Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகள் 2018

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

ஒரு கேள்வி தமிழ்நாட்டில் ஏன் தேசிய கட்சிகள் கனவில் கூட காலுன்ற முடியவில்லை ?

தமிழுணர்வு என்பதையும் தாண்டி ஒருவித அந்நியத்தனம், மனம் ஒன்றவில்லை.

தேசியக்கட்சிகள் வலிந்து திணிப்பதை, மக்கள் ஏற்க தயாரில்லை.

மாநிலக் கட்சிகளின் அக்கால (திராவிடக்)கொள்கைகள் மக்களின் மனதில் இடம்பிடித்தன. குலக்கல்வி முறை ஒழிந்தது, இந்தியும் மண்ணைவிட்டு மறைந்தது. சாதிகளின் ஆதிக்கம் குறைந்தன அல்லது கட்டுப்பாட்டிற்குள் வந்தது. சாமான்யனும் கல்வி கற்கலாம், எந்தப்பதவியும் வகிக்கலாம்..!

இன்ன பிற சமூக காரணங்கள்..

  • Replies 142
  • Views 22.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
வெருகல் பிரதேச சபை திருமலை
வெற்றியோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு வட்டாரம் 2

தமிழ் தேசிய கூட்டமைப்பு -1027
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -34
unp -34


 

http://oorukai.com/?p=1791

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் சங்கானை 10 ஆம் வட்டாரம் பகுதியில் 721 வாக்ககளைப் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னிலை பெற்றுள்ளது.

Newuthayan.com

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய  தேர்தலின்  வாக்குகளை  பார்க்கின்றபோது

கூட்டமைப்பின் மீது அதிப்தி  அதிகமாகி  வருவதையும்

மக்கள் இன்னொன்றை  கட்டி  எழுப்ப  விளைவதையும் காணக்கூடியதாக  உள்ளது

இதற்கு முழுப்பொறுப்பும் கூட்டமைப்பின் தலைவர்கள் தான்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

இன்றைய  தேர்தலின்  வாக்குகளை  பார்க்கின்றபோது

கூட்டமைப்பின் மீது அதிப்தி  அதிகமாகி  வருவதையும்

மக்கள் இன்னொன்றை  கட்டி  எழுப்ப  வவழவதையும் காணக்கூடியதாக  உள்ளது

இதற்கு முழுப்பொறுப்பும் கூட்டமைப்பின் தலைவர்கள் தான்

இளைய தலைமுறை சிந்திக்கத் தொடங்கிவிட்டது.

சுரேஸ் கஜேந்திரகுமாருடன் சேர்ந்திருந்தால் கூட்டணிக்கு இன்னும் தோல்வி வந்திருக்கும்.

  • தொடங்கியவர்

வல்வெட்டித்துறை – த.தே.கூ. முன்னிலை

 

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபையில் 7 வட்டாரங்களைக் கைப்பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னிலை பெற்றுள்ளது.

சுயேட்சை ஒரு வட்டாரத்தையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு வட்டாரத்தையும் கைப்பற்றியுள்ளது.

http://newuthayan.com/

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்கிழப்பு முடிவுகளுக்கு
http://www.battinews.com/2018/02/ELECTION-RESULT-live-updates.html?m=1

  • தொடங்கியவர்

மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாமல் ராஜபக்ஸ

namal.jpg?resize=300%2C151
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நன்றி தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களின் மூலமாக அவர் இவ்வாறு நன்றி பாராட்டியுள்ளார். எனினும், இதுவரையில் உத்தியோகபூர்வ முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்களவு வெற்றியை மக்கள் ஈட்டிக் கொடுத்துள்ளதாக நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மற்றும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார். மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மாற்றத்தை மக்கள் விரும்புகின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://globaltamilnews.net/2018/66298/

  • தொடங்கியவர்

முல்லைத்தீவு – த.தே.கூ. முன்னிலை

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தைில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னிலை பெற்றுள்ளது.

http://newuthayan.com

 

 

