Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியலில் பாரிய மாற்றம் நான் சொன்னதே நடந்தது – இனி முஸ்லீம் ஏகாதிபத்தியம் கிழக்கில் இல்லை - கருணா அம்மான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட,கிழக்கு முழுவதும் மகிந்தாவின் ஆட்சி வரணும் என்று நினைக்கிறீங்களா ஜீவன் சிவா? 

  • Replies 55
  • Views 5k
  • Created
  • Last Reply
4 minutes ago, ரதி said:

வட,கிழக்கு முழுவதும் மகிந்தாவின் ஆட்சி வரணும் என்று நினைக்கிறீங்களா ஜீவன் சிவா? 

அது மக்களின் விருப்பமாயின் முழுமனதுடன் ஏற்றுக்கொள்வேன்.

பி.கு - எனக்கு இங்கு வாக்களிக்கும் உரிமை இல்லை 

ஆனால் வாக்குகளின் வலிமை துவக்கைவிட அதிகமானது - இது எனது அனுபவத்தில் அடைந்த நம்பிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஜீவன் சிவா said:

அது மக்களின் விருப்பமாயின் முழுமனதுடன் ஏற்றுக்கொள்வேன்.

பி.கு - எனக்கு இங்கு வாக்களிக்கும் உரிமை இல்லை 

ஆனால் வாக்குகளின் வலிமை துவக்கைவிட அதிகமானது - இது எனது அனுபவத்தில் அடைந்த நம்பிக்கை.

உங்களது கருத்தைப் பார்த்தால் முழு நாட்டையும்  சிங்களவனிடம் கொடுத்து விட்டு தமிழன் அவன் கீழ் அடிமையாய் இருக்க வேண்டும் என்பது போல் உள்ளது 

1 minute ago, ரதி said:

உங்களது கருத்தைப் பார்த்தால் முழு நாட்டையும்  சிங்களவனிடம் கொடுத்து விட்டு தமிழன் அவன் கீழ் அடிமையாய் இருக்க வேண்டும் என்பது போல் உள்ளது 

அப்படியென்றால், அதாவது மக்கள் மகிந்தவை விரும்பி தேர்வு செய்தால் என்ன செய்யலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஜீவன் சிவா said:

அப்படியென்றால், அதாவது மக்கள் மகிந்தவை விரும்பி தேர்வு செய்தால் என்ன செய்யலாம் 

மக்கள் மகிந்தவை தெரிவு செய்தால் அதற்கு நான் ஒன்றும் செய்ய இயலாது இங்கிருந்து கொண்டு...அவர்கள் விருப்படி அனுபவிக்கட்டும் என்று வேடிக்கை பார்க்க மட்டுமே என்னால் முடியும்....ஆனால்,அங்குள்ள மக்கள் இப்படி முட்டாள் தனமான முடிவு எடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kadancha said:

முன்பு நடந்தவைகளை வைத்து, எதிர்வு கூறமுடியாது தான்.

கருணாவின் அசைக்க கூடிய அல்லது அசைக்க முடியாது என்ற தன்மை, சிங்களம் கிழித்த கூட்டுக்குள் தான் என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல.

அடிப்படையாக, கருணாவிடம் தான் நினைக்கும் அரசியல் கருத்துக்களை  சொல்வதற்கு, சொறி சிங்கள யாப்பிற்கு உட்பட்டுக்  கூட,   இறைமை இல்லை.

இப்பொது கூட, கருணா  கூறுபவை ராஜபக்சேயால் தீர்மானிக்கப்படுகிறது.

இந்த நிலைமையில், கருணா சிங்களத்தோடு கிழக்கு தமிழ் நலன் சார் நிலைப்பாட்டில் நிற்கமுடியாது.

இவை, அரசியலில் மட்டுமல்ல, கருணை சொல்லும் அபிவிருத்தியிழும், கருணா இதனை நிதர்சனமாக காண்பார்.

இலங்கைத் தீவில் இருக்கும் பிரச்சனையனையின்  ஓர் பரிமாணம், ஓர் இனம் தானே முழு தேசிய செல்வங்களை உரித்ததாக்க  கொண்டு அனுபவிக்க வேண்டும் என்பது.

