Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

``பீலா விடுறதக்கூட உயர்வா விட்டோமா இல்லையா?!" இது சீமான் வைரல் புருடாக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

``பீலா விடுறதக்கூட உயர்வா விட்டோமா இல்லையா?!
 
மூக வலைதளங்களில் பகிரப்படும் காணொலிகளில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடைகளிலும், பேட்டிகளிலும் பேசியவைதான் சமீபமாக அதிகம் பகிரப்படுகின்றன.. 

சீமான் பேசியதில் சமீபத்திய வைரல்ஸ் இவை..

'பிரபாகரன் இருந்த இடத்தில் சீமான் இருந்திருந்தால் ஒரு சிங்களன் உயிரோடு இருந்திருக்க மாட்டான்'

``நான் ஒருநாள் கோவிச்சுட்டு இருந்தேன். சிவாஜி ஐயா வந்தாரு. 'என்னடா ராஜா உன் பிரச்னை'ன்னு கேட்டாரு. 'என்ன எழுதிக் கொடுத்தாலும் கிழிச்சுப் போடுறாங்க'ன்னு சொன்னேன். 'உனக்கு என்ன தோணுதோ அதை என்கிட்டே சொல்லிடு. நான் 'டேக்'ல பேசி விட்டுடுறேன். பேசிட்டு ஓகேவா'ன்னு கேப்பாரு. 'நானும் ஓகே'ன்னு சொல்லுவேன்."

``நாற்பதாயிரம் டன் அரிசியைச் சுமந்து நடுக்கடலில் வந்துகொண்டிருந்த ஆஸ்திரேலியக் கப்பலை வழியில் நிறுத்தி விட்டுட்டுப் போகச் சொன்னார் பிரபாகரன். உடனே அவர்கள் போனார்கள். அந்தக் கப்பலைத்தான் எனக்கு சுட்டுப் பழகிக்கக் கொடுத்தார்." 

``விசா வாங்குவதற்காக அமெரிக்கத் தூதரகம் போனோம். ஆயிரக்கணக்கானோர் வரிசையில நின்னுட்டு இருந்தாங்க. கூட வந்த மச்சினன் தங்கர்பச்சான் இவனுக்கு இந்தம்மா விசா கொடுக்காதுன்னு நினைச்சாரு. டை கட்டிட்டு இருந்தவன் எல்லாம் என்னையே பாக்குறான். அந்த வெள்ளைக்கார அம்மாகிட்ட போனேன். என்னுடைய புகைப்படங்கள், வாங்குன பரிசுகள் மற்ற ஆவணங்கள் எல்லாம் அவங்ககிட்ட கொடுத்துட்டு அந்தம்மாகிட்ட வணக்கம்னு சொன்னேன். எதுவுமே கேக்கல வாங்கி வெச்சுட்டு 'ஹாப்பி ஜர்னி'ன்னு சொல்லிடுச்சு!" 

``ஏ.கே 74 ரகத் துப்பாக்கியை நானும் எங்க அண்ணனும் சுட்டுப் பயிற்சி எடுக்கும்போது, 'அண்ணே.. இது ரஷ்யாவுக்கு அப்புறம் வேற எங்க இருக்கு'ன்னு கேட்டேன். 'நம்மகிட்டதான் இருக்கு. இந்தியாவுல இல்ல'ன்னு சொன்னாரு. 'அப்போ இந்தியாவிலேயே ஏ.கே 74ல சுட்டது நான்தானா'ன்னு கேட்டேன். 'ஆமா, அதைப் போய் எல்லார்க்கும் சொல்லு சொல்லுங்கிறாரு!" 

சீமான்

``நம்மகிட்ட குதிரைப்படை இல்ல. யானைப்படைதான். ஒரு கப்பல்ல அறுபதாயிரம் யானைகளை ஏத்திக்கிட்டு போயிருக்கான். போயி போர்லாம் போடலை. அவ்வளவு யானைகளையும் வரிசையா நிறுத்தி இருக்கான். பார்த்த உடனே எதிரி விழுந்துக் கும்புட்டான். நான் சண்டைக்கு வரல. நீ என்ன சொல்றயோ கேக்கறேன்னுட்டான்!" 

``தமிழ்நாடு கிரிக்கெட் அணியை உருவாக்குவேன். 'இந்திய அணி உலகக்கோப்பை விளையாடப்போவதற்கு முன்பு என்னுடைய தமிழ்நாட்டு அணியை வென்றுவிட்டுத்தான் போகணும்'னு சவால் விடுவேன்" 

``ஆமை ஓட்டை மல்லாக்கத் திருப்பிப்போட்டு ஒரு ஆள் பயணம் போவதைப் பார்த்தேன். இருபத்தெட்டு கிலோ ஆமைக்கறியை அண்ணன் பிரபாகரன் எனக்குக் கொடுத்தார்." 

``சிற்பிகளுக்கு மாலை இடையூறாக இருக்குன்னு மாலையை இப்படிப் போட்டு வடிச்சான். ரொம்பநேரம் அந்த வேலையை செய்யும்போது உடல்சூட்டுலேயும், வெயில் வெப்பத்துலேயும் பூ வாடி உதிர்ந்துட்டு வெறும் நூல் மட்டும் அவன் முதுகுல இருந்தது. அந்த நூலுக்கு பேர்ல பூ உதிர்ந்திருந்துச்சு அதனாலே அது பேர் பூணூல்!"

``ஸ்பீச் எங்க இருந்து வருது. என் பேச்சுக்கு முன்னாடி ஒரு எஸ் போட்டா ஸ்பீச் ஆகுது. 'உடன்'க்கூட ஒரு 'எஸ்' போட்டா 'சடன்', 
'தாக்கு' அதை அப்படியே 'ஏ' போட்டு அட்டாக்கு" 

``அதிகாரத்தைக் கைப்பற்றுவோம். கட்டாயப் பாடமாக இந்தியை ஆக்காமல் பஞ்சாபியை ஆக்குவோம். அன்பு உடன்பிறப்புகளுக்காக சீக்கிய மொழியை நாம் படிப்போம்." 

`` 'சீமான் சயனைடு கட்டுவாரா'ன்னு கேக்குறாங்க. நானே சயனைடு தானடா!" 

``பீலா விடுறோம்னே வெச்சுக்கோ. பீலா விடுறத கூட உயர்வா விட்டோமா இல்லையா!"

விகடனுக்கு
நன்றி
நன்றி
நன்றி

https://www.vikatan.com/news/politics/135490-seeman-and-his-viral-comment.html

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் தமிழ்த்தேசியத்தின்பாலான உறுதியென்பதைச் சிதைக்கும் எண்ணம் ஒருவருக்கு வருகிறதென்றால், நிச்சயம் அவர் தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர் என்பதுதான் எனது கருத்து.

