Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடலை பருப்பு செய்முறை - ரதிக்காக

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ரதியாவது வடை சுட்டுக் போடுறதாவது 😀

அய்யர் மார் சுடும் கோயில் வடையும் எதுவும் போடாமல் தான் செய்யிறவை. இவ்வளவத்தையும் அவை சாப்பிட்டு முடிச்சிருப்பினை. நீங்கள் கவலைப்படாதேங்கோ.😀

சரியா சொன்னீர்கள். இன்னும் இருக்கா என்றுதான் கேட்டார்கள். எல்லாம் ஒண்டா போட்டு அரைச்சிருக்கு . மேலதிகமாக வெட்டியும் போடலாம் 

  • Replies 147
  • Views 15.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nilmini said:

சரியா சொன்னீர்கள். இன்னும் இருக்கா என்றுதான் கேட்டார்கள். எல்லாம் ஒண்டா போட்டு அரைச்சிருக்கு . மேலதிகமாக வெட்டியும் போடலாம் 

சாப்பிட வந்தவர்கள் எல்லாம் நல்ல பசியில காஞ்சுபோய் வந்தவர்கள் போல இருக்கிது!😋😂

வெங்காயமும் செத்தல் மிளகாயும் வெட்டிப்போட்டு கடலை வடை செய்தால்  அதன் ருசியே தனி!

Edited by Eppothum Thamizhan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

சாப்பிட வந்தவர்கள் எல்லாம் நல்ல பசியில காஞ்சுபோய் வந்தவர்கள் போல இருக்கிது!😋😂

வெங்காயமும் செத்தல் மிளகாயும் வெட்டிப்போட்டு கடலை வடை செய்தால்  அதன் ருசியே தனி!

சில பேருக்கு எப்படி எத்தனை தரம் சொன்னாலும் மண்டைக்கு ஏறாது. எல்லாம் போட்டு அரச்சு கிடக்கு. இங்க ஒருத்தரும் காஞ்ச மாடுகள் இல்ல.ருசிக்கு தான் சாப்பிறது

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nilmini said:

சில பேருக்கு எப்படி எத்தனை தரம் சொன்னாலும் மண்டைக்கு ஏறாது. எல்லாம் போட்டு அரச்சு கிடக்கு. இங்க ஒருத்தரும் காஞ்ச மாடுகள் இல்ல.ருசிக்கு தான் சாப்பிறது

ரீச்சர் நீங்க தடி எடுத்தாத்தால்த் தான் அடங்குவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

ரீச்சர் நீங்க தடி எடுத்தாத்தால்த் தான் அடங்குவார்கள்.

சிரித்து சிரித்து வயிறு நோகிறது🤣

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியை அவர்களே வெங்காயத்தை கடலையுடன் அரைக்காமல் சிறிதாக நறுக்கி போடுவது தான் காலங்காலமா செய்முறையா இருந்தது, நாட்டாமை இதுக்கொரு தீர்ப்பு சொல்லுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

ரதிக்காக என்று பிரத்தியேகமாக கடலைப் பருப்புவடை செய்ய குறிப்பு வந்தால் செய்யத்தானே வேண்டும். ஆனால் மார்க்ஸ் போட இரண்டு சாம்பிளாவது எங்களுக்கும் காட்டியிருக்கலாம்! மொறுமொறுவென்று  வந்ததா இல்லை உப்பின தவக்காய் மாதிரி வந்ததா என்று சொல்ல சந்தர்ப்பம்  கிடைக்கேல்லை!

இன்னும் மிச்சம் இருக்கு வீட்டுப் பக்கம் வந்தால் சாப்பிட்டு பார்க்கலாம்...அப்பிடியே தெரியும் வீட்டில சுட்டது என்டு😋 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

பேராசிரியை அவர்களே வெங்காயத்தை கடலையுடன் அரைக்காமல் சிறிதாக நறுக்கி போடுவது தான் காலங்காலமா செய்முறையா இருந்தது, நாட்டாமை இதுக்கொரு தீர்ப்பு சொல்லுங்கோ!

