Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரேயாவுக்கு டும் டும் டும்

Featured Replies

ஸ்ரேயாவுக்கு டும் டும் டும்
 

image_b9251b2a0e.jpg

2001ஆம் ஆண்டு வெளிவந்த 'இஷ்டம்' தெலுங்குத் திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமான ஸ்ரேயா, தமிழில் 2003ஆம் ஆண்டு வெளிவந்த 'எனக்கு 20 உனக்கு 18' திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின்பு 'மழை' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

ரஜினிகாந்த் ஜோடியாக ஸ்ரேயா நடித்து 2007இல் வெளிவந்த 'சிவாஜி' திரைப்படம் மூலம், தமிழில் நம்பர் 1 நடிகையாக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' திரைப்படத்தில் வடிவேலுவுடன் ஜோடி சேர்ந்து ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியதை அடுத்து, அவருக்கு நெகட்டிவ்வாக அமைந்தது.

பின்னர் அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களும், வெற்றித் திரைப்படங்களாக அமையவில்லை. தொடர்ந்து, முன்னணி ஹீரோக்கள் யாரும் ஸ்ரேயாவை அவர்களது திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யவில்லை. இதனால், தமிழ்த் திரைப்படங்களில் அவர் நடிப்பது மிகவும் குறைந்தது. இருந்தாலும், தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இதனிடையே, ஸ்ரேயாவுக்கும் அவருடைய ரஷ்ய காதலருக்கும் இடையே, எதிர்வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக, டோலிவூட் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. ஸ்ரேயா தற்போது அவரது வருங்கால கணவர் குடும்பத்தாரைச் சந்திக்க ரஷ்யா சென்றுள்ளாராம். நடிக்க வந்து 17 வருடங்கள் ஆகிவிட்டதால், திருமணம் செய்துகொண்டு செட்டிலாக, ஸ்ரேயா விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

image_68da97abc3.jpgimage_e749845033.jpg

http://www.tamilmirror.lk/cinema/ஸ்ரேயாவுக்கு-டும்-டும்-டும்/54-211321

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியென்றாலும் ஒரு குமர் கரை சேர்ந்தால் போதும்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்னு வெளிநாட்டுகாரா இருக்காங்க ... இல்லை தொழில் அதிபரா இருக்காங்க... இல்லை ரெண்டும் கலந்து இருக்காங்க ஏன் இப்படி  ..? ரெல் மீ  :cool:

  • கருத்துக்கள உறவுகள்

யாரும்மா இந்தக் கொயந்தை..?

அரையும் குறையுமா நிக்குது..?

aphone.gif  (Landon fashion @ SL embassy)

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
நடிகை ஸ்ரேயா சரணுக்கு டும் டும் டும்..!
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

 

சென்னை: தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியான ஸ்ரேயா சரண் தனது ரஷ்ய காதலரை அடுத்த மாதம் திருமணம் செய்துக் கொள்ளவிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர் ஸ்ரேயா சரண். தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினி முதல் விஜய் வரை முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ஸ்ரேயாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது.1125351337shri%20crp%20640.jpg

ஆனால், அவை அனைத்தும் வதந்தி என ஸ்ரேயாவின் தாயார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஸ்ரேயாவுக்கு மார்ச் மாதம் திருமணம் நடைபெறுவது உறுதி என அவருக்கு நெருங்கிய வட்டாரத்தின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.1499350854hriya12%20640.jpg

ரஷ்யாவைச் சேர்ந்து விளையாட்டு வீரரான ஆண்ட்ரே கோஷிக்கும், ஸ்ரேயா சரணுக்கும் இந்து முறைப்படி வரும் மார்ச் 17,18,19 என மூன்று தினங்கள் உதய்ப்பூரில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘நரகாசூரன்’ படத்திலும், பிரகாஷ் இயக்கி நடித்த ’உன் சமையலறையில்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் ஸ்ரேயா சரண் நடித்து வருகிறார்.

http://toptamilnews.com

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ரஷ்யக் காதலரைத் திருமணம் செய்த நடிகை ஸ்ரேயா

 
shriya_wed919133xx

 

2001-ல் திரையுலகில் அறிமுகமான ஸ்ரேயா, தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் ஸ்ரேயாவுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரரும் தொழிலதிபருமான ஆண்ட்ரே கோஷ்சீவை திருமணம் செய்துள்ளார் ஸ்ரேயா. 

