Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய சிங்களவர்களை, இலங்கைக்கு கொண்டுவந்த அன்றைய முஸ்லிம்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20181116_164740.jpg

இலங்கை தேசத்தின் மதிப்பிலும், பண்பாட்டிலும் அதன் இனங்களும் ,கலாசார பாரம்பரியங்களும் செல்வாக்குச் செலுத்துகின்றன, அந்தவகையில் இலங்கையின் பெரும்பான்மை இனமாக சிங்களவர்கள் இருந்தாலும் அவர்களிடம் " குலய" என்ற சாதி முறை செல்வாக்குச் செலுத்துவதுடன் ,அதனை அவர்கள் தமது பாரம்பரிய அடையாளமாகவும் கொண்டுள்ளனர், அவ்வாறான அடையாளத்திற்கு உதவி புரிந்த முஸ்லிம் முன்னோர் பற்றிய பதிவே இதுவாகும், 
 
#அறிமுகம்,
 
பேருவளைப் பிரதேசத்தின், களு கங்கையைச் சுற்றி உள்ள "களுமோதர" பிரதேசத்தின் வளர்ச்சி, பண்பாடு, வாழ்வியல் ,பனசல, பிக்குகளின் நடைமுறை என்பதில் "சலாகம" என்ற குலத்தினரின் பங்கு மிக அதிகமாகும், இவர்கள் இன்று நாட்டின் பல பாகங்களில் பரவி வாழ்ந்தாலும்,  வரலாற்றில் இத் தேசத்திற்கான இவர்களின்  பங்கும் அதிகமாகும், 
 
#தோற்றமும் தொடர்பும் 
 
"சலாகம" ,குலத்தினர் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பிராமணர்களில் இருந்து தோற்றம் பெற்றவர்களாகும், இவர்களின் வரலாற்றுடன் ,முஸ்லிம்கள் மிகவும் நெருங்கிய தொடர்புடையவர்கள் மட்டுமல்ல இவர்கள் இலங்கைக்கு வரக் காரணமே அன்றைய முஸ்லிம்களாகும், 
 
#வரலாறு..
 
மில்லவத்தே மைத்திரி ஹிமி எழுதிய "..... களுமோதர சைதிகாசிக பசுவிம" என்ற நூலின்படி, இலங்கையின் குர்ணாகல பிரதேசத்தை "வத்ஹிமி விஜயபாஹூ, ஆட்சி புரிந்து கொண்டிருந்த போது, அவனது அரச சபை பட்டமளிப்ப விழாவிற்கு பிராமணர்களைக்கொண்டு சிறப்பிக்கத் தீர்மானித்தான்,அவ்வேளையில் நிகழ்வுக்கான பிராமணர்களை எங்கிருந்து, எவ்வாறு அழைத்து வருவது என்பதில் அரச சபையும் ,மக்ககளும் செய்வதறியாது இருந்த வேளையில் அப் பாரிய பணியை இங்கு கடல் வழி வியாபாரத்தில் ஈடுபட்ட முஸ்லிம் வர்த்தகர்கள் பொறுப்பேற்றனர், 
 
#முக்கியத்துவம்,
 
அரச விழாவுக்கான காலம் நெருங்கிய வேளையில் அதற்கான பிராமணர்களை இந்தியாவின் கேரளப் பிரதேசத்தில் இருந்து கப்பல் மூலம் முஸ்லிம்கள் அழைத்து வந்திருந்தனர்,இதனால் மகிழ்ச்சியடைந்த மன்னனும் மக்களும் ,குறித்த ஏழு பிராமணர்களையும், முஸ்லிம் வர்த்தகர்களையும், பேருவளைக் கடற்கரையில் இருந்து அரண்மணை வரை கம்பளம் விரித்து வரவேற்றதாக வாய்வழி வரலாறுகளும், நம்பிக்கைகளும் குறிப்பிடுகின்றன,  இன்னும் குறித்த அரச நிகழ்வை  #உதுமா #உடையார் #லெப்பை என்பவரின் தலைமையில் அரசன் நடாத்தியதாகவும், அதன் பின்னர் குறித்த பிராமணர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அரசன் பேருவளைப் பிரதேசத்தில் காணிகள் வழங்கியதாகவும், குறித்த பிராமணர்களில் இருந்து தோற்றம் பெற்றதே இன்றைய " சலாகம" குலத்தினராகும், அன்றைய முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து இவர்களை அழைத்து வராவிடின் இன்றைய " சலாகம குல சிங்களவர்கள் உருவாகி இருக்கமாட்டார்கள், 
 
