Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் சிறுமி காயங்களுடன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

Featured Replies

யாழில் சிறுமி காயங்களுடன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

 

 
 

யாழ்ப்பாணம் சுளிபுரம் பகுதியில் ஆறு வயது சிறுமியொருவர் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

36187829_1135743013243733_43499882322434

இச் சம்பவமானது சுளிபுரம் காட்டுபுலம் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் சிவநேஸ்வரன் றெஜீனா என்ற 06 வயது சிறுமியே சடலமாக மீட்கப்பட்டவராவர்.

வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள தோட்ட கிணறு ஒன்றிக்குள் உள்ளாடை மாத்திரம் காணப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

அவரது உடலில் கழுத்தானது நெரிக்கப்பட்ட நிலையிலும், நெற்றி பகுதியில் காயங்கள் காணப்படுவதாக பொரிஸார் தெரிவித்தனர்.

36281690_1135743006577067_65393572860773

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். 

மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என ஊர் மக்களால் அடையாளப்படுத்தப்பட்ட நான்கு பேரை வட்டுக்கோட்டை பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/35551

  • தொடங்கியவர்

6 வயதுச் சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை!! – சுழிபுரத்தில் அதிர்ச்சி!

சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

35296476_1906997759356552_49779220888252
 
 
 
 

பாடசாலையில் இருந்து வந்த 6 வயதுச் சிறுமி கிணற்றில் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டார். யாழ்ப்பாணம், சுழிபுரத்தில் இன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சிவநேஸ்வரன் றெஜீனா (வயது-6) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

அவரது பாடசாலைச் சீருடையற்ற நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. சிறுமி அணிந்திருந்த தோடுகளும் காணாமல் போயுள்ளன. சிறுமியின் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டது போன்ற அடையாளம் காணப்படுகின்றது. உடல் நகக் கீறல்கள் காணப்படுகின்றன.

சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

36046207_1906998012689860_1393978021563536087521_1906997649356563_56808881092401asdasdasd.jpgIMG-1265.jpg

http://newuthayan.com/story/23/6-வயதுச்-சிறுமி-கழுத்து-நெரிக்கப்பட்டுக்-கொலை-சுழிபுரத்தில்-அதிர்ச்சி.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

யாழ். சுழிபு­ரத்தில் 6 வயது சிறுமி கிணற்­றி­லி­ருந்து சட­ல­மாக மீட்பு : சந்­தே­கத்தின் பேரில் நான்கு பேர் கைது

city-01GMGPage1Image0017-66a4aa195e916edd58ce23a35ce9551cd534a2ca.jpg

 

(ரி.விரூஷன்)

யாழ்ப்­பாணம் சுழி­புரம் பகு­தியில் ஆறு வயது சிறுமி­யொ­ருவர் உடலில் காயங்க­ளுடன் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்ளார். குறித்த சிறுமி கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கலாம் என்று  சந்­தே­கிக்­கப்­ப­டு­வ­துடன் சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் நான்கு பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக வட்­டுக்­கோட்டை பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். 

இச் சம்­ப­வ­மா­னது சுழிபுரம் காட்­டு­புலம் பகு­தியில் இடம்­பெற்­றுள்­ள­துடன் சிவ­நேஸ்­வரன் றெஜீனா என்ற 6 வயது சிறு­மியே சட­ல­மாக மீட்­கப்­பட்­ட­வ­ராவர்.

இச் சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

காட்­டுப்­புலம் அ.த.க பாட­சா­லையில் தரம் 1 இல் கல்வி கற்கும் சிறுமி பாட­சாலை முடி­வ­டைந்து நண்­பகல் 12.30 மணி­ய­ளவில் வீட்­டிற்கு சென்­றுள்ளார். இதன்­போது இச் சிறு­மியின் பெற்றோர் கூலி வேலைக்கு சென்­றி­ருந்­தனர்.

சிறு­மியின் ஏனைய சகோ­த­ரர்கள் பாட­சாலை முடி­வ­டைந்து வீட்­டிற்கு வந்து பார்த்த போது குறித்த சிறு­மி­யான அவர்­க­ளது சகோ­தரி இல்­லா­மையால் அவரை தேடி­யுள்­ளனர். உற­வினர் வீடு­க­ளிலும் சகோ­தரி இல்­லா­மையால் பதற்­ற­ம­டைந்த அவர்கள் சகோ­த­ரியை வேறு இடங்­களில் தேடத் தொடங்­கி­யி­ருந்­தனர். ஊர் மக்­களும் சேர்ந்து தேடி­யி­ருந்­தனர்.

