Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாடு வெட்டத் தடை தீர்மானத்தை நீக்குமாறு கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

Request.png?resize=800%2C535

நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் மருத்துவர்களின் ஆலோசனைக்கு இணங்க மாட்டிறைச்சி சம்பந்தமான உணவுகள் உட்கொள்வோர் உள்ளமையினால் சபை­யால் நிறை­வேற்­றப்­பட்ட ”மாடு வெட்டத் தடை” தீர்­மா­னத்தை மீள் பரி­சீ­லனை செய்து தடையை நீக்­கு­மாறு கோரி நல்­லூர் பிர­தேச செய­ல­ர் பிரிவுக்­கு உட்பட்ட 80, குடும்பங்களைச் சேர்ந்தோர் சபை­யி­டம் தமது கையொப்­பங்­கள் அடங்­கிய கோரிக்கையை கைய­ளித்­துள்­ள­னர்.

கடந்த செப்­ரெம்­பர் மாதம் நடை­பெற்ற மாதாந்த அமர்­வில் நல்­லூர் பிர­தேச சபைக்­குட்­பட்ட பகு­தி­யில் மாட்­டி­றைச்­சிக்­குத் தடை விதிக்­கக்­கோரி உறுப்­பி­னர் மது­சு­தன் கொண்டு வந்த தீர்­மான வரைவு விவா­தத்­தின் பின்­னர் நிறை­வேற்­றப்­பட் டது. இந்த நிலை­யிலேயே அந்தத் தீர்­மா­னத்தைப் மீள்பரி­சீ­லனை செய்து மாட்­டி­றைச்­சிக்கு உள்ள தடையை நீக்­கு­மாறு கோரி 80 குடும்­பங்­களைச் சேர்ந்தவர்கள் கையொப்ப­மிட்டு சபைக்கு கைய­ளித்­துள்­ளனர்.

அவர்­கள் கைய­ளித்­துள்ள மனு­வில், நல்­லூர் பிர­தேச சபை­யின் எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­யில் மாட்­டி­றைச்சி உண்­ப­வர்­கள் உள்­ள­னர். அது மட்­டு­மல்­லாது நோயா­ளர்­க­ளான எம்­மில் பல­ருக்கு மருத்துவர்­கள் மாட்­டி­றைச்சி சம்­பந்­த­மான உண­வு­களை பரிந்­து­ரைக்­கின்­ற­னர்.
எனினும் அதனை எம்­மால் பெற்­றுக்­கொள்ள முடி­யா­மல் உள்­ளதன் கார­ண­மாக நாம் எமது பிர­தே­சத்தை விட்டு வெளி­யி­டங்­க­ளுக்குச் சென்று மாட்­டி­றைச்­சியை வாங்க வேண்­டிய சூழ்­நிலை காணப்­ப­டு­கின்­றது.
இத­னால் எமக்கு நீண்ட அலைச்­ச­லும், பண விர­ய­மும் ஏற்­ப­டு­கின்­றது. இது போன்ற அடிப்­ப­டைக் கார­ணி­கள் பல­வற்றை கவ­னத்­தில் கொண்டு சபை­யால் விதிக்­கப்­பட் டுள்ள மாட்­டி­றைச்­சித் தடையை நீக்கி எமது உணவுத் தேவையைப் பூர்த்­தி­செய்து தர­வேண்­டும் என்று குறிப்­பி­டப்­பட்­டுள் ளது.

இது தொடர்­பில் சபை­யின் தவி­சா­ளர் தியா­க­மூர்த்­தி­யை கேட்­ட­போது, இந்த விட­யம் தொடர்­பில் உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ள­ரின் கவ­னத்­துக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது எனவும் அவ­ரின் பதில் கிடைத்­த­வு­டன் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் எனவும் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/104011/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

அது மட்­டு­மல்­லாது நோயா­ளர்­க­ளான எம்­மில் பல­ருக்கு மருத்துவர்­கள் மாட்­டி­றைச்சி சம்­பந்­த­மான உண­வு­களை பரிந்­து­ரைக்­கின்­ற­னர்.

இப்படி மருத்துவர்கள் பரிந்துரைப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது .................

