Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமராக மகிந்த ராஜபக்ச; யாழில் வெடி வெடித்து கொண்டாட்டம்!

Featured Replies

பிரதமராக மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பதிவேற்றுள்ள நிலையில், யாழில் வெடி வெடித்து மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னலையில் பிரதமராக பதவியேற்றிருந்தார்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் வெடி வெடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/108109

  • தொடங்கியவர்

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச; வடக்கிலிருந்து வந்த முதல் வாழ்த்து செய்தி!

இலங்கை திருநாட்டின் பிரதமராக சற்றுமுன் பதவியேற்ற மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களுக்கு சிறி ரெலோ கட்சியின் செயலாளர் நாய்கம் ப. உதய்ரசா அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாரிய எதிர்பார்ப்போடு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டு அரசாங்கம் மக்கள் எதிர்பார்த்த நல்லாட்சிக்கு பதிலாக விலை அதிகரிப்பையும் பாரிய பொருளாதார சிக்கல்களையும் மக்களின் தலையில் சுமத்தியதன் விளைவாக சரியான நேரத்தில் நாட்டை மீட்டெடுக்க நாட்டின் பிரதமராக அதிரடியாக பதவியேற்ற உங்களுக்கு எனது கட்சியின் சார்பாகவும் தனிப்பட்ட ரீதியிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் .

தவிர எனிவரும் காலங்களில் சிறப்பான ஆட்சியினை மேற்கொண்டு நாட்டிற்கு நிலையான அபிவிருத்தியையும் தமிழர்களுக்கான நீடித்த அரசியல் தீர்வையும் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

அந்த வகையில் தங்களின் சிறப்பான ஆழுமையை பயன்படுத்தி சிறுபான்மை மக்கள் மீது அதிக கவனமெடுத்து அவர்களின் எதிர்பார்புக்களையும் அபிலாசைகளையும் நிறைவேற்ற முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்வதோடு அதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு எமது கட்சி பூரண ஆதரவை வழங்க தயாராக உள்ளது எனவும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/108112

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவமும் மகிந்தவின் ஆதரவாளர்களும் யாழிலும் கிளிநொச்சியிலும் வெடி கொளுத்தி கொண்டாட்டம்

October 27, 2018

vedi.jpg?resize=800%2C521

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவி ஏற்றதும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இராணுவத்தினரும் மஹிந்த ராஜபக்சவிற்கு கடந்த காலத்தில் ஆதரவு வழங்கிய அரசியல் கட்சிகளும் வெடி கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சியில் உள்ள சில இராணுவ முகாம்களில் இராணுவத்தினர் வெடி கொளுத்தி கொண்டாத்தில் ஈடுபட்டனர். அத்துடன் யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினர் சிலரும் இராணுவ முகாங்களிலும் வெடி கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை மகிந்த ராஜபக்சவிற்கு கடந்த காலத்தில் ஆதரவு வழங்கிய முன்னாள் அமைச்சர் ஒருவரது அலுவலகத்திலும் கட்சியின் ஆதரவாளர்கள் வெடி கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரும் கிளிநொச்சி நகரில் வெடி கொளுத்தி கொண்டாத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை வவுனியாவில் சிறிரேலோ கட்சி அலுவலத்திலும் வெடி கொளுத்தி மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மகிந்த ராஜபக்சவை ஆதரித்து அக் கட்சியின் தலைவர் உதயகுமார் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதேவேளை திருகோணமலை நகரத்தில் நேற்றிரவு முழவதும் பெரும்பான்மையின மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மகிந்த ராஜபக்ச எங்கள் ஜனாதிபதி என்றும் கொட்டும் மழையில் நனைந்தபடி அவர்கள் முழக்கமிட்டனர்.

http://globaltamilnews.net/2018/100864/

3 hours ago, கிருபன் said:

அத்துடன் யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினர் சிலரும் இராணுவ முகாங்களிலும் வெடி கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

அட பாவியளா 

எனது வீட்டின் அருகாமையில் எந்த இராணுவ முகாமும் இல்லையே. நேற்றிரவு வெடி சத்தம் கேட்டதும் நான் யாழில் பதிந்திருந்தேன். அங்கு வெடி கொளுத்தியது பொதுமக்கள்தான் - அவர்களுக்கு என்ன சந்தோஷமோ நானறியேன்.

ஆனால் சர்வாதிகார ஆட்சி இப்பவும் இருந்திருந்தால் வெடி கொளுத்தியவர்கள் தமது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியதற்காக துரோகிகளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பார்கள் அல்லது காணாமால் போயிருப்பார்கள். 