இது கவுண்டமணி  செந்தில், வடிவேலு  ஜோக் எல்லாம் தாண்டி போய்கொண்டு இருக்கு . ஐயோ எல்லாம் போட்டது வெங்காயத்தை விட. கடலை வடைக்கு வெங்காயம் போடாமல் உள்ளி போட நல்லா இருக்கு. உளுந்து வடைக்கு வேண்டுமானால் சின்ன வெங்காயம் நறுக்கி போடலாம். கால ஓட்டத்தில் சில மாறுதல்கள் வரும்தானே? அதுவுக்கும் ருசியாக இருந்தால் ட்ரை பண்ண வேண்டியது தானே? எங்க ஒருக்கா நாட்டாண்மைய கூப்பிடுங்கோ தீர்ப்புக்கு 

Edited by nilmini

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/1/2019 at 11:52 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அய்யர் மார் சுடும் கோயில் வடையும் எதுவும் போடாமல் தான் செய்யிறவை.

ஐய்யர்மார்  மடைப்பள்ளியிலை உள்ள மிச்ச சொச்சம் மிஞ்சினது கூட்டி அள்ளினது எல்லாத்தையும் சேர்த்து அரைச்சு வடையாய் சுட்டுத்தருவினம்....அது நல்லாய்த்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

பேராசிரியை அவர்களே வெங்காயத்தை கடலையுடன் அரைக்காமல் சிறிதாக நறுக்கி போடுவது தான் காலங்காலமா செய்முறையா இருந்தது, நாட்டாமை இதுக்கொரு தீர்ப்பு சொல்லுங்கோ!

சரியாய்  சொன்னீர்கள் ஏராளன். சிலருக்கு பகிடியும் விளங்கிறதில்லை, செய்முறையை சரியாக சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியறதில்லை.

ரதி நீங்கள் இனி கடலை வடை செய்யும்போது கடலையை வேறாக அரைத்து,  வெங்காயத்தையும் செத்தல் மிளகாயையும் சிறிது  சிறிதாக வெட்டி கொஞ்சம் எண்ணையிலை வதக்கி பின்னர் இரண்டையும் சேர்த்து கருவேப்பிலை துண்டுகளுடன் அரைத்த மாவை  மெதுவாக பிசைந்து  செய்து பாருங்கள் ருசியின் வித்தியாசத்தை?

என்னதான் போட்டு அரைச்சாலும் கருவேப்பிலை துண்டாவது வெளியில தெரிய வேண்டாமோ??😜

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nilmini said:

சில பேருக்கு எப்படி எத்தனை தரம் சொன்னாலும் மண்டைக்கு ஏறாது. எல்லாம் போட்டு அரச்சு கிடக்கு. இங்க ஒருத்தரும் காஞ்ச மாடுகள் இல்ல.ருசிக்கு தான் சாப்பிறது

உந்த வடையையே ருசிச்சு சாப்பிட்டால் ஒழுங்கா வடை செய்து கொடுத்தால்  எப்பிடி சாப்பிடுவினம் எண்டு கொஞ்சம் யோசிச்சன். இல்லை கோயில் வடை மாதிரித்தான் செய்வன் என்று அடம்பிடித்தால் அது உங்கள் இஷ்டம். ஆனால் மற்றவர்களையாவது ருசியான வடை சாப்பிட விடலாமே! 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Eppothum Thamizhan said:

சரியாய்  சொன்னீர்கள் ஏராளன். சிலருக்கு பகிடியும் விளங்கிறதில்லை, செய்முறையை சரியாக சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியறதில்லை.

ரதி நீங்கள் இனி கடலை வடை செய்யும்போது கடலையை வேறாக அரைத்து,  வெங்காயத்தையும் செத்தல் மிளகாயையும் சிறிது  சிறிதாக வெட்டி கொஞ்சம் எண்ணையிலை வதக்கி பின்னர் இரண்டையும் சேர்த்து கருவேப்பிலை துண்டுகளுடன் அரைத்த மாவை  மெதுவாக பிசைந்து  செய்து பாருங்கள் ருசியின் வித்தியாசத்தை?