எவ்வளவோ ஆயிரகணக்கான குடும்பங்கள் வதியும் ஏரியாவில் வெறும் 80 பேருக்கு மாத்திரம் தடை எடுப்பது வேடிக்கையாக கிடக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் ஆட்களாய் இருப்பினமோ ?
 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ரதி said:

முஸ்லீம் ஆட்களாய் இருப்பினமோ ?
 

அவர்கள் இல்லது அவர்களின் தூண்டுதல் காரணமாக இருக்கலாம் கள்ள மாடு சாப்பிடா விட்டால் அவைக்கு செமிக்காது .(முஸ்லீம் என்று எல்லாரையும் அல்ல இந்த பசு வதை செய்பவர்கள் மட்டுமே )

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

இப்படி மருத்துவர்கள் பரிந்துரைப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது .................

எவ்வளவோ ஆயிரகணக்கான குடும்பங்கள் வதியும் ஏரியாவில் வெறும் 80 பேருக்கு மாத்திரம் தடை எடுப்பது வேடிக்கையாக கிடக்கு .

இரெத்த சோகை, புற்றுநோய் சிகிச்சை காரணமாக இரெத்தம் குறைந்தவர்கள் மற்றும் இரெத்தம் உருவாக தேவையான இரும்பு உள்ள உணவை உண்ண வேன்டியவர்களுக்கு மாட்டிறைச்சி மருத்துவர்களால் பரிந்துரைக்க படுகிறது. 

இந்த என்பது குடும்பங்கள் மட்டுமல்ல மற்றவர்களுக்கும் இந்த  நோய்கள் வந்தால் அவர்களுக்கும் மாட்டிறைச்சி தேவை.
ஜெகொவாவின் சாட்சிகள் மருத்துவரிடமெ போவதில்லை. அப்படி   மருத்துவர் சொல்லியும் மாட்டிறைச்சி வேன்டாம் என்று இருப்பவர்கள் தவிர மற்றவர்களுக்கு இதே பிரச்சினைகள் வரும். 

 

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Jude said:

இரெத்த சோகை, புற்றுநோய் சிகிச்சை காரணமாக இரெத்தம் குறைந்தவர்கள் மற்றும் இரெத்தம் உருவாக தேவையான இரும்பு உள்ள உணவை உண்ண வேன்டியவர்களுக்கு மாட்டிறைச்சி மருத்துவர்களால் பரிந்துரைக்க படுகிறது. 

இந்த என்பது குடும்பங்கள் மட்டுமல்ல மற்றவர்களுக்கும் இந்த  நோய்கள் வந்தால் அவர்களுக்கும் மாட்டிறைச்சி தேவை.
ஜெகொவாவின் சாட்சிகள் மருத்துவரிடமெ போவதில்லை. அப்படி   மருத்துவர் சொல்லியும் மாட்டிறைச்சி வேன்டாம் என்று இருப்பவர்கள் தவிர மற்றவர்களுக்கு இதே பிரச்சினைகள் வரும். 

 

தற்போது ஜெகொவாவின் சாட்சிகள் மருத்துவமனையிலேயே வேலை பார்க்கின்றனர்.

நீங்கள் குறிப்பிட்ட நோய்களுக்கான (?) தீர்வு மாட்டிறைச்சி மட்டும் தானா?

இரத்தம் உருவாக மாட்டிறைச்சியா????

 

  • கருத்துக்கள உறவுகள்

இரும்புச் சத்துள்ள உணவுகள்

ஈம் இரும்பு

இது பெரும்பாலும் புலால் உணவில் கிடைக்கும். ஆடு, கோழி, மீன், கருவாடு ஆகியவை இரும்புச்சத்து மிக்கவை. ஈரல், இறைச்சி, மீன் என்பன ஈம் இரும்பு கொண்ட உணவுகளாகும். பால், முட்டை முதலான புலால் உணவில் ஈம் அல்லாத இரும்பு காணப்படும்.

