Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவுஸ்திரேலிய முருங்கைகாய்

Featured Replies

நான் போன கிழமை வழக்கம் போல வார இறுதியில் கண்டிப்பாக முருக்கங்காய் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று (நான் பாக்கியராஜ் ரசிகனாக்கும்) தமிழ் கடைகளுக்கு போய் பார்த்தால் அநேகமான கடைகளில் முருக்கங்காய் மெலிந்து போய் சதை கிதை ஒன்றும் இல்லாமல் கிடந்தன. இதை சாப்பிட்டால் முதலுக்கே மோசம் வந்து விடுமோ என்று யோசித்து கொண்டு கடைசியாக இன்னொரு தமிழ் கடைக்கு போய் பார்த்தேன்.

அங்கு மெலிந்து போய் கிடந்த முருங்கைகாய்கள் வைத்திருக்கும் கூடைக்கு அருகில் இன்னொரு கூடையில் நல்லா கொழுத்த ஹன்சிகா மாதிரி கொழுக் மொழுக் என்று இருந்த முருங்கைகாய்களை வைத்து இருந்தனர். இதென்னடாப்பா இப்படி கொழுத்து கிடக்குதே என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த கடையில் வேலை செய்யும் அக்காவிடம் "இது என்ன முருங்கைகாய்.. இப்படி கொழுத்து இருக்குதே" என்று கேட்டேன். அதற்கு அவா, 'இது அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த முருங்கைகாய்கள்... கொண்டு போய் சாப்பிட்டு பாருங்கள்.. நல்லா இருக்கும்' என்றார்.

48233967_10214571884704108_3148365492171833344_o.jpg

இது என்னடாப்பா புதுசா இருக்கு... அவுசில் இருந்து Lamb வரும், கங்காரு இறைச்சி வரும், சில நேரங்களில்  Cheese கூட வரும், ஆனால் முருங்கைக்காய் கூட வருமா என்று ஆச்சரியமாக இருந்தது. "உண்மையாகவா அக்கா.. இது அவுசில் இருந்து வந்ததா.." என மீண்டும் கேட்டேன். "ஓம் தம்பி.... இப்ப தமிழ் கடைகளுக்கு அவுசில் இருந்து முருங்கைகாய்கள் வருகுது..விலை கொஞ்சம் கூட..ஆனால் நல்லம்" என்று மீண்டும் நற்சான்றிதழ் கொடுத்தார்.

நானும் ஆறு டொலருக்கு ஒரு இறாத்தல் (1 lbs) வாங்கிக் கொண்டு வந்து சமைத்து சாப்பிட்டு பார்க்க, சுவை நல்லா இருந்தது. காய் நிறைய சதையும், கொஞ்சம் இறுகியும் (thicK ஆக) இருந்தது.  ஒட்டி மீன் கறிக்கு சரியான தோதாக இருந்தது. ஒரு பெரும் வெட்டு வெட்டினேன்.

 எனக்கு இது தொடர்பாக கொஞ்சம் விபரங்கள் வேண்டும். எப்ப இருந்து அவுசில் மற்ற நாடுகளுக்கும் அனுப்பக் கூடியவாறு முருங்கைகாய் பயிரிடத் தொடங்கிச்சினம்? இப்படி கொழுத்து போவதற்கு ஏதும் இரசாயன பசளைகள் போடுகின்றனரா? அல்லது இது ஒரு GMO உணவா (மரபணு மாற்றம் செய்த உணவா)?

அவுஸ் உறவுகள் அல்லது இது தொடர்பாக மேலும் விபரங்கள் தெரிந்தவர்கள் பதில் தாருங்கள். பதில் தருகின்றவர்களுக்கு பாக்கியராஜின் படங்களின் பாட்டு பரிசாக கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்க கேள்விய விடுங்க, வார இறுதி ஓகேயா🤥

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நந்தன் said:

உங்க கேள்விய விடுங்க, வார இறுதி ஓகேயா🤥

சனிக்கிழமை பிறந்தநாள் வந்தா சொல்லவா வேண்டும்.