இன்று சீமானை விமர்சிக்கும் விகடன் குழுமமாக இருக்கட்டும், தினமலர் ஆக இருக்கட்டும், ஹிந்துவாக இருக்கட்டும், இவர்கள் எல்லோருமே திராவிடக் கொள்கை ஆரம்பித்த காலத்திலிருந்தே இன்றுவரைக்கும் தமிழ்த் தேசியம் பேசும் அனைவருக்கு எதிராகவும் செயற்பட்டு வருகிறார்கள். 

இதற்கு முக்கியமான காரணமாக அமைவது அப்பத்திரிக்கை நிறுவனங்களை ஆளும் அல்லது வழிநடத்துகின்றவர்கள் தமிழ்த்தேசியக் கொள்கைக்கெதிரான பிராமணர்களாக இருப்பது ஆகும்.

தமிழ்த்தேசியத்தின் ஒரு அங்கமான ஈழத்தமிழரின் தேசிய விடுதலைப் போரட்டத்தினை எதிர்ப்பதென்னும் இவர்களின் போக்கு இந்த அடிப்படையேலே பார்க்கப்படுதல் அவசியம்.

ஹிந்துவை ஆரம்பித்த சுப்ரமணிய ஐய்யராக இருக்கட்டும், விகடன் குழுமத்தை ஆரம்பித்த புத்தலூர் வைத்தியநாதர் ஐய்யராக இருக்கட்டும், தினமலரை ஆரம்பித்த ராமசுப்பைய்யராக இருக்கட்டும், துக்ளக்கினை ஆரம்பித்த சோ ராமசாமியாக இருக்கட்டும், ஹிந்துவில் தமிழின விஷம் கக்கிய  ராம் மாணிக்கலிங்கம், பார்த்தசாரதி, பத்மநாபன் ஆகிய எல்லோருமே பிராமணர்கள்தான்.இவர்களைவிடவும், இன்றும் 2009 இனக்கொலைக்காக மகிந்தவைப் பாராட்டி கெளரவிக்க முன்னிற்கும் சுப்ரமணியசுவாமி கூட பிராமணர்தான். 

ஆக, இவர்களின் விமர்சனங்கள் இப்படித்தான் இருக்குமென்பது ஆச்சரியமல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

தேசியவெறிக்கும் தேசிய உணர்வுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

நாஸிகள் போன்று தேசிய வெறிகொண்டவர்கள் மற்றைய இனங்களின் மீது வெறுப்பை உமிழ்பவர்கள். சீமான் இந்தவகையில் உள்ளதை அவர் பேச்சுக்கள் காட்டுகின்றன.

தேசிய உணர்வுகொண்டவர்கள் தமது தேசியத்தின் மீது பெருவிருப்பும் பெருமையும் கொண்டவர்கள்.அதே நேரத்தில் பிற இனங்களின் தேசிய உணர்வுகளையும் மதிப்பவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragunathan said:

இன்று சீமானை விமர்சிக்கும் விகடன் குழுமமாக இருக்கட்டும், தினமலர் ஆக இருக்கட்டும், ஹிந்துவாக இருக்கட்டும், இவர்கள் எல்லோருமே திராவிடக் கொள்கை ஆரம்பித்த காலத்திலிருந்தே இன்றுவரைக்கும் தமிழ்த் தேசியம் பேசும் அனைவருக்கு எதிராகவும் செயற்பட்டு வருகிறார்கள். 

தினமலர்,ஹிந்து,துக்ளக்கைவிடுங்கள் காலம் காலமாக எங்களை பற்றி  எமது போராட்டம்பற்றி அவதூறு பரப்புவதற்கே அவதாரம் எடுத்தவர்கள்.

ஆனால் விகடனை அவர்கள் வரிசையில் நீங்கள் சேர்த்தது விகடன் எமது போராட்டத்துக்கு வழங்கிய தன்னால் முடிந்த பங்களிப்பை நாம் கொச்சைபடுத்துவது போலாகும்.

ராஜீவ் கொலையின் பின்னர் தமிழகத்தில் யாருமே ஈழபோராட்டம்பற்றி அதிகம் பேசாதிருந்த நிலையில் விடுதலைபுலிகளுக்கு ஆதரவான கருத்து கணிப்பை முதலில் செய்தது விகடன், இன்றுவரை தலைவரின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அவரின் தியாகம்,கடந்துவந்த பாதைகள், ஒழுக்கம் நேர்மைபற்றி ஒரு வருஷம்கூட தவறாமல் செய்தி வெளியிடுவது விகடன்.

ஒவ்வொரு மாவீரர்நாளின்போதும் ஈழதமிழரின் தியாகங்கள்பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறது.

விகடன் முள்ளிவாய்க்கால் பேரவலம்பற்றி இன்றுவரை பேசுகிறது...

அவர்கள் வியாபார நோக்கத்தில் இதை செய்கிறார்கள் என்று நம்மவர்கள்  சிலர் கருதினாலும், அதன் வாசகர்களாயிருக்கும் பலகோடி தமிழக மக்களுக்கு எம்மை கொண்டு செல்கிறார்கள் என்பதையே நாம் உற்று நோக்கவேண்டும்.

இது சீமானுக்கு எதிரான செய்தியை விகடன் அனுமதித்ததால் அது தொடர்பாக பகிரும் கருத்தல்ல.

எமது தேசியத்திற்கு எதிராக செயற்படும் தமிழக பத்திரிகைகளுடன் நீங்கள் விகடனையும் சேர்த்ததற்கு மட்டுமே சொல்லப்பட்ட கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், ஜேர்மனின் நாசிகளை சீமானுடன் நீங்கள் ஒப்பிடுவது என்னைப்பொறுத்தவரை சரியாகப் படவில்லை. ஆனால், உங்கள் கருத்தில் ஓரளவிற்கு உண்மையும் இல்லாமல் இல்லை.

ஜேர்மனிய நாசிகளுக்கெதிராக திட்டமிட்ட இனக்கொலையொன்று பல்வேறு நாடுகளின் துணையுடன் நடைபெறவில்லை. வேறுமனே "யூதர்கள் சுரண்டுகிறார்கள்" என்கிற போலியான கோஷத்தையும், ஜேர்மபிய ஆரியர்கள் மட்டுமே இவ்வுளகில் வாழத் தகுதியான இனம், மற்றையவர்கள் தகுதியற்றவர்கள் என்கிற தூய ஆரிய ஆதிக்க வெறியையும் கொண்டே அவர்களின் இன  வெறி அமைந்த்கிருந்தது. 

