Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் முஸ்லிம் மதத்துக்கு மாறிய மகனை கத்தியால் தாக்கிய தந்தை

Featured Replies

3 hours ago, putthan said:

இப்படித்தான் சிங்களவன் பிடிக்கிறான் என்று தொடங்கி கடைசியில் அவன் நிலத்தை அக்கிரமிப்பதை எம்மால் தடுக்க முடியாமல் போய்விட்டது....
இனி முஸ்லிம்கள் என்று வெளிக்கிட்டு என்னத்தை காணப்போகின்றோம்,
ஒரு இனம் தனித்து ஒரு மாகாணத்தில் பெரும்பான்மையாக இருக்ககூடாது என்பதற்காக  முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் வடபகுதியில் குடியேற்றுவதில் அரசு முக்கிய கவனம் செலுத்துகின்றது...
 
இது தவறான சிந்தனை முதலாவது  சிங்களவன் ஏன் தமிழர் பகுதியில் வந்து குடியேற வேண்டும் , சிங்களவன் தமிழர் பகுதியில் குடியேற வேண்டிய அவசியம் இல்லை. 

50 களில் சிங்கள பிரதேசங்களிலும்  வறுமை வேலை வாய்ப்பின்மை இருந்த போது சிங்களவர் வடக்கு கிழக்கில் வந்து குடியேற ஆர்வம் காட்டினர், ஆனால் சிங்கள பிரதேசங்கள் அபரிதமான பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் இக்கால காட்டத்தில் எந்த ஒரு சிங்களவனும் பொருளாராத ரீதியாக பிந்தங்கிய வடக்கு கிழக்கில் வந்து குடியேற போவதில்லை. அதே போல் அங்கு இருக்கும் இராணுவமும் சேவை முடுந்தவுடன் தமது சொந்த ஊர்களுக்கு சென்று  குடியமற தான் விரும்புவார்கள் தமக்கு அன்னியமான ஊருக்கு வட போவதில்லை.

ஆனால் முஸ்லீம்கள் அப்படியல்ல வடக்கு கிழக்கு இரண்டையும் தம் வசபடுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயற்படுகின்றனர், அவர்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சனை நில பிரச்சனை இதனால் இவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது உள்ளது அதனால் தமிழர் நிலங்களை பிடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.அதுக்கு அவர்கள் பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர். மன்னார் மாவட்டம் இப்பொழுது ஒரு முஸ்லிம் மாவட்டம் இது எமது மக்கள் பலருக்கு தெரியாது. அடுத்து வவுனியா,பின்னர் கிளிநொச்சி அதற்கான வேலைகள் எல்லம் தொடங்கி விட்டன.

2 hours ago, அக்னியஷ்த்ரா said:

 அட சும்மாயிருங்கப்பா ...இப்பதானே சீனன் உள்ளவந்திருக்கிறான் , ஏற்க்கனவே முஸ்லிம்களின் வளர்ச்சி சிங்களவனின் கண்ணை நன்றாக உறுத்திவிட்டது , ஆட்டம் சூடுபிடிக்க கொஞ்சம் கால அவகாசம் வேண்டாமோ ....எல்லாத்தையும் விட எங்கடை சட்டாம்பிகளை நினைக்கத்தான் கொஞ்சம் பயமாயிருக்கு, உவிங்களுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வலிக்கும் முன் வலிக்குது ,இழவெடுத்ததுகள் நம்மை கடைசியாக எதுக்குள்ளையும் கோர்த்துவிட்டுவிடுவினம் . மதம்  மாறுகிறவன் மாறட்டும் அது அவனது விருப்பம் ஆனால் மாத்தி வச்ச பெயரை ஏன் மாற்றினோம் என்று நொந்து தொப்பியை கழற்றி காட்சட்டைக்குள் மறைக்கும் காலம் தூரத்திலில்லை 

நீங்கள் மேற்குறிபிட்ட காரணத்தால் தான் வடக்கு கிழக்குக்கு அவர்கள் எல்லம் இடம் பெயர தயாராகின்றனர். 

சிங்களவன் இவர்களை மரியாதையாக தான் நடத்தினான் ஆனால் இவர்கள் தேவையில்லாமல் தமிழனிடம் காட்டிய வீரத்தை அவர்களிடமும் காட்ட போய் நன்றாக வாங்கி கட்டி கொண்டனர்.

இப்பொழுதெல்லாம் மேலே குறிபிட்ட கலட்டி பிரதேசத்திலேயே காணி வீடு வனக வெளிப்படையாக விலை கேட்கின்றனராம்.

  • Replies 65
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சொந்த மகனையே தனது மதத்தில் வைத்தருக்க முடியாத 
அற்ப நிலையில்தான் தந்தையின் மதம் இருக்கிறது.

அப்படி ஒரு மத்தை பின்பற்றியதற்காக தந்தைதான் 
தீக்குளிக்க வேண்டும் .... மாறிய மகனை ஏன் வெட்டினார் ?
இது கூட தந்தை இவளவு காலமும் காடைபிடித்த மதம் சார்ந்து 
சிந்திக்க வேண்டிய விடயமாக இருக்கிறது. 
தந்தையின் மதம் வாள்வெட்டு கத்தி குத்து போன்ற கொடூர 
மன நிலையில் மனிதர்களை வளர்க்கும் மதமாக இருக்குமோ 
என்ற அச்சமே எனக்கு வருகிறது. 

இந்த இடத்தில்தான் தமிழர்களை கொண்டுபோய் விடும் தந்தையின் மதம் 
என்று நான் இங்கு 10 வருடம் முன்பு எழுதிய போது .... அதை இந்து மத எதிர்ப்பு 
கருத்தாக பார்த்து என்னை திட்டி தீர்த்தார்கள்.
இனி யாரை திட்டுவார்கள் என்றுதான் புரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Dash said:

ஆனால் சிங்கள பிரதேசங்கள் அபரிதமான பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் இக்கால காட்டத்தில் எந்த ஒரு சிங்களவனும் பொருளாராத ரீதியாக பிந்தங்கிய வடக்கு கிழக்கில் வந்து குடியேற போவதில்லை.

யாழ் குடாநாட்டில்   இப்போது மேசன், தச்சன் மற்றும் கூலி வேலைகளுக்கு தமிழர்கள் கிடைப்பதில்லை. வெளிநாட்டு பணம் வருவதால் இந்த விதமான வேலைகள் செய்து உழைக்க வேண்டிய தேவை அங்குள்ள மக்களுக்கு இல்லை. சிங்களவர்களையே தமிழர் இந்த வேலைகளுக்கு இப்போது அமர்த்துகிறார்கள். மேலும் சிங்களவர்களின் தென்பகுதி அனுபவமும் வணிக தொடர்புகளும் சிறப்பான வேலையை மலிவான பொருட்களை வாங்கி செய்ய அவர்களுக்கு உதவுகிறது. வன்னியில் இருந்து இந்த தொழில் தேடி வரும் தமிழர்களை யாழ் குடாநாட்டு தமிழர் இந்த காரணங்களால் வேலைக்கு அமர்த்துவது இல்லை. இந்த சிங்களவர்கள் நிரந்தரமாகவே குடியேறி நல்ல வியாபாரம் செய்கிறார்கள். மேலும் பேக்கரிகள், சாப்பாட்டு கடைகள் போன்றவையும் வைத்து இருக்கிறார்கள். இந்தியர்கள் சிலரும் குடியேறி பெரிய வணிக நிறுவனங்களை யாழ்ப்பானந்தில் வைத்து இருக்கிறார்கள்.