சிலவேளை அந்த சர்வாதிகாரத்தை ஒழித்தத்திற்காக நன்றி உணர்வில் கொளுத்தி இருப்பார்களோ.

யாமறியோம் 

ஆனாலும் இராணுவத்தின் மீது பழி போட்டு தப்பிப்போம். ?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் சொல்லியிருக்கலாம்.. விட்டிட்டீங்களே?

சிங்கள இராணுவத்தினர் எல்லாம் ரணில் பக்கம் என்று ஐ.தே.க சொல்வதால் ஒழுக்கத்தைப் பேணும் இராணுவத்தினர் வெடி கொளுத்தியிருக்கமாட்டார்கள்தான். ?

தமிழ் மக்கள் வெடி கொளுத்திக் கொண்டாடியதை வைத்துப் பார்க்கும்போது அடுத்த தேர்தலில் யாழ் மாவட்டத்தில் ஈபிடிபியும் மகிந்த கூட்டணியும் பெருமளவு ஆசனங்களைக் கைப்பற்றிவிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.??

18 minutes ago, கிருபன் said:

தமிழ் மக்கள் வெடி கொளுத்திக் கொண்டாடியதை வைத்துப் பார்க்கும்போது அடுத்த தேர்தலில் யாழ் மாவட்டத்தில் ஈபிடிபியும் மகிந்த கூட்டணியும் பெருமளவு ஆசனங்களைக் கைப்பற்றிவிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.??

மக்கள் யாரை தேர்ந்து எடுத்தாலும் எனக்கு சம்மதம் - ஆனால் சர்வாதிகாரர்களையும் கொலைஞர்களையும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை நிறையவே உண்டு. ??

  • கருத்துக்கள உறவுகள்

இங்க சில பேருக்கு டக்கிளஸ் தேவானந்தா.. லெனினின் தம்பி.. சித்தார்த்தன்.. லிங்கனின் சின்னத்தம்பி..

சர்வதேச அளவில் குற்றம்சாட்டப்பட்ட கொலைஞர்களும்.. தம் தம் ஒட்டுக்குழுக்கள்.. தொடங்கிய காலத்தில் இருந்து.. அதுக்கு தாமே தலைவரும்.. செயலாளர் நாயகமாவும் இருக்கும்.. இவங்கள் எல்லாம்.. மாடுகளால்.. ஆடுகளால்.. வாக்குப் போட்டு தெரிவு செய்யப்பட்டவர்களாக்கும்.

தமிழர்களில் கொஞ்சம் இருக்குது.. காக்கவன்னியன்.. எட்டப்பன் பரம்ரையில் வந்ததுகள். அதுகளும் பேசுவது என்னவோ தமிழ் தான். பிறந்தது என்னவோ.. தமிழ் தாய்க்குத் தான். 

ஒட்டுக்குழுக்கள்.. வெடி கொழுத்துவது என்ன.. வாள் தூக்குவது எல்லாம் சகஜமே. அதுகளுக்கு ஒட்டினால்.. தான்.. ஒட்டுண்ணி வாழ்கை என்றாகிப் போனதால்.. இதெல்லாம் அங்கு சகஜமே. இதுகளுக்கு ஊத்திக் கொடுக்க யுத்தம் முடிந்து 10 வருசம் ஆகியும்..அதுகளுக்கு பாதுகாப்புக் கொடுத்துக் குந்தி இருக்கும் சொறீலங்கா இராணுவமும் அதன் புலனாய்வு அடிவருடிகளும்.. சும்மாவா.. இருக்கினம். ??

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஜீவன் சிவா said:

மக்கள் யாரை தேர்ந்து எடுத்தாலும் எனக்கு சம்மதம் - ஆனால் சர்வாதிகாரர்களையும் கொலைஞர்களையும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை நிறையவே உண்டு. ??

இப்ப மிஞ்சி இருக்கின்ற சர்வாதிகாரி மகிந்த, பெரும் கொலைஞன் கோத்தபாய. இவர்களை தேர்ந்தெடுக்கமாட்டார்கள் என்று எப்படி நீங்கள் நம்புகின்றீர்கள், இவ்வளவு வெடி கொளுத்திய பின்னர்??

18 minutes ago, nedukkalapoovan said:

இங்க சில பேருக்கு டக்கிளஸ் தேவானந்தா.. லெனினின் தம்பி.. சித்தார்த்தன்.. லிங்கனின் சின்னத்தம்பி..