ஆனால், சீமானின் கோபமும் ஆவேசமும் நியாயமானது. திட்டமிட்டு அழிக்கப்பட்ட ஒரு இனத்திற்காக நீதிகேட்பது. தமிழன் தமிழ்நாட்டில் அதிகாரத்தில் இருந்தால் ஈழத்தில் இன்வக்ஷிப்பு நடந்திருக்காதே என்கிற ஆதங்கத்தில் எழுவது. இதை எப்படி நாசிகளுடன் ஒப்பிட்டீர்கள் என்றுதான் தெரியவில்லை.

ஜேர்மனிய நாசிகளுடன் ஒப்பிடக்கூடிய இன்னொரு இனம் இருக்கிறது. அதற்கு ஆரியச் சிங்களம் என்று பெயர். 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ragunathan said:

கிருபன், ஜேர்மனின் நாசிகளை சீமானுடன் நீங்கள் ஒப்பிடுவது என்னைப்பொறுத்தவரை சரியாகப் படவில்லை. ஆனால், உங்கள் கருத்தில் ஓரளவிற்கு உண்மையும் இல்லாமல் இல்லை.

நாஸி ஜேர்மனியர்கள் யூதர்களை மனிதர்களாகவே மதிக்கவில்லை. சிங்கள இனவாதிகளும் தமிழர்களை அடக்கப்படவேண்டியவர்கள் என்ற கருத்தியலோடு இனவெறியை உமிழ்வதால் அவர்களும் இனவெறியர்கள்தான்.

சீமானின் அடையாளம் தமிழ் தேசியம், விடுதலைப்புலிகள் எனும் இரண்டு புள்ளிகளுக்கிடையில் தான் இருக்கிறது. ஆனால் அவரது தேசியக் கூச்சல் பிற இனங்கள் மீது வெறுப்பாக உமிழப்படும்போது அது தேசிய வெறியை அவர் கட்சிக்காரர்களிடமும் ஆதரவாளர்களிடமும் உருவாக்குகின்றது. இந்த வெறி பிற இனங்களை கீழ்மை செய்யும்போது தேசியவாதி பாஸிஸவாதியாக மாறுவதைக் காணலாம். சிங்கள இனத்தால் அடக்கியொடுக்கப்பட்டும் புலிகள் சிங்கள மக்கள்மீது வெறுப்பை உமிழ்ந்து பிரச்சாரம் செய்யவில்லை என்ற வித்தியாசத்தையும் பார்க்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் இனவெறியனாகவோ தேசிய வெறியனாகவோ வேற என்னவாகவோ இருந்திட்டுப்போகட்டும் இதனால் எமக்கு என்ன பிரச்சனை. சீமான் இன்னமும் சொல்லத்தக்கமாதிரி பெரிய செல்வாக்கான ஆளாக வளரவில்லை சிலவேளை அப்படி ஒரு செல்வாக்கான அரசியல்வாதியாக அவர் வளர்ந்தால் இதே பத்திரிகைகள் அந்தமாதிரி எழுதும் ஜெயலலிதா கருனாநிதி மேலும்பல அரசியல்வாதிகள் சசிகலா ஆகியோர் அப்பட்டமாக ஊழல் செய்தவர்கள் என அனைவருக்கும் தெரியும் ஏன் அனைத்துப்பத்திரிகைக்கும் தெரியும் ஆனால் கேட்டுப்பாருங்கள் அவரைப்பற்றி ஓரிடத்திலாவது புகழாத பத்திரிகைகள் எதுவும் இல்லை. தொலைக்காட்சியில் அவர்களைச்சொல்லி பெருமிதப்படுபவர்களை இப்பொதுசன ஊடகங்கள் குளோசப்பில் காட்டி எங்களையும் அழவைக்கிறதுதானே. 

சீமானுக்காக நாம் ஏன் குத்தி முறியவேண்டும் அது தமிழ்நாட்டின் அரசியல் பிரச்சனை மட்டுமே 

தமிழ்நாட்டில் கடவுள் நினைத்தாலும் ஈழத்தமிழர்க்கான ஆதரவு நிலைப்பாட்டி எவராலும் முன்னெடுத்துச்செல்லமுடியாது. 

எமது பெயரையும் தலைவர் பெயரையும் சொல்லி நிறையப்பேர் நிறையவே சாதித்துவிட்டார்கள் பாவம் அந்தாளையும் விடுங்கோவன்

வைகோவைப்பாருங்கள் அந்தாள் பாவம் இப்போ ஸ்டாலினை முதல்வர் ஆக்கிறன் எனப்புறப்பட்டிருக்கிறார். அதோடு ஒப்பிடுகையில் சீமான் தேவலை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நாஸி ஜேர்மனியர்கள் யூதர்களை மனிதர்களாகவே மதிக்கவில்லை. சிங்கள இனவாதிகளும் தமிழர்களை அடக்கப்படவேண்டியவர்கள் என்ற கருத்தியலோடு இனவெறியை உமிழ்வதால் அவர்களும் இனவெறியர்கள்தான்.

சீமானின் அடையாளம் தமிழ் தேசியம், விடுதலைப்புலிகள் எனும் இரண்டு புள்ளிகளுக்கிடையில் தான் இருக்கிறது. ஆனால் அவரது தேசியக் கூச்சல் பிற இனங்கள் மீது வெறுப்பாக உமிழப்படும்போது அது தேசிய வெறியை அவர் கட்சிக்காரர்களிடமும் ஆதரவாளர்களிடமும் உருவாக்குகின்றது. இந்த வெறி பிற இனங்களை கீழ்மை செய்யும்போது தேசியவாதி பாஸிஸவாதியாக மாறுவதைக் காணலாம். சிங்கள இனத்தால் அடக்கியொடுக்கப்பட்டும் புலிகள் சிங்கள மக்கள்மீது வெறுப்பை உமிழ்ந்து பிரச்சாரம் செய்யவில்லை என்ற வித்தியாசத்தையும் பார்க்கவேண்டும்.

சீமானை, எங்கே கொண்டு போய் ஒப்பிட்டு வைக்கிறீர்கள் என்பது சற்றே மிகைப்படுத்தப்பட்ட கூற்று போல தெரிகிறது.

ஆட்சி அதிகாரத்தில் இருந்த கிற்லர், சிங்கள அரசியல்வாதிகள் இனவாதம் பேசுவதே அபாயகரமான விடயம்.

இரு நூறு ஆண்டுகள் இருந்த வெள்ளையனே வெளியேறு என்பது இனவெறியா அல்லது சுதந்திரப் போராட்டமா? 

