Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா!

October 15, 2018

 நடிகர் பாக்கியராஜூம் கலந்து கொண்டார்!!

Barathi-Rajah-at-kilinochi.png?zoom=3&re

கிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள இயக்குநர் இமயம் பாரதிராஜா மேலும் வீரம் விளைந்த மண்ணில் நின்று இக்கலைஞர்களைப் பாராட்டுவது எமக்கு மேலும் பெருமையைத் தேடித்தருகின்றதெனவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி புகைப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் புகைப்படப்பிடிப்பாளர்களைக் கௌரவிக்கம் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டார். இந்த நிகழ்வுக்காக தமிழகத்தை சேர்ந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனரும் நடிகருமான பாக்கிராஜ் ஆகியோர் கிளிநொச்சிக்கு வருகை தந்து கலந்து கொண்டனர்.

அங்கு மேலும் உரையாற்றிய இயக்குனர் பாரதிராஜா, இலங்கையில் இந்த மண்ணிலேயே வீரத் தமிழன், வீரத் தமிழச்சி வாழ்ந்ததாகவும், வாழ்வதாகவும் அவர் உணர்ச்சிபூர்வமாக கருத்துத் தெரிவித்திருந்தார். இதேவேளை இலங்கை தனக்கு மிகவும் நெருக்கமுள்ள நாடு என்று இயக்குனர் பாக்கியராஜ் தெரிவித்தார். இருவரும் நிகழ்வில் அரசியல் சார்ந்த பேச்சுக்களை தவிர்த்துக் கொண்டனர்.

கிளிநொச்சி புகைப்படப்பிடிப்பாளர் சங்கத்தினர், மாவட்டத்தில் புகைப்படத்துறையில் ஆர்வமாகச் செயற்பட்ட மூத்த புகைப்பட கலைஞர்களை கௌரவிக்க இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் இயக்குனர்களான பாரதிராஜா மற்றும் இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் உள்ளிட்ட குழுவினர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Barathi-Rajah-at-kilinochi1.png?resize=7

Barathi-Rajah-at-kilinochi2-Copy.png?res

http://globaltamilnews.net/2018/99475/

  • கருத்துக்கள உறவுகள்

உந்த சினிமாக்காரங்களை எல்லாம் ஏன் வன்னிக்கு கூப்பிட்டினம்?...மிச்சம் இருக்கிற சனத்தையும் நாசம் பண்ணிறத்திற்கோ?
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:

உந்த சினிமாக்காரங்களை எல்லாம் ஏன் வன்னிக்கு கூப்பிட்டினம்?...மிச்சம் இருக்கிற சனத்தையும் நாசம் பண்ணிறத்திற்கோ?
 
ஓமோம்......உந்த சினிமாக்காரங்கள் வரக்குமுதல் சிலோனிலை ஒரு பூச்சி புளுக்கூட சாகேல்லை கண்டியளோ..... ஏன் ஒரு இனப்படுகொலைகளே நடக்கேல்லை எண்டால் பாருங்கோவன் tw_blush:

எதை கதைச்சாலும் பொருந்த கதைக்கோணும் தங்கச்சி :cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

உந்த சினிமாக்காரங்களை எல்லாம் ஏன் வன்னிக்கு கூப்பிட்டினம்?...மிச்சம் இருக்கிற சனத்தையும் நாசம் பண்ணிறத்திற்கோ?
 
போரின் வடுக்களை தாங்கி நிற்பவர்கள் அவர்கள் நாங்கள் இங்கு சுகபோகமாக எந்தவித குற்ற உணர்வும் இன்றி அந்த மக்கள் கொஞ்ச நேரம் சந்தோசமாக இருப்பதுக்கும் கதை சொல்லிக்கொண்டு இருப்பது கேவலமான ஒன்று .

போர் முடிந்தபின் எத்தனை தட்கொலைகள் இலங்கையில்  நடந்தன அதுவும் போர் நடந்து முடிந்த வன்னி மண்ணில் கூட மன ஆற்றுபடுத்தல் என்பதை இங்கிருந்து வாய்கிழிய கத்துக்கிரேம் உண்மையில் குடுக்கவேண்டியது இங்கு உள்ள ஆட்களுக்குத்தான் அதுவும் முக்கியமாய் அந்த மக்கள் அற்ப சந்தோசமும் அடையக்கூடாது எனும் வெறியில் இருப்பவர்களுக்குத்தான் . 