இதன் போது பாட­சாலை வீட்­டிற்கு சற்று தொலைவில் உள்ள தோட்ட கிணறு ஒன்­றிக்குள் உள்­ளாடை மாத்­திரம் காணப்­பட்ட நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்ளார். மாலை 3.40 மணி­ய­ள­வி­லேயே அவர் சட­லா­மக மீட்­கப்­பட்­டி­ருத்தார்.

அவ­ரது உடலில் கழுத்­தா­னது நெரிக்­கப்­பட்ட நிலை­யிலும், நெற்றி பகு­தியில் காயங்கள் காணப்­பட்ட நிலை­யி­லு­மேயே சட­லா­மக மீட்­ட­கப்­பட்­டுள்ளார்.

இத­னை­ய­டுத்து சம்­பவம் தொடர்­பாக வட்­டுக்­கோட்டை பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து சம்­பவ இடத்­திற்கு விரைந்த பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

பொலி­ஸா­ரது தட­ய­வியல் பிரிவு பொலிஸார் மற்றும் மோப்ப நாய் சகிதம் பொலிஸார் விசா­ர­ணை­களை தீவி­ரப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். அத்­துடன் மல்­லாகம் நீதிவான் நீதி­மன்ற நீதி­வானும் சம்­பவம் தொடர்பில் நேரில் சென்று விசா­ர­னை­களை மேற்­கொண்­டி­ருந்தார். எனினும் சிறு­மியின் பாட­சாலை சீருடை, பாதனி, மேல் உள்­ளாடை எதுவும் மீட்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என ஊர் மக்களால் அடையாளப்படுத்தப்பட்ட நான்கு பேரை வட்டுக்கோட்டை பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-26#page-1

சில செய்திகளை வாசிக்கும் போது ஆயுதங்களை மௌனித்தபின்னரும் கைகள் துடிக்கின்றன.

கையகலாத்தனம் மனவழுத்தமாக மாறிக்கொண்டிருக்கிறது.

  • தொடங்கியவர்

அன்று சாளினி- இன்று ரெஜினா- நாளை யார்?- மாணவர்கள், மக்கள் ஆர்ப்பாட்டம்- சுழிபுரத்தில் பதற்றம்!!

3-4.jpg
 
 
 

”கோரப் படுகொலைக்கு நீதி வேண்டும், கொலைகாரர்களைத் தூக்கிலிட வேண்டும்” என்ற கோசத்துடன் – சுழிபுரத்தில் பாடசாலை மாணவியான 6 வயதுச் சிறுமி றெஜினா படுகொலை செய்யப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்து,  சுழிபுரத்தில் சற்றுமுன்னர் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாடசாலை முன்பாக மாணவர்கள், மக்கள் திரண்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய சிவ­நேஸ்­வ­ரன் றெஜீனா (வயது-6) என்ற சிறு­மியே உயி­ரி­ழந்­துள்­ளார்.

 

றெஜீனா சுழி­பு­ரம், காட்­டுப்­பு­லம் அர­சி­னர் தமிழ்க் கல­வன் பாட­சா­லை­யில் கற்­கின்­றார். தரம் 6 இல் கற்­கும் இவர் நேற்று மதி­யம் பாட­சா­லை­யில் இருந்து திரும்­பி­னார். றெஜீ­னா­வின் தாய் சமுர்த்தி வங்­கிக்­குச் செல்ல வேண்­டி­யி­ருந்­தது. அங்கு சென்­று­விட்டு பிற்­ப­கல் 3 மணிக்கு திரும்­பி­ய­போது றெஜீ­னா­வைக் காண­வில்லை.