புலம் பெயர்ந்த தமிழர் அங்கு சென்று மீண்டும் குடியேறி ஓய்வு பெற்றவர்களாக பெரிய மாளிகைகள் கட்டி வாழ்கிறார்கள். சிங்களவர்களே இந்த வீடுகளை கட்டி கொடுக்கிறார்கள். தென்பகுதியில் இருந்து மாபிள், கருங்கல் போன்றவற்றை இந்த சிங்கள கட்டடகாரர் இலகுவாகவும் மலிவாகவும் பெற்று கொடுக்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யும் குளியலறைதொட்டி போன்றவற்றை சிங்களவர் இலகுவாக யாழ்ப்பாணம் கொண்டுபோய் சேர்க்கிறார்கள். வன்னி தொழிலாளிகள் இவற்றை செய்யும் ஆற்றல் அற்றவர்களாக இருக்கிறார்கள். ஆகவே சிங்களவர் யாழ் குடாநாட்டில் சிறப்பான வணிகம் செய்து வசதியாக வாழ்கிறார்கள். தென்பகுதியில் இப்படி புலம்பெயர்ந்த வெளிநாட்டு பணம் வருவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

சொந்த மகனையே தனது மதத்தில் வைத்தருக்க முடியாத 
அற்ப நிலையில்தான் தந்தையின் மதம் இருக்கிறது.

அப்படி ஒரு மத்தை பின்பற்றியதற்காக தந்தைதான் 
தீக்குளிக்க வேண்டும் .... மாறிய மகனை ஏன் வெட்டினார் ?
இது கூட தந்தை இவளவு காலமும் காடைபிடித்த மதம் சார்ந்து 
சிந்திக்க வேண்டிய விடயமாக இருக்கிறது. 
தந்தையின் மதம் வாள்வெட்டு கத்தி குத்து போன்ற கொடூர 
மன நிலையில் மனிதர்களை வளர்க்கும் மதமாக இருக்குமோ 
என்ற அச்சமே எனக்கு வருகிறது. 

இந்த இடத்தில்தான் தமிழர்களை கொண்டுபோய் விடும் தந்தையின் மதம் 
என்று நான் இங்கு 10 வருடம் முன்பு எழுதிய போது .... அதை இந்து மத எதிர்ப்பு 
கருத்தாக பார்த்து என்னை திட்டி தீர்த்தார்கள்.
இனி யாரை திட்டுவார்கள் என்றுதான் புரியவில்லை?

இந்துக்கடவுளின் கைகளில் இருக்கும் வாள், அத்தி, சூலாயுதம், சங்கு, சக்கரம்,பூமாரங், வீச்சஅருவாள், பட்டயம், தடி, வேல், ஈட்டி, அம்பு, வில், அங்குசம், பாசக்கயிரு, வஜ்ஜிரம், தண்டம், உலக்கை, கதை போன்றவை கூட வன்முறையை பிரதிபலிப்பனவாகவே இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, colomban said:

இந்துக்கடவுளின் கைகளில் இருக்கும் வாள், அத்தி, சூலாயுதம், சங்கு, சக்கரம்,பூமாரங், வீச்சஅருவாள், பட்டயம், தடி, வேல், ஈட்டி, அம்பு, வில், அங்குசம், பாசக்கயிரு, வஜ்ஜிரம், தண்டம், உலக்கை, கதை போன்றவை கூட வன்முறையை பிரதிபலிப்பனவாகவே இருக்கின்றது.

கடவுளர் மக்களைத் தீயவர்களிடம் இருந்து காக்க ஆயுதங்கள் வைத்திருக்கத்தானே வேண்டும். இதற்கெல்லாம் விளக்கம் தேவையென்றால் வேறு திரியில் அலசலாம்.

மதம் மாறியவர் மூளைச்சலவை செய்யப்பட்டு மாற்றப்பட்டாரா, அல்லது வேறு ஆசை வார்த்தைகள் கூறப்பட்டு மாற்றப்பட்டாரா?

மார்கத்தை படித்து அதன் மூலம் ஆன்மீகத் தேடலை அடைய மாறியிருந்தால், அவரது தனிமனித சுதந்திரத்தில் தலையிட தகப்பனுக்கும் உரிமை இல்லை. ஆனால் இதெல்லாம் விளங்கிக்கொள்ளுமளவிற்கு மக்கள் உள்ளனரா?

1 hour ago, Jude said:

யாழ் குடாநாட்டில்   இப்போது மேசன், தச்சன் மற்றும் கூலி வேலைகளுக்கு தமிழர்கள் கிடைப்பதில்லை. வெளிநாட்டு பணம் வருவதால் இந்த விதமான வேலைகள் செய்து உழைக்க வேண்டிய தேவை அங்குள்ள மக்களுக்கு இல்லை. சிங்களவர்களையே தமிழர் இந்த வேலைகளுக்கு இப்போது அமர்த்துகிறார்கள். மேலும் சிங்களவர்களின் தென்பகுதி அனுபவமும் வணிக தொடர்புகளும் சிறப்பான வேலையை மலிவான பொருட்களை வாங்கி செய்ய அவர்களுக்கு உதவுகிறது. வன்னியில் இருந்து இந்த தொழில் தேடி வரும் தமிழர்களை யாழ் குடாநாட்டு தமிழர் இந்த காரணங்களால் வேலைக்கு அமர்த்துவது இல்லை. இந்த சிங்களவர்கள் நிரந்தரமாகவே குடியேறி நல்ல வியாபாரம் செய்கிறார்கள். மேலும் பேக்கரிகள், சாப்பாட்டு கடைகள் போன்றவையும் வைத்து இருக்கிறார்கள். இந்தியர்கள் சிலரும் குடியேறி பெரிய வணிக நிறுவனங்களை யாழ்ப்பானந்தில் வைத்து இருக்கிறார்கள்.

புலம் பெயர்ந்த தமிழர் அங்கு சென்று மீண்டும் குடியேறி ஓய்வு பெற்றவர்களாக பெரிய மாளிகைகள் கட்டி வாழ்கிறார்கள். சிங்களவர்களே இந்த வீடுகளை கட்டி கொடுக்கிறார்கள். தென்பகுதியில் இருந்து மாபிள், கருங்கல் போன்றவற்றை இந்த சிங்கள கட்டடகாரர் இலகுவாகவும் மலிவாகவும் பெற்று கொடுக்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யும் குளியலறைதொட்டி போன்றவற்றை சிங்களவர் இலகுவாக யாழ்ப்பாணம் கொண்டுபோய் சேர்க்கிறார்கள். வன்னி தொழிலாளிகள் இவற்றை செய்யும் ஆற்றல் அற்றவர்களாக இருக்கிறார்கள். ஆகவே சிங்களவர் யாழ் குடாநாட்டில் சிறப்பான வணிகம் செய்து வசதியாக வாழ்கிறார்கள். தென்பகுதியில் இப்படி புலம்பெயர்ந்த வெளிநாட்டு பணம் வருவதில்லை.

