Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் தமிழ்ப் பெண் அடித்து கொலை- கணவன் கைது! 

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, colomban said:

நான் ஓர் கேள்வி கேட்கின்றேன். கடும் குளிரில் இரவிரவாக வேலை செய்துவிட்டு வருகின்றீர்கள். உடலெல்லாம் வலிக்கிறது. மேலதிகாரியும் கூட இரக்கமின்றி நடந்துகின்றார். இருக்கின்ற வேலையையும் விடமுடியாத சூழ்நிலை. மனம் சோர்ந்து வருகின்றீர்கள். வீட்டை வந்தவுடன் மனைவி போனில் யாரிடமோ கூறுகின்றது உங்களுக்கு கேட்கின்றது.

இந்த வந்துட்டார் வெத்து வேட்டு, பக்கத்து வீட்டுகாரன் 5 மணித்தியாலம்தான் வேலை செய்கின்றார் மெர்சடீச் பென்ஸ் வைதிருக்கின்றான், இவர் 10, 12 மணித்தியாலம் வேலைசெய்கிறேன் என்கின்றார் ஒன்றும் மிச்சமிலை. இவரை கட்டி 5 சதத்திற்கும் பிரயோஜனமில்ல்லை என்ர வாழ்க்கை.

இப்பொழுது உங்கள் ரியக்கஷன் எப்படி இருக்கும்?

உண்மையா மனதில் இருந்து பதிலெழுதுங்கள்?

நல்ல சமூகசாரத்தை சொல்லியிருக்கின்றீர்கள் கொழும்பான்.
பல குடும்பங்களில் பிரச்சனைக்குரிய வாக்குவாதம் இது.
அவர் அப்பிடி உழைக்கிறார்...இவர் இப்பிடி உழைக்கிறார்....அவருக்கு அந்தாமாதிரி சம்பளம்....அவவுடை புருசன் வேலைக்கு போவார் வருவார் சாப்பிடுவார் படுப்பார்.

அவவுடை புருசன் இல்லாட்டி அந்த ஒவ்வீஸ்சே நடக்காதாம்
அவையள் வருசத்திலை 3 தரம் கொலிடே போவினம்.
அவையள் பள்ளிக்கூட லீவுக்கெல்லாம் ஒவ்வொரு நாட்டுக்கெல்லாம் போவினம்
அவையிட்டை 3 வீடு இருக்கு..அதிலை 2 வீட்டை வாடகைக்கு விட்டிருக்கினம்
சிற்றியிலை 2 கடை வைச்சிருக்கினம்
அந்தக்கடையிலை அவவுடைய புருசன் பாட்னர்
அவவின்ரை புருசன் ஊரிலையே கம்பஸ் முடிச்சுத்தான் இஞ்சை வந்தவர்.
அவையள் ஆளுக்கொரு கார் வைச்சிருக்கினம்..
இப்படி கொமண்ஸ்கள் பல வீடுகளில் இருக்கும்.
விரலுக்கேற்ற வீக்கம் என்ற சித்தாந்தம் ஓவொருவர் மனதிலும் வந்தால் கருத்து வேறுபாடுகள் குறையும்.

மற்றவரை பார்த்து வாழ ஆசைப்பட்டால் கோடீஸ்வரன் குடும்பத்திலும் குழப்பம் வரும்.

Sophia & Lageevan Nathan

Please help my niece and nephew who has lost their mother. She was well known in Malvern as the lunchroom supvervisor at Alexander Striling Public School

She was domestically abused which lead to her unforunate death.

She leaves behind a daughter, Sophia  who is currently in first year university  studying for nursing & son, Lageevan who is currently in grade 11.

