Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சென்டினல் பழங்குடியினர் தேடித் தாக்க விரும்புவதில்லை'- நேரில் சென்றவரின் அனுபவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சுவாமிநாதன் நடராஜன் பிபிசி உலக சேவை
  •  
செண்டினலீஸ்படத்தின் காப்புரிமை TN PANDIT Image caption 1991இல் பண்டிட் மேற்கொண்ட பயணத்தின்போது தேங்காய் ஒன்றை ஒரு சென்டினல் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவருக்கு பரிசாகக் கொடுக்கிறார்.

சென்டினல் தீவிலுள்ள பழங்குடியினர் குறித்து இந்தியர் ஒருவரை தவிர வேறு யாருக்கும் அதிக விஷயங்கள் தெரிந்திருக்காது. அவர் மானுடவியலாளர் டி.என்.பண்டிட்.

இந்தியாவின் பழங்குடி விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் பிராந்திய தலைவராக இருந்த பண்டிட் தனித்துவிடப்பட்டுள்ள இந்த தீவில் உள்ள மக்களை சந்திக்க பல தசாப்தங்களை செலவிட்டுள்ளார்.

லட்சக்கணக்கான ஆண்டுகளாக உலகின் தொடர்பிலிருந்து துண்டித்து தனித்திருக்கும் இந்த பழங்குடிகள், 27 வயது அமெரிக்கர் ஒருவர் சுவிசேஷத்தை பரப்புவதற்காக அந்த பழங்குடிகளை சந்திக்க சென்ற பிறகு கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாயானதன் பின்னர் கடந்த வாரம் உலகம் முழுவதும் கவனம் பெற்றனர்.

ஆனால் 84 வயதாகும் பண்டிட், தனது அனுபவத்தில் இருந்து அந்த பழங்குடி குழுவானது அமைதியை விரும்பக்கூடியது என்றும், அவர்கள் பயங்கரமானவர்கள் போல் சித்தரிப்பது நியாயமற்றது என்றும் தெரிவித்துள்ளார்.

''நாங்கள் அவர்களுடன் தொடர்புகொண்டபோது அவர்கள் எங்களை எச்சரித்தனர் ஆனால் எங்களை கொலை செய்யவோ காயப்படுத்தவோ செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை. எப்போதெல்லாம் அவர்கள் ஆத்திரமடைந்தார்களோ அப்போதெல்லாம் நாங்கள் பின்வாங்கிவிட்டோம்'' என பிபிசி உலக சேவையிடம் தெரிவித்தார் பண்டிட்.

''அமெரிக்காவில் இருந்து அவ்வளவு தூரம் பயணித்து அங்கே சென்று மரணமடைந்த அந்த இளைஞனுக்காக நான் வருத்தப்படுகிறேன். ஆனால் அவர் தவறு செய்துவிட்டார். அவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள வாய்ப்பிருந்தும் விடாப்பிடியாக இருந்ததால் தனது வாழ்க்கையையே விலையாக கொடுத்திருக்கிறார்,'' என்கிறார் பண்டிட்.

பண்டிட் முதல் முறையாக 1967-ல் ஆய்வுக் குழுவின் பயணம் ஒன்றின் பகுதியாக தனித்துவிடப்பட்டுள்ள பழங்குடிகள் வசிக்கும் வடக்கு சென்டினல் தீவுக்கு சென்றுள்ளார்.

செண்டினலீஸ்படத்தின் காப்புரிமை SURVIVAL INTERNATIONAL

முதலில் அத்தீவுக்கு வருகை தருபவர்களின் பார்வையில் இருந்து மறைவதற்காக காடுகளில் அந்த சென்டினல் பழங்குடியினர் ஒளிந்துகொண்டனர். அதன் பிறகான பயணங்களில் அம்புகளால் தாக்கத் துவங்கினர்.

மானுடவியலாளர்கள் எப்போதும் சென்டினல் தீவுக்கு பயணிக்க தங்களுடன் சில பொருள்களை எடுத்துச் செல்வார்கள். ஏனெனில் அப்பொருள்கள் மூலம் பழங்குடிகளுடன் ஒரு தொடர்பை உருவாக்க முயற்சித்தனர்.

நாங்கள் பானைகள், உலோக தட்டுகள், பெரிய அளவிலான எண்ணிக்கையில் தேங்காய்கள், சுத்தியல் மற்றும் பெரிய கத்தி முதலான இரும்பு பொருள்கள் ஆகியவற்றை பரிசாக எடுத்துச் சென்றிருந்தோம். மேலும் சென்டினல் பழங்குடியினர் பேசுவதை புரிந்துகொள்வதற்கும் அவர்களின் நடத்தையை அறிந்துகொள்ளவும் மற்ற மூன்று பழங்குடியை அழைத்துச் சென்றோம்.