சர்வதேச அளவில் குற்றம்சாட்டப்பட்ட கொலைஞர்களும்.. தம் தம் ஒட்டுக்குழுக்கள்.. தொடங்கிய காலத்தில் இருந்து.. அதுக்கு தாமே தலைவரும்.. செயலாளர் நாயகமாவும் இருக்கும்.. இவங்கள் எல்லாம்.. மாடுகளால்.. ஆடுகளால்.. வாக்குப் போட்டு தெரிவு செய்யப்பட்டவர்களாக்கும்.

தமிழர்களில் கொஞ்சம் இருக்குது.. காக்கவன்னியன்.. எட்டப்பன் பரம்ரையில் வந்ததுகள். அதுகளும் பேசுவது என்னவோ தமிழ் தான். பிறந்தது என்னவோ.. தமிழ் தாய்க்குத் தான். 

ஒட்டுக்குழுக்கள்.. வெடி கொழுத்துவது என்ன.. வாள் தூக்குவது எல்லாம் சகஜமே. அதுகளுக்கு ஒட்டினால்.. தான்.. ஒட்டுண்ணி வாழ்கை என்றாகிப் போனதால்.. இதெல்லாம் அங்கு சகஜமே. இதுகளுக்கு ஊத்திக் கொடுக்க யுத்தம் முடிந்து 10 வருசம் ஆகியும்..அதுகளுக்கு பாதுகாப்புக் கொடுத்துக் குந்தி இருக்கும் சொறீலங்கா இராணுவமும் அதன் புலனாய்வு அடிவருடிகளும்.. சும்மாவா.. இருக்கினம். ??

எட்டப்பன் மீது தவறு எதுவும் இல்லை, எட்டப்பன் தூய்மையான தமிழ் மன்னன், ஆனால் எட்டப்ப ஊரில் திரிந்த   தெலுங்கு கொள்ளைக்காரன் தான் வீர பாண்டிய கட்ட பொம்மன். திருடனை மன்னனாக்கியதும் மன்னனை திருடனாக்கியதும் கருணாநிதியின் கெட்டிதனம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சிவா ஒன்றை மறந்துவிட்டார்

வடமாகாண ஆளுனர் சிறிசேன குரே வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் நடந்த ஒரு கூட்டத்தில் கூறியிருந்தார் தமிழ்மக்கள் உடலில் ஓடுவது இப்போது சிங்கள இராணுவத்தின் இரத்தம் என அவர் என்ன அர்த்தத்தில் கூறினாரோ தெரியாது உங்களது கருத்தைப்பார்த்தால் உண்மை புரிகிறது

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Dash said:

எட்டப்பன் மீது தவறு எதுவும் இல்லை, எட்டப்பன் தூய்மையான தமிழ் மன்னன், ஆனால் எட்டப்ப ஊரில் திரிந்த   தெலுங்கு கொள்ளைக்காரன் தான் வீர பாண்டிய கட்ட பொம்மன். திருடனை மன்னனாக்கியதும் மன்னனை திருடனாக்கியதும் கருணாநிதியின் கெட்டிதனம்.

ஆளாளுக்கு ஆதாரம் இல்லாமல்.. இப்படி எழுதுவது இப்ப பசனாகி விட்டது. கருணாநிதி ஒரு நரி தான். அதற்காக.. அவர் வரலாறுகளை எல்லாம் மாற்றி எழுதிவிடக் கூடிய வலிமையானவராக இருக்கவில்லை.

தமிழர்களை குடியில் வீழ்த்தி அவர் வாழ்ந்திருக்கலாம்.. ஆனால்.. தமிழர் வரலாற்றை மாற்றுவதில் அவர் வெற்றி பெறவில்லை.. என்பதால்.. தான்.. நாம் தமிழர் இன்று தேசியமாய் தமிழகத்தில் உயர்ந்து நிற்கிறது.

காலம்.. வரலாற்றை மீளாய்வு செய்து.. ஒழுங்கு படுத்தும். தமிழன் அதனை தனக்காய் செய்வான்.

நாம்.. எம் பண்டாரவன்னியனை.. காக்கவன்னியர்களிடம் இருந்தும்... அரபுக் குடிகளிடம் இருந்தும்.. விஜனின் வாரிசுகளிடம் இருந்தும்.. காப்போம். அதுபோதும். ?

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? தமிழர்களைப் பொறுதவரையில் எல்லாம் ஒன்றுதான். இருந்தும் சில விபீடனர்களை தமிழர்கள் அறிந்துகொள்ள முடிந்துள்ளது.?

1 hour ago, கிருபன் said:

இப்ப மிஞ்சி இருக்கின்ற சர்வாதிகாரி மகிந்த, பெரும் கொலைஞன் கோத்தபாய. இவர்களை தேர்ந்தெடுக்கமாட்டார்கள் என்று எப்படி நீங்கள் நம்புகின்றீர்கள், இவ்வளவு வெடி கொளுத்திய பின்னர்??