#யாரிந்த #முஸ்லிம்கள்,??
 
குறித்த, காலப்பகுதியில் இலங்கையின் வியாபாரமும், அரசனுக்கும், மக்களுக்கும் தேவையான அத்தியவசிய மட்டுமல்ல' ஆடம்பர உதவிகளையும் உலகின் பல பிரதேசங்களில் இருந்தும் முஸ்லிம் வர்த்தகர்கள் கொண்டு வந்து உதவி புரிந்தார்கள், இந்தவகையில் விஜயபாகுவின் பட்டமளிப்புக்கான பிராமணர்களைக் கொண்டு வந்தவர்களாக,  "கப்பல் உடையார், செலஷ்டன் லெப்பே, உதுமா லெப்பே, அகமது லெப்பே, காதிருல் லெப்பே,.. போன்றோரின் பெயர்கள் இன்றும் சிங்கள வரலாற்றில் நினைவு கூரப்படுகின்றன,  இன்னும் இந்தக் கடல்வழி வியாபார ஆதாரங்களை தொல்லியல் துறையினரும் நிறுவுகின்றனர், 
 
#சலாகம, #குலத்தவர்கள் 
 
இந்தி பிராமணர்களில் இருந்து பின்னர்  சிங்கள குலமாக மாறிய இவர்கள் இலங்கை வரலாற்றில் பல சாதனைகளைப் புரிந்தவர்களையும் உள்ளடக்கி உள்ளனர், இவர்களது பெயர்களில், காலிங்க, முனி, வீரவர்த்தன, நெத்தி, அகம்பொடி, போன்ற துணைப்பெயர்களும் உள்ளடங்கி இருக்கும்,  இலங்கையின் நிதிபதிகளாக ,லலித்த ராஜபக்‌ஷ, டியுடர் ,  முதலியார் சம்சன் ராஜபக்‌ஷ, ஸ்ரீமத் சிறில் சொய்ஷா,மற்றும்  அமரபுர நிகாயாவைத்தோற்றுவித்தவரும், காலனித்துவ காலத்தில் பிரித்தானிய கிறிஸ்த்தவத்துக்கு எதிராக வாதிட்டு பிரபலமானவழுமான மிகட்டுவத்தே குணாணந்த ஹிமி, போன்றோரும்,..மட்டுமல்ல கீழே என்னோடு புகைப்படத்தில் உள்ள எனது நண்பர்  Sumedha Weerawardhana வும் இந்தக் குலத்தைச் சேர்ந்தவர்களே, இக்குலத்தினரின் இத்தேசத்திற்கான பங்களிப்பு அதிகமானதாகும், 
 
#எமதுபெருமையும் #கடமையும்
 
இலங்கை தேசத்தில் முஸ்லிம்முன்னோர் வெறுவனே வியாபாரத்திற்காக மட்டும் வரவில்லை மாறாக இந்நாட்டின், ஆட்சியில், ,பண்பாட்டில், இதன் பொதுக்கலாசாரத்தில்  மிகவும் உதவி புரிந்திருக்கின்றார்கள், அந்த வகையில் நாமும்  அவற்றைத் தொடர்வதும், இவ்வாறான வரலாற்றுத் தொடர்புகளை  எமது எதிர்காலச் சந்த்தியினருக்கு  எத்தி வைப்பதுமே எமது இன்றைய கட்டாய கடமையாகும், ". நாம் எமது வரலாற்றுப் பொக்கிசங்களை இயக்கவாத இறுமாப்பில்  நாமே அழித்து "#கலாசாரத் #தற்கொலை"( Cultural Suicide)  செய்து கொண்டிருக்கும்  வேளைகளில் சிங்கள மக்கள் தமது வரலாற்றின் ஊடாக எமது வரலாற்றையும், தொடர்புகளையும், வாய்வழிக்கதைகளாகவும், சமூக நம்பிக்கைகளாகவும்  இன்றுவரை பாதுகாத்து வருவதைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்,
 