நிழலி முருங்கக்காய் சாப்பிட்டாத் தான் சீ சீ வெட்கமாயிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, நிழலி said:

14 minutes ago, நந்தன் said:

உங்க கேள்விய விடுங்க, வார இறுதி ஓகேயா🤥

அதாகப்பட்டது, நந்தனார், நாசூக்காக கேட்பது என்னெவெனில், பாக்கியராஜ்  ரசிகனாகிய நிழலி, முருங்கை ஆய்வினை பிறகு பாருங்கோ.... இப்ப, முருங்கை சாப்பிட்ட  பலனை, வார இறுதியில் அடைந்தீர்களா என்பதை  சொல்லுங்கோ...

கெதியா பதிலை சொல்லுங்கோ.... நந்தனுக்கு வேலை கணக்க  இருக்கு. உங்கள் பதிலை வைத்தே அவிசில் இருந்து, புங்கையருக்கு போனைப் போட்டு முருக்கைகாய் இறக்க போகிறோம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அது மரபணு மாற்றபட்ட மரக்கறி வகை என்று ஒருவருடங்களுக்கு முன்பு நவம்பர் குளிர்கால நேரம்களில் அவுசில் இருந்து இறக்குமதியாகின்ற பொழுது  இங்குள்ள இங்கிலாந்து https://www.gov.uk/guidance/port-health-authorities-monitoring-of-food-imports உணவு அமைப்பு எரிக்க சொல்லி உத்தரவிட்டது காரணம் இறக்குங்க ஒவ்வொரு முருங்கைக்காயிலும் அது மரபணு மாற்றம் செய்யபட்ட உணவு என்று லேபில் ஓட்டனும் இறக்கியவர் நம்ம தமிழ் ஆள் வேண்டாம் சோலி என்று எரிப்பதுக்கு காசை கட்டி விட்டு வந்துவிட்டார் அதன் பின் அவுஸ் முருங்கைக்காய் இந்தபக்கம் தலை வைத்து படுப்பதில்லை .

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஒரு முருங்கைக்கையை உங்கள் போர்ட் கெல்த் ஆட்களுக்கு அனுப்பி விட விலாவாரியாக ஆராய்ந்து மெயில் அனுப்புவார்கள் அநேகமாக இலவச சேவையாக இருக்கும் .

Bacillus thuringiensis ஒருவகை கிருமி இயற்கை கொள்ளி பொதுவாக பயிர்களை தாக்கும் பூச்சிகளுக்கு இயற்க்கை அமைத்த வில்லன் மனிச மூளை வேறுவிதமாக சிந்திக்கும் Bacillusலிருந்து குறிப்பிட்ட மரபணுவை விதைகளில் கலந்துவிட அன்று தொடங்கியது தலையிடி  அப்படியான உணவுகள் உணவுகால்வாயில் புற்று நோயை கொண்டு வருது என்று ஒரு பகுதி  கொடிகட்ட அமெரிக்காவின் மான்செண்டோ போன்ற விதை கொம்பனிகள் இல்லை என்று வாதிட கொள்ளுபாடு தொடர்கிறது இங்கு இங்கிலாந்து சட்டம்கள் நஞ்சை நஞ்சென்று எழுதி வித்தால் விக்கலாம்  gmo மரக்கறி வகைகள் பைக்கட்டில் ஒரு மூலையில் சிறிய எழுத்துகளில் இது gmo உணவு என்று பிரிண்ட் பண்ணி வியாபாரம் செய்யலாம்  .

gmo பயிர்கள் இயற்க்கை சுற்று வட்டத்தை பாதிக்கும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது அதனால் மூன்றாம் உலகநாடுகளை நோக்கி வலுக்கட்டாயமாக தள்ளி விடுகிறார்கள் சொல்லப்படும் காரணம் பாரிய விளைச்சல் .

ஆதாரம் வேண்டுவோர் .

https://www.bbcgoodfood.com/howto/guide/what-gmo-food

http://www.marklynas.org/2013/04/time-to-call-out-the-anti-gmo-conspiracy-theory/

https://thetruthaboutcancer.com/dangers-gmo-foods/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

வருத்தம் வரேக்க கோவிலில நேர்த்தி வைக்க தெரியும்...

அரசு தடை செய்த கறிவேப்பிலையை ஏன் விற்கிறீர்கள் என்று மறு  கேள்வி கேட்க மாட்டோம்.

