Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள இரத்தம் வேண்டாம் என்று யாராவது கூறியிருக்கிறீர்களா? தமிழரிடம் கேட்ட குரே!

Featured Replies

சிங்கள இரத்தம் வேண்டாம் என்று யாராவது கூறியிருக்கிறீர்களா? தமிழரிடம் கேட்ட குரே!

 

 

வைத்தியசாலைகளுக்கு காயங்களுடன் செல்லும்போது சிங்கள இரத்தம் ஏற்றவேண்டாம் என யாராவது கூறியிருக்கிறீர்களா என்று வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தமிழ் மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் இரத்த வங்கிகளுக்கு கணிசமானளவு இராணுவத்தினரும் பௌத்த துறவிகளும் குருதி வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற வருடாந்த பரிசளிப்புவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

”வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரன் இனவாதி அல்ல. அதனால்தான் அவரது புதல்வர்களை கொழும்பு பக்கத்தில் புத்தமதம் சார்ந்த சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஷவின் தங்கை நிருபம்மா ராஜபக்ஷ நடேசன் எனும் தமிழரை திருமணம் முடித்து வாழ்கின்றார். மறைந்த வெளிவிகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் சிங்கள பெண்ணை திருமணம் முடித்து வாழ்ந்திருக்கின்றார். இதேபோன்று மைதிரிபால சேனாநாயக்க எனும் பெருந் தலைவர் ஒருவர் தமிழ் பெண் ஒருவரையே மணம் முடித்து இருக்கின்றார்.

இந்த நாட்டினை ஆட்சி செய்த சிங்கள அரசர்கள் இந்தியாவின் மதுராபுரியிலிருந்து தமிழ் பெண்களை திருமணம் முடித்திருக்கின்றார்கள்.

பௌத்த விகாரைக்குள் இந்து தெய்வங்கள் புத்த பெருமானோடு சந்தோசமாக சாந்தியும் சமாதானமுமாக இருக்கின்றபோது புத்தரை கும்பிட போற மக்கள் சண்டை பிடிக்கின்றார்கள். இச்செயலை பார்த்து தெய்வம் சிரிக்கின்றது. தெய்வத்திடமிருக்கும் நல்லவை ஏன் மனிதனிடம் இருக்கக்கூடாது.

வைத்தியசாலையில் நீங்கள் உயிரிருக்கு போராடும்போது வைத்தியர்கள் இரத்தம் ஏற்ற வேண்டும் என்று சொன்னால் அந்த இரத்தம் யாருடையது என்று உங்களுக்கு தெரியுமா? இரத்த வங்கிகளுக்கு இராணுவத்தினர் பௌத்த துறவிகள் இரத்தம் வழங்குகின்றார்கள். இந்த சிங்கள இரத்தம் எனக்கு வேண்டாம் என்று யாராவது கூறியிருக்கின்றீர்களா?

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு கடமையில் இருப்பவர்கள் சிங்கள மொழி பேசும் பொலிஸார். மிகச்சிறந்த நீதிபதி இளஞ்செழியன் ஐயாவை உயிர் கொடுத்து காப்பாற்றியவர் ஒரு சிங்கள மொழி பேசும் பொலிஸ் கான்ஸ்டபிள். தமிழ் பொலிஸார் யாரையும் ஏன் பாதுகாப்புக்கு உறுப்பினர்கள் வைத்திருப்பதில்லை.

கௌரவ முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஏன் தமிழ் பொலிஸாரை பாதுகாப்பிற்கு வைத்திருக்கவில்லை. அவர் சிங்கள பொலிஸார் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார். அவ்வாறு நம்பிக்கையை சிங்கள பொலிஸார் மீது வைத்துக்கொண்டு வெளியே வேறு கதை பேசுகின்றார்.

மக்கள் மத்தியில் விரைவாக தலைவராக வருவதற்கு சுலபமான வழி இருக்கின்றது. அதுதான் இனவாதம், மொழிவாதம், குலவாதம் பேசுவது. வேறு ஒன்றும் தேவையில்லை குறுகிய காலத்திற்குள் தலைவராவதற்கு. தேர்தல் காலம் நெருங்கும்போது இனவாதம் மொழிவாதம் குலவாதம் பேசுகிறார்கள். அவை தேர்தல் காலத்தில் மட்டுமேதான்.