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ல  கலை நிகழ்ச்ச்சி நடத்துவதற்கு எனக்கு எது வித ஆட்சபனையும் இல்லை...ஆனால்,இவர் என்ன மண்ணாங்கட்டிக்கு போனவர்?
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

ஊர்ல  கலை நிகழ்ச்ச்சி நடத்துவதற்கு எனக்கு எது வித ஆட்சபனையும் இல்லை...ஆனால்,இவர் என்ன மண்ணாங்கட்டிக்கு போனவர்?
 
பாரதிராஜாவும் பாக்கியராஜும் கிளிநொச்சியில் உள்ளவர்கள் கூப்பிட்டதால்தான் போனார்கள். ஒரு போர் நடந்த பூமி எப்படி மாறியுள்ளது என்பதை அவர்கள் பார்க்கவும் ஆசைப்பட்டிருக்கலாம். தமிழ்த் திரையுலகில் ஒரு காலத்தில் கோலோச்சிய இருவரையும் நேரே காண்பதற்கும் எத்தனைபேர் ஆசைப்பட்டிருப்பார்கள். அதை ஏன் குழப்பமாகப் பார்க்கவேண்டும்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, ரதி said:

ஊர்ல  கலை நிகழ்ச்ச்சி நடத்துவதற்கு எனக்கு எது வித ஆட்சபனையும் இல்லை...ஆனால்,இவர் என்ன மண்ணாங்கட்டிக்கு போனவர்?
 
வேலியடைக்க போனவர் tw_grimace:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் நடந்தது என்னவென்று யாருக்காவது தெரியுமா? 

பாவம் பக்கத்திலிருக்கும் பெண்.....அதையும் கோர்த்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

வேலியடைக்க போனவர் tw_grimace:

கொஞ்சக் காலத்தில இதே யாழில் வந்து புலம்பிக் கொண்டு இருக்க வேண்டாம்...இதே சினிமாக் கூத்தாடிகள் படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று சொல்லி எங்கட பொண்ணுங்களை நாசம் பண்ணிடடங்கள் என்று ?
 
19 hours ago, கிருபன் said:

பாரதிராஜாவும் பாக்கியராஜும் கிளிநொச்சியில் உள்ளவர்கள் கூப்பிட்டதால்தான் போனார்கள். ஒரு போர் நடந்த பூமி எப்படி மாறியுள்ளது என்பதை அவர்கள் பார்க்கவும் ஆசைப்பட்டிருக்கலாம். தமிழ்த் திரையுலகில் ஒரு காலத்தில் கோலோச்சிய இருவரையும் நேரே காண்பதற்கும் எத்தனைபேர் ஆசைப்பட்டிருப்பார்கள். அதை ஏன் குழப்பமாகப் பார்க்கவேண்டும்??

ஏன் அங்குள்ளவர்கள் இவரைக் கூப்பிடுகிறார்கள் என்பது தான் என் கேள்வி...இதன் பின் விளைவுகள் பாரதூரமாய் இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

பாரதிராஜாவின் காலைக் கழுவும் எம்மவர்கள்.

Bharathiraja.jpg

வயதில் மூத்த பெரியவர்களுக்கு பாதை பூசை செய்வது.. நம்மிடையே இருக்கும் ஒரு வழக்கம் தானே.

இப்ப லண்டன் நகர் உட்பட புலம்பெயர் தேசங்களில் எல்லாம் இதை ஒரு விழாவாகவே (பார்டியாக) நம்மவர்கள் கொண்டாடுவது நிழலி அண்ணருக்கு இன்னும் எட்டவில்லைப் போலும்.

பாரதிராஜா தமிழுக்கும்.. தமிழ் மக்களின் கலைக்கும் ஆற்றிய பங்களிப்புக்கு மதிப்பளிக்கப்பட வேண்டியவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால்.. தனிப்பட்ட முறையில்.. இந்தப் பாத பூசையை வெறுக்கிறேன். ?