Any donations will be greatly apprieciated for these kids future and their education.
 
https://www.gofundme.com/sophia-lageevan-nathan

6 hours ago, colomban said:

நான் ஓர் கேள்வி கேட்கின்றேன். கடும் குளிரில் இரவிரவாக வேலை செய்துவிட்டு வருகின்றீர்கள். உடலெல்லாம் வலிக்கிறது. மேலதிகாரியும் கூட இரக்கமின்றி நடந்துகின்றார். இருக்கின்ற வேலையையும் விடமுடியாத சூழ்நிலை. மனம் சோர்ந்து வருகின்றீர்கள். வீட்டை வந்தவுடன் மனைவி போனில் யாரிடமோ கூறுகின்றது உங்களுக்கு கேட்கின்றது.

இந்த வந்துட்டார் வெத்து வேட்டு, பக்கத்து வீட்டுகாரன் 5 மணித்தியாலம்தான் வேலை செய்கின்றார் மெர்சடீச் பென்ஸ் வைதிருக்கின்றான், இவர் 10, 12 மணித்தியாலம் வேலைசெய்கிறேன் என்கின்றார் ஒன்றும் மிச்சமிலை. இவரை கட்டி 5 சதத்திற்கும் பிரயோஜனமில்ல்லை என்ர வாழ்க்கை.

இப்பொழுது உங்கள் ரியக்கஷன் எப்படி இருக்கும்?

உண்மையா மனதில் இருந்து பதிலெழுதுங்கள்?

நீங்கள் விபரிக்கும் சூழ்நிலையில் மனைவிக்க்கு காது கிளிய வெழுக்கவேணும் என்ற பதில் சரியான விடை இல்லை.  உறவுகளுக்குள் ஏற்படும் சந்தோசம் சார்ந்த நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக அணுகவேணும் மேலே நீங்கள் சொல்லும் உணர்வுகளை சிதைக்கும் சூழ்நிலைகளை அறிவுபூர்வமாக அணுகவேணும். எம்மவர்கள் எல்லாவற்றையும் உணர்சிவசப்பட்டு அணுகுவது பிரச்சனைக்குரியது மேலும் எல்லாவிடத்திலும் எல்லாக் காலத்திலும் நடமுறைக்கு சாத்தியம் இல்லை.

நீங்கள் சுட்டிக்காட்டும் சம்பவத்தில் பக்கத்து வீட்டுக்காரனே இவர்கள் வாழ்கையை தீர்மானிக்கின்றான். கணவன் பாடுபட்டு பக்கத்துவீட்டுக்காரன் போல் சமபாத்தித்து பென்ஸ் கார் வாங்கினால் பி எம் டபிள் யு வைத்திருக்கும் முன் வீட்டுக்காரன் இவர்கள் வாழ்கையை தீர்மானிப்பான். இவ்வாறான மன நிலைக்கு முடிவில்லை. இவர்கள் தமக்கான வாழ்வை தமது பொருளாதார வாளம் சார்ந்து தீர்மானிப்பதில்லை. சந்தோசம் நிம்மதி என்பது சாத்தியமில்லை. அதிக மன அழுத்தம் இரத்த அழுத்தம் வன்முறை பின் தண்டனை அனுபவித்தல் குழந்தைகள் பாதிக்கப்படுதல் என்பனவே சாத்தியம். மனைவியை அடிப்பதோ அடித்து திருத்துவதோ சாத்தியமில்லை. அதற்கான அவசியமும் இல்லை. பிரிந்து செல்லவேண்டியதுதான். 