அதுதான்  நாம்...😕

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

வருத்தம் வரேக்க கோவிலில நேர்த்தி வைக்க தெரியும்...

அரசு தடை செய்த கறிவேப்பிலையை ஏன் விற்கிறீர்கள் என்று மறு  கேள்வி கேட்க மாட்டோம்.

அதுதான்  நாம்...😕

அப்படி தடை வந்ததும் நல்லதாய் போயிட்டுது ஊர் போய் வருகிறவர்கள் வீடுகளில் பெருகிக்கொண்டு நிக்கும் ஓர்கானிக் கருவேப்பிலையை கொண்டு வந்து ரிக்கெட் காசை கவர் பண்ணினம் அவர்கள் அறியாமல் செய்கிற உதவி கெமிக்கல் இல்லாத கறிவேப்பிலை கடைகளில் ஒரு பக்கம் நன்மைதானே நாதமுனி .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

அப்படி தடை வந்ததும் நல்லதாய் போயிட்டுது ஊர் போய் வருகிறவர்கள் வீடுகளில் பெருகிக்கொண்டு நிக்கும் ஓர்கானிக் கருவேப்பிலையை கொண்டு வந்து ரிக்கெட் காசை கவர் பண்ணினம் அவர்கள் அறியாமல் செய்கிற உதவி கெமிக்கல் இல்லாத கறிவேப்பிலை கடைகளில் ஒரு பக்கம் நன்மைதானே நாதமுனி .

உண்மையிலே, இந்தியாவில் இருந்து வந்த கறிவேல்பிள்ளை பிரெஷ் ஆக இருக்க வேணும் என ஸ்பிரேய அடித்து இருக்கிறார்கள். அது பிடி பட்டதால்  தடை.

தடையால் விலை உயர்ந்தது.

விலையை குறைக்க விரும்பாத சப்ளை ஆக்கள், தடை இருப்பதாக சொல்லிக் கொண்டே, கூட விலைக்கு விக்கினம்.

தடை இருந் தும் வித்தால் , பைன் கட்டவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

தடை இருந் தும் வித்தால் , பைன் கட்டவேண்டும். 

என்ன செய்வது எங்களின் அசண்டையீனம் கடைசியில் எங்கள் தலை மீது வருத்தமாக இறங்குகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நந்தன் said:

உங்க கேள்விய விடுங்க, வார இறுதி ஓகேயா🤥

இந்தாள் ஏதோ பிஸ்கட் சாப்பிட்ட மாதிரி கேட்குது  (எனக்கும் கேட்டு சொல்லவும் ):27_sunglasses:

நிழலி, அவுஸ்திரேலியா பல்வேறு காலநிலைகளைக் கொண்ட பரந்த ஒரு தேசம். இலங்கையை போன்ற நாடுகளில் நிலவும் உஷ்ண வலய (tropical) காலநிலை அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதிகளில் குறிப்பாக குயின்லண்ட் (Queensland) மாநிலத்தில் நிலவுகிறது. இங்கு தான் அனேகமான உஷ்ண தேச பழ வகைகள் மரக்கறிகள் பயிரிடப்படுகின்றன. முருங்கை மட்டுமல்ல பலாப்பழம், வாழைப்பழம், மாம்பழம் ஆகியவையும் இங்கிருந்து கிடைக்கும்.

குயின்லண்ட்ல் நம்மவர்களில் ஒருவர் பக்கத்து வீட்டு வெள்ளை இனத்தவர் வீட்டு மரத்து முருங்கைக் காய்களை பெற்று சமைத்ததாகவும், அந்த வெள்ளையர் அதைப் பற்றி ஆவலுடன் கேட்டறிந்து தமக்கும் சமைத்து தரக் கேட்டதாகவும் அறிந்துள்ளேன்.   முருங்கை மரம் அவுஸ்திரேலியாவில் பூர்வீக காலம் தொட்டே உள்ளதா என எனக்குத் தெரியவில்லை. இது பற்றி நானும் முன்பு பலரிடம் கேட்டுள்ளேன். ஒருவருக்கும் தெரியவில்லை. இவ்வாறு நமது பழக்கவழக்கங்களுடன் தொடர்புடைய ஆராய்ந்து பார்க்க வேண்டிய சுவாரசியமான விடயங்கள் அவுஸ்திரேலியாவில் பல உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே புங்கையூரானைக் காணவில்லை. அவர் பின்  வளவில் முருங்கை வளர்க்கிறார்.  அவர்தான் கனடாவுக்கு ஏற்றுமதி செய்கிறாரோ ????😀

