Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு – அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு – அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

champika-ranawaka-300x200.jpgபோர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சிறிலங்கா படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் பொதுமன்னிப்பு அளிக்கக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று, சிறிலஙகா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவைப் பத்திரத்தை, அமைச்சரவையில் தாம் சமர்ப்பித்திருப்பதாக, மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சரான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இரண்டு தரப்பிலும் போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளிக்கக் கோரும் வகையில் இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/02/26/news/36612

என்ன மாட்ட போகின்றோம் என்ற ஆதங்கமோ .....விக்கி ஐயாவின் எழிச்சி பார்த்திருப்பீர்கள் ....இப்ப புரியும் ...
சம்பந்தன் சுமந்திரன் மாதிரி வாலை ஆட்டி நக்கும் நாய்கள் அல்ல இவர் .......

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பேரினவாதம் இத்தனை ஆண்டுகளாக தமிழினத்திற்கெத்கிராக திட்டமிட்ட வகையில் நிகழ்த்திவரும் இனவழிப்பும் புலிகள் சிங்கள குடியேற்றவாசிகளைக் கொன்றதும் ஒன்றாகிவிடுமா?

தனிழினம் தொடர்ந்தும் போராட வேண்டும். சர்வதேச ரீதியில் விசாரணை நடைபெற்று போர்க்குற்றங்களைஅரங்கேற்றிய சிங்கள மிருகங்கள் தண்டிக்கப்பட்டு தமிழ்மக்களுக்கு நீதியும் அதனூடு நிரந்தரத் தீர்வொன்றும் கிடைக்க வேண்டும். அதுவரை நீதிக்கான எமது போராட்டம் தொடரவேண்டும்.

1 hour ago, ragunathan said:

சிங்களப் பேரினவாதம் இத்தனை ஆண்டுகளாக தமிழினத்திற்கெத்கிராக திட்டமிட்ட வகையில் நிகழ்த்திவரும் இனவழிப்பும் புலிகள் சிங்கள குடியேற்றவாசிகளைக் கொன்றதும் ஒன்றாகிவிடுமா?

புலிகள் செய்த சிங்கள இனவழிப்பை ஏற்றுக்கொள்கிறீர்கள்.

சம்பிக்க ரணவக்க சமர்ப்பிக்கும் இரு தரப்பிலும் நடந்த போர்க்குற்றங்களை ஏற்றுக்கொண்டு, நல்லிணக்க அரசியலில் தமிழினம் முன்வர பாடுபடலாமே!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, thulasie said:

புலிகள் செய்த சிங்கள இனவழிப்பை ஏற்றுக்கொள்கிறீர்கள்.

சம்பிக்க ரணவக்க சமர்ப்பிக்கும் இரு தரப்பிலும் நடந்த போர்க்குற்றங்களை ஏற்றுக்கொண்டு, நல்லிணக்க அரசியலில் தமிழினம் முன்வர பாடுபடலாமே!

நண்பரே இதுவரை நீதிமன்றால் குற்றவாளிகளாக்கப்பட்ட, தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியளையும் விடுவினமே?

படையினர் குற்றமிழைத்துள்ளதை நீங்கள் ஏற்று கொள்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள்

அங்கீகரிக்கப்பட்டவர்களோ

ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களோ  அல்ல

ஆனால்  அரசும் அரச படைகளும் 

சட்டத்தையும்  நீதியையும்  மக்களையும்  காக்க சத்தியப்பிரமாணம் எடுத்தவர்கள்

அவர்களது  மீறல்களே போர்க்குற்றமாகும்

மாறாக  பயங்கரவாதிகள்  என  அங்கீகரிக்கப்பட்ட  புலிகள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி முடிவு இப்படித்தான் இருக்கும். சிறையில் உள்ள அரசியல் கைதிகள் விடுதலை பெறவேண்டும்.

1 hour ago, விசுகு said:

புலிகளை பயங்கரவாதிகள் என்று நீங்களே ஏற்றுக்கொள்கிறீர்கள்.