தொழில் நிமித்தம் வருவது வேறு நிரந்தரமாக திட்டமிட்ட குடியேற்றம் நடைபெறுவது வேறு.

41 minutes ago, கிருபன் said:

கடவுளர் மக்களைத் தீயவர்களிடம் இருந்து காக்க ஆயுதங்கள் வைத்திருக்கத்தானே வேண்டும். இதற்கெல்லாம் விளக்கம் தேவையென்றால் வேறு திரியில் அலசலாம்.

மதம் மாறியவர் மூளைச்சலவை செய்யப்பட்டு மாற்றப்பட்டாரா, அல்லது வேறு ஆசை வார்த்தைகள் கூறப்பட்டு மாற்றப்பட்டாரா?

மார்கத்தை படித்து அதன் மூலம் ஆன்மீகத் தேடலை அடைய மாறியிருந்தால், அவரது தனிமனித சுதந்திரத்தில் தலையிட தகப்பனுக்கும் உரிமை இல்லை. ஆனால் இதெல்லாம் விளங்கிக்கொள்ளுமளவிற்கு மக்கள் உள்ளனரா?

வடக்கு மாகாணத்தில் நீங்கள் இஸ்லாம் மதம் மாறினால் 700,000 ரூபாய் பணம், முஸ்லீம் பிரதேசத்தில் காணி ,தொழில் தொடங்க மூலதனம் என்பன வழங்கப்படுகின்றனவாம்.

இது இப்பொழுது வடக்கு மாகாணத்தில் சாதாரண நிகழ்வாம்.

14 minutes ago, Dash said:

வடக்கு மாகாணத்தில் நீங்கள் இஸ்லாம் மதம் மாறினால் 700,000 ரூபாய் பணம், முஸ்லீம் பிரதேசத்தில் காணி ,தொழில் தொடங்க மூலதனம் என்பன வழங்கப்படுகின்றனவாம்.

இது இப்பொழுது வடக்கு மாகாணத்தில் சாதாரண நிகழ்வாம்.

இது புதிதல்ல,  நான் இலங்கையில் இருக்குப்போதே இது  நடைமுறையில் இருந்தது. பணத்துடன் பரம்பரை பரம்பரையாகக் கிடைக்காத அந்தஸ்தும் சமத்துவமும் இதுவரை செய்திராத தொழில்வாய்ப்பும் இலகுவாக மதம் மாறியவருக்குக் கிடைக்கிறது.

உங்கள் மதத்துக்கு நான் மாறுவதானால் பணமோ தொழிலோ வேண்டாம். சமுதாயத்தில் என்ன அந்தஸ்து எனக்குத் தருவீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

வடக்கு மாகாணத்தில் நீங்கள் இஸ்லாம் மதம் மாறினால் 700,000 ரூபாய் பணம், முஸ்லீம் பிரதேசத்தில் காணி ,தொழில் தொடங்க மூலதனம் என்பன வழங்கப்படுகின்றனவாம்.

இது இப்பொழுது வடக்கு மாகாணத்தில் சாதாரண நிகழ்வாம்.

49 minutes ago, இணையவன் said:

இது புதிதல்ல,  நான் இலங்கையில் இருக்குப்போதே இது  நடைமுறையில் இருந்தது. பணத்துடன் பரம்பரை பரம்பரையாகக் கிடைக்காத அந்தஸ்தும் சமத்துவமும் இதுவரை செய்திராத தொழில்வாய்ப்பும் இலகுவாக மதம் மாறியவருக்குக் கிடைக்கிறது.

உங்கள் மதத்துக்கு நான் மாறுவதானால் பணமோ தொழிலோ வேண்டாம். சமுதாயத்தில் என்ன அந்தஸ்து எனக்குத் தருவீர்கள் ?

இஸ்லாம் மட்டுமல்ல , பல புதிய கிறீஸ்தவ மதங்களும் இப்படி பண உதவியும் வாழ்வாதார ஆதரவும் வழங்குகின்றன. இந்தியாவில் வாழ்வாதார உதவி தேவைப்படுபவர்களுக்கு பெரியார் அமைப்புகள் இப்படி மதம் மாற்றாமலே உதவி வருகின்றன. இவை மத நம்பிக்கை அற்ற அமைப்புகள்.

இலங்கையில் எனது மூதாதையர் உட்பட பலர் காலனிய காலத்தில் இப்படி வாழ்வாதார தேவைகளுக்காக மதம் மாறுவதை தடுக்க இந்து போர்டு உதயமானது. அந்த இந்து போர்டு தான் இலங்கையில் உள்ள இந்து கல்லூரிகளை கிறீஸ்தவ கல்லூரிகளுக்கு இணையாக கட்டி நிருவகித்து வந்தன. ஆனால் இந்து போர்டும்  சாதி அடக்குமுறையை மேவி செல்லவில்லை. 

இந்து சமயம் உண்மையில் இனிமையயான, அழகான சமயம். வாழ்வின் அனைத்து இனிமைகளையும் அனுபவித்து மகிழ ஒரு மதம் உண்டு என்றால் அது இந்து மதம். கிறீஸ்தவம் குற்ற உணர்வை அடிப்படையாக கொண்ட சமயம் என்று விமரிசிக்கும் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். ஆதாம் - ஏவாளின் பாவத்துடன் பிறந்து கிறிஸ்துவை கொன்ற பாவத்துடன் வளரும் மதம் கிறீஸ்தவம். ஆகவே எல்லா மதங்களிலும் நல்லவற்றையும் காணலாம், விரும்பத் தகாதவையும் உள்ளன. இந்து மதம் இந்த சாதி அடக்குமுறையை மேவி வெளிவந்தாலே எவ்வளவோ சிறப்பாக அமையும். மேலும் மற்றவர்களுக்கு உதவும் செயற்பாடுகளையும் உள்வாங்கி கொள்ள வேண்டும். மறைந்த சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, இராம கிருஷ்ண மிசன்கள் செய்தது போன்ற வறியவருக்கு உதவும் நற்செயல்களை மிகவும் அதிகரிக்க வேண்டும். அல்லது மதம் மாறுவதை இந்துக்கள் தடுக்க முடியாது.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Dash said:

இது தவறான சிந்தனை முதலாவது  சிங்களவன் ஏன் தமிழர் பகுதியில் வந்து குடியேற வேண்டும் , சிங்களவன் தமிழர் பகுதியில் குடியேற வேண்டிய அவசியம் இல்லை. 