MUFIZAL ABOOBUCKER
SENIOR LECTURER 
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA

  • கருத்துக்கள உறவுகள்

ஆ...

இத தான் சொல்லுறது.... கப்பில கெடா வெட்டிறதெண்டு....

...விட்டால், சீதைய தூக்கீட்டு வந்ததே, இராவணன் கிடையாது, மக்காவிலிருந்து, மதீனா போற வழில, டபக்கெண்டு புஸ்பக விமானத்தில கெளம்பி போய் செய்தது, நபிகள் தான் எண்டு சொல்லுவினம்.

"பொய்யில் பிறந்து பொய்யில் வளர்ந்த சமூகம்" என்னும் அடைமொழி இவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது!

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளரசு மரத்தை கக்கீம் தான் நாட்டினார் என சொன்னாலும் சொல்வார்கள்.:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nunavilan said:

வெள்ளரசு மரத்தை கக்கீம் தான் நாட்டினார் என சொன்னாலும் சொல்வார்கள்.:grin:

சிரித்து டென்சன் குறைக்கத்தானப்பு இப்படியான செய்திகளை இணைக்கின்றேன்.

8 hours ago, colomban said:

சிரித்து டென்சன் குறைக்கத்தானப்பு இப்படியான செய்திகளை இணைக்கின்றேன்.

அது மட்டுமல்ல முஸ்லிம்களின் சுயரூபத்தை உலகறிய வைக்கும் பணியையும் செய்து வருகிறீர்கள்!

உங்கள் அறியாமை உங்களுக்கு சிரிப்பை உண்டாக்குமானால் நீங்கள் அறியாமையில் இருப்பதே நன்று http://www.ft.lk/columns/The-Brahmin-footprint-in-Sri-Lankan-history/4-667051

https://www.facebook.com/278321265642331/posts/the-history-of-the-salagama-castesalagama-brahakmana-wanshaya-salagamahalagama-i/278328775641580/

Edited by hasan

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, hasan said:

உங்கள் அறியாமை உங்களுக்கு சிரிப்பை உண்டாக்குமானால் நீங்கள் அறியாமையில் இருப்பதே நன்று http://www.ft.lk/columns/The-Brahmin-footprint-in-Sri-Lankan-history/4-667051

https://www.facebook.com/278321265642331/posts/the-history-of-the-salagama-castesalagama-brahakmana-wanshaya-salagamahalagama-i/278328775641580/

நாலு பேரை, அரசர் உத்தரவில், வள்ளத்தில் கொண்டு வந்த ஓட்டிகளை.... ஏதோ சிங்கள இனத்தையே.... இலங்கைக்கு (அதுக்கு முன்னமே இருந்த) சோனகர் அழைத்து வந்தது போல பீலா விடுவதை குறித்து தான் மேலே நகைச்சுவையாக பதிந்தோம்.

Edited by Nathamuni

3 hours ago, Nathamuni said:

நாலு பேரை, அரசர் உத்தரவில், வள்ளத்தில் கொண்டு வந்த ஓட்டிகளை.... ஏதோ சிங்கள இனத்தையே.... இலங்கைக்கு (அதுக்கு முன்னமே இருந்த) சோனகர் அழைத்து வந்தது போல பீலா விடுவதை குறித்து தான் மேலே நகைச்சுவையாக பதிந்தோம்.