எங்கள் திருமணத்தின் போதும்.. ஒருவருக்கு ஒருவர் பாத பூசை செய்யச் சொன்னார்கள். மனசுக்கு சங்கடமாக இருந்தாலும்.. நம்மிருவருக்குள் என்று தேற்றிக் கொள்ள வேண்டி இருந்தது.  திருமணத்தை நடத்தி வைத்தது தமிழக சைவ பூசகர். 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nedukkalapoovan said:

பாத பூசை என்பது முட்டாள்தனமானது.என்பதற்கப்பால் .பாத பூஜைக்குரிய நபர் அதற்கு தகுதியானவராய் இருக்க வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

26238987-1390512567741911-57654023029396

இதுவும் கண்ணில பட்டிச்சு tw_cold_sweat:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

பாத பூசை என்பது முட்டாள்தனமானது.என்பதற்கப்பால் .பாத பூஜைக்குரிய நபர் அதற்கு தகுதியானவராய் இருக்க வேண்டும் 

இதை இங்க சொல்லுற மாதிரி.. நீங்கள் அடிக்கடி போய் வரும்.. லண்டன் என்பீல்ட் கோவிலில் போய் சொல்வீர்களா. அங்கு தான் அடிக்கடி இந்தத் திருக்கூத்து அரங்கேற்றப்படுகிறது.

அதுபோக.. 

பாரதிராஜாவுக்கு பாத பூசை செய்ய விரும்புவர்களிடம்.. அவர் மீது அளப்பரிய மதிப்பும் மரியாதையும் தகுதியும் இருக்க முடியும் இல்லையா..??! ?

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

பாரதிராஜாவும் பாக்கியராஜும் கிளிநொச்சியில் உள்ளவர்கள் கூப்பிட்டதால்தான் போனார்கள். ஒரு போர் நடந்த பூமி எப்படி மாறியுள்ளது என்பதை அவர்கள் பார்க்கவும் ஆசைப்பட்டிருக்கலாம். தமிழ்த் திரையுலகில் ஒரு காலத்தில் கோலோச்சிய இருவரையும் நேரே காண்பதற்கும் எத்தனைபேர் ஆசைப்பட்டிருப்பார்கள். அதை ஏன் குழப்பமாகப் பார்க்கவேண்டும்??

ம்ம் பால் அபிசேகமே செய்யக்க  இதெல்லாம் சும்மா எடுத்துக்க வேண்டியதுதான்  ஆனால் போட்டோ மட்டும் தான் மிஞ்சும் பாரதிராஜாவாலோ பாக்கியராசவாலோ எதுவும் செய்திட முடியாது அங்கே நடந்த பிரச்சினையை அவரிடம் இங்கே கேட்கும் முட்டாள்  பீசுகள்  இருக்கிறார்கள் .மற்றது நமக்கு என்ன தேவையென்பதை அரசியலிலும் சரி இப்படிப்பட்ட நிகழ்வுகளிலும் சில வெந்ததுகள் மறந்து விடுகிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nedukkalapoovan said:

இதை இங்க சொல்லுற மாதிரி.. நீங்கள் அடிக்கடி போய் வரும்.. லண்டன் என்பீல்ட் கோவிலில் போய் சொல்வீர்களா. அங்கு தான் அடிக்கடி இந்தத் திருக்கூத்து அரங்கேற்றப்படுகிறது.

அதுபோக.. 

பாரதிராஜாவுக்கு பாத பூசை செய்ய விரும்புவர்களிடம்.. அவர் மீது அளப்பரிய மதிப்பும் மரியாதையும் தகுதியும் இருக்க முடியும் இல்லையா..??! ?

என்பீல்ட் கோயிலில் பாத பூஜையா? ...எப்ப நடந்தது?...யாருக்கு,யார் பாத பூஜை செய்தார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரதி said:

என்பீல்ட் கோயிலில் பாத பூஜையா? ...எப்ப நடந்தது?...யாருக்கு,யார் பாத பூஜை செய்தார்கள் 

அதுக்கு தனி ரிக்கெட்டே விக்கிறாங்கள்... அதுக் கூடத் தெரியவிலையே. கொடுமைடா சாமி. ?

59 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

26238987-1390512567741911-57654023029396

இதுவும் கண்ணில பட்டிச்சு tw_cold_sweat:

தனி,

இது காணாமல் போன தன் பிள்ளையை கண்டு பிடித்து தாருங்கள் என்று கதறும் ஒரு தமிழ் தாயின் படம். இதுவும் பாரதிராஜா போன்ற சினிமா பிரபலங்களின் கால்களை கழுவுவதும் ஒன்றல்லவே?

