Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் விளையாட்டு நகரம்…

Featured Replies

யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் விளையாட்டு நகரம்…

IMG_2498.jpg?resize=800%2C600

யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சங்கத் தலைவரும் பிரதி சபாநகருமான திலங்க சுமதிபால இன்று நேரில் ஆராய்தார்.

 இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்குள் முடிவுறுத்தப்படும் என்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைப்பது தொடர்பில் பல வருடங்களாக ஆராயப்பட்டு வருகிறது. ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதி, பொன்னாலைச் சந்திக்கு அண்மையாக உள்ள திடல் உள்ளிட்ட இடங்கள் இதற்காக முன்மொழியப்பட்டன.

 எனினும் அவை ஆராயப்பட்டு சில காரணிகளால் கைவிடப்பட்டன.

இந்த நிலையில் மண்டைதீவில் பெரும் திடல் முன்மொழியப்பட்டது.

அந்த இடத்தை நேரில் பார்வையிடுவதற்காக இலங்கை கிரிக்கெட்டின் தலைவரும் நாடாளுமன்ற பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபால தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தனர்.

 அவர்கள் இன்று முற்பகல் மண்டைதீவுக்குச் சென்று கிரிக்கெட் மைதானம் அமைக்கும் இடத்தைப் பார்வையிட்டனர்.

இந்தக் குழுவினருடன் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சட்டத்தரணி எல்.இளங்கோவன் ஆகியோரும் மண்டைதீவுக்கு வருகை தந்தனர்.

யாழ்ப்பாணத்துக்கு வரம்

”சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் கூடிய விளையாட்டு நகரம் யாழ்ப்பாணத்துக்குக் கிடைப்பது வரம். மூன்று ஆண்டுகளில் இந்த மைதானம் அமைக்கப்படும்.

நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பில் இந்த மைதானம் விரைந்து அமைக்கப்படவுள்ளது” என்று நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

 வடக்கின் விளையாட்டு நகரம்

”மண்டைதீவில் வடக்கின் விளையாட்டு நகரம் அமைக்கப்படவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் உடற்பயிற்சி மையம், நீச்சல் தடாகம் உள்ளிட்டவையும் அமைக்கப்படும். இங்கு கால்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், றக்பி உள்ளிட்ட போட்டிகளையும் நடத்த வசதிகள் செய்யப்படும்.

 வெளிநாட்டு வீரர் தங்கக் கூடிய ஹொட்டல் ஒன்றும் அமைகப்படும்” என்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

IMG_2496.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2018/63721/

  • Replies 51
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

யாழ்ப்பாணம் மண்டைதீவில், சர்வதேச தரமுடைய மைதானம் அமைக்கப்படவுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் மக்கள் வாழ்க்கைத்தரம் மூன்றாம்தர நிலமையில் இருக்கும்போது, சர்வதேச தரத்தில் எதுக்கு விளையாட்டு மைதானம் என்ற  ஒரு கேள்வி எம்மில் பலருக்கு எழுவது நியாயமாகதான் இருக்கும்.

ஒரு சர்வதேசதர விளையாட்டு அரங்கு அமையும்போது  அதனை சுற்றியுள்ள பகுதிகள் பொருளாதார ரீதியில் ஓரளவுக்கேனும் பயன்பெறும் வாய்ப்பு நிச்சயம் உண்டு.

நாம் கேட்பதை அவர்கள் தரபோவதில்லை என்ற நிலமை இருக்கும்போது, அவர்கள் தாமாக தருவதை வாங்கிகொண்டு  எமது அரசியல் நகர்வுகளை செய்யலாம், அரசியல் என்பது வேறு பொருளாதார நகர்வு என்பது வேறு!

உள்நாட்டில் மட்டக்களப்பு முஸ்லிம்கள் உதாரணம், சிங்களவர்களையும் தமிழர்களையும் அரசியல் ரீதியில் அவர்கள் அடிக்கடி மாற்றி மாற்றி  வெறுத்தாலும், தங்களது பிரதேசங்களை முன்னேற்றுவதில் குறியாயிருக்கிறார்கள்..

நாங்கள் சிங்களவர்களுக்கு மறுபடியும் நீண்டகால அடிமை ஆகிட்டோம்..