என்னதான் போட்டு அரைச்சாலும் கருவேப்பிலை துண்டாவது வெளியில தெரிய வேண்டாமோ??😜

அடுத்த முறை செய்யும் போது நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்க்கிறேன்...நன்றி .

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நில்மினி, இணைத்த, கடலை வடையை...
3560 ஆட்கள் பார்வையிட்டும்,
137 ஆட்கள் பதிவும் இட்டுள்ளார்கள் என்பது, 
மிக்க.... மகிழ்ச்சியாக,  உள்ளது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நில்மினி, இணைத்த, கடலை வடையை...
3560 ஆட்கள் பார்வையிட்டும்,
137 ஆட்கள் பதிவும் இட்டுள்ளார்கள் என்பது, 
மிக்க.... மகிழ்ச்சியாக,  உள்ளது. 

நன்றி. மிகவும் மகிழ்ச்சி. உண்மையிலேயே நான் நன்றாக சமைப்பேன். குறைந்த நேரத்தில் இருக்கும் பொருட்களை வைத்து நல்ல யாழ்ப்பாணத்து சமையல் முறைகள் சிலவும் எழுதி வைத்திருக்கிறேன். விரைவில் எல்லோரிடமும் பகிர்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nilmini said:

நன்றி. மிகவும் மகிழ்ச்சி. உண்மையிலேயே நான் நன்றாக சமைப்பேன். குறைந்த நேரத்தில் இருக்கும் பொருட்களை வைத்து நல்ல யாழ்ப்பாணத்து சமையல் முறைகள் சிலவும் எழுதி வைத்திருக்கிறேன். விரைவில் எல்லோரிடமும் பகிர்கின்றேன்.

நில்மினி,  நீங்கள் படித்த படிப்பிற்கு....
சமையல் ...குறிப்பு, எமக்கு தேவையே...  இல்லை.
அறிவியல்... சம்பந்தப்  பட்ட  விடயங்களை.. எழுதுங்களேன். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி,  நீங்கள் படித்த படிப்பிற்கு....
சமையல் ...குறிப்பு, எமக்கு தேவையே...  இல்லை.
அறிவியல்... சம்பந்தப்  பட்ட  விடயங்களை.. எழுதுங்களேன். 

அதுதானே ..... நாங்கள் கடலை வடை உடைந்தால் பக்கோடாவாகவும் உளுந்து வடை உதிர்ந்தால் குழம்பாகவும் மாத்தி எப்படியோ சாப்பிட்டு விடுவோம்.... ஆனால் அறிவுதான் கொஞ்சம் கம்மி. அதை நீங்கள் வளர்த்து விடுங்கள் நில்மினி....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி,  நீங்கள் படித்த படிப்பிற்கு....
சமையல் ...குறிப்பு, எமக்கு தேவையே...  இல்லை.
அறிவியல்... சம்பந்தப்  பட்ட  விடயங்களை.. எழுதுங்களேன். 

4 hours ago, suvy said:

அதுதானே ..... நாங்கள் கடலை வடை உடைந்தால் பக்கோடாவாகவும் உளுந்து வடை உதிர்ந்தால் குழம்பாகவும் மாத்தி எப்படியோ சாப்பிட்டு விடுவோம்.... ஆனால் அறிவுதான் கொஞ்சம் கம்மி. அதை நீங்கள் வளர்த்து விடுங்கள் நில்மினி....!   😁

அதில்லை விசயம் சிறியர்,

இங்கே முக்கியமாக வேலையில் வரும் டென்ஷன் குறைக்கவே பலர் வருகின்றனர்.

அவர் வடையுடன் வந்தாரெனில், எவ்வளவுக்கு ரிலாக்ஸ் ஆகலாம்   பீல் பண்ணி வந்து இருக்கிறார் என்பதை புரிந்து, அதற்கான ஆதரவை தருவோம் என்பதே எனது கருத்து.

இங்கேயும் வந்து வேலை விசயமா எழுதுங்க எண்டால், நியாயமில்லை.

உதாரணமாக, தமிழ்சிறி, என்ற ஒருவர், வேலையில் லீவு எடுத்த விதம் குறித்து எழுதப் போய், ஏனடா இங்கே சொன்னோம் என்று டென்ஷன் ஆக்கி விட்டோமா, இல்லையா?