ஈம் அல்லாத இரும்பு

குழந்தைகளுக்காக கிடைக்கும் பாலில் சேர்க்கப்படும் இரும்பு இந்த வகையைச் சேர்ந்ததே. உணவிலிருந்து கிடைக்கும் இரும்புச்சத்து உடலில் உறிஞ்சப்பட வைட்டமின் சி சத்து தேவைப்படுகிறது. வைட்டமின் சி சத்து மிக்கவை: நெல்லிக்காய், எலுமிச்சை, முளைகட்டிய தானியங்கள், பச்சைக்காய் கறிகள் மற்றும் கீரைவகைகள்[1].

இரும்பு உறிஞ்சுவது என்பது நாம் தினம் உட்கொள்ளும் உணவில் உள்ள இரும்பு எவ்வாறு உடலுக்குள் உறிஞ்சப்பட்டு உபயோகிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அமையும். ஒரு நல்ல உடல் நலம் உள்ள மனிதன் உட்கொள்ளும் உணவில் 30% மட்டுமே உறிஞ்சப்படுகிறது. உடலில் சேர்த்து வைத்துள்ள இரும்பின் அளவு உறிஞ்சுவதை கட்டுப்படுத்தும். இது இரும்பு நச்சுப்பொருளாக மாறுவதை தடுக்க வல்லது. எந்த வகை இரும்பு உணவில் உள்ளது என்பதை பொறுத்தும் மாறும். புலால் உணவிலிருந்து ஈம் இரும்பு அதிவிரைவில் உறிஞ்சப்படும். ஈம் இரும்பு 35% வரை உறிஞ்சப்பட முடியும். ஆனால் ஈம் அல்லாத இரும்பு 2- 20% வரை மட்டுமே உறிஞ்சப்படுகிறது.

விக்கிப்பீடியா. 

 

  • கருத்துக்கள உறவுகள்

சாதரணமாக முஸ்லீம்கள் பெருவரியாக இருக்கு இடத்தில் பன்றி வெட்ட முடியுமா? மேலும் 80 முஸ்லீம் அல்லாதவர்கள் இந்த மாதிரி அனுமதி கேட்டால் கிடைக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, colomban said:

சாதரணமாக முஸ்லீம்கள் பெருவரியாக இருக்கு இடத்தில் பன்றி வெட்ட முடியுமா? மேலும் 80 முஸ்லீம் அல்லாதவர்கள் இந்த மாதிரி அனுமதி கேட்டால் கிடைக்குமா?

கிடைக்கும். சிங்கள அரசாங்கம் உள்ளவரை கிடைக்கும். மனித உடல்களையே வெட்டிக் கூறுபோட்டு வெளிநாடுகளுக்கு விற்றுப் பணம் பண்ணியதாக போராட்ட காலத்தில் செய்திகள் வந்தது. அதனை அரசு விசாரித்ததாகவோ, செய்தவர்களைக் கண்டறிந்து தண்டித்ததாகவோ இதுவரை செய்தியில்லை. பிணம்புணரும் படைவீரரைப் படங்களில் பார்த்தோம். அதனைக் கண்டறிந்து தண்டித்ததாகவும் இதுவரை செய்தியில்லை. அப்படியானால் அந்தச் செயற்பாடுகளை எல்லாம் சிங்களஅரசு அனுமதித்துள்ளதாகத்தானே கொள்ள முடியும். இன்று பாராளுமன்றின் உள்ளேயே மாடு, பன்றியென எதனை வேண்டுமானாலும் வெட்டமுடியும்போல் தெரிகிறது. வெட்டினால் வெட்டியதைக் கறிவைக்க மிளகாய்த்தூளையும் அங்கு சிங்கள அரசியல்வாதிகள் கொண்டு தருவார்கள். ?? 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

நீங்கள் குறிப்பிட்ட நோய்களுக்கான (?) தீர்வு மாட்டிறைச்சி மட்டும் தானா?

இரத்தம் உருவாக மாட்டிறைச்சியா????

 

மாட்டிறைச்சியில் உள்ள அளவு இரும்பு  ஏனைய  உணவுகளில் இல்லை.
வேகமாக இரும்பை பெற்று கொள்ள மாட்டிறைச்சியை  பிரேரிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎22‎/‎2018 at 1:17 PM, Jude said:

மாட்டிறைச்சியில் உள்ள அளவு இரும்பு  ஏனைய  உணவுகளில் இல்லை.
வேகமாக இரும்பை பெற்று கொள்ள மாட்டிறைச்சியை  பிரேரிக்கிறார்கள்.

