Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிட்ஸர்லாந்தில் தீயில் இறங்கிய தமிழர்கள்.. பரவசக்காட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2018 at 8:35 PM, tulpen said:

இறைவனுக்கு நேர்த்திகடன் என்றால் என்ன? முட்டாள்த்தனமாக பறவைக்காவடி எடுப்பதும் தீயில்   இறங்குவதும் அறிவு வளர்ச்சி அடையாத காலங்களில் மக்களால் நம்பப்பட்ட மூடப் பழக்கங்கள். இதை தற்போதைய காலங்களில்  ஜரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல எங்கு செய்தாலும் அவர்கள் காட்டு மிராண்டிகளே. கடவுள் என்று ஒருவர் இருந்து அவர்  மனிதர்தாகளைப் படைத்திருந்தால் தான்  படைத்த மனிதர்கள் அறிவுடைய நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும. என்று தான் விரும்புவரே யொழிய  தன்பெயரில் காட்டு மிராண்டி மூடத்தனங்களை செய்யும், பரப்பும் மூடர்களாக இருப்பதை விரும்ப மாட்டார். 

ம் உண்மைதான் முஸ்லீம்கள் தங்கள் கடமைய நிறைவேற்ற மக்கா செல்வார்கள்  ஏன் என்று கேட்டால் அவர்கள் வேணுதலாம் தமிழ் மக்கள் வேண்டுதல் மட்டும் வித்தியாசமாக  இருக்கிறது நாலு பேர் தூக்கி செல்லும் சாமி சிலையை  100 பேர் 150 பேரை வைத்து ஏன் இழுக்கிறார்கள்  சாதி மத பேதமின்றி ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும்  தாம் வணங்கும் கடவுள் என்று நினைக்கும் ஒருவரை தோளால் சுமக்கா முடியா விட்டாலும் பரவாயில்லை இழுத்தாவது சென்று விட்டால் போதும் என்று நினைக்கிறான் நம்பியவனுக்கு தீ குழி சுட்டதில்லை நம்பாதவனுக்கு ?? வெள்ளைக்காரன் கூட  எங்களுடன் கதிர்காமம் வந்தான் பைத்தியகாரனா இருப்பானோ படம் உண்டு ஆதாரத்துக்கு ( நான் நினைக்கிறன் அவன் கொழுப்பை கரைக்க வந்திருப்பான் என ):):) அந்த வெள்ளையும் முட்டாளா இருப்பானோ 

42 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 நம்பியவனுக்கு தீ குழி சுட்டதில்லை நம்பாதவனுக்கு ?? 

தீ சுடாமல் இருப்பது கடவுள் அருளால் என்று இந்த 21ஆம் நூற்றாண்டிலும் நம்புகிறீர்களா ?

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ம் உண்மைதான் முஸ்லீம்கள் தங்கள் கடமைய நிறைவேற்ற மக்கா செல்வார்கள்  ஏன் என்று கேட்டால் அவர்கள் வேணுதலாம் தமிழ் மக்கள் வேண்டுதல் மட்டும் வித்தியாசமாக  இருக்கிறது நாலு பேர் தூக்கி செல்லும் சாமி சிலையை  100 பேர் 150 பேரை வைத்து ஏன் இழுக்கிறார்கள்  சாதி மத பேதமின்றி ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும்  தாம் வணங்கும் கடவுள் என்று நினைக்கும் ஒருவரை தோளால் சுமக்கா முடியா விட்டாலும் பரவாயில்லை இழுத்தாவது சென்று விட்டால் போதும் என்று நினைக்கிறான் நம்பியவனுக்கு தீ குழி சுட்டதில்லை நம்பாதவனுக்கு ?? வெள்ளைக்காரன் கூட  எங்களுடன் கதிர்காமம் வந்தான் பைத்தியகாரனா இருப்பானோ படம் உண்டு ஆதாரத்துக்கு ( நான் நினைக்கிறன் அவன் கொழுப்பை கரைக்க வந்திருப்பான் என ):):) அந்த வெள்ளையும் முட்டாளா இருப்பானோ 