வெள்ளவத்தை பக்கத்திலே தமிழ் மக்கள் வீடு கட்ட முடியும் கோவில் கட்ட முடியும் கோவில்களில் விழா கொண்டாட முடியும். அங்கு எங்கும் எந்த தடையும் இல்லை. இங்கே ஒரு சிலை வைத்தால் பாரிய பிரச்சினைகள் எழுக்கின்றன. பௌத்த விகாரைக்குள் நீங்கள் போவதற்கு பெயரை மாற்றத் தேவை இல்லை மதம் மாற வேண்டியதில்லை அதேபோன்று பௌத்த மக்கள் இந்து கோவிலுக்குள் போறதற்கு தடை ஏதும் இல்லை பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் நல்லூர் கோவிலுக்குள் சென்று வழிபடுவதை நான் கண்டிருக்கின்றேன்.

மதங்கள், இனங்களுக்கு மேலே மனிதத் தன்மையை மேலே வைக்க வேண்டும் நாம் அனைவரும் மனிதர்களாக வாழ வேண்டும்.

அன்பான மாணவர்களே!

படித்தவர்களில் பல யாழ்ப்பாண தமிழர்கள் தலைவர்களாக பெரியவர்களாக இந்த நாட்டில் வாழ்ந்திருக்கின்றார்கள். லக்ஸ்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வம், ரஜனி திராணகம, ஆனந்தகுமாரசுவாமி, சிற்றம்பலம் காடினர், ஜிஜி பொன்னம்பலம், எதிர்வீரசிங்கம் போன்றோர் போல நீங்களும் பெரியவர்களாக அவர்களின் பாதையில் வரவேண்டும்.

இங்கே படித்துவிட்டு பெரிய ஆளாகி பல பதவிகளை வகிக்கின்றவர்கள் தாய் நாட்டிற்கும் தாய் தந்தையருக்கும் சேவை செய்வது கிடையாது. படித்து பெரியவர்களாக இருந்தாலும் தாய் தந்தை, மற்றும் தாய் நாட்டிற்கு திருப்பி சேவை செய்யாது போனால் பிரியோசனம் ஒன்றும் இல்லை. அரசியல் வாதிகள் அடுத்த தேர்தலை நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நாம் எதிர்கால அடுத்த சந்ததிக்காக சிந்திக்க வேண்டும். இதுவே எனது வேண்டுகோள்” என்று தெரிவித்தார்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

 

https://www.ibctamil.com/srilanka/80/105797

  • கருத்துக்கள உறவுகள்

என்ன உமக்கு வரலாறோ அல்லது பூர்விகமோ தெரியாது இருக்கலாம், அல்லது தெரியாதது போல் நடிக்கலாம்.

உமது பெயரிலும் மற்றும் மதத்திலும் இருந்து தெரிவது, உமது பூர்விகம் தற்போதைய தமிழ் நாடு அல்லது கேரளா ஆகும்.

பூர்விக சிங்களவர் இரத்தம் எனில், பூர்விக சிங்களவர் பூர்விகம் தமிழ், எழு மொழியைப் பாவித்தவர்கள், பௌத்தம் மற்றும் பிராகிருத, பாளி   மொழி கலப்பினாலும்  திரிப்பினாலும், 7-8 ம் நூற்றாண்டில் சிங்களம் பேச்சு மொழியாக  பூர்விக சிங்களவரினால் வரிக்கப்பட்டது.

எனவே, சிங்களவரில் ஓடுவது தமிழ் இரத்தமே.

இதை எல்லாம் நடுவில் வந்த வெள்ளையனின் ஆரியம் பேச்சை கேட்டு அழிக்க முயன்று, இப்போது இரத்தத்தில் வந்து நிற்கிறது வரலாறு.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நீங்கள் மனிதர்கள் இல்லை. சிங்களவர்கள் என்று தான் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அதுதான் மனித உயிர்களின் முக்கியத்துவம் அறியாமல் ஒரு நிலப்பரப்பை இந்து சமுத்திரத்தில் சுடுகாடாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் போலும். 

பாடசாலைகளில் பொறுப்பாக இருக்கும் அடிவருடிகள் அற்பசொற்ப சலுகைகளுக்காக  கழுதைகளை பாடசாலை விழாவிற்கு அழைத்தால்  அது கனைக்கத் தான் செய்யும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, நவீனன் said:

படித்தவர்களில் பல யாழ்ப்பாண தமிழர்கள் தலைவர்களாக பெரியவர்களாக இந்த நாட்டில் வாழ்ந்திருக்கின்றார்கள். லக்ஸ்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வம், ரஜனி திராணகம, ஆனந்தகுமாரசுவாமி, சிற்றம்பலம் காடினர், ஜிஜி பொன்னம்பலம், எதிர்வீரசிங்கம் போன்றோர் போல நீங்களும் பெரியவர்களாக அவர்களின் பாதையில் வரவேண்டும்.

