Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்கொலை படை தாக்குதல்களுக்கு மதம் கிடையாது விடுதலைப்புலிகளை மேற்கோள் காட்டி இம்ரான்கான் பேச்சு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலைப் படை தாக்குதல்களுக்கு மதம் கிடையாது".. விடுதலைப் புலிகளை மேற்கோள் காட்டி இம்ரான் பேச்சு ..

imran3434-1551355909.jpg

ஜம்மு: யாரும் மதத்தை காரணமாக வைத்து தற்கொலை படை தாக்குதல்களை நடத்துவதில்லை. அப்படிப் பார்த்தால் இந்துக்களான விடுதலை புலிகள்தான் அதிக அளவில் தற்கொலை படைத் தாக்குதல்களை நடத்தியவர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேரை கொடூரமாகக் கொன்ற தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் முகாம்களை பாகிஸ்தானுக்குள் புகுந்து குண்டு வீசித் தகர்த்தது இந்தியா.

இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இந்திய, பாகிஸ்தானிய விமானப்படை போர் விமானங்கள் வானில் சண்டையில் குதித்தன. சிறைபிடிப்பு இதில் இந்திய வீரர் அபிநந்தன் பாகிஸ்தானுக்குள் போய் சிக்கிக் கொண்டார்.

அவரை பாகிஸ்தான் படையினர் சிறை பிடித்தனர். இது உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்தியா எச்சரிக்கை அவரை விடுவித்தாக வேண்டும் என்று இந்தியா நிர்ப்பந்தம் கொடுக்க ஆரம்பித்தது.

இந்தியாவுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளும் குரல் கொடுக்க ஆரம்பித்தன. அபிநந்தன் பாதுகாப்புக்கு குறைபாடு ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றும் இந்தியா எச்சரித்தது. விடுதலை புலிகள் இந்த நிலையில் அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று அறிவித்தார்.பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு அவர் பேசினார்.

அப்போது அவர் விடுதலைப் புலிகள் அமைப்பையும் தனது பேச்சின்போது குறிப்பிட்டார். அவர் சொன்னதாவது: தற்கொலை படை தாக்குதல் தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. தற்கொலை படை தாக்குதல்கள் மதத்தின் பெயரால் நடப்பது இல்லை. நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்பாக உலக அளவில் அதிக அளவில் தற்கொலை படை தாக்குதலை நடத்தியது விடுதலை புலிகள்தான். தாக்குதல் நடத்தியவர்கள் அனைவருமே இந்துக்கள். ஆனால் மதத்தின் பெயால் நடத்தவில்லை. மாறாக தங்களது விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே அதனை செய்தனர். என்று கூறினார் இம்ரான் கான்."

https://tamil.oneindia.com/news/india/imran-khan-quotes-ltte-his-speech-342728.html

டிஸ்கி :

செம்பு இம்ரான்கானுக்கு ஏன் இந்த வேலை .. ? இனத்திற்காக போராடிய புலிகளை இழுக்கவில்லை என்றால் தூக்கம் வராது போல் கிடக்கு .. 🤔

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலைப் படை தாக்குதல்களுக்கு மதம் கிடையாது'- இம்ரான் பேச்சு.

ஜம்மு: "யாரும் மதத்தை காரணமாக வைத்து தற்கொலை படை தாக்குதல்களை நடத்துவதில்லை. அப்படிப் பார்த்தால் இந்துக்களான விடுதலை புலிகள்தான் அதிக அளவில் தற்கொலை படைத் தாக்குதல்களை நடத்தியவர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேரை கொடூரமாகக் கொன்ற தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் முகாம்களை பாகிஸ்தானுக்குள் புகுந்து குண்டு வீசித் தகர்த்தது இந்தியா. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இந்திய, பாகிஸ்தானிய விமானப்படை போர் விமானங்கள் வானில் சண்டையில் குதித்தன.

சிறைபிடிப்பு இதில் இந்திய வீரர் அபிநந்தன் பாகிஸ்தானுக்குள் போய் சிக்கிக் கொண்டார். அவரை பாகிஸ்தான் படையினர் சிறை பிடித்தனர். இது உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்தியா எச்சரிக்கை அவரை விடுவித்தாக வேண்டும் என்று இந்தியா நிர்ப்பந்தம் கொடுக்க ஆரம்பித்தது. இந்தியாவுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளும் குரல் கொடுக்க ஆரம்பித்தன. அபிநந்தன் பாதுகாப்புக்கு குறைபாடு ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றும் இந்தியா எச்சரித்தது.

