Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே நேர்க்கோட்டில்... அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தà¯à®°à¯à®à¯à®à®°à¯à®à¯ நிலà¯:

இந்தியா முழுதும், ஒரே நேர்க்கோட்டில்... அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்!

சிலர் இதை அறிதிருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்து ஆன்மீக விஷயமாகும்.

எந்தவொரு அறிவியல் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும், இந்தியாவில் ஒரே நேர்கோட்டில் கட்டப்பட்டிருக்கின்றன.

மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் இதை எளிதாக எதிர்பாராமல் நடந்த விஷயமாக கருத முடியாது.

கேதார்நாத்லிருந்து, ராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் கோவில்களை எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள் என்பது இன்றளவும் நீடிக்கும் மர்மமாகவே இருந்து வருகிறது.

பஞ்சபூத ஸ்தலம்:

நிலம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

நெருப்பு - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

நீர் - திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில்

ஆகாயம் - சிதம்பரம் நடராசர் கோயில்

காற்று - திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்

ஆயிரம் ஆண்டுகள் பழைமை: சிவனின் இந்த பஞ்சபூத ஸ்தலங்களும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவில்கள் ஆகும். அப்போது, எந்தவொரு தானியங்கி அல்லது செயற்கைக்கோள் உதவிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேதார்நாத்: இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் மட்டுமின்றி இமாலயத்தில் இருக்கும் கேதார்நாத்தும் கூட இதே நேர்கோட்டிலான தீர்க்கரேகையில் (longitude ) அமைந்திருப்பது வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.

ஆயிரம் மைல்கள்: கேதார்நாத்திலிருந்து இராமேஸ்வரம் வரை இடைப்பட்ட தொலைவு ஏறத்தாழ 2383 கிலோமீட்டர்கள் ஆகும். இவ்வளவு இடைப்பட்ட தூரத்தில் இடையிடையே அமைந்திருக்கும் இந்த சிவாலயங்கள் ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருப்பது மர்மம் விலகாமலேயே நீடித்து வருகிறது.

தீர்க்கரேகை நிலை:

1) கேதார்நாத் - கேதார்நாத் கோயில் (30.7352° N, 79.0669)

2) காலேஷ்வரம் - காலேஷ்வரா முக்தீஷ்வரா சுவாமி கோயில் (18.8110, 79.9067)

3) ஸ்ரீ காலஹஸ்தி - ஸ்ரீ காலஹஸ்தி கோயில் (13.749802, 79.698410)

4) காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் கோயில் (12.847604, 79.699798)

5) திருவானைக்காவல் - ஜம்புகேஸ்வரர் கோயில் (10.853383, 78.705455)

6) திருவண்ணாமலை - அண்ணாமலையார் கோயில் (12.231942, 79.067694)

7) சிதம்பரம் - நடராஜர் கோவிலில் (11.399596, 79.693559)

😎 ராமேஸ்வரம் - ராமநாத கோயில் (9.2881, 79.3174)

கேதார்நாத் முதல் காலேஷ்வரம் வரை இடையே இன்னும் பல சிவாலயங்கள் இதே நேர்கோட்டில் தீர்க்கரேகையில் அமைந்திருக்கலாம் எனவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

Read more at: https://tamil.boldsky.com/insync/pulse/2016/kedarnath-rameswaram-ancient-siva-temples-on-straight-line/articlecontent-pf69355-011892.html

  • கருத்துக்கள உறவுகள்

சூரியன் பூமிய சுத்தல பூமி தான் சூரியன சுத்துது...

எப்படி கண்டு பிடிச்சோம் பாத்திங்களா...

முட்டா பய...

முடியுமா நம்ம கிட்ட, ஊருக்குள்ள நாங்களே பல பேருக்கு யோசன சொல்றவங்க... யாருகிட்ட...

சுவாரஸ்யமான தகவல். விண்ணியலும் கணிதவியலும் கொண்டு இவ்வாறாக ஆலயங்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிர்மாணித்துள்ளமை பெருமை.கலந்த வியப்பு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம் எல்லாம் கிட்டத்தட்ட நேர் கோட்டுக்கு வருமெல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்

நகுலேஸ்வரம், கேதீச்சரம், முன்னேஸ்வரம் கிட்டதட்ட நேர்கோடு தானே?

22 minutes ago, ஏராளன் said:

நகுலேஸ்வரம், கேதீச்சரம், முன்னேஸ்வரம் கிட்டதட்ட நேர்கோடு தானே?