அது சுதந்திரப் போராட்டமாயின், இதுவும் அப்படிதானே. படங்களில் நடித்து தமிழர் அல்லாதோர், ஆட்சிக்கு வரமுடியமாயின், டப்பிங் தமிழ் பேசும் ஜேம்ஸ் பாண்டும் வரலாமே நாளை.

திராவிடம் என்ற உன்னதமான கருத்தியலின் சிதைவு, கருணாநிதியுடன் ஆரம்பித்தது.

வருமானவரி பிரிவினர், இருபத்தியொரு கோடி லஞ்சம் பெற்ற ஆதாரமுள்ளது  என்று அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சொல்லியும் அவர் அமைச்சரவையில் தொடர்கிறாறென்றால் ஊழல் எவ்வளவு தூரம் ஸ்தாபனப் படுத்தப்பட்டுள்ளது திராவிட கட்சிகளினுள் என தெரிகிறது.

ஆரம்பத்தில் சீமான் தெலுங்கர் ஆள்வதா, மலையாளி ஆள்வதா என்றார். இப்போது அவ்வாறு நேரடியாக சொல்லாமல் தமிழகத்தை தமிழனே ஆளவேண்டும் என்கிறார்.

அண்டைய மாநிலங்களில் தமிழர் ஆளவே முடியாது என்ற நிலை இருக்கும் வரை, சீமானின் நிலைப்பாடு தவறானதல்ல என்பதே எனது பார்வை.

வேறு இனத்தவருக்கு வீடுகளை, காணிகளை விற்காதீர்கள், அவர்களிடம் பொருள் வாங்காதீர்கள், அவர்களை அடித்து விரட்டுங்கள் என்பதே ஆபத்தானது.

பாம்பையும், பாப்பானையும் கண்டால், பார்பானை முதலில் அடி என்று சொன்னது திராவிடம்... அது ஆபத்தான இனவெறுப்பன்றி வேறென்ன?

புலிகள் சிங்களவர் மீது இனத்துவேசமாக பேசவில்லை என்கிறீர்கள். இது அப்பாவித்தனமானது.

முஸ்லீம் மக்களை யாழில் இருந்து வெளியனுப்பியது, சமாதான பேச்சிடையே கெப்பற்றிக்கொல்லாவயில் பஸ் மீது கிளைமோர் தாக்குதல் நடாத்தியது தான் புலிகள் விடுதலை போரட்ட அமைப்பு என்ற நிலைப்பாட்டை தகர்த்தது என்பதை ஏற்பீர்களா?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

 இனியொருவில் இருந்து..

http://inioru.com/anti-social-nazist-seeman/

“சீமான் தனது வழிகாட்டிகளில் ஒருவராக உலகின் அதிபயங்கரக் கொலையாளி ஹிட்லரின் படத்தை தனது திருச்சி மாநாட்டில் அறிவித்தார். இன்று ஜேர்மனியில் நிறவாதிகள் கூட ஹிட்லரின் பெயரை உச்சரிப்பதற்குக் கூட அவமானப் படும் நிலையில் சீமான் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலுள்ள சீமான் கோமாளிகள் ஹிட்லரை தனது வழிகாட்டியாக அறிவித்துள்ளனர்.

தவிர. ஹிட்லரின் நாஸிப் படைகள் வணக்கம் செலுத்தும் முறையில் மேடையில் நின்று வணக்கம் தெரிவித்து மாநாட்டை ஆரம்பித்தனர். இதையெல்லாம் காவல் துறை கண்ணாரப் பார்த்துக்கொண்டிருந்தது.”

hitlersalute.jpg

விகடன் பேட்டியில் சீமானின் சமாளிப்பு..

https://www.vikatan.com/news/tamilnadu/47596.html

திருச்சி மாநாட்டில் ஹிட்லர் படம் வைத்திருந்தீர்களே... என்ன காரணம்?

''அந்தப் படத்தை ஆர்வத்தில் சில தம்பிகள் வைத்துவிட்டார்கள். வழிகாட்டும் தலைவர்கள் படத்தில், புத்தர் படம்கூட வைத்திருந்தார்கள். நேற்று இலங்கையிலும் இன்று பர்மாவிலும் புத்தரின் பெயரால்தான் சிறுபான்மை மக்களை அழித்தொழிக்கிறார்கள் அதற்காக புத்தரை ஃபாசிஸ்ட் எனச் சொல்ல முடியுமா? மாநாடுகளில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகளை வைத்து அரசியல் முத்திரை குத்தத் தொடங்கினால், எல்லா அரசியல் கட்சிகளைப் பற்றியும் இப்படி ஆயிரம் அபத்தங்களை அடுக்க முடியும்.''

'சீமான், முருகன் வழிபாட்டில் தொடங்கி ஹிட்லர் வழிபாடு வரை செய்துகொண்டிருப்பதற்கு ஒரே காரணம் ஈழம் பிசினஸ் படுத்ததுதான்’ என்கிறாரே தி.மு.க முகாமைச் சேர்ந்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்?

''எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் பிசினஸ் செய்யும் கட்சியான தி.மு.க-வில் இருந்துகொண்டு இதைப் பார்த்தால்,  பிழையாகத்தான் தெரியும். தி.மு.க என்பது, கட்சி அல்ல; ஒரு தொழில்நிறுவனம். தேர்தல் நேரத்தில் நிதி கேட்பார்கள். வேட்பாளர் தேர்வு நேர்காணலின்போது, 'கட்சிக்கு எவ்வளவு நிதி கொடுப்பாய்?, தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்வாய்?’ என்றுதான் கேட்பார்கள். இப்படி தேர்தலை வைத்துத் தொழில் செய்யும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர், அனைத்தையும் வணிகமாகத்தானே பார்ப்பார். இத்தனைக்கும் ஈழத்தை வைத்து வியாபாரம் செய்ததே தி.மு.க-தான். ஆனால், ஈழத் தமிழர்களுக்கு தி.மு.க செய்த துரோகங்களால் அதன் ஈழ வியாபாரம் படுத்துவிட, இப்போது கடையைத் தொடர்ந்து நடத்த முடியாமல் டெசோ என்ற டம்மி அமைப்பைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

நான் ஹிட்லரை வைத்திருப்பது இருக்கட்டும். தி.மு.க தலைவர் தன் மகன் கருணாநிதிக்கு 'ஸ்டாலின்’ என ஏன் பெயர் வைத்தார்? 'ஸ்டாலின் ஒரு ஃபாசிஸ்ட்’ எனச் சிலர் சொல்கிறார்களே. மனுஷ்ய புத்திரன் இது பற்றி கேட்டுச் சொல்லட்டும். அப்படியே, கலைஞர் தொலைக்காட்சியில் ஹிட்லர் தொடரை ஏன் ஒளிபரப்பினார்கள் என்றும் கேட்டுச் சொல்லட்டும்.''
 