இந்த பிரச்னைனையின் முரண்பாடு, இனத்துவேச அரசால், அரசியல் யாப்பால்  இன்னும் கூர்மையாக்கப்பட்டுள்ளது.  

முன் பதிவுகளில் கூறியது போல, கருணா இதனை தனிப்பட்ட உறவின் (ராஜ்பகேசே அரசாங்கம்) மூலம் கையாளலாம் என்று நினைத்தால், அதுவே கருணாவின் புதைகுழியாக மாறினாலும் ஒன்றும் புதினமில்லை.

கருணா, சிலவேளைகளில், தனிப்பட்ட முறையில் அசைக்க முடியாதவர் ஆகலாம், ஆனாலும் அது கிழக்கை சிங்களத்துக்கு விலை கொடுத்தே முடியும். அது, குருநாவீட்ற்கும் கிழக்கு மக்களுக்கும் பாரிய முரண்பாடாக மாறும்.   

கருணா ஒரு சாணக்கியன்(நீங்கள் விரும்பினாலும் ,விரும்பா விட்டிடாலும்)...தலைவரை மாதிரி அடியடா,புடியடா,எடுத்தேன் ,கவிழ்த்தேன் என்று ஒரு விஷயத்தை அவர் கையாள்வதில்லை....அவர் தற்போது மகிந்தவுடன் நின்றாலும் அவரால் மட்டுமே கொஞ்சம்,கொஞ்சசமாய் உரிமைகளை பெற்றுத்  தர முடியும் என்று நான் நினைக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

கருணா "சாணக்கியனோ" எண்டு தெரியாது ஆனால் "நக்கியவன்" எண்டு தெரியும். ? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அவர் தற்போது மகிந்தவுடன் நின்றாலும் அவரால் மட்டுமே கொஞ்சம்,கொஞ்சசமாய் உரிமைகளை பெற்றுத்  தர முடியும் என்று நான் நினைக்கிறேன் 

நம்பிட்டம் வடகிழக்கை இணைத்து வைக்க சொல்லுங்க பார்ப்போம் மீண்டும் அண்ணைய  ஏற்றுக்கொள்ளலாம் ( உரிமையை பிறகு பார்ப்போம்)

3 hours ago, ரதி said:

கருணா ஒரு சாணக்கியன்(நீங்கள் விரும்பினாலும் ,விரும்பா விட்டிடாலும்)...தலைவரை மாதிரி அடியடா,புடியடா,எடுத்தேன் ,கவிழ்த்தேன் என்று ஒரு விஷயத்தை அவர் கையாள்வதில்லை....அவர் தற்போது மகிந்தவுடன் நின்றாலும் அவரால் மட்டுமே கொஞ்சம்,கொஞ்சசமாய் உரிமைகளை பெற்றுத்  தர முடியும் என்று நான் நினைக்கிறேன் 

இன்னுமா இந்த உலகம் நம்பிக்கிட்டிருக்கு

இவன் எல்லாம் ஒரு ஆள் என்று , எங்களின் எதிர்காலத்தை அடியோடு அழித்தவன் . 

4 hours ago, ஜீவன் சிவா said:

ஆனால் வாக்குகளின் வலிமை துவக்கைவிட அதிகமானது - இது எனது அனுபவத்தில் அடைந்த நம்பிக்கை.

உங்களது இந்த கருத்த்தானது  மேடைகளில் அலங்காரமாய் பேசுவதற்கும் தன்னை சிறந்த ஜனநாயகவாதியாக,  அகிம்சைவாதியாக பாசாங்கு செய்வதற்கும் வேண்டுமானால் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஜதார்ததம் அதுவல்ல என்பது உலக வரலாற்றை படித்தால் தெரியும். 