தற்கொலை படை தாக்குதல் "தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. தற்கொலை படை தாக்குதல்கள் மதத்தின் பெயரால் நடப்பது இல்லை. நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்பாக உலக அளவில் அதிக அளவில் தற்கொலை படை தாக்குதலை நடத்தியது விடுதலை புலிகள்தான். தாக்குதல் நடத்தியவர்கள் அனைவருமே இந்துக்கள். ஆனால் மதத்தின் பெயால் நடத்தவில்லை. மாறாக தங்களது விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே அதனை செய்தனர்." என்று கூறினார் இம்ரான் கான்.

Read more at: https://tamil.oneindia.com/news/india/imran-khan-quotes-ltte-his-speech/articlecontent-pf357171-342728.html

Edited by Nathamuni

35 minutes ago, Nathamuni said:

தற்கொலை படை தாக்குதல் "தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. தற்கொலை படை தாக்குதல்கள் மதத்தின் பெயரால் நடப்பது இல்லை. நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்பாக உலக அளவில் அதிக அளவில் தற்கொலை படை தாக்குதலை நடத்தியது விடுதலை புலிகள்தான். தாக்குதல் நடத்தியவர்கள் அனைவருமே இந்துக்கள். ஆனால் மதத்தின் பெயால் நடத்தவில்லை. மாறாக தங்களது விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே அதனை செய்தனர்." என்று கூறினார் இம்ரான் கான்.

இந்துக்களான புலிகளின் தற்கொலைத் தாக்குதலினால், இந்து தேசமான இந்தியாவின் இந்துப் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் - என்று சொல்லாமல் சொல்கிறாரோ இம்ரான்.

15 minutes ago, thulasie said:

இந்துக்களான புலிகளின் தற்கொலைத் தாக்குதலினால், இந்து தேசமான இந்தியாவின் இந்துப் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் - என்று சொல்லாமல் சொல்கிறாரோ இம்ரான்.

அவர் தற்கொலை தாக்குதலை முதலில் மேற்கொண்டவர்கள் ஜப்பானியர்கள் என்பதையும், இஸ்லாமிய விடுதலை வீரர்கள் என்று அவர் நாட்டு மக்களும் நம்பும் பாலஸ்தீன விடுதலை அமைப்புகளும் தற்கொலை தாக்குதலை செய்கின்றனர் என்பதையும் சந்தர்பத்துக்கு ஏற்றாப் போல் மறந்து விட்டார்.

பெரும் பலத்துடன், பல நாடுகளின் இராணுவ உதவிகளுடன் ஆக்கிரமிப்பையும், அழித்தொழிப்புகளையும் செய்யும் அரசுகளுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பலமற்ற, குரலற்றா மக்களினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களை கேவலப்படுத்தியதே அவர் சார்ந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் தான்.

தற்கொலைப் படைத்தாக்குதல், எல்லா இனத்தினரும், மதத்தினரும் செய்கிறவர்கள்தான்.

தற்கொலைப் படைத்தாக்குதலில் புலிகள் உலக அளவில், பெயர் பெற்றவர்கள் என்று, இம்ரான் சொல்கிறார்போலும்!

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நிழலி said:

அவர் தற்கொலை தாக்குதலை முதலில் மேற்கொண்டவர்கள் ஜப்பானியர்கள் என்பதையும், இஸ்லாமிய விடுதலை வீரர்கள் என்று அவர் நாட்டு மக்களும் நம்பும் பாலஸ்தீன விடுதலை அமைப்புகளும் தற்கொலை தாக்குதலை செய்கின்றனர் என்பதையும் சந்தர்பத்துக்கு ஏற்றாப் போல் மறந்து விட்டார்.

பெரும் பலத்துடன், பல நாடுகளின் இராணுவ உதவிகளுடன் ஆக்கிரமிப்பையும், அழித்தொழிப்புகளையும் செய்யும் அரசுகளுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பலமற்ற, குரலற்றா மக்களினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களை கேவலப்படுத்தியதே அவர் சார்ந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் தான்.

