Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

மனிதர் ஒவ்வொருவருக்கும்  ஓர் அடையாளம் உண்டு; அந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமே நமது தனித்துவமாக உலகிற்கு தோன்றுகிறது. நமது அடையாளத்தில் மிதமிஞ்சி கவனம் செலுத்தும்போது அங்கே ஆணவம் ஊற்றெடுக்கிறது. அப்போது தான் மற்றவர்களின் தனித்துவத்தை அலட்சியம் செய்யும் மனப்பான்மை உருவாகிறது.

சக மனிதர் யாவரினதும் அடையாளத்தை நாம் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் தருணம் அவர்களை மதிக்கவும், அங்கீகரிக்கவும் ஏதுவாகின்றது; அவர்களின் 'குறைகள் என்று ஏனையோரால் சொல்லப்படுபவை' குறைகளாகத் தோன்றாது; முழுமையான மனிதராக அவர்கள் காட்சியளிப்பர். எனினும் அவர்கள் மீது பொறாமை ஏற்படாது. 
மற்றவர்களின் அடையாளத்தை புரிந்து கொள்ளும்/புரிய முயற்சிக்கும் மனது அன்பின் ஊற்றாகிறது. ஒருவர் தனது அடையாளம் எது என்று தெரியாமல் தவிக்கையில், அதைக் கண்டறிய வழி காட்டுபவர் நல்ல ஆசானாகிறார்.

இவ்வாறாக ஒருவரின் அடையாளத்தை மதித்தலும், அதற்கான வழிகாட்டுதலும் ஆகிய குணங்கள் ஒரு சமூகத்தில் பரவும்போது அச்சமூகம் ஆரோக்கியமான, நல்லிணக்கமான சமூகமாக வளம்பெறும். அன்பெனும் இன்ப ஊற்று தனி ஒருவரின் தாகத்தை மட்டுமல்ல ஒரு பெரிய சமூகத்தின் தாகத்தையும் தணிக்கவல்லது. எதற்கான தாகத்தை? ஒவ்வொருவரினதும் தனித்துவம் / அடையாளம் புரிந்து கொள்ளப்படாதா என்ற தாகத்தைத் தான். 

இவ்வாறு ஏனையோரின் அடையாளங்களை புரிந்து கொள்ளும் தன்மையானது குடும்பம், நிறுவனம், வகுப்பறை உள்ளடங்கலாக பல்வேறு வகையான சூழல்களில் பயனுள்ளதாக அமையும். இது இலகுவான ஒரு பண்பு அல்ல; சவால்கள் வரலாம். எனினும், இறுதியில் நமக்கும், நம்முடன் பழகுவோர்க்கும் இடையான உறவை மேலும் மேன்படுத்த உதவும். ☺️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/2/2019 at 11:43 AM, மல்லிகை வாசம் said:

காலத்திற்கேற்ற பதிவிற்கு நன்றி! எல்லா அடையாளங்களும் தூக்கிப் பிடிக்கப் படும் போது நமக்கும் சுற்றியிருப்போருக்கும் நன்மை தருவன அல்ல என்று உலகில் நடக்கும் சம்பவங்களே சாட்சி சொல்கின்றன. தேசியவாதிகளால் வளர்ச்சியடைந்த நாடுகள் என்று எதையும் இன்று சுட்டிக் காட்ட முடியவில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

16 minutes ago, Justin said:

காலத்திற்கேற்ற பதிவிற்கு நன்றி! எல்லா அடையாளங்களும் தூக்கிப் பிடிக்கப் படும் போது நமக்கும் சுற்றியிருப்போருக்கும் நன்மை தருவன அல்ல என்று உலகில் நடக்கும் சம்பவங்களே சாட்சி சொல்கின்றன. தேசியவாதிகளால் வளர்ச்சியடைந்த நாடுகள் என்று எதையும் இன்று சுட்டிக் காட்ட முடியவில்லை! 

இங்கேயுமா  ராசா...??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, விசுகு said:

இங்கேயுமா  ராசா...??

விசுகர், தேசியவாதிகள் என்று நான் எழுதிய போது நினைத்தது ட்ரம்ப், விக்ரர் ஊர்பான், நைஜல் fபராஜ், மோடி போன்ற பேர்வழிகளை. வேறெந்த அர்த்தமும் இல்லை. அடையாளங்களில் அதிகம் ஆபத்தான அடையாளம் என்று தீவிர தேசிய அடையாளங்களை நான் கருதுவதால் அப்படிக் குறிப்பிட்டேன்.

Posted
6 hours ago, Justin said:

காலத்திற்கேற்ற பதிவிற்கு நன்றி! எல்லா அடையாளங்களும் தூக்கிப் பிடிக்கப் படும் போது நமக்கும் சுற்றியிருப்போருக்கும் நன்மை தருவன அல்ல என்று உலகில் நடக்கும் சம்பவங்களே சாட்சி சொல்கின்றன. தேசியவாதிகளால் வளர்ச்சியடைந்த நாடுகள் என்று எதையும் இன்று சுட்டிக் காட்ட முடியவில்லை! 

உண்மை தான் ஜஸ்ரின். காலணித்துவ காலத்திலோ அல்லது அடக்குமுறை அதிகமாக இருக்கும் வேளைகளில் ஒரு தனிநபரோ, குழுவோ தம் அடையாளத்தை உணர்ந்து அதைப் பேணுவதற்கான வழிகளை முன்னெடுத்தல் தவறில்லை. இங்கே அவர்களின் அடையாளம் பல்வேறு காரணிகளால் வரையறுக்கப்படுகிறது (மொழி, மதம் என்பவை மிக மிக குறுகிய உதாரணங்கள் மட்டுமே). பல்வேறு காரணிகள் கூட்டாகச் சேர்ந்தும் ஒரு அடையாளத்தைக் கொடுக்க முடியும்.