 அவர் சமையல் குறிப்பும் தரட்டும். வசதியான போது, வேறு விபரங்களும் தரட்டும். 

என்ன, நீங்கலாமா இங்க என்று தர்மசங்கடத்துக்கு ஆளாக்கினால், ஒதுங்கிவிடுவார்கள்.

பிறகு என்னைய மாதிரி, நாதாரிகளிடம் மாட்டி, சின்னாபின்னமாவீர்கள் என்று எச்சரிக்க கடமைப்பட்டுள்ளேன். 😁

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2019 at 5:10 PM, குமாரசாமி said:

ஐய்யர்மார்  மடைப்பள்ளியிலை உள்ள மிச்ச சொச்சம் மிஞ்சினது கூட்டி அள்ளினது எல்லாத்தையும் சேர்த்து அரைச்சு வடையாய் சுட்டுத்தருவினம்....அது நல்லாய்த்தான் இருக்கும்.

சரியாக சொன்னீர்கள் . புழிஞ்ச தேங்காப்பூ , பழுதப்போன கோவா எல்லாம் போட்டு அரைச்சு சுட்டு போடுவினம் 

On 4/3/2019 at 2:27 AM, Eppothum Thamizhan said:

சரியாய்  சொன்னீர்கள் ஏராளன். சிலருக்கு பகிடியும் விளங்கிறதில்லை, செய்முறையை சரியாக சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியறதில்லை.

ரதி நீங்கள் இனி கடலை வடை செய்யும்போது கடலையை வேறாக அரைத்து,  வெங்காயத்தையும் செத்தல் மிளகாயையும் சிறிது  சிறிதாக வெட்டி கொஞ்சம் எண்ணையிலை வதக்கி பின்னர் இரண்டையும் சேர்த்து கருவேப்பிலை துண்டுகளுடன் அரைத்த மாவை  மெதுவாக பிசைந்து  செய்து பாருங்கள் ருசியின் வித்தியாசத்தை?

என்னதான் போட்டு அரைச்சாலும் கருவேப்பிலை துண்டாவது வெளியில தெரிய வேண்டாமோ??😜

 வெங்காயத்தையும் செத்தல் மிளகாயையும் சிறிது  சிறிதாக வெட்டி கொஞ்சம் எண்ணையிலை வதக்கி பின்னர் இரண்டையும் சேர்த்து கருவேப்பிலை துண்டுகளுடன்அரைப்பது நன்றாக இருக்கும் போல தான் இருக்கு குறிப்புக்கு நன்றி 

11 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி,  நீங்கள் படித்த படிப்பிற்கு....
சமையல் ...குறிப்பு, எமக்கு தேவையே...  இல்லை.
அறிவியல்... சம்பந்தப்  பட்ட  விடயங்களை.. எழுதுங்களேன். 

இன்றிலிருந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் அறிவியல் குறிப்புகள் சிலவற்றை நிச்சயம் பகிர்கிறேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

அதுதானே ..... நாங்கள் கடலை வடை உடைந்தால் பக்கோடாவாகவும் உளுந்து வடை உதிர்ந்தால் குழம்பாகவும் மாத்தி எப்படியோ சாப்பிட்டு விடுவோம்.... ஆனால் அறிவுதான் கொஞ்சம் கம்மி. அதை நீங்கள் வளர்த்து விடுங்கள் நில்மினி....!   😁

நான் மருத்துவ கல்லூரியில் உடற்கூறியல் (Anatomy) கற்றுக்கொடுக்கிறேன் . என்னிடம் 165 பிள்ளைகள் கற்கிறார்கள் . lab வேளையில்  மனித உடல்களை ஒவ்வொரு  உறுப்புகளாக கூறு போட்டு கற்றுக்கொடுப்போம் . 4 மாணவ, மாணவிகளுக்கு ஒரு உடல் வீதம் 45 உடல்களை பதப்படுத்தி வைத்திருக்கிறோம். எனக்கு என்று தனியாக ஒரு உடல் இருக்கு. அவர்  ஒரு  விண்வெளி பொறியியலாளர் ஆக  இருந்துள்ளார்வயது 80. நுரை ஈரலில் தண்ணி கட்டி மூச்சு முட்டி இறந்துள்ளார். போன கிழமை அவரது இருதயத்தை அவதானித்த போதுதான் தெரிந்தது அவருக்கு 4 முறை திறந்த இதய சத்திர சிகிச்சை செய்துள்ளார்கள் என்று. மிகுதி  இன்னொரு நாளில். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

