Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன் – மக்களை நேரில் சந்திக்க உள்ளேன் – மனம் திறந்த கமல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜியோவின் மூலம் தற்காலிக அரசியல் விழிப்புணர்வை சிறிது பெற்றுகொண்டவர்கள் பழைய கணிப்பு முறைகள் இங்கு செல்லாதவை ஆக்கிவிடும் இனி வரும் தேர்தல் அங்கு பெரும் குழப்பகரமாக இருக்கும் இதையும் மீறி பிஜேபி வருமாயின் ஒன்றிரண்டு சீட் கிடைக்க வாய்ப்பில்லை வந்தால் வேட்பு இயந்திரம் ஹக்பண்ணபட்டு விட்டது என்று அர்த்தம் .

  • Replies 57
  • Views 3.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

கமலுக்கு எதிராகத் திரும்பிய இணையவாசிகள்

இதில் கூலிக்கு வேலை செய்பவர்கள் சுயமா அறிக்கை விடுபவர்கள் என்று இரண்டு வகை உண்டுங்கோ அங்கு .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய காலகட்டத்தில் சீமானைப்போன்றவர்களும் இல்லாவிட்டால் தமிழன் என்று சொல்லி பகிரங்கமாக/ தினாவெட்டாக பேச யாருமில்லை.

இதே சீமான் அன்றே தமிழ்நாட்டுடன்  மட்டும்  தனது அரசியலை வைத்திருந்தால் கமலும் ரஜனியும் காரியக்கூத்து ஆட இடமே  அல்லது இடைவெளியே வந்திருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பெருமாள் said:

ஜியோவின் மூலம் தற்காலிக அரசியல் விழிப்புணர்வை சிறிது பெற்றுகொண்டவர்கள் பழைய கணிப்பு முறைகள் இங்கு செல்லாதவை ஆக்கிவிடும் இனி வரும் தேர்தல் அங்கு பெரும் குழப்பகரமாக இருக்கும் இதையும் மீறி பிஜேபி வருமாயின் ஒன்றிரண்டு சீட் கிடைக்க வாய்ப்பில்லை வந்தால் வேட்பு இயந்திரம் ஹக்பண்ணபட்டு விட்டது என்று அர்த்தம் .

ஜியோ... என்றால், என்ன பெருமாள்.
அதனைப்   பற்றி,சுருக்கமாக கூறுங்களேன். பலருக்கும்... பிரயோசனமாக இருக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஜியோ... என்றால், என்ன பெருமாள்

ஜியோ என்பது அம்பானிகளின் ஒரு மொபைல் நெட்வோர்க் இலவச இணைய இணைப்பு அத்துடன் வரம்பு இல்லா தரவு களும் கடந்த  ஜல்லிகட்டின் வெற்றியை நிர்ணயித்தது என்பதில் மாற்றுகருத்து இல்லை உள்ளம்கையில் உலகம் ஊழல் செய்யும் போலீசார் முதல்கொண்டு அமைச்சுக்கள் வரை இந்த இலவச டேட்டா புகுந்து விளையாடியது சென்னையில் ஒரு போலிஸ் அடித்தால் ராமேஸ்வரத்தில் இருப்பவருக்கு அடுத்த கணம் தெரிகிறது இந்த இலவச இணயத்தால் இங்கும் துரதிஸ்டவசமாக இங்கும் இந்த மாய உலகில் பெரிய அரசியல் தலைகளின் அடியாள்கள் அவர்களின் புகழ் பாடத் தொடங்கி விட்டனர் .

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

தரவுக்கு... நன்றி  பெருமாள்.  

  • கருத்துக்கள உறவுகள்

இது சீமானனின் ஆதரவு மற்றும் அரசியல் சித்தாந்தந்த  தளத்தை ஆகக்குறைந்தது பலவீனப்படுத்துவதற்கான கிந்திய (ஹிந்தி மயப்படுத்தப்பட்ட தமிழ் நாட்டு மேல் தட்டு வர்க்கத்தோடு சேர்ந்து ) உள்ளக வெளியாக உளவுத்  துறைகளின் ஓர் திட்டமிட்ட காய் நகர்த்தல்.