குடும்பத்தில் மனைவி வீட்டையும் பிள்ளைகளையும் பாராமரித்தால் கணவன் வேலைக்கு போய் சம்பாதித்தால் அது ஒரு சமநிலை. இல்லை இருவரும் பாதி பாதியாக பராமரித்து இருவரும் வேலை செய்தால் அது ஒரு சமநிலை. இல்லை ஒருவருக்கு உடல் நலம் குன்றினால் மற்றவர் குடும்ப பாரத்தை சுமப்பது ஒரு புரிந்துணர்வு சார்ந்த சமநிலை. இவைகளுக்கு அப்பால் பென்ஸ் காருக்கும் வருமானத்துக்கு மேல் வீட்டு மோர்க்கேஜ் கட்டுமளவுக்கு வீடு வாங்குதலும் தங்கம் வைரம் நெக்லஸ் அட்டியல் என்ற ஆடம்பரங்களுக்கும் அடுத்தவன் போல் வாழவேண்டும் என்ற ஓப்பீட்டு வாழ்க்கையும் சமநிலையை தகர்த்தெறியும். சமநிலை குலையும் இடத்தில் இருக்கமுடியாது அது ஆரோக்கியமும் கிடையாது. அறிவுக்கு ஏற்புடையதும் இல்லை. சமநிலை குலைந்த இடத்தில் வளரும் குழந்தைகளுக்கும் மனநிலை பாதிக்கப்படும். 

குடும்ப வாழ்ககை என்பது வியாபாரம் இல்லை. ஒருவர் முதலாளி மற்றவர் தொழிலாளி இல்லை. ஒருர் அரசன் மற்றவர் அடிமை இல்லை. ஒருவர் உழைப்பை மற்றவர் உறிஞ்சி வாழ முடியாது. இருவருக்கும் சமமான பொறுப்புணர்வும் அதை ஏற்றுக்கொள்ளும் புரிதலும் சார்ந்தது. இவ்வாறான விசயங்களை காதலிக்கும் போதோ இல்லை கலியாணமானபுதிதிலோ இருவரும் தாராளமாக கலந்துரையாடுவது மிக நல்ல பலனைத் தரும். 

அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருவர் சேர்ந்து மேற்கொள்ளும் ஒரு கட்டுமானமே குடும்பம்.  ஒருவர் கட்ட மற்றவர் இடிப்பது போன்றதே நீங்கள் எழுதிய சூழல். இக் கட்டுமானத்தில் ஒருவருக்கு என்னுமொருவருடன் ஏற்படும் கள்ளத் தொடர்பு கூட  ஒரு குண்டு வெடிப்பது போல் கட்டுமானம் சிதறுவதுண்டு. இருந்தாலும் பலர் இக் குண்டுகளை வெடிக்காமலும் பார்த்துக்கொள்வார். இறுதியாக இக்கட்டுமானம் ஒருவருக்கு மற்றவர் கட்டும் சமாதியாக இருக்க முடியாது அதனால் சில பிரிவுகளும் அவசியமாகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, சண்டமாருதன் said:

ஒரு இயலாத கணவனைப்பார்த்து (அவரால் அவ்வளவுதான் முடியும்) /படிப்பறிவில்லாத கணவனை பார்த்து ஒரு மனைவி இன்னொரு பெண்ணின் கணவனின் திறைமைகளை ஒப்பிட்டு வாழும் தமிழ்ச்சமூகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எமது ஊர்ப்பாசையில் சொல்லப்போனால் "நீயும் இருக்கிறியே" இந்த சொல்தான் பல குடும்பங்களின் பிரச்சனைக்கு மூல காரணம்.

இந்த கருத்தின் மூலம் பெண்களை தாக்குவது சித்திரவதை செய்வது என்பதற்கு வக்காலத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

 பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டாணால் எத்தாலும் கூடி யிருக்கலாம் - சற்றேனும் ஏறுமா றாகஇருப்பாளே ஆமாயின் கூறாமல் சந்நியாசம் கொள்.

 வைத்திய சாலைக்கு சென்று அங்கும்  ..சரிவரவிடடால் . நிறை குடிகாரரை திருத்தும் அமைப்புக்களும் இருக்கின்றன.   ஆனால் சிங்கன்கள் செல்ல மாடடார்கள் . நிறுவனங்களை பிடித்து அனுப்பி வைக்க வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/19/2017 at 10:02 AM, குமாரசாமி said:

நல்ல சமூகசாரத்தை சொல்லியிருக்கின்றீர்கள் கொழும்பான்.
பல குடும்பங்களில் பிரச்சனைக்குரிய வாக்குவாதம் இது.
அவர் அப்பிடி உழைக்கிறார்...இவர் இப்பிடி உழைக்கிறார்....அவருக்கு அந்தாமாதிரி சம்பளம்....அவவுடை புருசன் வேலைக்கு போவார் வருவார் சாப்பிடுவார் படுப்பார்.

