Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் கொலை மர்மம் உடைக்கும் ‘தடா’ ரவி!

Featured Replies

‘இந்திய உளவுத்துறைகளின் கண்கள் அந்தப் ‘பொருளின்’ மீது விழுந்துவிட்டிருந்தது. ஆமாம், தமிழகத்துக்குள் இயங்கிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் மூன்று வயர்லெஸ் கருவிகளில் இரண்டு செயலிழந்து போய்விட்டன. மிஞ்சியிருப்பது ஒன்றுதான். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவுப்பிரிவுத் தலைவரான பொட்டம்மானுடன் நான் நேரடியாகப் பேசிக்கொள்ள கொடுக்கப்பட்டிருந்த கருவி அது. அதன் வழியாகத்தான் இருவரும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தோம். பேசி முடித்தவுடன் தொடர்புகளை அறுத்துக்கொண்டு வேறு இடத்துக்குக் கொண்டுபோய் பதுக்கிவிடுவேன். அவ்வப்போது வெளிப்படும் ‘சமிக்ஞை’யை வைத்து இந்த ரகசிய நடமாட்டத்தையும் கண்டுபிடித்துவிட்டிருந்தார்கள்...’

 


- முதல் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள இந்த வரிகளைப் படிக்கும்போது, ‘யார் இவர், என்ன சொல்லவருகிறார்’ எனப் புத்தகத்துக்குள் தேடத் துடிக்கிறது மனம். தன் அனுபவங்களைச் சொல்லும் இரா.பொ.ரவிச்சந்திரன் வேறு யாருமல்ல... ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதி. நளினி, சாந்தன், பேரறிவாளன், முருகனைப்போல் ரவிச்சந்திரனும் 27 ஆண்டுகளாக சிறைக்குள்தான் இருக்கிறார். ஆனால், மற்றவர்களைப் போல ரவிச்சந்திரனை பரவலாகத் தெரியாது.

p44d_1515146858.jpg

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட மற்றவர்களின் அனுபவங்கள் வேறு; ரவிச்சந்திரனின் அனுபவம் வேறு. நளினியோ, பேரறிவாளனோ இலங்கைக்குச் சென்றதில்லை. புலிகள் இயக்கத்தில் நேரடியாகப் பயிற்சி பெற்றவர்களும் இல்லை; பணியாற்றியவர்களும் இல்லை. ஆனால், ரவிச்சந்திரனுக்கு அந்த அனுபவம் உண்டு! அதுவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பாரதி மாஸ்டர், செல்வராஜ் மாஸ்டர் போன்றோரிடம் பயிற்சி பெற்றவர். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கியத் தளபதிகளான மில்லர், சூசை, டேவிட் உள்ளிட்டவர்களோடு சேர்ந்து சமர் புரிந்த அனுபவங்கள் உடையவர். இந்த விவரங்கள் தெரியவரும்போதுதான், ரவிச்சந்திரனின் பாத்திர முக்கியத்துவத்தை நம்மால் உணர முடிகிறது.

ஈழத்தில் அவர் நேரில் கண்ட காட்சிகளையும், தன் பயிற்சி அனுபவங்களையும், போர்க்களங்களையும் விவரிக்கும்போது, படிப்பவர்கள் மனதில் ஈரம் கசியும். ரவிச்சந்திரனின் அப்பா பெயர் பொய்யாழி. வேளாண் துறை அதிகாரியாக இருந்தவர். இப்போது இறந்துவிட்டார். இளவயதில் ஈழம் பற்றிப் படித்த, கேட்ட செய்திகளால் உந்தப்பட்டு, ‘ஈழ விடுதலைப்போரில் பங்கெடுக்க வேண்டும்; அதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர வேண்டும்’ என்ற எண்ணத்தோடு இருந்திருக்கிறார் ரவி. பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது, காலாண்டுத் தேர்வு கட்டத்திலேயே படிப்பைத் துறந்து, வீட்டிலிருந்து வெளியேறி ராமேஸ்வரம் சென்றவர், அங்கு அலைந்து திரிந்து அகதிகளின் படகில் யாழ்ப்பாணம் சென்று, பல சிரமங்களுக்கு மத்தியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிடிவாதமாகச் சேர்ந்தார். பிறகு, புலிகள் இயக்கத்தின் நலனுக்காகவே, அங்கிருந்து வெளியேறி மீண்டும் தமிழகம் வந்து தனி இயக்கம் ஆரம்பித்தவர். புலிகளுக்கு அத்தியாவசிய பொருள்களை அனுப்பி வைக்கும் உதவிகளைச் செய்து வந்தார். அந்த நிலையில், தமிழக கியூ பிரிவு போலீஸார் இவரைக் கைது செய்தார்கள். பிறகு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி இன்று ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கிறார். நல்ல ஆங்கில, சட்டப் புலமை பெற்றவராக இருக்கிறார். ஊடக வெளிச்சம்படாத மனிதராக இருப்பது குறிப்பிடத்தக்கது. ‘இரண்டு முறை ஜூ.வி-யில் தன்னைப் பற்றி வந்த செய்திகளைத் தவிர்த்து வேறெதுவும் இத்தனை ஆண்டுகளில் வெளிவந்தததில்லை’ என்கிறார். வழக்கில் சிக்கியது, சிவராசனின் செயல்பாடு என்ன, அவரின் உண்மையான திட்டம் என்ன என்பது உள்ளிட்ட பல அதிர்ச்சி, திருப்புமுனைத் தகவல்களை இந்தப் புத்தத்தில் தெரியப்படுத்தியுள்ளார். கடந்த காலங்களில் ரவிச்சந்திரன் அவ்வப்போது எழுதி வைத்திருந்ததை எல்லாம் அவரின் வழக்கறிஞர் T. திருமுருகன் உதவியோடு பெற்று, முறைப்படுத்தி, விறுவிறுப்பாகத் தொகுத்துள்ளார் பா.ஏகலைவன். ‘யாழ்’ பதிப்பகத்தின் வெளியீடாக வரும் ‘சிவராசன் டாப் சீக்ரெட்’ புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே...


‘ஒரு தேசத்தின் அடுத்த பிரதமர் யார்’ என்பதைத் தீர்மானிக்கும் முக்கியத் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் புகைப்படம் எடுக்க வருவார்கள் என்பது யாரும் அறிந்த ஒன்றுதான். அந்தச் சாதாரண விஷயம்கூட விடுதலைப்புலிகள் போன்ற ஓர் அமைப்புக்கும் அதன் தலைமைக்கும் தெரியாதா? மிக ரகசியமான ஒரு கொலைத் திட்டத்தைப் புகைப்படம் எடுக்கத் திட்டமிட்டிருந்தால், அதற்கென தனியாக ஒரு புகைப்படக்காரரைப் பயன்படுத்தி இருப்பார்களே? விடுதலைப்புலிகளிலேயே திறமையான புகைப்படக்காரர்கள் இருக்கிறார்களே? அப்படியே அந்தப் புகைப்படம் எடுப்பவர் இறந்திருந்தாலும், கேமராவை அங்கிருந்து அகற்றும் ஏற்பாட்டையும் செய்திருக்க மாட்டார்களா?

ஹரிபாபு ஒரு தொழில்முறை புகைப்படக்காரர். ஓர் இடத்துக்குப் போனால் மற்றவர்கள் படங்களையும் எடுக்கக் கூடியவர். 7 மணியிலிருந்து 10.20 மணிக்கு குண்டுவெடிப்பு நடக்கும் வரை வெறும் பத்தே ஸ்டில்கள்தான் எடுத்திருப்பார் என்பது நம்பும்படியாக இருகிறதா? இந்தச் சந்தேகங்களுக்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. ஏனென்றால் அந்த புகைப்படச்சுருள் வெட்டப்பட்டு இருந்தது. கேமராவும் ஃபிலிம் ரோலும் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்படும் வரையிலான அந்த மூன்று நாள் நிகழ்வுகள் எல்லாமும் மர்மமாக இருந்தன.

p44c_1515146878.jpg

ஹரிபாபு எடுத்த மொத்த படங்களில் சி.பி.ஐ வெளியிட்ட படங்கள் தவிர மற்ற படங்களில் எத்தனை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அல்லது பிரமுகர்கள் இருந்திருப்பார்கள்? மற்ற படங்களைக் காட்டி அவர்களை வழிக்குக் கொண்டு வரவாவது சிவராசன் எடுக்கச் சொல்லியிருக்கலாம் அல்லவா? ‘இல்லை, பத்து படங்கள்தான் எடுக்கப்பட்டன’ என்றால், ‘ராஜீவைக் கொன்றது புலிகள்தான் என்று உலகம் தெரிந்துகொள்ள வேண்டும். கொலைப்பழி சுமக்க வேண்டும்’ என்று சிவராசன் திட்டமிட்டுச் செய்தார் என்று புரிகிறது அல்லவா?