50 களில் சிங்கள பிரதேசங்களிலும்  வறுமை வேலை வாய்ப்பின்மை இருந்த போது சிங்களவர் வடக்கு கிழக்கில் வந்து குடியேற ஆர்வம் காட்டினர், ஆனால் சிங்கள பிரதேசங்கள் அபரிதமான பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் இக்கால காட்டத்தில் எந்த ஒரு சிங்களவனும் பொருளாராத ரீதியாக பிந்தங்கிய வடக்கு கிழக்கில் வந்து குடியேற போவதில்லை. அதே போல் அங்கு இருக்கும் இராணுவமும் சேவை முடுந்தவுடன் தமது சொந்த ஊர்களுக்கு சென்று  குடியமற தான் விரும்புவார்கள் தமக்கு அன்னியமான ஊருக்கு வட போவதில்லை.

ஆனால் முஸ்லீம்கள் அப்படியல்ல வடக்கு கிழக்கு இரண்டையும் தம் வசபடுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயற்படுகின்றனர், அவர்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சனை நில பிரச்சனை இதனால் இவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது உள்ளது அதனால் தமிழர் நிலங்களை பிடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.அதுக்கு அவர்கள் பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர். மன்னார் மாவட்டம் இப்பொழுது ஒரு முஸ்லிம் மாவட்டம் இது எமது மக்கள் பலருக்கு தெரியாது. அடுத்து வவுனியா,பின்னர் கிளிநொச்சி அதற்கான வேலைகள் எல்லம் தொடங்கி விட்டன.

நீங்கள் மேற்குறிபிட்ட காரணத்தால் தான் வடக்கு கிழக்குக்கு அவர்கள் எல்லம் இடம் பெயர தயாராகின்றனர். 

சிங்களவன் இவர்களை மரியாதையாக தான் நடத்தினான் ஆனால் இவர்கள் தேவையில்லாமல் தமிழனிடம் காட்டிய வீரத்தை அவர்களிடமும் காட்ட போய் நன்றாக வாங்கி கட்டி கொண்டனர்.

இப்பொழுதெல்லாம் மேலே குறிபிட்ட கலட்டி பிரதேசத்திலேயே காணி வீடு வனக வெளிப்படையாக விலை கேட்கின்றனராம்.

தமிழர்களால் மட்டும் த‌னித்து இதை நிறுத்த முடியாது.....சிங்களவர்கள் குடியேறினால் மொழியை இழப்போம்,முஸ்லிம்கள் குடியேறினால் மதத்தையும், இழப்போம்...
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Maruthankerny said:

சொந்த மகனையே தனது மதத்தில் வைத்தருக்க முடியாத 
அற்ப நிலையில்தான் தந்தையின் மதம் இருக்கிறது.

அப்படி ஒரு மத்தை பின்பற்றியதற்காக தந்தைதான் 
தீக்குளிக்க வேண்டும் .... மாறிய மகனை ஏன் வெட்டினார் ?
இது கூட தந்தை இவளவு காலமும் காடைபிடித்த மதம் சார்ந்து 
சிந்திக்க வேண்டிய விடயமாக இருக்கிறது. 
தந்தையின் மதம் வாள்வெட்டு கத்தி குத்து போன்ற கொடூர 
மன நிலையில் மனிதர்களை வளர்க்கும் மதமாக இருக்குமோ 
என்ற அச்சமே எனக்கு வருகிறது. 

இந்த இடத்தில்தான் தமிழர்களை கொண்டுபோய் விடும் தந்தையின் மதம் 
என்று நான் இங்கு 10 வருடம் முன்பு எழுதிய போது .... அதை இந்து மத எதிர்ப்பு 
கருத்தாக பார்த்து என்னை திட்டி தீர்த்தார்கள்.
இனி யாரை திட்டுவார்கள் என்றுதான் புரியவில்லை?

நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம்?

1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.

2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.

3. காசிக்கோ, ராமேஸ்வரத்துக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.

4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.

5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.

6. ஒட்டு மொத்த இந்து சமூகத்தை கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.

7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.

8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை.

?மரமும் கடவுள்,
?கல்லும் கடவுள்,
?நீரும் கடவுள்(கங்கை),
?காற்றும் கடவுள் (வாயு),
?குரங்கும் கடவுள் அனுமன்,
?நாயும் கடவுள் (பைரவர்),
?பன்றியும் கடவுள் (வராகம்).

9. நீயும் கடவுள்,  நானும் கடவுள்... பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.

10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிரு திருமுறைகள்,

பெண் ஆசையை ஒழிக்க
?இராமாயணம்,

மண் ஆசையை ஒழிக்க
?மகாபாரதம்,

கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த
?பகவதம்,

அரசியலுக்கு
?அர்த்த சாஸ்த்திரம்,

தாம்பத்தியத்திற்கு
?காம சாஸ்திரம்,

மருத்துவத்திற்கு
?சித்தா, ஆயுர்வேதம்,

கல்விக்கு
?வேதக் கணிதம்,

உடல் நன்மைக்கு
?யோகா சாஸ்த்திரம்,

கட்டுமானத்திற்கு
?வாஸ்து சாஸ்திரம்,

விண்ணியலுக்கு
?கோள்கணிதம்.

11.யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர் தொடுத்தோ பரப்பப்படாத மதம்.

12. எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து "கொல்லாமை " "புலால் மறுத்தல்", ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம்.

13. இந்துக்களின் புனித நூல் என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம் ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது.

13. முக்தி எனப்படும் மரமில்லா பெருவாழ்விற்க்கு வழிகாட்டும் மதம்.

14. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.

15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனித மதம்.

இன்னுமும் சொல்லிக்கொண்டே போகலாம்......

இந்துவாக (இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமை கொள்வோம்.

நன்றி: முகநூல்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்
On 7/28/2018 at 7:48 PM, Jude said:

இந்த உங்கள் வாதம் தான் போர்க்குற்றங்கள் பற்றிய சிங்களவரின் வாதமும். இதோ போர்க்குற்றங்கள் பற்றிய  சிங்களவரின் வாதம்:

"காட்டுப்புறத்தில் குடியேறிய ஏழை மக்களையே குடியேற்ற  கிராமங்களில் கத்தியால் குத்தியும், கோடாரியால் வெட்டியும்,  , துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் கொலைவெறி தாண்டவமாடிய ஒரு மிருககூட்டத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்த மக்களை கொலைசெய்வதில்  தவறே அல்ல...அதொன்றும் வன்முறை யல்ல...விழிப்புணர்வு!"

1983 க்கு முன்னர் எந்த போர் குற்றம் தமிழர்கள்... சிங்களவர்கள்மீது புரிந்தார்கள்?

எந்த தமிழர்கள் காட்டுபுறத்தில் குடியேறிய சிங்களவர்களை கத்தியாலும்...உங்கள் ஸ்டைலில் கத்தியும் கொலை செய்தார்கள்?