தலைப்பு தவறானதுதான். சிங்கள இனத்தின் ஒரு சாதியினரை கொண்டுவந்தது என்று வரவேண்டும். இந்த வரலாற்றை சொல்பவர்கள் சிங்களவர்கள்தான். அது ஏன் உங்களால் சகிக்கமுடியவில்லை என எனக்கு புரியவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, hasan said:

தலைப்பு தவறானதுதான். சிங்கள இனத்தின் ஒரு சாதியினரை கொண்டுவந்தது என்று வரவேண்டும். இந்த வரலாற்றை சொல்பவர்கள் சிங்களவர்கள்தான். அது ஏன் உங்களால் சகிக்கமுடியவில்லை என எனக்கு புரியவில்லை.  

முதலாவதாக தமிழர்கள் இங்கே இருந்தார்கள், அவர்களின் ஒரு பகுதியினரிடம் தான் அரேபியாவில் இருந்து வந்த இஸ்லாம் பரவியது.

மொழி முதலில் இருந்தது.... மதம் பிறகு வந்தது.

அடுத்தது, இந்த சிங்களவர்கள், வரலாறு எழுதுகிறோம் என்று மனிதனின் பொது அறிவுக்கும், விவேகத்துக்கும் சவால் விடுகின்றனர்.

இன்றும் கூட, அவர்களின் பெரும் இதிகாச நூலாக கருதப் படும் மஹாவம்சம், காட்டுக்கு ஓடிப்போன இளவரசியை கவர்ந்து சென்ற சிங்கத்துக்கும் அந்த இளவரசிக்கும் பிறந்த இரு பிள்ளைகள், ஆணும், பெண்ணும், இணைந்து உருவாக்கியதே சிங்களவர்கள் என்று கப்ஸா விடுகிறது. (அதாவது, காட்டு ஆண் விலங்குக்கும், மனித பெண்ணுக்கும் இடையேயான இணைவில் உருவானதே சிங்கள இனம்)

அதை ஏற்று சகித்துக் கொள்ள வேண்டும் என்கிறீர்களா?

நாம் சொல்ல வருவது என்னவென்றால், எங்கேயோ இருந்து நாடுகடத்தப் பட்ட, தருதலைகளான விஜயனும் 700 தோழர்களும் தான் சிங்கள சமுகத்தின் மூலம். அவர்கள், தமிழர்கள் இருந்த தீவுனுள் கள்ளத்தோணியில் நுழைந்து கொண்டனர்.

சில பிராமணர்கள் வருகைக்கு, தமிழ் மொழி பேசிய, இஸ்லாமிய மார்க்கத்தினை சேர்ந்த தமிழர்கள் உதவி இருப்பார்கள். தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற பிரிவினை, ஜே ஆர் ஜெயவர்த்தனேவால் அதி தீவிரமாக கைக்கொள்ளப் பட்ட பிரித்தாளும் கொள்கையின் வெற்றி.

அதனை விழுங்கி, இது போன்ற தலைப்புகளில் எழுதும் மேதாவிகளை நினைக்க சிரிப்பு வராமல் வேறு என்ன தான் வருமாம்.

வரலாறினையே தலை கீழாக மாத்தி சொல்லும் சிங்கள போலி ஆய்வளார்களின் கதை சிரிப்பினை தான் வரவழைக்கிறது. 

உதாரணமாக தமிழர்கள் ஒரு காலத்தில் பௌத்தர்களாக இருந்திருக்கின்றனர். மணிமேகலை, சிலப்பதிகாரம் போன்றன பௌத்த தமிழ் இதிகாசங்கள்.

யாழ்ப்பாணம் கந்தரோடையில் ஆதிகால தமிழ் பௌத்த சின்னங்கள் உள்ளன. ஆனால் சிங்கள பௌத்தர்கள் அங்கே வாழ்ந்தார்கள் என்று கப்ஸா விடுகிறார்கள் இந்த பம்மாத்தர்கள். நம்ப வேண்டுமா?