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மல்லிகை வாசம் said:

வடமாநிலத்தில்...டார்வின்...கதரின் போன்ற இடங்களில்..காடுகளில் முருங்கை மரங்கள் வளர்கின்றன! எனவே இயற்கையாக வளருகின்றன என்றே நினைக்கிறேன்! உள்ளூர் வாசிகள் ...இவற்றைச் சாப்பிடுவதில்லைப் போல உள்ளது! ஆனால்..ஐரோப்பியர் முருங்கைக் காய்களைக் குதிரைகளுக்கு உணவாகக் கொடுப்பார்கள்! மேற்கு ஆபிரிக்காவில்....முருங்கைக் காய் மரங்கள் உண்டு! எனினும் ....அங்குள்ளவர்கள்...அதனைப் பேய் பிசாசுகளுடன் தொடர்பு படுத்தியிருப்பதால்...அவர்கள்....முருங்கைக் காய் சாப்பிடுவதில்லை! நாங்கள்...இருந்த காலத்தில்...உயிரியல் படிப்பிப்பவர்களிடம் கெஞ்சி....பிரக்டிகல் செய்யத் தேவை...என்று மாணவர்களிடம் கூறி....முருங்கைக்காயைப் பெற்றுக்கொள்வதுண்டு!

அதேபோலத் தான்....பலாப்பழங்களும்...மல்லிகை வாசம் கூறியது போல...குயின்ஸ்லாந்து பகுதிகளில்....மரங்களில்..பழுத்து...வெடித்த படியே கிடக்கும்! ஒருவரும்...கண்டு கொள்வதில்லை!

12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எங்கே புங்கையூரானைக் காணவில்லை. அவர் பின்  வளவில் முருங்கை வளர்க்கிறார்.  அவர்தான் கனடாவுக்கு ஏற்றுமதி செய்கிறாரோ ????😀

சுமே,  சிட்னியில்...முருங்கை மரங்கள் வளரும் எனினும்....குயின்ஸ்லாந்து..அல்லது வட மாநிலங்களில் வளர்வது போல...அடர்த்தியாகவும்...உயரமாகவும் வளர்வதில்லை! வீட்டில் நிற்கும் முருங்கையில்...ஒரு மூன்று நான்கு மாதங்களுக்குக் காய்கள் பிடுங்கக் கூடியதாக இருக்கும்! ஆனால்...நிறைய இலைகள் கிடைக்கும்! வறுக்கலாம்!

தென் மாநிலம், மேற்கு அவுஸ்திரேலியா போன்ற இடங்களிலும்...முருங்கை, பலா, புளி போன்ற மரங்கள் அதிகமாக வளரும்!

கள உறவு...உடையார் காரை இடையில் நிறுத்திவிட்டு...புளியங்காய் பொறுக்கும் வழக்கம் உள்ளவர் என்று ஒரு முறை அவர் எழுதிய நினைவு உண்டு!

  • தொடங்கியவர்
On ‎12‎/‎16‎/‎2018 at 11:12 AM, நந்தன் said:

உங்க கேள்விய விடுங்க, வார இறுதி ஓகேயா🤥

ஓமோம்.. வழக்கம் போல ஒகே தான்

On ‎12‎/‎16‎/‎2018 at 11:21 AM, ஈழப்பிரியன் said:

.

நிழலி முருங்கக்காய் சாப்பிட்டாத் தான் சீ சீ வெட்கமாயிருக்கு.

அண்ணை.... அடிக்கிற குளிரில மனுசருக்கு ...

On ‎12‎/‎16‎/‎2018 at 11:24 AM, Nathamuni said:

அதாகப்பட்டது, நந்தனார், நாசூக்காக கேட்பது என்னெவெனில், பாக்கியராஜ்  ரசிகனாகிய நிழலி, முருங்கை ஆய்வினை பிறகு பாருங்கோ.... இப்ப, முருங்கை சாப்பிட்ட  பலனை, வார இறுதியில் அடைந்தீர்களா என்பதை  சொல்லுங்கோ...