தனது சகோ­த­ரி­யின் வீட்­டுக்­குச் சென்­றி­ருக்­க­லாம் என்று நினைத்த றெஜீ­னா­வின் தாய் அங்கு சென்­றார். அங்­கும் றெஜீனா இல்லை. உற­வி­னர்­க­ளும், அய­ல­வர்­க­ளும் றெஜீ­னா­வைத் தேடத் தொடங்­கி­னர்.
நீண்ட நேரத் தேடு­த­லின் பின்­னர் கிண­றொன்­றில் சிறு­மி­யின் உடல் இறுப்­பது அறி­யப்­பட்­டது. இது தொடர்­பில் வட்­டுக்­கோட்­டைப் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது.

வட்­டுக்­கோட்­டைப் பொலி­ஸார் உட­ன­டி­யா­கச் சம்­பவ இடத்­துக்கு வந்­த­னர். கிணற்­றுக்­குள் இருந்து சிறு­மி­யின் உடல் வெளியே எடுக்­கப்­பட்­டது. சிறு­மி­யின் பாட­சா­லைச் சீரு­டை­யைக் காண­வில்லை. சட­லம் உள்­ளா­டை­யு­டன் மட்­டும் இருந்­தது. காதில் இருந்த தோடு­க­ளை­யும் காண­வில்லை. சிறு­மி­யின் கழுத்­தில் கயிற்­றால் இறுக்­கி­யது போன்ற அடை­யா­ளம் தெரிந்­தது.

சிறுமி கொலை செய்­யப்­பட்­டி­ருக்­க­லாம் என்று சந்­தே­கித்த பொலி­ஸார் துரித விசா­ர­ணை­களை நடத்­தி­னர். அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­க­ளி­டம் வாக்­கு­மூ­லங்­கள் பெறப்­பட்­டன. சந்­தே­கத்­தின் அடிப்­டை­யில் நான்கு பேரைக் கைது செய்­த­னர்.

இந்­தச் சம்­ப­வம் அந்­தப் பகு­தி­யில் சோகத்­தை­யும், அதிர்ச்­சி­யை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

2-6-300x170.jpg1-11-300x170.jpg4-3-300x170.jpg

http://newuthayan.com/story/12/அன்று-சாளினி-இன்று-ரெஜினா-நாளை-யார்-மாணவர்கள்-மக்கள்-ஆர்ப்பாட்டம்-சுழிபுரத்தில்-பதற்றம்.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சுழிபுரம் சிறுமி கொலை- சந்தேகநபர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்- பாடசாலை சீருடையை நெருப்பில் எரித்த கொடுமை!!

 

 

UNSET-2-750x430.jpg

 
 
 

”சிறுமியை கொலை செய்த பின்னர், அவளது பாடசாலை சீருடையை நெருப்பில் எரித்தேன். தோடுகளைத் திருடுவதற்காகவே அவளைக் கொலை செய்தேன்” என்று சுழிபுரம் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் என அறியமுடிகிறது.

சந்தேகநபர்களில் ஒருவர் ஒருவன் மனநோயாளியைப் போல நடிக்கிறார். சிறுமியைக் கொலை செய்ததை ஒப்புக் கொள்கிறார். ஆனால் சரியான காரணத்தைக் கூறவில்லை என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுழிபுரம் காட்டுப்புலம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி றெஜீனா நேற்று மாலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அவரது கழுத்தில் கீறல் காயங்கள் இருந்தமையால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டது.

 

தீவிர விசாரணைகளை நடத்திய பொலிஸார், சிறுமியின் சிறிய தந்தை உள்ளிட்ட நால்வரைக் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தினர். இன்று காலை மேலும் இருவரைக் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரை ஆறுபேர் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சந்தேகநபர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதான சந்தேகநபர், கொலையை புரிந்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். தான் மட்டுமே இந்தக் கொலையைச் செய்ததாகத் தெரிவித்துள்ளார். மனநோயாளி போல தன்னை காட்டி, நடிக்கிறார் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://newuthayan.com/story/13/சுழிபுரம்-சிறுமி-கொலை-சந்தேகநபர்கள்-அதிர்ச்சி-வாக்குமூலம்-பாடசாலை-சீருடையை-நெருப்பில்-எரித்த-கொடுமை.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

குற்றங்களுக்கு.. கடும் தண்டனை கிடைக்கும்.. என்ற பயம் விட்டுப் போச்சு. குற்றங்களை செய்துவிட்டு இலகுவாகத் தப்பிக்கலாம்.. என்ற நம்பிக்கையூட்டலை.. ஆக்கிரமிப்பாளர்கள் வழங்குவதால்.....