வெள்ளை என்றால் முட்டாளாக அல்லது பைத்தியமாகவோ இருக்க கூடாதா?  (ஆதாரம் தேவையில்லை. நான் இங்கு பல வெள்ளைப் பைத்தியங்களை கண்டுள்ளேன்.) மத்திய காலத்தில் கத்தோலிக்க திருச்சபை மக்களில் வாழ்வில் ஆதிக்கம் செலுத்திய வேளையில்  அவர்கள் கூட  பல மூடப்பழக்கங்களை கொண்டிருந்தார்கள்.  15 ம் நூற்றாண்டின் பின்னரான காலப்பகுதியில்  அறிவியல் வளர்ச்சி  ஏற்பட  தொடங்க சிறிது சிறிதாக அப்பழக்கங்களில் இருந்து விடுபட்டார்கள். அதைப்போல் நாங்களும் காட்டுமிராண்டிப் பழக்கங்களை விட்டு அறிவியலில் முன்னேறிய இனமாக வாழவேண்டும். அதை விடுத்து அர்த்தமற்ற மூடப்பழக்கங்களுக்கு புதிய அர்த்தங்கள் கண்டு பிடித்து அந்த காட்டுமிராண்டி பழக்கங்களுக்கு வக்காலத்து வாங்க கூடாது. 

Edited by tulpen

7 hours ago, இணையவன் said:

தீ சுடாமல் இருப்பது கடவுள் அருளால் என்று இந்த 21ஆம் நூற்றாண்டிலும் நம்புகிறீர்களா ?

21. ம் நூற்றாண்டில் மட்டுமல்ல 25. நூற்றாண்டில் வாழப்போகும் தமிழர்களுக்கும் இந்த காட்டுமிராண்டி மூடப்பழக்கங்களை கொண்டு சென்று தமிழர்களை மட்டும் உலகில் பழங்குடி காட்டு இனமாக வாழசெய்ய வேண்டும் என்று என்று சிலர் நினைக்கிறார்கள்.  அதற்கு நவீன தொழில.நுட்ப வசதிகளைக் கூட பயன்படுத்துகிறார்கள். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, இணையவன் said:

தீ சுடாமல் இருப்பது கடவுள் அருளால் என்று இந்த 21ஆம் நூற்றாண்டிலும் நம்புகிறீர்களா ?

தமிழர்கள் அடிக்கடி சொல்வது நம்பிக்கைதான் வாழ்க்கை நம்புறவனுக்கு மட்டுமே 

12 hours ago, tulpen said:

21. ம் நூற்றாண்டில் மட்டுமல்ல 25. நூற்றாண்டில் வாழப்போகும் தமிழர்களுக்கும் இந்த காட்டுமிராண்டி மூடப்பழக்கங்களை கொண்டு சென்று தமிழர்களை மட்டும் உலகில் பழங்குடி காட்டு இனமாக வாழசெய்ய வேண்டும் என்று என்று சிலர் நினைக்கிறார்கள்.  அதற்கு நவீன தொழில.நுட்ப வசதிகளைக் கூட பயன்படுத்துகிறார்கள். 

உலகில் எல்லா மதங்களிலும் மூட நம்பிக்கை இருக்கிறது இருந்தும் வருகிறது அதே போல தமிழர்களிடமும் இருந்து விட்டு போகட்டும் நாளைக்கு பிறக்க போறவனும் வெளிநாட்டில்  பிறந்துவிட்டு நான் தமிழன் இல்லை வெள்ளைக்காரந்தான் என்றும் சொல்லுவான் பாருங்கோ:) 

30 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழர்கள் அடிக்கடி சொல்வது நம்பிக்கைதான் வாழ்க்கை நம்புறவனுக்கு மட்டுமே 

