Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேலதிக நகர்வுகளை எடுக்குமாறு சிறிலங்காவிடம் வலியுறுத்துகிறது அமெரிக்கா

Featured Replies

மேலதிக நகர்வுகளை எடுக்குமாறு சிறிலங்காவிடம் வலியுறுத்துகிறது அமெரிக்கா

eagle-flag-usaஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா மேலதிக நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நேற்று நடந்த சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை குறித்த விவாதத்தில் உரையாற்றிய போதே அமெரிக்கப் பிரதிநிதி இதனை வலியுறுத்தியுள்ளார்.

“மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறுவது மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளுக்குப் பொறுப்பானவர்களைப் பொறுப்புக்கூற வைப்பது உள்ளிட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1  தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு முன்வைத்த எமது பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவை நாம் வரவேற்கிறோம்.

இந்தப் பரிந்துரைகளுக்கு சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவு இருப்பது குறித்து மகிழ்ச்சியளிக்கின்ற போதிலும், மனித உரிமை மீறல்கள், பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்களின் மீறல்கள், மத சிறுபான்மையினர் மீதான அண்மைய தாக்குதல்கள் குறித்த அறிக்கைகள் எம்மைக் கவலை கொள்ள வைக்கின்றன.

மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைக்குமாறும், மத சிறுபான்மையினரையும் அவர்களின் வழிபாட்டு இடங்களையும் பாதுகாக்குமாறும், நாங்கள் சிறிலங்கா அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.

மனித உரிமைகள் பேரவையின் 30/1  தீர்மானம் மற்றும் அதனை மீள உறுதிப்படுத்திய 34/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு, மேலதிக நகர்வுகளை எடுக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தைக் கோருகிறோம்.

சிறிலஙகா அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பூகோள கால மீளாய்வு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் முன்னேற்றங்களை எதிர்பார்த்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

http://www.puthinappalakai.net/2018/03/20/news/29914

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

மேலதிக நகர்வுகளை எடுக்குமாறு சிறிலங்காவிடம் வலியுறுத்துகிறது அமெரிக்கா

eagle-flag-usaஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா மேலதிக நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் 

மனித உரிமைகள் பேரவையின் 30/1  தீர்மானம் மற்றும் அதனை மீள உறுதிப்படுத்திய 34/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு, மேலதிக நகர்வுகளை எடுக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தைக் கோருகிறோம்.

நீங்கள் எந்தப் பிள்ளையைக் கிள்ளினாலும் நாங்கள் தொட்டிலை ஆட்டுவோம். ஆனால், அதற்காக நாங்கள் தொட்டில் கட்ட, உங்கள் நாட்டில் எங்களை அனுமதிக்க வேண்டும் -  அமெரிக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட 10 வருடங்களாக வற்புறுத்துகிறார்கள் என்றால் பாருங்கோவன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

கிட்டத்தட்ட 10 வருடங்களாக வற்புறுத்துகிறார்கள் என்றால் பாருங்கோவன்.

அமெரிக்காவின் தேவைகளுக்கு அது போதுமானது.

ஈழத் தமிழர் தமது தேவைகளை அமேரிக்கா நிறைவேற்றும் என்று எதிர்பார்ப்பது அர்த்தமுள்ளதாக தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Jude said:

அமெரிக்காவின் தேவைகளுக்கு அது போதுமானது.

ஈழத் தமிழர் தமது தேவைகளை அமேரிக்கா நிறைவேற்றும் என்று எதிர்பார்ப்பது அர்த்தமுள்ளதாக தெரியவில்லை. 

நாங்கள் சீனாக்காரரிடம் போனால் சரிதானே..<_<

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

நாங்கள் சீனாக்காரரிடம் போனால் சரிதானே..<_<

யாரிடம் போனாலும் அவர்களுக்கு தேவையானதை கொடுக்க முன்வராவிட்டால் எதுவும் கிடைக்காது.