ஆக குறைந்தது எதிர்கால சந்ததிக்கு ஏதாவது சிறு வளர்ச்சியை விட்டுபோகட்டும் காலம்,

வாழ்த்துக்கள் இந்த முயற்சிக்கு, இடையில யாரும் புகுந்து குழப்பிவிட வேண்டாம்!

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, நவீனன் said:

யாழ்ப்பாணம் மண்டைதீவில், சர்வதேச தரமுடைய மைதானம் அமைக்கப்படவுள்ளது.

நல்ல விடையம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, valavan said:

யாழின் மக்கள் வாழ்க்கைத்தரம் மூன்றாம்தர நிலமையில் இருக்கும்போது, சர்வதேச தரத்தில் எதுக்கு விளையாட்டு மைதானம் என்ற  ஒரு கேள்வி எம்மில் பலருக்கு எழுவது நியாயமாகதான் இருக்கும்.

ஒரு சர்வதேசதர விளையாட்டு அரங்கு அமையும்போது  அதனை சுற்றியுள்ள பகுதிகள் பொருளாதார ரீதியில் ஓரளவுக்கேனும் பயன்பெறும் வாய்ப்பு நிச்சயம் உண்டு.

நாம் கேட்பதை அவர்கள் தரபோவதில்லை என்ற நிலமை இருக்கும்போது, அவர்கள் தாமாக தருவதை வாங்கிகொண்டு  எமது அரசியல் நகர்வுகளை செய்யலாம், அரசியல் என்பது வேறு பொருளாதார நகர்வு என்பது வேறு!

உள்நாட்டில் மட்டக்களப்பு முஸ்லிம்கள் உதாரணம், சிங்களவர்களையும் தமிழர்களையும் அரசியல் ரீதியில் அவர்கள் அடிக்கடி மாற்றி மாற்றி  வெறுத்தாலும், தங்களது பிரதேசங்களை முன்னேற்றுவதில் குறியாயிருக்கிறார்கள்..

நாங்கள் சிங்களவர்களுக்கு மறுபடியும் நீண்டகால அடிமை ஆகிட்டோம்..

ஆக குறைந்தது எதிர்கால சந்ததிக்கு ஏதாவது சிறு வளர்ச்சியை விட்டுபோகட்டும் காலம்,

வாழ்த்துக்கள் இந்த முயற்சிக்கு, இடையில யாரும் புகுந்து குழப்பிவிட வேண்டாம்!

சற்று விளக்கமாக கூறமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

சற்று விளக்கமாக கூறமுடியுமா?

எதை விளக்கவேண்டும் என்கிறீர்கள்?

ஒரு சர்வதேச அரங்கு அமையும்போது, போக்குவரத்து, வியாபாரம், சாலைகளின் தரம், தொடர்பாடல், மின்சாரவசதிகள், மொழியாற்றல் அனைத்துமே வளரும் வாய்ப்புக்கள் அதிகம்... 

அந்த மைதானத்தின் வாயிலில் போரில் தம்,அங்கங்களை, உறவுகளை, வாழ்வையிழந்த போராளிகள் , பொதுமக்கள் பொரிகடலை விற்றாவது தமது காலில் தாமே நிற்கும் சக்தியை பெற்றுவிட்டால்... கண்டிப்பாக இந்த திட்டம், சர்வதேசத்தாலும், சக மனிதர்களாலும் ,எமது தமிழ் அரசியல்வாதிகளாலும்  கைவிடப்பட்ட  எமது இனத்திற்கு  உதவியிருக்கிறது என்று பெருமைபடுவேன்..!

Edited by valavan

  • தொடங்கியவர்

unnamed-_23_.jpgunnamed-_22_.jpg

 2017 ஜனவரியிலும் உந்த சுமதிபால நீல சேட்டுடன் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் அரங்கு என்றவர்.

IMG_2498.jpg?resize=800%2C600

இப்ப 2018 ஜனவரியிலும் நீல சேட்டுடன் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு நகரம் என்கிறார்.

முதலில் அதை கட்டி முடிக்கட்டும்.

நிச்சயம் தேவையான ஒன்று

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, valavan said:

எதை விளக்கவேண்டும் என்கிறீர்கள்?