முழுக்க முழுக்க சர்வ வல்லமை பொருந்திய ஒரு சிங்கள தேசத்தின் பெரும்பான்மையினம் எதுக்கு தமிழர்களின் எல்லையை அவர்கள் குடியேற தேர்ந்தெடுத்தார்கள்?

1958,1977,1983 என்று  ...சிங்களவன் அடித்தால் வாங்கிகொண்டு சத்தம்போடாம வடக்கு கிழக்குக்கு திரும்பி வந்து வீட்டுக்குள் இருந்து அழுதுவிட்டு திரும்பவும் சிங்கள தேசத்துக்கு திரும்பி சென்று தொழில்பார்க்கும் அளவிற்கு காட்டுமிராண்டிதனம் என்றால் என்னவென்று முதலில் காட்டியவர்கள் யார்...?

சரி இது எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்... 

சிங்களவன் எங்களை அடிச்சுகொண்டே இருந்தான், அதனால் வலி தாங்கமுடியாமல் சிங்களவனை நாங்கள் திருப்பி அடிச்சோம்...

இதில் எந்த விதத்திலும் சம்பந்தப்படாத முஸ்லிம்கள் எதுக்கு சிங்களவன்கூட சேர்ந்து எங்களை தாக்கினார்கள்?

விட்டால் வடபகுதியில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை நீங்கள் கையில் எடுப்பீர்கள்...

வடக்கில் சிங்கள ராணுவ இயந்திரத்தின் செயற்பாடுகள் ஈழ இயக்கங்களால் முடக்கப்பட தொடங்கியது எப்போ?

முஸ்லிம்களை புலிகள் வெளியேற சொன்னது எப்போ? புலிகள் முஸ்லிம்கள் சொல்வதுபோல பாஸிச வாதிகளாய் இருந்தால் எப்போதோ அவர்களை வெளியேற சொல்லியிருப்பார்களே...

ஏன் பண்ணவில்லை?  உங்களிடம் ஏதாவது பதில் இருக்குமா?

வளைகுடா பகுதியில்  கூட வாழ்ந்த தமது இனத்தையே முஸ்லீம் இயக்கங்கள் கொத்து கொத்தாய் கொன்று குவிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? அவர்கள் அவர்களின் இனத்துக்கே விசுவாசமில்லை பிறகு எப்படி நமக்கு விசுவாசமாய் இருப்பார்கள்?

On 7/28/2018 at 8:29 PM, Jude said:

இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறிய மகனை கத்தியால் குத்தியதை நீங்கள் ஆதரிப்பதற்கு காரணம் முஸ்லிம்கள் எங்களுக்கு உதவாதது தான் என்றால் எங்கள் மக்களை முன்னின்று அழித்து ஒழித்த இந்தியாவின் இந்து மதத்தில் தொடர்ந்தும் இருப்பவர்களை என்ன செய்ய போகிறீர்கள்? நீங்களே எம்மை அழித்த இந்து மதத்தில் தானே தொடர்ந்தும் இருக்கிறீர்கள்? உங்கள் இந்துமத வெறியை மறைக்க ஏன் மாண்டு போன தமிழ் மக்களின் சோகத்தை பயன்படுத்துகிறீர்கள்? 

இந்த பகுதியில் முஸ்லிம்கள் எங்களுக்கு உதவவில்லை அல்லது எமக்கு உதவவேண்டும் என்று எங்கேயாவது நான் கவலை பட்டேனா?

இல்லை, முஸ்லிம்கள் தயவு   செய்து எமக்கு உதவுங்கள் என்று,.............வாழ்வு கொடுத்த தேசத்து மக்களின் வாழ்க்கையையே சிதைக்கும் அந்த  மனிதாபிமானிகளை.... உலகின் மூலையில் இருக்கும் எந்த ஆறறிவு படைத்த இனமாவது அவர்களை கேட்குமா?

 சும்மா/அவர்கள் சுயரூபம் அதுதான் என்பதை சுட்டிகாட்டினேன்...

எம்மை முன்னின்று அழித்தது இந்திய அரசியலா இந்து மதமா?

யார் ஐயா நீங்கள்...என்ன சொல்ல வர்றீர்கள்?

நானும் உங்களை என்னமோ ஏதோனு நினைச்சு தேவையற்ற விதத்தில் விவாதம்பண்ணி என் நேரத்தை தொலைச்சுட்டேன்...!

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, இணையவன் said:

உங்கள் மதத்துக்கு நான் மாறுவதானால் பணமோ தொழிலோ வேண்டாம். சமுதாயத்தில் என்ன அந்தஸ்து எனக்குத் தருவீர்கள் ?

 இது இந்த விவாதத்தின் போக்கிலிருந்து சிறிது விலகி செல்லும் வரிகள்தான்  இருந்தாலும், கேட்கவேண்டும் போல தோன்றுவதால்...

உங்களது .உள்ளூர் அளவில் அதாவது பிரான்சில் ,சரமாரியாக பிரெஞ்சு பிரஜைகளை சுட்டு கொன்றபின்... கனரக வாகனத்தை ஏற்றி மாற்று திறனாளிகளைகூட நசுக்கி கொன்றபின்....

தற்போது என்ன அந்தஸ்து நீங்கள் குறிப்பிடும் மத கொள்கையை இறுக்கமாக கடைப்பிடிப்பவர்களுக்கு அங்கே  இருக்கிறது என்று அறிய ஆவல்....       இணையவன்...

உங்களுக்கு ஒரு அந்தஸ்து கொடுத்த பிரான்சின் நிம்மதியை கெடுக்கு இஸ்லாமியர்களுக்கு நீங்கள் என்ன கொடுப்பீர்கள்?

16 hours ago, valavan said:

நல்ல கேள்வி.
தொடர்ச்சியாக முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல்களின் பின்னர் பிரஞ்சு அரசாங்கமோ மக்களோ இஸ்லாமியர்களை இழிவுபடுத்தவும் இல்லை. அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் இல்லை. தாக்குதல்களைக் கண்டிக்கும்போதுகூட இஸ்லாம் மதத்தை இழுக்கவில்லை. பிரெஞ்சு மக்கள் கூட பொது வெளியில் இஸ்லாமியர்களுடன் வழக்கம் போலவே பழகினார்கள். ஓரிரு சிறு அசம்பாவிதங்கள் நடந்தாலும் பிரான்ஸ் இஸ்லாமை எதிர்ப்பதை விரும்பவில்லை. பிரான்சின் கொள்கைப்படி யாரும் எந்த மதத்தையும் கலாச்சாரத்தையும் மொழியையும் பின்பற்றலாம். ஆனால் இவையெல்லாம் ஒருவரின் தனிப்பட்ட பின்பற்றல். தொழுகையையும் கலாச்சாரத்தையும் நான்கு சுவருக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். பொது வெளியில் இவைற்றை கொண்டு வருவது எதிர்க்கப்படும். முஸ்லிம் பெண்கள் முட்டாக்குப் போடுவதும் இதற்காகத்தான் தடை செய்யப்பட்டது. பொது வெளியில் எல்லோருமே சம அந்தஸ்துள்ள பிரெஞ்சுக் காரர்கள். 

