Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமி­ழர்­களின் வாழ்­வு­ரி­மையும் இந்­தி­யாவின் பாது­காப்பும்

Featured Replies

தமி­ழர்­களின் வாழ்­வு­ரி­மையும் இந்­தி­யாவின் பாது­காப்பும்

 

தமி­ழரின் தாயகப் பூமி­யான வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் தமி­ழர்­களின் கையை விட்டு சென்றால் இந்­தி­யாவின் பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யாகும். இந்தப் பேரா­பத்தை கருத்தில் கொண்டு இத­னைக் ­க­ரி­ச­னையில் எடுத்து இந்­திய அர­சாங்கம் தமது வெளி­வி­வ­காரக் கொள்­கை­களில் மாற்­றத்தை கொண்­டு­வ­ர­வேண்டும் என்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

இந்­திய ஊட­க­வி­ய­லாளர் தி. இரா­ம­கி­ருஷ்ணன் எழு­திய '' ஓர் இனப்­பி­ரச்­சி­னையும் ஓர் ஒப்­பந்­தமும்'' என்ற நூலின் அறி­முக விழா யாழ்ப்­பாணம் நல்­லூரில் வட­மா­காண அவைத்­த­லைவர் சி.வி.கே. சிவ­ஞானம் தலை­மையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்­றது. இந்த நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் இதனை சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய அவர், இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தின் ஊடா­கவே வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­பட்­டன. பின்னர் காலப்­போக்கில் அரசின் மாற்­றங்­க­ளினால் அவை நீதி­மன்றின் ஊடாக பிரிக்­கப்­பட்­டன. இரண்டு நாடு­க­ளுக்­கி­டையில் செய்­து­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்தம் மாற்­ற­ம­டை­யும்­போது அதில் சம்­பந்­தப்­பட்ட நாடான இந்­தி­யாவும் அக்­க­றை­காட்­ட­வில்லை. வடக்கு, கிழக்கு மாகாணம் ஒப்­பந்­தத்தின் பிர­காரம் இல்­லாது பிரிந்­தது. இதன் விளை­வாக தற்­போது கிழக்கு மாகாணம் பெரும்­பான்மை சமூ­கத்தின் பிடிக்குள் சிக்­கி­விட்­டது. இப்­போது வடக்கு மாகா­ணத்­தையும் குறி­வைத்து திட்­ட­மிட்ட சிங்­கள குடி­யேற்­றங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. சிங்­கள அரசு தனது நிகழ்ச்சி நிரலை அன்­று­முதல் இன்­று­வரை மாற்­ற­வில்லை. நாம் ஆரம்­ப­கா­லத்தில் இருந்து இறு­தி­யாக முள்­ளி­வாய்க்­காலில் இலட்­சக்­க­ணக்­கான மக்கள் கொல்­லப்­படும் வரை இந்­தி­யா­வையே நம்­பினோம் என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இலங்கை–இந்­திய ஒப்­பந்தம் இரண்டு கார­ணங்­க­ளுக்­காக செய்­து­கொள்­ளப்­பட்­டது. எமது இனத்தின் பிரச்­சி­னைக்கு தீர்வைக் கொடுக்­க­வேண்டும் என்­ப­தற்­கா­கவும் இந்­தி­யாவின் பாது­காப்­பிற்­கா­க­வுமே இந்த ஒப்­பந்தம் செய்­து­கொள்­ளப்­பட்­டது. ஆனால் இன்றோ தென்­னி­லங்­கையில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்­கி­யுள்­ளது. இதே ஆதிக்கம் தமிழ் தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் பறி­போனால் இங்கும் ஏற்­படும். எனவே எமது மாகா­ணங்கள் பறி­போனால் எமக்கு மட்டும் பாதிப்­பல்ல. அது இந்­தி­யாவின் பாது­காப்­பிற்கும் அச்­சு­றுத்­த­லாக அமையும் என்றும் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இந்த நிகழ்வில் உரை­யாற்­றிய வடக்கு, கிழக்கு மாகாண முன்னாள் உதவிச் செய­லாளர் சி. கிருஷ்­ணா­னந்தன் வட­மா­காண எதிர்க்­கட்சித் தலைவர் சி. தவ­ராஜா, வட­மா­காண சபை உறுப்­பினர் எம். கே. சிவா­ஜி­லிங்கம், பேரா­சி­ரியர் பொன். பால­சுந்­தரம் பிள்ளை, பொறி­யி­ய­லாளர் கலா­நிதி க. விக்­கி­னேஸ்­வரன் உட்­பட பலரும் இவ்­வா­றான கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.