Image result for kantharodai viharaya

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி நானா ...
சிறாவா நியம எக்ஸ்ப்ளனேசன் தானேவா குடுத்து இருக்கீங்க. 
எப்பிடிவா ஒங்கள்கிட்ட இவ்ளோ இன்போர்மேஷன் ஈக்கி ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 11/18/2018 at 6:00 PM, nunavilan said:

வெள்ளரசு மரத்தை கக்கீம் தான் நாட்டினார் என சொன்னாலும் சொல்வார்கள்.:grin:

எங்கடை கவிஞர் பிரான்ரை காதிலை விழாமல் மெல்லமாய் கதையுங்கோ....பிறகு அந்தாள் வந்து கக்கீம் கக்கா போறதுக்கு வெட்டின கிடங்கிலைதான் வெள்ளரசு செழிப்பாய் வளர்ந்தது எண்டு சொன்னாலும் சொல்லும் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
 
மதிப்புக்குரிய பேராசிரியருக்கு.
உங்கள் கூற்று மிகத் தவறானதாகும். சலாகம சாதியினர் தமிழகத்தைச் சேர்ந்த சாலையர்கள் அல்லது செங்குந்தர் என அழைக்கபட்ட் நெசவு செய்தலைக் குலத் தொழிலாக கொண்டவர்கள்.  கம என்கிற சிங்களச் சொல் சாதியையும் குறிப்ப்பதாகும்.சாலை சாதி என்பதன் சிங்கள பதமே சலாகம என்பது. 
.
 
Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

இன்றும் கூட, அவர்களின் பெரும் இதிகாச நூலாக கருதப் படும் மஹாவம்சம், காட்டுக்கு ஓடிப்போன இளவரசியை கவர்ந்து சென்ற சிங்கத்துக்கும் அந்த இளவரசிக்கும் பிறந்த இரு பிள்ளைகள், ஆணும், பெண்ணும், இணைந்து உருவாக்கியதே சிங்களவர்கள் என்று கப்ஸா விடுகிறது. (அதாவது, காட்டு ஆண் விலங்குக்கும், மனித பெண்ணுக்கும் இடையேயான இணைவில் உருவானதே சிங்கள இனம்)

ஓர் ஆண் சிங்கம் பெண் சிங்கத்துடன் கலவியில் ஈடுபடும் போது பெண்சிங்கத்தின் பிடரியின் கீழ் இருக்கும் கழுத்து பகுதியை தனது வேட்டைப் பற்களால் கௌவிப் பிடிப்பதுடன், ஆண் சிங்கத்தின் முன்னம் கால் நகங்கள் பெண் சிங்கத்தின் கரைத்தோள் பட்டையில் பதிந்து இறுக்கப் பற்றியிருக்கும்.

உச்சக் கட்டத்தில் ஆண் சிங்கம் பென்சினத்தின் பிடரியின் கீழ் இருக்கும் கழுத்து பகுதியை வேட்டையாடும்  போது உள்ள வேட்டைப் பற்களால் இறுக்கமான பிடியளவு இருக்கும்.

அது போலவே முன்னம் கால் நகங்களை பெண் சினத்தின் கரை தோள்  பட்டையில் பதிந்து இறுக்கப் பற்றியிருக்கும்.

இது பெண் சிங்கத்தை உச்ச கட்டத்தின் போது, வெடிக்கும் உணர்ச்சியில்  அசைய விடாமல் ஆன் சிங்கத்தின் கட்டுக்குள் வைத்திருப்பதத்திற்கும், ஆன் சிங்கத்தின் விந்து பீய்ச்சல் பெண் சினத்தின் கரு முட்டையை சென்று அடைவாதத்திற்கான நேரத்தையும் சாத்தியக் கூறுகளையும் அதிகரிப்பதற்கு   இயற்றுகை கூர்ப்பின் வாயிலாக அநேகமான மிருகங்ளிடற்கு உண்டு.

