Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண் பார்க்கப் போறேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கவி எனக்கு திருமணம் நிச்சயமாகியவுடன் என்னுடன் படிப்பித்த ஒரு வயதில் மூத்த ஆசிரியை சொன்னார் கலியாணம் என்பது ஒரு கோட்டை மாதிரி வெளியே இருப்பவர்கள் உள்ளே போக ஆசைப்படுவார்கள் உள்ளே இருப்பவர்கள் வெளியே வர ஆசைப்படுவார்கள் என்று. வாழ்க்கை வரமோ சாபமோ அவரவர் வாழும் முறையை வைத்துத்தான் தீர்மானிக்கலாம். அது இறைவன் கொடுத்த வரமாகவும் இருக்கலாம். நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், கவி!

கலியாணம் அல்லது திருமணம் என்ற வார்த்தைகள் ...ஒரு கதையில் வருமானால்...நிறைய விமரிசனங்களை எதிர்பார்க்கலாம்!

அதே போலத் தான்....சாமத்திய வீடு..என்ற வார்த்தையும்!

நானும்...கதையின் ஆரம்பத்தில்...நம்ம...கவியரும்.....கன்னி ராசிக் காரர் போலத் தான் கிடக்கு என்று....கதையின் இறுதி வரை நினைத்திருந்தேன்!

முடிவு வரை....ஓடோடி...வாசித்த என்னை....ஏமாற்றி விட்டீர்களே....கவி!

கதை நன்றாக உள்ளது!

தொடர்ந்தும் எழுதுங்கள்....!

On 3/19/2018 at 1:01 PM, Kavi arunasalam said:

எண்ணையை ஊற்றிக் கொண்டு எத்தனை கண்கள், முதலை போல் வாய் பிளந்து எவ்வளவு பெரிய பெரிய வாய்கள் எங்களுடைய ஊருக்குள் இருக்கின்றன என்பது அபோதுதான் எனக்கு நன்றாகத் தெரிய ஆரம்பித்தது.

உந்த விசயத்தில் ஊர்ப்பெண்டுகள் உடனே மோப்பம் பிடித்துவிடுவார்கள். 50 வீத சந்தேகத்தை நூறாக்கிவிடுவதிலும் வல்லவர்கள். தெரியாமல் ஒன்றைச் செய்கின்றோம் என்ற பலருக்கு தெரிவதில்லை அவை ஊருக்கு தெரியும் என்பது. குறிப்பாக காதல் மற்றும் வேலிபாயும் விசயங்களில். 

உங்களிடம் ஏராளமான சுவார்சியமான அனுபவங்கள் இருக்கின்றது போலுள்ளது. தொர்ந்து பகிருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kavi arunasalam said:

நீங்கள் ஆடு ,மாடு  எல்லாம் உதாரணத்திற்கு  கொண்டு வந்தது என்னைக் கிண்டல் அடிபதற்கில்லை என்று நம்புகிறேன்.

ஆனால் கோபாலகிருஷ்ணனின் மனைவி சவுண்ட் ஒண்டும் விடவில்லை. சாதாரண குரலில்தான் என்னிடம் கேட்டாள்.?

யாழ்களத்தில் நானும் ஒரு உறுப்பினராக இணைந்தபோதே இணைந்த காரணத்தையும் அவ்வேளையில் கூறியுள்ளேன். தமிழீழ ஆயுதப்போராட்டம் பின்னடைந்து அது தந்த ஏமாற்றங்களாலும், அவலங்களாலும் ஏற்பட்ட மன அழுத்தங்களைக் குறைப்பதற்கு யாழ்களம் ஒரு ஓளதடமாக இருந்து உதவி புரிந்தது. அதில் உறவுகளாக வந்தவர்கள் பதிந்த பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் வெளிப்பட்டவைகளில் பகிடிகளும் அதிகம். அவை மனவழிப் பாதையை மாற்றி ஆறுதல் அளித்ததை மறுக்க முடியாது. பகிடிகள் பகிடிகளாகவே பார்க்கப்பட்டன. இங்கும் உங்கள் கதையைப் படித்தவுடன் என் மனதில் கிளர்தெழுந்த அனுபவ உணர்வுகளைப் பகிடியாகவே எழுதினேன். உங்களைக் கிண்டலடிப்பதற்கு அல்ல. அது உங்கள் மனதைப் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு வேண்டுகிறேன். :100_pray:

15 hours ago, புங்கையூரன் said:

 

நானும்...கதையின் ஆரம்பத்தில்...நம்ம...கவியரும்.....கன்னி ராசிக் காரர் போலத் தான் கிடக்கு என்று....கதையின் இறுதி வரை நினைத்திருந்தேன்!