ஒரு சர்வதேச அரங்கு அமையும்போது, போக்குவரத்து, வியாபாரம், சாலைகளின் தரம், தொடர்பாடல், மின்சாரவசதிகள், மொழியாற்றல் அனைத்துமே வளரும் வாய்ப்புக்கள் அதிகம்... 

அந்த மைதானத்தின் வாயிலில் போரில் தம்,அங்கங்களை, உறவுகளை, வாழ்வையிழந்த போராளிகள் , பொதுமக்கள் பொரிகடலை விற்றாவது தமது காலில் தாமே நிற்கும் சக்தியை பெற்றுவிட்டால்... கண்டிப்பாக இந்த திட்டம், சர்வதேசத்தாலும், சக மனிதர்களாலும் ,எமது தமிழ் அரசியல்வாதிகளாலும்  கைவிடப்பட்ட  எமது இனத்திற்கு  உதவியிருக்கிறது என்று பெருமைபடுவேன்..!

இது முற்று முழுதாகவே மத்திய அரசின் திட்டம். மாகாண சபை கையாலாதவர்கள் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம் .

தமிழன் ஒரு சர்வதேச மைதானத்தின் வாயிலில் கடலை விற்பதாவிற்பதா?

தம்புள்ளையில் சர்வதேச மைதானம் உள்ளது சென்று பாருங்கள் அதன் கோலத்தை. போட்டி நடைபெறும் நாட்களில் தெற்கிலிருந்து வரும் நிறுவனங்கள் கடைகளை விரிக்கிறார்கள். உள்ளூர் வியாபாரிகளுக்கு வியாபாரம் உள்ளூர் வாசிகளாலேயே. போட்டி இல்லாத நாட்களில் வெறிச்சோடி இருக்கிறது. 

சவர்வதேச மைதானத்திற்குள் வியாபாரம் செய்வதற்கு கேள்வி மனு அடிப்படையில் விலை கோரப்படும், அதனை பூர்த்தி செய்ய (கையூட்டினூடாக) தெற்கில் பல நிறுவனங்கள் உள்ளது. (அத்துடன் சர்வதேச தரத்துடன் கூடிய உணவகமோ தங்கு விடுதியோ தமிழர்களால் நடாத்தப்படுவதில்லை*)

மின்சாராம் - ஏற்கனவே இடைக்கிடையே மின் வெட்டு நடைபெறுகிறது, ஆனால் போட்டி நடைபெறும் போது மின்பிறப்பாக்கி பயன்படுத்தப்படும்.

வடகிழக்கில் மட்டுமல்ல சிறீலங்காவில் தமிழன் கடை விரிக்க வேண்டுமாயின் சட்டப்படி அனுமதி பெற வேண்டும், ஆனால் சிங்களவர்களுக்கு அப்படி இல்லை, தெஹிவளை மிருக காட்சி சாலையை சூழ்ந்த நடைபாதையை நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர்.

இது தமிழர்களுக்கு தேவையான ஒன்று, ஆனால் தமிழர்களின் உரிமைக்கும் உழைப்பிற்கும் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

இது முற்று முழுதாகவே மத்திய அரசின் திட்டம். மாகாண சபை கையாலாதவர்கள் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம் .

தமிழன் ஒரு சர்வதேச மைதானத்தின் வாயிலில் கடலை விற்பதாவிற்பதா?

MEERA-  நீங்கள் தாயக பார்வையிலும், அதன்  தரவுகளிலும்  மிக  தெளிவான, துல்லியமான தகவல்கள் தெரிந்தவர் என்பதை உங்கள் கருத்தாடலில் பலமுறை நான் கவனித்திருக்கிறேன், இப்போ நீங்கள் எனக்கு அளித்த பதில் சும்மா மறுதலிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் என்று நான் கருதுகிறேன்.

மத்திய அரசின் திட்டமும், மாகாண அரசின் கையறு நிலையும் நாங்கள் அனைவருமே அறிந்ததுதான், அவர்கள் அனைவரையும் ஒரு ஓரமா விட்டுவிட்டு, அடுத்தநாள் உணவுக்கு என்ன வழி என்று எண்ணி  வாழ்பவர்கள் சிறு பயனாவது பெற்றால் சந்தோஷம், என்பதே என் கருத்து!

மற்றும்படி , தமிழன் அந்த அரங்க வாசலில் கடலை விற்கணும் என்பது நேர் கருத்து அல்ல , அப்படியாவது அவர்கள் முன்னேறட்டுமே என்ற ஆதங்கம்தான் அதன் அர்த்தம்!