  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

ஆரம்ப ஆர்வக்கோளாறுகள் பல இப்போது திருத்தப்பட்டுள்ளன

  • கருத்துக்கள உறவுகள்

அதாகப்பட்டது.. வெள்ளையனே வெளியேறுன்னு.. கோசம் போடலாம்.. அது நிறவெறி ஆகாது.

ஹிந்தி எரிப்போம்.. அழிப்போம் என்று.. மொழிவெறி காட்டலாம்..  அது திராவிடக் கூலிக் கும்பல்களின்.. மொழிவெறி ஆகாது.

தனித் தமிழ்நாடு.. திராவிடருக்கு கேட்கலாம்.. அது.. பிரதேசவெறி ஆகாது.

கன்னடன்.. கர்நாடவை ஆளலாம்.. மலையாளி.. கேரளாவை ஆளலாம்.. தெலுங்கன்.. ஆந்திராவை ஆளலாம்.. குஜராத்தி குஜராத்தை ஆளலாம்.. சிங்களன் சொறீலங்காவை ஆளலாம்.. ஜேர்மனி.. ஜேர்மனை ஆளலாம்... அதெல்லாம் எந்த வெறியும் இல்லை.. திராவிடக் கும்பலுக்கு..

ஆனால்.. தமிழ் நாட்டை.. தமிழீழத்தை தமிழன் ஆளனும் என்பது தான் திராவிடக் கூலிகளும்.. அவர் தம் திராவிடக் குஞ்சுகளுக்கும்.. வெறியாத் தெரியுது.

இத்தனை ஆயிரம் ஈழத்தமிழரைக் கொல்ல சிங்களவனுக்கு.. ஆயுதமும்.. பயிற்சியும் வழங்கிய ஹிந்தியன் நல்லவன்.. பாகிஸ்தானி நல்லவன்.. இஸ்ரேலிய யூதன் நல்லவன்... அமெரிக்கன் நல்லவன்..

ஆனால்.. தமிழர்களுக்கு நேரடியாக எந்த பாதிப்பையும் உண்டு பண்ணாத ஹிட்லர் மகா கொடியவன். போங்கையா.. நீங்களும்.. உங்கட தத்துவங்களும். 

ஹிட்லர் மகா கொடியவராக இருக்கலாம்.. ஏன் அமெரிக்கன் அளவுக்கு அணுகுண்டு போடும் அளவுக்கு கொடியவராக இருக்கவில்லை.

ஹிட்லர் தன் மக்கள் நாடு என்று நல்ல சில கொள்கைகளையும் கொண்டிருந்தார்.. அதை இனங்காண்பது தவறல்ல.. அணுகுண்டு வீசிய அமெரிக்காவை ஜனநாயக நாடுன்னு இன்றும் கொண்டாடிக் கொண்டிருப்பவர்களை விட. ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆசிய ஆபிரிக்க நாடுகளில் செய்த அட்டூளியங்களில் ஒரு வீதத்தைக்கூட ஹிட்லர் செய்யவில்லை என்பதே உண்மை.
அதே நேரம் யூதர்கள் ஜேர்மனியில் நடந்த நடத்தைகளினால் தான் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார் என்பதை ஏன் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் சிந்திக்கவில்லையென்பது கவலைக்குரிய விடயம்.

உலகப்போரில்  ஜேர்மனியை அழிக்க முனந்தவர்கள் யாரென்று சிந்தித்தால் அடிப்படை அரசியலின் சித்தார்ந்தம் புரியும்.

வட அமெரிக்காவில்  வசித்த செவ்விந்தியர் மீது பிரிட்டிஷ்  மேலாதிக்கம் செய்யாத கொடுமைகளையா ஹிட்லர் செய்தார்?

கருத்து எனும் போர்வையில் வரலாறுகளையும் உண்மைகளையும் தவற விடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கருத்து எனும் போர்வையில் வரலாறுகளையும் உண்மைகளையும் தவற விடாதீர்கள்.

உண்மை வரலாறுகளை தெரிந்தால் இப்படி  கருத்து இடுவார்களா ?

  • கருத்துக்கள உறவுகள்

பிற இனத்தவர்கள் தமிழ் நாட்டு மக்களின் மேல் சம்பல் அரைக்கும் போது 60 வருடத்துக்கு பிறகாவது ஒருவர் அவர்களை தோலுரித்து காட்டுவதற்கு பெயர் நாசி அல்லது அதற்கு மேலாகவும் இருக்கலாம்.கடைசி தமிழ் நாட்டு மக்கள்  தாங்கள் எங்கு இருக்கிறோம் என புரிந்தாலே போதுமானது.

கர்நாடகத்தவர்கள் கர்நாடகத்தை ஆள்கிறார்கள். தெலுங்கர்கள் தெலுங்கு தேசத்தை ஆள்கிறார்கள்.மலையாளிகள் மலையாளத்தை ஆள்கிறார்கள். தமிழர்கள் தம்மை ஆளவேண்டும் என கேட்பது எப்படி தேசிய வெறியாகும் என விளங்கவில்லை.ஏனைய மானிலத்தவர்கள் தமிழர்களுக்கு கிடைக்கும் அத்தனை சுதந்திரத்தையும் அனுபவிக்கலாம் என்று கூறுவது தேசிய வெறியா?? விளக்கம் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆசிய ஆபிரிக்க நாடுகளில் செய்த அட்டூளியங்களில் ஒரு வீதத்தைக்கூட ஹிட்லர் செய்யவில்லை என்பதேண்மை.
அதே நேரம் யூதர்கள் ஜேர்மனியில் நடந்த நடத்தைகளினால் தான் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார் என்பதை ஏன் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் சிந்திக்கவில்லையென்பது கவலைக்குரிய விடயம்.

 உலகப்போரில்  ஜேர்மனியை அழிக்க முனந்தவர்கள் யாரென்று சிந்தித்தால் அடிப்படை அரசியலின் சித்தார்ந்தம் புரியும்.

ஜேர்மனியில் வசிக்கும் கு.சா. ஐயாவுக்கு கட்டாயம் வரலாற்றைப் பற்றி வகுப்பெடுத்திருப்பார்கள். ஆனால் ஹிட்லர் மேல் இருக்கும் கவர்ச்சியால் 6 மில்லியன் யூதர்களைக் கொடூரமாகக் கொன்றது ஒரு வீதமாகத் தெரிகின்றது. இந்தக் கணக்கின்படி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் 600 மில்லியன் மக்களை காலனியாதிக்கத்தில் கொன்றிருக்கவேண்டும். 