எனினும் நீங்கள் சொல்வது போல 'எல்லா அடையாளங்களும் தூக்கிப் பிடிக்கப்படும் போது' ஆரோக்கியமற்ற ஓர் சூழல் உருவாகிறது. ஏனெனில் ஓர் குழுவானது தாம் சாராத ஏனைய குழுக்களின் அடையாளங்ககளப் புரிந்து மதிக்காத போது அங்கே முரண்பாடுகள் தோன்றுகின்றன. 

இன்று நாமெல்லாம் பரந்து வாழும் பல்லின நாடுகளில் ஓர் குறிப்பிடத் தகுந்த அளவுக்காவது அமைதியான வாழ்க்கை வாழ முடிகிறது என்றால் ஒரு சில அடையாளங்களாவது பரஸ்பரம் மதிக்கப்படுவதனால் தான். மீண்டும், இந்த அளவீடு இடத்துக்கு இடம் மாறுபடலாம். தனிமனிதரையோ, குழுவையோ பொறுத்தும் இது பற்றிய அனுபவம் மாறுபடும்.

ஆக்கபூர்வமான கருத்துக்கு நன்றி ஜஸ்ரின். 😊 இவ்வாறான கருத்துக்கள் தான் தலைப்பை மேலும் சுவாரசியமாக்கும்! 😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எப்படிப்பட்டவராக இருந்தாலும் இறந்த பின் தான் புகழுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

எப்படிப்பட்டவராக இருந்தாலும் இறந்த பின் தான் புகழுவார்கள்.

ஈழப் பிரியன் அண்ணை, புகழ் என்பது மற்றவர்கள் உங்களுக்குத் தரும் அடையாளமல்லோ? அது இருக்கும் போது வந்தால் என்ன போனால் பிறகு வந்தால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்பையும், பன்பையும் அடையாளமாக்கி மணம் வீச செய்த மல்லிகையின் வாசம் வாசல் வரை கமகமக்கிறது.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல ஒரு சிந்தனை...!

நான் என்பது தான் அடையாள,ம் எனப் பலர் கருதுகின்றார்கள்|

எனினும்....உற்று நோக்கும்போது...நான் என்பது அகங்காரம் அல்லது ஆணவத்தின் வெளிப்பாடு எனபது புரியும்!

நான் என்னும்  அகந்தை....ஓரளவுக்கு மனிதனின் பொருளாதார வளர்ச்சிக்கு...உந்துதலை அளிக்கின்றது என்பதும் உண்மை தான்!

ஒரு சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியை அது முன்னோக்கி நகர்த்தும் எனப்தும் உண்மை!

எமது சமூகங்களில்....இந்த அடையாளங்கள் பெரிதும் உதவவில்லை ...என்றே நினைக்கிறேன்!

தனது அடையாளத்தைப் பாடும் புலவர்களுக்கு அள்ளிக்கொடுத்ததும்....தனது அடையாளத்தை நிலை நிறுத்தக் கோவில்களும் ..கோபுரங்களும் கட்டியதும் தான் எமது வரலாற்றின் பெரும்பகுதியாகும்!

அப்பூதியடிகள் போன்று....அடையாளத்தை நிலை நிறுத்த அன்னதான மடங்களும்,....அனாதை விடுதிகளும்....மருத்துவ சாலைகளும் அமைத்தவர்கள்  வெகு சிலரே! ஆணவம் அகன்ற நிலையில்... தனது அடையாளத்தை...அடக்கி வாசித்து....திருநாவுக்காரசரின் அடையாளத்துக்குள் மறைந்து ...சமூகப் பணிகளை முன்னெடுத்தார்!

எனினும் நாவுக்காரசரை விடவும் ...அவரது அடையாளமே....இன்னும் வாழ்கின்றது!

சி;எ உண்மைகளை....நாம் ஏற்றுக்கொள்ளாத வரையில்...நமது சமூகத்தில் பெரும் முன்னேற்றத்தை....நாம் எதிர்பார்க்க முடியாது!

பெருமளவிலான பணக்கையிருப்பு எம்மிடமிருந்தும்.....போரின் வடுக்களினால்   பாதிக்கப்படட....உறவுகள்...பெண்கள்...குழந்தைகள்...அனாதைகள் என...எல்லோரையும் கை விட்டு விட்டுத்....தனி மனித அடையாளங்களை நிலை நிறுத்தவே முனைந்தோம்! இதைச் செய்தவர்கள் சாதாரணமாக மனிதர்கள் அல்ல! எமது சமூகத்தைத் துயரங்களிலிருந்து...தூக்கி விடப் புறப்படடவர்கள்! தனி மனித அடையாளங்கள்...சமூக முன்னேற்றத்துக்கு...இங்கே உதவவில்லை!

ஜஸ்டின் ...மேலே குறிப்பிட்ட்து போலத்  தனிமனித அடையாளங்கள்...காலப்போக்கில் அழிந்து போய் விட....செய்த செயல்களின் பயன்கள் மட்டும்.....காலத்தால் அழிந்து போகாது...சமூக வளர்ச்சிக்கு என்றும் துணை போகும்!

நன்றி....மல்லிகை வாசம்!

Posted
6 hours ago, புங்கையூரன் said:

நான் என்பது அகங்காரம் அல்லது ஆணவத்தின் வெளிப்பாடு எனபது புரியும்!

நான் என்னும்  அகந்தை....ஓரளவுக்கு மனிதனின் பொருளாதார வளர்ச்சிக்கு...உந்துதலை அளிக்கின்றது என்பதும் உண்மை தான்!