கெதியா பதிலை சொல்லுங்கோ.... நந்தனுக்கு வேலை கணக்க  இருக்கு. உங்கள் பதிலை வைத்தே அவிசில் இருந்து, புங்கையருக்கு போனைப் போட்டு முருக்கைகாய் இறக்க போகிறோம்.

தாராளமாக ஒரு மூட்டையே இறக்குமதி செய்யலாம்...

On ‎12‎/‎16‎/‎2018 at 12:10 PM, பெருமாள் said:

அது மரபணு மாற்றபட்ட மரக்கறி வகை என்று ஒருவருடங்களுக்கு முன்பு நவம்பர் குளிர்கால நேரம்களில் அவுசில் இருந்து இறக்குமதியாகின்ற பொழுது  இங்குள்ள இங்கிலாந்து https://www.gov.uk/guidance/port-health-authorities-monitoring-of-food-imports உணவு அமைப்பு எரிக்க சொல்லி உத்தரவிட்டது காரணம் இறக்குங்க ஒவ்வொரு முருங்கைக்காயிலும் அது மரபணு மாற்றம் செய்யபட்ட உணவு என்று லேபில் ஓட்டனும் இறக்கியவர் நம்ம தமிழ் ஆள் வேண்டாம் சோலி என்று எரிப்பதுக்கு காசை கட்டி விட்டு வந்துவிட்டார் அதன் பின் அவுஸ் முருங்கைக்காய் இந்தபக்கம் தலை வைத்து படுப்பதில்லை .

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஒரு முருங்கைக்கையை உங்கள் போர்ட் கெல்த் ஆட்களுக்கு அனுப்பி விட விலாவாரியாக ஆராய்ந்து மெயில் அனுப்புவார்கள் அநேகமாக இலவச சேவையாக இருக்கும் .

Bacillus thuringiensis ஒருவகை கிருமி இயற்கை கொள்ளி பொதுவாக பயிர்களை தாக்கும் பூச்சிகளுக்கு இயற்க்கை அமைத்த வில்லன் மனிச மூளை வேறுவிதமாக சிந்திக்கும் Bacillusலிருந்து குறிப்பிட்ட மரபணுவை விதைகளில் கலந்துவிட அன்று தொடங்கியது தலையிடி  அப்படியான உணவுகள் உணவுகால்வாயில் புற்று நோயை கொண்டு வருது என்று ஒரு பகுதி  கொடிகட்ட அமெரிக்காவின் மான்செண்டோ போன்ற விதை கொம்பனிகள் இல்லை என்று வாதிட கொள்ளுபாடு தொடர்கிறது இங்கு இங்கிலாந்து சட்டம்கள் நஞ்சை நஞ்சென்று எழுதி வித்தால் விக்கலாம்  gmo மரக்கறி வகைகள் பைக்கட்டில் ஒரு மூலையில் சிறிய எழுத்துகளில் இது gmo உணவு என்று பிரிண்ட் பண்ணி வியாபாரம் செய்யலாம்  .

gmo பயிர்கள் இயற்க்கை சுற்று வட்டத்தை பாதிக்கும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது அதனால் மூன்றாம் உலகநாடுகளை நோக்கி வலுக்கட்டாயமாக தள்ளி விடுகிறார்கள் சொல்லப்படும் காரணம் பாரிய விளைச்சல் .

ஆதாரம் வேண்டுவோர் .

https://www.bbcgoodfood.com/howto/guide/what-gmo-food

http://www.marklynas.org/2013/04/time-to-call-out-the-anti-gmo-conspiracy-theory/

https://thetruthaboutcancer.com/dangers-gmo-foods/

தகவலுக்கு நன்றி பெருமாள். GMO என்ன விதத்தில் மனித உடலை பாதிக்கும் என்று தெரியுமா?

