Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறகென்ன அந்தமாதிரி கலக்கியிருக்கிறீங்கள் , நிஜமாகவே அங்கு சைக்கிள் ஓட களைப்பில்லை, அத்துடன் பச்சை தண்ணியில் குளிக்கவும் சுகமாய் இருந்தது....... நன்றாக இருக்கு தொடருங்கள்....!  😁

  • Replies 145
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, suvy said:

பிறகென்ன அந்தமாதிரி கலக்கியிருக்கிறீங்கள் , நிஜமாகவே அங்கு சைக்கிள் ஓட களைப்பில்லை, அத்துடன் பச்சை தண்ணியில் குளிக்கவும் சுகமாய் இருந்தது....... நன்றாக இருக்கு தொடருங்கள்....!  😁

சுவி நானும் குளியலறை இருந்தாலும் கிணற்றில அள்ளித் தான் குளிப்பது.
முன்னர் எமது ஊரில் கப்பி போட்ட கிணறே இல்லை.
இப்போ துலா உள்ள கிணறு ஒன்றுமே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஈழப்பிரியன் said:

ஒருநாள் வீட்டுவேலையாக இருந்த போது பிலாப்பழம் காகம் கொத்துது என்றார்கள்.வீட்டிலிருந்தவர்களிடம் சின்ன கத்தியும் வாங்கிக கொண்டு பிலாபபழம் வெட்ட வெளிக்கிட்டாச்சு.அப்பவும் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னவா நான் தான் அங்கால இரண்டு மூன்று பொம்பிளைகளும் நிக்கினம் என்று சுதி காட்ட வெளிக்கிட்டு ஒரு 10 அடி ஏறல்லை பிலாப்பழத்துக்கு பதிலாக நான் தொப்பென்று விழுந்துகிடக்கிறேன்.நல்ல வேளை நிறைய தென்னம்பாளைகள் அடுக்கி வைத்திருந்தது.அதற்கு மேல் தான் விழுந்தது.

அப்பவும்  நான் சொன்னனான் எல்லே.......அனுபவப்பட்டவன் சொன்னால் கேக்கோனூம்....மூளையும் மனம்/குணங்களும் தான் இப்பவும் 16லை நிக்கிது. ஆனால் உடம்பு எல்லாத்துக்கும் ஓம்படாது கண்டியளோ.....:grin:

நல்லகாலம் தென்னம் பாளை காப்பாத்திட்டுது.:100_pray:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

அப்பவும்  நான் சொன்னனான் எல்லே.......அனுபவப்பட்டவன் சொன்னால் கேக்கோனூம்....மூளையும் மனம்/குணங்களும் தான் இப்பவும் 16லை நிக்கிது. ஆனால் உடம்பு எல்லாத்துக்கும் ஓம்படாது கண்டியளோ.....:grin:

நல்லகாலம் தென்னம் பாளை காப்பாத்திட்டுது.:100_pray:

இப்ப இப்படி சொல்கிறீர்கள்.இரண்டு மூன்று பொம்பிளைகள் நின்றால் என்னை அங்கால போ என்று சொல்லிப் போட்டு நீங்கள் ஏறி விழுந்திருப்பியள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஈழப்பிரியன் said:

ஒருநாள் வீட்டுவேலையாக இருந்த போது பிலாப்பழம் காகம் கொத்துது என்றார்கள்.வீட்டிலிருந்தவர்களிடம் சின்ன கத்தியும் வாங்கிக கொண்டு பிலாபபழம் வெட்ட வெளிக்கிட்டாச்சு.அப்பவும் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னவா நான் தான் அங்கால இரண்டு மூன்று பொம்பிளைகளும் நிக்கினம் என்று சுதி காட்ட வெளிக்கிட்டு ஒரு 10 அடி ஏறல்லை பிலாப்பழத்துக்கு பதிலாக நான் தொப்பென்று விழுந்துகிடக்கிறேன்.நல்ல வேளை நிறைய தென்னம்பாளைகள் அடுக்கி வைத்திருந்தது.அதற்கு மேல் தான் விழுந்தது.விழுந்த என்னை தூக்கிவிடுவம் என்றில்லை மனைவியும் அவர்களுடன் சேர்ந்து சிரிசிரி என்று சிரித்துக் கொண்டிருக்கிறா.பெரிய வெட்கமாகிப் போட்டுது.இன்னும் இந்த சரத்தைக் கட்டியிருக்க வேண்டுமா என்றிருந்து.ஒரு காலத்தில் அணில் மாதிரி மரங்களில் ஏறித்திரிந்த நினைப்பு வினையாக போயிருந்திருக்கும்.