ஜூட்,மாடு சாப்பிடுவது,பன்றி சாப்பிடுவது அவரவர் விருப்பம்....ஆனால் நல்லூரில் மாடு வெட்ட அனுமதி கேட்பது என்பது ஆக்கிரமிப்பு என்று உங்களுக்கு தெரியாதா?...காத்தான்குடியில் போய் பன்றி வெட்டினால் விட்டு விடுவார்களா?...நல்லூரை சுத்தி இருக்கும் சைவர்கள் மாடு சாப்பிடுபவர்களாய் இருக்கக் கூடும்...சாப்பிடுவது என்பது வேறு,வெட்ட அனுமதிப்பது என்பது வேறு ...இப்படி கொஞ்சசம்,கொஞ்சமாய் இடம் கொடுத்து தான் அடியோடு அழிந்து போய் நிற்கிறோம் 

 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

ஜூட்,மாடு சாப்பிடுவது,பன்றி சாப்பிடுவது அவரவர் விருப்பம்....ஆனால் நல்லூரில் மாடு வெட்ட அனுமதி கேட்பது என்பது ஆக்கிரமிப்பு என்று உங்களுக்கு தெரியாதா?...காத்தான்குடியில் போய் பன்றி வெட்டினால் விட்டு விடுவார்களா?...நல்லூரை சுத்தி இருக்கும் சைவர்கள் மாடு சாப்பிடுபவர்களாய் இருக்கக் கூடும்...சாப்பிடுவது என்பது வேறு,வெட்ட அனுமதிப்பது என்பது வேறு ...இப்படி கொஞ்சசம்,கொஞ்சமாய் இடம் கொடுத்து தான் அடியோடு அழிந்து போய் நிற்கிறோம் 

 

எனது கருத்து  சில நோய்களுக்கு மாட்டிறைச்சி   ஏன்   மருத்துவர்களால் பிரெரிக்க  படுகிறது என்பது பற்றியது.  

நல்லூர்    எத்தனை    சதுரமைல்   பிரதெசம்?  நல்லூர்  கோவில்   உள்ள   பகுதியில்   மாடு   வெட்டுவது    அனுமதிக்க  பட   கூடாது.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எங்களுக்குள்  கொள்ளுபட்டு பலனில்லை அங்கு உள்ள அரசியல்வாதிகளின் கைகளிலே உள்ளது மிகுதி .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஜூட்,மாடு சாப்பிடுவது,பன்றி சாப்பிடுவது அவரவர் விருப்பம்....ஆனால் நல்லூரில் மாடு வெட்ட அனுமதி கேட்பது என்பது ஆக்கிரமிப்பு என்று உங்களுக்கு தெரியாதா?...காத்தான்குடியில் போய் பன்றி வெட்டினால் விட்டு விடுவார்களா?...நல்லூரை சுத்தி இருக்கும் சைவர்கள் மாடு சாப்பிடுபவர்களாய் இருக்கக் கூடும்...சாப்பிடுவது என்பது வேறு,வெட்ட அனுமதிப்பது என்பது வேறு ...இப்படி கொஞ்சசம்,கொஞ்சமாய் இடம் கொடுத்து தான் அடியோடு அழிந்து போய் நிற்கிறோம் 

மிக அருமையான... கருத்து,  ரதி. ?

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு  யாழில் மனிதர்களை விட  நாய்கள் கூட ஏன் அப்படி என்றால் எல்லாம் மகிந்தவின் உத்தரவு ஜீவராசிகளை துன்புறுத்த கூடாது என்று ஓடர் மூலைக்கு மூலை நாய்கள் கூட்டம் ஒளிபதிவில் நிக்கினம் போஸ் கொடுத்தபடி அதிலும் கண்தெரியாத வயது போன நாய்களும் உண்டு விசர் கிருமி பிடித்த நாய்களும் உண்டு இந்த மாடு அடிக்கும் கூட்டம் வயது போன மாடுகளை மட்டும் இறைச்சிக்கு கொண்டு போறம் என்பவர்கள் முதலில்  மகிந்தவிடம் கேட்டு இந்த வயது போன நாய்களை டேஸ்ட் பண்ணி பார்க்கலாம் .