கமலிற்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஈழத்தமிழர்களின் பூர்விகத்தை பற்றி எள்ளி நகையாடிய கமல் ஏன் ஈழத்தமிழ்களின் நலன் பற்றி, அதுவும் தனது அறிமுக உரையில், குறிப்பிட்டாகவேண்டும்?

ஹிந்தியா உள்ளக வெளியாக உளவுத்  துறைகளின் எதிர்பார்த்திருக்காத துறை மற்றும் தளங்களில் சீமானின் அரசியல் சித்தாந்தம் ஊடுருவி ஆதரவு தளத்தை உருவாகிக்கியுள்ளது.

அதுவும் தமிழகத்தை தமிழரே ஆழ வேண்டும் என்ற வாதம் கிந்தியவிற்கும், ஹிந்தி மயப்படுத்தப்பட்ட தமிழ் நாட்டு மேல் தட்டு வர்க்கத்துக்கும் காய்ச்சிய வச்சிரத்தை ஒரே நேரத்தில் காதுகளிலும் , கண்களிலும், நாசிகளினுள்ளும் ஊட்டுவது போன்றது ஆகும். இது தமிழ்நாட்டு தமிழ்  தேசியத்தை சாதி கடந்து திரட்டி வருவது பி.ஜே.பி, காங்கிரஸ் மற்றும் முக்கியமாக ஹிந்தி மயப்படுத்தப்பட்ட தமிழ் நாட்டு மேல் தட்டு வர்க்கத்திற்கு நீண்ட கால, கேந்திர பாதுகாப்பு நெருக்கடியும் ஆகும்.            

ஆயினும் சீமானின் செயற்பாட்டு ஆளுகைக்கு ஈடு கொடுக்கமுடியுமா என்பது மிகவும் கேள்விக்குறியாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புன்னகை மன்னன் படத்தில் கமலகாசனின் உண்மை முக வசனம் ஒன்று இருக்கின்றது. அதில் அவரின் ஈழத்தமிழ் துவேசம் நன்றாகவே தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

புன்னகை மன்னன் படத்தில் கமலகாசனின் உண்மை முக வசனம் ஒன்று இருக்கின்றது. அதில் அவரின் ஈழத்தமிழ் துவேசம் நன்றாகவே தெரியும்.

புன்னகை  மன்னன்  படத்துக்கு,  கதை  வசனம்.....  எழுதியர்,  யார்.... என்று தெரியவில்லை.
அந்த... ஒற்றை வரியை...வைத்து, ஆட்களை மதிப்பது சரியல்ல, குமாரசாமி  அண்ணா.
அந்தப் படம் வந்து..... 35 ஆண்டுகளாகி இருக்கும் என நினைக்கின்றேன்.

"பழைய... புண்ணை... நோண்டினால்,  புழு தான்.... மிஞ்சும்."  அண்ணை. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

ஆனால் தமிழக தேர்தல் தொகுதி வாரி தேர்தல் என்பதால் வெற்றிக்கு கிட்ட கூட வர முடியவில்லை

சிறு திருத்தம்...

..,தமிழக தேர்தல் (தொகுதி)  'பண' வாரி தேர்தல் என்பதால் வெற்றிக்கு கிட்ட கூட வர முடியவில்லை...,

அது நின்றாலே போதுமே...

***

சீமான் ஆடடையைப் போட்டது 1.1% வாக்குக்கள்

திமுக வெற்றியை இழந்தது 1% வாக்குகளால்...

*****

மக்கள் நம்பிக்கை இழக்கும் முன்னர், ஆரம்பத்தில் விஜயகாந்த் 10% வரை வாக்குகள் தனித்து எடுத்திருந்தார்.

காலம் எடுக்கலாம். ஆனால் உறுதியாக இருந்தால், தனித்து நின்று காமராஜர் கால காங்கிரசை வீழ்த்திய திமுக போல, வளர முடியும்.

பட்டி, தொட்டி எங்கும் திமுக பிரச்சாரம் செய்தே வென்றது. கருணாநிதி அன்று செய்த அதே கடின உழைப்பினை இன்று சீமான் தருகிறார். 