இம் மூன்று தலங்களின் தீர்க்காம்சமும் 79 க்கும 80 க்கும் இடையில்தான் வருகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

அதே கோட்டை அப்பிடியே மேல நீட்டினா இமயமலையிலை இருக்கிற கைலாசத்தை தொடும். சைவர்களின் நம்பிக்கையின்படி கைலாசமலை  முக்கியமானதாகும். இங்குதான் சிவன்  தோன்றியதாக  சைவசமயத்தவர்கள் நம்புகிறார்கள். மேலும் ஆராய்ந்து பார்த்தால் கோட்டின் தெற்கு திசையில் தான் பண்டைய காலத்தின் குமரிக்கண்டம் இருந்தது. அங்கும் பல சிவாலயங்கள் அதே கோட்டில் அமையுமாறு கட்டப்பட்டு பின்னர் அழிந்திருக்கலாம். இன்று கைலாச மலை சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள திபேத் நாட்டின் எல்லைக்குள் இருக்கிறது. அது இந்தியாவில் உள்ளதாக பலர் நம்புவது தவறு.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vanangaamudi said:

 இங்குதான் சிவன்  தோன்றியதாக  சைவசமயத்தவர்கள் நம்புகிறார்கள். 

??

சிவலோகத்தில் இருந்து பிரபஞ்சத்தில் உள்ள அணைத்து உயிர்களுக்கும் அருள் புரியும் சிவபெருமானும் பார்வதி தேவியும் இவுலகத்தின் மிக உயர்ந்த மலையாகிய கைலாய மலையில் வீ ற்றிருந்தே பூலோகத்தில் வாழும் எமக்கும் ஏனைய உயிர்களுக்கும் அருள் புரிவதாக புராணங்கள் கூறுகின்றன. சிவனுக்கு தொண்டாற்றும், சிவகணங்களும், முனிவர்களும், சிவலோகத்தில் அவரது பாதாரவிந்தங்களில் வாழும் பெரும் பாக்கியத்தை பெற்றுள்ளார்கள்.

 

22 hours ago, Nathamuni said:

??

சிவலோகத்தில் இருந்து பிரபஞ்சத்தில் உள்ள அணைத்து உயிர்களுக்கும் அருள் புரியும் சிவபெருமானும் பார்வதி தேவியும் இவுலகத்தின் மிக உயர்ந்த மலையாகிய கைலாய மலையில் வீ ற்றிருந்தே பூலோகத்தில் வாழும் எமக்கும் ஏனைய உயிர்களுக்கும் அருள் புரிவதாக புராணங்கள் கூறுகின்றன. சிவனுக்கு தொண்டாற்றும், சிவகணங்களும், முனிவர்களும், சிவலோகத்தில் அவரது பாதாரவிந்தங்களில் வாழும் பெரும் பாக்கியத்தை பெற்றுள்ளார்கள்.

 

சிவனுக்கு நாம் ஏன் தொண்டாற்ற வேண்டும். மனிதன் மனிதனாக மற்றயவர்களுக்கு  தீங்கு இழைக்காமல் முடிந்தால் மற்றயவர்களுக்கு உதவி செய்து  சட்டங்களை மதித்து இவ்வுலகில் சந்தோசமாக வாழ்ந்தாலே போதுமானது தானே.தனக்கு தொண்டாற்றியர்களுக்கு மட்டும் help பண்ணுவானாயின் சிவனுக்கும் சாதாரண மனிதனுக்கும் என்ன வித்தியாசம். 

கட்டுரையில் குறிப்பிட்ட நேர்கோடு இதுதானா ?

tamilnadu-temple.png

 

On 1/19/2019 at 5:04 AM, சண்டமாருதன் said:

இம் மூன்று தலங்களின் தீர்க்காம்சமும் 79 க்கும 80 க்கும் இடையில்தான் வருகின்றது. 

79 இற்கும் 80 இற்கும் இடையிலான தூரம் கிட்டத்தட்ட 80 கிலோமீற்றர்கள்.

இந்த 3 தலங்களும் கிட்டத்தட்ட நேர்கோடுதான்.

On 1/19/2019 at 2:57 AM, vanangaamudi said:

அதே கோட்டை அப்பிடியே மேல நீட்டினா இமயமலையிலை இருக்கிற கைலாசத்தை தொடும். சைவர்களின் நம்பிக்கையின்படி கைலாசமலை  முக்கியமானதாகும். இங்குதான் சிவன்  தோன்றியதாக  சைவசமயத்தவர்கள் நம்புகிறார்கள். மேலும் ஆராய்ந்து பார்த்தால் கோட்டின் தெற்கு திசையில் தான் பண்டைய காலத்தின் குமரிக்கண்டம் இருந்தது. அங்கும் பல சிவாலயங்கள் அதே கோட்டில் அமையுமாறு கட்டப்பட்டு பின்னர் அழிந்திருக்கலாம். இன்று கைலாச மலை சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள திபேத் நாட்டின் எல்லைக்குள் இருக்கிறது. அது இந்தியாவில் உள்ளதாக பலர் நம்புவது தவறு.