உலகின பெரும்பாலான நாடுகளின் சுதந்திரம் அவர்களின்  இருப்பு  சுதந்திர வாழ்வு  உறுதி செய்யப்பட்டது  அவர்களின் ஆயுத பலத்தினாலேயே சாத்தியமாயிற்று. இன்றைய மேற்கு நாடுகளின் இருப்பு உறுதி செய்யப்பட்டது அவர்களின் போர்பலத்தினால்தான். சில எல்லை நிர்ணயங்களை வேண்டுமானால்  சில விட்டுக்கொடுப்புகள் ,அரசியல் பலம் ஆகியவற்றால் தீர்மானிக்கப்பட்டிருக்கலாம். அதற்கும் பின் பலமாக அவர்களின் போர்வலிமை தான் இருந்தது என்பது 15 - 19 நூற்றாண்டுகளின் ஐரோப்பிய வரலாற்றை வாசித்துப் பாருங்கள் புரியும். இன்று ஐரோப்பாவில் உள்ள நாடுகள் அவர்கள் பேசும் மொழிவாரியாக அமைந்தது தற்செயலாக நடந்தது அல்ல. அவர்களின் அரசியல் வாக்குபலத்தால் அமைந்ததும் அல்ல. மாறாக அந்நிய ஆக்கிரமிப்புக்களை மூர்க்கமாக எதிர்தது நின்ற அந்நாடுகளின் வாழ்ந்த முன்னோர்களின் போர் வலிமையாலேயே அது சாத்தியமாயிற்று. அந்த வலிமையின் தியாகத்தின் பலன்களையே இன்றைய தலைமுறை ஐரோப்பியர்கள் அனுபவிக்கிறார்கள். 

துரதிஷ்ரவசமாக  எமது முன்னோர்கள் சோம்பேறிகளாகவும் போர்வலிமை அற்ற பலவீனமானவர்களாகவும் இருந்து அந்திய ஆக்கிரமிப்புக்களை முறியடிக்க முடியாமல் தோற்றுப் போனார்கள் அல்லது அடிபணிந்தார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். தமிழர்களின்  துரதிஷரம் அண்மைய ஆயுத போராட்டத்திலும் அவர்கள் தோற்றுப் போனாரகள். இனிமேல்ஏதாவது ஒரு பேரதிசயம் நடந்தால் அன்றி வாக்குப்பலத்தினாலோ அரசியல்ப்பலத்தினாலோ உலகத்தில் வாழும்  சுதந்திர மனிதரகளை போன்ற சுதந்திர வாழ்வு கிடைக்கப்போவதில்லை. சில தற்காலிக சலுகைகள் சில அனுசரிப்புக்களின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்  இதுதான் இன்றைய Reality. 

ஜீவன் இவ்வாறான விடயங்களை கூறும் போது ஒரு தனி மனிதனின் குறுகிய வாழ்வு அனுபவத்தின் அடிப்படையில் கூறாமல் அறிவு பூர்வமாக உலக வரலாற்று அனுபவங்களின. அடிப்படையில் கூறுங்கள் 

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாக்குப் பலத்தினால் மக்கள் சிறந்த முடிவை எடுப்பதில்லை. 

அரசியல் அதிகாரவர்க்கத்தால் தனிப்பட்ட வாழ்வில் எதுவித முன்னேற்றங்களோ மாற்றங்களோ காணமுடியாதவிடத்து, தம்மிடம் உள்ள வாக்குப்பலத்தை வைத்து தனிப்பட்ட எதிர்ப்பைக் காட்டுவார்கள். இந்த எதிர்ப்பானது பெரும்பாலும் எதுவித தூரநோக்கோ, அரசியல் நோக்கங்களோ கொண்டதல்ல. தமக்கும் வலிமை உள்ளது என்ற உணர்வைக் காட்டவே. இதனால்தான் அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாக வரமுடிந்தது. அண்மையில் பிரேசிலில் தீவிர வலதுசாரியான ஜெய்ர் பொல்சொனாரோ ஜனாதிபதியாக வரமுடிந்தது.

இலங்கையில் ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகாரிகளைத்தான் தெரிவு செய்கின்றார்கள்!