ஒரு நாள் பலன் கிடைக்கும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன்

எங்கேயோ  உதைக்குது??

இப்படித்தான்  பலரும்  மக்களின் தலைமீது மிளகாய் அரைக்கிறார்கள்

கட்சியே  தொடங்கவில்லை

முதல்வர் கனவு.....

கமல்ஹாசன் குறித்து அன்றைக்கே எச்சரித்த ஐயா மணிவண்ணன்...

https://www.facebook.com/ThimiruPidichaTamizhanDa/?hc_ref=ARRF2Tmjk6C_UOTOeFGA8BW6HzdBpVr8AvCkbVQiNiYpEzqZDSTEeji1wiJhrI92UWA&fref=nf#

https://www.facebook.com/ThimiruPidichaTamizhanDa/?hc_ref=ARRF2Tmjk6C_UOTOeFGA8BW6HzdBpVr8AvCkbVQiNiYpEzqZDSTEeji1wiJhrI92UWA&fref=nf

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

இந்த விடயங்களை.... 
"விரல்  நுனியில்"  வைத்திருந்து, பதில்  எழுதுவதற்கு..... "நாதமுனி"  திறமான ஆள். :)

நம்மல 'வைச்சு', செய்யல தானே தல:grin: 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பணம் ஒன்றே தமிழக் தேர்தலையும் பார்சல் பிரியாணியும் குவாட்டரும்  இதிலடக்கம்  எவர் வந்தாலும் தமிழனை அடக்க  இந்தியா என்ற நூலுக்கு தெரியும் விட்டுத்தான் பிடிக்கும் இதில் நாமும் வீழ்வோம் ஏனென்றால் திரைப்படங்களிலும் சரி பேச்சுக்களிலும் சரி  வீரப்பேச்சுகளிலும் சரி விழந்து எழுந்தவர்கள் நாம் கமல் மட்டும் எம்மாத்திரம் முதலமைச்சராக வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி  மாற்றம் என்பதை தமிழ் நாட்டில் கொண்டுவருவதென்பது  ஒரு தொப்பிக்காக ஒட்டு மொத்த தொப்பிகளையும் குரங்குக்கு எறிந்து விட்டு காத்திருப்பது போல  என்னைப்பொறுத்த வரைக்கும் :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, தமிழ் சிறி said:

புன்னகை  மன்னன்  படத்துக்கு,  கதை  வசனம்.....  எழுதியர்,  யார்.... என்று தெரியவில்லை.
அந்த... ஒற்றை வரியை...வைத்து, ஆட்களை மதிப்பது சரியல்ல, குமாரசாமி  அண்ணா.
அந்தப் படம் வந்து..... 35 ஆண்டுகளாகி இருக்கும் என நினைக்கின்றேன்.

"பழைய... புண்ணை... நோண்டினால்,  புழு தான்.... மிஞ்சும்."  அண்ணை. 

சிறித்தம்பி! கமலகாசன் பேசுவது செயல்படுத்த நினைப்பது ஊழல் அரசியல் ஒழிப்பை மட்டும் தான். சர்வதேச அரசியலைபற்றியல்ல. எமது அரசியல் பிரச்சனை உலக மற்றும் ஆசியா கண்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனை. பலர் கையைவைத்து சூடு தாங்காமல் வெளியேறிய சிக்கல் பிரச்சனை.

தமிழ்நாட்டுக்கு ஊழல் புரட்சிக்கும் பசுமை புரட்சிக்கும் சீமான் போதும். கமல் ரஜனி போன்ற  கவர்ச்சி அரசியல் விளையாட்டு இனியும் எடுபடாது என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

ரஜனியை கொண்டுவர முயன்றது, பாஜக. எதிர்ப்பு.... அவரும் வழக்கம் போல ஜவ்வாக இழுக்கிறார்.

இவரை சைற்றாக வளர்த்துக் கொண்டு வந்தது, இப்போ முழுதாக இறக்கப் பார்கிறது.

அய்யங்கார்.... பிராமணர்களுக்கு சந்தோசம்.