 

கவனியுங்கள் மக்கழே.. :27_sunglasses:

  • கருத்துக்கள உறவுகள்

மிஸ்டர் கவி, இங்கே கவனித்தீர்களா?

'பெண் பார்க்கப் போறேன்'னு போன உங்களுக்கு, யாழ் களமே நாமம் போட்டுவிட்டது..! What a coincidence..!! vil-idee.gif

 

104f03o.jpg

 

 

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

 

கோபால கிருஷ்ணன் குஷியாக இருக்க கவி கார் சேவை செய்திருக்கின்றார்.

 

கிருபன்,

புராணத்தில் நளாயினி தன் புருசனுக்கு இப்படியான சேவை செய்திருக்கிறார் உங்களிடம் குறும்பு நிறைய இருப்பது தெரிகிறதுஎன்னைமாமாஎன்று மறைமுகமாக.....?

4 hours ago, Paanch said:

உங்கள் கதையைப் படித்தவுடன் என் மனதில் கிளர்தெழுந்த அனுபவ உணர்வுகளைப் பகிடியாகவே எழுதினேன். உங்களைக் கிண்டலடிப்பதற்கு அல்ல.

Panch,

நானும் நகைச்சுவையாகத்தான் பதில் தந்திருந்தேன் அந்தசவுண்ட்இல் அது மறைந்திருக்கிறது.

மகிழ்ச்சியாக இருங்கள். அதுதான் தேவையானது. தவறு செய்ய்தால்தானே  மன்னிப்பு கேட்க வேண்டும். பெரிய பெரிய வார்த்தைகளை எல்லாம் பயன் படுத்தினால் நான் பயந்து விடுவேன்.

நீங்கள் தந்திருந்த கருத்து எனது பத்திக்கு வலு சேர்த்திருந்தது. அதற்கு எனது மனமார்ந்த நன்றி!

 
3 hours ago, ராசவன்னியன் said:

பெண் பார்க்கப் போறேன்'னு போன உங்களுக்கு, யாழ் களமே நாமம் போட்டுவிட்டது..! What a coincidence..!! 

இராசவன்னியன்,

எல்லோரும்  0111 தாண்டித்தான் வந்திருப்பார்கள். நான் ஆயிரத்தில் ஒருவனாக இருப்பதில் மகிழ்ச்சி.

 
4 hours ago, நிழலி said:

கவனியுங்கள் மக்கழே.. :27_sunglasses:

அதுதானே? நீங்கள் சொல்லிவிட்டால் நான் கவனித்திருக்கவே மாட்டேன்.

ஆனால் நான் கன்னி ராசிக்காரன் இல்லை.

 
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கலியாணம் கட்டினதும் ஊர்வாய் மூடிவிட்டதா ????அல்லது ??????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் வாய் மூடிவிட்டது?

  • கருத்துக்கள உறவுகள்
On 3/23/2018 at 1:32 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் கலியாணம் கட்டினதும் ஊர்வாய் மூடிவிட்டதா ????அல்லது ??????

 

7 hours ago, Kavi arunasalam said:

என் வாய் மூடிவிட்டது?

போட்ட போடு அப்படி..!  riposte.gif

இதில் கோபாலகிருஷ்ணனை நோக்கி திட்டு வேறை..!!  take-care.gif

  • கருத்துக்கள உறவுகள்

( இந்த திரிக்கு இது சம்மந்தமில்லையானாலும், கவியின் நகைச்சுவையில் பிரபலமான இப்பதிவில் பொருத்துவது சிறப்பாக இருக்குமென்ற எண்ணத்தில் படித்ததை இங்கே பதிகிறேன்..!  - ராசவன்னியன் )

 

1017.jpg

1zf5ro2.jpg

'கண்ணாடிக்கு எதிரில் நின்றால், உங்கள் முகத்திற்குப் பதில், உங்களின் மனைவி முகம் தெரிகிறதா..? அப்படியெனில், உங்களுடைய வாழ்க்கைத் துணை, உண்மையிலேயே துணைதான்' என்று யாரோ ஒரு கவிஞன் தத்துவார்த்தமாகச் சொன்னான். அது கண்ணாடியின் தரிசனம் மட்டுமல்ல... வாழ்க்கையின் நிதர்சனமும் கூட!