புலிகள் செய்யும் இனவழிப்பு, அட்டூழியங்கள் - போர்க்குற்றங்கள் கீழ் வராதா?

இலங்கை இராணுவமும், புலிகளும்  போர்க்குற்றங்களில் ஈடுபட்டவை என்று சர்வதேசமே சொல்லுது!

இரு தரப்பாரும் விசாரிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

அல்லது, மன்னித்து மறக்கப்பட வேண்டியவை.

மன்னித்து, மறப்பது சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, thulasie said:

ஐயோ  ஐயோ

தலையை எங்க  முட்ட....???

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, thulasie said:

புலிகள் செய்யும் இனவழிப்பு,

புலிகள் மேற்கொண்ட இனவழிப்பை நீங்கள் வரையறைப்படுத்தி சொல்வீர்களா?

48 minutes ago, Kadancha said:

புலிகள் மேற்கொண்ட இனவழிப்பை நீங்கள் வரையறைப்படுத்தி சொல்வீர்களா?

4 hours ago, ragunathan said:

சிங்களப் பேரினவாதம் இத்தனை ஆண்டுகளாக தமிழினத்திற்கெத்கிராக திட்டமிட்ட வகையில் நிகழ்த்திவரும் இனவழிப்பும் புலிகள் சிங்கள குடியேற்றவாசிகளைக் கொன்றதும் ஒன்றாகிவிடுமா?

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி துளசி சொல்லிற்றார்!
மறப்போம் மன்னிப்போம்......

7 hours ago, பிரபாதாசன் said:

என்ன மாட்ட போகின்றோம் என்ற ஆதங்கமோ .....விக்கி ஐயாவின் எழிச்சி பார்த்திருப்பீர்கள் ....இப்ப புரியும் ...
சம்பந்தன் சுமந்திரன் மாதிரி வாலை ஆட்டி நக்கும் நாய்கள் அல்ல இவர் .......

அதுதான் மகிந்தவிட்ட ஓடிப்போய் அவர் காலில் விழுந்து முதலமைச்சர் சத்தியப்பிரமாணம் எடுத்தவரோ?

விக்கியர் மறுபடியும் தேர்தலில் நிற்க ஒன்றும் முட்டாள் இல்லை. தோற்றுப்போவார் என்று அவருக்கும் தெரியும். அதனால் ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி ஒளிவார். அதனால்தான் இப்ப ரொம்ப அடக்கம் - நீங்கள் வேற  சும்மா உசுப்பேத்திக்கிட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நந்தன் said:

இறுதி முடிவு இப்படித்தான் இருக்கும். சிறையில் உள்ள அரசியல் கைதிகள் விடுதலை பெறவேண்டும்.

ஒரு  இனத்தின் படு  கொலையை தம் விடுதலைக்கு சார்பாக்கி  விடுதலையடைய சிறையிலுள்ளவர்கள்  இப்படி கேட்டதாக ஒரு  போதும் அறியவில்லை

தம்  மீதான  குற்றச்சாட்டுக்கள்  சார்ந்து வழக்கை  துரிதப்படுத்துங்கள்  என்று தான்  கேட்கிறார்கள்

இறுதி  முடிவு என்று  எதைச்சொல்கிறீர்கள்?

தீர்வு  வந்த  பின்பா ?  அல்லது  எதுவுமற்றா?

சிறையிலுள்ளவர்கள் விடுதலை  பெற்றாலும்   சிங்களம்

அவர்களை பொது  வாழ்வுக்கு  அனுமதிக்குமா??

1 hour ago, விசுகு said:

ஒரு  இனத்தின் படு  கொலையை தம் விடுதலைக்கு சார்பாக்கி  விடுதலையடைய சிறையிலுள்ளவர்கள்  இப்படி கேட்டதாக ஒரு  போதும் அறியவில்லை

மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்துகொண்டு சிறையில் அடைபட்டிருப்பவர்களின் கருத்தை (உங்களுக்கு) தெரியாமலே விசைப்பலகையில் தட்டி உசுப்பேத்தும் நிலைமையை மாற்றுவோம்.