புலிகள் தங்கள் ஆவணத்துக்காக எடுத்தார்கள் என்பது உண்மையானால், புலிகள் அமைப்பின் ரகசியம் காக்கும் தன்மைக்கே இது முரண்பாடாக இருக்கிறதே. சாதாரண போராளிகளே தடயங்களை விடமாட்டார்கள் எனும்போது, மூத்த போராளி சிவராசன் எப்படி தடயத்தை விட்டுச் சென்றார்? ஹரிபாபு இறந்தாலும் அவரது கேமராவை எடுக்காமல் சிவராசன் வந்திருக்க மாட்டார். ‘ஏன் அப்படி விட்டுவிட்டு வந்தார்’ என்பதையும், ‘அதன்பிறகு உடனடியாக ஈழத்துக்குத் தப்பிச் செல்ல அவர் ஏன் அக்கறை காட்டவில்லை’ என்பதையும் முடிச்சுப்போட்டுப் பார்க்க வேண்டும். ‘கடற்கரையே இல்லாத பெங்களூருவுக்கு ஏன் சென்றார்’ என்று என்னிடம் பொட்டம்மான் கேட்ட கேள்வியுடன் முடிச்சுப் போட்டுப் பார்க்க வேண்டும்.

சிவராசனிடம் மூன்று டைரிகளைக் கண்டெடுத்தது சி.பி.ஐ. அவற்றில் இரண்டு பாக்கெட் டைரிகள்; ஒன்று பெரிய டைரி. அந்த டைரியில் சிவராசன் எனது சொந்தப் பெயரான ‘இரவி’ என்று எழுதியிருக்கிறார். பொதுவாக இயக்கத்தினர் யாருடைய சொந்தப் பெயரையும் பயன்படுத்துவதில்லை; குறிப்பாக எழுத்தில் பதியமாட்டார்கள். வேண்டுமென்றே பல சந்திப்புகளை, தகவல் பரிமாற்றங்களை தேதிவாரியாகக் குறிப்பிட்டு டைரி எழுதியிருக்கிறார். இது புலிகளின் உளவுப்பிரிவு செயல்பாட்டுக்கு விரோதமானது. எழுத்தில் உள்ள சாதாரணத் தகவலைக்கூட உடனுக்குடன் எரிக்க வேண்டும்.

p44_1515146835.jpg

தனு போட்டோ வெளியானதிலிருந்தே பயஸ், ஜெயக்குமார், விஜயன் ஆகியோர் வேறு இடம் செல்ல முயன்றபோது தடுத்தவர் சிவராசன். மே 24-ம் தேதியிலிருந்து ஜூன் 14-ம் தேதி வரை நான்கைந்து தடவையாவது சிவராசனை ‘ஈழம் சென்று விடுங்கள்’ என்று நான் சொன்னதைத் தவிர்த்தார். ‘ராஜீவ் இறந்ததும் சிவராசன் நேபாளம் செல்லத் திட்டமிட்டார்’ என்பதை வாணன் என்ற இலங்கைத் தமிழர் வாக்குமூலத்திலிருந்து அறியலாம்.

பொதுவாக உளவுப்பிரிவு உறுப்பினர்கள், அரசியல் பிரிவு உறுப்பினர்களுடன் சேரமாட்டார்கள். அரசியல் பிரிவு ஆட்கள் வெளிப்படையாக இயங்குபவர்கள். ஆனால், அரசியல் பிரிவு திருச்சி சாந்தனுடன் இவர் வலியச் சென்று சேர்ந்துள்ளார். இருவருமே மாத்தையாவின்கீழ் பணியாற்றியவர்கள். புலிகளின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த மாத்தையா, ‘ரா’ உளவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டு உண்மை நிரூபணமாகி, மரண தண்டனைக்கு உள்ளானவர். இந்த மாத்தையாவின் ‘ரா’ தொடர்பாளராக அறியப்பட்டவர், நெய்வேலியில் இருந்த நீலன். அவரைத் தமிழகம் வந்ததும் சிவராசன் பார்த்துள்ளார். இந்த நீலனைத் தமிழக கியூ பிரிவு விசாரித்தது. ஆனால், உடனடியாக விடுதலை செய்துவிட்டது. இந்த நீலன் கைது செய்யப்பட்ட பிறகுதான் மாத்தையாவின் செயல்கள் அம்பலமாகின. இப்படிப் பல்வேறு மர்மங்கள் கொண்டவர் சிவராசன்.
https://www.vikatan.com/juniorvikatan/2018-jan-10/investigation/137670-rajiv-gandhi-murder-issue-tada-ravi-statements.html?artfrm=magazine_hits
1987-ல் தளபதி சூசையின்கீழ் வல்வெட்டித்துறை நகரில் நான் பணியாற்றினேன். மயிலியதனை என்ற பகுதியில் சிவராசன் இருந்தார். அப்போது இரகு அல்லது இரகுவரன் என்று அழைக்கப்பட்டார். அப்போதுதான் அவருக்கும் எனக்கும் அறிமுகம். அந்த ஆண்டு மே மாதம் வடமராச்சி பகுதி சிங்கள ராணுவத்தின் பிடிக்குள் போனது. அதன்பிறகு நாங்கள் வேறு வேறு பகுதிகளுக்குப் போய்விட்டோம். நான் 1990-ல் தமிழகம் திரும்பியபோது, ‘இரகுவோடு தொடர்பில் இருங்கள்’ என்று பொட்டம்மான் சொன்னார். 1991 மே மாதத்துக்கு முன்னதாக ஐந்து முறை சந்தித்து இருப்பேன். இவை எதுவும் ராஜீவ் கொலைத்திட்டம் குறித்தது அல்ல!

p44a_1515146811.jpg

ராஜீவ் கொலைக்கு முன்னும் பின்னுமாக சிவராசனுக்கு மும்பையிலும் சவுதி அரேபியாவிலும் வங்கிக் கணக்கு இருந்தது. பணப்பரிமாற்றமும் நடந்தது. இதனை இந்திய அரசின் நிதி நுண்ணறிவுப் பிரிவு கண்டுபிடித்தது. ஆனால், அதை சி.பி.ஐ மூடி மறைத்தது. சிவராசனுக்கு உத்தரவிட்டது புலிகள் அல்ல; சி.ஐ.ஏ. முகம் மறைத்து பல சதிகாரர்கள் இருக்கிறார்கள்.

இப்படி உருவான சதிகளில் ஒன்றுதான், அனுஜா படத்தை தனு என்று சொன்னது. அனுஜா படத்தை என்னிடம் காட்டினார்கள். நான் ‘அது அனுஜா’ என்றேன். வடமராச்்சியில் நான் அவரைப் பார்த்திருக்கிறேன். குரூப் லீடர் அவர். ‘விடுதலைப் புலிகளின் பிரசாரப் பிரிவு வெளியிட்ட காலண்டரில் அவர் படம் இருக்கும்’ என்றேன். அந்த அனுஜாவைத்தான் தனு என்று சொல்லி, ‘விடுதலைப்புலிகளால் அனுப்பப்பட்ட பெண்தான்’ என்று கதை கட்டினார்கள்.

இந்தக் கட்டுக்கதைகளுக்கு தமிழக தடயவியல் துறையும் ஒத்துப்போனது.

(தொடரும்...)