ஆனால் இவர் போனியார் போல தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/22/2017 at 1:37 PM, நிழலி said:

இவற்றை சொல்லிக் கொண்டு இருக்கும் காலம் வரைக்கும் சீமானால் தேர்தலில் கட்டுப் பணத்தை கூட பெற முடியாது.

ஆனால் அண்மை காலங்களில் தமிழக மக்களின் நலன்கள் பலவற்றுக்காக குரல் கொடுக்க தொடங்கி இருப்பது நல்ல மாறுதல் (நீட்டுக்கு எதிராக, கதிரமங்கலம் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக செயல்பாடுகளில் சீமானை காண முடிந்தது)

இந்த மதிரியான விம்பமே சீமான் போன்றவர்களுக்கு இருக்கும் கெடுதல். சீமான் ஈழம் என்று மட்டும் பேசியது 2008, 2009, 2010 ஆண்டுகள்தான். அதன்பின் தமிழ்நாட்டின் பிரச்சினைகள், உரிமைகள் குறித்த கொள்கை முடிவுகளை எடுத்து அறிவித்து பயணிக்கிறார்கள். ஆனால் பொது வெளியில் என்னவோ சீமான் என்றால் ஈழத்தமிழர் பற்றி பேசி புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பறிப்பவர் என்கிற புரிதல்தான் உண்டு.

அண்மையில் ரஞ்சித் விடயத்தில்கூட ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக குரல்கொடுத்தாரா என்றெல்லாம் கேட்டார்கள். அந்த இடங்களுக்கு சென்றது மட்டுமல்லாமல் அவற்றை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளார்கள். ஆனால் ஊடகங்களில் வெளிவராமையால் பொதுவெளியில் தெரிவதில்லை.

இன்று தமிழகத்தில் 25 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாக நாம் தமிழர் கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன. இன்று கூட டிகே எஸ் இளங்கோவன் (திமுக) நாம் தமிழர் கட்சி திமுகவை அழிக்கப் பார்க்கிறது என்று முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். இவ்வளவு காலமும் எதுக்கு வீண் விளம்பரம் என்று இருந்தார்கள். ஆனால் ட்ரென்ட் மாறுவதை அவர்கள் கணித்தே வருகிறார்கள்.

இப்போது திருமுருகன் காந்தி கூட்டிச் செல்லும் தமிழர் விடியல் கட்சியை முன்னிலைப் படுத்த தொடங்குவார்கள் என நினைக்கிறேன். இதன் மூலம் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கப்போகும் வாக்குகளை சிதைக்க முடியும். ஏற்கனவே அவர்கள் சிறையில் இருந்து வெளிவந்து நாம் தமிழர் பாணியில் வேலை செய்ய தொடங்கிவிட்டார்கள் (மேடை அமைப்பதில்).

21994192_1923404177985711_50400238031493

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Nathamuni said:

ரஜனியை கொண்டுவர முயன்றது, பாஜக. எதிர்ப்பு.... அவரும் வழக்கம் போல ஜவ்வாக இழுக்கிறார்.

இவரை சைற்றாக வளர்த்துக் கொண்டு வந்தது, இப்போ முழுதாக இறக்கப் பார்கிறது.

அய்யங்கார்.... பிராமணர்களுக்கு சந்தோசம்.

ஆனால் இவர் போனியார் போல தெரியவில்லை.

அதிமுக/திமுக போன்ற இரு சுயநல கட்சிகளிடமிருந்து மக்கள் விடுதலை அடையை நினைக்கும் போது...... இரு கூத்தாடிகளும் வந்து குழப்புவதிலேயே குறியாக நிற்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, இசைக்கலைஞன் said:

இந்த மதிரியான விம்பமே சீமான் போன்றவர்களுக்கு இருக்கும் கெடுதல். சீமான் ஈழம் என்று மட்டும் பேசியது 2008, 2009, 2010 ஆண்டுகள்தான். அதன்பின் தமிழ்நாட்டின் பிரச்சினைகள், உரிமைகள் குறித்த கொள்கை முடிவுகளை எடுத்து அறிவித்து பயணிக்கிறார்கள். ஆனால் பொது வெளியில் என்னவோ சீமான் என்றால் ஈழத்தமிழர் பற்றி பேசி புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பறிப்பவர் என்கிற புரிதல்தான் உண்டு.