''ஆனால் சென்டினல் பழங்குடியினர் கோபமான மற்றும் கடுமையான முகத்துடன் நின்று, வில் மற்றும் அம்புகளோடு தங்களது நிலத்தை பாதுகாக்க எங்களை எதிர்கொண்டனர்."

"நாங்கள் சிறிய வெற்றியை பெற்றவுடன், மர்மமான அச்சமூகத்தினருடன் தொடர்பை பேணுவதற்காக பரிசுகளை அங்கே விட்டுவிட்டு வந்துவிடுவோம். ஒருமுறை பன்றி ஒன்றை பரிசாக வழங்கியதை கவனித்த பிறகு அவர்கள் அதனை கொன்று அவர்களது நிலத்தில் புதைத்தனர். இது நிச்சயம் அப்பரிசுகளை அக்குழு வரவேற்கவில்லை என்பதை உணர்த்தியது'' என்கிறார் பண்டிட்.

தொடர்பு கொள்ளுதல்

பல முறை அவர்களை தொடர்புகொள்வதற்கு மேற்கொண்ட பயணங்கள் தோல்வியில் முடிந்த நிலையில், 1991-ல் முதன்முறையாக கடலில் அப்பழங்குடியினர் அமைதியான ஒரு அணுகுமுறையை கடைபிடித்தனர்.

''எப்படி எங்களை அனுமதித்தார்கள் என்பதில் எங்களுக்கு ஆச்சர்யம் இருந்தது. எங்களை சந்திக்க முடிவெடுத்தது அவர்களே. மேலும், அவர்கள் விரும்பியபடியே எங்கள் சந்திப்பு நடந்தது'' என பண்டிட் விவரிக்கிறார்.

''நாங்கள் கப்பலில் இருந்து குதித்தோம் மேலும் கழுத்துவரை ஆழமுள்ள நீரில் நின்றுகொண்டிருந்தோம். நாங்கள் தேங்காய் மட்டுமின்றி வேறு சில பரிசுகளையும் வழங்கினோம். ஆனால் அவர்களது நிலத்துக்குள் நுழைய அனுமதியளிக்கவில்லை''

"நான் தாக்கப்படக்கூடும் என்பது குறித்து பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால் அவர்களுடன் நெருங்கி இருக்கும்போது கவனமாக இருந்தேன்" என பண்டிட் தெரிவிக்கிறார்.

தனது குழுவின் மற்ற உறுப்பினர்கள் சைகை மூலமாக அந்த சென்டினலீஸ் மக்களை தொடர்புகொள்ள முயற்சித்ததாகவும் ஆனால் அவர்கள் ஏற்கனவே பரிசுகளோடு இருந்ததால் அவர்களின் முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை.

செண்டினல்படத்தின் காப்புரிமை COASTGUARD/SURVIVAL INTE

"அவர்கள் தங்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டார்கள். ஆனால் எங்களால் அந்த மொழியை புரிந்துகொள்ள முடியவில்லை. அதே பகுதியில் வாழும் மற்ற பழங்குடி மக்கள் பேசும் மொழியை ஒத்ததாக அவர்கள் மொழி இருந்தது'' என பண்டிட் நினைவுகூர்கிறார்.

'வரவேற்பு இல்லை'

மற்றொரு முறை பயணிக்கும்போது ஓர் இளம் பழங்குடி அவரை எச்சரித்ததை நினைவுகூர்கிறார் இம்மானுடவியலாளர்.

''நான் அவர்களுக்கு தேங்காய் வழங்கிக்கொண்டிருந்தபோது என்னுடைய குழுவில் இருந்து சற்றே நான் பிரிந்துவிட்டேன். மேலும் கடற்கரைக்கு நெருக்கமாக சென்றுவிட்டேன். ஒரு இளம் பழங்குடி வேடிக்கையாக முகத்தை வைத்துக்கொண்டு தனது கத்தியை காண்பித்தார். மேலும் எனது தலையை கொய்துவிடுவேன் என எச்சரித்தார். உடனடியாக நான் எனது படகை அழைத்து பின்வாங்கிவிட்டேன். அந்த சிறுவனின் உடல்மொழி நான் அங்கே வரவேற்கப்படவில்லை என்பதை தெளிவாக குறிப்புணர்த்தியது'' என விவரித்தார் பண்டிட்.

பரிசு வழங்கும் பயணங்களை இந்திய அரசு கைவிட்டபிறகு அயலர்கள் அந்தத் தீவுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

முழுமையாக அத்தீவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதன் காரணம் என்னவெனில் அயலர் ஒருவர் அங்கே சென்றால் அதனால் சென்டினலீஸ் மக்களுக்கு உயிருக்கு ஊறு விளைவிக்கும் நோய்கள் வரலாம் ஏனெனில் ஃப்ளூ காய்ச்சல் மற்றும் தட்டம்மை போன்ற வழக்கமான நோய்களை தாங்குவதற்கான எதிர்ப்புச் சக்தி அவர்களுக்கு கிடையாது.