எந்த மாநிலமோ, மத்திய, சர்வதேச அரசுகளோ ஓரிடத்தில் அரங்கம் அமைத்தால் அதனை சுற்றியுள்ள நிரந்தர பிரதேசவாதிகளுடன் போட்டியிட்டு வியாபாரத்தில் வெற்றி பெறுவது முற்று முழுக்க கடினம், அது உங்களுக்கும் தெரிந்ததுதான்!

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, MEERA said:

இது தமிழர்களுக்கு தேவையான ஒன்று, ஆனால் தமிழர்களின் உரிமைக்கும் உழைப்பிற்கும் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.

ம்ம் இதை மத்த்திய அரசுடன் பேசி மாகாண சபை பெற்று க்கொண்டு அதனுடன் வேலைப்பாடுகள் கடைத்தொகுதி என்பன தமிழ் மக்களுக்கு கிடைக்குமாக இருந்தால் சந்தோசமே

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, valavan said:

MEERA-  நீங்கள் தாயக பார்வையிலும், அதன்  தரவுகளிலும்  மிக  தெளிவான, துல்லியமான தகவல்கள் தெரிந்தவர் என்பதை உங்கள் கருத்தாடலில் பலமுறை நான் கவனித்திருக்கிறேன், இப்போ நீங்கள் எனக்கு அளித்த பதில் சும்மா மறுதலிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் என்று நான் கருதுகிறேன்.

மத்திய அரசின் திட்டமும், மாகாண அரசின் கையறு நிலையும் நாங்கள் அனைவருமே அறிந்ததுதான், அவர்கள் அனைவரையும் ஒரு ஓரமா விட்டுவிட்டு, அடுத்தநாள் உணவுக்கு என்ன வழி என்று எண்ணி  வாழ்பவர்கள் சிறு பயனாவது பெற்றால் சந்தோஷம், என்பதே என் கருத்து!

மற்றும்படி , தமிழன் அந்த அரங்க வாசலில் கடலை விற்கணும் என்பது நேர் கருத்து அல்ல , அப்படியாவது அவர்கள் முன்னேறட்டுமே என்ற ஆதங்கம்தான் அதன் அர்த்தம்!

எந்த மாநிலமோ, மத்திய, சர்வதேச அரசுகளோ ஓரிடத்தில் அரங்கம் அமைத்தால் அதனை சுற்றியுள்ள நிரந்தர பிரதேசவாதிகளுடன் போட்டியிட்டு வியாபாரத்தில் வெற்றி பெறுவது முற்று முழுக்க கடினம், அது உங்களுக்கும் தெரிந்ததுதான்!

இதை உங்களுடன் மல்லுக்கட்ட வேண்டும் என்று எழுதவில்லை. நீங்கள் அடுத்த முறை தாயகம் செல்லும் போது தம்புள்ளைக்கும் விஜயம் செய்யுங்கள்.

நான் நினைப்பது / ஆசை தமிழன் கம்பீரமாக நிரந்தரமாக மைதானத்திற்குள் நிற்க வேண்டும் என்பது,

தமிழனை சர்வதேச மைதானத்தின் வாயிலில் சிறீலங்கா / சிங்கள அதிகாரம் கடலை விற்க விடுமோ என்ற தொனியில் தான் அந்த கருத்தை வைத்தேன்.

16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் இதை மத்த்திய அரசுடன் பேசி மாகாண சபை பெற்று க்கொண்டு அதனுடன் வேலைப்பாடுகள் கடைத்தொகுதி என்பன தமிழ் மக்களுக்கு கிடைக்குமாக இருந்தால் சந்தோசமே

நிச்சயமாக மாகாண சபை இதை குழப்பிவிடும், அவர்கள் கையாலாதவர்கள்.

மைதான கட்டுமானத்திலிருந்து தமிழரின் உழைப்பும் உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

நான் நினைப்பது / ஆசை தமிழன் கம்பீரமாக நிரந்தரமாக மைதானத்திற்குள் நிற்க வேண்டும் என்பது,

தமிழனை சர்வதேச மைதானத்தின் வாயிலில் சிறீலங்கா / சிங்கள அதிகாரம் கடலை விற்க விடுமோ என்ற தொனியில் தான் அந்த கருத்தை வைத்தேன்.