                                               

ஈழப்பிரியன்... உங்களது, விடுமுறையை நன்றாக அனுபவித்து உள்ளமை, உங்கள் எழுத்தில் தெரிகின்றது.
வீட்டில் உள்ள மரங்களின்... பழங்களை சுவைக்கும் போது, வரும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.  :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்... உங்களது, விடுமுறையை நன்றாக அனுபவித்து உள்ளமை, உங்கள் எழுத்தில் தெரிகின்றது.
வீட்டில் உள்ள மரங்களின்... பழங்களை சுவைக்கும் போது, வரும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.  :)

சிறி எனக்கு இரண்டு டிஸ்க் விலகி ஏற்கனவே பிரச்சனை.வீட்டிலே குனிந்து சப்பாத்து போடவிட மாட்டார்கள் என்றால் நம்பவா போகிறீர்கள்.

கிராமங்களில் ஒவ்வொரு காணிக்கும் ஒவ்வொரு பெயர்கள் உண்டு.எமது காணிக்கு பெயர் தோப்பு.நீங்கள் எமது ஊரவர் என்றால் எமது வீட்டுக்கு வரும் போது இடையில் யாரும் எங்கே போகிறாய் சிறி என்று கேட்டால் ஈழப்பிரியன் வீட்டுக்கு போகிறேன் என்று சொல்ல மாட்டீர்கள்.பதிலாக தோப்புக்கு போகிறேன் என்றே சொல்லுவீர்கள்.அந்தளவு செழுமையான வளவு.இல்லாத மரங்களே இல்லை.இப்போ எல்லாமே அழிந்து விட்டன.

வீடும் அழிந்து கொண்டே போகிறது.என்ன நடக்கப் போகுதென்றே தெரியவில்லை.பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

அப்பவும்  நான் சொன்னனான் எல்லே.......அனுபவப்பட்டவன் சொன்னால் கேக்கோனூம்....மூளையும் மனம்/குணங்களும் தான் இப்பவும் 16லை நிக்கிது. ஆனால் உடம்பு எல்லாத்துக்கும் ஓம்படாது கண்டியளோ.....:grin:

 

3 hours ago, ஈழப்பிரியன் said:

இப்ப இப்படி சொல்கிறீர்கள்.இரண்டு மூன்று பொம்பிளைகள் நின்றால் என்னை அங்கால போ என்று சொல்லிப் போட்டு நீங்கள் ஏறி விழுந்திருப்பியள்.

யதார்த்தமான நகைச்சுவை. :)

பெண்கள் முன்னிலையில் ஏதாவது தீரச் செயல்களை செய்து கவரவேண்டுமென ஆண்கள் நினைத்து இப்படி மாட்டுப்படுவது இயல்பு.

தொடர் நல்லா சுவாரசியமா போகுது..:grin:

Posted

ஈழப்பிரியன் அண்ணா!

 உங்கள் தொடரை வாசிக்கும் போது நாங்களும் உங்களுடன் பயணிப்பது போல் உள்ளது.தொடருங்கள்........ ஆவலாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழப்பிரியன், கிட்டத் தட்ட நாங்களும் ஊர் போய் வந்த மாதிரி...ஒரு உணர்வு வருவதைத் தடுக்க முடியவில்லை!

தொடருங்கள்...!

நல்ல வேளை.....தென்னை மரத்தில் இளநீர் இறக்கிறன் எண்டு சொல்லி ஏறாத வரை சந்தோஷமே!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ராசவன்னியன் said:

 

யதார்த்தமான நகைச்சுவை. :)

பெண்கள் முன்னிலையில் ஏதாவது தீரச் செயல்களை செய்து கவரவேண்டுமென ஆண்கள் நினைத்து இப்படி மாட்டுப்படுவது இயல்பு.