தனது குழுவினர் எப்போதுமே தொற்றுநோய் குறித்து பரிசோதிக்கப்பட்டு ஆரோக்கியமாக இருப்பவர்கள் மட்டுமே வடக்கு சென்டினல் தீவுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதாக பண்டிட் கூறுகிறார்.

கடந்த வாரம் ஜான் ஆலன் சாவ் தனது பயணத்துக்கு அதிகாரப்பூர்வ அனுமதி எதையும் வாங்கவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அனுமதி வாங்குவதற்கு பதிலாக உள்ளூர் மீனவர்களிடம் 25 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு தன்னை அந்தத் தீவில் விடும்படி கூறியிருக்கிறார். அப்பழங்குடியினரை கிறித்தவர்களாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் அவர் சென்றதாக கூறப்படுகிறது. அவரது உடலை பெற தற்போது முயற்சிகள் நடக்கிறது.

அந்தமான்படத்தின் காப்புரிமை Facebook

பதற்றமான சந்திப்புகளை கடந்துவந்திருந்தாலும் சென்டினலீஸ் பழங்குடியினரை பகைமை உள்ளவர்களாக முத்திரை குத்துவதை எதிர்க்கிறார் திரு பண்டிட்.

''அவர்களை அப்படிப் பார்ப்பது தவறானது. நாம் இங்கே சண்டைக்காரர்களாக இருக்கிறோம். நாம்தான் அவர்களது எல்லையில் நுழைய முயன்றிருக்கிறோம்'' என இந்தியன் எக்ஸ்பிரஸிடம் அவர் தெரிவித்துள்ளார்.

''சென்டினலீஸ் பழங்குடியினர் அமைதியை விரும்புபவர்கள். அவர்கள் மக்களை தேடித் தாக்க விரும்புவதில்லை. அவர்கள் தங்களுக்கு அருகேயுள்ள பகுதிகளுக்கு கூடச் செல்வதில்ல. யாருக்கும் தொந்தரவு கொடுப்பதில்லை. இது மிகவும் அரிதான நிகழ்வு'' என அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

பழங்குடிகளுக்கு நட்புணர்வோடு பறித்து போடும் திட்டத்தை மீண்டும் துவங்க விருப்பம் தெரிவிக்கும் பண்டிட், அப்பழங்குடியினரை தொந்தரவு செய்யக் கூடாது என்கிறார்.

''தனிமையாக வாழ விரும்பும் அவர்களது விருப்பத்தை நாம் மதிக்க வேண்டும்,'' என்றார் பண்டிட்.

https://www.bbc.com/tamil/india-46360186

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுடைய இடத்திற்கு போய் அவர்களை மதம் மாத்த வெளிக்கிட்டு ஒருவர் மண்டையை போட்டுட்டுடார் ...அமைதியாய் இருக்கும் மக்களை அழிக்கிறதே இவர்களின் வேலை?

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரதி said:

அவர்களுடைய இடத்திற்கு போய் அவர்களை மதம் மாத்த வெளிக்கிட்டு ஒருவர் மண்டையை போட்டுட்டுடார் ...அமைதியாய் இருக்கும் மக்களை அழிக்கிறதே இவர்களின் வேலை?

இதுக்காக உலகம் முழுவதும் பணத்தை வாரி இறைக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎28‎/‎2018 at 6:27 PM, ஈழப்பிரியன் said:

இதுக்காக உலகம் முழுவதும் பணத்தை வாரி இறைக்கிறார்கள்.

என்னுடைய நண்பியும் மதம் மாறின கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர். அவர் சொல்லுவார் அவரது சபையால் ஒவ்வொரு வருடமும் கஷ்டப்படட இடங்களுக்கு ஊழியம் செய்ய என இங்கிருந்து பல பேர் போவார்களாம்...அவர்கள் பாஷையில் மதம் மாத்துவதற்கு பெயர் ஊழியம் செய்வது?....இங்கேயிருந்து பிறியாய்  டிக்கெட் போட்டு கொடுப்பார்களாம்...இலவச ஹொலிடே மதத்தின் பெயரால் அனுபவிக்கிறார்கள்...இந்த வருடம் இலங்கை போகிறார்களாம்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உங்கள் நண்பி உங்களை என்னும் மாத்தேல்லையோ ரதி ??

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கள் நண்பி உங்களை என்னும் மாத்தேல்லையோ ரதி ??