செய்திகளில் திரிவுகள் இருப்பதாக  தெரிகிறது  நிழலி

தற்கொலை  தாக்குதல்  செய்யும் அளவுக்கு  அவர்களை  தள்ளும் காரணங்களை ஆராய்ந்து

தீர்க்க  முயல வேண்டும் என  அவர்  பேசியதாகத்தான் முதலில் செய்தி  வெளியாகியிருந்தது

அவ்வாறு சொல்லி  இருந்தால் அது  வரவேற்கத்தக்கது

ஆனால்அதை  செய்தியாளர்கள்  முக்கியமாக  இந்திய செய்தியாளர்கள்

தமக்கேற்றாப்போல் மாற்றி  வருகின்றனர் போலத்தெரிகிறது

12 minutes ago, நிழலி said:

பெரும் பலத்துடன், பல நாடுகளின் இராணுவ உதவிகளுடன் ஆக்கிரமிப்பையும், அழித்தொழிப்புகளையும் செய்யும் அரசுகளுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பலமற்ற, குரலற்றா மக்களினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களை கேவலப்படுத்தியதே அவர் சார்ந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் தான்.

புலிகளின் தற்கொலைத்தாக்குதல்கள் எல்லாம் புனிதமானதா?

இஸ்லாமிய பயங்கரவாதிகள், தற்கொலைத்தாக்குதல் செய்யத் தொடங்கியபின், அவை புனிதத் தன்மை இழந்து கேவலமாக மாறிவிட்டதா?

இந்துப் பிரதமர் ராஜீவ் காந்தியை, இந்துக்களான புலிகளின் தற்கொலைப்படைகளினால் கொன்றதனால், புலிகளுக்கு என்ன நன்மை கிடைத்தது?

ஒன்றுமே இல்லை.  வெறும் புஷ்வாணம்தான்!

9 minutes ago, விசுகு said:

செய்திகளில் திரிவுகள் இருப்பதாக  தெரிகிறது  நிழலி

தற்கொலை  தாக்குதல்  செய்யும் அளவுக்கு  அவர்களை  தள்ளும் காரணங்களை ஆராய்ந்து

தீர்க்க  முயல வேண்டும் என  அவர்  பேசியதாகத்தான் முதலில் செய்தி  வெளியாகியிருந்தது

அவ்வாறு சொல்லி  இருந்தால் அது  வரவேற்கத்தக்கது

ஆனால்அதை  செய்தியாளர்கள்  முக்கியமாக  இந்திய செய்தியாளர்கள்

தமக்கேற்றாப்போல் மாற்றி  வருகின்றனர் போலத்தெரிகிறது

அது இந்திய செய்தியாளர்களின் பிறவிக்குணம் 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, thulasie said:

புலிகளின் தற்கொலைத்தாக்குதல்கள் எல்லாம் புனிதமானதா?

புலிகளின் தற்கொலைத்தாக்குதல்கள் எல்லாம் புனிதமானதா  என்றால் தெரியாது  துளசி

ஆனால் நோக்கம் புனிதமானது

அதை  செய்தவர்கள் புனிதர்கள்

இஸ்லாமிய பயங்கரவாதிகள், தற்கொலைத்தாக்குதல் செய்யத் தொடங்கியபின், அவை புனிதத் தன்மை இழந்து கேவலமாக மாறிவிட்டதா?

ஆம்

அவை மத  வெறி  கொண்ட தாக்குதல்கள்

இந்துப் பிரதமர் ராஜீவ் காந்தியை, இந்துக்களான புலிகளின் தற்கொலைப்படைகளினால் கொன்றதனால், புலிகளுக்கு என்ன நன்மை கிடைத்தது?

புலிகள்  ஒரு போதும் தம்மை மதம்  சார்ந்து  வரையறுத்ததில்லை

மாறாக அதை  வெறுத்தார்கள்

அதுவும்  இந்தியா  அவர்களை  வெறுக்க ஒரு  காரணம்

Quote

ஒன்றுமே இல்லை.  வெறும் புஷ்வாணம்தான்!

நன்றி

புலிகள் தற்கொலைத்தாக்குதல்களை நடத்தியதற்கு அவர்களுக்கிருந்த கோபம் வேறு! மதம் அல்ல என்கிறார் இம்ரான் ஹான்!