சிலவேளை தமிழ் மக்களும் ஒரு சமூகமாக கூட்டுத் தற்கொலையை விரும்பித் தெரிவு செய்யக்கூடும். ☹️

2 hours ago, கிருபன் said:

சரியான கருத்து கிருபன். மூன்று போர்களின் மூலமாக தான் ஜேர்மனிய சாம்ராஜயத்தின் எழுச்சி சாத்தியமானது. 1864 ல் நடைபெற்ற டென்மார்க- பெருசிய யுத்தம், 1866 ல் நடைபெற்ற அவுஸ்ரய - பெருசிய புத்தம், 1870/71 களில் நடைபெற்ற பிரான்ஸ் உடனான யுத்தம் . பிரான்ஸ் முறியடிக்கப்பட அதுவரை பெரஷ்யா உட்பட பல்வேறு சிற்றசுகளாக இருந்த ஜேர்மன் மொழி பேசும் பிரதேசங்கள்  இணைந்து ஐரொப்பாவின் மிகப்பெரும் இராணுவ,  பொருளாதார சக்தி கொண்ட நாடாக ஜேர்மனி உருவாக காரணமாயிற்று.

ஆனால் அதே ஜேர்மனி ஆக்கிரமிப்பு சக்தியாக முதலாம் இரண்டாம் உலக யுத்தத்தில் மாறிய போது ஐரோப்பிய நாடுகள் மூரக்கமாக எதிர்தது தமது போர்வலிமை மூலம் தத்தமது மக்களின்  இறைமையை காப்பாற்றிக் கொண்டன. அதறகாக பாரிய உயிர் பொருள் இழப்புக்களை அந்நாடுகள் சந்தித்தன. இருப்பினும் அவர்கள் காப்பாறிய மக்களின் இறைமை பெறுமதி மிக்கது.  ஐரோப்பிய வரைபடத்தை மாற்றிய பல தன்னாட்சி கொண்ட  சுதந்திர நாடுகள் உருவாக இவ்விரண்டு போர்களும் காரணமாகின. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Sasi_varnam said:

கருணா "சாணக்கியனோ" எண்டு தெரியாது ஆனால் "நக்கியவன்" எண்டு தெரியும். ? 

புலம் பெயர் புலி ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு இருந்த இடத்தில் இருந்து கொண்டு புலம்பத் தான் தெரியும் ...பாவம் அவர்களுக்கு யதார்த்தம் தெரியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா எல்லாரும் அமைச்சர்.. இராஜாங்க அமைச்சர்.. பிரதியமைச்சர் ஆகிறாங்கள்.. மகிந்த மீண்டு வந்ததும்... வலிந்து ஓடி வாழ்த்திய கும்மானுக்கு ஒன்னுமே இன்னும் கிடைக்கல்லையே..??!

பேசாமல்.. இந்தப் புதிய கட்சியையும் கலைச்சிட்டு... கும்மான் மீண்டும்.. மகிந்தவோடு சங்கமம் ஆகினால்.. ஏதும் எலும்புத் துண்டுகள் தேறலாம். ?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

என்னப்பா எல்லாரும் அமைச்சர்.. இராஜாங்க அமைச்சர்.. பிரதியமைச்சர் ஆகிறாங்கள்.. மகிந்த மீண்டு வந்ததும்... வலிந்து ஓடி வாழ்த்திய கும்மானுக்கு ஒன்னுமே இன்னும் கிடைக்கல்லையே..??!

பேசாமல்.. இந்தப் புதிய கட்சியையும் கலைச்சிட்டு... கும்மான் மீண்டும்.. மகிந்தவோடு சங்கமம் ஆகினால்.. ஏதும் எலும்புத் துண்டுகள் தேறலாம். ?

பொறுங்கப்பா சனாதிபதி பதவியை அவருக்கு தான் கொடுக்க போறார். 

முன்னர் பிரதி அமைச்சராக இருந்து செஞ்சவர் தானே!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

என்னப்பா எல்லாரும் அமைச்சர்.. இராஜாங்க அமைச்சர்.. பிரதியமைச்சர் ஆகிறாங்கள்.. மகிந்த மீண்டு வந்ததும்... வலிந்து ஓடி வாழ்த்திய கும்மானுக்கு ஒன்னுமே இன்னும் கிடைக்கல்லையே..??!

பேசாமல்.. இந்தப் புதிய கட்சியையும் கலைச்சிட்டு... கும்மான் மீண்டும்.. மகிந்தவோடு சங்கமம் ஆகினால்.. ஏதும் எலும்புத் துண்டுகள் தேறலாம். ?