ஒபாமா அண்மையில் சொன்னதுபோல் கால்பந்து உலகக் கோப்பையை வென்ற பிரெஞ்சு அணி உலகிற்குத் நல்ல உதாரணத்தைக் காட்டியுள்ளனர். கருப்பு வெள்ளை மத கலாச்சார வேறுபாடுகள் எல்லாவற்றையும் தாண்டி பிரெஞ்சுக் கொடியின் கீழ் தாம் எல்லோரும் பிரெஞ்சுக்காரர்கள் என்ற ஒற்றுமையைக் காட்டினர்.

இலங்கையில் இக் கொள்கை சாத்தியப் படாது. இங்கு மதமே முன்னிலைப்படுத்தப் படுகிறது. என்னைப் பொறுத்தவரை தமிழர்கள் தமது இனத்தைத் தக்கவைக்க வேண்டுமானால் மதங்களைத் தாண்டி வர வேண்டும். தமிழரில் எல்லா மதங்களும் உள்ளன. மத எதிர்ப்புக் கொள்கை தமிழரை வளர விடாது. தமிழருக்கு என்று தனியாக ஒரு மதம் இல்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழை வளர்க்கிறோம் என்ற பெயரில் சைவம் வேறு மதங்களை எதிர்ப்பதற்காகத் தமிழைக் குறுகிய நோக்கில் கருவியாகப் பயன்படுத்தியது. இன்று இந்து என்ற போலி அடையாளத்தை முன்வைக்கத் தமிழை ஆயுதமாக்குகிறோம். இது ஒருபோதும் வெற்றியளிக்கப் போவதில்லை.

இஸ்லாம் போன்ற மதம் உலகை என்றுமே ஆள முடியாது. அறிவியல் வளர்ச்சியில் மதங்களெல்லாம் குறுகிப் போகும். இதனால்தான் முஸ்லிம்  நாடுகளில் மனித, உலக் வரலாறுகள் கூடச் சரியாகக் கற்பிக்கப் படுவதில்லை. இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் கூட இது பெயரளவில்தான் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, இணையவன் said:

தொடர்ச்சியாக முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல்களின் பின்னர் பிரஞ்சு அரசாங்கமோ மக்களோ இஸ்லாமியர்களை இழிவுபடுத்தவும் இல்லை. அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் இல்லை.

பிரெஞ்சு அரசாங்கமோ, பிரான்ஸ் மக்களோ அங்கே இருக்கும் இஸ்லாமியர்களை வெறுக்கமாட்டார்கள்னு எல்லோருக்குமே தெரியும், ஏனென்றால் அவர்கள் கிளைகளைபற்றி கவலைபடுவதில்லை ...வேர்களை அறுக்கவே முயற்சிப்பார்கள்...அதனால்தான் ஐரோப்பாவில் முஸ்லிம்கள் செய்யும் மனித படுகொலைக்கு அடுத்தநாளே...போர் விமானங்களும், அணு ஆயுத நீர்மூழ்கிகளும் வளைகுடா நோக்கி புறப்படுகின்றன...

அந்த காய் நகர்த்தலில் பிரெஞ்சு அரசும் , அந்த அரசை தேர்வு செய்த மக்களும் சம்பந்தபடவில்லையென்று நீங்கள் உறுதிபடுத்தினால்...

அதை நம்ப எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மதம் என்று வந்துவிட்டால் முஸ்லீம்கள் ஒன்றினைந்து விடுவார்கள். அவர்கள் பிரான்சில் வாழ்ந்தலும் சரி, எங்கு வாழ்ந்தாலும் சரி. அதுபோல் இனம் என்று வந்துவிட்டால் சிங்களவர்கள் ஒன்றினைந்து விடுவார்கள்.

கிழக்கு மாகாண முஸ்லீம்களிடம் கதைத்து பார்த்தால் தெரியும் அவர்க‌ள் எந்தளவு மதவாதிகள் என்று.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

மதம் ,இனம் . தமிழன் என்று வந்தால்  கொஞ்சம் நடுநிலைமை என்று கிளம்பும் ,அடுத்த கொஞ்சம் அட்டகாசமாய் சவுண்டு விட்டு கடைசியில் முறுக்கி கொண்டு விலகுவினம் பிறகு காட்டிகொடுப்பினம் ,இன்னும் கொஞ்சம் நாங்கள் பரம்பரை எடிகேட் பிப்பிள் என்று பின்பக்க கக்கூசு பக்கமாய் ஓட்டை போட்டு இதெல்லாம் சரிவராது என்று பரப்புரை செய்வினம் , இதெல்லாத்தையும் விட கொடுமையானது அதுவரை நடந்த செயற்பாடுகளை 100வீதம் சரி என்றாலும் இந்த கோஸ்ட்டி 200வீதம் பிழை என்று நிறுவிக்கொண்டு இருப்பினம் .இப்படி போக கடைசியில் தத்து பித்து என்று வளர்ந்த இயக்கம்  குடும்பத்துடன் அழிந்து போய் இருக்கும் . எல்லாம் முடிந்த பின் அறிவு பிறந்த  மந்தைக்கூட்டமாகி தலைவரை தேடுங்கள் ................................

9 hours ago, valavan said:

பிரெஞ்சு அரசாங்கமோ, பிரான்ஸ் மக்களோ அங்கே இருக்கும் இஸ்லாமியர்களை வெறுக்கமாட்டார்கள்னு எல்லோருக்குமே தெரியும், ஏனென்றால் அவர்கள் கிளைகளைபற்றி கவலைபடுவதில்லை ...வேர்களை அறுக்கவே முயற்சிப்பார்கள்...அதனால்தான் ஐரோப்பாவில் முஸ்லிம்கள் செய்யும் மனித படுகொலைக்கு அடுத்தநாளே...போர் விமானங்களும், அணு ஆயுத நீர்மூழ்கிகளும் வளைகுடா நோக்கி புறப்படுகின்றன...

அந்த காய் நகர்த்தலில் பிரெஞ்சு அரசும் , அந்த அரசை தேர்வு செய்த மக்களும் சம்பந்தபடவில்லையென்று நீங்கள் உறுதிபடுத்தினால்...

அதை நம்ப எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

வேர்களை அறுக்க முயற்சிப்பது முடியாத காரியம் என்பது முட்டாள்தனமானது என்பது பிரான்சுக்கு நன்றாகத் தெரியும். அழிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதைச் செய்ய மாட்டார்கள். 

ஏனைய வளர்ந்த நாடுகளைப் போலவே பிரான்சும் தனது பொருளாதாரத்தைத் தக்க வைப்பதில் குறியாக இருக்கும். இன்று ஆயுத விற்பனையில் பிரான்ஸ் 3ஆவது இடத்திலும் கட்டுமானம் போக்குவரத்து அணுமின் போன்ற துறைகளிலும் பெரும் பங்கு வகிப்பதைக் கவனித்தீர்களானால் வளைகுடாப் போர்களில் பிரான்சின் பங்களிப்பு பற்றிய அரசியலைப் புரிந்து கொள்ளலாம்.