மாடு தின்னிகளின் குணங்களை மாற்ற முடியாது!

அவர்களை விலக்கி வைப்பதே தகும் என்பது யாழ் கண்ட வரலாறு!

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் நேரம் இருந்தது (time to kill). நல்லுர் பிரதேச சபைக்கு இது ஓர் மிகவும் நன்றான வியாபார வாய்ப்பாகும்.

இப்படிப்பட்ட முறையில் (பொதுவான பிரிட்டிஷ் முறை) அணுகினால் என்ன? பணத்தொகை மாற்றப்படலாம்.

இதை விட எத்தனையோ சாக்கு போக்குகள் இருக்கிறன.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மனுதாரரின் கவனத்திற்கு.

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் மாட்டிறைச்சி மருத்துவ நுகர்வின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளவும், அதே அடிப்படையில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதற்கும், நல்லூர் பிரதேச சபையினால் விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரும் உங்கள் மனு,  மிகுந்த அக்கறையுடனும், தகுந்த மருத்துவ தொழில்சார் ஆலோசனைகளுடனும், மனித நேயக்கண்ணோத்துடனும், மிகக் கவனமாக பரிசீலிக்கப்பட்டது.

மனித நேயக் கணோட்டத்தில், உங்கள் 80 தனி நபர்களை தவிர்ந்த ஏனைய வதிவிடத்தார்களின் மனம் மற்றும் கலாசார உணர்வும் கருத்தில் எடுக்கப்பட்டது.

மனித நேயக் கணோட்டத்தில்,  உங்களுடைய கூற்றுப்படியே, நீங்கள் மருத்துவரை நாடியதை கவனத்தில் எடுத்து, நல்லூர் பிரதேசபை வதிவிடதாரி என்பதன் அடிப்படையில், உங்களுக்கு பிரயாணம் செய்வதற்கு  அங்கவீனம், போக்குவரத்துக்கு வசதிகள்  ஏதாவது தடையாக இருக்கமுடியுமா என்பதும் கவனத்தில் எடுக்கப்பட்டது. அப்படி அங்கவீனம் இருந்தாலும், நீங்கள் வேறு யாராவது உறவினர் அல்லது அயலவரின் உதவியை நாடமுடியாத என்பதும் பரிசீலிக்கப்பட்டது.

மனித நேயக் கணோட்டத்தில், நல்லூர் பிரதேசத்தில் மாட்டிறைச்சி பெற்றுக்கொள்ளக்கூடிய அல்லது மாடுகளை வெட்டுவதன்  மூலம் பெற்றுக்கொள்ளக் கூடிய ஒரேயொரு நிலையத்தின் மூலம் உங்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படமுடியுமா என்றும் ஆராயபட்டது.

அப்படிஓர் நிலையம் அமைப்பட்டாலும், உங்களில் பலருக்கு போக்குவரத்து மற்றும் அங்கவீனப் பிரச்சனைகள் அந்த நிலையதால் தீர்க்கப்படமுடியாது என்பது வெளிப்படையாகவே தெரிய வந்தது.

மேலும்,  அயலவர் அல்லது உறவினர் தற்போதைய நிலையில் கூட உங்களிற்கு அவ்வப்போது உதவுபவர்கள் கூட, நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் அப்படி ஓர் நிலையம் அமைக்கப்பட்டால், உங்களை முற்றாக  கைவிடுவது மட்டுமின்றி,  நீங்கள் அவ்வப்போது நீங்கள் அந்த நிலையத்திடற்கு செல்லும் போது அவர்களிடற்கும் மாட்டிறைச்சியை வாங்கி உதவி செய்தால் குறைந்தா  விடுவீர்கள் எனும் மனித மனப்பான்மை அவர்களிடத்தும் வளரக் கூடும் எனும் சாத்தியக் கூறுகளும் கருத்தில் எடுக்கப்பட்டது. அது உங்களுக்கு கிடைக்குக்கும் சிறு உதவியைக் கூட பூதாகரமான பிரச்சனையாக மாற்றுவதில் முடியும் என்பதும், அதை பின்பு தீர்ப்பதற்கு பிரதேசபை தலையீடு செய்யக்கூடிய சூழ்நிலைகள் உருவாகலாம் எனபதும், அந்த நிலைமையில் நல்லுர் பிரதேச சபை எல்லைக்குள் அமைக்கப்பட்த மேற்கூறப்பட்ட நிலையத்தை பிரதேச சபை எல்லைக்குள் வேறு இடத்தில் மாற்றுவதிலோ அல்லது முற்றாக அகற்றுவதிலோ முடியலாம் என்பதும், அந்நிலையைக் கையாள போதிய பணம் இல்லாதவிடத்து உங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பிரதேச சபை சுவீகரிப்பதன் மூலம் அப்பணப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு பிரதேச சபையிடம் அதிகாரம் உள்ளது என்பதும் ஆழ்ந்து நோக்கப்பட்டது.     
          