- ஜோ.ஸ்டாலின்


p44b_1515146795.jpg

பா.ஏகலைவன் பத்திரிகையாளராகப் பணியாற்றிவர். 2010-ம் ஆண்டு, ‘நாம் தமிழர் கட்சி’த் தலைவர் சீமான், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகி சிறையிலிருந்தபோது, அவரைப் பார்க்க வேலூர் சிறைக்குச் சென்றிருந்தார். ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஐந்து பேரையும் அப்போதுதான் நேரில் சந்தித்துள்ளார். அவர்களுடன் பேசியபிறகு, ‘இந்த வழக்கில் வெளியில் தெரியாமல், புதைந்துகிடக்கும் பல விஷயங்களை உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்துள்ளார். ராஜீவ் கொலைவழக்கில் முதல் குற்றவாளியாக இருக்கும் நளினியின் தரப்பு பல ஆண்டு காலமாக வெளியில் வராமல் இருந்தது. அதனால், நளினியின் தரப்பிலிருந்து முதல் புத்தகத்தை எழுதினார். அதுதான், ‘ராஜீவ் கொலை வழக்கு - மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்காவின் சந்திப்பும்!’ அதன் தொடர்ச்சியாக, தற்போதுவரை வெளியில் அதிகம் தெரியாத ரவிச்சந்திரனின் அனுபவங்களை, ‘ராஜீவ் காந்தி படுகொலை... சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். க்ரைம் த்ரில்லர் நாவலைப் போல் உள்ள இந்தப் புத்தகம், ராஜீவ் கொலையின் பின்னணியில் உள்ள சர்வதேச சதிகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் ஓர் உண்மை ஆவணம்!

https://www.vikatan.com/juniorvikatan/2018-jan-10/investigation/137670-rajiv-gandhi-murder-issue-tada-ravi-statements.html?artfrm=magazine_hits

  • தொடங்கியவர்

மர்மங்கள் நிறைந்த ராஜீவ் கொலை வழக்கு‍- 25 ஆண்டுகளின் பின்னர் வெளிவரும் உண்மைகள்.. (காணொளி)

ராஜீவ் கொலைவழக்கில் கைதாகி சிறையிடப்பட்டோரின் 25 ஆவது ஆண்டு நிறைவையொட்டி எடுக்கப்பட்ட படம். அந்த தீர்ப்பில் சந்தேகத்தினை வலுப்படுத்டும் விதமாக அதன் பின்னாலிருக்கும் மர்மங்களையும், விடை காணா வினாக்களையும் ஆதாரங்களுடன் சொல்லுகிறதுபைபாஸ் .. உண்மைக்கதை, உண்மைக் கதாபாத்திரங்களுடன்..

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்த்தப்பட்டு, கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களும், சிறையில் நீண்ட ஆயுளைத் தொலைத்துவிட்டார்கள். இந்நிலையில், ‘படுகொலையின் சந்தேகங்கள் இன்னமும் தீரவில்லை. தமிழக காவல்துறையை நோக்கியே எங்களது சந்தேகங்கள் நீள்கின்றன’ என அதிர வைக்கிறது ‘பைபாஸ்’ திரைப்படம். இது தொடர்பாக முன்னரே விகடன்.காமில் செய்தி வெளியாகியிருக்கிறது.
ஸ்ரீபெரும்புதூரில், 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி,  இரவு 10.20 மணிக்கு மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார் ராஜீவ்காந்தி. இந்தப் படுகொலைக்குக் காரணமானவர்கள் எனக் காவல்துறையால் சொல்லப்பட்டவர்கள், தடா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும், ‘இந்தப் படுகொலையில் மர்மம் இருக்கிறது. உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை’ என்ற விவாதம் எழுந்து கொண்டே இருந்தது. இதுதொடர்பாக, எம்.டி.எம்.ஏ எனப்படும் பல்நோக்கு விசாரணை ஏஜென்சியின் விசாரணை இன்னமும் முடியவில்லை. இந்நிலையில், கோவையைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ் மற்றும் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி ஆகியோர், கடந்த எட்டு ஆண்டுகளாக ராஜீவ்காந்தி படுகொலையின் மர்மத்தை நோக்கிப் பயணித்திருக்கிறார்கள்.

தடா நீதிமன்றத்தின் தீர்ப்பு, குற்றம் நடந்த இடத்தின் புலனாய்வு அறிக்கைகள், உடல்கூறு ஆய்வுகள், வர்மா கமிஷன், ஜெயின் கமிஷன் அறிக்கைகள் என தீவிரமான தேடுதலின் முடிவை, ‘பைபாஸ்’ (bypassfilm2016.wordpress.com) என்ற படத்தின் மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடக் கூடிய படத்தில், ராஜீவ் படுகொலை மர்மத்தை சிலப்பதிகார, மணிமேகலை காப்பியங்களில் சொல்லப்படும் இடங்கள், அங்கவை, சங்கவையின் துயரம், மணிமேகலை சொல்லும் நீதி, தவறான நீதியால் கொல்லப்பட்ட கோவலன் என சரித்திர சம்பவங்களின் பின்னணியில், ராஜீவ் படுகொலையின் மர்ம முடிச்சை மிக வித்தியாசமான கோணத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
முன்னரே அப்படம் உண்டாக்கிய விவாதம் குறித்த 10 மர்மங்களை தொகுத்திருந்தோம்.இப்போது முழு படமும் வெளியான நிலையில், மேலும் சில  சந்தேகங்கள் எழுகின்றன. அவை பின்வருமாறு…

* படுகொலை நிகழ்த்தப்பட்ட பின்னர், ‘மறுநாள் காலை 6 மணிக்குத்தான் எனக்குத் தகவல் கிடைத்தது’ என தடயவியல் துறை இணை இயக்குனர் வாட்சன், தடா கோர்ட்டில் சொல்லியிருக்கிறார். அவர் சென்னையில் இருந்து தனது குழுவுடன் ஸ்ரீபெரும்புதூர் சென்ற நேரம் காலை 9 மணி. அந்த நேரத்தில் பலியான உடல்கள் எதுவும் அங்கு இல்லை. குற்றம் நடந்த இடத்தில் ஆவணங்களைச் சேகரிப்பதற்கு தடய அறிவியல் துறையை அனுமதிப்பதில் காவல்துறை தாமதம் செய்துள்ளது.

* குற்றம் நடந்த இடத்தில் ஒரு சடலத்தின் மீது கேமரா இருந்துள்ளது. ‘அதில் இருக்கும் நெகட்டிவை டெவலப் செய்து கொண்டு வாருங்கள்’ என ஐ.ஜி ஆர்.கே.ராகவன் உத்தரவிட்டுள்ளார். சுங்குவார் சத்திரம் அருகில் உள்ள தனியார் ஸ்டூடியோ ஒன்றில் பிலிமை டெவலப் செய்யக் கொடுத்துள்ளனர். அங்கு கலர் பிரிண்ட் போடும் வசதியில்லாததால், தனியாக பிலிமை கட் செய்து கொடுத்துள்ளார் ஸ்டூடியோ உரிமையாளர் நாராயணன். பிறகு மீண்டும் அந்த கேமரா சடலத்தின் மேல் வைக்கப்பட்டுள்ளது.  சம்பவ இடத்தில் இருந்த தடயவியல் உதவியாளர் ஏ.ஆர்.மோகன் இதற்கு எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. மேலும், அந்த கேமராவைக் கொண்டு போன நான்கு பேரில் அவருட்ம் ஒருவர். இப்படிச் செய்வது குற்றம் நடந்த இடத்தின் தன்மையை பாதிக்கும் என தடயவியல் நிபுணர்களுக்குத் தெரியாதா?

pugal1.jpg

 

 

 

 

 