தொடர் நல்லா சுவாரசியமா போகுது..:grin:

 

8 hours ago, ஜெகதா துரை said:

ஈழப்பிரியன் அண்ணா!

 உங்கள் தொடரை வாசிக்கும் போது நாங்களும் உங்களுடன் பயணிப்பது போல் உள்ளது.தொடருங்கள்........ ஆவலாக இருக்கின்றது.

 

5 hours ago, புங்கையூரன் said:

ஈழப்பிரியன், கிட்டத் தட்ட நாங்களும் ஊர் போய் வந்த மாதிரி...ஒரு உணர்வு வருவதைத் தடுக்க முடியவில்லை!

தொடருங்கள்...!

நல்ல வேளை.....தென்னை மரத்தில் இளநீர் இறக்கிறன் எண்டு சொல்லி ஏறாத வரை சந்தோஷமே!  

தொடங்கியாச்சு உங்கள் எல்லோரின் ஆதரவுடன் தொடர்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/12/2019 at 9:01 AM, ஈழப்பிரியன் said:

உங்களைப் பற்றியும் வரும் காத்திருங்கள்.

அப்படி என்ன இருக்கும் என்னைப்பற்றி அண்ண??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

                                               பிள்ளைகள் வெளியில் வந்தவுடன் கொழும்பு போய் சாமத்தில் உறவினரை எழுப்பி அவர்கள் பொதிகளைக் கொடுக்க வேண்டுமே என்று ரொம்பவும் மனதைக் குடைந்து கொண்டிருந்தது.எனக்கு யாரிடமாவது உதவி கேட்பதானால் ரொம்ப ரொம்ப கஸ்டமான விடயம்.இதனை பிள்ளைகளுக்கும் பழக்கி அவர்களும் பசித்தாலும் பல்லைக் கடித்துக் கொண்டிருப்பார்கள்.

                                            வந்த குறுந்தகவலைப் பார்க்க அதிர்ச்சியாக இருந்தது.எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.ஏதோ பிரச்சனை இப்போ வானுக்குள் இருந்து பகிரங்கப்படுத்த எல்லாம் பொம்பிளைகள் தெரியும் தானே ஒப்பாரி எப்படி இருக்குமென்று.மெதுவாக வெளியே வந்து அங்கு பாவித்த போன் நம்பருக்கு வைபர் அல்லது வட்சப்பில் என்னை தொடர்பு கொள்ளுமாறு குறுந்தகவல் அனுப்பிவிட்டு காத்திருந்தேன்.

                                            சிறிது நேரத்தில் மூத்தமகள் எடுத்து அப்பா இவங்கள் எங்கடை பாக்குகளை சிங்கப்பூரிலிருந்து ஏற்றவில்லையாம்.நாளைக்கு எடுத்து தருவதாகவும் எமது விலாசத்தையும் கேட்டார்கள்.நாங்கள் சுற்றுலா போகிறோம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் நிற்கப் போகிறோம் என்று ஏற்கனவே ஒழுங்கு செய்த இடங்களையும் காட்டி இப்ப எங்களுக்கு மாத்த உடுப்புமில்லை என்று வாதடி ஒரேவழி தான் இப்ப மூன்று பேருக்கும் உடுப்பு வாங்க காசு தா பாக்குகளை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பு என்று எல்லாம் ஓம் என்று போட்டினம் அங்கத்தைய விலாசத்தை சொல்லுங்கோ என்றாள்.சரி என்று விலாசத்தையும் மச்சானின் போன்நம்பரையும் கொடுத்தேன்.சரி ஒரு 10 நிமிடத்தில் வெளியே வருகிறோம்.