உங்கள் கருத்தை புரிந்துகொண்டேன்...,, தமிழனை தமிழர்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியல்வாதிகளே கடலை விற்கும் நிலைக்கு தள்ளும்போது, சிங்களவன் அந்த நிலைக்கு எம்மை ஆக்கினால் அதொன்றும் ஆச்சரியபடுவதற்கோ, அவமான படுவதற்கோ உரிய ஒரு விஷயம் இல்லையே... என்னைபோன்றவர்களின் கவலையெல்லாம், எல்லா வலிகளையும் சுமந்த எம் மக்கள் கூட்டம், வயிற்று பசியையாவது  சுமக்காமல் வாழட்டுமே என்ற ஆதங்கம் மட்டுமே, மற்றும்படி அவர்களை யாருக்கும் அடிமையாக வாழ சொல்லி ஐடியா தருவதற்காக அல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு மைதானம் அமைவது நல்லவிடயம். எனினும் தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள அரசால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தமிழர்களை நுகர்வோராக மாற்றி அதன் மூலம் சிங்களவர்களுக்குரிய கொம்பனிகள் அறுவடை செய்வதை நோக்கமாகவே கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

இன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செவ்வி ஒன்றை Huffpost இல் பார்த்தேன் (யாழில் இணைத்துள்ளேன்). செவ்வியில் முதலமைச்சர் விக்கி ஐயா தெளிவாகத்தான் வடமாகாணத்தின் நிலையைக் கூறியுள்ளார். அரசாங்கம் பல்வேறு விடயங்களை ஆளுனர் ஊடாகாவும், அரசாங்க அதிபர் ஊடாகவும் நேரடியாகவே செயற்படுத்துகின்றது. மாகாணசபை அதிகாரம் இல்லாமல் இருப்பது தெளிவு, எனினும் இப்படியான பாரிய அபிவிருத்தித் திட்டங்களில் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்களைக் கலந்தாலோசனைகளில் சேர்க்கவேண்டும். ஆனால் அங்கஜன் போன்றோர் தம்மை முன்னிறுத்த மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்து கொண்டு வரும் இத்திட்டம் தமிழ் மக்களுக்கு பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டு வர பெருமளவில் உதவப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த மைதானம் அமைக்கப்படவுள்ள நிலம் யாருக்கு சொந்தம், என்ன அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு வழங்கப்படுகிறது? இதன் வருமானம் யாருக்கு செல்லப் போகிறது? என்ற பல விடயங்கள் தொக்கி நிற்கின்றன.

தமிழர்களுக்கு நன்மை பயக்கும் விடயத்தை தமிழர்களை ஒடுக்கும் அரசு செய்வதற்கு எந்த அவசியமும் இல்லை என்ற அடிப்படையில் இருந்தே இந்த திட்டத்தை பார்க்க முடியும். இதன் தூரநோக்கு திட்டமாக மைதானத்தை சுற்றி உல்லாச தங்குமிட வசதிகள் வரலாம், சுற்றுலா தளமாக மாறலாம் அதை ஒட்டிய வணிகவளாகங்கள் வரலாம். மண்டைதீவு ஒன்றும் பெரிய நிலப்பரப்பு கிடையாது, அதனால் இவ்வளவுக்குமே இடம் போதுமானதாக இருக்கும். இவற்றின் உரிமையாளர்கள் தமிழர்களாக இருக்கப்போவதில்லை ஆனால் தமிழர்கள் அங்கு வேலைசெய்ய வாய்ப்பிருக்கின்றது. இல்லை தற்போதைய அரசு 50 மில்லியனுக்கு இத்திட்டத்தை கணக்கு காட்டி 25 மில்லியனை சுருட்டலாம். எது உண்மை என்று யாருக்கு தெரியும் !! இல்லை எதைத் தான் தடுக்க முடியும் ? நடப்பதை கண்டு கொள்ள வேண்டியதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, கிருபன் said:

 தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள அரசால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தமிழர்களை நுகர்வோராக மாற்றி அதன் மூலம் சிங்களவர்களுக்குரிய கொம்பனிகள் அறுவடை செய்வதை நோக்கமாகவே கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழர் தாயக பகுதியில் மேற்கொள்ளப்படும், இன்னும் எந்த வகையிலும் வெற்றிபெறாத களியாட்ட ரீதியிலான சர்வதேச மைதானம் போன்ற  அபிவிருத்தி திட்டங்கள், எப்படி  யாழ் நுகர்வோரை பாதித்தது/பாதிக்கும்?