அதில்லை விசயம் சிறியர்,

இங்கே முக்கியமாக வேலையில் வரும் டென்ஷன் குறைக்கவே பலர் வருகின்றனர்.

அவர் வடையுடன் வந்தாரெனில், எவ்வளவுக்கு ரிலாக்ஸ் ஆகலாம்   பீல் பண்ணி வந்து இருக்கிறார் என்பதை புரிந்து, அதற்கான ஆதரவை தருவோம் என்பதே எனது கருத்து.

இங்கேயும் வந்து வேலை விசயமா எழுதுங்க எண்டால், நியாயமில்லை.

உதாரணமாக, தமிழ்சிறி, என்ற ஒருவர், வேலையில் லீவு எடுத்த விதம் குறித்து எழுதப் போய், ஏனடா இங்கே சொன்னோம் என்று டென்ஷன் ஆக்கி விட்டோமா, இல்லையா?

 அவர் சமையல் குறிப்பும் தரட்டும். வசதியான போது, வேறு விபரங்களும் தரட்டும். 

என்ன, நீங்கலாமா இங்க என்று தர்மசங்கடத்துக்கு ஆளாக்கினால், ஒதுங்கிவிடுவார்கள்.

பிறகு என்னைய மாதிரி, நாதாரிகளிடம் மாட்டி, சின்னாபின்னமாவீர்கள் என்று எச்சரிக்க கடமைப்பட்டுள்ளேன். 😁

தங்கள் அக்கறையான பதிவுக்கு மிகவும் நன்றி. வேலை பளு சிலவேளை மிகவும் அதிகம்தான். ஆனால் நிறைய லீவு நேரங்களும் கிடைக்கும். எனக்கு மருத்துவ படிப்பு சம்பந்தமான குறிப்புகள், எனது அனுபவங்கள், சமையல் மற்றும் தோட்டம் சம்பந்தமான விடயங்களை பகிர பிடிக்கும். ஆன்மிகம் சம்பந்தமான புத்தகங்கள், விடியோக்கள் நிறைய படிப்பேன் பார்ப்பேன். அடுத்த கிழமை பிலடெல்லபியாவில் சற்குருவின் நிகழ்ச்சிக்கு போகிறேன். யாழ் தளத்தில் நிறைய பகிரலாம் இன்று நினைக்கிறன். தங்கள் எல்லோருடைய வரவேற்புக்கு ஆதரவுக்கும் மிகவும் நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nilmini said:

சரியாக சொன்னீர்கள் . புழிஞ்ச தேங்காப்பூ , பழுதப்போன கோவா எல்லாம் போட்டு அரைச்சு சுட்டு போடுவினம் 

சித்திரா பறுவம் அதுவுமா ஐயர்மாரை இப்படியா சொல்கிறது?
சிவசிவா அபத்தம் அபத்தம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/19/2019 at 1:45 PM, ஈழப்பிரியன் said:

சித்திரா பறுவம் அதுவுமா ஐயர்மாரை இப்படியா சொல்கிறது?
சிவசிவா அபத்தம் அபத்தம்.

சும்மா பகிடிக்கு தான் சொன்னான். ஐயர்மாரில நல்ல மரியாதை இருக்கு. அம்மம்மா சொல்லி தந்தவ 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கடலைவடை கடையை இன்னுமா சாத்தல்ல :grin: ரதியெல்லாம் சுடுதண்ணி வைக்கவே ஆயிரம் கேள்வி கேட்கும் இதுக்குள்ள வடை செய்ய சொல்லி கொடுப்பதென்றால் அதை கற்றுக்கொள்வதென்றால் பல யுகங்கள் செல்லலாம் 🧐

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.