ஆயினும், பெண் சிங்கம் மிகுந்த வலியிலும், மூச்சை இழக்காமல், எந்த விதமான காயங்களோ அல்லது சதை கிழிவுகளோ, எலும்பு முறிவுகளோ ஏற்படாமல்  புணர்ச்சியின் போது ஆன் சிங்கத்திற்கு ஈடு கொடுத்து தாங்கும் அளவிடற்கு தோள் படை தசைகளையம், பின்கழுத்து தசைகளையும் முறுக்கேற்றி, என் உடம்பு முழுவதையுமே ஓர் விதமாக முறுக்கேற்றி, உண்மையில் ஆன் சிங்கத்தின்  இடித்தலிற்கு எதிரான, அதே நிகரான அழுத்தத்தை வழங்கும். இதுவும் கூர்ப்பினாலேயே வந்ததது. காலதிகால தன்னிலும் மிகப் பெரிய மிருகங்களை வேட்டையாடுவதினால் வந்தவையே இந்த முறுக்கேற்றம்.  

இந்த புணர்ச்சியை எல்லா விதமான big  cat இல் காணலாம்.       

மனிதர்களிடமும் இது உண்டு. கலவியின் பொது கடித்தல்  என்பது கூர்ப்பின் வாயிலாக புணருபவர்களில் ஆக்க குறைந்து ஒருவராயினும் கடித்தல் மூலமாக இயலுமானவரை மற்றவரை கட்டுக்குள் மற்றும் கட்டியணைத்து வைத்திருப்பதத்திற்கு, கலவியின் உச்சக்கட்ட விளைவாக, கூர்ப்பினால் வழங்கப்பட்டுள்ளது.    ஆயினும் எல்லா மனிதர்களும் இப்படியே கலவியை அனுபவிப்பார்கள் என்பதில்லை, ஏனெனில் அறிவு வளர்ச்சி.

திருக்குறளும், இதையே தலைவனிற்கும் தலைவிக்கும் காற்று தப்பிக்க (கவனிக்க காற்று புக அல்ல) முடியாத நெருக்கம் கலவியில் இருக்கும் என்று. அல்லால் அது கலவி அல்ல என்றும்.

சிங்களம் சொல்லும், சிங்கத்திற்கும் மனித இளவரசி இடையிலான புணர்ச்சி என்பதில், மனித இளவரசி பெண்சிங்கத்தின் பாகத்தையே எடுத்திருக்க முடியும். அதாவது, மனித இளவரசி பெண்சிங்கமாகவே, புணர்ந்த ஆன் சிங்கத்திற்கு  இருந்திருக்க முடியும்.

மனித இளவரசி, ஓர் பெண் சிங்கத்தின் முறுக்கேற்றத்தை ஒரு போதுமே வழங்கியிருக்க முடியாது. அப்படி இருந்திருப்பின், அந்த பெண் மனித வர்க்கம் அல்ல.

மேலே சொல்லிய சிங்கத்தின் வேட்டைப் பற்களும், முன்னம் கால்களின் நகங்களும், மனித இளவரசியின் தோள்களையும், முண்டத்தையும்  ஆக குறைந்தது மூன்று சதை எலும்பு கீலங்களாக புணர்ச்சி முடியும் தறுவாயில் கிழித்து, ஏன் பெண்ணுறுப்பு வரையுமே கிழிவு ஏற்றப்பட்டிருக்க கூடிய சாத்தியக்  கூறுகள் உள்ளது.

மேலும் புணர்ச்சி முடிந்த  தறுவாயில், ஆன் சிங்கத்திற்கு அருகில் பெண் சிங்கமே நிற்காது. ஏனெனில், அது மிகவும் ஆபத்தான நேரம், ஆன் சிங்கம் ஓர் விதாமான இரத்த சதை வெறியுடன் இருக்கும்.