அண்மையில் ரஞ்சித் விடயத்தில்கூட ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக குரல்கொடுத்தாரா என்றெல்லாம் கேட்டார்கள். அந்த இடங்களுக்கு சென்றது மட்டுமல்லாமல் அவற்றை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளார்கள். ஆனால் ஊடகங்களில் வெளிவராமையால் பொதுவெளியில் தெரிவதில்லை.

இன்று தமிழகத்தில் 25 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாக நாம் தமிழர் கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன. இன்று கூட டிகே எஸ் இளங்கோவன் (திமுக) நாம் தமிழர் கட்சி திமுகவை அழிக்கப் பார்க்கிறது என்று முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். இவ்வளவு காலமும் எதுக்கு வீண் விளம்பரம் என்று இருந்தார்கள். ஆனால் ட்ரென்ட் மாறுவதை அவர்கள் கணித்தே வருகிறார்கள்.

இப்போது திருமுருகன் காந்தி கூட்டிச் செல்லும் தமிழர் விடியல் கட்சியை முன்னிலைப் படுத்த தொடங்குவார்கள் என நினைக்கிறேன். இதன் மூலம் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கப்போகும் வாக்குகளை சிதைக்க முடியும். ஏற்கனவே அவர்கள் சிறையில் இருந்து வெளிவந்து நாம் தமிழர் பாணியில் வேலை செய்ய தொடங்கிவிட்டார்கள் (மேடை அமைப்பதில்).

திருமுருகன் காந்தியின் மே 18 தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.

சீமானுக்கு, வெளியில் முகம் காட்டாத, பல பிரபலங்களின் ஆதரவு, ஆலோசனை உண்டு. சகாயம் போன்ற அதிகாரிகள் பின்புல ஆதரவும் உண்டு.

முக்கியமாக இஸ்லாமிய மக்கள் சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். .அவர்களிடையே ஆதரவுத் தளம் அதிகரிக்கின்றது 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

திருமுருகன் காந்தியின் மே 18 தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.

சீமானுக்கு, வெளியில் முகம் காட்டாத, பல பிரபலங்களின் ஆதரவு, ஆலோசனை உண்டு. சகாயம் போன்ற அதிகாரிகள் பின்புல ஆதரவும் உண்டு.

முக்கியமாக இஸ்லாமிய மக்கள் சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். .அவர்களிடையே ஆதரவுத் தளம் அதிகரிக்கின்றது 

திருமுருகன் காந்தி போட்டியிடப்போவதில்லை. அவரது மே 17 என்பது இயக்கம். அது ஒரு கட்சி அல்ல என்பது சரிதான். அவர்கூட தேர்தல் அரசியல் வெற்றி பெறாது என உறுதிபட தெரிவித்து வருகிறார். ஆனால்..... tw_love:

அவருடன் சேர்ந்து பயணிக்கும் மார்ட்டின் டைசன், இளமாறன் போன்றவர்கள் (சேர்ந்தே கைதானவர்கள்) தமிழர் விடியல் கட்சி எனும் பெயரில் ஒரு கட்சியை நடத்துகிறார்கள்.  நான் மேலே இணைத்த படம் கூட அவர்களது மேடைதான். அதில்தான் திருமுருகன் காந்தியும் ஏறி நின்று பேசினார். இந்த டைசனும், இளமாறனும் முன்பு நாம் தமிழர் கட்சியில் இருந்தவர்கள். சீமான் தெலுங்கர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துவிட்டார் என்பதற்காக அவரது கொடும்பாவியை எரித்துவிட்டு தனிக்கட்சி கண்டவர்கள். tw_blush: அப்படி வந்தவர்களை திருமுருகன் காந்தி அரவணைப்பது என்பது எதேச்சையான செயலா? :love:

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, இசைக்கலைஞன் said:

சீமானும் அனுபவம் கொண்டவராக பழைய தவறுகளை விடுவதில்லை. தெலுங்கர், கன்னடர் என திட்டுவதில்லை. 

என்ன நோக்கத்துக்காக சீமானை எதிர்த்து வெளியேறினார்களோ அந்த காரணம் இப்போ இல்லை.