பொறுங்கப்பா கும்மான் என்ன தேர்தலில் நின்றவரா? எப்போதும் பின்கதவு தானே. மலம் எப்படி வெளியேறுகிறதோ அவ்வாறே ஆற அமர தான் நடக்கும்.

தேசிய பட்டியல் மூலம் எம்பி ஒருவர் ராஜினாமா செய்து தானே கும்மான் வரலாம்.

18 hours ago, tulpen said:

ஜீவன் இவ்வாறான விடயங்களை கூறும் போது ஒரு தனி மனிதனின் குறுகிய வாழ்வு அனுபவத்தின் அடிப்படையில் கூறாமல் அறிவு பூர்வமாக உலக வரலாற்று அனுபவங்களின. அடிப்படையில் கூறுங்கள் 

19 hours ago, tulpen said:

துரதிஷ்ரவசமாக  எமது முன்னோர்கள் சோம்பேறிகளாகவும் போர்வலிமை அற்ற பலவீனமானவர்களாகவும் இருந்து அந்திய ஆக்கிரமிப்புக்களை முறியடிக்க முடியாமல் தோற்றுப் போனார்கள் அல்லது அடிபணிந்தார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். தமிழர்களின்  துரதிஷரம் அண்மைய ஆயுத போராட்டத்திலும் அவர்கள் தோற்றுப் போனாரகள்.

19 hours ago, tulpen said:

ஜீவன் இவ்வாறான விடயங்களை கூறும் போது ஒரு தனி மனிதனின் குறுகிய வாழ்வு அனுபவத்தின் அடிப்படையில் கூறாமல் அறிவு பூர்வமாக உலக வரலாற்று அனுபவங்களின. அடிப்படையில் கூறுங்கள் 

வரலாற்று அனுபவங்கள்தான் எங்கள் மக்களை எந்த கேள்வியுமின்றி // கிட்ட வரட்டும் திட்டம் இருக்கு // என்று சொல்லி முள்ளிவாக்காலில் குழிதோண்டிப் புதைத்தது. அப்ப இந்த வரலாற்று அனுபவங்கள் கை கொடுக்கவில்லையே. உலகநாடுகள் எதிர்த்து நின்ற போதும் மக்கள்தான் பாதுகாப்பு என்று சொல்லி மக்களையே அழித்த கதையை மறுபடியும் கேட்டகத்தயாரில்லை. யதார்த்தத்தை உணருங்கள். ஆரம்பத்தில் எமது போராட்டத்தின் நியாயத்திற்காக உதவிக்கரம் நீட்டிய நாடுகளே வாய் பொத்தி, புலிகளை அழிக்க உதவியபோது கண்ணீர் விட்டவனில் நானும் ஒருவன். 

யதார்த்தம் என்பது வேறு வரலாறு என்பது வேறு.

வரலாறை பின்பற்றாமல் எவன் யதார்த்தத்தை உணர்ந்தானோ அவன் தலைவன் ஆனான், மிகுதி சேற்றுக்குள் 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nedukkalapoovan said:

என்னப்பா எல்லாரும் அமைச்சர்.. இராஜாங்க அமைச்சர்.. பிரதியமைச்சர் ஆகிறாங்கள்.. மகிந்த மீண்டு வந்ததும்... வலிந்து ஓடி வாழ்த்திய கும்மானுக்கு ஒன்னுமே இன்னும் கிடைக்கல்லையே..??!

பேசாமல்.. இந்தப் புதிய கட்சியையும் கலைச்சிட்டு... கும்மான் மீண்டும்.. மகிந்தவோடு சங்கமம் ஆகினால்.. ஏதும் எலும்புத் துண்டுகள் தேறலாம். ?