வாழ்க்கைத் துணை என்று கணவனையும், மனைவியும் சொல்லுகின்றனர். யோசித்துப் பார்த்தால், பிறந்த வீட்டை அப்படியே ஒதுக்கிவிட்டு, பிறந்த வீடு, ஊர், தெரு, நண்பர்கள், உறவினர்கள் என விட்டுவிட்டு, புகுந்த வீட்டுக்கு வரும் மனைவி, எவ்வளவு தைரியசாலியாக, ஊக்கமுள்ளவளாக இருக்கவேண்டும்? அப்படி அவளின் தைரியத்தையும், ஊக்கத்தையும் வார்த்தெடுக்கும் வகையில் ஓர் கணவனாக என்னவெல்லாம் செய்யவேண்டும் என யோசித்துப் பாருங்கள்!

உலகின் உன்னதமான உறவு என்று அப்பா, அம்மா எனும் பந்தத்தைச் சொல்லுவார்கள். உண்மைதான். நம்மை வளர்த்ததிலும், வளர்த்து ஆளாக்கியதிலும் வார்த்தெடுத்ததிலும் மிகப்பெரிய பொறுப்பும் பங்களிப்பும் அவர்களுக்கு இருக்கிறது. அதேசமயம் அம்மாவுக்கு அம்மாவாய், தந்தைக்குத் தந்தையாய் நம்முடனேயே கைகோர்த்து நிற்கும் மனைவி, ஒருவகையில் தேவைப்படுகிற தருணங்களிலெல்லாம் அம்மாவாகவும், அப்பாவாகவும் இருக்கிறாள் என்பதுதான் நிஜம்.

இங்கே, முக்கால்வாசி ஆண்களுக்குமான சோகம் என்ன தெரியுமா? வாழ்வில், படித்து, வேலைக்குச் செல்லும் பிள்ளையைப் பார்த்திருப்பார்கள். பிறகு வயோதிகத்தால் மரணத்தைத் தழுவியதை அடுத்து, அந்தப் பிள்ளை உத்தியோகம், பொருளாதாரம், அப்பாவின் சாயலில் மகன், அம்மாவின் சாயலில் மகள் என்றெல்லாம் வளர்ந்து வருவதை, வளர்ந்திருப்பதை பார்க்க அவர்கள் இல்லையே என்பதுதான் பெரும்பான்மையானவர்களின் தனித்த சோகம். இதில் ஒரே ஆறுதல்... ஆயுள்பரியந்தம் வரை தொடர்ந்திருக்கும் மனைவி என்பவள்தான். சொல்லப்போனால், உத்தியோக, பொருளாதார வளர்ச்சியிலும் கவுரவ, அந்தஸ்து பெருமைகளிலும் மனைவியின் பங்கு இருப்பதை எவரும் மறுக்கமுடியாது.

இப்படி ஒவ்வொரு தருணங்களிலும் ஒவ்வொரு காலகட்டங்களிலும் மனைவியே நம்மை முதன்மையாக்குகிறாள். நம்மை முதன்மையாக்குவோரில் முதல் ஆளாக இருக்கிறாள். வீட்டு டென்ஷனை அலுவலகத்தில் காட்டிவிடமுடியுமா? ஆனால் வீட்டு டென்ஷனை வீட்டில் காட்டுவதுடன் அலுவலத்தின் இடைஞ்சல், பிக்கல் பிடுங்கல்களையும் சேர்த்து வீட்டில் கோபமாய் கொட்டித் தீர்க்கலாம். முகத்தை உர்ரென்று வைத்துக் கொள்ளலாம். வீட்டார் அனைவரிடமும் எரிந்துவிழலாம். நம் அத்தனை களேபரங்களையும் ஒரு காபி, ஒரு புன்னகை, ஒரு தலைகோதல் செய்துவிடும். இந்த மாமருந்து மனைவிதான் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்தானே?