இங்கு உரை­யாற்­றிய வட­மா­காண சபை உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கம் இந்­திய– இலங்கை ஒப்­பந்தம் தொடர்­பிலும் இந்­தியா இழைத்­து­வரும் தவ­றுகள் குறித்தும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். முன்னாள் இந்­தியப் பிர­தமர் ராஜீவ் காந்­தியை தாம் சந்­தித்த போது தமிழ் ஆயு­தக்­கு­ழுக்­க­ளி­டையே உள்ள முரண்­பா­டு­களை கைவி­டு­மாறும் அவ்­வாறு கைவிட்டால் திரு­கோ­ண­மலையை தலை­ந­க­ராகக் கொண்ட சுயாட்­சியை தான் ஏற்­ப­டுத்தித் தரு­வ­தா­கவும் அவர் உறு­தி­ய­ளித்­தி­ருந்­த­தா­கவும் சிவா­ஜி­லிங்கம் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னையைப் பொறுத்­த­வ­ரையில் இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு என்­பது முக்­கி­யத்­து­வ­மிக்­க­தா­கவே அமைந்து வந்­தி­ருக்­கின்­றது. மறைந்த முன்னாள் இந்­தியப் பிர­தமர் இந்­தி­ரா­ காந்தி ஆட்­சிக்­கா­லத்தில் தமிழ் இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்­து­வ­தற்கு இந்­தியா உத­வி­யது. தமி­ழகம் உட்­பட பல இடங்­களில் தமிழ் இளை­ஞர்­க­ளுக்கு ஆயுதப் பயிற்­சி­யையும் வழங்­கி­யது. நிதி உதவி உட்­பட பல்­வே­றுவகை உத­வி­களும் வழங்­கப்­பட்­டன. இவ்­வாறு தமிழ் ஆயு­தக்­கு­ழுக்­க­ளுக்கு உத­விய இந்­தியா தமிழ் மக்கள் இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட போது உத­வி­க­ளையும் வழங்­கி­யது.

1987 ஆம் ஆண்டு வட­ம­ராட்சி ஒப்­ரேஷன் லிப­ரேஷன் இரா­ணுவ நட­வ­டிக்கை இடம்­பெற்ற போது யுத்­தத்தை நிறுத்­து­மாறு இந்­தியா வலி­யு­றுத்­தி­யது. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு கப்­பலில் பொருட்­களை அனுப்­பு­வ­தற்கு இந்­தியா முயன்­ற­போது அதற்கு இலங்கை அர­சாங்­கம் இணக்கம் தெரி­விக்­க­வில்லை. இத­னை­ய­டுத்து விமா­னங்கள் மூலம் உணவுப் பொட்­ட­லங்­களை இந்­தியா யாழ்ப்­பா­ணத்தில் போட்­டி­ருந்­தது. இலங்கை அர­சாங்­கத்தை எச்­ச­ரிக்கும் வகை­யி­லேயே இந்­தி­யாவின் இந்த செயற்­பாடு அமைந்­தது. இத­னை­ய­டுத்­துதான் இலங்கை–இந்­திய ஒப்­பந்தம் மேற்­கொள்­ளப்­பட்­டது .