இதற்கு கனடாவிசிட் புகழ் டொக்டர்ஷாலினி முகநூலில்  எழுதின இன்றைய பதிவு ஒன்றையும் அதற்கு கிடைத்த குறிப்பிட்ட எதிர்வினைகளையும் இணைத்தல் நன்று அவர்களின் சீமான் பற்றிய பார்வை எப்படிஇருக்கிறது என அறியலாம் 

இது டாக்டர் ஷாலினியின் பதிவு 

சீமான் என்றொரு ஆசாமி இருக்கிறார், சினிமாக்காரர், சினிமா உலகில் ஒரு கட்டபஞ்சாயத்துக்காரர், அவர் அரசியலில் ஒரு also ran என்பது வரை தான் எனக்கு தெரியும்.
நான் கனடா சென்று வந்த போது அங்கு பல ஈழதமிழர்கள் போரின் விபரீதத்தை பற்றி என்னிடம் சொன்னார்கள். பலர் போர் அநாவசியமானது என்பது பற்றியும், அவர்களுக்கு தலைவன் யார், அவர் மீதுள்ள அதிருப்திகள் என்ன என்பது பற்றியும் சொன்னார்கள்.
இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்ல வேண்டும்?
அவர்களுக்குள் இது பற்றி பேச சுதந்திரம் இல்லை, போருக்கு எதிராக பேசினால் இனதுரோகி என்று முத்திரை குத்தி, அப்படியே ஒதுக்கி விடுவது, இழிவு படுத்துவது, வாழ்க்கையை கஷ்டமாக்கிவிடுவது மாதிரியான பழிவாங்கும் நடவடிக்கைகளில் பெரும்பாலோர் ஈடுபடுவதால், தங்களுக்குள் புலம்ப வழி இல்லை. என்னை மாதிரி வெளியாள், அதுவும் மருத்துவர் என்பதால் என்னிடம் புலம்பினார்களோ என்னவோ......
Slice of life மாதிரியான பகிர்வுகள், சமூக மாற்றத்திற்கு தேவையான விவாத கருத்துக்கள் என்றால் நான் அவற்றை முகநூலில் எழுதுவது வழக்கம், அது போலவே கனடிய கருத்துக்களை நான் தொகுத்து எழுதிவிட- பெரிய எதிர்ப்பு சுனாமி கிளம்பியது. 
யதார்த்தமாக நான் எழுதியதை இவ்வளவு தீவிரவாதமாய் அணுக முடியுமா என்று எனக்கே புரியாத நிலை. அப்போது ஒரு நலன் விரும்பி என்னிடம் பேசினார், “மேடம் சீமானை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
உண்மையில் சீமான் எனும் அந்த மனிதனை பற்றி அப்போது எனக்கு பெரிய அபிப்ராயம் இல்லை. கொஞ்சம் கோமாளித்தனம்+போலி வீரம் உமிழும் ஒரு காமடி பீஸ் என்றே நான் நினைத்திருந்தேன்
ஆனால் அவர் சொன்னார், “அவர் தான் தமிழ்நாட்டின் எதிர்கால முதல்வர்”
நான் சிரித்தேன், “தமிழ்நாட்டு மக்களை பெம்பளத்தான்னு நினைக்காதீங்க சார்”
“உங்களுக்கு தெரியுது, ஆனா இங்க எல்லாரும் அவர் தான் தமிழர்களின் எதிர்காலம்னே நினைக்கிறாங்க....”
“அட பாவமே உங்க ஊர்ல அத்தனை பேரும் அவ்வளவு பெம்பளத்தானா?!”
அதன் பிறகு நான் மிஸ்டர் சீமானை கவனித்துக்கொண்டே இருக்கிறேன். தமிழ்நாட்டின் தலைவர் எனும் பிரதிநிதித்துவம் பெறும் பிரத்தியேக சிறப்பு ஏதாவது அவரிடம் உண்டா என்று திறந்த மனதுடனே நான் அவரை அணுகுகிறேன்.
ஆனால் - ஒரு புரொடியூசரிடம் தன் அசட்டு கதையை மிகுந்த narcissismத்தோடு தானே ரசித்து ரசித்து வளர்த்துக்கொண்டே போகும் ஒரு மொக்கை புதுமுக டைரக்டர் போலவே எனக்கு தேன்றுகிறார்.
இவரை போய் மாவீரன், மஹானுபாவன்,  எழுச்சிதமிழன், எதிர்கால தமிழர்தலைவன் என்றெல்லாம் எவரும் நினைத்தால்.... very poor prognosis தான் போங்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் சாலினி ஒரு மணோதத்துவ நிபுணர் அவர் எல்லாவற்றையும் அதனூடே பார்ப்பார்  ஆனால் சாதாரண வாக்காளன் பிளஸ் மனிதன் அரிசி பொங்கப்பானை அண்டா குண்டா பிரியாணி குக்கர் சாராயம் இந்த இழவுகளையெல்லாம் ஓட்டுப்போடுவதற்காக எதிர்பார்க்கிறான் எண்டு சொன்னால் சாலின் என்னைப் பெம்பளத்தான் எனக்கூறுவார்.

தமிழ் நாட்டில் யார் ஆண்டாலும் இந்த புறியாணிபொட்டலத்துக்கு ஓட்டுப்போடுபவர்களுக்குக் கவலை இல்லை ஆகவே அவர்கள் பொட்டலத்துக்குத் தொடர்ந்து ஓட்டுப்போடுவார்கள் இல்லாதுவிட்டால் சென்னையில் கூப்பிடு தூரத்திலிருக்கும் ஆர்கே நகரில் தினகரன் வென்றிருக்க வாய்ப்பே இல்லை காரணம் அரசியலில் அடிமட்டச் சாராய புறியாணிப்பொட்டலத் தொண்டர்கள து எதிர்பார்ப்பெல்லாத்தையும் தவிடுபொடியாக்கி தினகரன் வென்றிருக்கிறர், இதைவிடக்கேவலம் ஆர் கே நகர் ஜெயலலிதாவின் தொகுது சென்னைக்கு அருகிலுள்ள அந்த முதல்வர் தொகுதியிலேயே அடிப்படை வசதிகள் எதுவுமில்லாது குப்பைமேடு சுற்றிவரக் காட்சியளிக்கும் பகுதி அது எல்லாம் வல்ல ஜெயலலிதா தேர்தலுக்குப்பின்பு வெள்ளத்துக்கு  அங்குபோனதாக நினைவு அவர்கள் அடிக்கிற காசில் மாதாந்தம் ஒரு விகிதம் செலவளித்திருந்தாலே அத்தொகுதியின் நிலையை மாற்றியிருக்கலாம் அபராஜிதன் சென்னையில்தானே வாழ்கிறீர்கள் ஒருகை போய்வாருங்கள் ஆர் கே நகருக்கு கையோட இயலுமாகில் சாலினியையும் கூட்டிப்போங்கள் அப்போ தெரியும் யார் பெம்பளத்தான் என.