கிருசாந்தி.. வித்தியா.... என்று தொடர்ந்து கிட்டே இருக்குது. 

  • தொடங்கியவர்

றெஜீனாவுக்கு நீதிகோரி யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

20180626_134818-750x430.jpg
 
 
 
 

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட றெஜீனாவுக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக ஒன்று கூடியுள்ள சுழிபுரம், காட்டுப்புலம் அரசினல் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

”நீதித்துறையே மௌனமா? , கொலைகாரருக்கு உடந்தையா?, நேற்று வித்தியா இன்று ரெஜினா நாளை யாரோ, கஞ்சா ஒழிகா, இலஞ்சம் வாங்காதே”
 
போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
 

ஆர்பாட்டத்தைத் தொடர்ந்து, மாவட்டச் செயலரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.

20180626_134930.jpg

20180626_135713.jpg

20180626_134318-1.jpg

20180626_134312.jpg

20180626_134210.jpg

20180626_134206.jpg

20180626_133939.jpg

20180626_134318.jpg

20180626_134930-1.jpg

20180626_135034.jpg

20180626_135218.jpg

20180626_135614.jpg

http://newuthayan.com/story/13/றெஜீனாவுக்கு-நீதிகோரி-யாழ்-மாவட்டச்-செயலகம்-முன்பாக-ஆர்ப்பாட்டம்-ஆரம்பம்.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

Untitled.bmp

-பாறுக் ஷிஹான்-
சிறுமியைக் கொலை செய்தது தான் மட்டுமே என ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். 
ஆனால் சரியான காரணத்தை கூறாமல் மாறுபட்ட தகவல்களை வழங்கி அவர் மன நோயாளி போல் நடிக்கிறார்” என்று வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இன்று(26) செவ்வாய்க்கிழமை காலை வரை 6 பேர் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் கூறினர்.

சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜீனா (வயது – 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை (25) மாலை சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவத்தையடுத்து சிறுமியின் உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சிறுமியின் சிறிய தந்தை உள்பட நால்வர் பொலிஸார் அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர்.

“சந்தேகநபர்கள் நால்வரும் நேற்றிரவு முதல் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர். அவர்களில் பிரதான சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டவர், சிறுமியைக் கொலை செய்தது தான் மட்டுமே என்று ஒத்துக்கொண்டார்.

அது தொடர்பில் சம்பவ இடத்துக்கு சந்தேகநபரை அழைத்துச் சென்று இன்று அதிகாலைவரை விசாரணை நடத்தப்பட்டது.

சிறுமியின் ஆடைகளை எரித்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

“தோடுகளை திருடவே சிறுமியைக் கொலை செய்தேன், போதையில் கொலை செய்துவிட்டேன், விரோதம் காரணமாக கொலை செய்தேன்” என்று மாறுபட்ட தகவல்களை வழங்கி பிரதான சந்தேகநபர் மனநோயாளி போன்று நடிக்கிறார்.


தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்றன. உண்மை வரவழைக்கப்பட்ட பின்னர் சம்பவத்துடன் தொடர்புடையோர் கைது செய்யப்பட்டு நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவார்கள்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

www.madawalaenews.com

  • கருத்துக்கள உறவுகள்

காது தோடுகளுக்காக முடிக்கப்பட்ட, சிறுமியின் ஆயுள் - கஞ்சா அடிக்கும் 4 பேர் கைது

 
36048299_2173333462888133_4743195799612030976_n.jpg
 
எப்போதும் துடிப்புடன் பறந்து திரிந்த இந்த அழகிய சிட்டு குருவியின் ஆயுள் முடிக்கப்பட்டது. இவள்தான் பாடசாலையில் நற்சிந்தனை சொன்னாள்..
 
துடிப்பானவள்... நல்லா படிப்பாள்.. எப்போதும் இவள் சுத்தமான ஆடை அணிந்து வருவாள்... அனைத்து ஆசிரியர்களுக்கும் இவளில் ஒரு கண் இருந்தது.... இப்படிச் சொல்லிக் கலங்குகிறார் இவளது பாடசாலை அதிபர்... இவளது வகுப்பாசிரியை சம்பவத்தைக் கேள்விப்பட்டு இடிந்துபோனார்...
 