வீடியோ இணைப்பு

செப்பரம்பர் 11 தாக்குதலுக்கும் முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளே அதிகளவான தற்கொலைத்தாக்குதலை நடத்தினர். அவர்கள் இந்துகளே. ஆனால் அவர்கள் மதத்தின் பெயரால் தாக்குதல் நடத்தவில்லை. அவர்கள் வேறொரு தேவைக்காக நடத்தினர்" - இவ்வாறு பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் - இந்தியாக்கு இடையேயான யுத்த சூழுநிலை அவசரமாக கூட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் விடுதலைப்புலிகள் நடத்திய தற்கொலை தாக்குதல்கள் மதத்தின் பெயரால் இடம்பெறவில்லை என்பதை சுட்டிகாட்டியிருந்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-
"பாகிஸ்தானுக்கு போர் முக்கியம் இல்லை. ஆனால் நாம் கோழைகள் அல்லர். போரில் செலவு செய்ய எனக்கு விருப்பம் இல்லை. நான் நாட்டின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவே விரும்புகின்றேன்.
"பாகிஸ்தானில் மிக ஒழுக்கமாக செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றி. புல்வாமா தாக்குதல் போன்ற தாக்குதலை எந்த நாடாவது நடத்துமா? எவ்வாறு இந்தியா பழி சுமத்துகின்றது என்பது புரியவில்லை. புல்வாமா தாக்குதல் குறித்த ஆதாரங்கள் இருப்பின் முன்பே எமக்கு அளித்திருக்கலாம். அதை நாம் விசாரித்திருப்போம். பிரதமர் மோடியிடம் பலதடவை பேச முயற்சித்தேன். ஆனால் சாத்தியம் ஆகவில்லை.
"தற்கொலைப்படை தாக்குதல் மதத்தின் அடிப்படையில் நடைபெறுவதில்லை. செப்ரம்பர் 11 முன்பு வரை தமிழீழ விடுதலைப்புலிகளே அதிகளவான தற்கொலை தாக்குதல்களை நடத்தினர். அவர்கள் இந்துக்கள். ஆனால் அவர்கள் மதத்தின் பெயரால் நடத்தவில்லை. அவர்களுக்கு இருந்தது வேறு விதமான கோபம்.
"நாங்கள் மக்களின் நன்மை மற்றும் அமைதி போன்றவற்றை கருத்தில் கொண்டு அபி நந்தனை விடுதலை செய்கிறோம்"
- இவ்வாறு அவர் தெரிவித்தார்

Ethiroli

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இது  இன்னொரு செய்திதளம்

அநீதிகளுக்கு எதிராகவே விடுதலைப் புலிகள் வீரியமான தற்கொலை தாக்குதலை நடத்தினர்
பாகிஸ்தான் பிரதமர்
இம்ரான் கான் தெரிவித்தா
ர்

விரக்தி மற்றும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளினால் ஏற்பட்ட கோபம் காரணமாகவே விடுதலைப் புலிகள் தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் மதம் சார்ந்து அவர்கள் தாக்குதல்களை நடத்தவில்லை எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

மேலும், செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு முன்னதாகவே இந்துக்களான விடுதலை புலிகள் வீரியமான தற்கொலை தாக்குதல் முறைமையை பயன்படுத்தி இருக்கின்றார்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் சிறைப்பட்டு இருக்கும் இந்திய விமானி அபிநந்தனை நாளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் இன்று (வியாழக்கிழமை) முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

குறித்த தீர்மானம் தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றிய பாகிஸ்தான பிரதமர், “இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் தற்கொலை தாக்குதல்களை மேற்கொள்வதாக இந்தியா தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றது. தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. தற்கொலை தாக்குதல்கள் மதத்தின் பெயரால் நடப்பது இல்லை. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்னதாகவே உலக அளவில் வீரியமான தற்கொலை தாக்குதலைளை விடுதலை புலிகள் நடத்தியிருந்தனர்.

விடுதலைப் புலிகள் சார்பில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் அனைவருமே இந்துக்கள். அவர்கள் மதத்தின் பெயரால் நடத்தவில்லை. மாறாக தங்களது விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே அதனை செய்தனர்” என இம்ரான் கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் வரலாற்றில் இம்ரான் கானின் இன்றைய நாடாளுமன்ற உரை வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒன்றாக சர்வதேச ரீதியில் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

விடியலை தேடிய பயணம்

3 minutes ago, விசுகு said:

புலிகளின் தற்கொலைத்தாக்குதல்கள் எல்லாம் புனிதமானதா  என்றால் தெரியாது  துளசி

ஆனால் நோக்கம் புனிதமானது

அதை  செய்தவர்கள் புனிதர்கள்

அந்தப் புனிதர்கள் ஏன் உலக அரங்கில் பயங்கரவாதிகளாக முத்திரையிடப்பட்டு, தடை செய்யப்பட்டனர்?

அந்தப் புனிதர்கள் ஏன் பல்வேறு நாடுகளில் மீள முடியாத சிறைகளில் வாடுகின்றனர்?