என்ட அண்ணரின் அரசியலை புரிந்து கொள்ளும் அளவிற்கு உங்களுக்கு அனுபவமும், பக்குவமும் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

என்ட அண்ணரின் அரசியலை புரிந்து கொள்ளும் அளவிற்கு உங்களுக்கு அனுபவமும், பக்குவமும் இல்லை 

இதுவரை கும்மான் செய்த அரசியல் என்ன? ( மக்களுக்கு)

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரதி said:

என்ட அண்ணரின் அரசியலை புரிந்து கொள்ளும் அளவிற்கு உங்களுக்கு அனுபவமும், பக்குவமும் இல்லை 

ஆமாம்.. முதல் எப்பிசாட்டில்.. வந்து கிழக்கிலை தமிழ் மக்களுக்கு.. விடியலை உருவாக்கிட்டார். எனி இரண்டாம் எப்பிசாட்டில்.. வந்து கிழக்கை வங்காள விரிவுடாக் காணும் பரப்பி விடுவார்.. அடுத்த சிங்கப்பூர்.. கிழக்குத் தான். இப்படியே வாய் பார்த்துக்கிட்டு இருங்க..

அங்கால ஒருத்தர்.. வடக்கின் வசந்தம் என்று வந்து நெடுந்தீவைச் சிங்கப்பூர் ஆக்கிட்டார்.. மாநிலத்தில் சுயாட்சி.. மத்தியில் கூட்டாச்சி அமைச்சிட்டார்.. இப்ப மீண்டும் வந்திருக்கார்...  இதுகளை எல்லாம்... உங்களை போல சிலர் இப்படி...!

உங்க கொண்ணர்.. 5ம் இட சொறிலங்கா பணக்காரன் நிலையில் இருந்து உலகப் பணக்காரன் ஆகிடுவார். நீங்களும்.. அவரை நம்பி பின்னால் அலையும் சில பேரும்.. அப்படியே தான் இருப்பீங்க. ?

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

இதுவரை கும்மான் செய்த அரசியல் என்ன? ( மக்களுக்கு)

பொறுத்திருந்து பாருங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

பொறுத்திருந்து பாருங்கள் 

  •  இன்னுமா..உங்க கொண்ணர்.. 2004 இல வெளில போனவர்.. 14 வருசமாச்சு.. இன்னுமா..??! ? ?

Edited by nedukkalapoovan

2 hours ago, ஜீவன் சிவா said:

வரலாற்று அனுபவங்கள்தான் எங்கள் மக்களை எந்த கேள்வியுமின்றி // கிட்ட வரட்டும் திட்டம் இருக்கு // என்று சொல்லி முள்ளிவாக்காலில் குழிதோண்டிப் புதைத்தது. அப்ப இந்த வரலாற்று அனுபவங்கள் கை கொடுக்கவில்லையே. உலகநாடுகள் எதிர்த்து நின்ற போதும் மக்கள்தான் பாதுகாப்பு என்று சொல்லி மக்களையே அழித்த கதையை மறுபடியும் கேட்டகத்தயாரில்லை. யதார்த்தத்தை உணருங்கள். ஆரம்பத்தில் எமது போராட்டத்தின் நியாயத்திற்காக உதவிக்கரம் நீட்டிய நாடுகளே வாய் பொத்தி, புலிகளை அழிக்க உதவியபோது கண்ணீர் விட்டவனில் நானும் ஒருவன். 

யதார்த்தம் என்பது வேறு வரலாறு என்பது வேறு.

வரலாறை பின்பற்றாமல் எவன் யதார்த்தத்தை உணர்ந்தானோ அவன் தலைவன் ஆனான், மிகுதி சேற்றுக்குள் 

நான் குறிப்பிட்டது  துவக்கைவிட வாக்கு சீட்டு பலமானது என்ற பாசாங்குதனமான ஒற்றை வரி சம்பந்தமானது மட்டுமே அதற்காகவே வரலாற்றில் ஆயுத வலிமையே நாடுகளின. இறைமையை சுதந திரதமை நிர்ணயம் செய்துள்ளது என்ற வரலாறு ஆதாரங்களுடன் தெரிவித்திருந்தேன். நீங்கள் அதற்கு பதிலளிப்பதை தவிர்பதற்காக  விவாதத்திற்கு எந்த சம்பந்தமும்  இல்லமல் முள்ளிவாய்க்கால், கண்ணீர் என்று உளறிக்கொட்டியுள்ளீர்கள். அப்படிப்பார்தாலும் எமது போர் ஆயுத வலிமையை விட  எதிரியின் ஆயுத வலிமை  மேலோங்கியதால் தோல்வியுற்றார்கள் தமிழர்கள். இது வெளிப்படையான உண்மை.  இங்கும் நீங்கள் சொன்ன வாக்கு வலிமையை விட  துவக்கு வலிமை தான் வெற்றியடைந்தது.