சுயமாக உணர்ந்து மதம் மாறுவது ஒருவரது தனிப்பட்ட உரிமை! 

பெற்றோர்கள் தமது பிள்ளைகள் மீது உரிய அன்பை, அக்கறையைச் செலுத்தினால் அவர்கள் ஏன் பெற்றோர் விருப்பத்துக்கு மாறாக மதம் மாறப் போகிறார்கள்?

ஆனால் பிரச்சாரங்கள், வரப்பிரசாதங்கள், ......, மக்களின் ஏழ்மை, ..... போன்றவற்றை பயன்படுத்தி  மதம் மாற்றுவது என்பதுவும் மதவெறி தலைக்கேறிய ஒரு மதப் பயங்கரவாதமே! 

சகல மதங்களும் உயர்ந்த கருத்துக்களை, தத்துவங்களை போதிக்கும் அதே வேளையில், அந்த மதங்களை பின்பற்றும் மோசமான கயவர்களால், மத வெறியர்களால் மதமாற்றம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த வகையில், உலகில் பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்ட, நிறுவனமயப்படுத்தப்ட்ட மிக மோசமான  மதமாற்றம் என்னும் மதவெறிப் பயங்கரவாதத்தில் மிக மிக நீண்டகாலமாகவே ஈடுபட்டு வந்துள்ளனர். இன்னமும் ஈடுபட்டு வருகின்றனர். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, போல் said:

பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியவை தமது மதத்தில் உள்ள மக்களுக்கு தேவையான பொருளாதார மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குகிறார்கள். அதோடு தமது மதம் பற்றி பிரச்சாரம் செய்கிறார்கள் - அது அவர்களின் பேச்சுரிமை, சுதந்திரம். 

வறுமையில் வாடும் இந்துக்களும் , கடும் நோயால் பீடிக்கப்பட்ட இந்துக்களும் தமக்கு இந்து அமைப்புகள் உதவாத நிலையில் பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் அமைப்புகளுக்கு உதவி தேடி போகிறார்கள். பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் தத்தமது மத மக்களுக்கு உதவுவதால் இவர்கள் மதம் மாற வேண்டிய நிலை உருவாகிறது. இந்துக்களும் உதவ மாட்டார்கள், இவர்கள் மதம் மாறாவிட்டால் மற்ற மதத்தில் உள்ளவர்களுக்கு அவர்கள் மத அமைப்புகள் செய்யும் உதவியும் கிடைக்காது. உங்களிடம் நேரடியாக இரண்டு கேள்விகள்:

  1. இவ்வாறாக கடுமையான நோயால் வாடும் இந்துக்களுக்கு அல்லது வறுமையில் வாடும் இந்து மக்களுக்கு மதம் மாறாமல் தமது நோய்க்கு சிகிச்சை பெற அல்லது வறுமையை போக்க நீங்கள் முன்வைக்கும் தீர்வு என்ன?
  2. தமது மத மக்களுக்கு உதவுவதற்கு என்று பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் மக்கள் அவர்கள் பணத்தில் வைத்து இருக்கும்  மருத்துவமனைக்கு வரும் கடும் நோயால் வாடும் இந்துக்களை அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள்? திருப்பி அனுப்பி விட வேண்டுமா? அந்த இந்துக்கள் தாம் அந்த மருத்துவமனையை நடத்தும் மதத்துக்கு மாறி "நாங்கள் உங்கள் மதம், ஆகவே எங்களுக்கும் சிகிச்சை பெற உரிமை உண்டு" என்கிறார்களே? அந்த இந்துக்களை என்ன செய்ய சொல்கிறீர்கள்?
  • கருத்துக்கள உறவுகள்

அவங்க புடிச்சு "அதை" வெட்டுறதுக்கிடையில.. தந்தை அவசரப்பட்டிட்டார். கொஞ்சம் விட்டுப் பிடிச்சிருந்தால்.. குரானின் பெருமை சுன்னத்தில் காட்டி இருப்பார்கள். ?

  • கருத்துக்கள உறவுகள்
On 7/31/2018 at 10:24 PM, nedukkalapoovan said:

அவங்க புடிச்சு "அதை" வெட்டுறதுக்கிடையில.. தந்தை அவசரப்பட்டிட்டார். கொஞ்சம் விட்டுப் பிடிச்சிருந்தால்.. குரானின் பெருமை சுன்னத்தில் காட்டி இருப்பார்கள். ?

நீங்கள்  "அதை" - லிங்கத்தை கும்பிடுவீர்கள்.?

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Jude said:

நீங்கள்  "அதை" - லிங்கத்தை கும்பிடுவீர்கள்.?

அவர்கள் உருவகித்துக்குக் குப்பிடுறார்கள்.. அதனால்.. வலியும் இல்லை.. இழப்பும் இல்லை. ஆனால் இவர்கள் உள்ளதை வெட்டிக் கும்பிடுகிறார்கள்.. வலி.. வேதனை.. இழப்பு..! இதெல்லாம் உங்களுக்கு விளங்கி... விளக்கி...????! ?

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nedukkalapoovan said:

அவர்கள் உருவகித்துக்குக் குப்பிடுறார்கள்.. அதனால்.. வலியும் இல்லை.. இழப்பும் இல்லை. ஆனால் இவர்கள் உள்ளதை வெட்டிக் கும்பிடுகிறார்கள்.. வலி.. வேதனை.. இழப்பு..! இதெல்லாம் உங்களுக்கு விளங்கி... விளக்கி...????! ?

நெடுக்கர், இந்த பகிடிகளுக்கு அப்பால், உண்மையில் ஆழமான தத்துவங்களும் சுகாதாரமான வாழ்க்கை முறைகளும் இந்த சம்பிரதாயங்களுள் அடங்கி இருக்கின்றன. 

லிங்க வழிபாடு பிறப்பின் மகத்துவத்தையும் தோன்றலின் பெறுமதியையும் நாம் மதிக்கவேண்டிய கடப்பாட்டை காட்டி நிற்கிறது. இன்றுவரை நம்மால் பிறப்பை முற்றிலும்  செயற்கையாக செய்ய முடியவில்லை. ஆகவே பிறப்பும் தோன்றலும் மிகவும் பெறுமதி மிக்கவை - மகத்துவமானவை.  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எமது முன்னோர்கள் பிறப்பும் தோன்றலும் மகத்துவமானவை என்றும் அதை நாம் போற்ற வேண்டும் என்றும் அறிந்து கொண்டு தமது வழித்தோன்றல்களுக்கு சமய சம்பிராதயமாக லிங்க வழிபாட்டை   விட்டு சென்றுள்ளார்கள்.