அது சரி படித்த இந்த பெரியவர்கள் அப்படி என்னதான் செய்தார்கள்? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

அது சரி படித்த இந்த பெரியவர்கள் அப்படி என்னதான் செய்தார்கள்? :cool:

சிங்கள எஜமான விசுவாச சுயநலனுக்கு.. தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்தார்கள்... அவ்வளவே. ?

Edited by nedukkalapoovan

10 hours ago, nedukkalapoovan said:

சிங்கள எஜமான விசுவாச சுயநலனுக்கு.. தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்தார்கள்... அவ்வளவே. ?

அவர் பட்டியல்  இட்ட ஒருவரை தமிழர்கள் அறிவது அவசியம். ஆனந்த குமாரசாமி இதுவரையில் அதிசிறந்த இலங்கையர். அவருக்கு இணையான இலங்கையர் என்னும் பிறக்கவில்லை என எண்பதுகளில் ஆங்கில பத்திரிகையில் ஒரு சிங்கள ஆய்வாளர் குறிப்பிட்டார். ஆனந்த குமாரசாமியை கற்காமல் ஒருவன் கலை துறையில் முழுமை அடையமுடியாது என எனது சிங்கள பல்கலைக்கழக ஆசிரியர் என்னை வலிந்து படிக்க வைத்தார். அவரது 'Medieval singhalese art ' என்ற நூல் இலங்கை புராதன கலைகளின் பைபிள் போன்றது. அவரது 'Dance of  Siva' என்ற நூல் கீழைத்தேச கலைகளை மேலைத்தேசத்தவருக்கு அறிமுகப்படுத்தியது. இவர் பற்றிய ஒரு விபரணப் படத்தை எழுபதுகளில் ஜேர்மன் அரசு வெளியிட்டது. 

இவர் ஐநூறுக்கு மேற்படட கலை பற்றிய ஆய்வு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இத்தனைக்கும் இவர் ஒரு விஞ்ஞானி. இவர் கண்டுபிடித்த ஒரு கனிமப்பொருளுக்கு இவர் பெயரே உள்ளது. நான் வேலை செய்த  வெளிநாட்டு அலுவலகத்தில் ஒரு சிறிய புத்தக அலுமாரி உள்ளது. ஒரு நூறு புத்தகம் கூட இல்லை. அதில் ஆனந்த குமாரசாமியின் ஒரு நூல் இருந்தது. அவர் எனது நாட்டவர் என சொல்லி நானும் பெருமைப்பட்டேன். அவரை பெற்றெடுத்த மண் அவரை அறியாமல் கேலிசெய்வது கவலைக்குரியது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, hasan said:

அவர் பட்டியல்  இட்ட ஒருவரை தமிழர்கள் அறிவது அவசியம்.

படித்த தமிழர்களை மெச்சி பட்டியலிடும் அவரிடம்,

எதற்காக படித்துகொண்டிருந்த தமிழர்களின் பாடசாலைகளை குறிவைத்து விமான தாக்குதல் நடத்தி கொத்து கொத்தாக மாணவர்களை கொன்றுகுவித்தார்கள் என்று கேட்டு சொல்லமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுனர் ஐயா இனவாதம் என்றால் என்னவென்று விபரமில்லாம பேசியிருக்கிறார்,

தமிழர் பகுதியின்ஒரு ஆளுனராக இருந்துகொண்டு,அவர்களின் ஒருவிழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு,அவர்களின் நடுவில் நின்றுகொண்டு   முழுக்க முழுக்க தமிழர்களே இனவாதிகள் என்பதுபோல் பேசுவதற்கு பெயர்தான் இனவாதம் ஐயா.

சிங்களவரின் இரத்தம் வேண்டாம் என்பதால் வருவதல்ல இனவாதம், தமிழரின் ரத்தம் சிங்களவருக்கு வேண்டும் என்று நீங்கள் அடம்பிடித்ததால் வந்ததே இலங்கையில் இனவாதம்.

1 hour ago, valavan said:

படித்த தமிழர்களை மெச்சி பட்டியலிடும் அவரிடம்,

எதற்காக படித்துகொண்டிருந்த தமிழர்களின் பாடசாலைகளை குறிவைத்து விமான தாக்குதல் நடத்தி கொத்து கொத்தாக மாணவர்களை கொன்றுகுவித்தார்கள் என்று கேட்டு சொல்லமுடியுமா?

ஆளுநர் பேசியதை பற்றியதல்ல எனது கருத்து. தமிழ் வெறி இல்லாத மனிதகுலத்துக்கு பங்களித்த தமிழர்களை எந்தவித ஆய்வுமில்லாமல் தமிழ் துரோகிகளாக படடமளிப்பதை தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுங்கள். ஆனந்த குமாரசாமி தன்னை தமிழனாக நிறுவி அதில் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லாத மாமனிதன். 