நல்ல விளையாட்டு... யாரட்ட.... ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

என்னுடைய நண்பியும் மதம் மாறின கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர். அவர் சொல்லுவார் அவரது சபையால் ஒவ்வொரு வருடமும் கஷ்டப்படட இடங்களுக்கு ஊழியம் செய்ய என இங்கிருந்து பல பேர் போவார்களாம்...அவர்கள் பாஷையில் மதம் மாத்துவதற்கு பெயர் ஊழியம் செய்வது?....இங்கேயிருந்து பிறியாய்  டிக்கெட் போட்டு கொடுப்பார்களாம்...இலவச ஹொலிடே மதத்தின் பெயரால் அனுபவிக்கிறார்கள்...இந்த வருடம் இலங்கை போகிறார்களாம்?

ஓடு மீன் ஓடி உறு மீன் வரும் வரை வாடியிருக்குமாம் கொக்கு என்பது இவர்களுக்கு நன்கு பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கள் நண்பி உங்களை என்னும் மாத்தேல்லையோ ரதி ??

மதம் மாத்த வெளிக்கிட்டு மதம் பிடிச்சு நிக்கணும் உண்மை தோழிக்கு  விளங்கிட்டுது .

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கள் நண்பி உங்களை என்னும் மாத்தேல்லையோ ரதி ??

ஆரம்பத்தில் அவவும் சாடையாய் தொடங்கினவ☺️..இஞ்ச பாரு நான் என்ட மதத்தை பற்றிக் கதைக்கிறேனா அல்லது கோயிலுக்கு கூப்பிடுகிறேனா ...அதை மாதிரி நீயும் உன்ட சமயத்தை பற்றிக் கதைக்கக் கூடாது என்று சொல்லி விடடேன் 

19 hours ago, பெருமாள் said:

மதம் மாத்த வெளிக்கிட்டு மதம் பிடிச்சு நிக்கணும் உண்மை தோழிக்கு  விளங்கிட்டுது .

நாமெல்லாம் யாரு எங்க கிட்டேயா ?
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஆரம்பத்தில் அவவும் சாடையாய் தொடங்கினவ☺️..இஞ்ச பாரு நான் என்ட மதத்தை பற்றிக் கதைக்கிறேனா அல்லது கோயிலுக்கு கூப்பிடுகிறேனா ...அதை மாதிரி நீயும் உன்ட சமயத்தை பற்றிக் கதைக்கக் கூடாது என்று சொல்லி விடடேன் 

நாமெல்லாம் யாரு எங்க கிட்டேயா ?
 
ரதி...  அவவை,  மீண்டும் கோயிலுக்கு வரச்  சொல்லி  கூப்பிட்டு  இருக்கலாமே....
ஏன்.. அந்தத், துணிவு... உங்களுக்கு வரவில்லையா?

சும்மா.. ரதியை, கடுப்பு ஏத்துவம்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அமெரிக்கர் செய்த மிகவும் விசமத்தனமான, அந்த தீவில் இருக்கும் முழுப் பழங்குடியினரையே அழிப்பதில் முடியக்கூடிய செயலை மறைப்பதற்கும், அவர் செய்ததாய் நியாயப்படுத்துவதற்கும், இரங்கல் தேடுவதன் மூலம் அவர் அந்த தீவீற்கு சென்றதன் உண்மையான நோக்கத்தை மறைப்பதத்திற்கான பிரச்சாரமே இது எல்லாம்.

அந்த தீவு பழங்குடியினரின் இயற்கை நீர்பீடனம் ஒருவருக்கும் தெரியாது. ஐந்த் பழங்குடியினர் சாதாரண மனிதர்களுடன் தொடர்பில் வரும் போது, சாதாரணமாக நகர வாழ்க்கையில் வரும் நோய்கள் அந்த பழங்குடியையே அழித்துவிடும் முப்பது இருக்கிறது.

வரலாற்றை பிநோக்கிப் பார்த்தல், இதை விட வளர்ச்சியடைந்த, வெளிஉலகோடு தொடர்பில்லாத குடிகள் இப்படியே ஆக்கிரமிப்பிடற்கு உட்படுத்தப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன.

இவர் மதஹம் பரப்பும் நோக்கத்தை, அதுவும் உலகில் இதை  விட எத்தனையோ இடங்கள் இருக்கும்போது, அந்தமான் தீவீற்கு சென்று மதம்  பரப்பும் பரந்த நோக்கத்தையும், உண்மையான  அப்படியே நம்பிவிடுவதத்திற்கு மற்றவர்கள் என்ன முட்டாள்களா?

ஏன், எப்படி கிந்தியா, தம்முடையவரிகளையே அந்த தீவீற்கு செல்வதற்கு மிகுந்த கட்டுப்பாடுகளை விதிக்கும் கிந்தியா, இந்த அமெரியருக்கு அனுமதி அளித்தது?

இவரின் இந்த தீவிற்றகாண பயணத்திடற்கும், சீன-ஹிந்தியை-அமெரிக்கா கடலாதிக்கப் போட்டிகளுக்கும் தொடர்புகள் இல்லை என்பதை ஹிந்தியா யாரின் தலையில் மிளகாய் அரைக்கிறது?