அரசியல் என்பது தனிமனித கவர்ச்சி (பில் கிளின்ரன், ரொனி பிளையர், ஜஸ்டின் ரூடியூ, எம்ஜீஆர்) அல்லது தனிமனித பேச்சுவன்மை (கிற்லர், ஓபாமா, கருணாநிதி, அண்ணாதுரை).

பேச்சுவன்மை இருந்தாலும், பேச்சில் 'அறிவார்ந்த விபரம்' இருக்க வேண்டும்.

இதில் இரண்டிலுமே சிறப்பனவர்கள்: பில் கிளின்ரன், ரொனி பிளையர்.

கறுப்பராயினும் அறிவார்ந்த பேச்சுவன்மையால் சிகரம் தொட்டவர் ஒபாமா.

தமிழகத்தில் இன்றைய திகதிக்கு அறிவார்ந்த பேச்சுவன்மைக்கு சீமான் தான்.

வைக்கோ, ஆளுமை தவறுகளால், வழி தடுமாறிவிட்டார்.

சீமான் தரமான ஆலோசனைகள் பெற்று, தன்னை சிறப்பாக முன்றேற்றுகிறார் என தெரிகிறது.

மேலாக கடின உழைப்பும் சேர்கிறது. 

திருமுருகன், சிறையிலடைக்கப்பட்ட கோபத்தில் இருக்கிறார் என புரிகிறது.

பார்ப்போம்.

On ‎9‎/‎24‎/‎2017 at 8:59 AM, இசைக்கலைஞன் said:

இந்த மதிரியான விம்பமே சீமான் போன்றவர்களுக்கு இருக்கும் கெடுதல். சீமான் ஈழம் என்று மட்டும் பேசியது 2008, 2009, 2010 ஆண்டுகள்தான். அதன்பின் தமிழ்நாட்டின் பிரச்சினைகள், உரிமைகள் குறித்த கொள்கை முடிவுகளை எடுத்து அறிவித்து பயணிக்கிறார்கள். ஆனால் பொது வெளியில் என்னவோ சீமான் என்றால் ஈழத்தமிழர் பற்றி பேசி புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பறிப்பவர் என்கிற புரிதல்தான் உண்டு.

இது தொடர்பாக கேள்விகள் இருக்கு

நாம் தமிழர் அமைப்பு புலம்பெயர் நாடுகளில் ஈழ தமிழர்களை பெரும்பான்மையாக உள்வாங்கி அவர்களை குறி வைத்து ஏன் கிளைகளை (உதாரணம் நாம் தமிழர் - கனடா) உருவாக்கினார்கள் இசை? போன வருடத்துக்கும் முதல் வருடம் போட்டி மாவீரர் தினம் வேறு வைத்தார்கள். பல கடைகளில் அவர்களுக்கான உண்டியல் இருந்ததை நானே கண்டுள்ளேன். முக்கியமாக புலிகளின் சொத்துக்களை கனடாவில்  ஆட்டைய போட்டு தம் வியாபாரத்தை பரப்பிய முதலாளிமார்களிற்கும் சீமானுக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றி அறிந்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.
இவற்றை விட   கலை கலாச்சார விடயங்களுக்காக  கடந்த ஆண்டு  ஐரோப்பியாவில் பல உப அமைப்புகளை கலை உருவாக்க  தொடங்கினார்கள் என்று யாழிலும் செய்தி பார்த்த நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நிழலி said:

அவர்களது முதன்மையான கொள்கை தமிழர்களை உலக அளவில் ஒன்றிணைப்பது. அது எமது போராட்டம் நடந்த காலத்திலேயே கொள்கை ரீதியில் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்தது. ஆனால் மிகப்பெரிய சனத்திரள் கொண்ட தமிழகம் அதிலிருந்து விடுபட்டுவிட்டது. அதற்கு பல்வேறு காரணிகள். இப்போது தமிழகம் இணைந்த ஒருமுகப்பட்ட ஒரு சக்தியை உருவகப்படுத்த நினைக்கிறார்கள். ஆனால் அதில் பல சிக்கல்கள் உண்டு. ஒருவரை அரவணைத்தால் இன்னொரு தரப்புக்கு அதிருப்தி இருக்கும். மேலும், பல உள்குத்துகளை அறியாதவர்கள் அவர்கள். அதனால் கொள்கை ரீதியில் ஒரு முடிவை எடுத்து வைத்துள்ளார்கள்.