ஒரு சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியை அது முன்னோக்கி நகர்த்தும் எனப்தும் உண்மை!

எமது சமூகங்களில்....இந்த அடையாளங்கள் பெரிதும் உதவவில்லை ...என்றே நினைக்கிறேன்!

ஜஸ்டின் ...மேலே குறிப்பிட்ட்து போலத்  தனிமனித அடையாளங்கள்...காலப்போக்கில் அழிந்து போய் விட....செய்த செயல்களின் பயன்கள் மட்டும்.....காலத்தால் அழிந்து போகாது...சமூக வளர்ச்சிக்கு என்றும் துணை போகும்!

அடையாளம் பற்றிய தங்கள் பார்வையை இன்னொரு கோணத்தில் அழகாகச் சொன்னீர்கள். ஆன்மீீீக ரீதியான அகங்காரம் என்ற விளக்கம் தான் உண்மையானது எனினும், சடப்பொருள் உலகில் சில 'சமாளிப்புக்களைச்' செய்ய வேண்டியதன் அவசியமும் புரிகிறது.

ஆக்கபூர்வமான கருத்துக்கு நன்றி புங்கையூரான் அண்ணா! 😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, மல்லிகை வாசம் said:

அடையாளம் பற்றிய தங்கள் பார்வையை இன்னொரு கோணத்தில் அழகாகச் சொன்னீர்கள். ஆன்மீீீக ரீதியான அகங்காரம் என்ற விளக்கம் தான் உண்மையானது எனினும், சடப்பொருள் உலகில் சில 'சமாளிப்புக்களைச்' செய்ய வேண்டியதன் அவசியமும் புரிகிறது.

ஆக்கபூர்வமான கருத்துக்கு நன்றி புங்கையூரான் அண்ணா! 😊

வழிமொழிகிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வரலாற்றை சுமந்து

அதனை  தம்முடையதாக்கி  தொடர்பவர்கள் அனைவரையும் பார்த்தால்

அவர்கள் தமது அடையாளங்களை  பேணுபவர்களாகவே  இருக்கிறார்கள்

போர்கள் அல்லது வன்முறைகள் கூட இந்த அடையாளத்தை  பேணும்

அல்லது பாதுகாக்கும் ஒரு கருவியே.

அதன்படி   போரில் வென்றவர்கள்

அல்லது வலிமையானவர்களே  இன்றும்

தமது  அடையாளங்களை  பேண  முடிகிறது

இன்று நாமெல்லாம் உலகமெல்லாம்  பரந்து  கலந்து வாழ்கின்ற  போதும்

அதிலும் ஒரு அளவேனும்  கட்டுப்பாடுகளும்

கவனத்திலெடுத்தலும்

காவுதலும் இருக்கவே  செய்கிறது

இந்த  நிலை  தற்காலிகமானது  மட்டுமே

எப்ப  வேண்டுமானாலும்

எப்படி  வேண்டுமானாலும் மாற்றமடையலாம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விசுகு said:

இது உண்மை. அடையாளங்கள் வெல்வதால் மட்டுமல்ல, சில சமயங்களில் அடக்கப்படும் போதும் கூர்மை பெற்று மிகையாக வெளிப்படுவதுண்டு. தமிழர்களின் அடையாளம் கூர்மையடைய எங்களை அடக்கியது ஒரு  காரணம். 9/11 இன் பின்னர் அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷ சம்பவங்கள் அதிகரித்தன. இங்கேயெ பிறந்து அமெரிக்க அடையாளத்தை மட்டுமே பிரதானமாக வைத்திருந்த பல இளம் முஸ்லிம்கள் தமது முஸ்லிம் மத அடையாளத்தை தாடி மூலமோ பர்தா உடை மூலமோ வெளிக்காட்ட இந்த துவேஷ சம்பவங்கள் தூண்டலாக இருந்ததாக நம்புகிறார்கள். இது மனித இயல்பென நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, Justin said:

இந்த  தாக்குதலும் 

துவேச அதிகரிப்புக்கூட

உண்மையில் தானாக  வந்தததா??

வரவழைக்கப்பட்டதா?? என்ற  கேள்வியும் இல்லாமலில்லை.....

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடையாளங்களும் அடையாளப்படுத்தல்களும் குறிப்பிட்ட கால, உடன் சூழல்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆண்-பெண் என்ற பால் அடையாளம் ஒன்றே ஆதியிலிருந்து நிரந்தரமாக உள்ளது. இன, மத, மொழி, சாதி, பிரதேச, பண்பாட்டு அடையாளங்கள் காலவோட்டத்தில் மாறி வருவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். 

அடையாளத்தை முன்னிறுத்துவது தனியன்களாக இல்லாமல் கூட்டாக ஒரு இலக்கை அடைவதற்கும், அல்லது ஒரு குழுவோடு தம்மை அடையாளப்படுத்தி இயங்கவும் உதவுகின்றது. அரசியலில் சிங்களப் பேரினவாதம் சிங்கள, பெளத்த அடையாளங்களைப் பாவித்து தமிழர்களை ஒடுக்குவதும், தமிழர்கள் தமிழ்த் தேசிய அடையாளத்தை முன்னிறுத்தி போராடித் தோற்றதும் எமது வரலாறு. தமிழர்கள் தமிழ்பேசும் இனம் என்ற அடையாளத்துக்குள் முஸ்லிம்களை அடக்க முற்பட்டதும், அதை முஸ்லிம்களோ, மலையகத் தமிழரோ ஏற்காமல் போனதும் தமிழ்த் தேசிய அடையாளத்தை பலவீனப்படுத்தியது.

புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் இனமாக ஒன்றுபட்டாலும் இன்று அடையாளச் சிக்கலில் மாட்டுப்பட்டு உள்ளனர். கனடியத் தமிழர், பிரித்தானியத் தமிழர், ஜேர்மனியத் தமிழர் என்று புகலிட நாடுகளுக்கு ஏற்ப புதிய அடையாளங்களைப் பூணுவதும், அதே நேரத்தில் தமது பூர்வீக கிராமம், பிரதேச அடையாளங்களையும் தொடர்வதும் என்று மாறிக்கொண்டே போகின்றது. 

பிற நாடுகளில், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில், முஸ்லிம் அடையாளம் என்று பெண்கள் முக்காடு அணிவதும் அரசியல் அடையாளமே. 70 களில் முக்காடு அணியாமல் பெண்கள் நடமாடிய எகிப்திய கெய்ரோ, ஈரானிய தெஹ்ரான் போன்ற நகரங்களில் மேற்கு நாட்டவர்கூட தலையை மறைத்துக் கொள்வதும் அடையாள அரசியலினால்தான். 

உலகில் உள்ள வளங்கள் பல்கிப் பெருகியுள்ள மனித இனத்திற்குப் போதாது என்பதால் ஒடுக்குபவர்களும், ஒடுக்கப்படுவர்களும் அடையாளங்களைச் சுமந்துதான் தமது இருப்பைப் பேண முயல்கின்றன. எனவே அடையாளம் என்பது ஒரு சமூகத்தின் இருப்பை எப்பாடுபட்டாவது தக்க வைத்துக்கொள்ள ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது. இருப்பைத் தக்கவைத்து கொள்ளவேண்டுமானால் இன்னொரு சமூகத்தை அடக்குமுறை செய்யவேண்டும் அல்லது அடக்குமுறைக்கு எதிராக போராடவேண்டும். 

ஆகவே, பிறரின் அடையாளங்களை மதித்து அன்பைச் சொரிந்து மனிதர்கள் ஒற்றுமையாக வளங்களைப் பகிர்ந்து இப்பூமியில்  வாழலாம் என்பது கனவாகத்தான் இருக்கும்!

Posted
12 hours ago, கிருபன் said:

ஆண்-பெண் என்ற பால் அடையாளம் ஒன்றே ஆதியிலிருந்து நிரந்தரமாக உள்ளது. இன, மத, மொழி, சாதி, பிரதேச, பண்பாட்டு அடையாளங்கள் காலவோட்டத்தில் மாறி வருவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். 

அரசியலில் சிங்களப் பேரினவாதம் சிங்கள, பெளத்த அடையாளங்களைப் பாவித்து தமிழர்களை ஒடுக்குவதும், தமிழர்கள் தமிழ்த் தேசிய அடையாளத்தை முன்னிறுத்தி போராடித் தோற்றதும் எமது வரலாறு. தமிழர்கள் தமிழ்பேசும் இனம் என்ற அடையாளத்துக்குள் முஸ்லிம்களை அடக்க முற்பட்டதும், அதை முஸ்லிம்களோ, மலையகத் தமிழரோ ஏற்காமல் போனதும் தமிழ்த் தேசிய அடையாளத்தை பலவீனப்படுத்தியது.

கனடியத் தமிழர், பிரித்தானியத் தமிழர், ஜேர்மனியத் தமிழர் என்று புகலிட நாடுகளுக்கு ஏற்ப புதிய அடையாளங்களைப் பூணுவதும், அதே நேரத்தில் தமது பூர்வீக கிராமம், பிரதேச அடையாளங்களையும் தொடர்வதும் என்று மாறிக்கொண்டே போகின்றது. 

பிற நாடுகளில், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில், முஸ்லிம் அடையாளம் என்று பெண்கள் முக்காடு அணிவதும் அரசியல் அடையாளமே. 70 களில் முக்காடு அணியாமல் பெண்கள் நடமாடிய எகிப்திய கெய்ரோ, ஈரானிய தெஹ்ரான் போன்ற நகரங்களில் மேற்கு நாட்டவர்கூட தலையை மறைத்துக் கொள்வதும் அடையாள அரசியலினால்தான்

On 2/3/2019 at 3:43 AM, மல்லிகை வாசம் said:

மனிதர் ஒவ்வொருவருக்கும்  ஓர் அடையாளம் உண்டு; அந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமே நமது தனித்துவமாக உலகிற்கு தோன்றுகிறது. நமது அடையாளத்தில் மிதமிஞ்சி கவனம் செலுத்தும்போது அங்கே ஆணவம் ஊற்றெடுக்கிறது. அப்போது தான் மற்றவர்களின் தனித்துவத்தை அலட்சியம் செய்யும் மனப்பான்மை உருவாகிறது.

சக மனிதர் யாவரினதும் அடையாளத்தை நாம் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் தருணம் அவர்களை மதிக்கவும், அங்கீகரிக்கவும் ஏதுவாகின்றது;  
ஒருவர் தனது அடையாளம் எது என்று தெரியாமல் தவிக்கையில், அதைக் கண்டறிய வழி காட்டுபவர் நல்ல ஆசானாகிறார்.

இவ்வாறாக ஒருவரின் அடையாளத்தை மதித்தலும், அதற்கான வழிகாட்டுதலும் ஆகிய குணங்கள் ஒரு சமூகத்தில் பரவும்போது அச்சமூகம் ஆரோக்கியமான, நல்லிணக்கமான சமூகமாக வளம்பெறும். 