வாக்குசீட்டு வலிமை மிகுந்தது என்றால் உலக நாடுகள் இராணுவத்தை இப்போதும் பெருக்க வேண்டிய அவசியமோ ஆயுதங்களை குவிக்க வேண்டிய தேவையோ இருக்காது. யதார்ததத்தில் கூட  நாடுகளின் ஆயுத  வலிமையே அந்த தேசிய இன மக்களின் இறைமையை சுதந்திர வாழ்வை உறுதி செய்கிறது. 

வாக்குசீட்டு வலிமையானது என்ற கூற்று பாசாங்குத்தனமான பசப்பு வார்ததை. நீங்கள் கூறியது உண்மை என்றால் யுத்தம் முடிந்தவுடன் ஒரு சரவஜன வாக்கெடுப்பு மூலம் தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கும். இது தான் யதார்த்தம்  .நீங்கள் கூறியது அல்ல. ஆயுத வலிமை மூலம் தமிழரை தோறகடித்த சிங்கள நாடு தமிழரின் உரிமைகளை வாக்கு சீட்டு மூலம் கொடுக்கப் போவதில்லை. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

என்ட அண்ணரின் அரசியலை புரிந்து கொள்ளும் அளவிற்கு உங்களுக்கு அனுபவமும், பக்குவமும் இல்லை 

அரசியல், விடுதலை போராட்டம், போர், வணிகம், வாழ்க்கை என்று எந்த விடயத்திலும் வெற்றி பெற முதலில் அந்த முயற்சிகளில் வரும் ஆபத்திகளில் இருந்து தப்பி பிழைக்க தெரிந்து இருக்க வேண்டும். கருணாவுக்கும், டக்ளசுக்கும் சம்பந்தனுக்கும் இந்த அடிப்படை அறிவு இருக்கிறது. இல்லாதவர்கள் ஜீவன் சிவா சொன்னது போல நந்திக்கடல் சேற்றுக்குள்:

3 hours ago, ஜீவன் சிவா said:

வரலாறை பின்பற்றாமல் எவன் யதார்த்தத்தை உணர்ந்தானோ அவன் தலைவன் ஆனான், மிகுதி சேற்றுக்குள் 

சேற்றுக்குள் போனவர்களால் இனி வெற்றி பெற முடியாது.

1 hour ago, nedukkalapoovan said:

ஆமாம்.. முதல் எப்பிசாட்டில்.. வந்து கிழக்கிலை தமிழ் மக்களுக்கு.. விடியலை உருவாக்கிட்டார். எனி இரண்டாம் எப்பிசாட்டில்.. வந்து கிழக்கை வங்காள விரிவுடாக் காணும் பரப்பி விடுவார்.. அடுத்த சிங்கப்பூர்.. கிழக்குத் தான். இப்படியே வாய் பார்த்துக்கிட்டு இருங்க..

அங்கால ஒருத்தர்.. வடக்கின் வசந்தம் என்று வந்து நெடுந்தீவைச் சிங்கப்பூர் ஆக்கிட்டார்.. மாநிலத்தில் சுயாட்சி.. மத்தியில் கூட்டாச்சி அமைச்சிட்டார்.. இப்ப மீண்டும் வந்திருக்கார்...  இதுகளை எல்லாம்... உங்களை போல சிலர் இப்படி...!

நீங்கள் இது போல விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டம் பற்றி என்றுமே எழுதியதில்லையே? எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்திகளை செய்த துரையப்பாவை கொன்றதோடு ஆரம்பித்த விடுதலை புலிகள் எத்தனை "எப்பிசாட்" கண்டு இறுதியில் முள்ளிவாய்க்காலில் எல்லாவற்றையும் நந்திக் கடலில் புதைத்தார்கள்?

எங்கே தமிழ் ஈழம்? அது சிங்கபூராகும், இசுரெலாகும் என்றார்களே?