அவவுடை புருசன் இல்லாட்டி அந்த ஒவ்வீஸ்சே நடக்காதாம்
அவையள் வருசத்திலை 3 தரம் கொலிடே போவினம்.
அவையள் பள்ளிக்கூட லீவுக்கெல்லாம் ஒவ்வொரு நாட்டுக்கெல்லாம் போவினம்
அவையிட்டை 3 வீடு இருக்கு..அதிலை 2 வீட்டை வாடகைக்கு விட்டிருக்கினம்
சிற்றியிலை 2 கடை வைச்சிருக்கினம்
அந்தக்கடையிலை அவவுடைய புருசன் பாட்னர்
அவவின்ரை புருசன் ஊரிலையே கம்பஸ் முடிச்சுத்தான் இஞ்சை வந்தவர்.
அவையள் ஆளுக்கொரு கார் வைச்சிருக்கினம்..
இப்படி கொமண்ஸ்கள் பல வீடுகளில் இருக்கும்.
விரலுக்கேற்ற வீக்கம் என்ற சித்தாந்தம் ஓவொருவர் மனதிலும் வந்தால் கருத்து வேறுபாடுகள் குறையும்.

மற்றவரை பார்த்து வாழ ஆசைப்பட்டால் கோடீஸ்வரன் குடும்பத்திலும் குழப்பம் வரும்.

நல்ல வேளை...!

எமது கலாச்சாரத்தில்...வேட்டி, கோவணம், களிசான், சாரம், காற்சட்டை போல உடுப்புகள் இருப்பது...!

இருந்திரா விட்டால்....நம்ம கதி...!

அங்கை பார் .....எவ்வளவு பெரிசாயிருக்குது...ம்ம்ம் !

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, சண்டமாருதன் said:

நீங்கள் விபரிக்கும் சூழ்நிலையில் மனைவிக்க்கு காது கிளிய வெழுக்கவேணும் என்ற பதில் சரியான விடை இல்லை.  உறவுகளுக்குள் ஏற்படும் சந்தோசம் சார்ந்த நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக அணுகவேணும் மேலே நீங்கள் சொல்லும் உணர்வுகளை சிதைக்கும் சூழ்நிலைகளை அறிவுபூர்வமாக அணுகவேணும். எம்மவர்கள் எல்லாவற்றையும் உணர்சிவசப்பட்டு அணுகுவது பிரச்சனைக்குரியது மேலும் எல்லாவிடத்திலும்  எல்லாக் காலத்திலும் நடமுறைக்கு சாத்தியம் இல்லை.

நீங்கள் சுட்டிக்காட்டும் சம்பவத்தில் பக்கத்து வீட்டுக்காரனே இவர்கள் வாழ்கையை தீர்மானிக்கின்றான். கணவன் பாடுபட்டு பக்கத்துவீட்டுக்காரன் போல் சமபாத்தித்து பென்ஸ் கார் வாங்கினால் பி எம் டபிள் யு வைத்திருக்கும் முன் வீட்டுக்காரன் இவர்கள் வாழ்கையை தீர்மானிப்பான். இவ்வாறான மன நிலைக்கு முடிவில்லை. இவர்கள் தமக்கான வாழ்வை தமது பொருளாதார வாளம் சார்ந்து தீர்மானிப்பதில்லை. சந்தோசம் நிம்மதி என்பது சாத்தியமில்லை. அதிக மன அழுத்தம் இரத்த அழுத்தம் வன்முறை பின் தண்டனை அனுபவித்தல் குழந்தைகள் பாதிக்கப்படுதல் என்பனவே சாத்தியம். மனைவியை அடிப்பதோ அடித்து திருத்துவதோ சாத்தியமில்லை. அதற்கான அவசியமும் இல்லை. பிரிந்து செல்லவேண்டியதுதான். 

