிறுவனங்களுக்கு இடையில் மாறுபடும் என நம்புகின்றேன் வன்னியன். ஒரே ரக விமானமாயினும் ( A380 ஆயினும்) விமானத்தின் இருக்கைகளின் எண்ணிக்கை, இட வசதி, பொழுது போக்கு அம்சங்கள் என்பன மாறுபடும். எமிரேட்ஸின் A330 யிலும் பார்க்க நல்ல இடவசதி lufthansa நிறுவனத்தின் A330 இல் இருப்பதை அனுபவத்தில் கண்டுள்ளேன். அதே போன்று கட்டார் சேவையில் A380 இல் இந்த வருடம் பயணம் செய்யும் போது ஓரளவுக்கு இடவசதி இருந்தது

எமிரேட்ஸ் விமானத்தின் எக்கனாமிக் வகுப்பு என்பது மிக மோசமான இருக்கை அமைப்பு கொண்ட வகுப்பு. Air Arabia எவ்வளவோ மேல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

image_0d2c9e444b.jpg

சிறிலங்கா எப்ப இப்பிடியான  ஒரு கப்பலை சொந்தமாய் வாங்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நிழலி said:

..

எமிரேட்ஸ் விமானத்தின் எக்கனாமிக் வகுப்பு என்பது மிக மோசமான இருக்கை அமைப்பு கொண்ட வகுப்பு. Air Arabia எவ்வளவோ மேல்

இது உண்மைதான்.. ஆனால் சார்ஜா விமான நிலையத்தைவிட துபை விமான நிலைய மூன்றாவது முனைய வசதிகள், சுத்தம், சேவைகள் மிக நன்றாக உள்ளது.. குறிப்பாக பயணப்பொதிகளுக்கான காத்திருக்கும் நேரம், பயணிகளுக்கான காத்திருக்கும் தனிப்பட்ட பகுதிகள்(Airport Lounge), உணவகங்கள், கடைகள்..முதலியன.

மற்றொரு விடயம், விமானம் பறக்கும்போது பல்வேறு காற்றழுத்த மண்டலங்களை(Air Turbulence) கையாளும் விதம்..இது விமானங்களுக்கேற்றவாறு மாறுபடுமோவென தெரியாது.. ஏர் அராபியாவை விட எமிரேட்ஸ்ஸில் குலுங்கல்கள், அதிர்வுகள் குறைவாக உள்ளது..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

முறைப்பாடு செய்தும் ஒரு பயனும் இல்லை.

முன்பெல்லாம் எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்தால் நாம் விரும்பும் இருக்கைகளை பயணம் செய்யும் திகதிக்கு இருதினங்கள் முன்பு வரை தெரிவு செய்யலாம்.. இப்பொழுது ஒவ்வொரு இருக்கை தெரிவுக்கும் 50திர்ஹாம் அதிகமாக செலவழிக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு பயண முன்பதிவு திகதி மாறுதலுக்கும் மேலதிக தண்ட பணம் செலுத்த வேண்டும்.. 

தமிழன் பண்பாடு பார்ப்பதால்தான் பாரிலுள்ள படுபாவிகளும் அவனை ஏறி உழக்கி உதைத்துத் எள்ளிநகையாடுகின்றனர். பறப்பதிலும் பண்பாடுகளையும், ஒழுங்கு முறைகளையும் பார்த்தால் மகிழ்ச்சியாக, வசதியாகப் பறக்க முடியாது. இருக்கைகளுக்காக முன்கூட்டியே பதிவுசெய்து பணத்தையும் இழக்கவேண்டியதில்லை. விமானத்தில் எங்களுக்காக அவர்களால் ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்துகொள்ள வேண்டும். பயனிகள் அனைவரும் ஏறி இருந்தவுடன் பட்டியைப் போடும்படி அறிவித்தல் வரும். அந்நேரம் கண்களைச் சுழலவிட்டால்... யன்னலோர இருக்கைகள் அல்லது நடுப்பகுதி என்றாலும் ஆளில்லா நாலைந்து இருக்கைகள் அகப்படும் பாய்ந்து சென்று இருந்துவிடலாம். ஆனந்தமாகப் படுத்தும் பறக்கலாம். இது சீனர்களைப் பார்த்து நான் பழகிக்கொண்டது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Paanch said:

நாம் தனியாக பயணித்தால் எந்த இருக்கையிலும் பயணிக்கலாம்.. ஆனால் குடும்பத்தோடு விமானத்தில் பயணிக்கும்போது நமக்கென சில தெரிவுகள் இருக்கும்பொழுது அதை காசாக்க விமான நிறுவனங்கள் துஸ்பிரயோகம் செய்வது சரியல்ல.. அதுவும் சில வருடங்களுக்கு முன்புவரை இத்தெரிவுகள்/வசதிகள் அனைத்தும் இலவசமாகவே கிடைத்துக்கொண்டிருந்தன..