உலகில் எல்லா மதங்களிலும் மூட நம்பிக்கை இருக்கிறது இருந்தும் வருகிறது அதே போல தமிழர்களிடமும் இருந்து விட்டு போகட்டும் நாளைக்கு பிறக்க போறவனும் வெளிநாட்டில்  பிறந்துவிட்டு நான் தமிழன் இல்லை வெள்ளைக்காரந்தான் என்றும் சொல்லுவான் பாருங்கோ:) 

உங்களைப்போல் சிந்தித்தால் அகத்தியரின். கமண்டலத்தில் இருந்து தான் காவேரி நதி வருகிறது என்ற முட்டாள்த்தனத்தையும் நம்பவேண்டியதுதான். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

உங்களைப்போல் சிந்தித்தால் அகத்தியரின். கமண்டலத்தில் இருந்து தான் காவேரி நதி வருகிறது என்ற முட்டாள்த்தனத்தையும் நம்பவேண்டியதுதான். 

மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டுமாக இருந்தால் மனிதர்களை அழிக்க வேண்டும்  அந்த காலத்தில் பாட்டி பத்து பிள்ளைகளுக்கு வைத்தியம் பார்த்தாள் பாட்டியை நம்பி வைத்தியம் செய்தோம்  வளர்ச்சியடைந்த பிறகு பாட்டி வைத்தியம் பொய்யாகவும் போலியாகவும், தெரியும் உலகமும் அப்படித்தாம் சித்தப்பு வளர்ச்சியடைய வளர்ச்சியடைய  எல்லாம் காட்டுமிராண்டித்தனமாகத்தான் தெரியும் :)

  • கருத்துக்கள உறவுகள்

தீ மிதிச்சவை வைத்தியம் பார்த்து சுகமாகிவிட்டிருப்பார்களா அல்லது கால் வேகாமல் விட்டுவிட்டதா?

எனக்கும் தீ மிதித்த அனுபவம் இருக்கு. ஊரில் பொயிலைக் குடிலுக்குள் தணல் ஆறிமுன்னர் காலை வைத்து அடிப்பாதம் அப்பளமாக பொருமி மாறக் கனகாலம் எடுத்தது?

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டுமாக இருந்தால் மனிதர்களை அழிக்க வேண்டும்  அந்த காலத்தில் பாட்டி பத்து பிள்ளைகளுக்கு வைத்தியம் பார்த்தாள் பாட்டியை நம்பி வைத்தியம் செய்தோம்  வளர்ச்சியடைந்த பிறகு பாட்டி வைத்தியம் பொய்யாகவும் போலியாகவும், தெரியும் உலகமும் அப்படித்தாம் சித்தப்பு வளர்ச்சியடைய வளர்ச்சியடைய  எல்லாம் காட்டுமிராண்டித்தனமாகத்தான் தெரியும் :)

மூட நம்பிக்கையை ஒழிக்க மனிதர்களை ஒழிக்க வேண்டியதில்லை. மனிதர்கள் தமது  முட்டாள் தனங்களை ஒழித்தால் போதுமானது. பாட்டி வைத்தியம்  மூடப்பழக்கம் இல்லை. அது அறிவியலின் ஆரம்பம். மருத்துவம் வளர்ச்சி இடைய பாட்டி வைத்தியம் காலாவதியாவது இயல்பு. நியாயமானதும் கூட. காலத்திற்கு ஒவ்வாத்தை பிடித்து தொங்கிகொண்டிருக்க வேண்டியதில்லை.