இதைத் தவிர, இந்நிலையத்தை அமைப்பதினால் , உங்களையோ அல்லது அந்நிலையத்தையோ வேறு யாரவது பிரச்சனனைகளுக்கு உட்படுத்தினால் கூட, பிரச்னையைத் தீர்ப்பதற்கு நல்லோர் பிரதேச சபைக்கு பணப்பற்றாக்குறை ஏற்படுமிடத்து, உங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பிரதேச சபை சுவீகரிப்பதன் மூலம் அப்பணப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு பிரதேச சபையிடம் அதிகாரம் உள்ளது என்பதும் ஆழ்ந்து நோக்கப்பட்டது.

உங்கள் மனு சபையின் பரிசீலனைக்கு உட்பட்ட போது, மனுதாரர்களின் வதிவிடங்களுக்கு அருகாமையில் பல, சிறிய பன்றியிறைச்சியை பெற்றுக்கொள்ளக் கூடிய, குளிரூட்டப்பட்ட சந்து பொந்து நிலைகளை அமைப்பதிற்கு அனுமதியளிக்குமாறு வேறு ஓர் மனு சமர்ப்பிக்கப்பட்டது. மனுதாரர்களுக்கு அது அறியதரப்பட, மனுதாரர்கள் அனைவருமே வன்முறை வெடிக்கும் என்ற தொனியில் பதில் இறுத்திருந்தார்கள்.

மனுதாரர்கள் தவிர்ந்த ஏனைய வதிவிடதார்களும், மனுதாரர்களின் மனுவிற்கு அப்படிப்பட்ட தொனியிலேயே பதிலளித்திருந்தார்கள்.
   
எனவே, இப்படிப்பட்ட மனுவிற்கு தரப்படும் அங்கீகாரமானது, மனுதரரின் பிரச்னைகளை தீர்க்க முடியாது மட்டுமன்றி, மனுதாரர்களிற்கு தனிப்பட்ட இல்லாத பிரச்னைகளை ஆக்குவதோடு, இருக்கும் பிரச்சனைகளை பூதாகரமாக்கி, சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் என்பதிலும் முடிவடையாமல், மனுதாரகளின் அசையும் மற்றும் அசைய சொத்துக்களை இழப்பதில் கூட முடியாது  என்பது கண்கூடு.

உங்கள் பிரச்னையை தீர்ப்பதற்கு, பிரதேசசபை உங்கள் வாழ்க்கை முறை பற்றி மேலோட்டமாக அறிவதற்கு, ஓர் சிறு கேள்விக் கொத்து , ஓர் வாராக்  காலக்கெடுவுடன், மனுதாரரிடற்கு பிரதேச சபையால் அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு பதிலின்மையால், மனுதாரர்கள் சிரமத்தை கவனத்தில் கொண்டு, பிரதேசபை ஊழியர்கள் தாமாகவே மனுதாரர்களின் அயலவரை அணுகினார்கள்.

அயலவரின் கூற்றுப்படிபின்வருவன அறியப்பட்டன. மனுதாரகளில் பெரும் பகுதியினர், அரச அல்லது தனியார் போக்குவரத்து வசதிகள் மூலமோ, ஒவ்வொரு வாரமும் கிரமமாக

1)   தொழுகைக்காக பிரதேசபை எல்லைக்கு அப்பால் வெகு தொலைவில் உள்ள பள்ளிவாசல்களுக்கு    சென்று வருகிறார்கள்.  