ராஜபக்ஷே அரசு சீனருக்கு தேவையானதை கொடுத்து அவர்கள் ஆதரவையும் இந்தியருக்கு தேவையானதை கொடுத்து அவர்கள் ஆதரவையும் அமெரிக்கருக்கு தேவையானதை தருவதாக சொல்லி அவர்கள் ஆதரவையும் பெற்று வென்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

தமிழருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்திருந்தால் வேறெதையும் இழக்க நேரிட்டிருக்காதே. இலங்கையின் பலமும் அதிகரித்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Paanch said:

தமிழருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்திருந்தால் வேறெதையும் இழக்க நேரிட்டிருக்காதே. இலங்கையின் பலமும் அதிகரித்திருக்கும்.

நீங்கள் சிங்களவரின் மனநிலையை இன்னமும் புரிந்து கொள்ளவில்லையா? தமிழருக்கு தன்னாட்சி பலம் இருந்தால் தமிழ்நாட்டின் உறவுடனும் இந்திய மத ரீதியான உறவுடனும் கூடிய பொருளாதார அரசியல் பலம் கொண்டு சிங்களவரை தமிழர் நசுக்கி விடுவார்கள் என்பது சிங்களவரின் நிரந்தர பயம். இதனை ஓர் முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் உட்பட பல சிங்களவர் என்னிடம் நேரடியாகவே சொல்லி இருக்கிறார்கள். இந்த காரணத்தால் தமிழருக்கு தன்னாட்சி கொடுப்பதை தவிர்க்க, தேவையானால்  இலங்கையின் பெரும்பாலான தரிசு நிலங்களை சீனா போன்ற தூர தேசங்களுக்கு சிங்கள தலைவர்கள் கொடுக்க தயங்க மாட்டார்கள். தமிழ் அரசியல்வாதிகள் - விக்னேஸ்வரன் உட்பட - இந்த பயத்தை அதிகரிக்கிறார்களே அன்றி குறைக்கிறார்கள் இல்லை.

தமிழர்கள் தன்னாட்சி பெற ஒரே வழி சிங்களவர்களின் பயத்தை போக்க வேண்டும். தமிழர்களும் சிங்களவர்களும் கூட்டாக பொருளாதார அபிவிருத்தி அடைந்து தமிழர் - இந்தியா உறவிலும் பார்க்க தமிழர் - சிங்களவர் உறவு நெருக்கமானதாக மாற வேண்டும். இதுவே சிங்களவர்களின் பயத்தை நீக்க ஒரே வழி. அவர்கள் பயத்தை நீக்க வேண்டிய தேவை எமக்கில்லை என்று சொல்பவர்கள் தமிழருக்கு தன்னாட்சி வேண்டாம் என்று சொல்வதாகவே கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
56 minutes ago, Jude said:

தமிழர்கள் தன்னாட்சி பெற ஒரே வழி சிங்களவர்களின் பயத்தை போக்க வேண்டும். தமிழர்களும் சிங்களவர்களும் கூட்டாக பொருளாதார அபிவிருத்தி அடைந்து தமிழர் - இந்தியா உறவிலும் பார்க்க தமிழர் - சிங்களவர் உறவு நெருக்கமானதாக மாற வேண்டும். இதுவே சிங்களவர்களின் பயத்தை நீக்க ஒரே வழி.

உது பழையபகிடி கண்டியளோ.

சிங்களம் தமிழரை நம்பவேணுமெண்டால் கூட்டாக பொருளாதர அபிவிருத்தையை விட வடகிழக்குக்கு சிங்கள மாதிரிக்கிராமங்கள்,சிங்கள குடியேற்றங்கள் தான் சரி...

யாரும் சொல்லாமலே அதுதான் இப்ப அங்கை நடக்குது.

எல்லாம் முடிஞ்சாப்பிறகு தமிழர்கள் தனியாட்சி கேட்கவுமேலாது,தெம்பும் இருக்காது.அவசியமும் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

நீங்கள் சிங்களவரின் மனநிலையை இன்னமும் புரிந்து கொள்ளவில்லையா? 

முதலில் தமிழர், தமிழர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்து கொண்டிருந்தால் இன்று தன்னாட்சி கொண்டிருப்பர். :rolleyes::rolleyes: 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உது பழையபகிடி கண்டியளோ.

சிங்களம் தமிழரை நம்பவேணுமெண்டால் கூட்டாக பொருளாதர அபிவிருத்தையை விட வடகிழக்குக்கு சிங்கள மாதிரிக்கிராமங்கள்,சிங்கள குடியேற்றங்கள் தான் சரி...