  • தொடங்கியவர்
25 minutes ago, புங்கையூரன் said:

வடமாநிலத்தில்...டார்வின்...கதரின் போன்ற இடங்களில்..காடுகளில் முருங்கை மரங்கள் வளர்கின்றன! எனவே இயற்கையாக வளருகின்றன என்றே நினைக்கிறேன்! உள்ளூர் வாசிகள் ...இவற்றைச் சாப்பிடுவதில்லைப் போல உள்ளது! ஆனால்..ஐரோப்பியர் முருங்கைக் காய்களைக் குதிரைகளுக்கு உணவாகக் கொடுப்பார்கள்! மேற்கு ஆபிரிக்காவில்....முருங்கைக் காய் மரங்கள் உண்டு! எனினும் ....அங்குள்ளவர்கள்...அதனைப் பேய் பிசாசுகளுடன் தொடர்பு படுத்தியிருப்பதால்...அவர்கள்....முருங்கைக் காய் சாப்பிடுவதில்லை! நாங்கள்...இருந்த காலத்தில்...உயிரியல் படிப்பிப்பவர்களிடம் கெஞ்சி....பிரக்டிகல் செய்யத் தேவை...என்று மாணவர்களிடம் கூறி....முருங்கைக்காயைப் பெற்றுக்கொள்வதுண்டு!

அதேபோலத் தான்....பலாப்பழங்களும்...மல்லிகை வாசம் கூறியது போல...குயின்ஸ்லாந்து பகுதிகளில்....மரங்களில்..பழுத்து...வெடித்த படியே கிடக்கும்! ஒருவரும்...கண்டு கொள்வதில்லை!

சுமே,  சிட்னியில்...முருங்கை மரங்கள் வளரும் எனினும்....குயின்ஸ்லாந்து..அல்லது வட மாநிலங்களில் வளர்வது போல...அடர்த்தியாகவும்...உயரமாகவும் வளர்வதில்லை! வீட்டில் நிற்கும் முருங்கையில்...ஒரு மூன்று நான்கு மாதங்களுக்குக் காய்கள் பிடுங்கக் கூடியதாக இருக்கும்! ஆனால்...நிறைய இலைகள் கிடைக்கும்! வறுக்கலாம்!

தென் மாநிலம், மேற்கு அவுஸ்திரேலியா போன்ற இடங்களிலும்...முருங்கை, பலா, புளி போன்ற மரங்கள் அதிகமாக வளரும்!

கள உறவு...உடையார் காரை இடையில் நிறுத்திவிட்டு...புளியங்காய் பொறுக்கும் வழக்கம் உள்ளவர் என்று ஒரு முறை அவர் எழுதிய நினைவு உண்டு!

புங்கைக்கும் மல்லிகைவாசத்துக்கும் நன்றி.

இயற்கையாக வளரும் மரத்தின் விளைச்சலை அந்த நாட்டு மக்கள் அவ்வளவாக பயன்படுத்தா விடின் மினக்கெட்டு மரபணு மாற்றம் செய்து விளைச்சலை கூட்ட அவசியம் இருக்காது என்று நினைக்கின்றேன். இங்கும் ஒரு சில தமிழ் கடைகளில் தான் இவற்றை விற்கின்றனர். அதிகமாக இறக்குமதி ஆவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எங்கே புங்கையூரானைக் காணவில்லை. அவர் பின்  வளவில் முருங்கை வளர்க்கிறார்.  அவர்தான் கனடாவுக்கு ஏற்றுமதி செய்கிறாரோ ????😀

 கேக்கிறனெண்டு கோவிக்கக்கூடாது...... வாழை கருவேப்பிலை எண்டு மினைக்கடுற நீங்கள் முருங்கை மரமும் நட்டு பலன் பெறலாம் தானே? :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, புங்கையூரன் said:

மேற்கு ஆபிரிக்காவில்....முருங்கைக் காய் மரங்கள் உண்டு! எனினும் ....அங்குள்ளவர்கள்...அதனைப் பேய் பிசாசுகளுடன் தொடர்பு படுத்தியிருப்பதால்...அவர்கள்....முருங்கைக் காய் சாப்பிடுவதில்லை!