அப்படி ஒரு நிலை வந்தாலும் , ஏதோ ஒரு பகுதி லாபம் அவர்கள் முதலீட்டில் நாம் அடைந்தால், நாம் அந்த முதலீட்டின் உறங்கும் பங்காளிகள் மட்டுமே, இங்கே எமது நுகர்வை வைத்து எப்படி அவர்களது முதலீட்டை மீட்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்?

கண்டிப்பாக  சிங்களவனின்  வேண்டா விருந்தாளியாக நாங்கள் இருந்தாலும் , எம் சக்திக்கு உட்பட்டு தாயக உறவுகளுக்கு எம்மால் முடிந்ததை செய்த நமது புலம்பெயர் சமூகம், முடிந்தவரைக்கும் மீனை கொடுத்தோம், இனிமேல் மீன் பிடிப்பது எப்படியென்று முடிந்தவரைக்கும் சொல்லி கொடுக்கலாம் என்பதே ஆதங்கம்...அதற்காக, அத்தொழிலின் மூலம் அவர்கள் ஒரு துறை முகத்துக்கு சொந்தக்காரர்களாக ஆகிவிட முடியாது என்பது யாவரும் அறிந்ததே!

முரளிதரன் முன்னிலையில்/அனுசரணையில் கிளிநொச்சி/முல்லைத்தீவில் ஓர் சர்வதேச கிரிகெற் விளையாட்டு அரங்கு அமைப்பதாய் ஏதோ செய்தி முன்பு பார்த்த ஞாபகம். :rolleyes:

சென். பற்றிக்ஸ் கல்லூரியில் grass cricket pitch செய்தார்களாம். துவக்கவைப்பு விழாவில் ஜெயசூரியா வந்து நாலாபுறமும் ஆறுகள் தூக்கி அடித்தாராம். அதன்பிறகு இப்போது அந்த பிச் கேட்பார் அற்று இருப்பதாய் செய்தி. 

மண்டைதீவில் சர்வதேச கிரிகெட் விளையாடுவது என்றால் வேகமான காற்று பிரச்சனை இல்லையோ. அங்கு உள்ள பாடசாலை, கோயில், தேவாலயம் எல்லாம் தொடர்ந்து இயங்குமோ. 

  • தொடங்கியவர்
41 minutes ago, கலைஞன் said:

முரளிதரன் முன்னிலையில்/அனுசரணையில் கிளிநொச்சி/முல்லைத்தீவில் ஓர் சர்வதேச கிரிகெற் விளையாட்டு அரங்கு அமைப்பதாய் ஏதோ செய்தி முன்பு பார்த்த ஞாபகம். :rolleyes:

அது மாங்குளத்தில் அது தொடர்பாக எந்த தகவலும் இல்லை. :unsure:

41 minutes ago, கலைஞன் said:

சென். பற்றிக்ஸ் கல்லூரியில் grass cricket pitch செய்தார்களாம். துவக்கவைப்பு விழாவில் ஜெயசூரியா வந்து நாலாபுறமும் ஆறுகள் தூக்கி அடித்தாராம். அதன்பிறகு இப்போது அந்த பிச் கேட்பார் அற்று இருப்பதாய் செய்தி. 

கேட்பார் அற்று இருப்பதுக்கு காரணம் இதுவாக இருக்கலாம்.. புல்தரை pitch  எல்லா கல்லூரிகளிலும் இல்லை. இவர்கள் ( சென். பற்றிக்ஸ் கல்லூரி ) புல்தரை pitch  இல் பயிற்சி செய்து விட்டு யாழ் இந்துவிலோ, மத்திய கல்லூரியிலோ அல்லது சென் ஜோன்ஸ் இல் போய் சாதாரண pitch இல் விளையாட முடியாது.

இதுக்கு ஒரே தீர்வு யாழ் மாவட்ட பாடசாலைகள் யாவும் புல்தரை pitch களை அமைக்க வேண்டும்.