இந்த பிடிவாதம் தான் தமிழரின் மீள முடியாத  தோல்விக்கு காரணம். நாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடித்து முழுமையான அழிவை கண்டு கொண்டு இருக்கிறோம் -  இந்திய உறவு தமிழரையும் சிங்களவரையும் ஒருவரை ஒருவர் அழிக்க வைக்கும் சக்தி. அந்த இந்திய உறவை நாம் பிடித்து கொண்டு இருக்கும் வரை  இலங்கை முழுவதும் நீர்கொழும்பு மாதிரி முற்றான சிங்கள நாடாக மாறுவதை பார்த்து கொண்டு இருப்பதை தவிர வேறு வழி இருக்காது.

2 hours ago, குமாரசாமி said:

எல்லாம் முடிஞ்சாப்பிறகு தமிழர்கள் தனியாட்சி கேட்கவுமேலாது,தெம்பும் இருக்காது.அவசியமும் இருக்காது.

அந்த நிலைக்கு இலங்கையில் தமிழ் மக்கள் ஏற்கனவே வந்து விட்டார்கள்.

2 hours ago, Paanch said:

முதலில் தமிழர், தமிழர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்து கொண்டிருந்தால் இன்று தன்னாட்சி கொண்டிருப்பர். :rolleyes::rolleyes: 

தமிழர்கள் எல்லோரும் ஒரே மனநிலையில் இல்லை என்ற உங்கள் கருத்துடன் நான் உடன்படுகிறேன்.   நீங்கள் சொல்வது போன்று  தன்னாட்சி வந்து இருக்காது. இனிமேல் ஏதாவது பயனுள்ளதாக செய்யலாமா என்று பார்க்க வேண்டும்.

2 hours ago, குமாரசாமி said:

Edited by Jude

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Jude said:

இந்த பிடிவாதம் தான் தமிழரின் மீள முடியாத  தோல்விக்கு காரணம். நாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடித்து முழுமையான அழிவை கண்டு கொண்டு இருக்கிறோம் -  இந்திய உறவு தமிழரையும் சிங்களவரையும் ஒருவரை ஒருவர் அழிக்க வைக்கும் சக்தி. அந்த இந்திய உறவை நாம் பிடித்து கொண்டு இருக்கும் வரை  இலங்கை முழுவதும் நீர்கொழும்பு மாதிரி முற்றான சிங்கள நாடாக மாறுவதை பார்த்து கொண்டு இருப்பதை தவிர வேறு வழி இருக்காது.

இதிலை எங்கையப்பா புடிச்ச முயலுக்கு மூண்டுகால் எண்டு சண்டை பிடிக்கிறம்?
சிங்களவருக்கு உள்ள அதே உரிமையைத்தானே நாங்களும் கேட்டம்/கேக்கிறம்.....

இதுக்கு போய் மூண்டுகால் நாலுகால் எண்டு கொண்டு....
ஏன் நைனார்? ஈழத்தமிழன்  சிங்களத்தை நம்ப வைக்கோணுமெண்டால்.....ஈழத்தமிழன் சிங்களத்துக்கு அடிமையாய் அடிமையாய் இருக்கிறான் எண்டு தானே அர்த்தம்.
 
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

 ஈழத்தமிழன்  சிங்களத்தை நம்ப வைக்கோணுமெண்டால்.....ஈழத்தமிழன் சிங்களத்துக்கு அடிமையாய் அடிமையாய் இருக்கிறான் எண்டு தானே அர்த்தம்.
 
நம்ப நடப்பது என்றால் அடிமையாய் இருப்பதா? எல்லாரையும் நல்லா ஏமாத்தி வாழ்வது தான் சுதந்திர வாழ்வா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, Jude said:

நம்ப நடப்பது என்றால் அடிமையாய் இருப்பதா? எல்லாரையும் நல்லா ஏமாத்தி வாழ்வது தான் சுதந்திர வாழ்வா?