யூதர்களும் முஸ்லிம்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக  ஆண் குழந்தைகளின் பிறப்புறுப்பின் முன்தோலை அகற்றி விடுகிறார்கள். இன்று எல்லா அமெரிக்க வைத்தியசாலைகளிலும் சமய வேறுபாடு இன்றி இந்த தோல் அகற்றலை செய்யுமாறு பெற்றோரை கேட்கிறார்கள். இதற்கு காரணம் இவ்வாறு தோல் அகற்றப்பட்ட ஆண்களுக்கு சிறுநீர் தோற்றுநோய்கள் முதல் சில வகையான புற்றுநோய்கள் வரை வரும் சாத்தியம் இல்லாமல் போவது தான். இது பல பத்து ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மக்களை ஆய்வு செய்து  செய்யப்பட்ட மருத்துவ விஞ்ஞான முடிவு. உண்மையில் குர்ஆனில் குறிப்படத்தக்க அளவு நல்வாழ்வுக்கான வழி முறைகள் இருக்கின்றன. இவற்றில் பல யூதர்களுக்கும் அவர்களின் சமய முறைகளில் இருக்கின்றன. அல்ஜெப்ரா என்ற கணித முறைகள் முதல் பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளை முஸ்லிம்கள் தான் உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இன்றைய இலக்க முறையை இந்தோ அரபிக் இலக்கங்கள் என்று சொல்வார்கள். சீனாவும், ஐரோப்பாவில் ரோம சாம்ராஜ்யமும் தமது சொந்த இலக்க முறையை வைத்து இருந்தும் இந்த இந்திய இலக்கங்கள் நிலைத்துவிட காரணம் அரபி மக்களே. எகிப்த்து நாட்டின் பிரமிட்களின் கணித முறைகளும் இறந்த உடல்களை பதப்படுத்தும் மம்மி முறையும் உலகில் முன்னோடியான விஞ்ஞான கண்டுபிடிப்புகள். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பிரபலமான பல விஞ்ஞானிகள் முஸ்லிம்கள். ஆகவே குர்ஆனையும் முஸ்லிம்களையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/29/2018 at 11:27 PM, இணையவன் said:

உங்கள் மதத்துக்கு நான் மாறுவதானால் பணமோ தொழிலோ வேண்டாம். சமுதாயத்தில் என்ன அந்தஸ்து எனக்குத் தருவீர்கள் ?

உங்களது  மதம்  சம்பந்தமான  வெறுப்பை  உணர முடிகிறது  இணையவன்

ஆனால் ஒருவருக்கு அவரது மதம்  என்பது  அடிப்படையாக  பார்க்கப்படுமானால்...??

அதிலுள்ள நல்லது கெட்டது

சரி  பிழைகளை களைய  அல்லது மாற்ற  முனையவேண்டுமே தவிர

உங்களிடம்  வந்தால் எனக்கு என்னை  தரம் தருவீர்கள்  என்பது சரியா?

உதாரணமாக 

நம்ம  குடும்பத்திலிருந்து விலகி  வேறு  குடும்பத்துக்கு  செல்வதற்காக  இவ்வாறு கேட்டால்  எப்படியிருக்கும்??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

நெடுக்கர், இந்த பகிடிகளுக்கு அப்பால், உண்மையில் ஆழமான தத்துவங்களும் சுகாதாரமான வாழ்க்கை முறைகளும் இந்த சம்பிரதாயங்களுள் அடங்கி இருக்கின்றன. 

லிங்க வழிபாடு பிறப்பின் மகத்துவத்தையும் தோன்றலின் பெறுமதியையும் நாம் மதிக்கவேண்டிய கடப்பாட்டை காட்டி நிற்கிறது. இன்றுவரை நம்மால் பிறப்பை முற்றிலும்  செயற்கையாக செய்ய முடியவில்லை. ஆகவே பிறப்பும் தோன்றலும் மிகவும் பெறுமதி மிக்கவை - மகத்துவமானவை.  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எமது முன்னோர்கள் பிறப்பும் தோன்றலும் மகத்துவமானவை என்றும் அதை நாம் போற்ற வேண்டும் என்றும் அறிந்து கொண்டு தமது வழித்தோன்றல்களுக்கு சமய சம்பிராதயமாக லிங்க வழிபாட்டை   விட்டு சென்றுள்ளார்கள்.

யூதர்களும் முஸ்லிம்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக  ஆண் குழந்தைகளின் பிறப்புறுப்பின் முன்தோலை அகற்றி விடுகிறார்கள். இன்று எல்லா அமெரிக்க வைத்தியசாலைகளிலும் சமய வேறுபாடு இன்றி இந்த தோல் அகற்றலை செய்யுமாறு பெற்றோரை கேட்கிறார்கள். இதற்கு காரணம் இவ்வாறு தோல் அகற்றப்பட்ட ஆண்களுக்கு சிறுநீர் தோற்றுநோய்கள் முதல் சில வகையான புற்றுநோய்கள் வரை வரும் சாத்தியம் இல்லாமல் போவது தான். இது பல பத்து ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மக்களை ஆய்வு செய்து  செய்யப்பட்ட மருத்துவ விஞ்ஞான முடிவு. உண்மையில் குர்ஆனில் குறிப்படத்தக்க அளவு நல்வாழ்வுக்கான வழி முறைகள் இருக்கின்றன. இவற்றில் பல யூதர்களுக்கும் அவர்களின் சமய முறைகளில் இருக்கின்றன. அல்ஜெப்ரா என்ற கணித முறைகள் முதல் பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளை முஸ்லிம்கள் தான் உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இன்றைய இலக்க முறையை இந்தோ அரபிக் இலக்கங்கள் என்று சொல்வார்கள். சீனாவும், ஐரோப்பாவில் ரோம சாம்ராஜ்யமும் தமது சொந்த இலக்க முறையை வைத்து இருந்தும் இந்த இந்திய இலக்கங்கள் நிலைத்துவிட காரணம் அரபி மக்களே. எகிப்த்து நாட்டின் பிரமிட்களின் கணித முறைகளும் இறந்த உடல்களை பதப்படுத்தும் மம்மி முறையும் உலகில் முன்னோடியான விஞ்ஞான கண்டுபிடிப்புகள். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பிரபலமான பல விஞ்ஞானிகள் முஸ்லிம்கள். ஆகவே குர்ஆனையும் முஸ்லிம்களையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

ஜுட்,

நான் இஸ்லாமிய நாட்டில் பல வருங்கள் வழ்கின்றேன்.   இஸ்லாம் எனும் மதம் மற்ற மதங்களை ஏற்றுக்கொள்வதில்லை. சவூதி போன்ற நாடுகளில் பைபிலை தூக்கி நிலத்தில் அடிப்பார்கள் / இங்கு கட்டாரில் ரமசான் காலத்தில் உணவகங்கள் எல்லாம் மூடி விடுவார்கள் பசியோடு நாம் இருப்போம். மேலும் உலகத்தில் சிறந்த மதம் இஸ்லாம் மட்டுமே என்று சொல்வார்கள். மற்ற மதங்களிற்கு எந்த மரியாதையும் செலுத்த மாட்டர்கள். இஸ்லாம் ஒரு intolerance மதம் இதனாலேயே நாம் இதை வெறுக்கின்றேம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.