புலிகள் புனிதர்கள் அல்லர்.
புலிகளின் நோக்கமான தற்கொலைத்தாக்குதல்களும் புனிதம் நிறைந்தது அல்ல.

இஸ்லாமிய பயங்கரவாதிகள், மதத்தை வைத்து தற்கொலைத்தாக்குதல்  செய்கிறார்கள்.

புலிகளும் இனத்தை வைத்து, தற்கொலைத்தாக்குதல் செய்தார்கள்.

இரண்டும் ஒன்றுதான்.  இரண்டு வகையும் கேவலமானவை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, thulasie said:

நன்றி  சகோதரி

முழுமையாக  புரிந்தது

இந்தப்பக்கமே இனி தலை  வைத்துப்படுக்கமாட்டேன்

16 minutes ago, விசுகு said:

புலிகள்  ஒரு போதும் தம்மை மதம்  சார்ந்து  வரையறுத்ததில்லை

மாறாக அதை  வெறுத்தார்கள்

அதுவும்  இந்தியா  அவர்களை  வெறுக்க ஒரு  காரணம்

புலிகளை, இந்தியா வெறுக்கக் காரணம், புலிகள் இந்திய இராணுவத்தை தாக்கியதுதான்.

அதனால், புலிகள் துவம்சம் செய்யப்பட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

thulasie

காலப்போக்கில் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவை ஒட்டுமொத்த ஈழத்தமிழினமே ஓரங்கட்டவேண்டிய நிலை வரலாம் இந்தியாவை மட்டுமல்ல ஐ நா சபையைக்கூட ஓரங்கட்டவேண்டிய நிலை வரலாம் ஓரம் கட்டுவது என்றால் இராஜதந்திரரீதியில் கோர்ணர் பண்ணுவது இல்லை நேரடியாகவே இதுவரை நீங்கள் வகித்த வகிபாகத்துக்கு நன்றி இனிமேல் எங்கட அலுவலை நாங்கள் பாத்துக்கொள்கிறோம் எனக்கூறும் நிலை வரும் அதுவும் மிகக்கூடிய விரைவில் வரும் அதுக்காக மீண்டும் பிரபாகரன் புலி புலம்பெயர் புலி இவை என கற்பனையில் மிதக்கவேண்டாம் 

கஸ்மீருக்குச் சுதந்திரம் கொடுக்கப்பட்டதிலிருந்து குரங்கு அப்பம் பிறித்தகதையாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஆளுக்கு ஒரு பங்காகப் பிரிச்சுவைத்து நாற்பத்து ஏழாம் ஆண்டிலிருந்தே கஸ்மீரிய மக்களைத் துயரத்தில்தான் வைத்திருக்கிறார்கள் காரணம் இருவருக்கும் காஸ்மீர் முழுமையாக வேண்டும் அந்த மக்களது துயரத்தைப்பற்றி எவராது கவலைப்படவில்லை (இருதரப்பும்)

அதுபோல் இந்தியா எழுபதுகளிலிருந்து ஈழத்தமிழர்களைத் துயரத்திலேயே வைத்திருக்கிறது ஈழத்தமிழர்களது அனைத்துத் துயரங்களுகும் தமிழர் விரோத தேசமாகிய இந்தியாவே காரணம். 

ராஜிவ்காந்தி இறக்கும்போது ஒரு அளவு அறிவு தெரியக்கூடயவர்களாக இருந்த இளையோர் எல்லாம் இப்போது முதுமையின் ஆரம்பத்தில் உள்ளார்கள் சரி அவர்களை விடுங்கள் அதற்குப்பின் பிறந்த ஈழத்தமிழர்கள் எல்லோரும் ஒரு இராஜீவ் காந்திக்காக ஆயிரம் தடவைகள் இறந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்கிய இராணுவத்துடன் சண்டையிட்டதாகக்கூறுகிறீர்கள் இந்திய இராணுவமும் ஈபிடிபீ மண்டையன் குழுவும் செய்த அட்டகாசங்கள் சொல்லி அடங்காதவை அந்தவேளை யாழ் குடாட்டில் வாழ்ந்த இளம்பெண்களுக்கு அவர்கள் செய்த அட்டூழியங்கள் இதுவரை வெளிவராதவை இந்தப்பொறுக்கிகளது எனது தங்கை ஒருத்தரும் இரையாக்கபட்டார் அவர் இப்போது வெளிநாடு ஒன்றில் வாழ்கிறார். எனது அண்ணர் இரண்டு பெண்பிள்ளைகளது தந்தை அவரை எனது அக்காவுக்கு முன்னாலேயெ வைத்துச் சுட்டுக்கொலை செய்தார்கள் அதப்பார்த்த எனது அக்கா அன்றிலிருந்து சித்த சுவாதீனமாக இருந்து ஈற்றில் இறந்தே போனார். 