                                              இப்ப தான் மனதுக்கு நிம்மதியாக இருந்தது.வானுக்கு போய் கதவைத் திறக்க பெரியவர்கள் சாரதி எல்லோருமே முழித்துக் கொண்டார்கள்.சரி தம்பி பிள்ளைகள் வந்திட்டாங்கள் நீங்கள் முகத்தைக் கழுவிப் போட்டு பாத்ரூம் போட்டுவாரதென்றால் போட்டுவாங்கோ இப்ப வந்திடுவாங்கள் என்று சாரதியையும் தயார் செய்து முழித்திருந்தவர்களுக்கும் நடந்ததைச் சொன்னேன்.உடனே மாமியார் ஏன் அப்ப எங்களை எழுப்பேல்லை?ம் எழுப்பிவிட்டிருந்தா என்ன நடந்திருக்கும் இப்படி நித்திரையும் கொண்டிருக்க மாட்டீர்கள் இருந்து ஆளுக்காள் ஒப்பாரிவைச்சு பாதி உயிரை எடுத்திருப்பீர்கள் இப்ப தேத்தண்ணி ஏதாவது குடிக்கப் போறீங்களோ?ஒண்டும் வேண்டாம் பிள்ளைகள் வந்திட்டாங்களோ?ஓம் ஓம் எங்கை ஆளைக் காணேல்லை வந்தவுடன் போவோம் என்றதும் வெளியே வந்துவிட்டோம் என்று குறுந்தகவல்.சரி நல்லா பின்னுக்கு போய் நில்லுங்கோ 5 நிமிடத்தில் வந்துவிடுவோம் என்று தகவல் அனுப்பிவிட்டு அங்கை போனவுடனை ஒருதரும் இறங்க வேண்டாம் என்று வான்போய் நின்றதும் தொப்பு தொப்பென்று எல்லாம் குதிக்குதுகள்.எல்லோரும் ஆ ஊ என்று கட்டிப் பிடித்து சத்தம் போட சனமெல்லாம் எங்களைத் தான் பார்க்குது.

                                    இப்போ வீடுவீடாக அலையத் தேவையில்லை என்று ஒரு பெரிய நிம்மதி.என்ன நடந்தென்று முழுவிபரமும் சொல்லுங்கோ என்றேன்.சிங்கப்பூரில் 8 மணிநேர இடைத்தங்கல்.எங்களுக்கு லோன்ஸ் பாசிருந்தபடியால் சாப்பிட்டு நல்ல நித்திரை.கடைசி நேரம் தான் எழும்பி ஓடினது.நல்லகாலம் பிளைட்டை தவறவிட்டிருப்போம்.இஞ்சை வந்தா மூன்று பேரின் பாக்கையும் காணவில்லை.நின்று பார்த்துவிட்டு போய் கேட்டால் செக் பண்ணிப் போட்டு ஓ மிஸ் பண்ணிப் போட்டுது அடுத்த பிளைட்டில் எடுத்து தருகிறோம் என்றார்கள்.நாங்கள் ஒருகிழமை தொடர் சுற்றுலா போகிறோம் இப்ப உடுப்புமில்லை அதுக்கும் காசு தா என்று சண்டை பிடித்து ஆளுக்கு 5000 ரூபாவும் வீட்டுக்கு பாக்கையும் அனுப்புவதாக சொன்னார்கள்.இவர்கள் கொண்டுவாற பாக்கை காசு கொடுத்து அனுப்ப எவ்வளவு முயற்சி செய்தும் முடியவில்லை.இப்போ செலவுக்கு பணமும் கொடுத்து வீட்டிலேயே கொண்டு போய் இறக்கப் போகிறார்கள்.