41 minutes ago, கலைஞன் said:

மண்டைதீவில் சர்வதேச கிரிகெட் விளையாடுவது என்றால் வேகமான காற்று பிரச்சனை இல்லையோ. அங்கு உள்ள பாடசாலை, கோயில், தேவாலயம் எல்லாம் தொடர்ந்து இயங்குமோ. 

ஏன்  mahinda rajapaksa international stadium hambantota இலும் காற்றுதானே. அங்கு  விளையாடுகிறார்கள்தானே சர்வதேச கிரிக்கெட்.

காற்று மட்டும்தானா?  யானை, நாய், எத்தனை தொல்லைகள்..:grin:

ஏன்  மேற்கு இந்திய மைதானங்களில் (caribbean)  இல்லாத காற்றா?

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

காற்றே என் வாசல் வந்தாய்.. காலியில்: 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

தமிழர் தாயக பகுதியில் மேற்கொள்ளப்படும், இன்னும் எந்த வகையிலும் வெற்றிபெறாத களியாட்ட ரீதியிலான சர்வதேச மைதானம் போன்ற  அபிவிருத்தி திட்டங்கள், எப்படி  யாழ் நுகர்வோரை பாதித்தது/பாதிக்கும்?

அப்படி ஒரு நிலை வந்தாலும் , ஏதோ ஒரு பகுதி லாபம் அவர்கள் முதலீட்டில் நாம் அடைந்தால், நாம் அந்த முதலீட்டின் உறங்கும் பங்காளிகள் மட்டுமே, இங்கே எமது நுகர்வை வைத்து எப்படி அவர்களது முதலீட்டை மீட்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்?

கண்டிப்பாக  சிங்களவனின்  வேண்டா விருந்தாளியாக நாங்கள் இருந்தாலும் , எம் சக்திக்கு உட்பட்டு தாயக உறவுகளுக்கு எம்மால் முடிந்ததை செய்த நமது புலம்பெயர் சமூகம், முடிந்தவரைக்கும் மீனை கொடுத்தோம், இனிமேல் மீன் பிடிப்பது எப்படியென்று முடிந்தவரைக்கும் சொல்லி கொடுக்கலாம் என்பதே ஆதங்கம்...அதற்காக, அத்தொழிலின் மூலம் அவர்கள் ஒரு துறை முகத்துக்கு சொந்தக்காரர்களாக ஆகிவிட முடியாது என்பது யாவரும் அறிந்ததே!

தமிழர்கள் கிரிக்கெட், உதைபந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களில் ஆர்வம் மிகுந்தவர்கள். எனவே இந்த சர்வதேச மைதானத்தை வரவேற்பதில் பிரச்சினையில்லை. ஆனால் சர்வதேச மைதானம் அமைவதால் பொருளாதாரத்தில் முன்னேறப்போகின்றவர்கள் தமிழர்களாக இருக்க வாய்ப்பில்லை. திட்டத்தை முன்னெடுக்கும் அரசியல்வாதிகளும் அவர்களுக்குப் பின்னே இருக்கும் கோப்பேறேற்காரர்களும்தான்.  வவுனியாவில் இருந்து சாவகச்சேரி வரை ஏ9 பாதையில் தமிழர்கள் அதிகம் வியாபாரம் செய்யமுடியாத தற்போதைய நிலையில் கச்சான் விற்கவும் தமிழர்களை அனுமதிப்பார்களா என்று சொல்லமுடியாது.

மேலும் புலம்பெயர் தமிழர்களின் நிதிவளத்தால் யாழ்ப்பாணத்தில் பணம் தாராளமாகப் புழங்குகின்றது. அதனால் தமிழர்கள் பேரம் பேசாமலேயே பொருள்களை வாங்கும் நிலையை நேரில் பார்த்திருக்கின்றேன். இப்படி நுகர்வுக்கலாச்சாரத்தில் மூழ்கி இருக்கும் தமிழர்களின் இடத்தில் மைதானம் வைத்து ஆதாயம் தேடலாம் என்பது சகல வங்கிகளின் கிளைகளையும் சிறு பட்டினங்களிலும் திறந்து பணம் பண்ணமுடியும் என்பதைப் புரிந்துகொண்ட கோர்பரேற்காரர்களுக்குத் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கிருபன் said:

ஆனால் சர்வதேச மைதானம் அமைவதால் பொருளாதாரத்தில் முன்னேறப்போகின்றவர்கள் தமிழர்களாக இருக்க வாய்ப்பில்லை. திட்டத்தை முன்னெடுக்கும் அரசியல்வாதிகளும் அவர்களுக்குப் பின்னே இருக்கும் கோப்பேறேற்காரர்களும்தான்.  