இவ்வாறு ஏனையோரின் அடையாளங்களை புரிந்து கொள்ளும் தன்மையானது குடும்பம், நிறுவனம், வகுப்பறை உள்ளடங்கலாக பல்வேறு வகையான சூழல்களில் பயனுள்ளதாக அமையும். இது இலகுவான ஒரு பண்பு அல்ல; சவால்கள் வரலாம். எனினும், இறுதியில் நமக்கும், நம்முடன் பழகுவோர்க்கும் இடையான உறவை மேலும் மேன்படுத்த உதவும். ☺️

கிருபன், மேலே நீங்கள் எழுதிய கருத்துகளையும், எனது தலைப்பான பதிவையும் மீண்டும் ஒரு முறை நன்கு வாசித்துப் பார்த்தால் நான் சொல்ல வந்த கருத்துக்கும், நீங்கள் கொடுத்த பதிலுக்குமான முரண்பாடு நன்கு புரியும். 😊

நீங்கள் குறிப்பிட்ட தேசிய, சர்வதேச அளவில் அல்லது இனம், மொழி, மதம், ஆண், பெண் என்ற பாரிய பாகுபாட்டின் அடிப்படையில் நான் எனது ஆரம்பப் பதிவை எழுதவில்லை. எனது பதிவின் நோக்கம் எவ்வாறு ஓர் தனி மனிதனானவன் தன்னுடன் உறவாடுவோரின் / தொடர்பாடுவோரின் அடையாளத்தை / தனித்துவத்தைப் நன்கு புரிந்துகொண்டு அவற்றை மதித்து நடப்பதன் மூலம் தான் தொழிற்படும் தளங்களாகிய குடும்பம், வேலைத்தளம், கல்விச்சாலை, வழிபாட்டு இடங்கள் ஏனைய சிறு சமூக அமைப்புகளில் (இது யாழ் இணையம் போன்ற சமூக மன்றங்கள் / வலைத்தளங்களுக்கும் பொருந்தும்!) நேர்மறையான நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் கோடிட்டுக் காட்டுவது தான்.

நீங்கள் குறிப்பிட்ட தேசிய, சர்வதேச, அரசியல், சமூக அளவிலான உலகப்பார்வை தேவையான ஒன்று என்பது மறுப்பதற்கு இல்லை. இந்த விடயங்களில் தேடலும், அறிவும் ஓர் தனி மனிதனுக்குத் தேவை தான். ஆனால் இந்த விவகாரங்களில் அவனது கட்டுப்பாடு (control) அல்லது செல்வாக்கு (influence) மிகக் குறைவாகவே இருக்கும். தனி ஒருவனின் சக்திக்கு மீறியது. ஆனால், நான் மேற்குறிப்பிட்ட அவன் தினமும் தொழிற்படும் தளங்களில் அவனால் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். உதாரணமாக ஒரு குடும்பத்தில் கணவன்-மனைவி-பிள்ளைகள் இடையான புரிந்துணர்வையோ அல்லது ஓர் வகுப்பறையில் ஆசிரியர்-மாணவன்-மாணவர்கள் இடையேயான புரிந்துணர்வையோ சொல்லலாம். இவ்வாறு இச்சிறு குழுக்களில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒருவரின் அடையாளத்தை, மற்றவர் புரிந்து நடப்பதால் ஏற்படும் நல்லிணக்கம் அல்லது இசைவு நிலை (harmony) மற்றய சிறு சிறு குழுக்களுக்கும் பரவ முடியும். இதை வலியுறுத்தவே இப்பதிவை எழுதினேன். என்ன காரணமோ தெரியவில்லை இந்தத்திரி சற்று வேறு திசையில் பயணித்துவிட்டது! 😃

Posted
12 hours ago, கிருபன் said:

ஆகவே, பிறரின் அடையாளங்களை மதித்து அன்பைச் சொரிந்து மனிதர்கள் ஒற்றுமையாக வளங்களைப் பகிர்ந்து இப்பூமியில்  வாழலாம் என்பது கனவாகத்தான் இருக்கும்!

அந்த அளவுக்கு உயர்ந்த குறிக்கோள் எனக்கில்லை, கிருபன். 😁 

உலக அரசியல் அதற்கு இடம்கொடுக்காது. எனினும், அப்படி ஒரு கனவு கண்டு கனவோடு மட்டும் நின்றுவிடாது, மேலே கூறியபடி சிறு அளவிலேனும், நமது சக்திக்குட்பட்ட வகையில் சக மனிதரைப் புரிந்து மதித்துப் பழகினால் நமக்கு ஒரு குறையும் வரப்போவதில்லையே! தற்போது இருப்பதை விட சிறிய முன்னேற்றம் கண்டாலும் அது நமக்கெல்லாம் மகிழ்ச்சியான வெற்றி தானே! 😊

On 2/8/2019 at 9:46 AM, மல்லிகை வாசம் said:

இன்று நாமெல்லாம் பரந்து வாழும் பல்லின நாடுகளில் ஓர் குறிப்பிடத் தகுந்த அளவுக்காவது அமைதியான வாழ்க்கை வாழ முடிகிறது என்றால் ஒரு சில அடையாளங்களாவது பரஸ்பரம் மதிக்கப்படுவதனால் தான். மீண்டும், இந்த அளவீடு இடத்துக்கு இடம் மாறுபடலாம். தனிமனிதரையோ, குழுவையோ பொறுத்தும் இது பற்றிய அனுபவம் மாறுபடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, மல்லிகை வாசம் said:

இவ்வாறு இச்சிறு குழுக்களில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒருவரின் அடையாளத்தை, மற்றவர் புரிந்து நடப்பதால் ஏற்படும் நல்லிணக்கம் அல்லது இசைவு நிலை (harmony) மற்றய சிறு சிறு குழுக்களுக்கும் பரவ முடியும். இதை வலியுறுத்தவே இப்பதிவை எழுதினேன். என்ன காரணமோ தெரியவில்லை இந்தத்திரி சற்று வேறு திசையில் பயணித்துவிட்டது! 😃

இந்தப் பதிவை பல தடவைகள் வாசித்திருந்தேன். ஆனாலும் அடையாளம் என்பது மிகவும் சிக்கலான சொல். திரியை வேறு திசையில் நகர்த்த முனையவில்லை. எனக்கு அடையாளம் மேல் உள்ள பல குழப்பங்களை மாத்திரமே பதிந்தேன். அதில் அடையாள அரசியல் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை!