1 hour ago, nedukkalapoovan said:

வயதில் மூத்த பெரியவர்களுக்கு பாதை பூசை செய்வது.. நம்மிடையே இருக்கும் ஒரு வழக்கம் தானே.

இப்ப லண்டன் நகர் உட்பட புலம்பெயர் தேசங்களில் எல்லாம் இதை ஒரு விழாவாகவே (பார்டியாக) நம்மவர்கள் கொண்டாடுவது நிழலி அண்ணருக்கு இன்னும் எட்டவில்லைப் போலும்.

பாரதிராஜா தமிழுக்கும்.. தமிழ் மக்களின் கலைக்கும் ஆற்றிய பங்களிப்புக்கு மதிப்பளிக்கப்பட வேண்டியவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால்.. தனிப்பட்ட முறையில்.. இந்தப் பாத பூசையை வெறுக்கிறேன். ?

எங்கள் திருமணத்தின் போதும்.. ஒருவருக்கு ஒருவர் பாத பூசை செய்யச் சொன்னார்கள். மனசுக்கு சங்கடமாக இருந்தாலும்.. நம்மிருவருக்குள் என்று தேற்றிக் கொள்ள வேண்டி இருந்தது.  திருமணத்தை நடத்தி வைத்தது தமிழக சைவ பூசகர். 

பாரதிராஜா ஒரு காலத்தில் ஓரளவுக்கு நல்ல தமிழ் படங்களை எடுத்தவர் என்பதற்கு அப்பால் இவர் தமிழுக்கும் தமிழ் மக்களுக்காகவும்  சாதித்தது என்ன?

பாத பூஜை செய்வது என்பது மிகுந்த பிற்போக்கான விடயம். ஒருவரை தெய்வத்துக்கு நிகராக வைத்து போற்றும் விடயம். கலியாணத்தில் அப்பா அம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதை விட பாதம் / கால்களை கழுவி விடுதலை நான் அறியவில்லை / செய்யவும் இல்லை. அப்படியே பெற்றோரின் கால்களை கழுவி விடுதல் ஒரு சடங்காக இருப்பின் அதை செய்வதில் தவறும் இல்லை. பெற்றோரையும் குருவையும் தவிர வேறு எவரது கால்களையும் கழுவி விடுதல் ஆண்டான் அடிமை புத்தியில் இருந்து வருபவை. ஆதிக்க மனப்பான்மையை வளர்த்து விடுபவை.

புலம்பெயர் நாடுகளிலிலும் இவை நடக்குது என்பதற்காக அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலங்களில் வளர்ந்து வரும் பிற்போக்குத்தனமான விடயங்களின் தொடர்ச்சியாக தான் இதை காண்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

புகைப்படங்கள் சில சமயம் காட்சிப் பிழைகளுக்கு வழிகோலி விடும். எனக்கென்னவோ இந்த புகைப்படம் பக்திப்பரவசத்
துடன் கால் கழுவப்பட்டது என்ற கருத்தை சிருஸ்டிக்கும் படமாகத் தோன்றவில்லை. கால் கழுவப்பட்டிருக்கலாம். கழுவ தண்ணீர் ஊற்றிய காரணம் வேறாக இருக்கலாம். அனல் வாதம் என்று நீங்கள் எல்லோருமே கேள்விப்பட்டிருக்கலாம் அது கைகாலுக்கு மிகுந்த எரிவைக் கொடுக்கும். இந்தப்பாரதிராஜா என்ற இயக்குனருக்கும் அது இருந்திருக்கலாம்.... கால் கழுவக்கூடிய வாய்ப்பில்லாத இடத்தில் ஏன் பக்கெட்டை வைத்து தண்ணீர் ஊற்றியிருக்கக்கூடாது? இந்த நிழற்படத்தில் பக்திப் பரவசத்தில் எவரும் கால் கழுவுவதாகத் தெரியவில்லை. அருகில் தண்ணீரைக் கால்களில் ஊற்ற, இயக்குனருடன் சமதளத்தில் அமர்ந்திருக்கும்பெண் உதவி செய்கிறார். அவர் கைகளில் இருக்கும் யூஸ் பக்தியுடன் கால்கள் அலம்புவதை பறைசாற்றவில்லை. அடுத்து இயக்குனரின் முகம் மிகுந்த சங்கோஜத்தை வெளிப்படுத்துகிறது. நிழற்படத்தை மீளவும் பாருங்கள் அதில் எவராவது பாதங்களை தொட்டு கழுவுகிறார்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீர மரணம் என்ற தகுதி பிரபாகரனுக்கே உண்டு – இயக்குநர் பாரதிராஜா!