* 2014-ல் சுங்குவார் சத்திரம் ஸ்டூடியோ உரிமையாளர் நாராயணனை பைபாஸ் படக் குழு சந்தித்துள்ளது. அவர், ‘என்னை அங்கே இரவு 12 மணிக்குக் கூட்டிப் போனார்கள். சம்பவ இடத்தில் நிறைய புகைப்படங்களை எடுத்தேன். அங்கு முழுக்க ரத்தத் துளிகள் நிரம்பிய ஒரு கேமராவைப் பார்த்தேன். அதைத் துடைத்து சுத்தம் செய்தேன். அந்தக் கேமராவில் பிளாஷ் இருந்தது’ என்கிறார். ஹரிபாபு பிளாஷ் போட்டுத்தான் படம் எடுத்தார். அந்த கேமரா பாதிப்புக்குள்ளாகியிருந்தது. ஆனால், போலீஸார் காண்பித்த கேமராவில் பிளாஷும் இல்லை, சேதமும் அடையவில்லை. இது எப்படி?
* இதுபற்றிச் சொல்லும் தடயவியல் பேராசிரியர் சந்திரசேகர், ‘கேமரா பற்றி எனக்கு எதுவும் சொல்லப்படவில்லை’ என்கிறார். ஆனால், மறுநாள் காலை 11 மணிக்கு அவர் சம்பவ இடத்திற்குப் போகிறார். அப்போதும் கேமரா பற்றி எதுவும் சொல்லப்படவில்லை’ என்று சொல்கிறார். அன்றைய மாலை நாளிதழில், ’30 வயதுள்ள சடலத்தின் மீது கேமரா கிடந்ததாகவும், மறுநாள் அதைத் தேடிச் சென்றது’ குறித்து பேட்டி கொடுத்ததாக, தனது புத்தகத்தில் சொல்கிறார். ஆனால், 1996-ல் தடா கோர்ட்டில், அவரை குறுக்கு விசாரணை செய்தபோது, ‘ தனக்கு கேமராவைப் பற்றி காஞ்சிபுரம் தடயவியல் உதவியாளர் ஏ.ஆர்.மோகன் கூறினார்’ என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். பத்திரிகையாளர் ஒருவருக்கு குற்றவாளியின் படங்களைக் கொடுத்து, ‘ உண்மை வெளியில் வரட்டும் எனக் கொடுத்ததாக’க் குறிப்பிடுகிறார். ஆனால், கோர்ட்டில், ‘ இந்தப் படங்களை வெளியிட்டது யார் என்று தனக்குத் தெரியாது’ என்கிறார். இதில் எதுதான் உண்மை?
* சம்பவ இடத்தில் இரண்டு பூக்கூடைகள் கிடந்துள்ளன. ராஜீவ்காந்தி நடந்து வரும்போது பூ தூவுவதற்காக உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் சுலைமான் என்பவர் தனது உதவியாளர்கள் மூலம் பூக்கூடைகளை அனுப்பி வைத்திருக்கிறார். இதைப் பற்றி சுப்ரமணியன் சுவாமி எழுதிய புத்தகத்தில் பார்க்கலாம். சுலைமானின் உதவியாளர்களில் ஒருவரைத்தான் ஹரிபாபு என போலீஸார் கதைகட்டிவிட்டதாகச் சொல்கின்றனர் படக் குழுவினர்.

* பத்திரிகையாளர் ராமசுந்தரத்திற்கு சந்திரசேகர் கொடுத்த வீடியோ பேட்டியில், ராஜீவ் காந்தி அணிந்திருந்த லோட்டோ ஷு, தனுவின் சல்வார் கமீஸ், சுவிட்ச் போன்றவற்றைக் காண்பிக்கிறார். இந்தப் பொருட்களை எடுக்க வேண்டும் என்றால், அவர் சம்பவ இடத்திற்குப் போயிருக்க வேண்டும். ஆனால், ராஜீவ்காந்தி போஸ்ட்மார்ட்டத்திற்கு மட்டுமே போனதாக சந்திரசேகர் சொல்கிறார். 22-ம் தேதி காலை இந்தப் பேட்டியை சந்திரசேகர் கொடுத்ததாக ராமசுந்தரம் கூறுகிறார். 21-ம் தேதி நள்ளிரவு ஸ்ரீபெரும்புதூர் செல்லவில்லை என்றுதான் இதுவரையில் சந்திரசேகர் சொல்லி வந்திருக்கிறார். சம்பவ இடத்திற்குப் போகாமல், இந்தப் பொருட்களை வீடியோ பதிவில் காட்ட முடியாது. இதை ஏன் சந்திரசேகர் மறைக்கிறார்? ‘ தனக்குக் கொடுத்த மிக முக்கியமான வீடியோ பேட்டி பற்றி எந்த இடத்திலும் சந்திரசேகர் குறிப்பிடவில்லை’ என்கிறார் ராமசுந்தரம். காவல்துறையின் உத்தரவுப்படி செயல்பட்டாரா சந்திரசேகர்?

* சம்பவம் நடந்த இடத்தில் இருந்து காஞ்சிபுரம் ஜி.ஹெச்சுக்குக் கொண்டு செல்லப்பட்ட ஒன்பது உடல்களில், ஒரே ஒரு உடலுக்கு யாரும் உரிமை கொண்டாடவில்லை. மிக முக்கியமான சாட்சியான கேமரா வைக்கப்பட்டிருந்தது இந்த உடலின் மீதுதான். இதன் மீது தடயவியல் நிபுணர்கள் எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளாதது ஏன்?

haribabu1.jpg* சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகுதான், போட்டோகிராபர் ஹரிபாபுவின் அப்பா சுந்தரமணி, உடலுக்கு உரிமை கோரி ஆஸ்பத்திரிக்கு வருகிறார். அவரிடம், தலை தனியாக வெட்டி எடுக்கப்பட்ட சடலத்தைத்தான், உதவி அறுவை சிகிச்சை நிபுணர் ஜீவானந்தம் காண்பிக்கிறார். முகம் முழுக்க கருகிப் போய், மார்பில் குண்டு துகள்கள் துளைக்கப்பட்ட அந்த உடலை, ஹரிபாபு என நம்ப வைத்திருக்கிறார்கள். தவிர, ‘ஹரிபாபுவின் வயது 22. போஸ்ட்மார்ட்டத்தில் சொல்லப்பட்ட வயது 30. அதுவும் சுன்னத் செய்யப்பட்ட இளைஞரின் உடல் அது. ‘ உடலை ஒப்படைத்தவர்கள் ஏன் சுன்னத் செய்யப்பட்டது என்ற கேள்வியை எந்த இடத்திலும் கேட்கவில்லை. புதைக்க வேண்டும் எனச் சொல்லிக் கொடுக்கப்பட்ட உடலை, ஹரிபாபு குடும்பத்தினர் ஏன் எரித்தார்கள்?’ எனப் பல கேள்விகள் எழுகின்றன. இதைப் பற்றி எந்த இடத்திலும் தடயவியல் நிபுணர்கள் கேள்வியும் கேட்கவோ, எந்த அறிக்கையிலும் பதிவு செய்யவோ இல்லையே ஏன்?

* ராஜீவ்காந்தி நடந்து வரும் சிவப்புக் கம்பளத்தின் தெற்கில் நின்றபடியே புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஹரிபாபு.  அவருக்குப் பக்கத்தில் சங்கர்-கணேஷ் இசைக் குழுவின் போட்டோகிராபர் ஜெயபாலனும் போட்டோ எடுத்தபடியே நின்றிருக்கிறார். குண்டு வெடித்ததும் காதில் ரத்தம் வடிய மயக்க நிலைக்குச் சென்ற ஜெயபாலன் பிழைத்துவிட்டார். அவரோடு சேர்ந்து ஹரிபாபுவும் பிழைத்திருக்கவே வாய்ப்பு அதிகம். வடதுபக்கம் இறந்துகிடந்த ஒரு முஸ்லிம் இளைஞரின் உடலின் மீது காவல்துறை கேமராவைப் போட்டுவிட்டு, அவர்தான் ஹரிபாபு என நம்ப வைத்திருக்கிறது என்கிறது ஆவணப்படக் குழு. இது உண்மையா?

ramesh1.jpg

 

 

 

 

 

 