அவர்களின் விடுதலைக்கு அவரது குடும்ப + உறவினர்கள் படும் கஷடம் உங்களுக்கு புரியாததில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, thulasie said:

புலிகளை பயங்கரவாதிகள் என்று நீங்களே ஏற்றுக்கொள்கிறீர்கள்.

புலிகள் செய்யும் இனவழிப்பு, அட்டூழியங்கள் - போர்க்குற்றங்கள் கீழ் வராதா?

இலங்கை இராணுவமும், புலிகளும்  போர்க்குற்றங்களில் ஈடுபட்டவை என்று சர்வதேசமே சொல்லுது!

இரு தரப்பாரும் விசாரிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

அல்லது, மன்னித்து மறக்கப்பட வேண்டியவை.

மன்னித்து, மறப்பது சிறந்தது.

நீங்கள் புலிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக விசாரணை வேண்டாம் என்கிறீர்களா அல்லது சிங்கள ராணுவம் பாதிப்படையக் கூடாதென்பத்ற்காக வேண்டாம் என்கிறீர்களா? உங்களின் கருத்துக்களைப் பார்க்கும்போது சிங்கள ராணுவத்தின்மீதான கரிசணை  அப்பட்டமாகத் தெரிகிறது.

அடுத்ததாக, நீங்கள் கூறுவதுபோல புலிகள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் கட்டாயம் விசாரிக்கப்பட வேண்டும். மக்கள் பாதிப்படைந்திருந்தால், அவர்கள் யாராக இருந்தாலும் விசாரணைக்கு உற்பட்டேயாகவேண்டும், இதில் நாங்கள் ஏற்றுக்கொள்வதும், மறுப்பதும் செல்லாது. 

புலிகளின் தலைமைப் பீடம் முதல், இடைநிலைத் தளபதிகள்வரை அழிக்கப்பட்டு ஏனையவர்கள் புனர்வாழ்வு என்கிறபெயரில் குற்றுயிராக்கப்பட்டு, இன்னும்பலர் சிறைகளில் போர் நடவடிக்கைகளில் பங்குகொண்டதற்காக அடைபட்டிருக்க, அவர்களை விசாரிக்க வேண்டாம் என்று நீங்கள் கேட்பது சுத்த கோமாளித்தனம் மட்டுமல்லாமல்  சிங்களச் சார்பு சரணாகதி அரசியலன்றி வேறில்லை. 

உங்களுக்கு உங்கள் ராணுவம் பாதுகாக்கப்பட வேண்டும், அதற்காக ஆடு நனையுது என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறீர்கள். அப்படிப் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிங்கள மிருகங்களைக் காப்பாற்றுவதில் என்னதான் அவசியமோ உங்களுக்கு? சுமந்திரன் சொல்வதால் செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்களா?

நீங்கள் காவடியெடுக்கும் சுமந்திரனது மன்னிப்போம் மறப்போம் கூற்றுக்கு அவரது தலைவர் சம்பந்தன் என்ன பதில் கூறியிருக்கிறார் என்பதாவது தெரியுமா உங்களுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

மறப்பதும்....மன்னிப்பதும்...மனித குலத்தின் உயர்ந்த மாண்பு மட்டுமன்றி....நாளையை..நோக்கிய பயணத்தின் ஆரம்பப் புள்ளியுமாகும்!

எனினும்....நாளையும் இவ்வாறான இன ரீதியான தாக்குதல்கள்...தமிழ் மக்களுக்கெதிராகவோ....அல்லது வேறு சிறுபான்மை இனங்களுக்கு எதிராகவோ...நடக்காது என்பதற்கு எந்த விதமான.சட்ட ரீதியான பாதுகாப்போ அல்லது சமூக ரீதியான பாதுகாப்போ இன்றி.....மறப்போம்...மன்னிப்போம் என....சட்டம் கொண்டு வருவது....சரியாகப் படவில்லை!