நம்பிக்கை உள்ளவனுக்கு தீ சுடாதாம்?அப்படியானால் எரி குண்டுகளிலுருந்தும் கொத்து குண்டுகளில் இருந்தும்  மக்களை காப்பாற்றி  இருக்கலாமே. கடவுளை நம்பிய மக்கள் தானே லட்சக்கணக்கில் மாண்டு போனார்கள். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

மூட நம்பிக்கையை ஒழிக்க மனிதர்களை ஒழிக்க வேண்டியதில்லை. மனிதர்கள் தமு முட்டாள் தனங்களை ஒழித்தால் போதுமானது. பாட்டி வைத்தியம்  மூடப்பழக்கம் இல்லை. அது அறிவியலின் ஆரம்பம். மருத்துவம் வளர்ச்சி இடைய பாடி வைத்தியம் காலாவதியாவது இயல்பு. நியாயமானதும் கூட. காலத்திற்கு ஒவ்வாத்தை பிடிது தொங்கிகொண்டிருக்க வேண்டியதில்லை. 

இந்த மூட நம்பிக்கையை நீங்கள் நிறுத்த முடியுமானால் நிறுத்திக்காட்டுங்கள் பார்க்கலாம் இப்ப வெளிநாட்டிலிருந்து வெள்ளைக்காரனை விடுங்க நம்ம ஊர் ஆட்கள் கோவில் திருவிழாவுக்கும் தேர் இழுப்புக்குத்தான் வாராங்கள் அவங்கள் அத்தனை பேரும் என்ன முட நம்பிக்கை கொண்டவர்களா என்ன ?

சிங்களவன் மூட நம்பிக்கையில் பன்சல கட்டும் போது முஸ்லிம்க்கள் பள்ளிவாசல் கட்டும் போது மட்டும் சத்தம் மட்டும் போடாதீர்கள் மதம் மூலம் நம்பிக்கைகளை வளர்க்கிறான் அவன் ஆனால் நம்ம மட்டும் தான் நாய் இழுவை இழுத்துக்கொண்டிருக்கிறோம் :grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கல்வியறிவு வளரும் சமூகத்தில் மூடநம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல்போகும் முனிஜீ.

 வெளிநாட்டில்தானே தீ மிதித்தார்கள்?. ஊருக்கு வந்து தேரிழுப்பதற்கு பல சமூகக் காரணங்கள் உள்ளன. மக்களே இல்லாத ஊர்களில் பலகோடிகளைச் செலவழித்து கோயில் கட்டி தமது பெருமையைப் பறைசாற்றும் சமூகத்தினர் அல்லவா நாங்கள்!

கோயிலைக் கட்டி ஆன்மீகத்தை வளர்க்கலாம். இந்து/சைவ ஞானத்தைப் பரப்பலாம். ஆனால் அதைச் செய்யமாட்டார்கள். பெளத்தர்கள், முஸ்லிம்கள் மூடநம்பிக்கையை வளர்க்கவா விகாரைகளையும் மசூதிகளையும் கட்டுகின்றார்கள்?

முனிஜீ, மதநம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் உள்ள  வேறுபாட்டைப் புரிந்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் கண்ணகை அம்மன் கோவிலில் தீ மிதித்துப் பாருங்கள். நினைத்ததைவிடக் கூடவே கிடைக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

அப்ப கல்வி அறிவு கூடிய வளர்ச்சியடைந்த நாட்டில் (சுவிசில்) வந்திருக்கே கிருபன் ஜீ எப்படி ?

ஒரு நாணயத்துக்கு ஒரு பக்கம் இன்பம் துன்பம் இறப்பு பிறப்பு இப்படி ஒவ்வொன்றுக்கும் மாறாக இருக்கிறது அது போலவே மூட நம்பிக்கையும் ஒரு சிலரிடம் இருக்கும் சிலரிடம் இருக்காது இருக்காதவர்கள் இருப்பவர்களை குற்றம் சொல்வது இருப்பவர்கள் இருக்காதவர்களை குற்றம் சொல்வது  ஜீ   அதை ஒழிப்பது என்பது இயலாத காரியம் என்றே நான் சொல்லுகிறேன் இது சகல மதத்திலையும் உண்டு திருத்த முடியாது கடந்து விட்டு போக வேண்டியதுதான். 