'வீட்ல நல்லபேர் எடுக்காதவன், ஊர்ல நல்ல பேர் எடுத்தும் புண்ணியமில்லை!' என்று ஊர்ப்பக்கத்தில் சொல்லுவார்கள். வீட்டில் நல்ல பேர் எடுத்துவிட்டால், ஊரில் மட்டுமல்ல... உலகத்தில் கூட நல்லபேர் எடுத்துவிடலாம் என்பதே உண்மை.

என் நண்பர் காலை உணவுக்கு முன்னும் பின்னும் மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறார். இரவிலும் அப்படியே எடுத்துக் கொள்வார். ஆனால் மனைவி ஊரில் இல்லாத ஒரு நாளில், எந்த மாத்திரை உணவுக்கு முந்தையது, எதெல்லாம் சாப்பாட்டுக்குப் பிறகு என்பதெல்லாம் தெரியாது அவருக்கு. அந்த அளவுக்கு குழந்தையைப் போல் பார்த்துக் கொள்கிறார் அவரின் மனைவி என்று நெக்குருகிச் சொன்னார்.

இன்னொரு நண்பர். அவரின் அப்பாவுக்கு பிஸ்னஸ். சம்பாதிப்பது மட்டுமே அவர் வேலை. ஆனால் சம்பாதித்த பணத்தை எப்படியெல்லாம் முதலீடு செய்து, சேமித்து, பெருக்கி வைப்பது அவர் மனைவிக்கு கைவந்த கலை. இத்தனைக்கும் மனைவி, பிளஸ் டூவுக்கு மேல் படிக்கவில்லை. ஒருகட்டத்தில் கணவரின் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில், தன்னால் என்னவெல்லாம் செய்யமுடியும் என அடுத்தடுத்த விஷயங்களைக் கற்றுக் கொண்டு, இன்றைக்கு மிகப்பெரிய சொத்துகளை சேர்த்துத் தந்திருக்கிறார். இதை ஒவ்வொரு தருணத்திலும் சிலாகித்துச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

நம்முடைய பிளஸ், மைனஸ், நல்லதுகெட்டது, வேகம், சோம்பேறித்தனம், நிதானம், குழப்பம், தெளிவு, பக்குவம், உற்சாகம், சோகம் என அனைத்தையும் நம்மைவிட அறிந்தவர் மனைவிதான் என்கிறார்கள். அவரிடம் நம்மை முழுவதுமாக ஒப்படைத்துவிடவேண்டும். இது மனைவிக்கும் பொருந்தும்.

இங்கே ஓர் லட்சுமணன் கோடு போல் ஒன்று இருப்பது சிக்கலில்லை. அதைத் தாண்டிக் கொண்டே இருப்பதுதான் நமக்கான சிக்கல் பிக்கல்கள். 'மனைவி சொல்லே மந்திரம்' என்றொரு புகழ்பெற்ற வார்த்தை உண்டு. மனைவியின் சொல்லை மந்திரமாக ஏற்று நடந்தாலே, இங்கே எந்தவொரு பிரச்சினைகளும் இல்லை. அல்லது பிரச்சினைகளையெல்லாம் ஊதித்தள்ளிவிடலாம்.

'தாய்க்குப் பின் தாரம்' என்பது சும்மா வாய்வார்த்தைக்கான சொல்லாடல் இல்லை. சத்திய வார்த்தை!. தாய்க்குப் பின் தாரம் என்பது, அம்மாவுக்குப் பிறகுதான் மனைவி என்று அர்த்தமல்ல. அம்மாவிற்குப் பிறகு அந்த இடத்தை நிரப்புவள் மனைவியே என்று அர்த்தம்.

மனைவி சொன்னதை மீறி எதுவும் செய்யாதவரா நீங்கள்?

ஏதேனும் செய்வதாக இருந்தால், மனைவியிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வீர்களா?

ஏதேனும் ஒரு விஷயத்தை செய்துவிட்டு, பிறகு மனைவியிடம் சொல்லிவிடுவீர்களா?