அமைதியான முறையில் வெற்றியைக் கொண்டாடுமாறு மஹிந்த கோரிக்கை

mahi.jpg?resize=800%2C534
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமைதியான முறையில் தேர்தல் வெற்றியைக் கொண்டாடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரியுள்ளார். சற்று நேரத்திற்கு முன்னர் தமது இல்லத்திலிருந்து ஊடகங்களின் மூலம் இந்த விசேட கோரிக்கையை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வெற்றிக்காக பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு சவால்கள், பிரச்சினைகள், அழுத்தங்களுக்கு மத்தியில் மக்கள் தமது கட்சியின் வெற்றியை உறுதி செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தோல்வியடைந்த தரப்பிற்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் வெற்றியாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டுமென அவர் கோரியுள்ளார். பொதுஜன முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள் ஏனையோருக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதுவரையில் உத்தியோகபூர்வமாக தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சில மாவட்டங்களில் முன்னணி வகிப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஹம்பாந்தோட்டை, கம்பஹா, காலி, மாத்தறை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மஹிந்தவின் மலர்மொட்டு முன்னணி வகிப்பதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://globaltamilnews.net/2018/66301/

  • தொடங்கியவர்

வலி. வடக்கு பிரதேச சபையில் கூட்டமைப்பு பெரும் வெற்றி

 

tnaவலிகாமம் வடக்கு பிரதேசபைக்கான தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 17 ஆசனங்களைக் கைப்பற்றி பெரு வெற்றி பெற்றுள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின், 21 வட்டாரங்களின் தேர்தல் முடிவுகள் தெரிய வந்துள்ளன. இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 17  வட்டாரங்களில் வெற்றியீட்டியுள்ளது.

ஈபிடிபி 3 வட்டாரங்களில் வெற்றி பெற்று இரண்டாவது .இடத்தில் உள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 1 வட்டாரத்தில் வெற்றி பெற்றுள்ளது.

விகிதாசார பிரதிநிதித்துவ ஒதுக்கீடுகளுடனான தேர்தல் முடிவு இன்னமும் அறிவிக்கப்படவில்லை

http://www.puthinappalakai.net/2018/02/10/news/29009

 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த மாத்தயா ஜெயவேவா என்ற வெற்றி முழக்கத்துடன் மீண்டும் வர மைத்திரியின் தளம்பல்கள்தான் காரணம். தமிழர்களுக்கு குலைப்பன் காய்ச்சல் மீண்டும் வரப்போகின்றதா??

  • தொடங்கியவர்

புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளையும் வசப்படுத்துகிறது கூட்டமைப்பு

 

local-election results (4)முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  அமோக வெற்றியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் உள்ள 12 வட்டாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 வட்டாரங்களில் வெற்றியைப் பெற்றுள்ளது. சுயேட்சைக் குழு 1 வட்டாரத்தைக் கைப்பற்றியுள்ளது.

கரைத்துறைப் பற்றி பிரதேச சபையில், உள்ள 13 வட்டாரங்களில் 9 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கிறது.

இங்கு தமிழர் விடுதலைக் கூட்டணி, சுயேட்சைக் குழு, சிறிலங்கா பொதுஜன பெரமுன, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

இங்கு இன்னமும் விகிதாசார உறுப்பினர்களின் ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படவில்லை.

http://www.puthinappalakai.net/2018/02/10/news/29011

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவுகள் ! _ Jaffna Journal.html

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பலத்த இழப்பினை சந்தித்துள்ளது! இது வரை வட்டார முடிவுகள் மட்டும் வெளிவந்துள்ளது. விகிதாசார முடிவுகள் வரவில்லை
இது வரை கிடைத்த தேர்தல் முடிவுகள் !

தேர்தல் முடிவுகள் !

Written by Chief Editor | February 10, 2018 | Comments Off on தேர்தல் முடிவுகள் !

உள்ளுராட்சி சபைகள் தேர்தல் முடிவுகள் : யாழ் மாவட்டம்
(நன்றி:  வாகீசம் இணையம்)

http://www.jaffnajournal.com/archives/89287.html

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஆனந்தசங்கரியும் சுரேசும் படுதோல்வி

  • தொடங்கியவர்
பெறுபேறுகள் தாமதத்துக்கு இதுதான் காரணமாம்
 
 

இன்று மாலை 4 மணிக்கு நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் முதலாவது பெறுபேற்றை இரவு 8 மணிக்கு முன்னதாக வெளியிடுவதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

எனினும், இரவு 11:20 ஆகியும் உத்தியோகபூர்வமாக எந்தவொரு பெறுபேறும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், வாக்குகளை மீண்டும் எண்ணுவதனால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

சில, பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள் ஆகியவற்றுக்கான வாக்குகளை, மீளவும் எண்ணுமாறு, ஐக்கிய தேசியக் கட்சியினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்தே, மீளவும் எண்ணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/பெறுபேறுகள்-தாமதத்துக்கு-இதுதான்-காரணமாம்/175-211412

  • தொடங்கியவர்

மகிந்தவின் சிறிலங்கா பொது ஜன முன்னணிக்கு பெரும் வெற்றி?