                                              இப்போது காலியை நோக்கி போகிறோம்.நானும் சாரதியுடன் அவருக்கு பிராக்காக கதைத்துக் கொண்டு காலையில் காலி போய் சேர்ந்துவிட்டோம்.அங்கு ஒழுங்கு செய்திருந்த வீட்டு விலாசத்துக்குப் போனால் ஆச்சரியம் வீட்டு சொந்தக்காரன் ஒரு சீனன்.இரண்டுமாடி பல அறைகள் கொண்டவீடு சாரதிக்கு புறம்பாக இடம் என்று மிகவும் வசதி கொண்ட வீடு.சீனனுக்கு ஆங்கிலம் ஓரளவு சிங்களம் தெரியாது.இருந்தும் ஒரு சிங்கள இளம் பெடியனும் தாயும் அங்கேயே தங்கி வாறவர்களைக் கவனிக்கிறார்கள்.நாங்கள் உண்மையில் 10 மணிக்குத் தான் போக வேண்டும்.கொஞ்சம் வேளைக்கே போனதால் அதில் ஏதாவது சம்பாதிக்கலாமோ என்று சீனனுக்கு அதே கதை.நாங்க வேணுமென்றால் வெளியே போய் பார்த்துவிட்டு 10 மணிக்கு வரவா என இவங்களிட்டை ஒன்றும் கறக்கேலாது என்று நினைத்தோ என்னவோ சரி சரி வாங்கோ என்று ஒரு மாதிரி வழி விட்டார்.நிறைய அறைகள்.எல்லோரும் போய் கொஞ்சநேரம் தூங்கிவிட்டு காலி சுற்றி பார்க்க போய்விட்டோம்.பழைய கோட்டை மற்றும் இடங்களை சுற்றி பார்த்து கடல் நீரில் குளித்து பிற்பகல் வீடு போய் சேர்ந்தோம்.காலையில் எழும்பி கதிர்காமம் கோவிலுக்கு போறபடியால் குளித்து கோவிலுக்கு போடுற உடுப்புகளைப் போட்டுக்கொண்டு வாங்கோ அங்கை போய்நின்று மாற்றிக் கொண்டிருக்கேலாது இது மகளின் ஓடர்.சொன்னமாதிரியே எல்லோரும் வேளைக்கே எழும்பி 5 மணிக்கே தயாராகிவிட்டார்கள்.

                                                    கதிர்காமம் நோக்கிய பயணம் எவ்வளவு பெரிய நெடும்சாலை .10மணி போல் கதிர்காமம் போய் மலைக்கு போக வாகனத்தில் போகலாம் என்று வானுக்கு பதிந்து கொஞ்சநேரம் காத்திருந்து வானில் மலைக்குப் போனோம்.அங்கு எல்லாமே சிங்கள மயமாகி இருந்தது.வணங்கி விடை பெற்றாலும் எவருக்குமே பெரிய சந்தோசமில்லை.அப்படியே செல்லக் கதிரகாமம் போய் அங்கிருந்து நுவரெலியா புறப்பட்டோம்.இதற்கிடையில் சாரதி இரண்டு பெரியபழம் வாங்கி வந்தார்.அவர் ஏதோ தேவைக்காக வாங்கிறார் என எண்ணினோம்.போகும் போது இடையில் நடுரோட்டில் பெரிய யானை.எங்களுக்கு ஒரே பயம் என்னடா நடுரோட்டிலை நிற்குதென்று.சரரதியும் வாகனத்தை மெதுவாக ஓட்டினார்.நடுரோட்டில நிக்குதே எப்படி விலத்தி போக போறார் என்று எண்ணிக் கொண்டிருக்க முன் இருக்கையில் இருந்த என்னிடம் இதை யானைக்கு கொடுங்கோ என்றார்.என்ன தம்பி விளையாடுறீங்களா என்று கேட்க ஒன்றும் செய்யாது கண்ணாடியை திறந்து போட்டு இந்த பழத்தைக் கொடுங்கோ என்றார்.

7-F103684-52-F3-46-EA-B9-D2-FED3-DFDD22-

A5-C4142-A-E7-C7-4-D55-93-E0-6-B898408-D

எனக்கு அந்த பழத்தை கொடுத்து அங்கால போவதற்கிடையில் உயிரே போய்விடும் போல இருந்தது.
தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடைசி வரைக்கும் அது என்ன பழம் என்று சொல்லவில்லை .....அப்படி என்ன பழமாய் இருக்கும் அது.......!  🤨

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடருங்கள்...நீங்களும் சுவாரசியமாய் எழுதுகிறீர்கள்...பாராட்டுக்கள்  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

கடைசி வரைக்கும் அது என்ன பழம் என்று சொல்லவில்லை .....அப்படி என்ன பழமாய் இருக்கும் அது.......!  🤨

அந்தா .......டாஷ் போட்டில.....முழிச்ச படியே....குந்திக்கொண்டிருக்குது....வத்தகைப் பழம்....!

கவனிக்கேல்லையா....சுவியர்?😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, புங்கையூரன் said:

அந்தா .......டாஷ் போட்டில.....முழிச்ச படியே....குந்திக்கொண்டிருக்குது....வத்தகைப் பழம்....!