இவளை நல்லவளாக உருவாக்கவேண்டும் என்பதற்காக பெற்றோர் 10 கிலோமீற்றர் தூரத்தில் - சங்கானையில் உள்ள பட்டர்பிளை முன்பள்ளியில் சேர்த்தனர்... அங்கும் இவள் சுட்டித்தனம்....
 
நடிப்பிலும் அவள் கெட்டிக்காரி.... பாடசாலையில் நாடகங்களிலும் நடித்தாள்... நடனம் ஆடினாள்...
 
இவளது எதிர்காலம் சிறப்பானதாக மாறும் என தாங்கள் நம்பியிருந்தனர் என இவளைக் கற்பித்த ரியூசன் ஆசிரியைகள் கூறுகின்றனர்...
 
வீட்டில் இவள் கடைக்குட்டி... பெற்றோர் எத்தகைய அன்பு, பாசம் வைத்திருந்தனர் என்பதை அவர்கள் படுகின்ற வேதனை.. அவர்களின் கதறல் வெளிக்காட்டுகின்றது...
 
இப்படிப்பட்ட சிட்டுக் குருவியின் கழுத்தை ஏன் நெரித்தார்கள்.... இந்தக் குழந்தையைக் கொல்வதற்கு என்ன தேவை அவர்களுக்கு இருந்தது...?
 
வேறு யாரும் இல்லை.... எமது ஊரில் உள்ள காவாலிகள் சிலர் தான் இதைச் செய்திருப்பார்கள்... தினமும் கஞ்சா பயன்படுத்தும் சிலர் இங்கு இருக்கின்றனர்.... அவர்கள்தான் இதைச் செய்திருப்பார்கள் என ஊரில் உள்ள சிலர் கூறுகின்றனர்....
 
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைத் தடுப்பதற்கு நாட்டில் நல்ல சட்டம் இல்லை... இதனால்தான் அவர்கள் இப்படியான வேலைகளைச் செய்கின்றனர் என சிறுமியின் உறவினர்கள் கூறிக் கவலைப்படுகின்றனர்...
 
இன்று எங்கள் பிள்ளை.... நாளை எந்தப் பிள்ளையோ.... என அவர்கள் ஏங்குகின்றனர்...
 
ஊரவர்கள் அடையாளப்படுத்திய நான்கு பேர் பொலிஸாரால் விசாரணை என்ற பேரில் அழைத்துச் செல்லப்பட்டனர்....
 
வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் தனது சொந்தக் காரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தார்... விசாரணை மேற்கொண்டு உயர் பொலிஸ் அதிகாரிகளை வரவழைத்தார்.... நீதிவான் வந்தார்...
 
வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி இரவு 10 மணிக்கு மேலும் அவர் அந்த இடத்திலேயே நின்று விசாரணைகளை மேற்கொண்டார்... தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்... மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது....
 
பொலிஸார் விசாரணை செய்யலாம்... குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கலாம்... முடிவில் நடக்கப்போவது ஒன்றுமில்லை.... குற்றவாளிகளை உரிய வகையில் தண்டிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை...
 
முதலில் இலங்கையின் சட்டத்தை மாற்றுங்கள்.. கொலைக்கு கொலைதான் தண்டனை... குற்றவியல் சட்டத்தை இப்படித் திருத்துங்கள்... அப்போதுதான் சிட்டுக் குருவிகள் இந்த நாட்டில் சுதந்திரமாய்ச் சிறகடிக்க முடியும்.
 
சுழிபுரம் – காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் கல்வி கற்கும் தரம் ஒன்று மாணவி சிவநேஸ்வரன் றெஜினா {வயது-06} கொலை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
 
கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டமைக்கான அடையாளம் காணப்படுகின்றது. மாணவியின் தோடும் களவாடப்பட்டுள்ளது.
 
பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த பின்னர் பாடசாலைச் சீருடையுடன் சிறுமி காணாமற்போனார்.
 
தாயும் தந்தையும் வேலையின் நிமித்தம் {கூலி வேலை} வெளியே சென்றிருந்தனர்.
 
அந்த இடத்தில் வட்டுக்கோட்டை பொலிஸ் விசாரணை.
 
மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் இரவு 7.00 மணியளவில் சம்பவ இடத்திற்கு வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
 
சந்தேகத்தின் அடிப்படையில் விசார ணகளை மேற்கொள்வதற்காக அப்பகுதியைச் சேர்ந்த 04 பேர் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
 
சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
 
 
  • தொடங்கியவர்

கயிறு இறுக்கி மூச்சடங்கிய சிறுமி- மருத்துவ அறிக்கையில் தகவல்- றெஜீனாவின் உடல் உறவினர்களிடம்!!

 

 

FB_IMG_1526727516711-16.jpg

 
 
 
 

சுழிபுரம் மாணவி றெஜீனா கயிறு இறுக்கி மூச்சிறுக்கியதாலே உயிரிழந்தார் என்று உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் உடல் சற்றுமுன்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சிவனேஸ்வரன் றெஜீனா (வயது 6) கிணற்றிலிருந்து நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

 

சட்ட வைத்திய அதிகாரி தலைமையில் சிறுமியின் உடற்கூற்றுப் பரிசோதனைகள் இன்று நடைபெற்றது.

“சிறுமியின் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டதால் மூச்சடங்கி உயிரிழந்துள்ளார். அவர் பாலியல் ரீதியாகத் துர்நடத்தைக்கு உட்படுத்தப்படவில்லை” என்று உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

http://newuthayan.com/story/16/கயிறு-இறுக்கி-மூச்சடங்கிய-சிறுமி-மருத்துவ-அறிக்கையில்-தகவல்-றெஜீனாவின்-உடல்-உறவினர்களிடம்.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தந்தை மீது கொண்ட முற்பகை காரணமாக பழிதீர்க்கவே சிறுமி கொல்லப்பட்டார்

Chulipuram.png?resize=672%2C498

 

‘சிறுமியின் தந்தை மீது கொண்ட முற்கோபத்தை பழிதீர்க்கவே அவரது மகளைக் கடத்தி 20 வயது இளைஞர் கொலை செய்துள்ளார். அவரது இந்த முயற்சிக்கு சிறுமியின் சிறியதந்தை உட்பட நால்வர் துணை நின்றுள்ளனர்’ என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

‘தீவிர விசாரணையின் பின் சிறுமியின் சீருடை மறைத்து வைக்கப்பட்டிருந்த பற்றையைப் பகுதியை பிரதான சந்தேகநபர் அடையாளம் காட்டினார். பாடசாலைச் சீருடை மீட்கப்பட்டது. எனினும் தோடுகள் மறைத்து வைத்த இடத்தை சந்தேகநபரால் அடையாளம் காணமுடியவில்லை’ என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்னர்.

சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜீனா (வயது – 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை (25) மாலை சடலமாக மீட்கப்பட்டார். சம்பவத்தையடுத்து சிறுமியின் உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சிறுமியின் சிறிய தந்தை உட்பட நால்வர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர்.

‘சந்தேகநபர்கள் கஞ்சா போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்பதுடன் அவர்கள் 19 தொடக்கம் 23 வயதுக்குட்பட்டவர்கள். பனைகளில் ஏறி திருட்டுத்தனமாக கள்ளு இறக்கி குடித்துள்ளனர். இவர்களின் திருட்டு அறியவர சிறுமியின் தந்தை சிவனேஸ்வரன், சந்தேகநபர்களில் இருவரை அடித்து கண்டித்திருந்தார்.

இந்தச் சம்பவம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. சிறுமியின் தந்தை தன்னையும் நண்பரையும் தாக்கியதற்கு பழிதீர்க்கவேண்டும் என்ற வெறித்தனத்தோடு பிரதான சந்தேகநபர் கஞ்சாவைப் பாவித்து போதையில் இருந்துள்ளார்.

 

சிவனேஸ்வரன் றெஜீனா (சிறுமி) பாடசாலை முடித்து திரும்பும் போது, அவரை பிரதான சந்தேகநபர் கடத்திச் சென்று பற்றைக்குள் வைத்து கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளார். அதற்கு சிறுமியின் சிறிய தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார்.