ஒரு மனித இனம் சுதந்திரத்துடனும் உரிமையுடனும் வாழ மற்ற இனத்தை நம்ப வைக்க வேண்டும் என்றால் நாம் எந்த உலகில் வாழ்கின்றோம் தலைவா?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Jude said:

தமிழர்கள் தன்னாட்சி பெற ஒரே வழி சிங்களவர்களின் பயத்தை போக்க வேண்டும். தமிழர்களும் சிங்களவர்களும் கூட்டாக பொருளாதார அபிவிருத்தி அடைந்து தமிழர் - இந்தியா உறவிலும் பார்க்க தமிழர் - சிங்களவர் உறவு நெருக்கமானதாக மாற வேண்டும். இதுவே சிங்களவர்களின் பயத்தை நீக்க ஒரே வழி. அவர்கள் பயத்தை நீக்க வேண்டிய தேவை எமக்கில்லை என்று சொல்பவர்கள் தமிழருக்கு தன்னாட்சி வேண்டாம் என்று சொல்வதாகவே கொள்ளலாம்.

அண்மையில் நடந்த முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலுக்கு பின்புமா நீங்கள் அப்படி நினைக்கிறீங்கள்...எம்மை விட முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் மிகவும் நெருக்கமான உறவை கடப்பிடித்தவர்கள்.அவர்கள் ஈழம் கேட்கவில்லை...."அப்பே ரட்ட லங்கா" என்று சொல்பவ்ர்கள் செயலிலும் அப்படித்தான் ...அவர்களுக்கே அந்த நிலை என்றால்.....

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, putthan said:

உண்மையில் முஸ்லிம் சிங்கள உறவு நீங்கள் நினைப்பது போல் உறுதியானது அல்ல. போர்க்காலத்தில் தேவை கருதி உருவான உறவே அது. சிங்கள மக்களுடன் அவர்களில் ஒருவனான நான் வாழ்ந்த காலத்தில் அவர்கள் முஸ்லிம்களை வெறுப்பதையும் தமிழருடன் வாழ விரும்புவதையும் அறிந்து கொள்ள கூடியதாக இருந்தது. ஆனால் இலங்கை தமிழருக்கு இந்தியாவில் உள்ள பலம் பற்றி நிரத்தரமான பயம் அவர்களுக்கு உள்ளது. அதை எமது தமிழ் அரசியல்வாதிகளும் ஆயுத போராளிகளும் தமது செயற்பாடுகளாலும் வரலாறு மூலமும் உறுதி செய்து இருக்கிறார்கள்.

மத ரீதியாகவும், உணவு மற்றும் வேறு பண்பாட்டு விழுமியங்கள் மூலமாகவும் பௌத்த, கிறீஸ்தவ சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள நெருக்கம் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இல்லை. உச்சத்தில் போர் நடந்த காலத்தில் கூட பல சிங்கள மக்கள் தமிழர்களுடன் நல்ல உறவை பேணி வந்து இருக்கிறார்கள்.

நான் சொல்லும் நம்பிக்கை ஊட்டும் உறவு பொருளாதார வளர்ச்சிக்கான உறவு. கொழும்பின் பெரிய பொருளாதார மையங்கள் பல தமிழர் சிங்களவர்களின் கூட்டு முயற்சி மூலமே இன்றும் நிலைத்து வளர்ச்சி பெறுகின்றன. மெஜஸ்டிக் சிட்டி இதற்கு ஒரு உதாரணம். இப்படி பல. பொருளாதார வளர்ச்சி, உறவுகளை  இன வேறுபாட்டு சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு உறுதியாக்கும் சக்தி கொண்டது. சிங்கபூரிலும் ஏனைய வளர்ச்சி அடைந்த நாடுகளிலும், ஏன் இன்று சென்னையிலும் கூட நீங்கள் இதனை காணலாம். இன்று கூகிள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களை தமிழரும் இந்தியரும் நடத்தும் அளவுக்கு இன வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டு அமெரிக்க வெள்ளையர் உறுதியான உறவுகளை ஏற்படுத்தி கொண்டதற்கு காரணம் பொருளாதர வளர்ச்சி. அமெரிக்க வெள்ளையர் இன வெறியில் சிங்களவர்களுக்கு குறைந்தவர்கள் அல்ல. ஆனால் பொருளாதார வளர்ச்சியே அதனை மாற்றி அமைத்தது.