மனித இளவரசி ஆயின், ஆன் சிங்கம்  ஓர் வேட்டையை முடிவில் இரத்த வெறியை எவ்வாறு தீர்கிறதோ அப்படியே அந்த இரத்த சதை பிண்டத்தை தனது இரத்த சதை வெறியை தீர்த்திருக்கும்.

சிங்களம் சிந்திக்காமல் கதை விட, வந்த பிரித்தானியரும் சிங்களம் கொடுத்த மது, மாது, ஆண், பெண், பொருள் இத்தியாதியால் அந்த கதையை எழுத்துருவாக்க, சிங்களத்திடம் ஆட்சியை கொடுக்க, சிங்களம் தான் சொன்ன கதையை உண்மையே என்று நம்பி விட்டது.

அனால், நவீன சிங்களத்தின் (~50 %) மரபணு இப்போதைய தமிழ் நாடு, கேரளா,ஆந்திராவுடன்,அதே வரிசையில் ஒத்துப்போகிறது.

பூர்விக சிங்களத்தின் (~50 %) மரபணு, ஈழத்தமிழ் மரபணுவுடன் ஒத்துப்போகிறது.

போத்துக்கேயர் எல்லா இஸ்லாம் மதத்தவரையும் moors என்று  பெயரிட்டபடியால் , நீங்கள் moors ஆகவோ  அல்லது அரேபிய பூர்விகம் உள்ளவராகவோ முடியாது

உங்களில் ஓர் மிக குறைந்த (~ 5000 - 10000) பகுதியினர் அரேபிய தந்தையை மூதாதையராக இருப்பதினால், உங்களை அராபியர் என்று கூறமுடியாது.

அதை கூட நீங்கள் கையில் எடுப்பதத்திற்கான  காரணம், அன்றைய சாதிக் கொடுமைகளால் உங்கள் மூதாதையரின் தோற்றமான இப்போதைய தமிழ் நாடு, கேரளா அடிகளை மறைப்பதத்திற்கு. இது சாதியை கொண்டு வேறுபடுத்துவதற்கு கூறப்படவில்லை. இதுவே உண்மையான சரித்திரமும் வரலாறும்.

உங்களிட்ற்கும் நவீன சிங்கத்திடற்கும் நிச்சயமாக மரபணுவில் மிகச் சிறிய வேறுபாடுகளே இருக்கும். 

உங்கள் என்பது உங்களை தனி நபராக குறித்து சுடப்படவில்லை.

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Kadancha said:

அட....இதுக்குள்ள...இவ்வளவு விஷயம் ஒளிஞ்சிருக்கு எண்டு ...இண்டைக்குத் தான் தெரியும்..!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சாலகம என்பது கறுவா தயாரிப்பு தொழில் செய்யும் தாழ்த்தப்படட மக்கள். அவர்கள் தமிழகத்தில் இருந்து வந்திருக்கலாம்.

தம்மை மிக உயர்ந்த வகுப்பினர் என கருதும் பிராமணர்களை பத்தி புரியாதவர்கள் எல்லாம் அவர்களை கொண்டுவந்தோம், அவர்கள் கறுவா தோட்டம் அமைத்தார்கள் என்று சிங்கள வரலாறு சொல்கிறோம் என்று கப்ஸா விடக்கூடாது. அதை நம்பி, இஸ்லாமியர்கள் அடுத்த கப்ஸா விடக்கூடாது. 

புத்தர் மறைந்து 250 வருடங்களின் பின்னர் தான் அவரது போதனைகள் பௌத்தமதமாக, அசோக சக்கரவர்தியால் தென் கிழக்கு ஆசியா எங்கும் பரவியது. அசோகரின் பிள்ளைகள், மகிந்த, சங்கமித்தை யினால் இலங்கையில் பௌத்தம் அறிமுகமானது. அதாவது புத்தர் மறைந்து 250 ஆண்டுகள் பின்னால். 