கவனிக்கேல்லையா....சுவியர்?😀

 அதொண்டுமில்லை ஈழப்பியன் பிலாப்பழம் வெட்ட ஏறி விழுந்ததிலையிருந்து எல்லாருக்கும் பெரிய பழம் எண்டவுடனை ஒரே கன்பியூஸ்...😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, suvy said:

கடைசி வரைக்கும் அது என்ன பழம் என்று சொல்லவில்லை .....அப்படி என்ன பழமாய் இருக்கும் அது.......!  🤨

 

2 hours ago, புங்கையூரன் said:

அந்தா .......டாஷ் போட்டில.....முழிச்ச படியே....குந்திக்கொண்டிருக்குது....வத்தகைப் பழம்....!

கவனிக்கேல்லையா....சுவியர்?😀

ஆமா வத்தகப்பழம் தான்.இதை யானைக்கு கொடுக்கவென்றே விற்கிறார்கள்.வடக்கிலிருந்து வரும் சாரதிகள் எல்லாமே பழகிவிட்டார்கள் போல.

3 hours ago, ரதி said:

தொடருங்கள்...நீங்களும் சுவாரசியமாய் எழுதுகிறீர்கள்...பாராட்டுக்கள்  

நீங்களெல்லாம் சேர்ந்து இழுத்தா தான் தேர் இருப்பிடம் வரும்.

2 hours ago, குமாரசாமி said:

 அதொண்டுமில்லை ஈழப்பியன் பிலாப்பழம் வெட்ட ஏறி விழுந்ததிலையிருந்து எல்லாருக்கும் பெரிய பழம் எண்டவுடனை ஒரே கன்பியூஸ்...😎

பிலாவால விழுந்தா பிறகு பொம்பிளையள் வந்தா நான் அந்தப் பக்கமே போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

 அதொண்டுமில்லை ஈழப்பியன் பிலாப்பழம் வெட்ட ஏறி விழுந்ததிலையிருந்து எல்லாருக்கும் பெரிய பழம் எண்டவுடனை ஒரே கன்பியூஸ்...😎

3733-F382-0606-41-D6-BD1-E-299195442-E7-

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/13/2019 at 4:33 AM, ஈழப்பிரியன் said:

பிலாப்பழம் காகம் கொத்துது என்றார்கள்.வீட்டிலிருந்தவர்களிடம் சின்ன கத்தியு

3733-F382-0606-41-D6-BD1-E-299195442-E7-காகம் டிசைன் ஆக தான் கொத்தியிருக்கு....

15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி என்ன இருக்கும் என்னைப்பற்றி அண்ண??

ஆனால் அவவோ நுவரெலியாவில் இரண்டு நாட்கள் போட்டு மட்டக்களப்பை தவிர்த்து விட்டா.அவ அனுப்பிய அட்டவணையைப் பார்த்ததும் யாழ் தனிக்காட்டுராசாவை பார்க்க முடியாதே என்று மிகவும் வருத்தமாக இருந்தது.அதற்காக அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, புங்கையூரன் said:

அந்தா .......டாஷ் போட்டில.....முழிச்ச படியே....குந்திக்கொண்டிருக்குது....வத்தகைப் பழம்....!

கவனிக்கேல்லையா....சுவியர்?😀

அதை பார்த்தனான் ஆனால் அது என்ன பழம் என்று சரியா விளங்கேல்ல அதுதான் ............!    🍈

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, putthan said:

3733-F382-0606-41-D6-BD1-E-299195442-E7-காகம் டிசைன் ஆக தான் கொத்தியிருக்கு....

ஆனால் அவவோ நுவரெலியாவில் இரண்டு நாட்கள் போட்டு மட்டக்களப்பை தவிர்த்து விட்டா.அவ அனுப்பிய அட்டவணையைப் பார்த்ததும் யாழ் தனிக்காட்டுராசாவை பார்க்க முடியாதே என்று மிகவும் வருத்தமாக இருந்தது.அதற்காக அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

புத்தா மேலே ஏறி நிற்பது மச்சான்.இந்தளவுக்கு ஏறி விழுந்திருந்தா அவ்வளவு தான்.செய்தியை பேப்பரில படிச்சு துயர்பகிர்வோமில பகிர்ந்திருப்பீர்கள்.மானம் போனாலும் உயிராவது மிஞ்சிச்சிதே என்று ஆறுதல்பட்டேன்.