இவர் இப்போது பயணம் செய்வது, நீண்ட கால அடிப்படையில் அந்த தீவின் பழங்குடிகளை அழித்து, அமெரிக்கா-ஹிந்தியா ராணுவ-கடற்படை தலமாக மாற்றுவதன் ஆரம்ப, 'சமயத்தை பரப்புதல்' எனும் தங்கத்தேன் முலாம் பூசப்பட்ட அலரி  விதையாக கூட இருக்கலாம்.

அவர் இறந்தது மனித இயற்கை. எந்த இனமமும் தன்னை எவ்வாறேனும் பாதுகாத்து கொள்ளும்.

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kadancha said:

இவர் இப்போது பயணம் செய்வது, நீண்ட கால அடிப்படையில் அந்த தீவின் பழங்குடிகளை அழித்து, அமெரிக்கா-ஹிந்தியா ராணுவ-கடற்படை தலமாக மாற்றுவதன் ஆரம்ப, 'சமயத்தை பரப்புதல்' எனும் விசா முலாம் பூசப்பட்ட அலரி  விதையாக கூட இருக்கலாம்.

அது தான் உண்மை.வெகு விரைவில் கடற்படைத்தளமோவிமானப்படைத் தளமோ உருவாகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

அது தான் உண்மை.வெகு விரைவில் கடற்படைத்தளமோவிமானப்படைத் தளமோ உருவாகலாம்.

இறந்தது  அமெரிக்கர். தூக்கிப்பிடித்து இரங்கல் தேடுவது கிந்தியா. யாருக்கு இந்த பருப்பு வேகவைக்க வேண்டி இருக்கிறது? கிந்தியவிடற்கு தானே.

சில வேளைகளில் இந்த அமெரிக்கர் ஓர் பகடிகையாகவும் இருக்கலாம்.

அது மட்டுமன்று, கிந்தியா மூலப்பொருள்களை தேடிவருகிறது, சர்வதேச சந்தையில் விற்பதற்கு. இந்த தீவுப்பகுதிகளில் பல கனிம தாதுக்கள் இருப்பதாகவும் தகவல்கள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kadancha said:

இறந்தது  அமெரிக்கர். தூக்கிப்பிடித்து இரங்கல் தேடுவது கிந்தியா. யாருக்கு இந்த பருப்பு வேகவைக்க வேண்டி இருக்கிறது? கிந்தியவிடற்கு தானே.

இந்தியாவுக்கு சொந்தமான இடத்துக்கு களவாகப் போயிருக்கிறார்.இதனால் மூடிமறைக்க வேண்டியும் இருக்கலாம்.
இல்லாவிட்டால் இப்ப ஆளில்லைத் தானே என்று அப்படி கதை விடுகிறார்களோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தியாவுக்கு சொந்தமான இடத்துக்கு களவாகப் போயிருக்கிறார்.இதனால் மூடிமறைக்க வேண்டியும் இருக்கலாம்.
இல்லாவிட்டால் இப்ப ஆளில்லைத் தானே என்று அப்படி கதை விடுகிறார்களோ தெரியாது.

ஹிந்தியா மிகப் பெரிய கடல் ரேடார்  கடற்கண்காண்ணிப்பு ரேடார் வலையமைப்புயும், வான்வெளி கண்காணிப்பையும், கடற்படை கண்காணிப்பையும் வைத்துள்ளது.

இதையெல்லம் மீறி ஒருவர் சாதாரண படகில் நோர்த் சென்டினல் தீவை அடைந்தார், அதுவும் அனுமதி இன்றி, என்பது நம்பப்படக்கூடியதா?

ஆனால், 2018யிலேயே, சுற்றுலா துறையை வளர்ப்பது மற்றும் ஆய்வு எனும் போர்வையில் கிந்தியா இறுக்கமான பிடியை தள ர்த்தியது.

எங்கேயோ,எதுவோ, நோர்த் சென்டினல் தீவில் கண்வைத்து உதைத்து கொண்டிருக்கிறது.

In 2018, Government of India excluded 29 islands – including North Sentinel – from the Restricted Area Permit (RAP) regime, till 31 December 2022, in a major effort to boost tourism.[16] In November 2018, however, the government's Home ministry stated that the relaxation of the prohibition was intended only to allow researchers and anthropologists, with pre-approved clearance, to visit the Sentinel islands.

The Andaman and Nicobar Islands Protection of Aboriginal Tribes Act of 1956[11] prohibits travel to the island and any approach closer than five nautical miles in order to prevent the resident tribespeople from contracting diseases to which they have no immunity. The area is patrolled by the Indian navy.[12]

https://en.wikipedia.org/wiki/North_Sentinel_Island

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனுக்கும்  மனித மூழை உருவாக்கிய தொழில்நுபத்துக்கும்  இடையிலான போட்டியில் மனிதன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறான். அதுவும் தொழில் நுட்ப வளற்ச்சிக்கு அடிப்படையான ஒரு காரணமாக உள்ளது. அமரிக்காவினாலேயே  எல்லைகளை கண்காணிக்க முடியவில்லை. அமரிக்கா திகைக்க சீனா பசுபிக் சமுத்திரத்தி ஒரு தீவையே கட்டி எழுப்பி இருக்கு. இந்தியாவுக்கு எப்படி சாத்தியமாகும்? 