கொலையை திசை திருப்ப தோடுகளை எடுத்ததுடன், சீருடையையும் களைந்துவிட்டு சடலத்தை கிணற்றுக்குள் போட்டுள்ளனர்’ என்று விசாரணைகளில் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

‘சிறுமியின் சீருடை எரிக்கப்பட்டது என பிரதான சந்தேகநபரால் இன்று அதிகாலை தெரிவிக்கப்பட்டது. எனினும் இன்று முற்பகல் அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்திய பிரதான சந்தேகநபர், சீருடை போடப்பட்ட இடத்தை காண்பித்தார். எனினும் கயிறு மற்றும் தோடுகளை மீட்க முடியவில்லை.

விசாரணைகளின் பின்னர் 5 சந்தேகநபர்கள் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஐந்து பேரும் நாளை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவர்’ என்றும் காவல்துறையினர் கூறினர்.

http://globaltamilnews.net/2018/85251/

  • கருத்துக்கள உறவுகள்

A1_D4_F55_A-6_F83-4_E27-9_C20-52_F62_FBA

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

 யாழ் (வாள்) பாணம் நல்லா வருகிறது வாள் வெட்டும் கொள்ளைகளும் கொலைகளும் நிறைந்து வருகிறது  ஆழ்ந்த அனுதாபங்கள் குழந்தைக்கு  கிராமங்களும் சனங்களும் தொலை தூரமாக சென்றுள்ளதால் தூர  கிராமங்கள் ஆள் அற்று சன சந்தடியற்று கேவலமான பிறப்புகளுக்கு சாதமாக அமைகிறது tw_cold_sweat:

  • தொடங்கியவர்

கொல்லப்பட்ட சிறுமியின் உடல் நல்லடக்கம் :

IMG_6366.jpg?resize=720%2C405
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சுழிபுரம் – காட்டுப்புலத்தைச் சேர்ந்த மாணவி சிவநேஸ்வரன் றெஜினா பாலியல் துன்புறுத்தல்களுக்கு பின்னர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்று (26) மாலை இடம்பெற்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

 

அவரது வீட்டில் இடம்பெற்ற வணக்க வழிபாடுகளைத் தொடர்ந்து சடலம் சுழிபுரம் – திருவடிநிலை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

IMG_6367.jpg?resize=720%2C405IMG_6368.jpg?resize=720%2C405IMG_6369.jpg?resize=720%2C405IMG_6370.jpg?resize=450%2C800

http://globaltamilnews.net/2018/85263/

  • கருத்துக்கள உறவுகள்

எமது மக்ககளுக்கு உள்ளே இருக்கும் ஆபத்து வெளியே இருந்து வரும் ஆபத்திலும் பார்க்க மோசமானது.  இந்த ஆபத்துகள் வெளி வரும் போது ஒவ்வொரு முறையும் இதில் வெளியார் தலையீடு இருக்குமா என்று பார்ப்பதிலும் அப்படி இருக்கலாம் என்று அனுமானித்து வெளியாரில் பழியை போட்டு விட்டு உள்ளிருக்கும் ஆபத்துகளின் காரணிகளை ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்வதை தவிர்த்து வருகிறோம். இந்த போக்கு எமது மக்கள் தாமாகவே உள்ளிருந்து அழிந்து போகும் சாத்தியத்தை அதிகரித்து வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சித்தப்பாகாரனை பிடிச்சு தூக்கில் போடோணும் 

 

பள்ளிச் சீருடையில் ஒரு பிஞ்சை கொன்றது ஜீரணிக்க முடியவில்லை.

பளிவாங்கும் உணர்சியும் வக்கிரமும் கற்பனைக்கெட்டாத காரியங்களை சிலசமயம் செய்துவிடுகின்றது.. 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

TR.jpg.0c9fd1c2f7a776de93505fca33fa0514.jpg

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

முதலில் சித்தப்பாகாரனை பிடிச்சு தூக்கில் போடோணும் 

 

இவங்களை எல்லாம் தூக்கில போட்டு அவ்வளவு இலகுவாக சாவை காட்டக்கூடாது. கை, கால்களை வெட்டி, முக்கிய உறுப்பையும் வெட்டி மிளகாய்த்தூள் போட்டு  தந்திக்கம்பத்தில் கட்டி பொது மக்கள் பார்வைக்கு விட வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.