தமிழர்களுக்கான அதிராகம் மிக்க அரசும் அதன் கையில் தொல்லியல் ஆய்வும் வந்தால் எமது நம்பிக்கைகள் சார்ந்த ஏராளமான விசயங்கள் தலைகீழாக மாறும். தமிழர்களுக்கான ஒரு வரலாற்று வழித்தடம் ஆய்வு அடிப்படையில் ஏற்படும். அதுவரை நாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அறிவதை வைத்து சிந்திக்கவேண்டியதுதான். நம்பிக்கைகள் ஏதோ ஒரு இடத்தில் உண்மைத் தன்மையை அடையும். அது எந்த இடம் என்பது தெரியவில்லை. 

தற்போதுள்ள இந்த ஆலயங்கள் ஒரு குறிப்பிட்ட அரசாட்சிக் காலத்தில் அதாவது சேரசோழ பாண்டியர் போன்ற மன்னர்கள் காலத்தில் தோன்றியிருக்க வாய்பில்லை மாறாக அதற்கு முற்பட்ட காலங்களில் கட்டடக் கலையில் படிப்படியாக அறிவை வளர்த்த சமூகம் இருந்திருக்கவேண்டும். உயரமான கோபுரங்களை கட்டுவதற்கு ஒரு தேவையும் இருந்திருக்கவேண்டும். கோபுரங்கள் அடிப்படையில் கடவுள் சமயங்களுக்காக கட்டப்பட்டதா இல்லை பின்னர் வந்த மன்னர் சமூகம் அதை கோயில்களாக மாற்றியதா என்பது சந்தேகத்துக்குரியது. கடல்நீர் உட்புகுதல், நீரால் ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து தற்காக்கவே இவைகள் தோன்றிருக்கலாம். விதைதானியங்களை கோபுர உச்சியில் சேமித்துக் காப்பாற்றுவதே இதில் பிரதான கூறாக இருந்திருக்கலாம். மேலும் இன்று கடலால் மூழ்கடிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்ட சமூகமே உயரமான கட்டடங்களை உருவாக்குவதற்கும் உயரமான மலைகளை நோக்கி நகர்ந்ததாகவும் இருக்கலாம். இச் சமூகத்தை வழிநடத்தியதில் தென்னாடுடைய சிவன் பிரதானமானவராக இருக்கலாம். 

நாகரநாகரீகம் தென்னகத்தில் இருந்து மொகஞ்சதாரோ கரப்பா நோக்கி நகர்ந்ததா இல்லை அங்கிருந்து தெற்கு நோக்கி நகர்ந்ததா என்பதை கீழடி போன்ற பல இடங்களை தோண்டினால் தான் புரியும், ஆனால் விடமாட்டார்கள். எல்லாவற்றையும் இழுத்து மூடி ஆர்வமுள்ள தொல்லியல் ஆய்வாளர்களை இடமாற்றம் பணிமாற்றம் செய்வதிலேயே இந்திய அரசு முனைப்புடன் செயற்படுகின்றது. 

சங்ககால மதுரை தற்போதையை மதுரை அல்ல மாறாக  கீழடி என்பதுதான் சிலப்பதிகாரத்து இலக்கிய ஆய்வுகள் சுட்டிக்காட்டுவது. மேலும் காவிரிப் பும்பட்டிணம் புலம்பெயர் மக்கள் கூடிவாழ்ந்த இடம் என்பது என்னுமொரு பாடல். அவை வணிக ரீதியாக வாழ்ந்த மக்களாக இல்லை கடல் நீர் புகுந்த இடங்களில் இருந்து பெயர்ந்து வந்த மக்களா என்பது ஆய்வுக்குரியது.

புலம் பெயர் மாக்கள் கலந்து, இனிது உறையும்,
முட்டாச் சிறப்பின், பட்டினம் பெறினும்

 

 

 

 

திரு பாலகிருஷ்ணன் அவர்களின் அருமையான பேச்சு அருமையானது. 

4 hours ago, சண்டமாருதன் said:

நாகரநாகரீகம் தென்னகத்தில் இருந்து மொகஞ்சதாரோ கரப்பா நோக்கி நகர்ந்ததா இல்லை அங்கிருந்து தெற்கு நோக்கி நகர்ந்ததா என்பதை கீழடி போன்ற பல இடங்களை தோண்டினால் தான் புரியும், ஆனால் விடமாட்டார்கள். எல்லாவற்றையும் இழுத்து மூடி ஆர்வமுள்ள தொல்லியல் ஆய்வாளர்களை இடமாற்றம் பணிமாற்றம் செய்வதிலேயே இந்திய அரசு முனைப்புடன் செயற்படுகின்றது. 

 

மத்திய அரசு மட்டுமல்ல பொதுமக்களும் இதற்குப் பொறுப்பானவர்கள். நாம் தேடித் தெரிந்து கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளது. அதற்கான ஆர்வம் மக்களிடமிருந்து வர வேண்டும். பொய்யான கதைகளிலும் மூட நம்பிக்கையிலும் மூழ்கியிருக்கும் சமுதாயம் எந்த ஒரு விடயத்தையும் ஆய்ந்து உண்மையை அறிந்துகொள்ள முற்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.