இந்த ஒப்­பந்­தத்தின் கீழ் தான் 13 ஆவது திருத்த சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்டு மாகா­ண­சபை முறைமை அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. வடக்கு, கிழக்கு இணைந்த ஒரே அலகில் மாகா­ணங்­க­ளுக்கு அதி­கா­ரங்­களை வழங்கும் வகையில் இந்த செயற்­பாடு அமைந்­தி­ருந்­தது. ஆனாலும் இந்த ஒப்­பந்­தத்தை முறை­யாக பயன்­ப­டுத்­திக்­கொள்ள தமிழ் தலை­மைகள் அன்று தவ­றி­யி­ருந்­தன. இதனால் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண முடி­யாத நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது.

1991 ஆம் ஆண்டு இந்­தியப் பிர­தமர் ராஜீவ் காந்தி படு­கொலை செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து ஈழத் தமிழர் விவ­கா­ரத்தில் இந்­தி­யாவின் நிலைப்­பா­டா­னது மாற்றம் கண்­டது. 2005ஆம் ஆண்டு நீதி­மன்ற கட்­ட­ளையின் மூலம் வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் பிரிக்­கப்­பட்­டன. 13 ஆவது திருத்த சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்ட போதிலும் அதனை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த மாறி மாறி ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கங்கள் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. வடக்கு, கிழக்கில் பெரும்­பான்­மை­யான பகு­தி­களை கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருந்த விடு­த­லைப்­பு­லி­களும் 13 ஆவது திருத்த சட்­டத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட தீர்வைக் காணும் விட­யத்­திலும் அக்­கறை காண்­பிக்­க­வில்லை.

இத்­த­கைய சூழ்­நி­லை­க­ளினால் இந்­திய–இலங்கை ஒப்­பந்­தத்தின் கீழான 13ஆவது திருத்த சட்டம் உரிய முறையில் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இன்றும் மாகா­ண­சபை முறைமை அமுலில் உள்­ள­போ­திலும் 13ஆவது திருத்த சட்­டத்தின் கீழான அதி­கா­ரங்கள் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­டாத நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது.

இத்­த­கைய நிலை­யில்தான் 2009ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. விடு­த­லைப்­பு­லி­களின் தலைமை அழிக்­கப்­பட்­ட­துடன் தமிழ் மக்­க­ளுக்கு பேரி­ழப்­புக்­களும் ஏற்­பட்­டது. இந்த இறுதி யுத்­தத்­தின்­போது இந்­தி­யா­வா­னது இலங்கை அர­சாங்­கத்­திற்கு பூரண ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கி­யி­ருந்­தது. இதனை அன்­றைய பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவும் அமைச்சர் பஷில் ராஜ­

ப­க் ஷவும் பகி­ரங்­க­மா­கவே தெரி­வித்­தி­ருந்­தனர். இந்­தி­யாவின் ஒத்­து­ழைப்பு இன்றேல் யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்­டு­வந்­தி­ருக்க முடி­யாது என்று அவர்கள் கூறி­யி­ருந்­தனர்.

இவ்­வாறு யுத்­தத்­திற்கு இந்­தியா ஆத­ரவு வழங்­கி­ய­போ­திலும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் விட­யத்தில் உரிய அழுத்­தங்­களை கொடுக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு தற்­போது மேலெ­ழுந்­தி­ருக்­கின்­றது.

இந்த நிலை­யில்தான் தமி­ழர்­களின் தாய­கப்­பூ­மி­யான வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் தமி­ழர்­களின் கையை­விட்டு சென்றால் இந்­தி­யாவின் பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யாகும் என்று தமிழ் தலை­வர்கள் தற்­போது கூறும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. உண்மையிலேயே இலங்கையைப் பொறுத்தவரையில் சீனாவின் ஆதிக்கம் என்பது அதிகரித்திருக்கின்றது. அம்பாந்தோட்டை துறைமுகமும் 15 ஆயிரம் ஏக்கர் காணியும் சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று கொழும்பு துறைமுகநகர் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.

இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகமாக அமையும் என்றே எதிர்வுகூறப்படுகின்றது. தற்போது தமிழ் தலைவர்கள் கூறுவதைப்போன்று தமிழர்களின் தாயகப்பூமியான வடக்கு, கிழக்கை பாதுகாப்பதற்கு இந்தியா அழுத்தங்களை கொடுக்கவேண்டும். தமிழ் தலைவர்களுடன் இணைந்து இந்தியா இதற்கான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும். இதன் மூலமே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதுடன் தனது நாட்டின் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்களையும் போக்க முடியும் என்பதை இந்தியா உணர்வது சாலச்சிறந்தது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-25#page-4

"எஜமானுக்கு விசுவாசமான நாய் நன்றாக வாலை ஆட்டும்." 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் வாழ்வையே (தமிழகம் உட்பட) சீரழிச்ச ஹிந்தியாவிடம் போய் தமிழர்களின் வாழ்வுரிமையை எதிர்பார்க்கும் முட்டாள்கள்.. ஹிந்திய எஜமான விசுவாசக் கூலிகளாவர். tw_angry::rolleyes:

2 hours ago, நவீனன் said:

1991 ஆம் ஆண்டு இந்­தியப் பிர­தமர் ராஜீவ் காந்தி படு­கொலை செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து ஈழத் தமிழர் விவ­கா­ரத்தில் இந்­தி­யாவின் நிலைப்­பா­டா­னது மாற்றம் கண்­டது.

ஏன் அதுக்கு முன்னாடி.. புளொட்டின் கப்பலைப் பிடிக்கேக்க.. மாற்றம் காணேல்லை ஆக்கும். 1987 இல் அமைதிப் படைன்னு வந்து கொலைப்படையாகேக்க மாற்றம் காணேல்லையாக்கும்.. அதுக்கு அப்புறம் 1989 இல் மாலைதீவு அடிக்க அனுப்பிட்டு போட்டுத்தள்ளேக்க... மாற்றம் காணேல்லையாக்கும்... 2000ம் ஆண்டு.. யாழ் குடாவை புலிகள் மீளக் கைப்பற்ற முயற்சித்த போது சந்திரிக்காவின் சிங்களப் படைகளை காக்க திருவனந்த புரத்தில் படைக்குவிப்பு செய்த போது மாற்றம் காணேல்லையாக்கும்.. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் முழுக்க முழுக்க முண்டு கொடுத்த போது மாற்றம் காணேல்லையாக்கும்.

ஹிந்தியாவின் நலனுக்காக.. ஹிந்தியா தமிழர்களின் வாழ்வுரிமையை சிதைத்ததும்.. சிதைப்பதுமே தான் தொடர் கதை. ஹிந்தியாவுக்கு நட்பா இருப்பதை விட எதிரியாக இருப்பது ஆபத்துக்குறைவானது. காரணம்.. ஹிந்திய எதிரிகள் ஹிந்தியாவை விடப் பலமானவர்கள். அவர்களின் அரவணைப்பாவது கிட்டும். :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இலங்கை ஒப்பந்தமுடிந்து 10 வருடங்களின் பின்பு( 1997ம் ஆண்டு), இந்தியாவின் வியட்னாம் என்ற தலைப்பில் அமைதிப்படையினை நடாத்திய இராணுவத் தளபதிகள், டிச்ஸிட் போன்றவர்களின் பேட்டி இந்திய ஊடகங்களில் வந்திருந்தது.

http://in.rediff.com/news/2000/mar/23lanka.htm

இதன் தமிழ் ஆக்கத்தின் ஒலி வடிவத்தை இங்கே கேட்கலாம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=15659

அதிலும் கர்கிரட் சிங்கின் பேட்டியினை வாசித்தால் , விடுதலைப்புலிகள் ஒழுங்காக ஆயூதங்களை ஒப்படைந்தது பற்றியும், ஈபி.ஆர்.எல்.எவ் அமைப்புக்கு றோ அயூதம் வழங்கி உள்ளதையும் அறியக்கூடியதாக இருக்கிறது.