குடும்பத்தில் மனைவி வீட்டையும் பிள்ளைகளையும் பாராமரித்தால் கணவன் வேலைக்கு போய் சம்பாதித்தால் அது ஒரு சமநிலை.          இல்லை இருவரும் பாதி பாதியாக பராமரித்து இருவரும் வேலை செய்தால் அது ஒரு சமநிலை.   இல்லை ஒருவருக்கு உடல் நலம் குன்றினால் மற்றவர் குடும்ப பாரத்தை சுமப்பது ஒரு புரிந்துணர்வு சார்ந்த சமநிலை. இவைகளுக்கு அப்பால் பென்ஸ் காருக்கும் வருமானத்துக்கு மேல் வீட்டு மோர்க்கேஜ் கட்டுமளவுக்கு வீடு வாங்குதலும் தங்கம் வைரம் நெக்லஸ் அட்டியல் என்ற ஆடம்பரங்களுக்கும் அடுத்தவன் போல் வாழவேண்டும் என்ற ஓப்பீட்டு வாழ்க்கையும் சமநிலையை தகர்த்தெறியும். சமநிலை குலையும் இடத்தில் இருக்கமுடியாது அது ஆரோக்கியமும் கிடையாது. அறிவுக்கு ஏற்புடையதும் இல்லை. சமநிலை குலைந்த இடத்தில் வளரும் குழந்தைகளுக்கும் மனநிலை பாதிக்கப்படும். 

குடும்ப வாழ்ககை என்பது வியாபாரம் இல்லை. ஒருவர் முதலாளி மற்றவர் தொழிலாளி இல்லை. ஒருர் அரசன் மற்றவர் அடிமை இல்லை. ஒருவர் உழைப்பை மற்றவர் உறிஞ்சி வாழ முடியாது. இருவருக்கும் சமமான பொறுப்புணர்வும் அதை ஏற்றுக்கொள்ளும் புரிதலும் சார்ந்தது. இவ்வாறான விசயங்களை காதலிக்கும் போதோ இல்லை கலியாணமானபுதிதிலோ இருவரும் தாராளமாக கலந்துரையாடுவது மிக நல்ல பலனைத் தரும். 

அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருவர் சேர்ந்து மேற்கொள்ளும் ஒரு கட்டுமானமே குடும்பம்.  ஒருவர் கட்ட மற்றவர் இடிப்பது போன்றதே நீங்கள் எழுதிய சூழல். இக் கட்டுமானத்தில் ஒருவருக்கு என்னுமொருவருடன் ஏற்படும் கள்ளத் தொடர்பு கூட  ஒரு குண்டு வெடிப்பது போல் கட்டுமானம் சிதறுவதுண்டு. இருந்தாலும் பலர் இக் குண்டுகளை வெடிக்காமலும் பார்த்துக்கொள்வார். இறுதியாக இக்கட்டுமானம் ஒருவருக்கு மற்றவர் கட்டும் சமாதியாக இருக்க முடியாது அதனால் சில பிரிவுகளும் அவசியமாகின்றது.

25152037_1563021480447904_6589477432274588217_n.jpg?oh=f300a10fc32978409b50225c2e174021&oe=5AB7E7BB

Bild könnte enthalten: Text

அருமையான பதிவு, சண்டமாருதன்.
உங்கள் பதிலை... மூன்று முறைக்கு மேல்  திரும்பத், திரும்ப ரசித்து வாசித்தேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதில்கள். 