அதாவது தமிழர் குழுமங்கள் உள்ளாக இருக்கும் தகராறுகளை யாரும் தீர்க்கப் போவதில்லை. அதனால் அதில் நேரத்தை செலவிடுவது விரயம். அதை எல்லாம் பிறகு வைத்துக் கொள்ளலாம். இணைந்து செல்பவர்களுடன் இணைந்து பயணிப்பதுதான் கால ஓட்டத்திற்கு ஏற்றது. இதன் காரணமாகவே, லைக்கா சுபாஸ்கரனை எதிர்க்க அவர்கள் விரும்பவில்லை. 

அவர்கள் உண்டியல் பணம் சேர்ப்பது எங்கும் நடப்பதுதான். ஆனால் இங்கிருந்து எல்லாம் சரியாக நடக்கிறதா என்பது எனக்கு தெரியாது. நான் எதிலும் இணைந்து பயணிக்கவில்லை.

ஆக மொத்தத்தில், தமிழகத்தின் மூலம் கிடைக்கக்கூடிய ஆட்சி அதிகாரம், அதன் மூலம் இந்தியத்திடம் காட்டக்கூடிய வலிமை இதை நோக்கியே பயணப்படுகிறார்கள். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முதலில் தமிழகத்தில் அதிகாரத்தை மீண்டும் சரியான தமிழ் தலைமை வசம் கொண்டு வர வேண்டும் என்பதை நோக்கி பயணிக்கிறார்கள். 

மேலும், கிடைக்கும் நன்கொடைகளை ஒவ்வொரு மாதமும் இளையதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

http://www.naamtamilar.org/downloads/Naam-Tamilar-Katchi-Development-Fund-income-expenditure-report-Augest-2017.pdf

Edited by இசைக்கலைஞன்

29 minutes ago, இசைக்கலைஞன் said:

ஆக மொத்தத்தில், தமிழகத்தின் மூலம் கிடைக்கக்கூடிய ஆட்சி அதிகாரம், அதன் மூலம் இந்தியத்திடம் காட்டக்கூடிய வலிமை இதை நோக்கியே பயணப்படுகிறார்கள். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முதலில் தமிழகத்தில் அதிகாரத்தை மீண்டும் சரியான தமிழ் தலைமை வசம் கொண்டு வர வேண்டும் என்பதை நோக்கி பயணிக்கிறார்கள். 

நல்லது, தமிழக தமிழர்களுக்கு நல்ல தலைமை ஒன்று வரவேண்டும் என்பதற்கும் நல்ல தமிழ் தலைமை வேண்டும் என்பதற்கும் இடையில் கடும் வேறுபாடு உண்டு. முதலில் தமிழ் தலைமை என்பது என்பதில் உள்ள தமிழ்  அடையாளம் பற்றி  கேள்விகள் உண்டு. சீமான் தமிழ் என்று அடையாளப்படுத்துவதும் டொனால் ட்ரம் 'அமெரிக்கர்களே முதல்' என்று முழங்குவதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இல்லை என்பது என்னை போன்றவர்களின் கருத்து. முதலாவது சனநாயகம் இரண்டாவது பாசிசம்.
புலம்பெயர்  நாடுகளில் தேர்தல் அரசியல் மூலம் படிப்படியாக  எம்மவர்கள் அரசியல் அரங்கை நோக்கி நகர்கின்ற இக் கால கட்டத்தில் இப்படியான சீமானின் / ட்ரம்பின் வாதங்களை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளவே முடியாது

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

இது ஒத்துக்கொள்ளப்பட வேண்டிய கருத்து. ஆனால் களத்தின் தன்மைதான் ஒரு தனி நபரினது அல்லது குழுவினது நடவடிக்கைகளை இங்கு தீர்மானிக்கின்றது. கடந்த ஐம்பது ஆண்டுகால அரசியல் என்பது 18 மைல் தொலைவில் வாழ்ந்த சக தமிழரைக்கூட காப்பதில் தவறி விட்டது என்பதே உண்மை. காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் விளைவு ஒன்றுதான்.