இலங்கையில் வெள்ளிக்கிழமைகளில் முஸ்லீம்களின் பிராத்தனைகளில் பள்ளிவாயல்களில் சொற்பொழிவு   கேட்டால் உங்களுக்கு விளங்கும் , முட நம்பிக்கை எல்லா மதங்களிலும் உண்டு என 

ஹாஹா கண்ணகை அம்மன் கோவிலில் நானோ ஹய்யோ ஹய்யோ ஒரு ரூபா உண்டியலில் போட்டேன் என்று எனக்கு கடவுள் நல்லது செய்ய போவதுமில்லை போடவில்லை என்று கெட்டது செய்ய போவமில்லை நான் கடந்து விட்டு செல்வேன்:) 

41 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த மூட நம்பிக்கையை நீங்கள் நிறுத்த முடியுமானால் நிறுத்திக்காட்டுங்கள் பார்க்கலாம் 

இவை எல்லாம் அறிவுக்கு  ஒவ்வாத மனித முன்னேற்றத்திற்கு எதிரான மூடப்பழக்கங்கள் தான் என்பதை நீங்கள் ஒத்துக்கொண்டதே  ஒரு வெற்றி தான். ஏனென்றால் மூடப்பழக்கங்களை ஒழிக்கப் போவது நீங்களோ நானோ அல்ல. எமது வருங்புகால திய தலைமுறைகள். அதற்கான உந்துதலையே நானும்,  அவை மூடப்பழக்கங்கள் தான் என்று ஒத்துக்கொண்டதன் மூலம் நீங்களும் செய்கிறோம். நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

இவை எல்லாம் அறிவுக்கு  ஒவ்வாத மனித முன்னேற்றத்திற்கு எதிரான மூடப்பழக்கங்கள் தான் என்பதை நீங்கள் ஒத்துக்கொண்டதே  ஒரு வெற்றி தான். ஏனென்றால் மூடப்பழக்கங்களை ஒழிக்கப் போவது நீங்களோ நானோ அல்ல. எமது வருங்புகால திய தலைமுறைகள். அதற்கான உந்துதலையே நானும்,  அவை மூடப்பழக்கங்கள் தான் என்று ஒத்துக்கொண்டதன் மூலம் நீங்களும் செய்கிறோம். நன்றி. 

நன்றி நியுட்டனின் 3ம் விதி நல்ல உதாரணம்:)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அப்ப கல்வி அறிவு கூடிய வளர்ச்சியடைந்த நாட்டில் (சுவிசில்) வந்திருக்கே கிருபன் ஜீ எப்படி ?

சுவிஸ் நாட்டில் தீ மிதித்தவர்களின் பிள்ளைகள் கல்வியறிவைப் பெற்றுக்கொள்வார்கள்.? அவர்கள் இப்படியான முட்டாள்தனமான வேலை எல்லாம் செய்யமாட்டார்கள்.

ஷூ போட்டே உள்ளங்கால் எல்லாம் மென்மையாகி இருப்பதால் வழுக்கும் தார்ச்சாலைகளில்கூட வெறுங்காலால் நடக்கமுடியாதவர்கள், வெறுங்காலால் மைல் கணக்கில் கொளுத்தும் வெயிலில் நடந்து உரப்பேறிய் கால்கள் தம்முடையவை என்று நினைத்து தீ மிதித்து கட்டாயம் பாடம் கற்றிருப்பார்கள். “ விசர்வேலை” என்று உள்ளுக்குள் அழுதாலும் வெளியே வீம்புக்காக வீரப்பிரதாபம் காட்டியிருப்பார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

“ விசர்வேலை” என்று உள்ளுக்குள் அழுதாலும் வெளியே வீம்புக்காக வீரப்பிரதாபம் காட்டியிருப்பார்கள்?