barathiraja.jpg

“புலியை புறத்தால் விரட்டிய தமிழச்சி என்று படித்திருக்கிறேன். ஆனால் வீர மரணம் என்ற தகுதி, ஈழ மண்ணிலே தன்னுயிரை கொடுத்து விடுதலைக்காகப் போராடிய பிரபாகரனுக்கே உண்டு” என தென்னிந்திய திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் என்ற ஒரு மொழியும் தமிழன் என்ற ஒரு இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான் தமிழன் எனபதை உலக்கத்து எடுத்துக்காட்டியது ஈழ மண்தான் என்றும் அவர் கூறினார்.

ஆகிலன் மாற்றுத்திறன் குழந்தைகளின் கலை நிகழ்வு மற்றும் கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு நேற்று (புதன்கிழமை) மாலை மட்டக்களப்பு செங்கலடி சௌபாக்கியா மண்டபத்தில் நடைபெற்றது.

அகிலன் பவுண்டேசன் ஸ்தாபகர் மு. கோபாலக்கிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தெனனிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனரான பாக்கியராஜ், நடிகர் விதார்த், நடிகை நட்சத்திரா, திரைப்பட தொகுப்பாளர் சுரேஸ்காமாட்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர், “புலியை புறத்தால் விரட்டிய தமிழச்சி என்று படித்திருக்கிறேன் ஆனால் வீர மரணம் என்ற தகுதி, ஈழ மண்ணிலே தன்னுயிரை கொடுத்து விடுதலைக்காகப் போராடிய தலைவர் பிரபாகரனுக்கே உண்டு.

வள்ளுவர் பிறந்தார் பெரிய பெரிய இலக்கிய மேதைகள் கம்பராமாயணம் படைத்தார் தமிழகம் அற்புதமான பூமி ஆனால் தமிழ் என்ற ஒரு மொழியும் தமிழன் என்ற ஒரு இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான் தமிழன் என உலக்கத்து எடுத்துக்காட்டியது ஈழ மண்ணாகும்.

பெண்கள் கழுத்து முழுக்க நகை அணிந்து இரவு 12 மணிக்கு வீதியிலே சென்றுவிட்டு பத்திரமாக வீடு திரும்புகிறாளே அன்றுதான் இந்த நாட்டுக்கு பெருமையுண்டு சுதந்திரம் உண்டு என மகாத்மா காந்தி இன்று சொன்னார்.

இது இந்தியாவில் நடக்கவில்லை. ஆனால் அவரது கனவை ஈழ மண்ணில் வன்னிப் பிரதேசத்தில் நேரடியாகப் பார்த்தேன். மனிதன் மறைந்து போனாலும் தமது தடையங்களை பதிவுசெய்துவிட்டு செல்ல வேண்டும்.

இது இந்த பூமிக்கு நாம் செலுத்த வேண்டிய வாடகை. எமது பிறப்பில் எமது கலைகளைக் காப்பாற்ற வேண்டும். இந்த மேடையில் கௌரவிக்கப்படவுள்ள கலைஞர்கள் உங்கள் தடங்களைப் பதிவு செய்துள்ளீர்கள்.

ஈழ மண்ணில் அற்புதமான கலைஞர்க்ள உள்ளார்கள் பெரிய இலக்கியவாதிகள் உருவாகியுள்ளனர். இயக்குனர் பாலுமகேந்திரா இந்த மண்ணிலிருந்துதான் வந்திருந்தார்.