தனித்துவமாக இருக்கும் ஒவ்வொருவரும் அடையாளங்களைப் பூணுவது ஏதோ ஒரு வகையில் பிற அடையாளங்களில் இருந்து வேறுபடுத்தவும், அடையாளங்களின் அடைப்படையில் ஒன்றிணையவும்தான். அடையாளங்களை மதித்து ஒன்றிணைந்து சமூகங்கள் வாழுகின்றன. ஆனால் அதே சமூகங்கள் பிரச்சினைகள் என்று வரும்போது இலகுவாக அடையாளங்களின் அடைப்படையில் பிரிந்து முரண்படுகின்றன. இப்படியான அடையாளச் சிக்கலில்தான் இருக்கின்றோம்.

Posted
21 hours ago, கிருபன் said:

எனக்கு அடையாளம் மேல் உள்ள பல குழப்பங்களை மாத்திரமே பதிந்தேன். அதில் அடையாள அரசியல் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை!

தனித்துவமாக இருக்கும் ஒவ்வொருவரும் அடையாளங்களைப் பூணுவது ஏதோ ஒரு வகையில் பிற அடையாளங்களில் இருந்து வேறுபடுத்தவும், அடையாளங்களின் அடைப்படையில் ஒன்றிணையவும்தான். அடையாளங்களை மதித்து ஒன்றிணைந்து சமூகங்கள் வாழுகின்றன. ஆனால் தே சமூகங்கள் பிரச்சினைகள் என்று வரும்போது இலகுவாக அடையாளங்களின் அடைப்படையில் பிரிந்து முரண்படுகின்றன. இப்படியான அடையாளச் சிக்கலில்தான் இருக்கின்றோம்.

இது தமிழர் அரசியல் சம்பந்தமான கட்டுரைகளில் 'அடையாளம்' என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்பட்டதன் பாதிப்பாக இருக்கலாம், கிருபன்.

எனினும் தனிமனித அடையாளம் என்பது ஒருவரது தனித்துவத்தை (uniqueness / individuality / identity) குறிக்கும் சொல்லாகும். மேலும் அடையாளம் என்பது 'பூணப்படுவது அல்ல' - இயல்பாக அமைவது; அது மனிதனுக்கு பிறப்பிலேயே இயற்கையாக அமைந்த (nature) குணாதிசயங்கள் மற்றும் சூழலின் தாக்கத்தால் அவனில் ஏற்படும் 'இயல்பான' மாற்றங்களின் விளைவான ஓர் அம்சமாகும். 

பூணப்படுவது உண்மையான அடையாளம் அல்ல - அது முகமூடி - வேஷம் - போலி; பல அரசியல் தலைவர்கள் அல்லது இன்னும் பலர் தமது சுயலாபத்திற்காகப் பயன்படுத்துவது. ஆனால் இது ஓர் தனி மனிதனின் உண்மை இயல்பை சரியாக வெளிக்கொணர்ந்து காட்டாது.

சமூகப் பிரச்சினை என்று பல்வேறு வடிவங்களில் மனித குலம் பிளவுபட்டிருந்தாலும், தனிமனித அடையாளத்தை (தனதும், பிறரதும்) நன்கு புரிந்துணர்ந்த மனிதர்கள் சமுதாய வகுப்பை / குழுவைத் தாண்டி சக மனிதருடன் நல்லுறவைப் பேணலாம் என சாதாரணமாக நமது நாளாந்த வாழ்க்கையில் அனுபவரீதியாகக் காரணலாம். 😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, மல்லிகை வாசம் said:

அடையாளம் என்பது எளிமையான விடயம் அல்ல என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் இயற்கையான அடையாளம் என்று நீங்கள் குறிப்பிடுவது ஒவ்வொருவரின் குணாதிசயங்கள் என்றால் அது பிறப்பினலும் வாழும் சூழலினாலும் கட்டியமைக்கப்படுவது. வாழும் சூழல் என்று வரும்போது பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்தி ஒருவரின் morality ஐ செதுக்கும். அதுவும் நிலையானது அல்ல.

Posted
9 hours ago, கிருபன் said:

வாழும் சூழல் என்று வரும்போது பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்தி ஒருவரின் morality ஐ செதுக்கும். அதுவும் நிலையானது அல்ல.

கண்டிப்பாக கிருபன். 😊 ஒரு தனிமனிதனின் அடையாளம் என்பது கால ஓட்டத்தில் பல்வேறு பரிணாமங்களில் மாறக்கூடியது தான்.  ஆகவே, தான் தொடர்பாடும் / உறவாடும் சக மனிதர்களில் மட்டுமல்ல தன்னிலும் ஏற்படும் மாற்றங்களையும் புரிந்துகொண்டு நடப்பவன் கூட்டுறவான, ஒத்திசைவான ஒரு சமூகம் ஒன்றின் வளர்ச்சிக்குப் பங்களிக்கிறான் என்பது எனது கருத்து.