* மேடையில், ராஜீவ்காந்தி பங்கேற்கும் நிகழ்வைத் தொகுத்து வழங்கிய ஏ.ஜெ.தாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார். 10.12 மணிக்கு அவர் பேசும்போது, ‘மேடைக்கு வலதுபக்கம் உள்ளவர்கள், மேடையின் இடதுபக்கம் உள்ள கார்பெட் ஏரியாவுக்கு வருமாறு’ சொல்கிறார். மேடையின் பின்புறம் காங்கிரஸ் பிரமுகர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அறிவிப்பு வெளியான உடன், பொதுமக்கள் கூட்டம் ரெட் கார்பெட் ஏரியாவை நோக்கி வேகமாக முன்னேறுகிறது. ராஜீவ்காந்தி நடந்து வந்த ரெட் கார்பெட்டில் போலீஸ் பந்தோபஸ்து இல்லை. ராஜீவை நோக்கி வருபவர்களைத் தடுக்க போலீஸ் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேடைக்கு ராஜீவ்காந்தி வந்திருந்தால் வெடிகுண்டு வெடித்திருக்க வாய்ப்பில்லை. மாலை போட வருகிறவர்களை சோதனை செய்திருக்க முடியும். ஆனால், சிவப்புக் கம்பளத்தை குறிவைத்து ஏ.ஜெ.தாஸ் தன்னிச்சையாக அறிவிப்பை வெளியிட்டாரா? என்ற கேள்விக்கு, விடை சொல்கிறார் ராஜீவ்காந்திக்கு முதலில் மாலை போட்ட ரங்கநாத முதலியார். அவர் தனது வாக்குமூலத்தில், ‘ஐ.ஜி ஆர்.கே.ராகவன்தான் இப்படியொரு அறிவிப்பை வெளியிடச் சொன்னார்’ என்கிறார். அப்படியானால், சிவப்புக் கம்பளத்தில் மக்களை நிற்க வைப்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா? என்ற மிக முக்கியமான கேள்வியை எழுப்புகிறது ஆவணப்படம்.

* ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்திற்குப் பின்புறம் சி.ஆர்.பி.எஃப் போலீஸார் 50 பேர் பாதுகாப்புப் பணியில் இருக்க வேண்டும் என போலீஸ் தயார் செய்த பந்தோபஸ்து குறிப்பில் உள்ளது. சம்பவ இடத்தில் இப்படிப்பட்ட ஒரு போலீஸ் படை இருந்ததாக எவரும் குறிப்பிடவில்லை. கடைசிநேரத்தில், இவர்கள் வராமல் போனதற்கான ஆதாரம்தான் இருக்கிறது. இதற்கான மர்மம் என்ன?

– எனப் படுகொலையின் அனைத்து அம்சங்களையும் ஆதாரப்பூர்வமாக அலசியிருக்கிறது பைபாஸ் படக்குழு. படத்தின் முடிவில், மருத்துவர் புகழேந்தி பேசும்போது, ‘புலனாய்வு வழக்குகளை மிகத் துல்லியமாக அலசி ஆராயும் டாபர்ட் விதிமுறைகள் எதுவும் இந்தப் படுகொலை வழக்கில் பின்பற்றப்படவில்லை. பொய்யும் புரட்டுமாக விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. எங்கள் ஆசிரியர் சந்திரசேகர், வழக்கின் விசாரணையை பின்னி எடுத்துவிட்டார் என நாங்கள் மகிழ்ந்தோம். ஆதாரங்களைப் பார்த்தபோது அந்த பிம்பம் தூள் தூளாகிவிட்டது. எம்.டி.எம்.ஏ விசாரணையில் இந்தப் புதிய ஆதாரங்கள் அம்பலமானால், தீர்ப்பின் முடிவையே மாற்றியமைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. உண்மை நீதி வாழ வேண்டும் கச்சாமி” என புத்தர் சந்நிதியின் அருகில் இருந்து கவலை தோய்ந்த முகத்தோடு பேசுகிறார்.


 
திரைப்படக்குழுவின் கருத்து:

பைபாஸ் திரைப்படம் – ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தை ஒட்டிய அதிர்ச்சி தகவல்கள். பைபாஸ் என்னும் பெயரில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் சமூக வலைத் தளங்களில் இன்று பகிரப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜீவ்காந்தி படுகொலையின் போது மேற்கொள்ளப்பட்ட தடயவியல் ‘ஆய்வில் உள்ள, இதுவரை வெளிவராத, அடிப்படை பிழைகளை ஆய்வு செய்கிறது இத்திரைப்படம். மருத்துவர்கள் டாக்டர் ரா. ரமேஷ் மற்றும் டாக்டர் புகழேந்தி அவர்கள் பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் விளைவுதான் இந்த திரைப்படம். ஒரு வகையில் இது ஒரு பயணக் காவியம். பல ஆண்டுகளாக ஆய்வு செய்து பெறப்பட்ட உண்மையின் அழுத்தத்தை உலகிற்கு உரைப்பதற்கு சக பயணி ஒருவரோடு மேற்கொள்ளும் பயணத்தின் கதைதான் இந்த திரைக்காவியம். பல ஆண்டுகளாக, பல நல்ல நெஞ்சங்கள் திரட்டி தந்த அரிய ஆவணங்களிலிருந்து பிறப்பெடுத்திருக்கிருக்கும் ஒரு துளிதான் இத்திரைப் படம். இறுதியில், இதைப்போன்ற முக்கிய வழக்குகளில் சாட்சியங்களாக வரும் வல்லுநர்களின் வாக்குமூலத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு உலக நீதித் துறை உயர்த்திப்பிடிக்கும் டாபர் வரையறை மற்றும் கோட்பாட்டை (Daubert Standard) அமல்படுத்த வேண்டுமென இத்திரைப்படம் வாதிடுகிறது. இத் திரைப்படம் வணிக நோக்கின்றி சமூக வலைத் தளங்களில் வெளியிடப்படுகிறது. வணிக நோக்கமுமின்றி இந்த திரைப்படத்தை எவ்வித மாற்றமுமின்றி பதிவிறக்கம் செய்து யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம். தொழிற்முறை திரைப்பட வல்லுநர்கள் இல்லாமல் சமூக அக்கறைக் கொண்ட திரை ஆர்வலர்களின் கூட்டு முயற்சியால் மட்டுமே உருவாகியுள்ள இந்த திரைக் காவியத்தை ஊக்கப்படுத்தும் முகமாக இத் திரைப்படம் பற்றிய செய்தியினை சமூக நலன் கருதி தங்களின் மேலான ஊடகத்தில் வெளியிட்டு உதவவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். தங்களின் காத்திரமான திரை விமர்சனத்திற்காக காத்திருக்கிறோம்.

http://sangunatham.com/?p=492

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு விரைவாக ராஜீவ்காந்தி கொலைசதியில் புலிகளை சம்பந்த படுத்தினார்களோ அதைவிட மிக வேகமாக இந்தியா மேற்க்குலகால் பொருளாதார ரீதியாக அடிமையாகி உள்ளது குலோபளிசம் னும் பெயரால் .

 

எவ்வளவு விரைவாக ராஜீவ்காந்தி பெயரால் பழிவாங்கிரம் என்று புலிகளை அழித்தார்களோ அவர்களை விட மிக வேகமாக ஆசியாவின் முக்கிய கடல்சார் கேந்திரம்கள் பாகிஸ்தான் துறைமுகம் , சொறிலன்காவின் அம்பாந்தோட்டை துறைமுகம் என்பன சீனாவின் ஆளுகைக்குள் போய்விட்டது இன்னும் இந்தியா வல்லரசாகி விட்டது இரவின் கனவின் மீட்சியில் விடுபடாமல் ரெயில்வே பாதையோரம் திறந்த வெளியில் மலம் கழித்தபடி முந்தைய இரவின் கனவை பற்றி சக நண்பனுக்கு  4g போனில் சுவாரசியமாக பகிர்ந்துகொண்டு அன்றைய நாளை துவங்குகின்றான் சராசரி இந்தியன் .

23 minutes ago, பெருமாள் said:

எவ்வளவு விரைவாக ராஜீவ்காந்தி கொலைசதியில் புலிகளை சம்பந்த படுத்தினார்களோ அதைவிட மிக வேகமாக இந்தியா மேற்க்குலகால் பொருளாதார ரீதியாக அடிமையாகி உள்ளது குலோபளிசம் னும் பெயரால் .

எவ்வளவு விரைவாக ராஜீவ்காந்தி பெயரால் பழிவாங்கிரம் என்று புலிகளை அழித்தார்களோ அவர்களை விட மிக வேகமாக ஆசியாவின் முக்கிய கடல்சார் கேந்திரம்கள் பாகிஸ்தான் துறைமுகம் , சொறிலன்காவின் அம்பாந்தோட்டை துறைமுகம் என்பன சீனாவின் ஆளுகைக்குள் போய்விட்டது இன்னும் இந்தியா வல்லரசாகி விட்டது இரவின் கனவின் மீட்சியில் விடுபடாமல் ரெயில்வே பாதையோரம் திறந்த வெளியில் மலம் கழித்தபடி முந்தைய இரவின் கனவை பற்றி சக நண்பனுக்கு  4g போனில் சுவாரசியமாக பகிர்ந்துகொண்டு அன்றைய நாளை துவங்குகின்றான் சராசரி இந்தியன் .