(மான் வேட்டை ஆடி கொண்டிருந்த தேவநம்பிய தீசன் எனும் மன்னனை இடைமறித்து, கொல்வது பாவம் என்று சொல்லி போதனை செய்தார்களாம் அவர்கள். ஆனால் மகிந்த பெயர் கொண்ட ஒருவர் 2009ல் வன்னியில் நடத்தியதை புத்தர் மன்னிப்பாரா?)

ஆனாலும் புத்தர் இலங்கை வந்தார், நயினாதீவு வந்தார், சிவனொளி பாத மலை உச்சியில் காலடி வைத்தார் (சாதாரண மனிதப் பிறவியினால் முடியுமா?) , கண்டியில் 2500 ஆண்டுகள் வயதான அவரது பல், புனித பேழையில் உள்ளது என்று கப்ஸா நீள்கிறது...  

தமிழ் முருகனை தூக்கி, பிள்ளையாரின் தம்பி, சிவனாரின் இரண்டாவது மகன் என்று சொல்லி சைவத்தை, இந்துமதத்துக்குள் அமுக்கிய இந்த ஆரிய பிராமணர்கள், விகாரைகளில் மனிதப் பிறவியாக புத்தரை பூசை செய்ய முடியாததால், தமிழகத்தில் செழித்து இருந்த பௌத்தம், தூக்கி வீசப்பட்டதுக்கு காரணமாக இருந்தார்கள். 

உண்மையில் அவர்கள் இலங்கைக்கு வந்திருந்தால் இங்கே பௌத்தம் இருந்திருக்க முடியாது.

முதலில் இலங்கை முஸ்லிம்கள், தாம் இஸ்லாம் மார்க்கத்தினை பின்பற்றும், தமிழ் மொழி பேசும் தமிழர்கள் என்பதை புரிந்து கொள்ளட்டும். மார்க்கம் வேறு, மொழி வேறு என்று புரியாவிடில் சிங்கள மொழியினை படிக்கலாமே.

இலங்கை முஸ்லிகளில், லோக்கல் முஸ்லீம், ஹக்கீம், ஆசாத் அலி போன்ற பாக்கிஸ்தான், சிரிய வம்சாவளி முஸ்லிம்கள் உள்ளனர். ஆனாலும் அவர்கள் தமிழ் மொழியை தான் பேசுகின்றனர்.

அண்மைய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில், கண்டியில் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஒரு இஸ்லாமிய சகோதரர், தமிழ் மொழியில் பேசுகிறார். பின்னர் ஒருவரை அழைத்து, எனக்கு சிங்களம் தெரியாது, நான் சொன்னதை சிங்களத்தில் சொல்லுங்கள் என்று சொல்கிறார். அங்கே தமிழர் நின்றார், இஸ்லாமியர் அல்ல.

ஆகவே சொல்ல வருவது என்னவென்றால், சில தமிழர்கள், இஸ்லாமிய மார்க்கத்தினை பின்னர் ஏற்றனர் என்கிற காரணத்தினால், தமிழர் வரலாறில் இருந்து உருவி, அதை முஸ்லீம் வரலாறாக சொல்ல முடியாது.

தமது தாய் மொழி சார்ந்த வரலாறாக சொல்வதில் என்ன தாழ்வு?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nathamuni said:

தமிழ் முருகனை தூக்கி, பிள்ளையாரின் தம்பி, சிவனாரின் இரண்டாவது மகன் என்று சொல்லி சைவத்தை, இந்துமதத்துக்குள் அமுக்கிய இந்த ஆரிய பிராமணர்கள்.

இன்று உலகில் வாழும் தமிழர்கள் மொழிரீதியாக, மதரீதியாக, மரபுவழி, கலாச்சாரரீதியாகக் குழம்பி நிற்பதற்குக் காரணமே இந்த ஆரிய பிராமணர்கள்தான். உலகில் பல தேசங்களை ஆண்ட தமிழர்கள் குழம்பியதால் அங்கு நிலம் பிடித்து ஆட்சி செய்யப் பலருக்கு வசதியாகப் போய்விட்டது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.