Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தரின் புனித தாதுப் பொருள்கள் முதல் தடவையாக யாழ்.வருகை!!

Featured Replies

  •  
  • புத்தரின் புனித தாதுப் பொருள்கள் முதல் தடவையாக யாழ்.வருகை!!
 
புத்தரின் புனித தாதுப் பொருள்கள் முதல் தடவையாக யாழ்.வருகை!!

புத்த பெருமானின் ஒரு தொகை புனித தாதுப் பொருள்கள் யாழ்ப்பாண மண்ணுக்கு வரலாற்றில் முதல் தடவையாகக் கொண்டு வரப்பட்டு, யாழ்ப்பாண மக்களின் தரிசனத்துக்கு வைக்கப்படுகின்றன என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

கண்டி தலதா மாளிகையில் புத்த பகவானின் புனித தாதுப் பொருள்களில் ஒன்றான புனித பல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் தலதா மாளிகை மிகுந்த உயர்ந்த சிறப்பு பெற்று விளங்குகின்றது. அத்துடன் கண்டி மாவட்டமும் வனப்பும், செழிப்பும் நிறைந்ததாகக் காணப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாண மண் வனப்பும், செழிப்பும் நிறைய பெற்று மிளிர வேண்டும், யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை செழுமையும், செம்மையும் பெற வேண்டும் என்கிற ஒரேயொரு காரணத்துக்காக புத்த பகவானின் ஒரு தொகை புனித தாதுப் பொருள்களை யாழ்ப்பாண மண்ணுக்கு வரலாற்றில் முதல் தடவையாக கொண்டு வந்து யாழ்ப்பாண மக்களின் தரிசனத்துக்கு வைக்கின்றோம்.

இவை எதிர்வரும் 29, 30, 01 ஆம் திகதிகளில் வீரசிங்கம் மண்டபத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இவற்றைத் தரிசித்து யாழ்ப்பாண மக்கள் அனைத்து நன்மைகளைப் பெறலாம்.- என்றார்.

http://newuthayan.com/story/88368.html

புத்தனின் பல்லு என்று சுறாவின் பல்லுபோல் ஒன்றை வைத்திருக்கிறார்கள் .

அதை கொண்டு வந்து அவமானப்பட போறாங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கு சிங்கள ஆக்கிரமிப்பு இனப்படுகொலை இராணுவம் இதனை யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரனும். சிவில்.. சார்ந்த மத விடயங்களில் அந்தப் பிரதேசத்துக்கு சம்பந்தப்படாத விடயங்களை எதுக்கு சொறீலங்கா இராணுவம்.. திணிக்கிறது. இது அப்பட்டமான.. ஐநா விதிமுறை மீறல்.  தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பை சிங்களம் வலுப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கையாகவே தான் பார்க்க வேண்டும். :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

Bildergebnis für à®à®©à®¾à®¤à®¿à®ªà®¤à®¿ மாளிà®à¯à®¯à®¿à®²à¯ பà¯à®¤à¯à®µà®°à¯à® à®à¯à®£à¯à®à®¾à®à¯à®à®®à¯

ஐ.நா. என்ற அமைப்பை...  நெடுக்கால போவான், இன்னும் நம்பிக் கொண்டு இருப்பது தான், வேடிக்கை. 
இந்த... விடயத்துக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டியது...
சிறீலங்காவின்  எதிர்க் கட்சி  தலைவர்  சம்பந்தன்   மட்டுமே.... 

அவரே... ஜனாதிபதி மாளிகையில்பொத்திக்  கொண்டு....  "புக்கை"  சாப்பிடும்  போது...
ஐ,நா.வோ... நாமோ....  என்ன செய்ய முடியும்? :unsure:

Edited by தமிழ் சிறி

31 minutes ago, nedukkalapoovan said:

எதற்கு சிங்கள ஆக்கிரமிப்பு இனப்படுகொலை இராணுவம் இதனை யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரனும். சிவில்.. சார்ந்த மத விடயங்களில் அந்தப் பிரதேசத்துக்கு சம்பந்தப்படாத விடயங்களை எதுக்கு சொறீலங்கா இராணுவம்.. திணிக்கிறது. இது அப்பட்டமான.. ஐநா விதிமுறை மீறல்.  தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பை சிங்களம் வலுப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கையாகவே தான் பார்க்க வேண்டும். :rolleyes:tw_angry:

இந்த விடயம் அங்கு ள்ள தமிழ் அரசியல்வாதிகள் கதைக்கனும் அதுகள் கதைக்காமல் இருப்பதுக்கும் சேர்த்து காசு வாங்குதுகள் அப்பத்தான் 

இலங்கையின் முதல் இருபது பணக்காரராய்  வரமுடியும் .