இப்போது வருகுது திருவாரூர் இடைத்தேர்தல் கருனாநிதியின் தொகுதி அப்பிரதேசம் அதைவிடக்கேவலம் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஜேர்மனியில் வசிக்கும் கு.சா. ஐயாவுக்கு கட்டாயம் வரலாற்றைப் பற்றி வகுப்பெடுத்திருப்பார்கள். ஆனால் ஹிட்லர் மேல் இருக்கும் கவர்ச்சியால் 6 மில்லியன் யூதர்களைக் கொடூரமாகக் கொன்றது ஒரு வீதமாகத் தெரிகின்றது. இந்தக் கணக்கின்படி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் 600 மில்லியன் மக்களை காலனியாதிக்கத்தில் கொன்றிருக்கவேண்டும். 

நிற்சயமாக ....
6000 மில்லியனை ஒரே போரில் கொல்லவில்லை 
பிரிடிஷ் ஏகபத்தியாயத்தின் தொடர்ச்சியாக இன்றும் மக்கள் 
இறந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

மூன்றாம் உலகு .. முதலாம் உலகு என்ற பாகுபாடே 
முதலாம் உலகு மேற்கொண்ட பொருளாதார சுரண்டலால் 
வந்துதான் அனைத்து வளங்களும் சூறையாடப்பட்டு 
தொடர்ச்சியான சுரண்டலுக்கும் வழிகோலி உள்ளூர் 
கலவரங்களையும் .... இன மோதல்களையும் உருவாக்கி 
சென்றவர்கள் பிரிடிஷ் ஏகாபத்திய காரர்கள்தான்.

ஈழத்தமிழரின் படுகொலையில் அவர்களுக்கும் நிறைய பங்கு உண்டு 
இல்லாத தேசங்களை உருவாக்கி பாரிய போர்களை தொடர்ச்சியாக 
வழிகாட்டி வந்தவர்கள் ...... இன்றைய சிரிய போரின் அடிப்படை பிரச்சினை என்ன?
அத்தனை கொலைக்கும் அத்திவாரம் போட்டது பிரிட்ஸின் எல்லை பிரிப்புதான். 

சீமான் மீது ஆரம்பத்தில் சேறுபூச தொடங்கியதால் 
கைவிடமுடியாத நிலையில் பலரும் ஆதி நுனி தெரியாது 
சேறுபூசவது போலவே பிரிடிஷ் ஏகபத்திய சுரண்டலும் கொலைகளும் தொடர்கின்றன.

மற்றைய இனங்களை அவதூறாக சீமான் தூற்றுவதில்லை 
அவர் தூற்றுகிறாரோ இல்லையோ 
தூற்றவேண்டும் எனும் எதிர்பார்ப்புடன் பலர் தவிக்கிறார்கள். 
 
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, அபராஜிதன் said:

இதற்கு கனடாவிசிட் புகழ் டொக்டர்ஷாலினி முகநூலில்  எழுதின இன்றைய பதிவு ஒன்றையும் அதற்கு கிடைத்த குறிப்பிட்ட எதிர்வினைகளையும் இணைத்தல் நன்று அவர்களின் சீமான் பற்றிய பார்வை எப்படிஇருக்கிறது என அறியலாம் 

இது டாக்டர் ஷாலினியின் பதிவு 

இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் அல்லவா...

வி சி கட்சி திமுகவுடன், காங்கிரசுடன் கூட்டணி போட முயல்கிறது.

வேறு என்ன எதிர்பார்க்க முடியும், அந்த அம்மணியிடம் இருந்து?

27 வருடங்களுக்கு முன்னர் கட்சி ஆரம்பித்த இம்ரான் கான் குறித்தும் எதிர்க்கடசிகள் இப்படி தான் சொன்னார்கள். 

பிளே பாய் அரசியலுக்கு லாயக்கு ஆகி வர முடியுமா என்று நக்கல் அடித்தார்கள். இது கிரிக்கட் இல்லை ராஜா, நினைத்தவுடன் சிக்ஸ்ர் அடிக்க என்கிறார்கள்.

அவர் அமைதியாக ஆனால் தெளிவுடன், உறுதியாக காத்திருந்தார்... 27 வருடங்கள். இன்று மக்கள் அவரை பிரதமராக்கி உள்ளனர்.  

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத்தமிழர்களுக்கு (எல்லோருமில்லை) ஈழத்தானைக்கண்டால் எப்பவுமே இளக்காரம் அப்படியானவர்களது உறவாடல்களோ என்னவோ அபராஜிதனுக்கு தனது சமூகத்தை யாராவது பழித்தால் குசியாகிவிடுவார் சென்னையில் நீண்ட நாதள் வாழ்கிறார் இதனாலும் அவரது நட்புவட்டம் பத்திரிகையாளர் பத்தி எழுத்தாளர்கள் இவர்களைச்சுற்றியிருப்பது காரணமாகலாம். அதுசர் ஒரு கேள்வி உங்களிடம் அண்மையில் நீங்கள் கூறினீர்கள் இறுதிப்போரின்போது தாயகத்திலிருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு அகதி அந்தஸ்து கோராது வாழ்கிறேன் என சென்னையில் கியூ பிரிவுப் பொலீசாரின் கண்களில் மண்தூவுவது சிரமம் அப்படியாகில் என்ன செல்வாக்கில் அங்கு வாழ்கிறீர்கள் ஒன்றில் மேற்படியாருடன் தொடர்பிருக்கவேணும் இல்லையேல் நிறயப்பணமிருக்கவேணும் இதில் எதுசரி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Elugnajiru said:

இங்கிருந்து புஹ்தகம் எழுதி 
வெளியிட்ட பலரையே நாம் பார்த்திருக்கிறோம் 

சொந்த பிழைப்புக்கு 
இனத்தை விக்கிறதுதான் அவர்கள் வேலை.

இதில் சீமானை வீழ்த்தவும் சேறு அடிக்கவும் ஒரு குரூப் வேற.