2) கணிசமானோர் யாழ் வைத்தியசாலைக்கு சென்று வருகிறார்கள்.  

3) குறிப்பிட்ட தொகையினர் அவ்வப்போது, வடமாகாணத்திற்கு வெளியே சென்று வருகிறார்கள்.

4) பிதேசசபை எல்லைக்கு வெளியேயுள்ள  பாடசாலைகளில் கல்விகற்கும் தமது இளஞ்சந்ததியினரை பாடசாலைக்கு கூட்டி அல்லது பாடசாலையில்  இருந்து அழைத்து வருகிறார்கள்.

ஓர் வெகு மிகச் சிறிய தொகையே, தனிப்பட்ட முறையில் அனுதாபத்திற்கு ஆளாகும் நிலையில் இருப்பவர்களாக தென்படுகிறார்கள். அவர்களை பராமரிப்பதற்கு செலவு செய்யக்கூடிய வசதியான நிலைகளிலேயே அவர்கள் இருக்கிறார்கள்.  இவர்கள் மேற்கூறப்பட்வற்றில் ஆகக்  குறைந்தது ஏதாவது ஓர் விதத்தில் பராமரிப்பாளரின் உதவியுடன் செய்கிறார்கள். இவர்களை மனதில் கொண்டு, பிரதேச சபை, யாழ் மாநகர சபையினூடாகா, நல்லூர் பிரதேசத்திற்கு வெளியே இருக்கும் மாட்டிறைச்சிக் கடைகளில் இருந்து, ஓர் சிறிய தொகையை செலுத்துவதன் மூலம், அவரவர் வீடுகளிற்கு ஓர் வார நுகர்விற்கான மாட்டிறைச்சியை விநியோகம் செய்யும் வசதியை ஏற்ப்படுத்துவதற்கு தன்னாலான அனைத்து முயற்சி களையும் எடுப்பதத்திற்கு வேண்டிய அனைத்து நடவடிகைகளையும் மேற்க்கொள்ளும்  பிதேசசபை உறுப்பினர்களை வழிநடுத்துவதற்கு வேண்டிய பிரதேச சபையின் அங்கீகாரத்தை பெறுவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்யப் பின்னிற்காது என்பதை தாழ்மையுடன் அறியத்தருகிறது.            
 

மனுதாரர்கள் கவனமின்மையால், வாழ்க்கை முறை பற்றி மேலோட்டமாக அறிவதற்கு பயன்படுத்தப்பட்ட  ஊழியர்களின் நேரத்திற்கனா விரிவாக வகைப்படுத்தப்பட்ட வேதனம் இப்பதிலுடன் இணைக்கப்பட்டுள்ளது. வேதனத்திற்கானமுழுத்தொகை ரூபா. 20, 000, 000 /=. இத்தொகை, இக்கடிதத்தின் திகதியில் இருந்து ஐந்து உத்தியோகபூர்வ அலுவல் நாட்களுக்குள், பணமாக நல்லூர் பிரதேச சபை வங்கி கணக்கில் முழுமையாக தீர்வாகப்படுத்தப்படுதல் வேண்டும். அப்படி இல்லாவிட்டால், நாளொன்றுக்கு ஒரு வீத கூட்டு வட்டியாக அறவிடப்படும் என்பது  மனுதாரரின் உச்சக்கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.  ஐந்து நாள் காலக்கெடு கடந்தவிடத்து, கூட்டு வட்டியுடன் கூடிய 20, 000, 000 /= (பகுதியாகவோ முழுமையாகவோ)அறவீடும், அறவீட்டு முறையும்  என்பது நல்லூர் பிரதேசசபை விருப்புடை அதிகாரத்திற்கு உட்பட்டது. அறவீட்டு முறை நிர்ணயிப்பதில் நல்லூர் பிரதேசசபைக்கு மனுதாரரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சுவீகரிப்பதற்கு அதிகாரம் உள்ளது என்பதும் மனுதாரரின்  உச்சக்கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.                                          
    