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் நடமாடும் இடத்தில் தேரரின்  பிணத்தை எரியூட்டியதை தடுக்கமுடியவில்லை, புத்தரின் புனித பொருட்கள் காட்சிப்படுத்தபடுவதை எவராலும் தடுக்கும் சாத்தியமுண்டா?

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, spyder12uk said:

புத்தனின் பல்லு என்று சுறாவின் பல்லுபோல் ஒன்றை வைத்திருக்கிறார்கள் .

அதை கொண்டு வந்து அவமானப்பட போறாங்கள் .

நானும் பார்த்திருக்கிறேன் ...புத்தருடையதோ பூதத்தினுடையதோ தெரியவில்லை ...

  • கருத்துக்கள உறவுகள்

 ஒன்றொன்றாய் வந்து குடியேறி  எங்களின் நிலத்தை   ஆக்கிரமிக்கப்  போகுதுகள். அதற்கு முன்னோடி இது. ஏனுங்கோ யாழ்ப்பாணத்திலே கடவுள்களே இல்லையென்று இவர்களுக்கு யார் சொன்னது? ஏதோ ஒன்றுக்கு அடித்தளம் போடுகிறார்கள். இப்பபொறுங்கோ  எங்கட கொஞ்சம்அதை பாக்க என்று   படையெடுக்கும்.இல்லை என்றால் கூட   எங்கட டக்கியார் வீடு  தாறோம், சைக்கிள் தாறோம் என்று ஒரு கூட்டத்தை கூட்டி  வெயிலில நிக்க வைச்சு ஒரு படம் பிடிச்சு காட்ட  மாட்டாரா என்ன?  அதை வைத்தே அவன் ஒரு சரித்திரம் எழுதிபிரச்சாரமும் செய்து   முடிப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சங்கமித்தை முதல் முதல் யாழ்ப்பாணம் வர‌வில்லையா......

ஆயுத படை மூலம் எல்லா மதங்களும் அந்த மண்ணில் பரவி விட்டது.....நாம் முடிந்தால் புத்தருக்கு பால் அபிசேகம் செய்ய வேண்டும்....புத்தருக்கு ஒரு தேவாரம் ,பஞ்சபுராணம் இயற்ற வேண்டும்.....புத்தரை நம்ம ஆளா மாற்றுவதில் தான் எமது வெற்றி தங்கியிருக்கு.....இந்தியாவில் மூலை முடுக்கில் உள்ள சாமிகளை எல்லாம் நாம் தலையில் வைத்து முதல் மரியாதை செய்யும் பொழுது ஏன் புத்தருக்கு முதல் மரியாதை செலுத்த முடியாது...

இன்று புலம் பெயர்ந்த பிரதேசத்தில்  சாய்பாபா எம்மவர்களின் குலதெய்வம்.....சாய்பாபாவை நாம் தெய்வமாக ஏற்றுக்கொள்ளமுடியும் என்றால் புத்தரை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ளலாம் நாம்மவர்களும் வாழலாம் ....என்பது அடியேனின் கருத்து 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

அப்படியே அசைலம் அடிச்ச நாடுகளில் அந்தந்த மொழி படித்துப் பேசி அதில் பெருமை கண்டு அடிமையாக வாழ்வது போல.. சொறீலங்காவில் சிங்களம் படிச்சு பெருமை பேசி சிங்களவராகவே வாழ்ந்திட்டால்.. என்ன ஒரு சரணடைவு.. அடிமை வாழ்வு.. அதில்.. நல்ல.. அமைதி.. நிம்மதி எல்லாம்.. பிறக்கும். tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, nedukkalapoovan said:

அப்படியே அசைலம் அடிச்ச நாடுகளில் அந்தந்த மொழி படித்துப் பேசி அதில் பெருமை கண்டு அடிமையாக வாழ்வது போல.. சொறீலங்காவில் சிங்களம் படிச்சு பெருமை பேசி சிங்களவராகவே வாழ்ந்திட்டால்.. என்ன ஒரு சரணடைவு.. அடிமை வாழ்வு.. அதில்.. நல்ல.. அமைதி.. நிம்மதி எல்லாம்.. பிறக்கும். tw_blush::rolleyes:

எழுச்சியின் புதல்வர்கள் மறைந்த பின்பு எமக்கு இருக்கும் ஒரே தெரிவு சரணடைவு என்பது எனது கருத்து......தக்கன தப்பி பிழைக்கும்....சைவத்தை ஏற்றோம் ,கிறிஸ்த்தவத்தை ஏற்றோம் ,இஸ்லாத்தை ஏற்றோம் பெளத்தத்தையும் ஏற்று வாழ்வோம்....தமிழை காப்பாற்ற விக்டர்கள் உருவானது போன்று காலங்கள் செல்ல பண்டாவும் தமிழை காப்பாற்ற உருவாக சந்தர்ப்பம் உண்டு  all part of gametw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 4/28/2018 at 4:25 AM, அக்னியஷ்த்ரா said:

நானும் பார்த்திருக்கிறேன் ...புத்தருடையதோ பூதத்தினுடையதோ தெரியவில்லை ...

புத்தர் மரணிக்கும் போது அவருக்கு வயது எண்பது என்று கூறப்படுகின்றது!

அவர் வாழ்ந்த காலத்தில்....வாழ்ந்தவர்களின் சராசரி ஆயுட்காலம் எழுபத்தைந்து என்று எடுத்துக்கொண்டாலும்...அப்போது எத்தனை பற்கள் அவருக்கு இருந்திருக்கும் அல்லது எவ்வளவு தலைமயிர் அவருக்கு இருந்திருக்கும் என்பதை....அறிவுள்ளவர்களால் ஓரளவுக்கு அனுமானிக்க முடியும்!

அத்துடன் புத்தர் இறந்த பின்னர்...வாரணாசியில் எரியூட்டப் பட்டதாகவும் கூறப்படுகின்றது!

சிகிரியாவில்...அவரது தலைமயிரும்....தலதாவில் அவரது பல்லும் உள்ளன . அவை தான் அவர் உயிருடன் வாழ்ந்த போது எடுக்கப் பட்டன எனினும் அவரது எலும்புகளும் சில விகாரைகளில் உள்ளன என்று கூறப்படுகின்றன!

அவரது எலும்புகள் கூட அவர் உயிரோடு இருக்கும் போது...எடுக்கப்பட்டனவா என்பது தான் புரியாத புதிராக உள்ளது!

சங்கமித்தை இலங்கைக்கு வரும்போது.......அவரது தலை முடிக்குள் ..மறைத்துப் பல்லைக் கொண்டு வந்தார் என்று கூறப்படுகின்றது!

மொட்டையடிக்கப் பட்ட பிக்குணிகள்....எவ்வாறு தலை முடிக்குள்....அந்தப் பெரிய பல்லை மறைத்துக் கொண்டு வந்திருக்க முடியும்?

விக்கியில் சங்கமித்தையின் படம் இவ்வாறு தான் உள்ளது!

250px-Arhat_Sangamitta_Theri.jpg

பிற்குறிப்பு:

புத்தரின் பல் உண்மையில்...கலிங்க மன்னனின் மகளாலும், அவரது மருமகனாலும்...இந்தியாவிலிருந்து களவாகக் கொண்டுவரப்பட்டதாக,........விக்கியில் இன்னுமொரு தகவலும் உள்ளது!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்
On 4/27/2018 at 9:07 PM, நவீனன் said:

யாழ்ப்பாண மண் வனப்பும், செழிப்பும் நிறைய பெற்று மிளிர வேண்டும், யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை செழுமையும், செம்மையும் பெற வேண்டும் என்கிற ஒரேயொரு காரணத்துக்காக புத்த பகவானின் ஒரு தொகை புனித தாதுப் பொருள்களை யாழ்ப்பாண மண்ணுக்கு வரலாற்றில் முதல் தடவையாக கொண்டு வந்து யாழ்ப்பாண மக்களின் தரிசனத்துக்கு வைக்கின்றோம்.