தனிக்காட்டுராஜாவை தொடர்பு கொள்வதாக சொல்லி அவரது தொல்லைபேசி இலக்கமும் எடுத்து சுற்றுலாவின் போது சின்ன ஒரு அதிர்ச்சி கொடுக்கலாம் என்று பல எண்ணங்களுடன் இருந்து கடைசியில் தவறவிட்டுவிட்டேன்.எனக்கு எப்போதுமே சொன்னதைச் செய்யவில்லை என்றால் மிகவும் வருத்தமாக இருக்கும்.அவர் விரும்பினால் என்ன விரும்பாவிட்டாலும் இப்போது சுமையை இறக்கி வைத்த மாதிரி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

                                       நுவரெலியா நோக்கி போகும் போது இராவணன் சீதையை கொண்டு வந்து வைத்திருந்த இடம் எல்லோரும் போய் பார்ப்பார்கள் நாங்களும் பார்த்துவிட்டு போகலாம் என்று சாரதி சொன்னார்.சரி என்று போய்க் கொண்டிருந்தால் பெரியதொரு நீர்வீழ்ச்சி நியைற கூட்டம் நடைபாதை வியாபாரிகள் இறங்கி பார்க்கும் போது நல்லதொரு இயற்கை காட்சியாக நிறைய பேர் இறங்கி குளித்தும் கொண்டிருந்தனர்.பிள்ளைகள் எல்லோரும் இறங்கி குளித்தனர்.

A121830-C-F68-E-4-FBA-AA1-F-75-B55-AB546

                                       நீர்வீழ்ச்சியில் அதிகநேரம் போய்விட்டதால் சீதா சிறை இருந்த இடத்தை முழுமையாக பார்க்கவில்லை.நுவரெலியாவில் ஒழுங்கு செய்திருந்த வீடு ஒரு பங்களா.இருப்பிடத்துடன் சமையல்காரரும் சேர்த்தே பணம் அறவிட்டிருந்தனர்.

                                       அவர்களது தொலைபேசிக்கு அழைத்து பேசியபோது அவர்கள் தமிழர்கள் ஆக இருக்க தமிழில் பேசியதும் அவர்களுக்கு நல்ல சந்தோசம்.எமக்கும் தான்.நாங்கள் இத்தனை மணிக்கு வருவோம் சமையல் சாப்பாடு ஏதாவது ஒழுங்கு பண்ணமுடியுமா கடையில் வாங்கிவரவா என ஐயா உங்களுக்கு என்ன என்ன வேண்டுமென்று மட்டும் சொல்லுங்கோ எல்லாம் வாங்கி சமைத்து வைத்திருப்போம் கடையில் எதுவுமே வாங்க வேண்டாம் சாமானுகளுக்கு பில்லைத் தருகிறோம் நீங்கள் வந்த பின் பணத்தைத் தாங்கோ என்றார்கள்.இரண்டு மூன்று நாள் சரியாக சோறுகறி சாப்பிடவில்லை ஆதலால் எல்லோருக்கும் சோறுகறி தான் விருப்பம்.மீன் கோழி பருப்பு சலாட் இவை முக்கியம் முடிந்தால் ஏதும் பலகாரம். நீங்கள் வரும்போது எல்லாமே தயாராக இருக்கும் வாங்கோ என்றார்கள். 

