Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துலாபார நேர்த்திக்கடனை செலுத்திய பிரதமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பதிக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, துலாபாரம் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தார். 

53296988_407274926694707_738143935879394

திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க இந்தியாவுக்கு விஜயம் செய்த  பிரமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பதிக்கு அருகிலுள்ள ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் சென்றடைந்தார்.

அங்கிருந்து நேரடியாக திருமலைக்கு வந்தபோது அவருக்கும் அவரது பாரியாருக்கும் தேவஸ்தான அர்ச்சகர்கள் ஆலய பாரம்பரிய முறைகளில் வரவேற்பு அளித்தனர்.

அத்துடன் இன்று காலை, வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்வதற்கு முன்னர் ரணில், துலாபாரம் எனப்படும் சடங்கை நிறைவேற்றினார்.

ஏழுமலையானுக்கு வேண்டுதல் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க, துலாபாரம் எனப்படும் சடங்கின் ஒரு பகுதியாக, ஆளுயர தராசின் ஒரு தட்டில் அமர்ந்து கொண்டார். அவரது எடைக்கு நிகராக தானியங்கள் அல்லது தங்கம், வெள்ளி அல்லது பணமாக ஏதாவது சிலவற்றை இன்னொரு தட்டில் வைக்கவேண்டும் என்பது ஐதீகம்.

அவ்வாறே தனது வேண்டுதலை நிறைவேற்றிய ரணில், அதனை காணிக்கையாகவும் செலுத்தினார். 

http://www.virakesari.lk/article/51088

  • கருத்துக்கள உறவுகள்

53296988_407274926694707_738143935879394

ரணிலின் பக்கம், தராசு தாழ்ந்துள்ளதால்.... இன்னுமொரு  சாக்கு காசு... மற்றப்  பக்கம் போட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

On 3/2/2019 at 11:12 AM, tulpen said:

அதிக கடவுள் நம்பிக்கை கொண்டவர்களில் தான் மனித தன்மை அற்றவர்கள்

யதார்த்தம் உண்மையாகிறது.

 

 

5 hours ago, பிழம்பு said:

அவரது எடைக்கு நிகராக தானியங்கள் அல்லது தங்கம், வெள்ளி அல்லது பணமாக ஏதாவது சிலவற்றை இன்னொரு தட்டில் வைக்கவேண்டும் என்பது ஐதீகம்.

அவ்வாறே தனது வேண்டுதலை நிறைவேற்றிய ரணில், அதனை காணிக்கையாகவும் செலுத்தினார். 

இங்கு சாக்கு மூடைக்குள் இருப்பது மத்திய வங்கியில் அர்ச்சுனை பயன்படுத்தி கொள்ளையடித்த பணத்தின் ஒரு பகுதி தானே?

இதை இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு எப்படி கடத்திச் சென்றார் ரணில்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்த பாவம் தீர்க்க  தெலுங்கானாவிற்கே செல்லும் சிங்கள தலைமைகள்....

 

Rajapaksa_gurvayur.jpg

Ranil_Saneeswarar_01.jpg

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

53296988_407274926694707_738143935879394

ரணிலின் பக்கம், தராசு தாழ்ந்துள்ளதால்.... இன்னுமொரு  சாக்கு காசு... மற்றப்  பக்கம் போட வேண்டும்.

வேட்டிய கட்டி.... நாம வரப்  போற தேர்தலில  வென்று ஜனாதிபதி ஆவோமா என்று யோசிக்குது மனிதர்.

மகிந்தவும் தனது சகோதரரிலும் பார்க்க இவர் வெல்வதை விரும்புகிறாராம். அப்பதான் மகனுக்கு அடுத்த தேர்தலுக்கு போட்டி போட ரணில் விடுவாராம் என்று டீல்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை, ஈழத்தில், இந்துக்கோவில்களை இடித்துத் தள்ளும் பெளத்த தலைகள், திருப்பதி 'இந்துக் கடவுளுக்கு' காவடி தூக்குவது முரணாக உள்ளது.