1 hour ago, nedukkalapoovan said:
  •  இன்னுமா..உங்க கொண்ணர்.. 2004 இல வெளில போனவர்.. 14 வருசமாச்சு.. இன்னுமா..??! ? ?

எங்கே தமிழ் ஈழம்? எழுபத்தி எழில் இருந்து இன்றுவரை எத்தனை வருஷம்? 44  வருஷமாச்சு.. இன்னுமா ...?? 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2018 at 3:33 PM, tulpen said:

நான் குறிப்பிட்டது  துவக்கைவிட வாக்கு சீட்டு பலமானது என்ற பாசாங்குதனமான ஒற்றை வரி சம்பந்தமானது மட்டுமே அதற்காகவே வரலாற்றில் ஆயுத வலிமையே நாடுகளின. இறைமையை சுதந திரதமை நிர்ணயம் செய்துள்ளது என்ற வரலாறு ஆதாரங்களுடன் தெரிவித்திருந்தேன். நீங்கள் அதற்கு பதிலளிப்பதை தவிர்பதற்காக  விவாதத்திற்கு எந்த சம்பந்தமும்  இல்லமல் முள்ளிவாய்க்கால், கண்ணீர் என்று உளறிக்கொட்டியுள்ளீர்கள். அப்படிப்பார்தாலும் எமது போர் ஆயுத வலிமையை விட  எதிரியின் ஆயுத வலிமை  மேலோங்கியதால் தோல்வியுற்றார்கள் தமிழர்கள். இது வெளிப்படையான உண்மை.  இங்கும் நீங்கள் சொன்ன வாக்கு வலிமையை விட  துவக்கு வலிமை தான் வெற்றியடைந்தது.

வாக்குசீட்டு வலிமை மிகுந்தது என்றால் உலக நாடுகள் இராணுவத்தை இப்போதும் பெருக்க வேண்டிய அவசியமோ ஆயுதங்களை குவிக்க வேண்டிய தேவையோ இருக்காது. யதார்ததத்தில் கூட  நாடுகளின் ஆயுத  வலிமையே அந்த தேசிய இன மக்களின் இறைமையை சுதந்திர வாழ்வை உறுதி செய்கிறது. 

வாக்குசீட்டு வலிமையானது என்ற கூற்று பாசாங்குத்தனமான பசப்பு வார்ததை. நீங்கள் கூறியது உண்மை என்றால் யுத்தம் முடிந்தவுடன் ஒரு சரவஜன வாக்கெடுப்பு மூலம் தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கும். இது தான் யதார்த்தம்  .நீங்கள் கூறியது அல்ல. ஆயுத வலிமை மூலம் தமிழரை தோறகடித்த சிங்கள நாடு தமிழரின் உரிமைகளை வாக்கு சீட்டு மூலம் கொடுக்கப் போவதில்லை. 

அது மட்டுமல்ல, அந்த வாக்குகளித்திற்கு வலிமையை கொடுப்பது ஓர் அரசிடம் இருக்கும் வன்முறையைப் பிரயோகிக்கும்  ஏகபோகம்.

அந்த  வன்முறையைப் பிரயோகிக்கும்  ஏகபோகதை சட்டவலிமை கொடுக்கும் நீதிமன்றதிற்கு கூட அத்திபாரம் கூட வன்முறையே. அது சிவில், கிரிமினல், மிலிட்டரி justice என்று பாரப்படுத்தப்பட்டுள்ளது.

உரிமைகள் ஒரு போதும் வழங்கப்பட்டதாக வரலாற்றில் உள்ளது அருமை. chezc-slovak ஓர் விதிவிலக்கு.

பிரித்தானியரிடம் இருந்து கூட, காந்தி உரிமையை பிடுங்கி தான் எடுத்தார். ஆனால், பிரித்தானியரின்  இரத்தம் ஓடவில்லை. ஏனெனில், அதற்கு முதலே பிரித்தானியா வங்குரோத்தை அடைந்து விட்டது. அது கூட ஆயுத வலிமையான ஜெர்மனி உடன் சண்டை பிடித்தே. காந்தி பிடுங்கிய உரிமை, நேருவால் ஆட்சிமாற்றமாக மாற்றப்பட்டது வேறு விடயம்.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.