மேலும், பிரதேசசபை மனுதாரரின் உடல்நலத்தை கவனத்தில் கொண்டு, வேறு மருத்துவ ஆலோசனை கொத்துக்களையயும், அதாவது மாட்டிறைச்சி தவிர உங்கள் உடல்நலப் பிரச்சனைக்கு ஏற்றதாக அமையும் நடவடிக்கைகள் பற்றியது. அதனை சிரமம் பாராது அளித்த மருத்துவர்களின் முகவரியையும் பின்னூட்டமாக இக்கடித்ததுடன் இணைத்துள்ளது. இதற்கான மருத்துவ ஆலோசனை கட்டணங்களும் பின்னூட்டமாக இணைக்கப்பட்டுள்ளது. இதை மிகுந்த கவனத்துடன் வாசிக்குமாறு பிரதேச சபை வேண்டிக்கொள்கிறது.

தகுந்த மருத்துவ தொழில் சார் ஆலோசனைகள், நல்லூர் பிரதேசத்தில், பெறப்பட்ட மாட்டிறைச்சியே மட்டும் தான் தான், அல்லது நல்லூர்  பிரதேசத்தில் மாடுகளை வெட்டுவதின்  மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய மாட்டிறைச்சியே மட்டும் தான், உங்கள் மருத்துவ தேவைக்கான மாட்டிறைச்சித் தேவையைத் தீர்க்கும் என்பதையும் முற்றாக நிராகரிக்கிறது.

மேற்கூறப்பட்ட காரண காரணிகளை சமநிலைப்படுத்துமிடத்து, நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் மாட்டிறைச்சி பெற்றுக்கொள்ளக்கூடிய அல்லது மாடுகளை வெட்டுவதன் மூலம் மாட்டிறைச்சி பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள் உங்கள் பிரச்னைக்கு தீர்விற்க்கு பதிலாக புதிய பல பிரச்சனைகளையும் தனிப்பட்ட முறையில் மனுதாரரிற்கு மட்டுமன்றி, நல்லூர் பிரதேசம் முழுவதையுமே சுடுகாடாக கூடிய அழுத்தத்தை உருவாக்கவல்லது என்பதை மிகுந்த வருத்தத்துடன் நல்லூர் பிரதேச சபை மனுதாரரின் உச்சக் கவனத்திற்கு கொண்டுவருகிறது.

குறிப்பு: நல்லுர் பிரதேச சபையின் துணிதல் மேன்முறையீட்டுக்குட்பட்டது. மனுதாரரின் நடத்தையின் நிமித்தம், மனுதாரர் மேன்முறையீடு செய்யுமிடத்து, ரூபா. 25, 000, 000 /= பெறுமதியுள்ள அசையாச் சொத்து  பிணையமாக மேன்முறையீட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு  ஆகக் குறைந்தது இருபது  உத்தியோகபூர்வ அலுவல் நாட்கள் இடைவெளி வைத்து மனுதாரர் கட்ட வேண்டும். நல்லுர் பிரதேச சபை பிணையத்தை மதிப்பீடு செய்யும் காலம் நல்லூர் பிரதேசசபை விருப்புடை அதிகாரத்திற்கு உட்பட்டது. நல்லுர் பிரதேச சபை பிணையத்தை மதிப்பீடு செய்யும் கட்டணம் மனுதாரரால் செலுத்தப்பட வேண்டும். கட்டணம் செலுத்தப்பட்ட பின்பே மேன்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படும்.     

On 11/24/2018 at 10:23 AM, Kadancha said:

என்னிடம் நேரம் இருந்தது (time to kill). நல்லுர் பிரதேச சபைக்கு இது ஓர் மிகவும் நன்றான வியாபார வாய்ப்பாகும்.

இப்படிப்பட்ட முறையில் (பொதுவான பிரிட்டிஷ் முறை) அணுகினால் என்ன? பணத்தொகை மாற்றப்படலாம்.

சனநாயக அதிகாரத்துவ அணுமுறை! 

இதுபோன்ற விடயங்களை அணுக பொருத்தமானதொரு முறை! 

ஆனால் அதை செய்யும் திறனுடைய அதிகாரிகள் தமிழர் மத்தியில் இல்லை எனலாம்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.