65 வருடங்களுக்கு முன் திருப்பதி சென்னை மாகாணத்தின் ஒரு பகுதி, பண்டைய 'தமிழர்களின் எல்லைக் கோவில்' என்று இந்த தலைகளுக்கு யாராவது எடுத்துச் சொன்னல் இங்கே வருவதை நிறுத்திவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தமது தாய்மண்ணில் உள்ள கோவிலை வழிபடுகிறார்கள்!

எனக்கு ஒரு கவலை ...எங்கட சுமந்திரன் ஐயாவை ரணில் விட்டுட்டு போட்டார் ...அவரையும் இப்படி  ஊஞ்சலில் பார்க்க ஆசையாக உள்ளது ....தமிழ் மக்களின் மொத்த சாபமும் தீர வேண்டுமல்லவோ ...

  • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2019 at 9:29 PM, தமிழ் சிறி said:

53296988_407274926694707_738143935879394

ரணிலின் பக்கம், தராசு தாழ்ந்துள்ளதால்.... இன்னுமொரு  சாக்கு காசு... மற்றப்  பக்கம் போட வேண்டும்.

தோழர் , திருப்பதி தேவஸ்தான  அதிகாரிகள் அந்த சாக்கு மூட்டையை நன்றாக செக் பண்ண வேண்டும் .

This-figure-is-1-rupee-50-paise-and-25-p

கடவுளுக்கே நாமம் போடும் எமகாதர்கள் ஆனபடியால் அதில் செல்லாத 50 பைசா , 25 பைசா இருக்க வாய்ப்புள்ளது .. 😎

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

On 3/3/2019 at 3:59 PM, தமிழ் சிறி said:

53296988_407274926694707_738143935879394

ரணிலின் பக்கம், தராசு தாழ்ந்துள்ளதால்.... இன்னுமொரு  சாக்கு காசு... மற்றப்  பக்கம் போட வேண்டும்.

மற்றப் பக்கத்தில், ஒரு கட்டு கேரளா கஞ்சாவை வைத்தால், ரணிலின் எடைக்கு சமனாகி விடும்.

என்ன பாவமும் செய். யாரைக் கொலை செய்தாலும் எனக்கு பணம் தந்தால்  எல்லா பாவங்களையும் போக்குகிறேன் என று கூறும் கடவுள்  நம்பிக்கை இருக்கும் மட்டும் உலகில் குற்றச் செயல்களுக்கு  குறைவு இருக்காது. மத நம்பிக்கையை வளர்ககும் வியாபாரிகளின் மூலதனமே மக்கள் செய்யும் பாவங்கள் தான். ஆகவே மத நம்பிக கையாளர்கள் பாவம் செய்வதை ஊக்குவிப்பார்கள்.

ரணிலைக்கு பக்கத்தில் நிற்கும் கோவில்ப்  பார்ப்பான் நினைத்திருப்பான் ரணில்   அடுத்தமுறை இன்னும் அதிகம் மக்களுக்கு அநியாயம் செய்து இன்னும் பணம் கொண்டு வர வேண்டும் என்று. திருப்பதி கோவிலில் அனைத்து  இலங்கை அரசியல் வாதிகளையும் இராணுவத்தளபதிகளும் அன்புடன. உபசரிப்பதற்கு  இதுவே காரணம்.அதிக பாவம் செய்தவன் செய்யப் போகிறவனே இந்த கோவிலின் சிறந்த வாடிக்கையாளன்.(பக்தனாம்) முள்ளிவாய்கால் இரத்தக் கறையொடு மகிந்தவை வரவேற்ற திருப்பதி வெங்கடாசலபதி அவரின் பாவங்களை ஊக்குவித்தலையே செய்தார். 

உலகை காக்கும் காத்தற் கடவுள் என்று கூறப்படும் திருப்பதி வெங்கடாலசபதிக்கு மக்கள் அளிக்கும் செல்வங்களை  பாதுகாப்பது மனித அறிவியலால் உருவாக்கப்பட்ட  cctv கமராக்களே. 

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.