இவைகள் நடக்கும்போது சுமந்திரன் கொழும்புக் கடைகளில் பல்லிமிட்டாய் வாங்கித்திண்டு கொண்டுருக்கும் சின்னப்புள்ளை. சும்ம கண்டமேனிக்கு எழுதாதீர்கள் வடுக்களின் சாட்சியாக நாங்கள் இருக்கிறோம் விருப்பம் எண்டால் நாங்கள் கிட்டடியில இறந்துவிடுவம் அதுக்குப்பின் உங்கள் கட்டுக்கதைகளை எழுதுங்கோ. 

ஒரு ராஜீVகாந்திக்காக நாலு சந்ததி துன்பம் அனுபவிக்குது அதை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் உங்களுக்கும் மண்டையன் குழுவுடன் திரிந்த இந்திய இராணுவத்துக்கும் என்ன வித்தியாசம்.

கூடிய விரைவில் இந்தியாவை ஈழத்தமிழர் உரிமைக்கான போராட்டத்திலிருந்து ஒட்டுமொத்த ஈழத்தழர்களும் தூக்கிஎறியும் நிலை வரும். அப்போதுதான் உலகம் அறியும் தமிழன் மானங்கெட்டு நாய்களின் கால்களில் வீழ்ந்துகிடப்பவனல்ல என்பதை ஒட்டுமொத்த ஈழத்தமிழனும் அழிந்துபோனாலும் பருவாயில்லை  இந்தியாவை எமது பிரச்சனையில் தலையிடாது கலைக்கவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, thulasie said:

இஸ்லாமிய பயங்கரவாதிகள், மதத்தை வைத்து தற்கொலைத்தாக்குதல்  செய்கிறார்கள்.

புலிகளும் இனத்தை வைத்து, தற்கொலைத்தாக்குதல் செய்தார்கள்.

இரண்டும் ஒன்றுதான்.  இரண்டு வகையும் கேவலமானவை.

ஒரு இனத்தின் விடுதலைக்காக புலிகள் போராடியது கேவலமானதுதான். அதைப் புரிந்துகொண்டதால்தான் முள்ளிவாய்க்காலில் ஒட்டுமொத்தமாக தங்களை அழித்துக்கொண்டார்கள். அவர்களின் அழிவுக்குப் பின்னர் சுமந்திரன் போன்ற கழுதைப் புலிகளும் அவரின் ஏவல் செய்பவர்களும் தமிழர்களை ஏய்த்துப் பிழைக்க ஆரம்பித்துள்ளார்கள். 

இம்ரான் கான் கூறியது..

The Pakistani leader said India should analyze the phenomenon because it had nothing to do with Islamic radicalization.

He said the suicide attacks are results of desperation and humiliation, citing example form Sri Lanka where Tamil Tigers carried out several suicide bombings.

..

இது வெறும் அரசியல் வார்த்தைஜாலம். 

  • கருத்துக்கள உறவுகள்

பலவீனமான, அடக்கப்பட்ட மக்களின் பலமான உயிராயுதமே தற்கொலைத் தாக்குதல்.

இதைப் புலிகள் சரியாகவே பாவித்தார்கள். புலிகளின் அநேகமான இலக்குகள் ராணுவப் பொருளாதார இலக்குகளே. ராணுவ அரச அதிகாரிகள் மீதான தாக்குதல்களும் நடந்தன. சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. 

காஷ்மீரில் நடப்பது இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாதம் அல்ல. ஒடுக்கப்பட்ட காஷ்மீரிகளின் போராட்டம். இதை இந்திய அடக்குமுறையாளர்கள் பயங்கரவாதமாகச் சித்தரிக்கிறார்கள். அண்மையில் கொல்லப்பட்ட 40 ராணுவ வீரர்களும் கொல்லப்படவேண்டியவர்கள்தான். அவர்களுக்கு அங்கே என்ன வேலை?

இம்ரான்கான் மேற்கோள் காட்டியது, தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு மதப் பயங்கரவாதம் அவசியம் இல்லை என்பதைக் காட்டவே. புலிகளைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் நோக்கில் இல்லை என்று நினைக்கிறேன். 