இந்தியா விரைவில் புல்லரசாகி விடும். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Rajesh said:

இந்தியா விரைவில் புல்லரசாகி விடும். 

இப்படியே ஒரு மூலையில்
இருந்து கொண்டு
விட்டத்தை பார்த்து
சொல்லிக் கொண்டு
இருக்க வேண்டியது தான்.

இந்தியா தென்னாசியாவில்
தவிர்க்க முடியாத
பெரும் சக்தி.
அதன் வளர்ச்சி
முன்னோக்கி கொண்டு
தான் உள்ளது.


பிராந்திய நலனுக்கும்
வர்த்தக நோக்கங்களுக்காகவும்
இந்தியா பலவீனமடைவதை
மேற்குலகு விரும்ப போவதும் இல்லை.
அனுமதிக்க போவதும் இல்லை.

இன்னொன்று
ராஜிவ் கொலையால்
தான் இந்தியா புலிகளை
அழித்தது / அழிக்க துணை புரிந்தது
என்பது அரசியலில்
அரிவரி படிச்ச
ஆட்களையும்
பாமர தமிழக மக்களையும்
நம்ப சொல்லும்
வாதம்.

ராஜிவ் கொலை
இல்லாவிட்டாலும்
இந்தியா தன்
பிராந்திய நலனுக்காக
புலிகளை
அழித்தே இருக்கும்.

Edited by வைரவன்

1 hour ago, வைரவன் said:

இப்படியே ஒரு மூலையில்
இருந்து கொண்டு
விட்டத்தை பார்த்து
சொல்லிக் கொண்டு
இருக்க வேண்டியது தான்.

இந்தியா தென்னாசியாவில்
தவிர்க்க முடியாத
பெரும் சக்தி.
அதன் வளர்ச்சி
முன்னோக்கி கொண்டு
தான் உள்ளது.


பிராந்திய நலனுக்கும்
வர்த்தக நோக்கங்களுக்காகவும்
இந்தியா பலவீனமடைவதை
மேற்குலகு விரும்ப போவதும் இல்லை.
அனுமதிக்க போவதும் இல்லை.

இன்னொன்று
ராஜிவ் கொலையால்
தான் இந்தியா புலிகளை
அழித்தது / அழிக்க துணை புரிந்தது
என்பது அரசியலில்
அரிவரி படிச்ச
ஆட்களையும்
பாமர தமிழக மக்களையும்
நம்ப சொல்லும்
வாதம்.

ராஜிவ் கொலை
இல்லாவிட்டாலும்
இந்தியா தன்
பிராந்திய நலனுக்காக
புலிகளை
அழித்தே இருக்கும்.

அருமையான வரிகள், இந்த யதார்த்தம் பலருக்கு புரிவதில்லை.

ஆனால் 2004ம் ஆண்டு  பொது தேர்தலில் ப ஜ கா வென்று இருந்தால் இந்த அழிவு நடந்து இருக்காது என்பது எனது எண்ணம்

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, வைரவன் said:

இந்தியா தென்னாசியாவில்
தவிர்க்க முடியாத
பெரும் சக்தி.
அதன் வளர்ச்சி
முன்னோக்கி கொண்டு
தான் உள்ளது.

தவிர்க்கமுடியாத சக்தி அது ஒரு காலத்தில் இப்ப இல்லை சுண்டங்காய் சொரிலன்காவே இந்திய எதிர்ப்பை உதாசீனம் செய்து சைனாவுக்கு இடங்களை வாரி வழங்குகிறது என்றால் இந்தியாவை ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை .

அடுத்து எண்ணத்தில அசுர வளர்ச்சி என்று குறிப்பிட்டால் நல்லது இருக்கிற பாரம்பரிய தொழில்கள் எல்லாம் சைனாவில் இருந்து வரும் விலைகுறைவான பொருட்களுடன் தாக்கு பிடிக்க முடியாமல் இழுத்து மூடப்படுகின்ரன.

சமீபத்தில் கேரளாவுக்கு சவப்பெட்டி கூட சைனாவில் இருந்து இறக்குமதி ஆகின்றன .செய்திகளில் வந்தது .

21 hours ago, வைரவன் said:

பிராந்திய நலனுக்கும்
வர்த்தக நோக்கங்களுக்காகவும்
இந்தியா பலவீனமடைவதை
மேற்குலகு விரும்ப போவதும் இல்லை.
அனுமதிக்க போவதும் இல்லை.

இங்கு பிராந்திய நலன் அது கேள்வி குறியே வர்த்தக நோக்கம் இந்தியா உடைவதை நீங்கள் சொல்வது போல் உடையாமல் அப்படியே வைத்து கொள்ளையடிப்பது அவர்களுக்கு இலகுவானது மாநிலங்களில் உறுதியான அரசுகள் அமைவதையும் அவர்கள் விரும்ப போவதில்லை சீமான் போன்றவர்கள் கடுமையாக உழைப்பை செலுத்த வேண்டி இருக்கும் .

 

19 hours ago, Dash said:

இன்னொன்று
ராஜிவ் கொலையால்
தான் இந்தியா புலிகளை
அழித்தது / அழிக்க துணை புரிந்தது
என்பது அரசியலில்
அரிவரி படிச்ச
ஆட்களையும்
பாமர தமிழக மக்களையும்
நம்ப சொல்லும்
வாதம்.

உண்மைதான் ஐம்பது வருடங்களுக்கு மேல் தகப்பனை கொன்றவர்களை மகன் தேடி பழிவாங்கும் ஒரே  கதைகளை சினிமா மூலம் பார்க்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு காதிலை சூட்டப்பட்ட பூ ராஜீவ்  கதை .

 

21 hours ago, வைரவன் said:

ராஜிவ் கொலை
இல்லாவிட்டாலும்
இந்தியா தன்
பிராந்திய நலனுக்காக
புலிகளை
அழித்தே இருக்கும்.

பிராந்திய நலன் என்பது என்ன வரைமுறை வைத்து உள்ளீர்கள் என்று அறிய ஆவல் ?

On 1/6/2018 at 6:15 AM, போல் said:

ரவிச்சந்திரனுக்கு அந்த அனுபவம் உண்டு! அதுவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பாரதி மாஸ்டர், செல்வராஜ் மாஸ்டர் போன்றோரிடம் பயிற்சி பெற்றவர். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கியத் தளபதிகளான மில்லர், சூசை, டேவிட் உள்ளிட்டவர்களோடு சேர்ந்து சமர் புரிந்த அனுபவங்கள் உடையவர். இந்த விவரங்கள் தெரியவரும்போதுதான், ரவிச்சந்திரனின் பாத்திர முக்கியத்துவத்தை நம்மால் உணர முடிகிறது.

DTL6PsZU0AEzFr6.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தென்னாசியாவில்
தவிர்க்க முடியாத
பெரும் சக்தி.
அதன் வளர்ச்சி
முன்னோக்கி கொண்டு
தான் உள்ளது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புகையிரதத்தில் பெண்கள் எப்படி பயணிப்பது?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இந்த புகையிரதத்தில் பெண்கள் எப்படி பயணிப்பது?

எனக்கும் எழுந்த கேள்வி அது தான் அண்ணா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, பெருமாள் said:

No automatic alt text available.

உலகின் சனத்தொகையிலை இரண்டாவது இடத்திலை இருக்கிற இந்தியாவிலை....
அவனவனுக்கு ஒவ்வொரு மதங்கள்...
அவனவனுக்கு ஒவ்வொரு பாசைகள்.....
அவனவனுக்கு ஒவ்வொரு கலாச்சாரம் பண்புகள்....
அவனவனுக்கு ஒவ்வொரு அரசியல் கொள்கைகள்....
அவனவனுக்குள் இன மத பேதங்கள்......
நிலமை இப்படியிருக்க....
இந்திய குடியரசை இன்னும் எத்தனை காலத்துக்கு வந்தேமாதரம் எண்டு சொல்லி ஒட்ட வைச்சுக்கொண்டிருப்பாங்கள்?