The surrender took place. A token surrender. Yogi [Prabhakaran's representative] took his pistol and gave it. Then vehicle after vehicle the LTTE came, piled up the whole area with ammunition, guns. Bahut accha tha. Later on, all ran into trouble.

Why?

Because they did not stop arming the EPRLF [Eelam People's Revolutionary Liberation Front]. RAW was doing it, ministry of foreign affairs knew about it, Dixit knew about it, but they couldn't stop it. With the result that handing over arms by 21st of August came to a virtual standstill. And the whole thing took an ugly turn.

  • கருத்துக்கள உறவுகள்

What was Dixit's approach to your attempts to buy peace with LTTE?

Once he said, Shoot Prabhakaran, shoot Mahathiah. I said, Sorry I don't do that. Those were his orders. When they came to me at 12 o'clock at night for some work, he said shoot them. General, I have told you what I have ordered. I said, I don't take your orders. And we are meeting under a white flag, you don't shoot people under white flag.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

ஹிந்தியாவுக்கு நட்பா இருப்பதை விட எதிரியாக இருப்பது ஆபத்துக்குறைவானது. காரணம்.. ஹிந்திய எதிரிகள் ஹிந்தியாவை விடப் பலமானவர்கள். அவர்களின் அரவணைப்பாவது கிட்டும். :rolleyes:tw_angry:

அரவணைப்பை யாரும் தேடிய மாதிரி தெரியவில்லையே?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Jude said:

அரவணைப்பை யாரும் தேடிய மாதிரி தெரியவில்லையே?

ஒரு காலத்தில்.. திம்பு.. டெல்லின்னு.. கிடந்தவர்களை.. இப்ப ஓஸ்லோ.. ஜெனிவா.. நியோர்க்.. டோக்கியோ.. பாங்கொக்கின்னு.. பேச வைச்ச ஒரு தலைமை தமிழர்களுக்கு இருந்தது என்பதை தாங்கள் வசதியாக மறந்திட்டீர்கள் போல. 

ஆனால்.. எம்மவரின் காட்டிக்கொடுப்புக் குணம்.. குழி பறிக்கும் குணம்.. இழுத்து வீழ்த்தும் குணம்.. மக்கள் நலனுக்குள் சுயநலம்.. அதை எல்லாம் நாசம் பண்ணிட்டுது. :rolleyes:tw_angry:

இப்ப பழையபடி தங்கள் பொக்கட்டுக்களை நிரப்ப.. ஹிந்தியா.. டெல்லின்னு கிட்டு... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
On 4/25/2018 at 11:04 PM, nedukkalapoovan said:

ஒரு காலத்தில்.. திம்பு.. டெல்லின்னு.. கிடந்தவர்களை.. இப்ப ஓஸ்லோ.. ஜெனிவா.. நியோர்க்.. டோக்கியோ.. பாங்கொக்கின்னு.. பேச வைச்ச ஒரு தலைமை தமிழர்களுக்கு இருந்தது என்பதை தாங்கள் வசதியாக மறந்திட்டீர்கள் போல. 

முடிந்து போனதை நினைத்து நீங்கள் ஏங்குவதை நானும் ஏதோ இப்போது நடக்க வேண்டியது பற்றி நீங்கள் பயனுள்ளதாக எழுதியதாக நினைத்து விட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Jude said:

முடிந்து போனதை நினைத்து நீங்கள் ஏங்குவதை நானும் ஏதோ இப்போது நடக்க வேண்டியது பற்றி நீங்கள் பயனுள்ளதாக எழுதியதாக நினைத்து விட்டேன். 