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவருக்கு அனுதாபங்கள்.

இந்தியா போன்ற ஊத்தை நாடுகள் இப்படி இவர்கள் நாகரீகமடையாத/வெளித்தொடர்பற்ற சமூகமாகவே வாழ வைக்க/இருக்க‌ விரும்புகின்றன. எனோன்றால் இவர்கள் நாளை படித்து ஒரு நாகரீகமடைந்த சமுகமாகமாறினால் தாங்கள் உரிமைகளை கேட்பார்கள். தனினாடு / எல்லைகள் அதிகாரங்களை கேட்பார்கள், இவைகள் இந்தியாவுக்கு பிடிக்குமா? இவர்கள் Andamanese / Nicabarise , இவர்களே இந்த மண்ணின் மைந்தர்கள்!

அந்தமான் / நிக்கோபர் தீவுகள் இந்தியாவுக்கு சொந்தமானதா? இது பப்புவா நிகினியா போன்றது. தனியான தீவுக்கூட்டம். இவைகள் எல்லாம் இந்தியாவால் பிடிக்கப்பட்டு சொந்தமக்கி கொள்ளப்பட்டவை. நல்லவேளை இலங்கை ஒரு நாகரீகமான சமுதயாமாக உள்ளது. இல்லாவிட்டால் எங்களையும் பிடித்து தாங்கள் நாட்டோடு ஒரு இணைத்திருப்பான்கள்.

மேலும் இந்த மனிதனை மதம் மாற்றுபவனாக பார்க்கவில்லை. அவன் தன்னுடையா விசுவாசத்தை / நம்பிக்கையை சொல்லவே சென்றான். அவனுக்கு இந்த உரிமையுள்ளது. இதேபோல் அதை கேட்பவர் அந்த சத்தியத்தை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது புறக்கணித்துவிட்டு செல்லலாம். ஆக கேட்பவர் / எற்றுக்கொள்பவரின் தனி முடிவே இவற்றை தீர்மனிக்கின்றது.

நாங்கள் நன்றாக வாழுவேம், நாகரீகமடைந்த நாடுகளிலே போய் குடியேறுவேம். நல்ல பழக்கவழக்கங்களை கற்போம். நல்ல மருத்துவ வசிதகளை இலவசமாக பெறுவோம் அனால் இந்தகய  மக்கள் காட்டுவாசிகளாகவே இருக்கட்டும்/வெளித்தொடர்பு அற்றவர்களாக/படிக்காதவனாக இருக்கட்டும்/மழைகுளிரில் வாழட்டும் எவனாவது போய் அவர்களை சந்திக்க முயற்சித்தால் அவன் மத மாற்றுக்காரன், பழங்குடிடினரை அழிக்க வந்தவன் என்று பட்டம்கொடுபோம்.

மனிதன் என்று தன்னை நேசிப்பதுபோல் அயலானையும் நேசிக்கின்றானோ அன்றே இந்த உலகம் சொர்க்கமாக மாறும்.

 My friend John, thank you for your sacrifice to reach the most unreached community in the word

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் அமெரிக்க கண்டத்திலும், அவுஸ்திரேலிய கண்டத்திலும் ஜரோப்பிய வெள்ளையர் புகுந்து, அங்கிருந்த செவ்விந்தியர் மற்றும் பூர்வகுடிகளிடையே தொடர்புற முணைந்து, அவர்கள் சந்தேகத்தில் தாக்கி கொல்ல, இவர்கள் அவர்களை பேரழிவுக்கு உட்படுத்தி நாடுகளை பிடுங்கிக் கொண்டார்கள். அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்க நாடுகள், கனடா, அவுஸ்திரேலியா, நீயுசீலாந்து உருவாகின.

இன்று மீண்டும் அந்தமானில் தொடங்கி உள்ளனர்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, colomban said:

அந்தமான் / நிக்கோபர் தீவுகள் இந்தியாவுக்கு சொந்தமானதா? இது பப்புவா நிகினியா போன்றது. தனியான தீவுக்கூட்டம். இவைகள் எல்லாம் இந்தியாவால் பிடிக்கப்பட்டு சொந்தமக்கி கொள்ளப்பட்டவை. நல்லவேளை இலங்கை ஒரு நாகரீகமான சமுதயாமாக உள்ளது. 