ஒரு மொழி ஒரு மதம் ஒரு  இனம் எண்டு இருக்கிற நாட்டையே கட்டுக்கோப்பாக வைச்சிருக்கேலாமல் தள்ளாடிக்கொண்டிருக்கிறாங்கள்...இதுக்கை இந்தியா????? :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த புகையிரதத்தில் பெண்கள் எப்படி பயணிப்பது?

7 minutes ago, nunavilan said:

எனக்கும் எழுந்த கேள்வி அது தான் அண்ணா.

இப்பிடித்தான்...:cool:


ராசாமாரே!  நீங்கள் பார்த்தது ஒரு பக்கம்.
இது மற்றப்பக்கம்.:grin:

Indian Railway Funny

 

Ähnliches Foto

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் வளர்ச்சி பற்றிய
கேள்விகளுக்கு இந்த செய்தி
பதிலாக இருக்கட்டும்

http://www.livemint.com/Politics/u4qe2jXFEdfr8zIdoR6GYO/India-to-be-fastest-growing-economy-again-in-2018-World-Ban.html

வளரும் ஏனைய நாடுகளை
விட இந்தியாவின் GDP
வளர்ச்சி வேகமும்
அதிகம்  

இந்தியாவை எனக்கும்
பிடிக்காது
அது எமக்கு செய்த
துரோகங்கள் மறக்கப்பட
கூடாதவை

ஆனால் அதற்காக
எமக்கு விருப்பமில்லை
என்பதுக்காக
யதாரத்தினை புறம்
தள்ள கூடாது

இல்லை நாங்க
உலக வங்கி
அறிக்கைகள்
தரமான  பொருளாதார
கட்டுரைகளை எல்லாம்
படிக்க மாட்டம்
half boil தனமான
வீடியோக்களையும்
மீம்ஸுகளையும்  தான்
நம்புவம் என்றால்
உங்களை
ஒன்றும் செய்ய ஏலாது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

பிராந்திய நலன் என்பது என்ன வரைமுறை வைத்து உள்ளீர்கள் என்று அறிய ஆவல் ?

 

இந்தியா
ஒரு போதும்
தன் அருகில்
தன் அயலில்
தன் தாளத்துக்கு
ஆட விரும்பாத
தனித்துவமாக இருக்க
கூடிய
இன்னொரு புதிய நாட்டை
அனுமதிக்காது

அதுவும் முதன் முதலில்
பிரிவினையை சிந்தித்த
தமிழகத்தின் அருகில்
அதே மொழி
பேசும் மக்களை கொண்ட
மக்களை கொண்ட புதிய
நாட்டை ஒரு போதும்
அனுமதிக்காது

மிக முக்கியமாக
ஆயுத போராட்டம் ஒன்றின்
மூலம் உருவாகும்
ஒரு புதிய நாட்டை
சர்வதேதம் இனி
அனுமதிக்காது

 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, வைரவன் said:

இந்தியாவின் வளர்ச்சி பற்றிய
கேள்விகளுக்கு இந்த செய்தி
பதிலாக இருக்கட்டும்

http://www.livemint.com/Politics/u4qe2jXFEdfr8zIdoR6GYO/India-to-be-fastest-growing-economy-again-in-2018-World-Ban.html

முதலில் லைவ் மைன்ட் இந்திய நடுத்தர மேல் குடியானவர்களை உச்சி குளிரவைக்கும் ஊடகம் அதில் வரும் செய்திகள் அநேகமானவை கற்பனை உலகில் மிதக்கவிடும் .

முதலில் உலக வங்கி இந்த வருடம் 7.3 வீதம் வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக அங்கு கூறி உள்ளனர் .அதைவிட உலகவங்கி ஒரு நாட்டுக்குள் புகுந்து அதிக கடன்களை அள்ளி வழங்கினால் அந்த நாடு யுத்தமின்றி சரணாகதியை அடைந்து அடிமையாகும் இந்த உலக வங்கி புகுந்து ஏதாவது ஒரு நாடு முன்னேறி இருக்கா விடை இதுவரை இல்லை நாசம்தான் .

29 minutes ago, வைரவன் said:

இல்லை நாங்க
உலக வங்கி
அறிக்கைகள்
தரமான  பொருளாதார
கட்டுரைகளை எல்லாம்
படிக்க மாட்டம்
half boil தனமான
வீடியோக்களையும்
மீம்ஸுகளையும்  தான்
நம்புவம் என்றால்
உங்களை
ஒன்றும் செய்ய ஏலாது

நீங்கள் கொண்டுவந்து போடும் இணைப்புக்கள் அந்த நாட்டின் ஜால்ராக்கள் .

சமீபத்தில் மோடியின் மேக்கின் இந்தியா என்று ஆப்பிள் போன் தயாரிப்பு தொழிற்சாலை கூடம் வரப்போவதாய் பெரிதாக இதே லைவ் மைன்ட் ல் தம்பட்டம் அடித்தார்கள் கடைசியில் தயாரிப்பு இல்லை Refurbished Products என சொல்லப்படும் மேல் நாடுகளில் நுகர்வோரால் கழித்து விடபட்ட போன்கள் சிறிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக வரும் போன்களை ரிப்பேர் செய்து மீள் விற்பனை செய்வது போன்ற தொழில்சாலை இதைவிட 15 வருட    வரி விலக்கு குடுக்கபட்டுள்ளது . அங்கேயே பிறந்து விவசாயம் செய்பவர்களுக்கு ஒரு சலுகையும் கிடையாது இதுதான் இந்தியாவின் வளர்ச்சி என்பதா ?

42 minutes ago, வைரவன் said:

half boil தனமான
வீடியோக்களையும்
மீம்ஸுகளையும்  தான்
நம்புவம் என்றால்
உங்களை
ஒன்றும் செய்ய ஏலாது

மீம்ஸ் ம் ஒளிநாடா என்பன யதார்த்தைய் பிரதி பலிக்கின்றது  மேல்தட்டு ஊடகங்கள் மத்திய அரசின் ஊதுகுழல்களாக தொழில்படுகின்றன .

38 minutes ago, வைரவன் said:

இந்தியா
ஒரு போதும்
தன் அருகில்
தன் அயலில்
தன் தாளத்துக்கு
ஆட விரும்பாத
தனித்துவமாக இருக்க
கூடிய
இன்னொரு புதிய நாட்டை
அனுமதிக்காது

அதுவும் முதன் முதலில்
பிரிவினையை சிந்தித்த
தமிழகத்தின் அருகில்
அதே மொழி
பேசும் மக்களை கொண்ட
மக்களை கொண்ட புதிய
நாட்டை ஒரு போதும்
அனுமதிக்காது

இவ்வளவுதான் இந்தியாவின்  பிராந்திய நலனா ?:14_relaxed:

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, வைரவன் said:

மிக முக்கியமாக
ஆயுத போராட்டம் ஒன்றின்
மூலம் உருவாகும்
ஒரு புதிய நாட்டை
சர்வதேதம் இனி
அனுமதிக்காது

ஒரு நாடு உருவாகுவது என்றால் கட்டாயம் ஆயுத போராட்டம் இருக்கனுமா ? அல்லது புதிய நாடு உருவாகுவதை சர்வதேசம் எதிர்க்குமா ? இங்கு எதை கூற வருகிறீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படத்தை நேற்றுத்தான் பார்த்தேன். மூன்றே மூன்று உண்மையான கதாப் பாத்திரங்களை வைத்து தாம் அறிந்துகொண்ட முக்கியமான விடயங்களை பார்ப்பவர்கள் புரிந்துகொள்ளும்படியாக விளக்கியிருக்கிறார்கள்.

இப்படத்தின் நோக்கம், ரஜீவின் மரணம் நடைபெற்ற அன்றும், அதற்கு அடுத்துவரும் இருநாட்களிலும் தடயவியைல் நிபுணர்களினது, போலிசினதும் அசமந்தப் போக்கு எவ்வகையில் தடயங்கள் மாற்றப்படுவதற்கும் அழிக்கப்படுவதற்கும் காரணமாக இருந்தது என்பது பற்றியும், முக்கியமான நேரங்களில் தனிப்பட்ட மனிதர்களால் எடுக்கப்பட்ட முடிவுகள் எப்படி ரஜீவ் கொலையை ஏதுவாக்கியது என்பதுபற்றியும், கொலையின் பின்னால் இன்னொரு சக்தி இருக்கலாம் என்பதுபற்றிய ஒரு சந்தேகத்தையும் விட்டுச் செல்வதாக இருக்கிறது.