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்  :)

  • கருத்துக்கள உறவுகள்

தீ மிதிப்பு கூட்டங்கள் எல்லாம் இந்த மாதம் வெக்கேசன் வர ரெடியாக இருக்காங்க. ஏர் டிக்கட் விலை ஏறியிருக்கு ஆனலும் முழு சனமும் நல்லூர்கந்தன் திருவிழாவிற்கு வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

தீ மிதிப்பு கூட்டங்கள் எல்லாம் இந்த மாதம் வெக்கேசன் வர ரெடியாக இருக்காங்க. ஏர் டிக்கட் விலை ஏறியிருக்கு ஆனலும் முழு சனமும் நல்லூர்கந்தன் திருவிழாவிற்கு வருவார்கள்.

கொழும்பான் கொழுத்தி போடுறாப்போல இருக்கு  அடிச்சு கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்கோ :)

On 4 août 2018 at 6:42 PM, கிருபன் said:

கல்வியறிவு வளரும் சமூகத்தில் மூடநம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல்போகும் முனிஜீ.

 வெளிநாட்டில்தானே தீ மிதித்தார்கள்?. ஊருக்கு வந்து தேரிழுப்பதற்கு பல சமூகக் காரணங்கள் உள்ளன. மக்களே இல்லாத ஊர்களில் பலகோடிகளைச் செலவழித்து கோயில் கட்டி தமது பெருமையைப் பறைசாற்றும் சமூகத்தினர் அல்லவா நாங்கள்!

கோயிலைக் கட்டி ஆன்மீகத்தை வளர்க்கலாம். இந்து/சைவ ஞானத்தைப் பரப்பலாம். ஆனால் அதைச் செய்யமாட்டார்கள். பெளத்தர்கள், முஸ்லிம்கள் மூடநம்பிக்கையை வளர்க்கவா விகாரைகளையும் மசூதிகளையும் கட்டுகின்றார்கள்?

முனிஜீ, மதநம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் உள்ள  வேறுபாட்டைப் புரிந்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் கண்ணகை அம்மன் கோவிலில் தீ மிதித்துப் பாருங்கள். நினைத்ததைவிடக் கூடவே கிடைக்கும்?

நான் நினைத்ததைக் கிருபன் சொல்லிவிட்டார்.

மூட நம்பிக்கைகளைக் கொண்டு மக்களை மூடராக்கித் தான் சமயம் வளர்க்க வேண்டுமா ? சைவ சமயத்தில் மனித வாழ்க்கைக்கு உகந்த நிறந்த நெறிகள் உள்ளன. தத்துவங்கள் உள்ளன. விஞ்ஞானம் மருத்துவம் உள்ளது. இவற்றை முன்னிலைப் படுத்திச் சமயத்தை ஏன் வளர்க்க முடியவில்லை. தேரிழுப்பவர்களில் ஒரு வீதத்தினருக்குக் கூடச் சமய வரலாறு தெரியாது. பொய்ப் புராணங்களை மட்டுமே நம்புகின்றனர்.

பிரான்சில் 25 வருடங்களில் பௌத்த மதத்தைப் பின்பற்றுவோரின் தொகை 3 மடங்காகியுள்ளது. 4 இலட்சம் வெளிநாட்டு பௌத்தர்கள் தவிர 2 இலட்சம் பிரெஞ்சுக் காரர்கள் பௌத்தர்களாக மாறியுள்ளனர். இதற்கான காரணம் இங்கு கற்பிக்கப்படும் பௌத்தம் கடவுளை மையப்படுத்தவில்லை. கடவுள் எல்லாம் வல்லவர், அவரைக் குபிட்டால் காரியம் சாதிக்கலாம் என்ற ஏமாற்றுக் கதைகள் கற்பிக்கப்படவில்லை. தன்னை உணர்ந்து கொள்வதற்கான தியானங்களும் தத்துவங்களுமே இங்குள்ள பௌத்த தலங்களில் கற்பிக்கப்படுகின்றது.