இருந்தாலும் கூட, அடையாளம் என்ற சொல் ஆன்மிகப் பார்வையில் மேலே புங்கையூரான் சொன்னது போல ஆழமான பொருளுடையது. 'நான் என்பது என் ஆத்மா' என்று முழுமையாகத் தெளிவு பெற்றவன் ஞானி ஆகிறான். அவன் சக மனிதர் மற்றும் அனைத்து உயிரினங்களில் தன்னைக் காண்கிறான். அவ்வாறு தெளிவு பெறாத நாம் உலக வாழ்வெனும் மாயையில் சிக்கிப் போராடுகிறோம், குழம்புகிறோம். நான் மேலே கூறிய மாற்றங்களை மேலும் புரிந்து கொண்டு, உலகியலில் செயற்பட இந்த ஆன்மிகப் பார்வையும் அவ்வப்போது கைகொடுக்கிறது. யோகா, தியானம் என்பவை சிறு உதாரணங்கள். 😊 ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கு நன்றி கிருபன். 😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/3/2019 at 3:43 AM, மல்லிகை வாசம் said:

 நமது அடையாளத்தில் மிதமிஞ்சி கவனம் செலுத்தும்போது அங்கே ஆணவம் ஊற்றெடுக்கிறது. அப்போது தான் மற்றவர்களின் தனித்துவத்தை அலட்சியம் செய்யும் மனப்பான்மை உருவாகிறது.

சக மனிதர் யாவரினதும் அடையாளத்தை நாம் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் தருணம் அவர்களை மதிக்கவும், அங்கீகரிக்கவும் ஏதுவாகின்றது; அவர்களின் 'குறைகள் என்று ஏனையோரால் சொல்லப்படுபவை' குறைகளாகத் தோன்றாது; முழுமையான மனிதராக அவர்கள் காட்சியளிப்பர். எனினும் அவர்கள் மீது பொறாமை ஏற்படாது. 

முற்றிலும் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முற்றிலும் உண்மை.

அடையாளம் என்பது தனித்துவமானது. அனேகமானவர்கள் தமக்கான அடையாளத்தை அறியாமலேயே வாழ்வை முடித்துவிடுவார்கள். ஒவ்வொரு பிறப்பிற்குள்ளும் அந்தப்பிறப்பிற்கான இரகசியம் ஒளிந்திருக்கிறது அவற்றைப் பற்றி ஆழமாக அறிய முற்படுவதில்லை. அறிந்து கொண்டவர்கள் அடையாளப்படுத்தப்பட்டவர்களாக திகழ முடியும். அடையாளத்தை அடையாளம் கண்டு கொள்வது எப்படி?

Posted
5 hours ago, வல்வை சகாறா said:

அடையாளத்தை அடையாளம் கண்டு கொள்வது எப்படி?

மிக நல்ல, மிக முக்கியமான கேள்வி அக்கா. 😊

உங்களுக்கு இது பற்றிய விளக்கம் அதிகம் தேவையிராது என நினைக்கிறேன். உங்களதுப் பிடித்த 'ஆன்மாவுடன் பேசுதல்' என்பதே மிகச்சுருக்கமான ஆனால் நேரடியான பதிலாக இருக்கும்! 😊

எனினும் மற்றோருக்கும் புரியக்கூடியதாக இருக்கும் என்பதால் இது பற்றிய எனது பார்வையை இங்கு பதிய நினைக்கிறேன்:

நமது அடையாளத்தை / தனித்துவத்தை உணர்வதற்கு பல்வேறு தத்துவாசிரியர்களும், ஞானிகளும், ஆன்மீக நெறியாளர்ளும் பல்வேறு நெறிமுறைகளையும், விளக்கங்களையும் தந்து சென்றுள்ளனர். இவை மதங்கள், ஆன்மீக இயக்கங்கள், தத்துவ சமூகங்கள் மூலமாகக் காலம் காலமாக உலகெங்கும் வாழும் சாமானிய மக்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது / சொல்லப்படுகிறது. 

கடல் போன்ற விசாலமான இந்த விடயங்களின் சாராம்சம் 'உன்னை அறி' என்பது இற்றை வரை எனக்குள்ள புரிதல். பல்வேறு மதங்கள் பற்றிய விமர்சனங்கள் இருப்பினும் , மதங்களிலுள்ள நல்ல அம்சங்களாக இருப்பவை என்னவென்று பார்த்தால் 'நம்மை அறியும்' வழிமுறைகளை சடங்குகள், பிரார்த்தனைகள், விரதங்கள் மூலமாக மறைமுகமாக நம் நாளாந்த வாழ்வில் கடைப்பிடிக்கச் செய்தமை தான். மனச் சுத்தியுடன் விரதமிருந்து பிரார்த்தனை செய்யும் போது நமக்கு ஏற்படும் ஓர் தெய்வீக உணர்வு ஓர் சிறு உதாரணமாகும். எனினும் முறையற்ற, போலியான சில சடங்குகளால் தான் மதங்கள் மீதான விமர்சனம் எழுகிறது. இவற்றுக்கான காரணம் ஓர் மதம் தூய்மையான நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டாலும், காலம் காலமாக உள்வாங்கப்பட்ட குப்பைகளாகும். எனவே இந்தக் குப்பைகளை மட்டும் விலக்கி நல்ல விடயங்களை மட்டும் தேர்ந்தெடுத்துக் கடைப்பிடிப்பது நமது அடையாளத்தை அறிய ஓர் வழியாக அமையும்.