ஆபிரிக்காக்காரன் தான் முருங்கைக்காய் சாப்பிட்டால் பேய் புடிக்கும் எண்டதை சரியாய் கணிச்சு சொல்லியிருக்கிறான் :grin:

  • கருத்துக்கள உறவுகள்

பசிபிக் சமுத்திர, அமெரிக்க தீவான ஹவாஜில், பெருமளவில் முருங்கை மரங்கள் இருப்பதாகவும், முருங்கைக்காய்கள், பறிப்பார்  இன்றி, வெடித்து சிதறி, அந்த விதைகள் பரவி, தீவு முழுவதும் முருங்கை மரங்களாக இருக்கின்றன என்று, ஹவாய் இறைவன் கோவில் இருந்து வரும் hindism today பத்திரிகையில் வாசித்திருக்கிறேன். இறைவன் கோவில், நம்ம ஊர் யோகர் சுவாமிகளிடம் தீட்ஸை பெற்ற வெள்ளை, சுப்ரமணிய சுவாமிகளினால் உருவானது.

கோவில் சமையலுக்கு முருங்கைக்காய் பயன்படுத்திக்கினமாம். 

Kauai's Hindu Monastery - Saiva Siddhanta Headquarters

https://www.himalayanacademy.com/

https://www.himalayanacademy.com/monastery/lineage-philosophy/gurudeva

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Nathamuni said:

நாதம், ஹவாய் தீவுக் கோவிலில் இன்னுமொரு விசேடமும் உள்ளது!

உலகத்திலயே அதிகமான உருத்திராட்சை மரங்கள்...இங்கு தான் வளருகின்றன!

இவையும்...சிவன் கோவில் வந்த பிறகு..அந்தத் தீவுக்கு அறிமுகப்படுத்தப் பட்டவை!

ஒரு வேளை....சுப்பிரமணிய சுவாமிகள் தான்....அறிமுகப் படுத்தினாரோ தெரியாது!

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க வாழைபழ கொள்ளையர்களால் கபளீகரம் செய்யபட்ட பூமி  பணமாவுக்கு மேல் உள்ளது Costa Rica எனும் நாடு அங்கும் நாதமுனி சொன்னது போல் முருங்கை இலை க்காக முதலில் இந்தியர்கள் பயிர் செய்து இப்போ தேசம் முழுக்க பரவி உள்ளதாய் கேள்வி இந்த புலம்பெயர்ச்சி வீட்டு கொல்லையில் நின்ற முருங்கை மரத்தையும் புலம் பெயர செய்து விட்டம் .

Costa Rica  முருங்கையிலை தான் டொராண்டோ வுக்கு ஏற்றுமதி ஆகின்றது காரணம் மிக குறைந்த பிரயாண நேரம் .

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

அமெரிக்க வாழைபழ கொள்ளையர்களால் கபளீகரம் செய்யபட்ட பூமி  பணமாவுக்கு மேல் உள்ளது Costa Rica எனும் நாடு அங்கும் நாதமுனி சொன்னது போல் முருங்கை இலை க்காக முதலில் இந்தியர்கள் பயிர் செய்து இப்போ தேசம் முழுக்க பரவி உள்ளதாய் கேள்வி இந்த புலம்பெயர்ச்சி வீட்டு கொல்லையில் நின்ற முருங்கை மரத்தையும் புலம் பெயர செய்து விட்டம் .

Dominican Republic  என்ற நாட்டில், கனடா, சுவிஸ் எங்கண்ட ஆக்கள், காணியல் வாங்கி, மரக்கறி தோட்டங்கள் செய்து, உங்க ஐரோப்பாவுக்கும்,  கனடாவுக்கும் அனுப்புகினம்...

அங்க வைப்பு, செப்பு எல்லாம் வைச்சு இருக்கினம் என்று முன்னம் ஒரு திரியில யாரோ பதிஞ்சவயல்.

வசதி என்ன எண்டால், இந்தியா, இலங்கையில் இருந்து சரக்கு செலவு, $3/kg  எண்டால் DR இல் இருந்து $1 தானாம்.

அதே போல ஐரோப்பாவுக்கு பக்கத்தில் கானா நாட்டில், மரக்கறி தோட்டங்கள் வைத்திருக்கும் இரு VVT ஆட்களுக்கு, அந்நாட்டு விருது கிடைத்ததாக யாரோ பதிந்தார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

Dominican Republic  என்ற நாட்டில், கனடா, சுவிஸ் எங்கண்ட ஆக்கள், காணியில் வாங்கி, மரக்கறி தோட்டங்கள் செய்து, உங்க ஐரோப்பாவுக்கும்,  கனடாவுக்கும் அனுப்புகினம்...