ஒரு சில மரணங்கள் என்றால் பரவாயில்லை! 

ஆகக் குறைந்தது....நூற்று ஐம்பதினாயிரம் மரணங்கள்....!  

முதலில் போர்க்குற்றவாளிகள்...அடையாளம் காணப்பட வேண்டும்! 

பின்னர் மன்னிப்பது பற்றி.....யோசிக்கலாம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

சரி சரி துளசி சொல்லிற்றார்!
மறப்போம் மன்னிப்போம்......

இலங்கை அரசு  போர்க்குற்றம் செய்யவில்லை என தலையில் அடித்து சத்தியம் செய்யாத குறை. அவர்களை எப்படி மன்னிப்பது??😁

9 hours ago, thulasie said:

புலிகளை பயங்கரவாதிகள் என்று நீங்களே ஏற்றுக்கொள்கிறீர்கள்.

புலிகள் செய்யும் இனவழிப்பு, அட்டூழியங்கள் - போர்க்குற்றங்கள் கீழ் வராதா?

இலங்கை இராணுவமும், புலிகளும்  போர்க்குற்றங்களில் ஈடுபட்டவை என்று சர்வதேசமே சொல்லுது!

இரு தரப்பாரும் விசாரிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

அல்லது, மன்னித்து மறக்கப்பட வேண்டியவை.

மன்னித்து, மறப்பது சிறந்தது.

புனர்வாழ்வு அழிக்கப்பட போராளிகளும், சிறையில் அடைபட்டுள்ள போராளிகளையும் தண்டிக்கலாமா?  அல்லது வெளியிலிருக்கும் குமரனை(பத்மநாதன்) எல்லாவற்றுக்கும் சேர்த்து தண்டனை அழிக்க சொல்லலாமா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, thulasie said:

புலிகள் செய்த சிங்கள இனவழிப்பை ஏற்றுக்கொள்கிறீர்கள்.

சம்பிக்க ரணவக்க சமர்ப்பிக்கும் இரு தரப்பிலும் நடந்த போர்க்குற்றங்களை ஏற்றுக்கொண்டு, நல்லிணக்க அரசியலில் தமிழினம் முன்வர பாடுபடலாமே!

அதுக்கு தான் ஜெனிவாவில் இருதரப்பினரதும் போர் குற்றங்களை  இருவரல்லாத ஒரு நடுவர் மூலம் தீர்க்கலாம் என்றால் சிங்களம் போர்க்குற்றம் செய்யவில்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்

துளசி சொன்னதை மறப்போம் மன்னிப்போம்!

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, thulasie said:

புலிகள் குறிப்பிட்ட இடத்திற்கு அந்த சிங்கள நபர்களை அபாயம் அளிப்பதாக வாக்குறுதி அளித்து, அழைத்து, அந்த இடங்களை முற்றிலும் ஏனைய இடங்களில் இருந்து தனிமைப்படுத்தி, உணவை தடுத்த்து, அவர்களை பலவீனர்கள் ஆக்கி தாக்கினார்களா?

சிங்கள நபர்கள் தெரிந்து கொண்டே, சிங்கள கூலிப்படடையம், காடையர் கூட்டமமுமாகிய சிங்கள படையும் தம்மை காக்கும் என்று தெரிந்து கொண்டே அந்த இடத்தில், தமிழர்களின் பூர்வீக இடத்தில அடாத்தாக குடியிருந்தார்கள்.

இனப்படுகொலை என்பது எதுவென்று தெரியாமல், வாயிருந்தால் எதுவும் சொல்லி விட்டுப் போகலாம் என்ற பாணியில் எழுதி இருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஜீவன் சிவா said:

மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்துகொண்டு சிறையில் அடைபட்டிருப்பவர்களின் கருத்தை (உங்களுக்கு) தெரியாமலே விசைப்பலகையில் தட்டி உசுப்பேத்தும் நிலைமையை மாற்றுவோம்.