16 hours ago, குமாரசாமி said:

ஒரு மனித இனம் சுதந்திரத்துடனும் உரிமையுடனும் வாழ மற்ற இனத்தை நம்ப வைக்க வேண்டும் என்றால் நாம் எந்த உலகில் வாழ்கின்றோம் தலைவா?

பல இனங்கள் வாழும் உலகில் வாழ்கிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Jude said:

உண்மையில் முஸ்லிம் சிங்கள உறவு நீங்கள் நினைப்பது போல் உறுதியானது அல்ல. போர்க்காலத்தில் தேவை கருதி உருவான உறவே அது. சிங்கள மக்களுடன் அவர்களில் ஒருவனான நான் வாழ்ந்த காலத்தில் அவர்கள் முஸ்லிம்களை வெறுப்பதையும் தமிழருடன் வாழ விரும்புவதையும் அறிந்து கொள்ள கூடியதாக இருந்தது. ஆனால் இலங்கை தமிழருக்கு இந்தியாவில் உள்ள பலம் பற்றி நிரத்தரமான பயம் அவர்களுக்கு உள்ளது. அதை எமது தமிழ் அரசியல்வாதிகளும் ஆயுத போராளிகளும் தமது செயற்பாடுகளாலும் வரலாறு மூலமும் உறுதி செய்து இருக்கிறார்கள்.

மத ரீதியாகவும், உணவு மற்றும் வேறு பண்பாட்டு விழுமியங்கள் மூலமாகவும் பௌத்த, கிறீஸ்தவ சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள நெருக்கம் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இல்லை. உச்சத்தில் போர் நடந்த காலத்தில் கூட பல சிங்கள மக்கள் தமிழர்களுடன் நல்ல உறவை பேணி வந்து இருக்கிறார்கள்.

நான் சொல்லும் நம்பிக்கை ஊட்டும் உறவு பொருளாதார வளர்ச்சிக்கான உறவு. கொழும்பின் பெரிய பொருளாதார மையங்கள் பல தமிழர் சிங்களவர்களின் கூட்டு முயற்சி மூலமே இன்றும் நிலைத்து வளர்ச்சி பெறுகின்றன. மெஜஸ்டிக் சிட்டி இதற்கு ஒரு உதாரணம். இப்படி பல. பொருளாதார வளர்ச்சி, உறவுகளை  இன வேறுபாட்டு சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு உறுதியாக்கும் சக்தி கொண்டது. சிங்கபூரிலும் ஏனைய வளர்ச்சி அடைந்த நாடுகளிலும், ஏன் இன்று சென்னையிலும் கூட நீங்கள் இதனை காணலாம். இன்று கூகிள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களை தமிழரும் இந்தியரும் நடத்தும் அளவுக்கு இன வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டு அமெரிக்க வெள்ளையர் உறுதியான உறவுகளை ஏற்படுத்தி கொண்டதற்கு காரணம் பொருளாதர வளர்ச்சி. அமெரிக்க வெள்ளையர் இன வெறியில் சிங்களவர்களுக்கு குறைந்தவர்கள் அல்ல. ஆனால் பொருளாதார வளர்ச்சியே அதனை மாற்றி அமைத்தது.

பல இனங்கள் வாழும் உலகில் வாழ்கிறீர்கள். 

சிங்களவர்கள் இந்தியா மீது பயம் கொள்ள காரணம்
போத்துகீசரின் காலணித்துவ நாடாக இருந்த "கோவா",ம்ற்றும் பிரித்தானிய கால்ணித்துவ நாடாக இருந்த "சீக்கிம்" இரண்டையும் இந்திய இராணுவப்பலத்தினுடாக இனைத்து கொண்டமை....அப்படி ஒரு நிலை சிறிலங்காவுக்கும் வந்திடும் என்ற பயம்....

முதலாளிமார் இனவெறியை தூண்டிகொண்டு மறைமுகமாக அந்த இனத்துடன் தொழில் செய்வார்கள்....இது வெள்ளை,தமிழன் ,சிங்களவ்ன்,முஸ்லிம் எல்லோருக்கும் பொருந்தும்.