ஒரு சர்வதேச மைதானம் அமைவதால் தமிழர்கள் பொருளாதார ரீதியாக ஓஹோ என்று வளரமுடியாது, ஆனால் கிடைக்கும் எந்த ஒரு  சந்தர்ப்பங்களையும் எமது பிரதேச வளர்ச்சிக்கு பயன்படுத்தி ஆகவேண்டும் என்ற அங்கலாய்ப்பே அது!

மத்திய சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் திட்டம் ஒருவேளை நிறைவேற்றப்பட்டுவிடால், ஆட்சியும் அரசியல்வாதிகளும் ஐந்து வருஷங்களுக்கு ஒருமுறை மாறினாலும், அமைந்த கட்டிடம் அப்படியே எழுந்து நிற்குமே..

ஒருவேளை நீங்கள் சொல்வதுபோல்  Co-operators &Politicians... தான் இந்த திட்டத்தால் லாபமடைய போகிறார்கள் என்றால், ஒருவேளை இந்த திட்டம் தோற்றுபோய்விட்டால் நஷ்டமடையபோவதும் அவர்களே, அதனால் மேலதிகமாக ஒரு கட்டுமானம் யாழில் எழுந்தது என்ற ஒன்றை தவிர தமிழர்கள் அடைந்திடபோகும் நஷ்டம் எதுவும் இல்லையே?!

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச மைதானம் வாறது சந்தோசம். ஆனால் 7-8 மணிக்குள்ளே ஊரே அடங்கிவிடுதே .தூர இடங்களில் இருந்து ஒரு நிகழ்ச்சியை பார்க்க வருபவர் எப்படி ஊர் போய் சேருவார்?எத்தனையோ மில்லியன் டொலர்களை கொண்டு போய் முடக்கிவிட்டு தமிழர்களுக்கு செலவு செய்ததாக சொல்ல போகிறார்கள்.ஏதாவதொரு நிகழ்ச்சி நடந்தாலும் பாதுகாப்பிற்கு சிங்கள உத்தியோகத்தினரையே போடுவார்கள்.இனி என்ன மண்டைதீவிலும் சிங்கள குடியேற்றம் தான்.

On 1/27/2018 at 11:36 PM, நவீனன் said:

யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் விளையாட்டு நகரம்…

நல்ல விடயம்!

  • கருத்துக்கள உறவுகள்

மண்டை தீவில் சர்வதேச விமான நிலையம் ஒன்றை அமைக்க உத்தேசம் இருப்பதாக எங்கோ படித்த ஞாபகம் உள்ளது..
இந்த விளையாடு மைதானம் அமையாவிட்டாலும் விமான நிலையம் அமைய அதற்கு வாய்ப்புள்ளதா..?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

மண்டை தீவில் சர்வதேச விமான நிலையம் ஒன்றை அமைக்க உத்தேசம் இருப்பதாக எங்கோ படித்த ஞாபகம் உள்ளது..
இந்த விளையாடு மைதானம் அமையாவிட்டாலும் விமான நிலையம் அமைய அதற்கு வாய்ப்புள்ளதா..?

மண்டை தீவினர மொத்த நிலப்பரப்பே...மூன்று சதுர மைல்களுக்குள் தான்!

அதுக்குள்ளே..சர்வதேச விமானநிலையம்...விளையாட்டு மைதானம் எண்டு எல்லாத்தையும் எங்கை வைக்கிறது?

Mandaitivu (Tamil: மண்டைதீவு, translit. Maṇṭaitīvu; Sinhalese: මන්ඩතිව් Manḍativ) is an island off the coast of Jaffna peninsula in northern Sri Lanka, located approximately 3 kilometres (2 mi) south of the city of Jaffna. The island has an area of 7.56 square kilometres (2.92 sq mi) and is divided into three village officer divisions (Mandaitivu East, Mandaitivu South and Mandaitivu West) whose combined population was 1,524 at the 2012 census.[1][2]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.