1 hour ago, கிருபன் said:

ஒரு இனத்தின் விடுதலைக்காக புலிகள் போராடியது கேவலமானதுதான். அதைப் புரிந்துகொண்டதால்தான் முள்ளிவாய்க்காலில் ஒட்டுமொத்தமாக தங்களை அழித்துக்கொண்டார்கள். 

தற்கொலைத் தாக்குதல்தான் இங்கு, பேசுபொருள்.

இனத்தின் விடுதலை அல்ல.

பிறிதொரு இனம் செய்யும் தற்கொலைத்தாக்குதல் கேவலமானவை என்று ஒருவர் சொல்ல, அது யார் செய்தாலும் கேவலமானது என்று சொன்னேன்.

அவ்வளவுதான்!

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தற்கொலைப் படை தாக்குதல்களுக்கு மதம் கிடையாது".. விடுதலைப் புலிகளை மேற்கோள் காட்டி இம்ரான் பேச்சு ..

Image may contain: 1 person, text

அநீதிகளுக்கு எதிராகவேதான்... விடுதலைப் புலிகள், தற்கொலை தாக்குதல் நடத்தினர்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

என்கன்டசிறிலங்கா அரசியல்வாதிகளுக்கும்,ஒரு சில இலக்கியவாதிகளுக்கும் தான் புலிகள் தேவைப்படுகிறார்கள் பிழைப்பு நடத்த என்று பார்த்தால் இப்ப வெளிநாட்டு தலைவர்களுக்கும் புலிகள் தேவைப்படுகிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, putthan said:

என்கன்டசிறிலங்கா அரசியல்வாதிகளுக்கும்,ஒரு சில இலக்கியவாதிகளுக்கும் தான் புலிகள் தேவைப்படுகிறார்கள் பிழைப்பு நடத்த என்று பார்த்தால் இப்ப வெளிநாட்டு தலைவர்களுக்கும் புலிகள் தேவைப்படுகிறார்கள் 

பிரச்சினை என்னவெண்டால் அண்ணை, பாக்கிஸ்த்தான் காரனுக்கு இந்தியா இப்பவும் புலிகளுக்கும் தமிழருக்கும் உதவிக்கொண்டிருக்குதெண்டு எண்ணம் கண்டியளோ? அதனாலதான் தான் சிறிலங்காவுக்கு இண்டைக்கு மட்டும் உதவிக்கொண்டு வருகினமாம். 

இந்தியா புலிகளுக்கு உதவுதெண்டால், புலிகள் செய்த தற்கொலைத் தாக்குதல்களையும் ஆதரிக்கவேணும் கண்டியளோ? புலியள் செய்தால் மட்டும் விடுதலைப் போராட்டம் ஆனால், எங்கட காஷ்மீர்க்காரர் செய்தால் மட்டும் பயங்கரவாதமோ எண்டு இந்தியாவிட்டை கேட்கிறார் போல. 

நாசமாப் போனதுகள், எங்களை அழிக்கிறதில் போட்டி போட்டுக்கொண்டு செய்ததுகளே ஒழிய, என்னத்துக்கு அழிக்கிறம் எதுக்கு அழிக்கிறம் ஏன் அழிக்கிறம்  எண்டு யோசிக்காமலேயே அழிச்சுபோட்டு நிக்குதுகள். 

14 hours ago, thulasie said:

இந்துக்களான புலிகளின் தற்கொலைத் தாக்குதலினால், இந்து தேசமான இந்தியாவின் இந்துப் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் - என்று சொல்லாமல் சொல்கிறாரோ இம்ரான்.

ராஜீவை கொன்றது சுப்பிரமணியன் சுவாமி ... யார் சொன்னது புலிகள் செய்தது என்று ? உங்களுக்கு தெரிந்தது எல்லாமே புலி எதிர் ப்பா ? முதலில் விடயங்களை சரியாய் அலசி ஆராயுங்கோ 

9 hours ago, thulasie said:

தற்கொலைத் தாக்குதல்தான் இங்கு, பேசுபொருள்.

இனத்தின் விடுதலை அல்ல.

பிறிதொரு இனம் செய்யும் தற்கொலைத்தாக்குதல் கேவலமானவை என்று ஒருவர் சொல்ல, அது யார் செய்தாலும் கேவலமானது என்று சொன்னேன்.

அவ்வளவுதான்!