சிக்கன விமான நிறுவனங்கள் தான் இவ்வாறு எதற்கெடுத்தாலும் சிறுசிறு வசதிகளுக்கெல்லாம் தனியாக காசு அறவிட்டுக்கொண்டிருந்தார்கல், தற்பொழுது கொள்ளை லாபம் சம்பாதிக்கும் கொழுத்த பெரிய நிறுவனங்களும் இவ்வாறு குறுக்கு வழிகளிலும் காசு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இது விமான சேவைக நிறுவனங்களுக்கு இடையில் மாறுபடும் என நம்புகின்றேன் வன்னியன். ஒரே ரக விமானமாயினும் ( A380 ஆயினும்) விமானத்தின் இருக்கைகளின் எண்ணிக்கை, இட வசதி, பொழுது போக்கு அம்சங்கள் என்பன மாறுபடும். எமிரேட்ஸின் A330 யிலும் பார்க்க நல்ல இடவசதி lufthansa நிறுவனத்தின் A330 இல் இருப்பதை அனுபவத்தில் கண்டுள்ளேன். அதே போன்று கட்டார் சேவையில் A380 இல் இந்த வருடம் பயணம் செய்யும் போது ஓரளவுக்கு இடவசதி இருந்தது

எமிரேட்ஸ் விமானத்தின் எக்கனாமிக் வகுப்பு என்பது மிக மோசமான இருக்கை அமைப்பு கொண்ட வகுப்பு. Air Arabia எவ்வளவோ மேல்

லூப்தான்சாவில்  இடையில் இன்னொரு வகுப்பு வகுத்து சீட் கூடுதலாக சாய்க்கலாம் 
71 சீட் போட்டுள்ளார்கள் பின்னுக்கும் கால் இடைவெளியை கூட்டுவதட்கு இரண்டு ரோ (Row)
குறைத்து வைத்துள்ளார்கள்.
தற்போதைய(CEO) சீ இ ஓ லுப்தான்சாவின் இன்பிளைட் சேவைகளை (Inflight services) கூடுதலாக்கி 
வைத்திருக்கிறார். தற்போது அவர்களுடைய சேவை உண்மையில் பாராட்டும் படிதான் 
இருக்கிறது.

எமிரேட்ஸில் முதலதர வகுப்பு என்று பூட்டிய அறை ( என்று சொல்லலலாம் என்று நினைக்கிறேன்) (closed suits)
அதில் 14 அடித்து பின்னுக்கு இரண்டு ரோ கூட்டி இருக்கிறார்கள். 

1 hour ago, Paanch said:

தமிழன் பண்பாடு பார்ப்பதால்தான் பாரிலுள்ள படுபாவிகளும் அவனை ஏறி உழக்கி உதைத்துத் எள்ளிநகையாடுகின்றனர். பறப்பதிலும் பண்பாடுகளையும், ஒழுங்கு முறைகளையும் பார்த்தால் மகிழ்ச்சியாக, வசதியாகப் பறக்க முடியாது. இருக்கைகளுக்காக முன்கூட்டியே பதிவுசெய்து பணத்தையும் இழக்கவேண்டியதில்லை. விமானத்தில் எங்களுக்காக அவர்களால் ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்துகொள்ள வேண்டும். பயனிகள் அனைவரும் ஏறி இருந்தவுடன் பட்டியைப் போடும்படி அறிவித்தல் வரும். அந்நேரம் கண்களைச் சுழலவிட்டால்... யன்னலோர இருக்கைகள் அல்லது நடுப்பகுதி என்றாலும் ஆளில்லா நாலைந்து இருக்கைகள் அகப்படும் பாய்ந்து சென்று இருந்துவிடலாம். ஆனந்தமாகப் படுத்தும் பறக்கலாம். இது சீனர்களைப் பார்த்து நான் பழகிக்கொண்டது. :grin:

நீங்கள் பிளேனுக்குள் போய் ஓடி திரிய தேவை இல்லை 
(மிக ரகசியமாக வைத்திருக்கவும். பின்பு உங்களுக்கே இடம் கிடைக்காது போய்விடும்)
எந்த விமான சேவையில் பறக்கிறீர்களோ 
அந்த விமானத்தின் ஆப்பை டவுன்லோட் செய்து வைத்திருங்கள் 
இப்போ நிறைய சேவைகள் தில் உண்டு ... உங்கள் பொதிகளை நீங்கள் 
கண்காணித்து கொண்டு இருப்பது முதல்.
அந்த ஆப்பில் சென்று போர்டிங் தொடங்கும்போது அதே 
விமான இலக்க விமானத்தின் ஸீட் மப்பை நீங்கள் பார்க்க முடியும் 
நீங்கள் கொஞ்சம் இறுதியாக போர்ட் பண்ணினாள் நன்று . காரணம் 
போர்ட் பண்ணும் வரையில் சில லூசுகள் தாம் வேறு வேறு இருக்கையில் இருப்பதை 
அறிய மாட்டார்கள் கூடுதலாக பிள்ளைகளுடன் வருபவர்கள். போர்ட் பண்ணும்போதுதான் 
ஐயோ குய்யோ என்பார்கள் ஆதலால் அப்போது எங்கு சீட் பிரீயாக இருக்கிறதோ அங்கு போடுவார்கள்.
நீங்கள் கொஞ்சம் இறுதியாக சென்றால் உங்களுக்கு முழு ஸீட் வரைவும் தெளிவாக தெரியும் 
போய் ஜெண்டில்மானாக உங்களின் இருக்கை போலவே உட்க்கார்ந்து போகலாம்.  

நானும் அப்படி மூன்று நாலு ஸீட் இருக்கும் இருக்கைக்கு சென்று 
கொஞ்சம் வைன் வேண்டி குடித்துவிட்டு நித்திரை கொண்டுவிடுவேன் 
பிளேன் இறங்கும்போது பெல்ட் போட சொல்லி அவர்கள் எழுப்பும்போதுதான் எழும்புவேன்.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ராசவன்னியன் said:

நாம் தனியாக பயணித்தால் எந்த இருக்கையிலும் பயணிக்கலாம்.. ஆனால் குடும்பத்தோடு விமானத்தில் பயணிக்கும்போது நமக்கென சில தெரிவுகள் இருக்கும்பொழுது அதை காசாக்க விமான நிறுவனங்கள் துஸ்பிரயோகம் செய்வது சரியல்ல.. அதுவும் சில வருடங்களுக்கு முன்புவரை இத்தெரிவுகள்/வசதிகள் அனைத்தும் இலவசமாகவே கிடைத்துக்கொண்டிருந்தன..

சிக்கன விமான நிறுவனங்கள் தான் இவ்வாறு எதற்கெடுத்தாலும் சிறுசிறு வசதிகளுக்கெல்லாம் தனியாக காசு அறவிட்டுக்கொண்டிருந்தார்கல், தற்பொழுது கொள்ளை லாபம் சம்பாதிக்கும் கொழுத்த பெரிய நிறுவனங்களும் இவ்வாறு குறுக்கு வழிகளிலும் காசு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

உண்மைதான் ஒரு மில்லியன் நபர்களுக்கு $15 வேண்டினால் 
$15 மில்லியன் வருகிறது ......... ருசி கண்டு விட்டார்கள் 

எல்லோரும் பேஸ்புக் திறந்து இருக்கிறார்கள் 
அங்கு போய் கிழி கிழி என்று கிழித்தால் கொஞ்சம் 
காதில் போட்டு கொள்கிறார்கள் 

வாடிக்கையாளர்கள் குறையலாம் என்று அச்சம் காரணமாக.

எதோ வந்துவிடடோம் எமது வேலை முடிந்தது என்று இருக்க கூடாது 
குறைந்த பட்ஷம் விமான நிலையங்களில் காத்திருக்கும் நேரங்களில் என்றாலும் 
வ்ய் பய் கோனெக்ட் பண்ணி குறை நிறைகளை எழுத வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.