சிறிலங்கா என்ற நாட்டை தங்களுடைய கேந்திர முக்கியத்துவத்திற்காக  உருவாக்கியவ்ர்கள்  அந்த நாட்டை பாதுகாத்துகொள்வார்கள்..தங்களுடைய தேவை க்கு அந்த நாடு இடம் கொடுக்கவில்லையாயின் அதை நாசமாக்கவும் தயங்கமாற்றார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, putthan said:

புத்தன்,  இன்றைய பெரிய வணிக நிறுவனங்களின் முதலாளிமார் பொதுமக்கள். நீங்கள் வங்கியில் பணம் வைப்பீடு செய்து வட்டி பெறுகிறீர்களா? வங்கி எப்படி வட்டிக்கு உரிய பணத்தை உழைக்கிறது? இந்த வணிக நிறுவங்களில் முதலிட்டு (முதலாளியாகி) தான் வட்டியை தருகிறது. மறைமுகமாக நீங்கள் தான் முதலாளி - ஏனென்றால் உங்கள் பணத்தில் தான் இந்த வணிக நிறுவனங்கள் இயங்குகின்றன. நான் மேலே குறிப்பிட்ட மெஜஸ்டிக் சிட்டி க்கு நானும் ஒரு காலத்தில் முதலாளி தான். ஏனென்றால் இலங்கையில் முதல் முதலாக வேலை செய்து சம்பளம் பெற்ற உடன் மெஜஸ்டிக் சிட்டியின் ஆரம்பகால பங்குகளை வாங்கி இருந்தேன். சில வருடங்களுக்கு முதல் தான் அவற்றை விற்று விட்டேன்.  இலங்கையில் பென்சன் பணம் இப்படியான வணிக நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு தான் பொது மக்களுக்கு பென்சன் வழங்கப்படுகிறது. அமெரிக்க பொருளாதாரமே இந்த முதலீட்டு பொருளாதாரத்தில் தான் தங்கி உள்ளது. கூகிள் நிறுவனத்தின் முதலாளி யார்? அதன் தலைவரான சுந்தரராஜன் பிச்சை என்ற தமிழனா? இல்லையே ? அமெரிக்க மக்களின் பணம் தான் கூகிள் நிறுவனத்தின் முதலீடு. சுந்தரராஜன் பிச்சை இன வெறியை தூண்டி விட்டு அதன் மூலம் இலாபம் சம்பாதிக்க முடியுமா? 

சிங்கப்பூரின் வணிக நிறுவனங்கள் அங்குள்ள சீனருக்கும் தமிழருக்கும் இடையே இனவெறியை தூண்டி விட்டால் என்ன நடக்கும்? சிங்கபூர் ஸ்ரீ லங்கா ஆகும். இதை எழுதி வைத்து விட்டு சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யு மறைந்து போனார். அவர் தனது குடும்பத்திலேயே தமிழரை உறவாக்கி இனவேறுபாட்டுக்கு மேல் உயர்ந்த சிங்கபூரை உருவாக்கினார்.

சிறிமாவோ சிலோன் என்ற நாட்டிற்கு ஸ்ரீ லங்கா என்று 1972 இல் பெயரிட்டார். பல நாடுகள் இருந்த தீவில் சிலோன் என்ற ஒரு நாட்டை பிரித்தானியா உருவாக்கியது. ஸ்ரீ லங்காவில் இன்று பிரித்தானியாவிற்கு கேந்திர நலன்கள் இருப்பதாக எந்த ஆய்வாளரும் தெரிவித்ததாக நான் அறியவில்லை.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

...நீங்கள் கூறுவது எல்லாம் முதலாளிமாருக்குத்தான் பொருந்தும் சாதாரண மக்களுக்கு பொருந்தாது...பங்கு சந்தை வியாபரம் இப்ப என்ன நிலையில் உள்ளதும் அறிந்த விடயம் ....பங்கு சந்தை வாங்குபவ்ர்களும் ஒரு வகை முதலாளி ஆக முயற்சிப்பவர்களே.....