  • கருத்துக்கள உறவுகள்

சோறு போட்டுவிட்டுச் சொல்லிக்காட்டுகிறார் "நக்குண்டார் நாவிழந்தார்"

இவர் படிச்சவர்தானா இல்லையா!

அடுத்த முறை யாராவது அவசரத்துக்கு வைத்தியசாலையில் ரத்தம் ஏத்துவதாகவிருந்தால் சிங்களவனின் ரத்தமா தமிழனின் ரத்தமா எனகேட்டு ஏத்துங்கோ.

எவ்வளவு கேவலபுத்தி இவருக்கு இவரது கருத்தே உண்மையைச்சொல்கிறது என்றுமே சிங்கள இனம் மேன்மக்களாக இருக்கமுடியாது என.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா குரே அவர்களே! தமிழ் இரத்தம், சிங்கள இரத்தம் தமிழ் கடவுள், சிங்களக்கடவுள் இவற்றையெல்லாம் விடுங்கள். இன்றைய காலத்தில் தமிழர்கள் சுயமாக வாழ்வதற்கு இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து அவர்கள் கேட்ட, அவர்களுடைய மண்ணை உங்கள் நிர்வாகத்திலிருந்து விடுவித்துவிட்டுப் பாருங்கள், சிங்களப் பகுதிகளில் இருக்கும் புத்த தூபிகளை விடவும் உயரமான தூபி அங்கு எழுந்து காட்சிதரும். அன்று மூதாதையர்களை இலங்கையில் எரித்து அழித்த அனுமனையே இன்று வானளாவ நிறுவி கோவில் கட்டியிருக்கும் தமிழர்களின் செயற்பாடுகளே இதற்குச் சாட்சி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, hasan said:

ஆளுநர் பேசியதை பற்றியதல்ல எனது கருத்து. தமிழ் வெறி இல்லாத மனிதகுலத்துக்கு பங்களித்த தமிழர்களை எந்தவித ஆய்வுமில்லாமல் தமிழ் துரோகிகளாக படடமளிப்பதை தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுங்கள். ஆனந்த குமாரசாமி தன்னை தமிழனாக நிறுவி அதில் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லாத மாமனிதன். 

உங்களுக்கு பிடித்த மாமனிதனை நீங்கள் பூஜிக்கவேண்டாம் என்று இங்கே யாராவது சொன்னார்களா?

அதுபோல் அடுத்தவர் எப்படி இருக்கவேண்டுமென்று நீங்களும் கருத்து சொல்வது தகாது.

தமிழர்களுக்கு பிடித்த தமிழனை சிங்களவர்களுக்கு பிடிக்காதபோது,

சிங்களவர்களுக்கு பிடித்த தமிழர்களை தமிழர்களுக்கும் பிடிக்காது என்பது  துரோகி பட்டமளிப்பதல்ல, துரதிர்ஷ்டவசமாக எம் மனதில் படிந்துவிட்ட அளவையியல் கோட்பாடு, அவ்வளவுதான்.

நாம் பட்ட காயங்கள் அப்படி.

  • கருத்துக்கள உறவுகள்

குரே அவர்கள் அதிகமாகத் தமிழ் சிங்கள இரத்தம்பற்றியே பேசுகிறார். ஒருவேளை அவரிடம் இரண்டு இரத்தங்களும் கலந்து ஓடுகிறதோ...... Bildergebnis für %e0%ae%86%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf

எதற்கும் அவரை 'டி என் ஏ' பரிசோதனைக்கு உட்படுத்தினால் புரிந்துவிடும். Bildergebnis für dna

On 9/8/2018 at 7:15 PM, valavan said:

உங்களுக்கு பிடித்த மாமனிதனை நீங்கள் பூஜிக்கவேண்டாம் என்று இங்கே யாராவது சொன்னார்களா?

அதுபோல் அடுத்தவர் எப்படி இருக்கவேண்டுமென்று நீங்களும் கருத்து சொல்வது தகாது.

தமிழர்களுக்கு பிடித்த தமிழனை சிங்களவர்களுக்கு பிடிக்காதபோது,

சிங்களவர்களுக்கு பிடித்த தமிழர்களை தமிழர்களுக்கும் பிடிக்காது என்பது  துரோகி பட்டமளிப்பதல்ல, துரதிர்ஷ்டவசமாக எம் மனதில் படிந்துவிட்ட அளவையியல் கோட்பாடு, அவ்வளவுதான்.

நாம் பட்ட காயங்கள் அப்படி.

உண்மை! உண்மை! உண்மை!
(பச்சை முடிஞ்சிட்டு)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.