6-BD20-D67-0-E61-47-C8-B210-D7640-FBBE9-

                                       தேயிலைத்தோட்டத்துக்குள்ளால் ஓடி ஒரு பங்களாவை சென்றடைந்தோம்.எவ்வளவு பெரிய பங்களா.வெள்ளைக்கார துரைமார் இங்கிருந்து தான் எமது மக்களின் முதுகுகளில் சவாரி விட்டிருக்கிறார்கள் என எண்ணும் போது கோபமாக இருந்தது.இங்கும் பெரிய பெரிய அறைகள்.சாரதிக்கு தனியாக பாத்ரூமுடன் கூடிய அறை.சாப்பாட்டறையே ஒரு வீடு மாதிரி.வீடு பராமரிப்பவர் ஒரு சிங்களவர்.நன்றாக பழகினார்.இரு ஆண்கள் ஒரு பெண் சமையலுக்கும் உதவிகளுக்கும்.ஒருவர் காவல் கடமைகளுக்காக.அமெரிக்காவிலிருந்து வருவதாக சொன்னதும் ஏதோ வெள்ளைக்காரர் தான் வரப் போகிறார்கள் என்று நினைத்துவிட்டார்கள்.இரண்டு நாட்கள் இங்கு நின்றோம்.விதவிதமான சாப்பாடு பிள்ளைகள் சொல்லச் சொல்ல வேறு என்ன வேண்டும் என்று கேட்டு கேட்டுச் செய்தார்கள்.தேயிலை தொழிற்சாலை பார்க்க ஒழுங்குபண்ணி தந்தார்கள்.இரண்டு நாள் சுற்றிதிரிவதும் அந்த மாதிரி சாப்பாடு.

16725-D24-92-B8-4174-BDE4-D1-B4436-E0-D4

                                                வெளிக்கிடும் நாள் வந்ததும் எத்தனையோ காலமாக வேலை செய்கிறோம் இந்த முறை தான் மனதுக்கு மிகவும் சந்தோசமாக இருப்பதாக சொன்னார்கள்.புறப்படும் போது எல்லோருக்கும் நிறையவே அன்பளிப்பு கொடுத்தோம்.அந்த அம்மா எதிர்பாராமல் காலில் வந்து வீழ்ந்தா.எனக்கு என்ன செய்வதென்றே தெரியலை.கண்கள் குளமாகிவிட்டன.நாங்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் தேயிலை வாங்க தலவாக்கலைக்கு ஒருவரை கூட அனுப்பி வைத்தார்கள்.அவருடன் நம்பர் வண் தேயிலை என்று வாங்கித் தந்தார்.எல்லோருக்கும் தேவையான தேயிலை இங்கு நண்பர்களுக்கு என்று நிறைய வாங்கினார்கள்.

                                             அவரிடமிருந்தும் விடை பெற்று கண்டி நோக்கி போக வெளிக்கிட இருந்தா போல பின்னுக்கிருந்தவர்கள் எல்லாம் ஐயோ அம்மா குய்யோ என்று ஒரோ கதறல்.எடுத்த வானை நிற்பாட்டி நானும் பரபரத்துக் கொண்டு இறங்க சனமும் கூடிவிட்டது.

தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வர...வர....எல்லாரும்.....எந்த இடத்தில......சஸ்பென்ஸ் ....வைக்கிறது....எந்த இடத்தில....தொடரை நிப்பாட்டிப் போட்டு...நித்திரைக்குப் போறது.....எண்டு வடிவாய்ப் பழகி வைச்சிருக்கினம்....! 

ரென்சன்........ரென்சன்......ரென்சன்.....!!!😚

  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, புங்கையூரன் said:

வர...வர....எல்லாரும்.....எந்த இடத்தில......சஸ்பென்ஸ் ....வைக்கிறது....எந்த இடத்தில....தொடரை நிப்பாட்டிப் போட்டு...நித்திரைக்குப் போறது.....எண்டு வடிவாய்ப் பழகி வைச்சிருக்கினம்....! 

ரென்சன்........ரென்சன்......ரென்சன்.....!!!😚

அப்பவாச்சும் இந்தப் பக்கம் வரமாட்டார்களா?வந்தவர்கள் என்னவாகி இருக்கும் என்று பார்ப்பார்களா?

இப்படி ஒரு எண்ணம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழப் பிரியன் நினைத்ததுபோல்  இதற்கெண்டாலும் பதில் எழுதாமல் நித்திரை வராதாம். வேறென்ன அங்க இருக்கும் அந்த அட்டை யாரையோ பதம் பார்த்திருக்கிறது என் நினைக்கிறேன். அங்குள்ள அட்டை கடித்தால் இரத்தத்தை உறிஞ்சி விடும். புங்கையின் ரென்சன் குறைந்து விட்டதா. பயணத் தொடர் மிக அருமையாக செல்கிறது. தொடருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.