கொழும்பான், இது உங்கள் சொந்தக் கருத்தா அல்து வேறு எங்கிருந்தாவது உருவி.... இங்கே போட்டீர்களோ தெரியவில்லை. 

தவறான கருத்து. இந்தியா அல்ல, பிரிட்டிஸ்காரர்களால் பிடிக்கப்பட்டு, பிரிட்டிஸ்இந்தியாவின் கவர்னர் ஜெனரலால் நிர்வகிக்கப்பட்டு இந்தியா சுதந்திரம் அடைந்த போது சேர்ந்தே கொடுக்கப்பட்டது. 

இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் பலர் அந்தமான் தீவின் பாரிய சிறை கூடங்களில் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

அதற்கு அருகாமையில் இருந்த பிரிட்டிஸ் காலனி மலேசியா, இந்தியாவினதும் பார்க்க பத்தாண்டுகளுக்கு பின் தான் சுதந்திரம் பெற்றதால் அந்தமான் வாசிகள் இந்தியாவுடன் ஒட்டிக் கொண்டே சுதந்திரம் பெற விரும்பி இருக்கலாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

பிரிட்டிஸ்காரர்களால் பிடிக்கப்பட்டு, பிரிட்டிஸ்இந்தியாவின் கவர்னர் ஜெனரலால் நிர்வகிக்கப்பட்டு இந்தியா சுதந்திரம் அடைந்த போது சேர்ந்தே கொடுக்கப்பட்டது. 

இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் பலர் அந்தமான் தீவின் பாரிய சிறை கூடங்களில் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

அந்தமான் பிரித்தானிய கொலனி ஆக இருந்தது என்கிறீர்கள். இன்று அது இந்தியாவுக்கு சொந்தமாக உள்ளது.

3 hours ago, Nathamuni said:

இப்படித்தான் அமெரிக்க கண்டத்திலும், அவுஸ்திரேலிய கண்டத்திலும் ஜரோப்பிய வெள்ளையர் புகுந்து, அங்கிருந்த செவ்விந்தியர் மற்றும் பூர்வகுடிகளிடையே தொடர்புற முணைந்து, அவர்கள் சந்தேகத்தில் தாக்கி கொல்ல, இவர்கள் அவர்களை பேரழிவுக்கு உட்படுத்தி நாடுகளை பிடுங்கிக் கொண்டார்கள். அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்க நாடுகள், கனடா, அவுஸ்திரேலியா, நீயுசீலாந்து உருவாகின.

இன்று மீண்டும் அந்தமானில் தொடங்கி உள்ளனர்.

இனித்தானா அந்தமான் ஐரோப்பிய கொலனியாக போகிறது?  அல்லது இந்தியாவே இனித்தான் கொலனியாக போகிறது என்கிறீர்களா?  முன்னுக்கு பின் முரணாக கருத்து அமைந்து இருக்கிறதே?

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎1‎/‎2018 at 7:53 AM, colomban said:

இறந்தவருக்கு அனுதாபங்கள்.

இந்தியா போன்ற ஊத்தை நாடுகள் இப்படி இவர்கள் நாகரீகமடையாத/வெளித்தொடர்பற்ற சமூகமாகவே வாழ வைக்க/இருக்க‌ விரும்புகின்றன. எனோன்றால் இவர்கள் நாளை படித்து ஒரு நாகரீகமடைந்த சமுகமாகமாறினால் தாங்கள் உரிமைகளை கேட்பார்கள். தனினாடு / எல்லைகள் அதிகாரங்களை கேட்பார்கள், இவைகள் இந்தியாவுக்கு பிடிக்குமா? இவர்கள் Andamanese / Nicabarise , இவர்களே இந்த மண்ணின் மைந்தர்கள்!

அந்தமான் / நிக்கோபர் தீவுகள் இந்தியாவுக்கு சொந்தமானதா? இது பப்புவா நிகினியா போன்றது. தனியான தீவுக்கூட்டம். இவைகள் எல்லாம் இந்தியாவால் பிடிக்கப்பட்டு சொந்தமக்கி கொள்ளப்பட்டவை. நல்லவேளை இலங்கை ஒரு நாகரீகமான சமுதயாமாக உள்ளது. இல்லாவிட்டால் எங்களையும் பிடித்து தாங்கள் நாட்டோடு ஒரு இணைத்திருப்பான்கள்.

மேலும் இந்த மனிதனை மதம் மாற்றுபவனாக பார்க்கவில்லை. அவன் தன்னுடையா விசுவாசத்தை / நம்பிக்கையை சொல்லவே சென்றான். அவனுக்கு இந்த உரிமையுள்ளது. இதேபோல் அதை கேட்பவர் அந்த சத்தியத்தை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது புறக்கணித்துவிட்டு செல்லலாம். ஆக கேட்பவர் / எற்றுக்கொள்பவரின் தனி முடிவே இவற்றை தீர்மனிக்கின்றது.