ஷபனா அஸ்மி, மனோஜ் பாஜ்பயி என திரையுலகைச் சேர்ந்த இருவர் மட்டுமே ஸ்ரேயாவின் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார்கள். மிக நெருங்கிய நண்பர்கள், உறவினர்களை மட்டுமே திருமணத்துக்கு அழைத்துள்ளார் ஸ்ரேயா. 

இத்தகவல்கள் மும்பை ஊடகங்களில் வெளியானாலும் தனது திருமணம் குறித்து இதுவரை ஸ்ரேயா அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே விரைவில் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஸ்ரேயாவின் திருமணப் புகைப்படங்களும் அதன் காணொளியும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

http://www.dinamani.com/cinema/cinema-news/2018/mar/20/simple-and-secret-wedding-for-shriya-saran-2884240.html

  • கருத்துக்கள உறவுகள்

அவள் பறந்து போனாளே........

  • கருத்துக்கள உறவுகள்
On 08/02/2018 at 8:24 AM, suvy said:

எப்படியென்றாலும் ஒரு குமர் கரை சேர்ந்தால் போதும்.....!  tw_blush:

அதுக்கு .... ரசியாக்காரன் தானோ கரை சேர்க்க வேணும்?? tw_angry:

நாமும் சேத்திருப்போமே... கரை... :cool:

அப்ப்ளிகேஷன் ஓப்பன் பண்ணனின விசயமே தெரியாம போயிருச்சே.... சா.. நீங்களாவது சொல்லி இருக்கலாமே சுவியர்.. tw_cold_sweat:

எங்கப்பா தமிழ் சிறியர்? :11_blush:

என்ன உடுப்புக்கு, ரசியாக்காரன் செலவளிக்கத் தேவையில்லை. சிக்கனம்.

Edited by Nathamuni

14 hours ago, colomban said:

அவள் பறந்து போனாளே........

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கலைஞன் said:

 

அது ரோங்கு சாங்கு..

சரியான சாங்கு: அவள் பறந்து போனாளே....என்னை மறந்து போனாளே...

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி விடுவம், எங்கிருந்தாலும் நல்லா வாழட்டும்......, துறைமுகம் என்று இருந்தால் அதில் நாலு கப்பல் வாறதும் போறதும் வழமைதானே......!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

சரி சரி விடுவம், எங்கிருந்தாலும் நல்லா வாழட்டும்......, துறைமுகம் என்று இருந்தால் அதில் நாலு கப்பல் வாறதும் போறதும் வழமைதானே......!  tw_blush:

கப்பல் வரும்... போகும் சுவியர்...

பிரச்சனை என்னவெண்டா, துறைமுகம் எல்லோ  போகுது....

உங்களை, என்னை , சாமியாரைப் போல் கப்பல் காரர் என்ன செய்யிறது?tw_confused:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

கப்பல் வரும்... போகும் சுவியர்...

பிரச்சனை என்னவெண்டா, துறைமுகம் எல்லோ  போகுது....

உங்களை, என்னை , சாமியாரைப் போல் கப்பல் காரர் என்ன செய்யிறது?tw_confused:

துறை முகம் இருக்கிற .....இடத்துக்குக் கப்பலைக் கொண்டு போக வேண்டியது தானே!

இதில் எங்கே பிரச்சனை வருகின்றது..என்று தான் புரியவில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, புங்கையூரன் said:

துறை முகம் இருக்கிற .....இடத்துக்குக் கப்பலைக் கொண்டு போக வேண்டியது தானே!

இதில் எங்கே பிரச்சனை வருகின்றது..என்று தான் புரியவில்லை!

எல்லா கப்பலையும் எல்லா துறைமுகத்துக்கும் விடமாட்டாங்கள் கண்டியளோ....

重慶永川野生動物世界,一頭黑熊獨自跑到湖面一艘陳舊的獨木舟上玩耍。

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.