அவர்களின் விடுதலைக்கு அவரது குடும்ப + உறவினர்கள் படும் கஷடம் உங்களுக்கு புரியாததில்லை 

மன்னிக்கணும்

வாழ்வில்

வரலாற்றில்  சில  பக்கங்களை  துலைத்தவர்களுடன் 

நான் நேரத்தை  செலவிடுவதில்லை

இது  கருத்துக்களம்

இங்கு விசைப்பலகையில் தான்  எழுத  வேண்டும்

ஆகக்குறைந்தது

நிர்வாகத்தின் பொன்னான  நேரங்களை  மதித்து  விசைப்பலகையில்  தட்டுலே

ஆகக்குறைந்த மனிதப்பண்பு  யாழ் களத்தில்.

Edited by விசுகு

On 2/26/2019 at 9:57 PM, thulasie said:

புலிகளை பயங்கரவாதிகள் என்று நீங்களே ஏற்றுக்கொள்கிறீர்கள்.

புலிகள் செய்யும் இனவழிப்பு, அட்டூழியங்கள் - போர்க்குற்றங்கள் கீழ் வராதா?

இலங்கை இராணுவமும், புலிகளும்  போர்க்குற்றங்களில் ஈடுபட்டவை என்று சர்வதேசமே சொல்லுது!

இரு தரப்பாரும் விசாரிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

அல்லது, மன்னித்து மறக்கப்பட வேண்டியவை.

மன்னித்து, மறப்பது சிறந்தது.

உங்களின் கருத்து தெளிவாக சொல்கின்றது சுமந்திரனின் ஊது குழல் என்று ....
இப்ப என்ன அவசியம் .....முதலில் ராணுவத்தின் கொலை வெறி தண்டிக்க பட வேண்டும் ...

புலி எதிர் என்று குழலை உதுங்கோ .....நேரம் போகத்தான் வேண்டுமே ......ஆடு நனையுது என்று ஓநாய் அழுகுதாம் ...

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kadancha said:

புலிகள் குறிப்பிட்ட இடத்திற்கு அந்த சிங்கள நபர்களை அபாயம் அளிப்பதாக வாக்குறுதி அளித்து, அழைத்து, அந்த இடங்களை முற்றிலும் ஏனைய இடங்களில் இருந்து தனிமைப்படுத்தி, உணவை தடுத்த்து, அவர்களை பலவீனர்கள் ஆக்கி தாக்கினார்களா?

சிங்கள நபர்கள் தெரிந்து கொண்டே, சிங்கள கூலிப்படடையம், காடையர் கூட்டமமுமாகிய சிங்கள படையும் தம்மை காக்கும் என்று தெரிந்து கொண்டே அந்த இடத்தில், தமிழர்களின் பூர்வீக இடத்தில அடாத்தாக குடியிருந்தார்கள்.

இனப்படுகொலை என்பது எதுவென்று தெரியாமல், வாயிருந்தால் எதுவும் சொல்லி விட்டுப் போகலாம் என்ற பாணியில் எழுதி இருக்கிறீர்கள்.

கடஞ்சா,  மக்களை குறிக்கப் பட்ட பிரதேசங்களில் இருக்க வலியுறுத்தி விட்டு ஷெல் அடித்தது சிங்கள இராணுவம் செய்த யுத்தக் குற்றங்களில் முதன்மையானது.  இந்த இடங்களுக்கு வேறு வழியின்றி மக்கள் போக நேர்ந்தது, புலிகள் அவர்களை யுத்த பிரதேசத்தை விட்டு வெளியேற விடாது தடுத்தமையால் தான். எனவே, இரண்டு தரப்பும் அங்கே இறந்த மக்களின் மரணத்திற்கு உடந்தைகள். தப்பிப் போக முற்பட்ட மக்கள் புலிகளால் சுடப் பட்டுமிருக்கிறார்கள். கீழே இருக்கிறது ஐ.நா நிபுணர் குழு அறிக்கை, நாம் சிங்கள இராணுவத்தை யுத்தக் குற்றவாளிகளாக நிரூபிக்க எடுத்துக் காட்டும் அதே அறிக்கை:

http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf

இரண்டு தரப்புமே தமிழர்களுக்கெதிராக யுத்தக் குற்றம் புரிந்திருக்கிறார்கள். வன்னியில் இருந்து தப்பி வந்த மக்கள் இதை உறுதிப் படுத்தியிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இருதரப்புமே யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை ஐ. நா அறிக்கை சொல்கிறது.

மக்களை வேண்டுமென்றே இலக்குவைத்து, நிவாரண வரிசைகளில் நின்றவர்கள், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள், தம்மால் அடையாளப்படுத்தப்பட்ட யுத்த சூனியப் பிரதேசங்களில் தஞ்சமடைந்த மக்கள் என  ஆயிரக்கணக்கில் கொன்றமை, வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த போராளிகளையும் மக்களையும் கூட்டாகப் படுகொலை செய்தமை, பெண்போராளிகளை கூட்டுப்  பாலியல் வன்புணர்வின் பின்னர் கொலை செய்தமை, மருந்து மற்றும் உணவு ஆகியவற்றை போர் ஆயுதங்களாகப் பாவித்தமை ஆகியவை உள்ளடங்கலான ராணுவம் புரிந்த குற்றங்கள் என்றும், மக்களை மனிதக் கேடயங்களாகப் பாவித்தமை, பதின்ம வயதினரை கட்டாய ஆட்சேர்ப்பின் மூலம் இயக்கத்தில் சேர்த்தமை மற்றும் தப்பிப் போக எத்தனித்த மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தமை ஆகிய குற்றங்கள் புலிகள் மீதும் சுமத்தப்பட்டிருக்கின்றன.

இதில், இருதரப்பினராலும் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும்கூட, தமிழினம் இன்று பேசும் யுத்தக்குற்றங்கள், தம்மை தமிழர் என்பதற்காக இலக்குவைத்து, பெருமளவிலான மரணங்களை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்ட ஒரு தரப்பினரைப் பற்றித்தான் என்பது வெள்ளிடைமலை. ஆகவே, தமிழர் ஒருவருக்கோ அல்லது சிங்களவருக்கோ இங்கே நாம் பேசும் யுத்தம் குற்றங்கள் எதுவென்பது பற்றியோ அல்லது யாரைப் பற்றியோ என்பது தொடர்பில் சந்தேகங்கள் இருப்பதென்பது வேடிக்கையானது.

யுத்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். குற்றங்களில் ஈடுபட்ட இராணுவமாக இருந்தாலும் சரி, புலிகளாக இருந்தாலும் சரி, குற்றவாளிகள் குற்றவாளிகள்தான்.

வெறுமனே புலிகளும் செய்தார்கள் தானே, ஏன் ராணுவத்தை மட்டும் கேள்வி கேட்கிறீர்கள் என்பதோ, புலிகளை மன்னித்து விட்டதுபோல, இராணுவம் செய்ததையும் மன்னித்து மறப்பது நல்லது என்று கேட்பதும் ராணுவத்தைக் காப்பாற்றும் நோக்கிலேதான் அன்றி வேறெதற்குமில்லை என்பது தெளிவு. இதைச் சிங்களவர் ஒருவர் கேட்பதை புரிந்துகொள்வது அவ்வளவு கடிணமானதல்ல, ஆனால், தமிழர் ஒருவர் கேட்பது அவமானமானது.

நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? யுத்தக் கூற்றங்கள் பற்றி நாம் பேசக் கூடாதா? புலிகளும் செய்தபடியால், இராணுவத்தை மன்னித்து விட்டு விடலாமா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.