அப்போ மத நம்பிக்கை இல்லாதோர் என்ன பண்ண? மதத்துக்கான மாற்று வழிகள் தான் தத்துவ சமூகங்கள், ஆன்மீக இயக்கங்கள் காட்டும் மார்க்கமாகும். எனினும், மதங்கள் போல் இவற்றின் மீதும் விமர்சனங்கள் உண்டு. எனவே இங்கும் நாம் சரியான நெறிமுறைகளை ஆராய்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

உண்மையில் மேற்கூறிய எல்லா நெறிகளும், இயக்கங்களும் நம்மை நாமே உணர வழிகாட்டிகளாக இருக்கின்றன. விவேகானந்த சுவாமிகள் சொன்னது போல் "நதிகள் வேறு, ஆனால் அவை சென்று கலக்கும் சமுத்திரம் ஒன்றே". என்னைப் பொறுத்தவரை ஆன்மீகம் என்பதே எல்லா மதங்களின் அடிப்படையாகும். ஆன்மீகம் + கலாச்சாரம் = மதம். எனவே வெவ்வேறு கலாச்சாரங்களில் ஆன்மீக நெறி வெவ்வேறு மதங்களாக உருவெடுத்துள்ளது என்பது எனது கருத்து.

இந்த நெறிமுறைகள் ஆரம்பநிலையில் தன்னை அறிய முனைவோருக்குக் கைகொடுக்கலாம். எனினும் அனுபவம் அதிகமாக சுய விசாரணை செய்து நாமாகவே நமக்குள்ளேயே அந்தத் தெளிவைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது சான்றோர் வாக்கு. தினமும் தியானம், பிரார்த்தனை, சுய விசாரணை இவற்றிற்குச் சிறிது நேரமாவது ஒதுக்குதல் நமது அடையாளம் பற்றிய தெளிவைத் தரும். அத்துடன் மேற்கூறிய ஏதாவது ஒரு நெறிமுறையும் கைகொடுக்கும். 

ஆக்கபூர்வமான பங்களிப்புக்கு நன்றி சகாறா அக்கா. 😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லாத்தையும் வாசிக்கவும் களைக்குதே மல்லிகைவாசம்.

எல்லோருக்கும் அடையாளம் உண்டுதான் எனினும் எல்லோரும் ஆன்மீகத்தில் பற்றுக்கொண்டு தம் அடையாளங்களை அறிய முயன்றால் .., அது இயல்பு வாழ்வை ஏற்றுக்கொள்ளுமா????

சக மனிதரை மதிக்கத் தெரிந்தாலே போதுமே அதைவிட்டு சக மனிதரின் அடையாளத்தை அறிந்து அதன்பின் அவரை மதிப்பது என்பது நடைமுறைக்கு ஒவ்வாததே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைப்பாத்தால் கராஜுக்கு ஆடிட்டிங் போனது போல் இல்லையேவா... எங்கேயோ பசந்தா ஈந்து போட்டு வந்த போல எலுவா இருக்கி  
    • இறுதி முடிவுகள் தொகுப்புப் படங்கள்
    • வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு ஆண் : காலைத் தழுவி நிக்கும் கனகமணிக் கொலுசு யம்மா நானாக மாற இப்போ நெனைக்குதம்மா மனசு பெண் : உள்ளே இருக்குறீக வெளிய என்ன பேச்சு ஐயா ஒன்னும் புரியவில்ல மனசு எங்கே போச்சு ஆண் : இந்த மனசு நஞ்ச நெலந்தான் வந்து விழுந்த நல்ல வெத தான் சந்திரனத்தான் சாட்சியும் வெச்சு சொன்ன கத தான் நல்ல கத தான் பெண் : தோல தொட்டு ஆள ஐயா சொர்க்கத்துல சேர மால வந்து ஏற பொண்ணு சம்மதத்தக் கூற ஆண் : சந்தனங்கரச்சுப் பூசணும் எனக்கு முத்தையன் கணக்கு மொத்தமும் உனக்கு பெண் : மாமரத்து கீழே நின்னு மங்கையவ பாட அந்த மங்கை குரலில் மனம் மயங்கியது யாரு ஆண் : பூமரத்துக் கீழிருந்து பொண்ணூ அவ குளிக்க அந்த பூமரத்து மேலிருந்து புலம்பியது யாரு பெண் : கன்னி மனசு உன்ன நெனச்சு தன்னந்தனியே எண்ணித் தவிக்கும் பொன்னை எடுத்து அள்ளிக் கொடுக்கும் வண்ணக் கனவு அள்ளித் தெளிக்கும் ஆண் : கூரைப் பட்டுச் சேலை யம்மா கூட ஒரு மால வாங்கி வரும் வேள பொண்ணு வாசமுள்ள சோல பெண் : தாலிய முடிக்கும் வேளைய நெனச்சு தேடுது மனசு பாடுது வயசு…....!   --- மாங்குயிலே பூங்குயிலே ---
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • அநுர தரப்புக்கு 18 தேசியப் பட்டியல் ஆசனங்கள் : முழு விபரம் இதோ 15 NOV, 2024 | 03:26 PM   பொதுத் தேர்தலில் கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்களின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சிகளுக்கும் தேசியப்பட்டியல் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு 18 தேசியபட்டியல் ஆசனங்கள் கிடைக்பெற்றதையடுத்து அந்த கட்சிக்கு மொத்தமாக 159 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதேநேரம் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு தேசியப் பட்டியல் ஊடாக 5 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றதையடுத்து அந்தக் கூட்டணிக்கு 40 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்துடன் மொத்தமாக 8 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணிக்கு 2 தேசியப்பட்டியல் ஆசனங்களுடன் 5 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்க்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தின் ஊடாக அந்தக் கட்சிக்கு 3 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. https://www.virakesari.lk/article/198868
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.