ஆபீஸ் முடிந்து எவ்வளவு நேரம் கழித்து வீட்டுக்கு வந்தாலும், அரைமணி நேரமேனும் மனம் விட்டுப் பேசுவீர்களா?

அலுவலகத்தில் மதிய உணவு சாப்பிட்டு முடித்த கையுடன், மனைவிக்கு போன் செய்து 'சாப்பிட்டாச்சா'  என்று கேட்கிறீர்களா?

உங்கள் தோழி அல்லது அலுவலகத் தோழியின் செல்போன் எண்களை, புரியாத கோட்வேர்டில் பதிவு செய்திருக்கிறீர்களா? அல்லது பெயரே பதிவு செய்திருக்கிறீர்களா?

உங்களின் தோழி, உங்கள் மனைவிக்கும் தோழியா?

காலையில் இருந்து என்னென்ன நடந்தது என்பதை மனைவியிடம் ஒன்றுவிடாமல் சொல்லமுடிகிறதா உங்களால்?

'நீங்கள் என்னை நோக்கி ஓரடி எடுத்துவைத்தால், உங்களை நோக்கி நான் பத்தடி எடுத்துவைக்கிறேன்' என்கிறார் பகவான் கிருஷ்ண பரமாத்மா.

பகவான் கிருஷ்ணர் அப்படியா ? தெரியவில்லை. ஆனால் மனைவி என்பவர் அப்படித்தான். மனைவியே சகலமும் என நினைத்து வாழும் கணவர் அவ்விதம்தான்.

நம் எல்லோருக்குள்ளும் குழந்தைமை இருக்கிறது. பையனோ பெண்ணோ, முதுகுக்குப் பின்னால் வந்து, கண்களை மூடும். அந்த ஸ்பரிசத்தை வைத்தே, யார் மூடியது? என்பது நமக்குத் தெரியும். ஆனால், வேண்டுமென்றே சொல்லமாட்டோம். பக்கத்து வீட்டுப் பையன், எதிர்வீட்டுப் பெண், நண்பர்கள், மனைவி, பாட்டி என ஒவ்வொரு பெயராக, சொல்லிக்கொண்டே வருவோம். ஒருகட்டத்தில், 'நல்லா ஏமாந்தியா... நாந்தான்!' என்று முன்னே வந்து நின்று, கழுத்தைக் கட்டிக் கொள்வார்கள். அங்கே தோற்றது நாமா? குழந்தையா? எவருமே தோற்கவில்லை! இரண்டுபேருமே வெற்றியாளர்கள்!!

அப்படித்தான், கணவன் மனைவி உறவு. பிணைந்த பந்தம். இங்கே, தோற்றவர்கள், ஜெயித்தவர்களாகிறார்கள் என்பதே வாழ்க்கைக் கணக்கு !

ஆகவே, மனைவியிடம் சந்தோஷமாக தோற்றுப் போங்கள். நீங்கள்தான் வெற்றி பெற்ற பாக்கியசாலி..!

 

காமதேனு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

இதில் கோபாலகிருஷ்ணனை நோக்கி திட்டு வேறை..!

அவனைத் திட்டமால் வேறு யாரை நான் திட்டுவது?

கோபாலகிருஷ்ணன் பேசாமல் மூடிட்டு பொத்திட்டு (தயவு செய்து தப்பான கருத்தை எடுத்துவிடாதீர்கள்) இருந்திருக்கலாம்தானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

என் நண்பர் காலை உணவுக்கு முன்னும் பின்னும் மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறார். இரவிலும் அப்படியே எடுத்துக் கொள்வார். ஆனால் மனைவி ஊரில் இல்லாத ஒரு நாளில், எந்த மாத்திரை உணவுக்கு முந்தையது, எதெல்லாம் சாப்பாட்டுக்குப் பிறகு என்பதெல்லாம் தெரியாது அவருக்கு. அந்த அளவுக்கு குழந்தையைப் போல் பார்த்துக் கொள்கிறார் அவரின் மனைவி என்று நெக்குருகிச் சொன்னார்.

இது சத்தியமா மூளைச்சலவைதான்.