 

mahinda-slppசிறிலங்காவில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதாக, அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட்டார ரீதியாக வெளியாகியுள்ள அதிகாரபூர்வமற்ற தகவல்களின் படி, சிறிலங்கா பொது ஜன முன்னணி 15 மாவட்டங்களில்  வெற்றியைப் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் ஐதேக வெற்றி பெறும் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இன்னமும் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியிடப்படவில்லை.

சிறிலங்கா பொது ஜன முன்னணிக்கு பெரும் வெற்றி கிடைத்திருப்பதாக  மகிந்த ராஜபக்ச தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, இந்தத் தேர்தலில், அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகள் வெற்றி பெறும் என்று வெளியான புலனாய்வு தகவல்கள் முற்றிலும் தவறாகிப் போயுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/02/10/news/29013

 

முதலாவது முடிவு வெளியாகியது !

 

 

உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவு இன்று ஞாயிற்றுக்கிழமை 11 ஆம் திகதி அதிகாலை 12.38 மணியளவில் வெளியிடப்பட்டது.

Mullaitivu-Mandhai_East.JPG

a.PNG

http://www.virakesari.lk/article/30514

முதலாவது உத்தியோக பூர்வமான முடிவு

  • தொடங்கியவர்

பட்டிப்பளை பிரதேச சபை :
மண்முனை தென்மேற்கு பிரதேச சபை

த.தே.கூ - 5
த.வி.கூ - 3
த.ம.வி.பு - 1
சுயேட்சைகுழு - 1

http://www.battinews.com

  • தொடங்கியவர்

மட்டக்களப்பு மாநகரசபையை கைப்பற்றியது கூட்டமைப்பு!

மட்டக்களப்பு மாநகரசபை யை கைப்பற்றியது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு..

நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றியிட்டியுள்ளனர்.

அந்தவகையில் மாநகரசபைப்பிரிவில் 20 வட்டாரங்களில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

 

http://www.tamilwin.com/srilanka/01/173837?ref=home-latest

 

உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2018

இதோ மற்றுமொரு தேர்தல் முடிவு

காலி மாவட்டம் - அம்பலாங்கொட நகர சபை

முன்னைய தேர்தல்களுடனான ஒப்பீடு உள்ளே... https://goo.gl/WYySYV

#lka #Election #Election2018 #HiruNews #Sooriyannews #LGElection2018 #LocalGovtElection2018

 
Kein automatischer Alternativtext verfügbar.
  • தொடங்கியவர்

செங்கலடி ஏறாவூர் பற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வி!

 

 

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் இதுவரை வெளியாகிய உத்தியோகவூர்வமற்ற முடிவுகளின் படி மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோல்வியை தழுவிக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

18 வட்டாரங்களை கொண்ட ஏறாவூர் பற்று பிரதேச சபையில் 8 வட்டாரங்களில் ஸ்ரீலங்க சுதந்திர கட்சியும் , 6 வட்டாரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் , 4 வட்டாரங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.

இதன் பிரகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோல்வியை தழுவிக்கொண்டுள்ளது.

தேர்தல் முடிவுகள்

தன்னாமுனை - SLFP

குடியிருப்பு - SLFP

மீராகேணி - SLFP

மிச்நகர் -SLFP

ஐயன்கேணி -SLFP

செங்கலடி -SLFP

ஈரளக்குளம் -SLFP

கெமுனுபுர -SLFP

களுவன்கேணி - TNA

சித்தாண்டி கிழக்கு -TNA

வந்தாறுமூலை - TNA

பன்குடாவெளி -TNA

கரடியணாறு -TNA

புல்லுமலை -TNA

தளவாய் - TMVP

மாவடிவேம்பு -TMVP

சித்தாண்டி மேற்கு -TMVP

கொம்மாதுரை -TMVP

 

http://www.tamilwin.com/election/01/173840?ref=home-latest

  • கருத்துக்கள உறவுகள்

வவுணதீவு பிரதேசசபை
இலங்கை தமிழரசுக்கட்சி : 07
தமிழர் விடுதலைக் கூட்டணி : 01
தமிழர் சமுக ஜனநாயகக் கட்சி: 01
சுயேற்சைக்குழு (மீன்) : 01

 
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

 தேசியக் கட்சிகள் தமிழ் பகுதிகளில் வெல்லுவது உண்மையில் ஆரோக்கியமான விடயம் அல்ல. தமிழ் தேசியத்துக்கு எதிரான கொள்கைகளை கொண்ட கட்சிகளின் வெற்றி அபாயகரமானது.