சைவ சமயம் நிலைத்து நிற்க வேண்டுமானால் தேவையற்ற மூடச் செயல்களைக் கைவிட்டு, எமது மூதாதையர் நூற்றுக் கணக்கான வருட அனுபவங்கள் மூலம் கண்டறிந்த பயனுள்ள பழக்க வழக்கங்களை இனம்கண்டு பேண வாண்டும்.

On 4 août 2018 at 7:11 PM, tulpen said:

இவை எல்லாம் அறிவுக்கு  ஒவ்வாத மனித முன்னேற்றத்திற்கு எதிரான மூடப்பழக்கங்கள் தான் என்பதை நீங்கள் ஒத்துக்கொண்டதே  ஒரு வெற்றி தான். ஏனென்றால் மூடப்பழக்கங்களை ஒழிக்கப் போவது நீங்களோ நானோ அல்ல. எமது வருங்புகால திய தலைமுறைகள். அதற்கான உந்துதலையே நானும்,  அவை மூடப்பழக்கங்கள் தான் என்று ஒத்துக்கொண்டதன் மூலம் நீங்களும் செய்கிறோம். நன்றி. 

வெளிநாட்டில் இளைய தலைமுறை மூடப் பழக்கங்களுக்கு எதிராக எதுவும் செய்யாது. இலகுவாக எல்லாவற்றையும் உதறித் தள்ளி இவற்றிலிருந்து வெளியேறும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

வெளிநாட்டில் இளைய தலைமுறை மூடப் பழக்கங்களுக்கு எதிராக எதுவும் செய்யாது. இலகுவாக எல்லாவற்றையும் உதறித் தள்ளி இவற்றிலிருந்து வெளியேறும்.

?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, இணையவன் said:

வெளிநாட்டில் இளைய தலைமுறை மூடப் பழக்கங்களுக்கு எதிராக எதுவும் செய்யாது. இலகுவாக எல்லாவற்றையும் உதறித் தள்ளி இவற்றிலிருந்து வெளியேறும்.

நீங்கள் தீ மிதிப்பையும் சிதறு தேங்காயையும் மட்டும் மனதில் வைத்து கதைக்கின்றீர்களா...இல்லையேல் இன்று தாலிகட்டி திருமணம் நாளை விவாகரத்து என்பதையும் மனதில் வைத்து கதைக்கின்றீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பலர் குறிப்பிட்டது போல.....சைவமதம்....எவரையும்....தீக்குளிக்கச் சொல்லி வற்புறுத்தியதில்லை!

அது மனிதர்களின்.....மன உறுதியை வலுப்படுத்தும் ஒரு கிராமத்துச் சடங்கு மட்டுமே! இப்போது சர்வ தேச லெவலுக்குப் போய்....நிக்குது!

சரியை....கிரியை.....யோகம்...ஞானம் என்பதை....வாழ்வின் வழி என்று கூறி நின்றது சைவமதம்!

நாங்கள் தான்.....சரியையும்...கிரியையும் விட்டும்....மேலே....ஒரு அடி கூட நகர மாட்டம் என்று பிடிவாதம் பிடித்தால்....அதற்கும் மதம் பொறுப்பாக முடியுமா?

சரியை வழியில் போன.....நாவுக்கரசர் முத்தியடைய....ஒரு ஆயுட்காலமே ....தேவைப்பட்டது!

ஆனால்....ஞான மார்கத்தில் போன சம்பந்தருக்கு.....வெறும் மூன்று வருடங்களே போதுமாக இருந்தது!

மூடப் பழக்கம் என்பதை விடவும்.....அது மூடப் பழக்கம் என்று அறிந்து கொள்ள முடியாதது தான் மிகவும் வருத்தத்துக்கு உரியது!

மூட நம்பிக்கை, மத நம்பிக்கை இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையா அல்லது வேறுபாடானவையா? இப்போது விஞ்ஞான நம்பிக்கையும் காலை வாறுகின்றதே!

தன்னம்பிக்கை நாம் உய்வதற்கு வழி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.