இங்குள்ளவர்களுக்கும் சரியான வாய்ப்புகள் கிடைத்திருந்தால் மிகச்சிறந்த கலைஞர்களாக உருவாகுவார்கள்” என்றார். இந்நிகவில் 20 மூத்த கலைஞர்களும், ஐந்து இளம் கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வீர-மரணம்-என்ற-தகுதி-பிரப/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெய்யில் வெக்கை காலங்களில் ஒரு பெரிய சட்டிக்குள் குளிர்தண்ணியை ஊற்றி அதற்குள் காலை வைத்துப்பாருங்கள். பிரசர் முதல் பல உபாதைகள் குறையும் இதை நான் அனுபவபூர்வமாக அனுபவித்திருக்கின்றேன்.
எனது வீட்டிற்கு விருந்தினராக வந்தவர்கள் உண்ட கோப்பைகளை நான் அவர்களை கழுவவிடுவதில்லை. இது ஒரு மரியாதை நிமிர்த்தம்.
அதற்காக குமாரசாமி இன்னாரின் கோப்பையை கழுவுகின்றான் என்று  மற்றவர்கள் நரம்பில்லா நாக்கால் சொன்னால் என்ன செய்ய முடியும்? tw_blush:

அவருக்கு அருகில் இருப்பவர் ஓம் படத்தில் அவர்கூட நடிச்ச நட்சதிரா போல இருக்கு,எழுந்து நிப்பவரும் நடிகர் விதார்த் போல? அல்லது அவரின் உதவியாளர் ஆக இருக்ககூடும் 

மழை காலங்களில் தண்ணீருக்குள் நடந்து வந்தால் கால் கடிக்கும் அதற்கு எங்கள் ஊரில் சுடுதண்னில  கால் கழுவுவார்கள்,சில இடங்களில் புளியம் இலை அவித்து அந்த தண்ணீல கால் கழுவுவார்கள்

எல்லாவற்றிலும் குற்றம் கண்டு பிடித்துகொண்டிருக்காமல் நகர்ந்து விடுதல் நல்லது

படம் பின்னிருந்து இரகசியமாக எடுக்கபட்டிருக்கு, ஈழ தமிழர்கள் சினிமா காரரை கூட்டிவந்து பாதங்களை கழுவுகிரார்கள் என கதை கட்டி விட திட்டமிட்டு செய்திருப்பார்களோ?:)

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

தனி,

இது காணாமல் போன தன் பிள்ளையை கண்டு பிடித்து தாருங்கள் என்று கதறும் ஒரு தமிழ் தாயின் படம். இதுவும் பாரதிராஜா போன்ற சினிமா பிரபலங்களின் கால்களை கழுவுவதும் ஒன்றல்லவே?

  ஒன்றல்லதான்  அந்த பெண்மணியை தவிர மற்றவர் யாரென்றும் தெரியாது எதற்க்காக தண்ணீர்  ஊற்றுகிறார்கள் என்றும் தெரியாத போது விமர்சிக்க முடியுமா என்ன?

 புதிய திரைப்படங்களுக்கு பால் ஊத்த ஆரம்பித்துள்ளார்கள் இலங்கையிலும்  இந்திய பிரபலங்கள் புலத்தில் நடக்கும் நிகழ்வுகள் இதைவிடவும் பிரபலமாக வேண்டும் என்பதற்க்காக பல்வேறு விடயங்கள் நடக்கிறது அறிந்து கொள்கிறோம் விமர்சிக்கிறோம் ஆனால் அது நடக்காமலா உள்ளது 

நான் அந்த படத்தை இணைத்ததற்கு காரணம் தன் பிள்ளைய பறி கொடுத்த தாய் ஒருத்தி அழும் போது அந்த தமிழ் ரத்தம் துடிக்காமல் ஜடங்களாக  அமர்ந்திருக்கும் பொம்மைகளை பாருங்கள் அந்த அம்மா இவர்கள் காலைப்பிடித்து அழுதிருந்தால் என்ன நடந்திருக்கும்  விமர்சனம் வந்திருக்கும் பிள்ளை விடுதலை அடைந்திருக்குமா 

On 10/19/2018 at 9:05 PM, நிழலி said:

பாத பூஜை செய்வது என்பது மிகுந்த பிற்போக்கான விடயம்.

பாத பூஜை செய்வது, காலில் விழுந்து கும்பிடுவது போன்றவை மிகவும் மோசமான, பிற்போக்கான, கேவலமான  குணங்கள்! 
நல்ல பண்பாடு உடையவர்கள் இவற்றை ஊக்கப்படுத்தமாட்டார்கள். 
மரியாதை என்பது மனதளவிலும், செயல்களிலும் வெளிப்பட வேண்டும். இது போன்ற கேவலமான பாரம்பரியங்கள் ஊடாக அல்ல. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.