இந்தக் கொலையினை புலிகளுடன் இணைப்பதற்கு இந்திய உளவுத்துறை பயன்படுத்திய ஹரி பாபு எனும் மனிதரது அடையாளமும், அவர் வைத்திருந்ததாகக் கூறப்படும் கமராவும் உண்மையானவைதான என்ற கேள்வியை மிகவும் ஆணித்தரமாக , அரசு முன்வைத்த ஆதாரங்களை உடைத்தெறிந்து இப்படம் கேள்வி கேட்கிறது. 

இவ்விசாரணையில் தடயவியல் நிபுணராகக் கடமையாற்றிய பேராசிரியர் ஒருவர் அண்மையில் வெளியிட்ட புத்தகத்தில்ன் கூறப்பட்டுள்ள பல விடயங்களை ஆராயும் இப்படம், முன்னுக்குப் பின் முரணாக அந்தப் பேராசிரியர் வெளியிட்ட அறிக்கைகள், வாக்குமூலங்களை அலசி ஆராய்ந்து கொலை விசாரணையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.

விசாரணையின் நம்பகத்தன்மையைனைக் கேள்விகேட்பதன் மூலம் விசாரணை மீளவிம் ஆரம்பிக்கப்பட்டு, தவறவிடப்பட்ட, மறைக்கப்பட்ட விடயங்கள் மீளவும் முன்கொண்டுவரப்படுவதன் மூலம்வ, உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, இன்றுவரை போலி குற்றச் சாட்டுக்களின் அடிப்படையில் சிறைகளில் வாடும் அப்பாவிகள் விடுவிக்கப் படவேண்டும் என்பது இப்படத்தின் நோக்கமாக இருக்கலாம்.

 

ஆனால், கொலை நடைபெற்ற நாள்முதல் புலிகளை நோக்கியே விசாரணைகளை ஆரம்பித்து அவர்களையே முடிவாக்கி, தீர்ப்பும் வழங்கிய இந்திய அரசு, இன்னுமொருமுறை இந்த விசாரணைகளை ஆரம்பிக்கும் என்று எதிர்பார்ப்பது கடிணம்தான். 

 

  • தொடங்கியவர்

இந்தியா குப்பைகளின் சாம்ராச்சியமாகவே இன்றுவரை இருந்து வருகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா போன்றதொரு பிராந்திய வல்லரசு எமக்கருகில் இருப்பது எமது சாபக்கேடுதான். இது எமக்குமட்டுமல்லாமல், இந்எட்ம்தியாபோன்ற பிராந்திய வல்லரசுகளுக்கு அருகிலிருக்கும் எம்மைப்போன்ற சிறிய தேசிய இனங்கள் அனைத்துக்குமே இது ஒரு சாபக்கேடுதான். ஏனென்றால், ஒரு பிராந்தியத்திலிருக்கும் ஒரு வல்லரசை எதிர்த்துக்கொண்டு, அப்பிராந்தியத்தில் இருக்கும் ஒரு சின்னஞ்சிறிய இனத்துக்கு வேறு நாடுகள் உதவும் என்று எதிர்பார்க்க முடியாது. 

2009 இறுதிக் கட்டப் போரிலும் கூட, இந்திய அழுத்தத்திற்குப் பணிந்துதான் அமரிக்கா உற்பட்ட சர்வதேசம் இனக்கொலையைக் கண்டும் பேசாமல் இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இந்தியா நேரடியாகவோ, மறைமுகமாகவோ இனக்கொலையில் பங்குகொண்டிருக்கிறது என்பது உண்மை. ஆயுத உதவிகளைச் செய்யவில்லை என்று கூறினால்க் கூட, ராஜதந்திர உதவிமுதல், சர்வதேச அழுத்தங்களை அடக்கியதுவரை மிகவும் அப்பட்டமான முறையில் இனக்கொலையில் பங்குகொண்டிருக்கிறது இந்தியா.

ரஜஈவ் கொலை நடைபெறாமல் இருந்தால் கூட இந்தியா இப்படித்தான் நடந்துகொண்டிருக்கும் என்பதை புரிந்துகொள்வது சற்றுக் கடிணமானதாகவே எனக்குப் படுகிறது. ஏனென்றால், ரஜீவ் கொலை நடைபெற்று 18 வருடங்களுக்குப் பிறகு, இந்தியா இலங்கை விவகாரத்தில் மிகவும் மூர்க்கமாக, தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கக் காரணம் என்ன? வேறு காங்கிரஸ் அரசுகளும், பா.ஜ.க போன்றவை அட்ட்சியில் இருந்தபோது வராத இந்த ஆக்ரோஷம், விதவை ஆட்சியில் வரக் காரணம் என்ன? இனக்கொலையை மறைக்க சர்வதேச அரங்கில் இந்தியா எடுத்த நடவடிக்கைகளும், இலங்கைக்கு எதிரான ஐ.நா வின் தீர்மானங்களை மறுக்க, மழுங்கடிக்க விதவை தலமையிலான இந்தியா பகீரதப் பிரயத்தன் எடுத்தற்கும் காரணம் என்ன?

விடை ஒன்றுதான் .அதாவது ரஜீவின் கொலைக்கான தனது தனிப்பட்ட பழிவாங்கலை நடத்துவதற்கு 18 வருடங்கள் காத்திருந்து சரியான அரசு இலங்கையில் அமைவதை உறுதிப்படுத்திக்கொண்டு விதவை தலமையிலான காங்கிரஸ் அரசு தனது விரதத்தை முடித்திருக்கிறது. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பாவம். ஏமாந்தது பொம்பிளை முசோலினி. பிரபாகரனை உயிரோடையோ, பிணமாகவோ தன்னிடம் தரவேண்டும் என்கின்ற கோரிக்கையிலே இவ்வளவு தாண்டவக் கூத்தாடினா. கேட்டதும்  கிடைக்கவில்லை, நினைத்ததும் நடக்கவில்லை, இப்போ அரசியலும் இல்லை. தோற்றது அவரது லட்சியம்.   தர்மம் தூங்குவது போல தோன்றினாலும் ஒருநாள் உக்கிரமாய்த் தாக்கியே தீரும். அனுபவிக்கப்போவது அவரது சந்ததியே.

22 hours ago, satan said:

பாவம். ஏமாந்தது பொம்பிளை முசோலினி. பிரபாகரனை உயிரோடையோ, பிணமாகவோ தன்னிடம் தரவேண்டும் என்கின்ற கோரிக்கையிலே இவ்வளவு தாண்டவக் கூத்தாடினா. கேட்டதும்  கிடைக்கவில்லை, நினைத்ததும் நடக்கவில்லை, இப்போ அரசியலும் இல்லை. தோற்றது அவரது லட்சியம்.   தர்மம் தூங்குவது போல தோன்றினாலும் ஒருநாள் உக்கிரமாய்த் தாக்கியே தீரும். அனுபவிக்கப்போவது அவரது சந்ததியே.

ஜனநாயக வேடமிட்டு கொலைவெறியாட்டம் ஆடிய முசோலினிகளும் அவர்களது கொலைகாரர்களும்  தண்டிக்கப்பட வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவை உலகம் தண்டித்திருந்தால்.. இதெல்லாம் அலசப்பட வேண்டிய விடயமாகவே இருந்திருக்காது. தப்பு உலகின் கையில். 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Rajesh said:

ஜனநாயக வேடமிட்டு கொலைவெறியாட்டம் ஆடிய முசோலினிகளும் அவர்களது கொலைகாரர்களும்  தண்டிக்கப்பட வேண்டும்!

அப்பாவிகளை கொலை செய்து தன் சந்ததிக்கு தீராத  பழியைத் தேடி வைத்துள்ளார். அப்பனும், ஆத்தாளும் சேர்ந்து  தேடிய சொத்துக்கள் அவை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.