 அதுக்கு இத்துப்போன புத்தரின் பல்லு வரத்தேவையில்லை. அதை வைத்து நீங்களே வனப்பும், செழிப்பும் பெறுங்கோ. எங்கட மண்ணை விட்டு நீங்கள் வெளியேறினாலே எங்கட மண் வனப்பும், செழிப்பும் பெற்று பூத்துக் குலுங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புங்கையூரன் said:

பிற்குறிப்பு:

புத்தரின் பல் உண்மையில்...கலிங்க மன்னனின் மகளாலும், அவரது மருமகனாலும்...இந்தியாவிலிருந்து களவாகக் கொண்டுவரப்பட்டதாக,........விக்கியில் இன்னுமொரு தகவலும் உள்ளது!

அந்தகாலத்தில் இந்தியாவிலிருந்து பல் கடத்தினார்கள்...இப்ப கஞ்சா கட‌த்துகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
On 4/29/2018 at 4:13 AM, புங்கையூரன் said:

புத்தர் மரணிக்கும் போது அவருக்கு வயது எண்பது என்று கூறப்படுகின்றது!

அவர் வாழ்ந்த காலத்தில்....வாழ்ந்தவர்களின் சராசரி ஆயுட்காலம் எழுபத்தைந்து என்று எடுத்துக்கொண்டாலும்...அப்போது எத்தனை பற்கள் அவருக்கு இருந்திருக்கும் அல்லது எவ்வளவு தலைமயிர் அவருக்கு இருந்திருக்கும் என்பதை....அறிவுள்ளவர்களால் ஓரளவுக்கு அனுமானிக்க முடியும்!

அத்துடன் புத்தர் இறந்த பின்னர்...வாரணாசியில் எரியூட்டப் பட்டதாகவும் கூறப்படுகின்றது!

சிகிரியாவில்...அவரது தலைமயிரும்....தலதாவில் அவரது பல்லும் உள்ளன . அவை தான் அவர் உயிருடன் வாழ்ந்த போது எடுக்கப் பட்டன எனினும் அவரது எலும்புகளும் சில விகாரைகளில் உள்ளன என்று கூறப்படுகின்றன!

அவரது எலும்புகள் கூட அவர் உயிரோடு இருக்கும் போது...எடுக்கப்பட்டனவா என்பது தான் புரியாத புதிராக உள்ளது!

சங்கமித்தை இலங்கைக்கு வரும்போது.......அவரது தலை முடிக்குள் ..மறைத்துப் பல்லைக் கொண்டு வந்தார் என்று கூறப்படுகின்றது!

மொட்டையடிக்கப் பட்ட பிக்குணிகள்....எவ்வாறு தலை முடிக்குள்....அந்தப் பெரிய பல்லை மறைத்துக் கொண்டு வந்திருக்க முடியும்?

விக்கியில் சங்கமித்தையின் படம் இவ்வாறு தான் உள்ளது!

250px-Arhat_Sangamitta_Theri.jpg

பிற்குறிப்பு:

புத்தரின் பல் உண்மையில்...கலிங்க மன்னனின் மகளாலும், அவரது மருமகனாலும்...இந்தியாவிலிருந்து களவாகக் கொண்டுவரப்பட்டதாக,........விக்கியில் இன்னுமொரு தகவலும் உள்ளது!

நீங்க வேற புங்கை 
இன்னும் சிங்கத்திற்கும் மனிதப்பெண்ணுக்கும் பிறந்த இனம் தான் நாங்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் பொய் வம்ச  கூட்டத்திற்கு 
இதெல்லாம் பெருசா என்ன ....?
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தர்! என்பவர் நடு இராத்திரியில் தனது மனைவியையும் பிள்ளையையும் விட்டுட்டு  ஓடியவர். :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.