வரலாறு முடிந்து போனது என்று விட்டு விட்டுத்தான்.. வரலாறாகாத இனமாகி நிற்கிறோம். வலி வடக்கு முழுவதும்.. சங்கமித்தை வந்த இடமாகி.. புத்த பெருமான் வாழ்ந்த இடமாகி விட்டிருக்குது.. சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளின் ஆக்கிரமிப்பின் பின். காரணம்.. நாம் வரலாற்றைப் புறக்கணித்ததும்.. தேவையான இடத்தில்.. அதன் தொடர்ச்சியைப் பேணாததும்.. பழைய தோற்றுப் போன கொள்கைகளில் தொங்கிக் கொண்டு கிடப்பதனாலுமாகும். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 26.4.2018 at 8:04 AM, nedukkalapoovan said:

ஒரு காலத்தில்.. திம்பு.. டெல்லின்னு.. கிடந்தவர்களை.. இப்ப ஓஸ்லோ.. ஜெனிவா.. நியோர்க்.. டோக்கியோ.. பாங்கொக்கின்னு.. பேச வைச்ச ஒரு தலைமை தமிழர்களுக்கு இருந்தது என்பதை தாங்கள் வசதியாக மறந்திட்டீர்கள் போல. 

ஆனால்.. எம்மவரின் காட்டிக்கொடுப்புக் குணம்.. குழி பறிக்கும் குணம்.. இழுத்து வீழ்த்தும் குணம்.. மக்கள் நலனுக்குள் சுயநலம்.. அதை எல்லாம் நாசம் பண்ணிட்டுது. :rolleyes:tw_angry:

இப்ப பழையபடி தங்கள் பொக்கட்டுக்களை நிரப்ப.. ஹிந்தியா.. டெல்லின்னு கிட்டு... :rolleyes:

அருமையான.... பதில் நெடுக்ஸ். :grin:
இன்னும்... திருந்தாத ஜென்மங்கள் இவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nedukkalapoovan said:

.. பழைய தோற்றுப் போன கொள்கைகளில் தொங்கிக் கொண்டு கிடப்பதனாலுமாகும். :rolleyes:

...பழைய  தோற்றுப் போன கொள்கைகளில்  ...  தனி நாடு அடங்காதோ?

 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/25/2018 at 11:04 PM, nedukkalapoovan said:

ஒரு காலத்தில்.. திம்பு.. டெல்லின்னு.. கிடந்தவர்களை.. இப்ப ஓஸ்லோ.. ஜெனிவா.. நியோர்க்.. டோக்கியோ.. பாங்கொக்கின்னு.. பேச வைச்ச ஒரு தலைமை தமிழர்களுக்கு இருந்தது என்பதை தாங்கள் வசதியாக மறந்திட்டீர்கள் போல. 

பயங்கரவாதத்தை அழிப்பது பற்றி அமெரிக்காவின் தலைமையில் இணைத்தலைமை நாடுகள் எடுத்த முயற்சி அது. நியு யார்க் மற்றும் டோக்கியோ விற்கு நீங்கள் குறிப்பிடும் தலைமை அழைக்க படாமல் பின்னர் இந்த நாடுகள் இனைத்து ஸ்ரீ லங்கா அரசு இந்த தலைமையை அழிக்க உதவியதை நீங்கள் வசதியாக மறந்து விட்டீர்கள். தம்மை அழிப்பதற்கு உலக வல்லரசுகளை ஒன்றிணைத்த தலைமையை சிறப்பான ராஜதந்திரமுள்ள தலைமை என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Jude said:

...பழைய  தோற்றுப் போன கொள்கைகளில்  ...  தனி நாடு அடங்காதோ?

 

தனிநாடு.. இருந்த வரலாறு. அது கொள்கை அல்ல. யதார்த்தம்.. உரிமை..! அதை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் அந்த வரலாற்றுப் பூமிக்கும் மக்களுக்கும் இல்லை. முதலில் யதார்த்தம்.. கொள்கை இரண்டுக்கும் இடையில் உள்ள யதார்த்தம் அவசியம். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Jude said:

பயங்கரவாதத்தை அழிப்பது பற்றி அமெரிக்காவின் தலைமையில் இணைத்தலைமை நாடுகள் எடுத்த முயற்சி அது. நியு யார்க் மற்றும் டோக்கியோ விற்கு நீங்கள் குறிப்பிடும் தலைமை அழைக்க படாமல் பின்னர் இந்த நாடுகள் இனைத்து ஸ்ரீ லங்கா அரசு இந்த தலைமையை அழிக்க உதவியதை நீங்கள் வசதியாக மறந்து விட்டீர்கள். தம்மை அழிப்பதற்கு உலக வல்லரசுகளை ஒன்றிணைத்த தலைமையை சிறப்பான ராஜதந்திரமுள்ள தலைமை என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பயங்கரவாதிகளோடு எதுக்கு டோக்கியோ.. பாங்கொக்கின்னு பேசிக்கனும். நேரடியா அழிக்கிற வேலைக்கு இணைத்தலைமை நாடுகள் போயிருக்கலாமே. தலிபான்களோடு முட்டி மோதிக் கொண்டிருப்பது போல. 

பிரச்சனை.. இணைத்தலைமை நாடுகளின் பேரம்பேசலுக்கு போராளிகள் அடங்க மறுத்தது தான். அவர்கள்.. தங்கள் மக்கள்.. கொள்கை.. மண்ணை முன்னிறுத்தினார்கள்.

இலகுவான பூகோள இலக்கில்... அழிக்க வசதியாக அமைந்து விட.. அழிக்கப்பட்டார்கள். அதற்காக.. அவர்களின் அடிப்படை கொள்கைகள் தோற்றதாகாது.

ஆனால்.. ஆண்டாண்டு காலமாக ஹிந்தியாவின் வாலைப் பிடிச்சு.. இந்த அரசியல் வியாதிகள் சாதித்தது என்ன.. தோற்றுப் போன போலி ஒப்பந்தங்களை உருவாக்கி.. கிழித்தெறிந்து மக்களை ஏமாற்றி.. ஹிந்தியாவின் நலனை 100% பாதுகாக்க முற்பட்டமை தவிர வேறில்லை. இதுதான் தோற்றுப் போன பழைய கொள்கைகள். கடாசி வீசப்பட வேண்டியவை... அல்லது காலத்தேவைக்கு ஏற்ப மறுசீரமைக்கப்பட்டு.. பிற பன்னாட்டுச் சக்திகளின் நலன்களுக்கு சமாந்திரமாகக் கொண்டு செல்லப்பட வேண்டிவை. ஹிந்தியாவுக்கோ.. சொறீலங்காவுக்கோ.. அமெரிக்காவுக்கோ.. சரணடைவதன் வாயிலாக தமிழர்கள் எதனையும் பெற முடியாது. மீள மீள ஏமாற்றப்படுவதுதான் நிகழும். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Jude said:

பயங்கரவாதத்தை அழிப்பது பற்றி அமெரிக்காவின் தலைமையில் இணைத்தலைமை நாடுகள் எடுத்த முயற்சி அது. நியு யார்க் மற்றும் டோக்கியோ விற்கு நீங்கள் குறிப்பிடும் தலைமை அழைக்க படாமல் பின்னர் இந்த நாடுகள் இனைத்து ஸ்ரீ லங்கா அரசு இந்த தலைமையை அழிக்க உதவியதை நீங்கள் வசதியாக மறந்து விட்டீர்கள். தம்மை அழிப்பதற்கு உலக வல்லரசுகளை ஒன்றிணைத்த தலைமையை சிறப்பான ராஜதந்திரமுள்ள தலைமை என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

குரங்கிடம்  பங்கு பிரிக்கக்கொடுத்ததெல்லாம்  அருவரியிலேயே  படிச்சாச்சே

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

வயித்துக் குத்த நம்பினாலும் வடக்கத்தயானை நம்பக் கூடாது எண்டு இந்தியர் குறித்து இலங்கை முழுவதும் சொல்வார்கள்.  

காவிரி விசயத்தில் தமிழகமும் அதைதான் சொல்லுற நிலை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே கடி படுங்கோ.அங்கை மண் இலவசமாக தாரை வாக்கப்படுகுது. அதை தடுக்கிற விழியைப்பாருங்கோ முதலில்.:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.