அங்க வைப்பு, செப்பு எல்லாம் வைச்சு இருக்கினம் என்று முன்னம் ஒரு திரியில யாரோ பதிஞ்சவயல்.

வசதி என்ன எண்டால், இந்தியா, இலங்கையில் இருந்து சரக்கு செலவு, $3/kg  எண்டால் DR இல் இருந்து $1 தானாம்.

கனடாவில் இருந்து வந்தவர் அங்குள்ள லோக்கல் தேர்தலில் நின்று வென்றும் உள்ளார் நாதமுனி .

கொழும்பு கத்தரிக்காயின் பிறப்பிடம் அதுதான் Dominican Republic.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, புங்கையூரன் said:

நாதம், ஹவாய் தீவுக் கோவிலில் இன்னுமொரு விசேடமும் உள்ளது!

உலகத்திலயே அதிகமான உருத்திராட்சை மரங்கள்...இங்கு தான் வளருகின்றன!

இவையும்...சிவன் கோவில் வந்த பிறகு..அந்தத் தீவுக்கு அறிமுகப்படுத்தப் பட்டவை!

ஒரு வேளை....சுப்பிரமணிய சுவாமிகள் தான்....அறிமுகப் படுத்தினாரோ தெரியாது!

அரோகரா......

  • கருத்துக்கள உறவுகள்

GMO உணவுகள் மனிதனுக்குத் தீங்கு விளைவிப்பதாக நடு நிலையான ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப் படவில்லை.  ஆனால், இணையக் குப்பையைக் கிளறினால் Institute for Responsible Technology (IRT) எனும் ஒரு அமைப்பு மூலம், GMO உணவுகள் புற்று நோய் முதற் கொண்டு எல்லா நோய்களையும் தரும் என்று  நிரூபிக்கும் ஆய்வுகள் பல காணக் கிடைக்கலாம். ஆனால் இந்த ஆய்வை வேறெந்த ஆய்வு கூடங்களும் பல நூறு தடவைகள் செய்து பார்த்தும் IRT கண்ட முடிவுகளை மீளக் கண்டு பிடிக்க முடியவில்லை! இதனால் இந்த அமைப்பின் ஆய்வு முடிவுகள் நம்பகமற்ற பிதற்றல்கள் என்பது பரவலான அபிப்பிராயம். 

மேலே நிழலி குறிப்பிட்ட அவுஸ் முருங்கைக் காய் முதல் பல உணவுத் தாவரங்கள் பூச்சிகள் பீடைகளிடமிருந்து காப்பதற்காக Bacillus thuringiensis (Bt) எனும் ஒரு நுண்ணுயுரின் ஜீன் ஒன்றை உள்ளடக்கியிருக்கக் கூடும். இதனால் இது GMO உணவாக இருக்கலாம். ஆனால் அது முருங்கை மரத்திற்கு பூச்சி பீடைகளிடமிருந்து பாதுகாப்பளிக்கும் ஒரு ஏற்பாடு மட்டுமே!. இந்த நுண்ணுயிர் சில பூச்சி இனங்களை மட்டுமே பாதிக்கும் ஒன்று, மேலும் அந்த நுண்ணுயிர் அல்லாமல் அதன் ஒரு ஜீன் மட்டுமே முருங்கையில் உள்ளடக்கப் பட்டிருப்பதால் சாப்பிடுபவருக்கு ஒரு தீமையும் இல்லை! இந்த பக்ரீறியாவை ஒரு திரவ வடிவில் கடையில் விற்கிறார்கள். வாங்கி கோடை காலத்தில் மரத்தில் விசிறி விட்டால், மயிர்க்கொட்டிகளை உருவாக்கும் பூச்சிகள் அண்டாமல் காக்கலாம்! பக்ரீறியாவை நீங்கள் குடித்தால் கூட உங்களுக்கு எதுவும் ஆகாது (அதற்காக குடித்து விட வேண்டாம்!)

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

ஜஸ்டின்....மீண்டும் கண்டது மிக்க மகிழ்ச்சி...!

எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.