நாங்கள் நன்றாக வாழுவேம், நாகரீகமடைந்த நாடுகளிலே போய் குடியேறுவேம். நல்ல பழக்கவழக்கங்களை கற்போம். நல்ல மருத்துவ வசிதகளை இலவசமாக பெறுவோம் அனால் இந்தகய  மக்கள் காட்டுவாசிகளாகவே இருக்கட்டும்/வெளித்தொடர்பு அற்றவர்களாக/படிக்காதவனாக இருக்கட்டும்/மழைகுளிரில் வாழட்டும் எவனாவது போய் அவர்களை சந்திக்க முயற்சித்தால் அவன் மத மாற்றுக்காரன், பழங்குடிடினரை அழிக்க வந்தவன் என்று பட்டம்கொடுபோம்.

மனிதன் என்று தன்னை நேசிப்பதுபோல் அயலானையும் நேசிக்கின்றானோ அன்றே இந்த உலகம் சொர்க்கமாக மாறும்.

 My friend John, thank you for your sacrifice to reach the most unreached community in the word

இந்த தீவில் ஏராளமான வளங்கள் இருப்பதாக மேலே கடஞ்சா எழுதியுள்ளார்....இந்தியா அந்த தீவை நாகரீகம் அடையாத தீவாக வைத்திருக்க விரும்புகின்றது என்று நீங்கள் எழுதுகிறீர்கள்...என்னுடைய கேள்வி என்னண்டால் அந்த வளங்களை பயன் படுத்தாமல் அந்த தீவு மக்களை அடிமையாய் வைத்திருப்பதால் இந்தியாவுக்கு என்ன லாபம்?...இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இப்பவும் அந்த வளங்களை எடுக்கும் உரிமை இந்தியர்களுக்கு உண்டு தானே!

நீங்களும் உந்த மதம் மாற்றும் குழுவை சார்ந்தவரோ?

On ‎11‎/‎30‎/‎2018 at 8:29 PM, தமிழ் சிறி said:

ரதி...  அவவை,  மீண்டும் கோயிலுக்கு வரச்  சொல்லி  கூப்பிட்டு  இருக்கலாமே....
ஏன்.. அந்தத், துணிவு... உங்களுக்கு வரவில்லையா?

சும்மா.. ரதியை, கடுப்பு ஏத்துவம்.  :grin:

இப்படியானவர்கள் ஒரு நிலையான மனம் கொண்டவர்கள் இல்லை...அதை விட என்ட கோயிலுக்கு வருந்தி அழைக்க வேண்டிய தேவையும் எனக்கில்லை  ?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Jude said:

அந்தமான் பிரித்தானிய கொலனி ஆக இருந்தது என்கிறீர்கள். இன்று அது இந்தியாவுக்கு சொந்தமாக உள்ளது.

இனித்தானா அந்தமான் ஐரோப்பிய கொலனியாக போகிறது?  அல்லது இந்தியாவே இனித்தான் கொலனியாக போகிறது என்கிறீர்களா?  முன்னுக்கு பின் முரணாக கருத்து அமைந்து இருக்கிறதே?

உங்கள் முதலாவது பதில் பதிவு; நான் சொல்ல வநததை முழுமையாக வாசிக்கவில்லை போல தெரிகிறது.இரண்டாவது பதில் பதிவுக்கான பதில் ரதியக்கா பதிவில் (கீழே) உள்ளதே, கவினித்தீர்களா?

3 hours ago, ரதி said:

இந்த தீவில் ஏராளமான வளங்கள் இருப்பதாக மேலே கடஞ்சா எழுதியுள்ளார்....இந்தியா அந்த தீவை நாகரீகம் அடையாத தீவாக வைத்திருக்க விரும்புகின்றது என்று நீங்கள் எழுதுகிறீர்கள்...என்னுடைய கேள்வி என்னண்டால் அந்த வளங்களை பயன் படுத்தாமல் அந்த தீவு மக்களை அடிமையாய் வைத்திருப்பதால் இந்தியாவுக்கு என்ன லாபம்?...இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இப்பவும் அந்த வளங்களை எடுக்கும் உரிமை இந்தியர்களுக்கு உண்டு தானே!

தேவையாயின், பிரித்தானியாவின் காலனியாக இருந்த டியாகோ கார்சியாவை, அங்கிருந்த மக்களை திரத்திவிட்டு அமெரிக்கா ‘குத்தகைக்கு’ எடுத்ததைப் போல, இந்தியாவின், டாலருக்கு பல்லிளிக்கும் அரசியல்வாதிகளிடம் இருந்து, அதற்கு தேவையில்லாத இந்த தீவை அமெரிக்கா ‘குத்தகைக்கு’ பெற முடியுமே. 

புரிகிறதா, எதற்காக உள்ளே அந்த அமெரிக்கர் உயிரை பணயம் வைத்து போக விளைந்தார் என?

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.