சீமான் சொல்வது முழுதும் பொய் என்றால் கூட .........
ஊழல் செய்து ...... கொள்ளை அடித்து நாடடையே நாறடித்த 
நாதரிகள் அரசியல் செய்யும் ஊரில் 
பொய் சொல்லுவதுதான் பெரிய குற்றமா ? 

அந்த நாதாரிகள் பற்றி ஏன் இவர்கள் யாரும் ஏதும் எழுதுவதில்லை?
சொந்த பிழைப்புக்கு நக்குவதை தவிர வேறு என்ன காரணம்?

ஒரு வேளை சீமான் முதல்வராகி விட்டால் ....
சீமானுக்கு போய்  காவடி எடுக்கும் கூடடமும் இதுதான் 
நாம் அப்போதும் இங்கே சும்மாதான் இருப்போம். 

புலிகள் உச்சத்தில் இருந்த காலத்தில் 
புலிகளுக்கு காவடி ஆடி 
சொந்த பிழைப்பை பார்த்த அதே கூடடம்தான் 
எழுத்துக்களில் ஆயுதம் செய்து புத்தகம் விக்கிறார்கள் 

நாம் புலிகளிடமும் அடிவாங்கி ....
ஆமியிடமும் வாங்கி தான் வந்திருக்கிறோம்.

அதுக்காக அடித்தார்கள் என்பதால் கூட 
புலிகள் மீது சேறு அடித்து சொந்த இனத்தை விக்கும் 
புத்தி வரவில்லை ..... வர போவதும் இல்லை.

இந்த நாதாரிகள் வாழும் இனத்தை வைத்து இப்படி ஒரு 
விடுதலை போரை எப்படி செய்தார்கள் என்ற வியப்பு மட்டுமே. 

1 hour ago, Elugnajiru said:

இந்தியத்தமிழர்களுக்கு (எல்லோருமில்லை) ஈழத்தானைக்கண்டால் எப்பவுமே இளக்காரம் அப்படியானவர்களது உறவாடல்களோ என்னவோ அபராஜிதனுக்கு தனது சமூகத்தை யாராவது பழித்தால் குசியாகிவிடுவார் சென்னையில் நீண்ட நாதள் வாழ்கிறார் இதனாலும் அவரது நட்புவட்டம் பத்திரிகையாளர் பத்தி எழுத்தாளர்கள் இவர்களைச்சுற்றியிருப்பது காரணமாகலாம். அதுசர் ஒரு கேள்வி உங்களிடம் அண்மையில் நீங்கள் கூறினீர்கள் இறுதிப்போரின்போது தாயகத்திலிருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு அகதி அந்தஸ்து கோராது வாழ்கிறேன் என சென்னையில் கியூ பிரிவுப் பொலீசாரின் கண்களில் மண்தூவுவது சிரமம் அப்படியாகில் என்ன செல்வாக்கில் அங்கு வாழ்கிறீர்கள் ஒன்றில் மேற்படியாருடன் தொடர்பிருக்கவேணும் இல்லையேல் நிறயப்பணமிருக்கவேணும் இதில் எதுசரி

நான் வாழ்வது சென்னையில் இல்லை இதுவரையும் சென்னை / இந்தியா போனதும் இல்லை

என் இனத்தை தலைவரை மற்றும் இயக்கத்தை போராட்டத்தை விமர்ச்சிப்பவர்களுடன் என் கருத்துகளால் கடுமையாக பதிலடி கொடுக்கிறேன்  எனக்கு தெரிந்த விடயங்களை வைத்து.. அதற்காக அவர்களிற்கும் நாம் தமிழர்களிற்குமிடையிலான கருத்து மோதல்களில் மௌனமாக கடந்து விடுவேன்

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, அபராஜிதன் said:

நான் வாழ்வது சென்னையில் இல்லை இதுவரையும் சென்னை / இந்தியா போனதும் இல்லை

அட பயப்பிடாதீங்கோ...

எழு ஞாயிறு சும்மா தாமசுக்கு.. அப்படி கேட்டார்.. :grin:

*****

தமிழகத்து போலி அரசியல் வாதிகள், கல்வி அறிவு இல்லாத அபத்த அரசியல் வாதிகள் மத்தியில் சீமானின் அறிவு பூர்வமான பேச்சு எனக்கு வியப்பினை அளிக்கிறது.

லயன் கிளப் போன்ற அறிவு சார் கூட்டம்.... கல்லூரிகள், பாடசாலைகள் அவரை தமது விழாவுக்கு அழைப்பு விட ஓர் வலுவான காரணம் உண்டு. 

இந்த அழைப்பு ஸ்டாலினுக்கோ, வைகோவுக்கு போகாது. ஏனெனில் எங்கே, என்ன பேச வேண்டும் என பலருக்கு புரிவதில்லை.

நீண்ட பேச்சின் போது, களைப்பினால்,  ஒரு flow வில், toungue slip காரணமாக சில சில்லறை தவறுகள் விட்டிருக்கலாம். அதனை வேண்டுமென்றே பெரிதாக்கும் எதிராளிகள் குறித்த கவலைப் பட வேண்டியதில்லை என்பதே என் கருத்து. 

அதுவே நான் சீமானை ஆதரிக்கக் காரணம்....

அவர் புலிகளை ஆதரிக்கிறார், பிரபாகரனை தாங்கிப் பிடிக்கிறார் என்பதெல்லாம் எனக்கு பெரியதாக படவில்லை.

Edited by Nathamuni

1 hour ago, Nathamuni said:

இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் அல்லவா...

வி சி கட்சி திமுகவுடன், காங்கிரசுடன் கூட்டணி போட முயல்கிறது.

வேறு என்ன எதிர்பார்க்க முடியும், அந்த அம்மணியிடம் இருந்து?

27 வருடங்களுக்கு முன்னர் கட்சி ஆரம்பித்த இம்ரான் கான் குறித்தும் எதிர்க்கடசிகள் இப்படி தான் சொன்னார்கள். 

பிளே பாய் அரசியலுக்கு லாயக்கு ஆகி வர முடியுமா என்று நக்கல் அடித்தார்கள். இது கிரிக்கட் இல்லை ராஜா, நினைத்தவுடன் சிக்ஸ்ர் அடிக்க என்கிறார்கள்.

அவர் அமைதியாக ஆனால் தெளிவுடன், உறுதியாக காத்திருந்தார்... 27 வருடங்கள். இன்று மக்கள் அவரை பிரதமராக்கி உள்ளனர்.  

இவர் வி்சி்க இல்லை பெரியாரிஸ்ட் திமுக விசுவாசி நடுநிலை என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருப்பவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.