நான்மேலே குறிப்பிட்ட உதாரணத்தை விட மோசமாக பெண்கள் இரு சந்தர்ப்பங்களில் பேசுவதை கண்டுள்ளேன். அந்தப்பெண்கள் அவ்வாறு தாங்கள் கணவகளை பேசுவதை கண்டு அதிர்ந்து போய்விட்டேன். 
இவர்களை பார்க்கும்போது எனக்கு முதல் மரியாதை படத்தில் வடிவுக்கரசியைதான் ஞாபகம் வந்தது. (இது நடந்தது லண்டனில் வூல்விச் எனும் பகுதியில் நான் ஒர் தமிழ் கடையில் வேலை செய்தபோது)

இதில் ஒருவர் தனது கணவனின் அண்ணனை திருமணம் முடிப்பதாக கூறி விசா பெற்று வந்தவர். 

நான் கூற வருவது வீட்டு வன்முறைக்கு பெண்களின் மோசமானா வாயும் ஓரு காரணம். ஆனல் உலகம் எப்பொழுதும் பெண்களுக்கு சார்பாகவே பேசும் ஆண்களினது தியாககங்கள் / கண்ணீர்களை கண்டு கொள்ளாது.

இதனாலோ தெரியாது

அவ்வையார் ஓர் பெண்ணாக இருந்தும் பின்வருமாறு கூறுகின்றார்.

கொடியது
கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது
இன்புற அவர்கையில் உண்பது தானே.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, colomban said:

நான் கூற வருவது வீட்டு வன்முறைக்கு பெண்களின் மோசமானா வாயும் ஓரு காரணம். ஆனல் உலகம் எப்பொழுதும் பெண்களுக்கு சார்பாகவே பேசும் ஆண்களினது தியாககங்கள் / கண்ணீர்களை கண்டு கொள்ளாது.

இதனாலோ தெரியாது

அவ்வையார் ஓர் பெண்ணாக இருந்தும் பின்வருமாறு கூறுகின்றார்.

அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது
இன்புற அவர்கையில் உண்பது தானே.

இந்த செய்திக்கும், நீங்கள் தரும் விளக்கங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? ஒரு முழுநேர குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்டு கெளரவமான ஒரு வேலையில் இருந்து , குடும்பத்தையும் குடிகாரனையும் சாகும்வரை வாழவைத்த ஒரு பெண்மணிக்கும்....

 மோசமான வாய்கள் உள்ள பெண்மணிகள் என்று நீங்கள் விழிப்பதற்கும், இந்த பெண்ணை அடித்தே கொன்ற குடிகார ஆணுக்கும்  நியாயம் தர்மம் ரீதியில் ஏதாவது தொடர்பிருக்கா? இவர்களை  நீங்கள் அப்படி சொல்லவில்லையென்று ஒருவேளை சாதிக்கலாம், ஆனாலும் இவைகளை பேச இதுவா இடம்?

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்

இங்க பிரித்தானியாவில், இன்னோரு பிரச்னை இருக்குது பாருங்கோ.

வேறு என்ன, சாத்து வாங்கிற ஆம்பிள்ளையள் தான்..

http://www.independent.co.uk/voices/domestic-violence-male-victims-shelters-government-funding-stigma-a7626741.html

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/22/2017 at 5:56 AM, Nathamuni said:

இங்க பிரித்தானியாவில், இன்னோரு பிரச்னை இருக்குது பாருங்கோ.

வேறு என்ன, சாத்து வாங்கிற ஆம்பிள்ளையள் தான்..

http://www.independent.co.uk/voices/domestic-violence-male-victims-shelters-government-funding-stigma-a7626741.html

இருத்தி, முகம் திருத்தி

ஈரோடு பேன் வாங்கி

விருந்தினன் வந்ததென்று உரைக்க

ஆடினாள், பாடினாள்

முறமெடுத்து சாடினாள் - ஓடோடத்தான்.

-- ஔவையார்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Jude said:

இருத்தி, முகம் திருத்தி

ஈரோடு பேன் வாங்கி

விருந்தினன் வந்ததென்று உரைக்க

ஆடினாள், பாடினாள்

முறமெடுத்து சாடினாள் - ஓடோடத்தான்.

-- ஔவையார்

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.