நான் குறிப்பிட்டது தமிழின  சர்வாதிகாரர்களையும் கொலைஞர்களையும் மட்டுமே.

யாழில் வெடி கொளுத்தி கொண்டாடியவர்கள் அநேகமாக சர்வாதிகாரர்களாய்த்தான் இருக்க வேண்டும் - அவர்கள்தானே மகிந்த ஆதரவில் திளைத்தவர்கள்.

  • தொடங்கியவர்

தமிழினப் படுகொலைகளை செய்த, தமிழின இனவழிப்பை மேற்கொண்டுவரும், தமிழ் மண்ணில் சமூக விரோத செயற்பாடுகளை கட்டவிழ்த்துவிடும் சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நக்கி பிழைப்பு நடத்தும் கைக்கூலிகள் கருத்துக்களைப் பரப்புவது ஒன்றும் புதிதல்ல.

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்

அடி படாதீங்கப்பா  இந்தாங்கோ 

58 minutes ago, போல் said:

தமிழினப் படுகொலைகளை செய்த, தமிழின இனவழிப்பை மேற்கொண்டுவரும், தமிழ் மண்ணில் சமூக விரோத செயற்பாடுகளை கட்டவிழ்த்துவிடும் சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நக்கி பிழைப்பு நடத்தும் கைக்கூலிகள் கருத்துக்களைப் பரப்புவது ஒன்றும் புதிதல்ல.

மண்டைய மறைச்ச நம்ம கொண்டய மறந்துட்டம் ஈழம் என்றால் யாழ்ப்பாணம் என்று  நினைத்துக்கொண்டிருக்கும் வரைக்கும் யாழ் மக்களும் சரி வடகிழக்கில் உள்ள அனைத்து மக்களும் நீங்கள் நினைக்கிறமாதிரித்தான் இருப்பார்களென்றால் அதுதான் முட்டாள் தனம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கும் எல்லோருக்கும் விசுவாசிகள் இருக்கத்தான் செய்வார்கள்..:grin:

23 hours ago, கிருபன் said:

இப்ப மிஞ்சி இருக்கின்ற சர்வாதிகாரி மகிந்த, பெரும் கொலைஞன் கோத்தபாய. இவர்களை தேர்ந்தெடுக்கமாட்டார்கள் என்று எப்படி நீங்கள் நம்புகின்றீர்கள், இவ்வளவு வெடி கொளுத்திய பின்னர்??

அது எப்படி முடியும். அவர்கள் எஜமானரகளாச்சே. எம்மை கொலை செய்யும் உரிமை அவர்களுக்கு உண்டு அல்லவா! எஜமானரகள்தாழ்பணிந்து அடிமைகளாய் வாழ்வதே தமிழர் மரபு. 

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து பொதுஜன பெரமுன பொங்கல்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_1542.jpg?resize=800%2C533

கிளிநொச்சியில் ஜனாதிபதியினால் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து பொதுஜன பெரமுன கட்சியினர் பொங்கல் பரிமாறியதோடு பட்டாசுக் கொளுத்தியும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரண்டாவது பிரதமராக மகிந்த ராஜபக்ஸ பதவி பிரமாணம் செய்தது முதல் பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்தவர்கள் மாவட்டத்தின் பல இடங்களிலும் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகின்றனர்

அந்தவகையில் இன்று 28-10-2018 பிற்பகல் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்திற்கு முன்பாக குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் க.ஜெயகுமாரன் அவர்களின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பொங்கல் பரிமாற்றப்பட்டதோடு, பட்டாசுகள் கொளுத்தியும் மகிழ்ச்சியையும் வெளிப்படு்தியுள்ளனர்.

 IMG_1557.jpg?resize=800%2C533IMG_1566.jpg?resize=800%2C533IMG_1569.jpg?resize=800%2C533IMG_1571.jpg?resize=800%2C533IMG_1582.jpg?resize=800%2C533IMG_1589.jpg?resize=800%2C533

https://globaltamilnews.net/2018/101054/

  • தொடங்கியவர்

மிக அண்மையில் வன்னி பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட சட்டவிரோதமாக மரம் வெட்டும், மணல் கடத்தும் குழுவினர் குழுக்களாக அழைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, மகிந்தவின் ஆதரவாளர்களாக கட்சியில் இணைக்கப்பட்டனர்.

இவர்களை அடையாளம் காண உதவியவர்கள் அரச பயங்கரவாதிகளின் பாதுகாப்பு தரப்பினர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.