உண்மை தான் ஆனால் அது தான் எதிர்காலத்தில் நடக்கும்.நான் அங்கிருந்தால் அப்படித்தா செய்திருப்பேன்.

  • தொடங்கியவர்

தேர்தல் முடிவு வெளியிடுதல் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் அதிரடி அறிவிப்பு

 

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெண்ணும் பணிகள் நிறைவடைந்த போதிலும் ஒரு சில காரணங்களால் முடிவுகளை ஊடனுக்குடன் அறிவிப்பதில் சிரமம்  ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

mahinda-deshapriya.jpg

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

வட்டாரங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் நிறைவடைந்து பெறுபேறுகள் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு தொலைநகல் மற்றும் தொலைபேசி மூலமாக கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் குறித்த அப்பெறுபேறுகளை உற்றுநோக்கி தபால் மூல வாக்களிப்பு முடிவுகளுடன் இணைத்து வெளியிடவேண்டியுள்ளதுடன் சில மாவட்ட செயலகங்களில் இருந்து பூரண தேர்தல் முடிவுகள் கிடைக்காமையினால், முழுமையான பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தெரிவத்தாட்சி அதிகாரிகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

ஆகையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கு போதிய கால அவகாசம் தேவையென்பதுடன் வட்டார முடிவுகளை கணனி மயப்படுத்தி தரவுகட்டமைப்புக்கள் இணைக்க வேண்டியுள்ளது.

இதனால் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிடுவதில் தாமதம் ஏற்படும். ஆகவே தேர்தல் முடிவுகள் வெளியிடும் வரை பொறுமைகாக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய விசேட ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/30515

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியா கிடைத்த முடிவிகளின் படி ஐக்கியதேசியக் கட்சி முன்னிலையிலும் பொதுஜனபெரமுனை 2ஆம் இடத்திலும் தமிழரசுக் கட்சி 3 ஆம் இடத்திலும் தம்மை தக்கவைத்துள்ளன…

UNP-Front.png?resize=563%2C423

http://www.globaltamilnews.com/

  கட்சி வாக்குகள் சதவீதம் உறுப்பினர்கள்
-9.png ஐக்கிய தேசியக் கட்சி 62824 39.31% 65
p39.png ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 49926 31.24% 61
-7.png ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு 15085 9.44% 13
05.png இலங்கை தமிழரசு கட்சி 13432 8.40% 32
34.png இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 11114 6.95% 7
20.png தேசிய காங்கிரஸ் 7453 4.66%

7

http://lgelections2018.dailymirror.lk/election/index/TM

  • கருத்துக்கள உறவுகள்

 

Nuwaraeliya Pradeshiya Sabha

  Party Votes Per- % Members elected Members calculated
08.png United National Freedom Front 0 0% 0 0
-9.png United National Party 15240 39.41% 9 0
-18.png People's Liberation Front 0 0% 0 0
34.png Ceylon Worker's Congress (P.Wing) 11114 28.74% 3 4
p39.png Sri Lanka Podujana Peramuna 9262 23.95% 2 3
42.png Communist Party of Sri Lanka 0 0% 0 0

 

Wanathawilluwa Pradeshiya Sabha

  Party Votes Per- % Members elected Members calculated
-9.png United National Party 2826 26.34% 3 2
-18.png People's Liberation Front 0 0% 0 0
-38.png Sri Lanka Freedom Party 1106 10.31% 1 1
p39.png Sri Lanka Podujana Peramuna 3924 36.58% 6 0
41.png Sri Lanka Muslim Congress 1208 11.26% 1 1
test Independent Group 6 1032 9.62% 0 2
test Independent Group 7 539 5.02% 0 1
  • கருத்துக்கள உறவுகள்

மாவட்ட முடிவுகள் - அம்பாறை

  கட்சி வாக்குரிமை சதவீதம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எண்ணப்பட்ட உறுப்பினர்கள்
-9.png ஐக்கிய தேசியக் கட்சி 11,361 47.37% 8 8
20.png தேசிய காங்கிரஸ் 7,453 31.07% 1 6
04.png அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 4,384 18.28% 1 3
p39.png ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 779 3.25% 1 1
test சுயேட்சை குழு 9 0.04% 0

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.