மனைவி இல்லாவிட்டால் இந்த மாத்திரை மருந்தெல்லாம் தேவை இல்லை என்பது  எத்தனை கணவர்மார்களுக்கு புரியுதோ இல்லையோ ராசவன்னியனுக்கு சத்தியமாபுரியப் போவதில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

இது சத்தியமா மூளைச்சலவைதான்.

மனைவி இல்லாவிட்டால் இந்த மாத்திரை மருந்தெல்லாம் தேவை இல்லை என்பது  எத்தனை கணவர்மார்களுக்கு புரியுதோ இல்லையோ ராசவன்னியனுக்கு சத்தியமாபுரியப் போவதில்லை?

சாமிகளே,

நீங்கள் இதுவரை மனைவியை பிரிந்திருந்ததில்லை போலும்.. அத்துவான அந்நிய நாட்டில் குடும்பத்தைக்கொண்டு வந்து வாழ்ந்தால் உங்களின் 'லொள்ளு'களை சகித்துக்கொண்டுதானே வாழவேண்டும்..? :unsure:

தங்கள் தலையில், 'ரெண்டு போடு போட்டுவிட்டு' தன் பிறந்தகமும் செல்ல இயலாது..!!  couil.gif

மனைவி இல்லாமல் சில நாள் வாழ்ந்து பாருங்கள்.. புரியும்! ( 'சின்ன வீடு' இல்லையென நினைக்கிறேன்..! :grin: )

2 hours ago, Kavi arunasalam said:

மனைவி இல்லாவிட்டால் இந்த மாத்திரை மருந்தெல்லாம் தேவை இல்லை என்பது  எத்தனை கணவர்மார்களுக்கு புரியுதோ இல்லையோ..

கவனிக்க கேட்பாரற்று, அநாதையாக மண்டையை போட்டபின் மருந்து, மாத்திரை தேவை இல்லைதானே..? :)

2 hours ago, Kavi arunasalam said:

..கோபாலகிருஷ்ணன் பேசாமல் மூடிட்டு பொத்திட்டு (தயவு செய்து தப்பான கருத்தை எடுத்துவிடாதீர்கள்) இருந்திருக்கலாம்தானே?

மனைவியின் அருமை தெரிந்து, உங்களை பயன்படுத்தி காரியம் சாதித்த அவர் புத்திசாலி சார்..!  vil-langue.gif

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியன் நாங்கள் இணைய உறவாக இணைந்த போதிலும் நான் இதைச் சொல்ல வேண்டிய இக்கட்டான நிலைமைக்கு என்னை ஆளாக்கி விட்டீர்கள்.....! tw_blush: 

கண்ணாடிக்கு எதிரில் நின்றால், உங்கள் முகத்திற்குப் பதில், உங்களின் மனைவி முகம் தெரிகிறதா..? 

கண்ணாடி இல்லாத கதவிலேயே அவள் முகம்தான் தெரிகிறது. எங்கும் வியாபித்து இருக்கிறாள்....!

தாய்க்குப் பின் தாரம்' என்பது சும்மா வாய்வார்த்தைக்கான சொல்லாடல் இல்லை. சத்திய வார்த்தை!. தாய்க்குப் பின் தாரம் என்பது, அம்மாவுக்குப் பிறகுதான் மனைவி என்று அர்த்தமல்ல. அம்மாவிற்குப் பிறகு அந்த இடத்தை நிரப்புவள் மனைவியே என்று அர்த்தம்.

அநேகமான தருணங்களில் அம்மாவின் பின் நின்று போட்டு குடுப்பதால்தான் தாய்க்கு பின் தாரமாகிறாள்....!

மனைவி சொன்னதை மீறி எதுவும் செய்யாதவரா நீங்கள்?

முயற்சித்ததுண்டு ஆனால் முடிந்ததில்லை.....!

ஏதேனும் செய்வதாக இருந்தால், மனைவியிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வீர்களா?

இல்லை, சொன்னால் செய்ய விட மாட்டாள்....! 

ஏதேனும் ஒரு விஷயத்தை செய்துவிட்டு, பிறகு மனைவியிடம் சொல்லிவிடுவீர்களா?