எல்லா பெரிய நாடுகளுக்கு பக்கத்திலும் ஒரு சிறிய பல்கலாச்சார நாட்டை தேவைகள் கருதி  உருவாகியுள்ளார்கள் என்பது எனது அவதானிப்பு....மலேசியா (இஸ்லாம் மதகருத்தியல்)வுக்கு அருகில் சிங்கப்பூர்    சீனா(பெளத்த‌ கருத்தியல்/கம்னியுசம்)க்கு அருகில்  தாய்வான்,ஹொங்ஹொங் மற்றும் இந்தியா(இந்து)வுக்கு அருகில் சிறிலங்கா......பிரித்தானியாவின் சாம்ராஜ்யம் ஒழுங்கு கலைந்தவுடன் அமெரிக்கா அதை தொடர்ந்து செய்கின்றது....அன்று பிரித்தானியா உருவாக்கிய வெளிநாட்டு அரசியல் கொள்கைகளை அமேரிக்கா தொடர்ந்து கடைப்பிடிக்கிறது.

பிரித்தானியாவுக்கு இன்று கேந்திரமுக்கியத்துவம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அமேரிக்காவுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, putthan said:

...நீங்கள் கூறுவது எல்லாம் முதலாளிமாருக்குத்தான் பொருந்தும் சாதாரண மக்களுக்கு பொருந்தாது...பங்கு சந்தை வியாபரம் இப்ப என்ன நிலையில் உள்ளதும் அறிந்த விடயம் ....பங்கு சந்தை வாங்குபவ்ர்களும் ஒரு வகை முதலாளி ஆக முயற்சிப்பவர்களே.....

வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மக்களின் பணம் பங்கு சந்தையில் முதலிடப்படுகிறது. சாதாரண மக்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்கள். எனது கருத்து இந்த சாதாரண தமிழ் மற்றும் சிங்கள மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கான கூட்டுறவில் தான் இந்த மக்களின் சமாதான சக வாழ்வு தங்கி உள்ளது என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/03/2018 at 6:54 PM, Jude said:

நீங்கள் சிங்களவரின் மனநிலையை இன்னமும் புரிந்து கொள்ளவில்லையா? தமிழருக்கு தன்னாட்சி பலம் இருந்தால் தமிழ்நாட்டின் உறவுடனும் இந்திய மத ரீதியான உறவுடனும் கூடிய பொருளாதார அரசியல் பலம் கொண்டு சிங்களவரை தமிழர் நசுக்கி விடுவார்கள் என்பது சிங்களவரின் நிரந்தர பயம். இதனை ஓர் முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் உட்பட பல சிங்களவர் என்னிடம் நேரடியாகவே சொல்லி இருக்கிறார்கள். இந்த காரணத்தால் தமிழருக்கு தன்னாட்சி கொடுப்பதை தவிர்க்க, தேவையானால்  இலங்கையின் பெரும்பாலான தரிசு நிலங்களை சீனா போன்ற தூர தேசங்களுக்கு சிங்கள தலைவர்கள் கொடுக்க தயங்க மாட்டார்கள். தமிழ் அரசியல்வாதிகள் - விக்னேஸ்வரன் உட்பட - இந்த பயத்தை அதிகரிக்கிறார்களே அன்றி குறைக்கிறார்கள் இல்லை.

தமிழர்கள் தன்னாட்சி பெற ஒரே வழி சிங்களவர்களின் பயத்தை போக்க வேண்டும். தமிழர்களும் சிங்களவர்களும் கூட்டாக பொருளாதார அபிவிருத்தி அடைந்து தமிழர் - இந்தியா உறவிலும் பார்க்க தமிழர் - சிங்களவர் உறவு நெருக்கமானதாக மாற வேண்டும். இதுவே சிங்களவர்களின் பயத்தை நீக்க ஒரே வழி. அவர்கள் பயத்தை நீக்க வேண்டிய தேவை எமக்கில்லை என்று சொல்பவர்கள் தமிழருக்கு தன்னாட்சி வேண்டாம் என்று சொல்வதாகவே கொள்ளலாம்.