இதற்கு உள்ளிருந்து ஒரு சுய பரிசோதனையில் இறங்குவது அவசியமாகிறது. இந்தியாவின் வருவாயில் இரண்டாவது அல்லது மூன்றாவது நிலையில் (அதாவது இந்தியாவை ஓரளவுக்கு தாங்கிப் பிடிக்கின்ற) ஒரு மாநிலத்து மக்களால் தம் சக இனத்தவரை ஏன் காக்க முடியாமல் போனது? காரணம் எதுவாயினும், கடந்த ஐம்பது ஆண்டுகால அரசியல் வேலைக்கு ஆகவில்லை என்பது உண்மையானது. ஆனால் அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை கூறுவார்கள். நாம் தமிழர் கட்சியின் கூற்று என்பது இத்தனை காலமும் தமிழர் அறம் சார்ந்த ஆட்சி நடக்கவில்லை என்பது. தமிழகத்தின் முதன்மைக் கட்சிகளில் தமிழர் தலைமை இல்லை என்பது கண்கூடு. ஆனால் இதுவேதான் காரணமா என்பது விவாதிக்கப்பட வேண்டியதுதான்.

ட்ரம்ப் உதாரணம் இதற்கு சரியானது என்பதாக நான் நினைக்கவில்லை. அமெரிக்காவில் வெள்ளையர்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்து இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் வெள்ளையர்கள் லட்சக்கணக்கில் ஸ்பானியர்களாலும், ஆபிரிக்க கறுப்பர்களாலும் கொன்று குவிக்கப்பட்டிருந்தால் ட்ரம்ப் உதாரணம் சரியாக இருந்திருக்கும். ஆட்சித் தலைமை கறுப்பரிடம் போனாலும், அதிகாரம் என்பது அமெரிக்காவில் வெள்ளையர் வசமே இருந்து வருகிறது. தமிழ் நாட்டில் யார் ஆண்டாலும், அதிகாரம் என்பது இதுவரையிலும் தமிழர் வசம் இருந்ததில்லை (காமராஜர் உட்பட). காமராஜர் உறுதியான தலைவராக இருந்தாலும் தேசியப் பார்வையையே கொண்டிருந்தார். இதனால் மாநிலப் பிரிவினையில் தமிழர் பகுதிகள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பகுதிகளுக்கு செல்ல காரணமாக இருந்தார்.

இந்தக் கருத்தியலுக்கு (தமிழரை தமிழரே ஆள வேண்டும்) என்பதற்கு ஆரம்பத்தில் பலத்த எதிர்ப்பு இருந்தது. காலப்போக்கில் எப்படி மாறுபட்டு வருகிறது என்பதை கவனியுங்கள்.

தமிழரை தமிழரே ஆளவேண்டும்.. (இது இனவெறி)
தமிழரை தமிழரே ஆள வேண்டும் (சரி.. யாரெல்லாம் தமிழர்)
தமிழரை தமிழரே ஆளவேண்டும் (ஓபிஎஸ், ஈபிஎஸ் எல்லாம் தமிழர்தானே)
தமிழரை தமிழரே ஆள வேண்டும் (நானும் பச்சை தமிலன் - ரஜினி tw_love:)
தமிழரை தமிழரே ஆளவேண்டும் (தமிழ்தேசியம் என்பது திராவிடத்தின் தோள்களில் நின்றுதான் பயணிக்க முடியும் - திருமுருகன் காந்தி)

கவனித்துப் பார்த்தீர்களானால் தமிழர்களை தமிழர்களே ஆளவேண்டும் என்பதை இப்போது யாரும் பெரிதாக எதிர்ப்பதில்லை. அது ஒத்துக்கொள்ளப்பட்டுவிட்டது. நாங்களும் தமிழர்கள்தான் என பலர் வருகிறார்கள். அதில் கரிகரசிங் ராஜாவும் (எச். ராஜா) அடக்கம். tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.