சொல்வதில்லை , ஆனாலும் அவங்களுக்கு மூக்கிலே வேர்த்திடும்.....!

ஆபீஸ் முடிந்து எவ்வளவு நேரம் கழித்து வீட்டுக்கு வந்தாலும், அரைமணி நேரமேனும் மனம் விட்டுப் பேசுவீர்களா?

பேசுவதை மனத்தை விட்டு விட்டு கேட்பதுண்டு.....!

அலுவலகத்தில் மதிய உணவு சாப்பிட்டு முடித்த கையுடன், மனைவிக்கு போன் செய்து 'சாப்பிட்டாச்சா'  என்று கேட்கிறீர்களா?

 யாராவது கொள்ளிக் கட்டையால தலையை சொறிவார்களா.....!

உங்கள் தோழி அல்லது அலுவலகத் தோழியின் செல்போன் எண்களை, புரியாத கோட்வேர்டில் பதிவு செய்திருக்கிறீர்களா? அல்லது பெயரே பதிவு செய்திருக்கிறீர்களா?

ஒருமுறை எனது போனில் பிள்ளைகள் எதோ நம்பர் தேடி இருக்கிறார்கள்.(அதுக்கு பூட்டும் கிடையாது சாவியும் கிடையாது). அதில் பல்லவி என்ற பெயரை பார்த்து விட்டு யாரம்மா பல்லவி இங்கு அப்படி யாரும் இல்லையே என்று அந்த எண்ணுக்கு போன் போட்டிருக்கினம். யாரோ பிரெஞ்சு பொம்பிளை அம்மா  என்றுபோட்டு கதைக்க அவ கேட்டிருக்கிறா.... உங்களின் பெயர் சொல்லுங்கோ, உங்களுக்கு எப்ப அப்பாயின்மென்ட் வேணும், எத்தனை நாளா பல்லு கொதி என்று..... அதோடை போனை எறிஞ்சு போட்டு போட்டினம்......!

உங்களின் தோழி, உங்கள் மனைவிக்கும் தோழியா?

என் மனைவியின் தோழி எனக்கும் தோழிதான்....!

காலையில் இருந்து என்னென்ன நடந்தது என்பதை மனைவியிடம் ஒன்றுவிடாமல் சொல்லமுடிகிறதா உங்களால்?

யெஸ், ஆனால் அவர்கள் எதிர்பார்க்கிற சுவாரஸ்யம் அதில் இருக்காது. கொட்டாவி விட்டுட்டு போக வேண்டியதுதான்....!

'நீங்கள் என்னை நோக்கி ஓரடி எடுத்துவைத்தால், உங்களை நோக்கி நான் பத்தடி எடுத்துவைக்கிறேன்' என்கிறார் பகவான் கிருஷ்ண பரமாத்மா.

நான் ஓரடி வைத்தால் அவர் பத்து மைலுக்கப்பால் பருந்தில பறக்கிறார்.....! tw_blush:  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் பதில்களைப் படித்து, சிரித்து சிரித்து மனமே லேசாகிவிட்டது, திரு.சுவி..:)

எனக்கும் ஏறக்குறைய இம்மாதிரி அனுபவம்தான்..

சம்பாதித்து வீட்டில் கொடுப்பதோடு சரி, திட்டமிட்டு செலவழித்து, எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, கொடுக்கும் நிதியில், வாழ்க்கையை, குழந்தை செல்வங்களை, தற்பொழுது பேரனை செம்மைப் படுத்துவது, மனைவிதான்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 24/03/2018 at 11:10 AM, ராசவன்னியன் said:

தங்கள் தலையில், 'ரெண்டு போடு போட்டுவிட்டு' தன் பிறந்தகமும் செல்ல இயலாது..!!  couil.gif

8_C1_D5335-949_C-4_B33-_BC2_B-59_F838_DB

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கோபால கிருஸ்ணனைத் திட்டிக்கிறீர்கள். கோபாலகிருஸ்ணன் இல்லாவிட்டாலும் , வேறு யாரையாவது கல்யாணம் கட்டியிருப்பீர்கள். யாரைக்கட்டினாலும் அடி, திட்டு வாங்குவது நிச்சயம். உலகத்தில் நடக்கிறதினைத்தான் சொல்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.