இந்தக்கணக்கு  மிக  மிக  தவறானதும்  வரலாற்றுப்படிப்பினைகளை  அறியாததுமாகும்

சிங்களவன்  தமிழரை  முழுமையாக  நம்ப  வேண்டுமென்றால்

தமிழ் நிலம்  முழுவதையும் இழக்கவேண்டும்

அதற்கு ஒரு  20  வருடங்கள் போதும்

ஆனால்  தமிழர்கள்  ஒரே  கூடையின்  கீழ்  ஒன்று பட்டால்

மட்டுமே தமிழ்   மண்ணைக்காக்க  முடியும்

அதற்கு  தமிழகமும்   எமக்கு  வேண்டும்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

இந்தக்கணக்கு  மிக  மிக  தவறானதும்  வரலாற்றுப்படிப்பினைகளை  அறியாததுமாகும்

எவ்வகையில் கணக்கு தவறானது என்று நீங்கள் எழுதவில்லையே?  இந்திய றோவின் உதவியுடனும் தமிழ்நாட்டின் பின்புலத்துடனும்  சிங்களவருடன் மோதியதே எமது வரலாறு. கிடைத்த படிப்பினை பெரும் அழிவும் அதில் இந்தியாவின் பெரும் பங்களிப்பும் ஆகும். இதுதான் எங்கள் வரலாற்று படிப்பினை. இதை நீங்கள் அறியவில்லையா?

7 hours ago, விசுகு said:

ஆனால்  தமிழர்கள்  ஒரே  கூடையின்  கீழ்  ஒன்று பட்டால்

மட்டுமே தமிழ்   மண்ணைக்காக்க  முடியும்

அதற்கு  தமிழகமும்   எமக்கு  வேண்டும்

இது உங்கள் அபிப்பிராயம் - ஆனால் இது சாத்தியம் அற்றது என்பது எங்கள் வரலாற்று படிப்பினை.

இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த கனவில் வாழ்ந்து கொண்டு வடக்கும் கிழக்கும் நீர்கொழும்பு போல சிங்கள மக்களாக மாறுவதை பார்த்து கொண்டு இருக்க போகிறீர்கள்?  சாத்தியம் அற்ற கனவுகள் தீர்வுகள் அல்ல. மாறாக தீர்வுகளை தடுக்கும் அழிவுக்கான தடைக்கற்கள்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வர்த்தக நிலையங்களை அங்கு வேலை பார்த்த சிங்களவர்களே  இனக்கலவரத்தின்போது அடித்து நொறுக்கி சூறையாடி மிஞ்சியதை வந்தவன், போனவனும் சுருட்டி தமிழன் ஒன்றுமற்ற ஏதிலியாய் எதிர்காலம் சூனியமாய்  கப்பலில் வந்திறங்கிய வரலாறுகள் உண்டு. இப்ப செய்ய முடியாமல் சில தமிழ் நாதாரிகளை வைத்து அரங்கேற்றப் படுகிறது. சிங்களவரின் பயத்துக்கு காரணம் தன்னமிக்கை இல்லை, எல்லாம் தங்களுக்கு வேண்டும் என்கின்ற பேராசை, தாங்கள் யார்? எங்கிருந்து வந்தோம் என்கிற  உண்மையை ஏற்றுக்கொள்ளாமை, கஸ்ரப்பட்டு உழைத்து, சிக்கனமாய் வாழ்ந்து சேகரிக்கத் தெரியாமை, பிள்ளை பெறுவதிலும், பொறாமை, சும்மா இருந்து சுகமாக வாழ நினைக்கும் தன்மை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தியனுக்கும் இதே எண்ணந்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

ஆக நீங்கள் சொல்வது தமிழரோடு ஒப்பிடும் போது சிங்களவரும் இந்தியரும் குறைவானவர்கள், திருடர்கள், தன்னம்பிக்கை இல்லாதவர்கள், உழைக்க தெரியாதவர்கள் ... தமிழரே இவர்கள் எல்லாரிலும் சிறப்பானவர்கள். ஆகா .. எங்களுக்கு என்ன குறை? நாங்கள் அறிவாளிகள். செல்வந்தர். உழைப்பாளிகள். நன்றாக இருக்கிறோம் - அப்படித்தானே?  தெரியத் தந்தமைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

 இல்லையாயின் ஏன் தமிழரின் உரிமைகள் பறிக்கப்பட்டு, அடிமையாக நடத்தப்பட வேண்டும். பிடிக்கவில்லை பிரிந்து போக விரும்புகின்றோம் அதற்கும் விடவில்லையே ஏன்? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.