நீங்கள் ஒரு தமிழனாக இருக்க முற்றும் தகுதியற்ற ஒருவர் ....உங்கள் கருத்துக்கள் வெறும் புலி எதிர்ப்பு மட்டுமே .. ஒரு வரலாறும் தெரியவில்லை ....இவருக்கு கருத்திடுவது அர்த்தமற்றது ....

2 hours ago, ragunathan said:

நாசமாப் போனதுகள், எங்களை அழிக்கிறதில் போட்டி போட்டுக்கொண்டு செய்ததுகளே ஒழிய, என்னத்துக்கு அழிக்கிறம் எதுக்கு அழிக்கிறம் ஏன் அழிக்கிறம்  எண்டு யோசிக்காமலேயே அழிச்சுபோட்டு நிக்குதுகள். 

புலிகளை அழித்தது, இலங்கை இராணுவம். 

பாகிஸ்தானோ, இந்தியாவோ, அமெரிக்காவோ அழிக்கவில்லை.

இவர்கள், இலங்கை அரசிற்கு ஆயுதம் விற்றார்கள்.

அவ்வளவுதான்.

புலிகளும் ஆயுதம் வாங்கினார்கள் பல நாடுகளிடம்.

அதைப்பற்றி பேச்சில்லை.

4 hours ago, putthan said:

என்கன்டசிறிலங்கா அரசியல்வாதிகளுக்கும்,ஒரு சில இலக்கியவாதிகளுக்கும் தான் புலிகள் தேவைப்படுகிறார்கள் பிழைப்பு நடத்த என்று பார்த்தால் இப்ப வெளிநாட்டு தலைவர்களுக்கும் புலிகள் தேவைப்படுகிறார்கள் 

புலிகளின் பெயரை யார் உச்சரித்தாலும், அவர்கள் பிழைத்துக்கொள்வார்கள்.

இப்போது, இம்ரான்கான் உச்சரித்து விட்டார்.

அவரின் காட்டில் இனி மழைதான்!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, thulasie said:

புலிகளை அழித்தது, இலங்கை இராணுவம். 

பாகிஸ்தானோ, இந்தியாவோ, அமெரிக்காவோ அழிக்கவில்லை.

இவர்கள், இலங்கை அரசிற்கு ஆயுதம் விற்றார்கள்.

அவ்வளவுதான்.

புலிகளும் ஆயுதம் வாங்கினார்கள் பல நாடுகளிடம்.

அதைப்பற்றி பேச்சில்லை.

உங்களுக்குத் தெரிந்த அரசியலை வைத்துக்கொண்டு நான் கருத்தாடுவதில் ஏந்தப்பயனும் இல்லை. நீங்கள் உங்கள் பாட்டில் ஏதாவது எழுதிக்கொண்டிருங்கள்.

எனக்கு வேறு பிரயோசனமான விடயங்கள் இருக்கின்றன.

நன்றி

Just now, ragunathan said:

உங்களுக்குத் தெரிந்த அரசியலை வைத்துக்கொண்டு நான் கருத்தாடுவதில் ஏந்தப்பயனும் இல்லை. நீங்கள் உங்கள் பாட்டில் ஏதாவது எழுதிக்கொண்டிருங்கள்.

எனக்கு வேறு பிரயோசனமான விடயங்கள் இருக்கின்றன.

நன்றி

ஒவ்வொருவரும் தனக்குத்  தெரிந்தவைகளை வைத்துத்தான், கருத்தாட முடியும். 

தெரியாதவைகளை வைத்து, கருத்தாடுவதில்லை.  

கருத்தாடவும் முடியாது.

4 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text

அநீதிகளுக்கு எதிராகவேதான்... விடுதலைப் புலிகள், தற்கொலை தாக்குதல் நடத்தினர்.

ராஜீவ் காந்தியும் அநீதியான மனிதன் என்று சொல்கிறாரோ!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, thulasie said:

ராஜீவ் காந்தியும் அநீதியான மனிதன் என்று சொல்கிறாரோ!

ராஜீவ் மிக நீதியான நியாயமான மனிதன் மட்டுமல்ல மிகச்சிறந்த தலைவர்! 
போதுமா துளசி?

5 minutes ago, ஏராளன் said:

ராஜீவ் மிக நீதியான நியாயமான மனிதன் மட்டுமல்ல மிகச்சிறந்த தலைவர்! 
போதுமா துளசி?

நீங்க சொல்லும் மட்டும் எனக்குத் தெரியாது.

ராஜீவின் வயது, எனது அரசியல் அறிவுக்குச் சமன் என்று ஒரு முதியவர் சொன்னதாகக் கேள்வி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.