Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிக்குவுக்கு புற்றுநோய்: கோயிலை அபகரித்து விகாரை அமைத்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mullaitivu-Semmalai-Problem.jpg

பிக்குவுக்கு புற்றுநோய்: கோயிலை அபகரித்து விகாரை அமைத்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

முல்லைத்தீவில் கோயிலை அபகரித்து விகாரை அமைத்த பௌத்த பிக்குவுக்கு புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் அவர் நீதிமன்றில் ஆஜராகாததால் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து தொல்பொருள் இடமாக பிரகடனப்படுத்தியதுடன் குருகந்த ரஜமஹா விகாரையையும், பிரமாண்ட புத்தர் சிலையையும் அமைத்துள்ள பிக்குவுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பிக்கு நீதிமன்றில் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த ஆலயம் தொடர்பான வழக்கு இன்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றது.

இவ்வழக்கு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படவிருந்த நிலையில் பௌத்த பிக்கு சார்பில் ஆஜரான சட்டத்தரணி, குறித்த வழக்கின் ஒருதரப்பான பௌத்த பிக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சிகிச்சைக்கு சென்றுள்ளதன் காரணமாக மன்றில் ஆஜராக முடியவில்லை எனவும் மன்றில் தெரிவித்தார் .

இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்பை வரும் ஏப்ரல் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

http://athavannews.com/பிக்குவுக்கு-புற்றுநோய்/

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லையே ! சில சமயங்களில் கொடிய நோய்களும் தாக்க வேண்டிய ஆட்களைத் தாக்கும் எனத் தோன்றுகிறது (கொடிய நோயே செய்த பாவத்தின் விளைவு எனும் மூட நம்பிக்கை ஒரு புறம் இருக்கட்டும். புற்றுநோய் இப்போதெல்லாம் பலரையும் கொல்லும் நோய் என்பதும் வேறு விடயம்).

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தை ஏமாத்தலாம்... 

நீராவியடிப் பிள்ளையார் விளையாடிக் போட்டார்.... 

இனி பயப்படுவினம்...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுப.சோமசுந்தரம் said:

2 hours ago, Nathamuni said:

சட்டத்தை ஏமாத்தலாம்... 

நீராவியடிப் பிள்ளையார் விளையாடிக் போட்டார்.... 

இனி பயப்படுவினம்...

புற்றுநோய் உங்களுக்கு  அல்லது நீங்கள்  நேசிப்பவர்களுக்கு  வரும் போது  இங்கு  நீங்கள்  எழுதியதை  மறக்காமல்  மீண்டும்  வந்து  படித்து  விளங்கி  கொள்ள  பாருங்கள்.  புத்தருக்கும்   மேலான  ஞானம்  பிறக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் மிகுந்த மனிதாபிமானிகள், யார் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவம்! ஆனா எங்களுக்கு அடிச்சு உங்கடை கை நோகுதே என்றது தான் இப்ப கவலை.
 
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Jude said:

புற்றுநோய் உங்களுக்கு  அல்லது நீங்கள்  நேசிப்பவர்களுக்கு  வரும் போது  இங்கு  நீங்கள்  எழுதியதை  மறக்காமல்  மீண்டும்  வந்து  படித்து  விளங்கி  கொள்ள  பாருங்கள்.  புத்தருக்கும்   மேலான  ஞானம்  பிறக்கும்.

நீஙகள் அறப்படிக்க வேண்டியதில்லை. 

திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பார்கள்.

அதிகாரத்தையும், பலத்தையும் வைத்துக் கொண்டு, மமதையுடன் பேயாட்டம் ஆடிவிட்டு, அதற்கான தெய்வ தண்டணை வழங்கப்பட்டால், இப்படி தான் சொல்வீர்களா?

நீஙகள் வாழும் வீட்டை, அவ்வூர் நாட்டாமை, போலீஸ் பலத்துடன் கைப்பற்றி, உங்களை குடும்பத்துடன் நடுவீதியில் விட்டெறிந்திருந்தால், என்ன செய்வீர்கள். 

ஒரு இந்து ஆலயம், இரண்டாயிரம் வருசத்துக்கு முன்னர் பெளத்த ஆலயம் இருந்த இடமாம் என்று அலம்பறை பண்ணி வழிபட விடாமல் தெய்வநிந்தனை. கூடவே, அரச, தொல்லியல், போலீஸ் துணை.

தனிப்பட்ட ரீதியில், ஒருவருக்கு இந்தநிலைமை வருவதை ஏற்றுக்கொள்ள முடியாதாயினும் இது, இன்னுமோர் மதரீதியான அநீதி, அடாத்து செய்யலாம் என்று நிலையில் சிந்தனை செய்பவரை தடுக்கும் என்கிறேன்.

நீஙகள் இந்து அல்லது  பெளத்தர் இல்லாவிடில் இதில் மூக்கை நுழைக்க தேவையில்லை நண்பரே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Jude said:

புற்றுநோய் உங்களுக்கு  அல்லது நீங்கள்  நேசிப்பவர்களுக்கு  வரும் போது  இங்கு  நீங்கள்  எழுதியதை  மறக்காமல்  மீண்டும்  வந்து  படித்து  விளங்கி  கொள்ள  பாருங்கள்.  புத்தருக்கும்   மேலான  ஞானம்  பிறக்கும்.

அந்த மதவெறியன் இந்துக் கோயிலை புத்த விகாரையாக மாற்றியதைப் போல் வேறொருவன் புத்த விகாரையை இந்துக் கோயிலாக மாற்றினாலும் இதே போல் நிந்தனை செய்வேன். தீவினையின் பயனே நோய் என்பது மூடநம்பிக்கை. ஆனால் நோயைச் சொல்லி நிந்திப்பது கையறு நிலையின் வெளிப்பாடு. 'பரந்து கெடுக இவ்வுலகியற்றியான்' என்று இறைவனையே பழிக்கும் வள்ளுவன் முன் நாமெல்லாம் எம்மாத்திரம்?  'பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே' என்று நெஞ்சைக் கேட்பதில்லை; கேட்க விரும்புவதுமில்லை. ஒருவன் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட நான் கிறிஸ்துநாதர் வழித் தோன்றலுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Jude said:

புற்றுநோய் உங்களுக்கு  அல்லது நீங்கள்  நேசிப்பவர்களுக்கு  வரும் போது  இங்கு  நீங்கள்  எழுதியதை  மறக்காமல்  மீண்டும்  வந்து  படித்து  விளங்கி  கொள்ள  பாருங்கள்.  புத்தருக்கும்   மேலான  ஞானம்  பிறக்கும்.

புத்தரின் ஞானமே எனக்கு வேண்டாம் எனும்போது, புத்தருக்கும் மேலான ஞானத்தை வைத்து என்ன செய்வது, சகோதரரே ? 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, சுப.சோமசுந்தரம் said:

புத்தரின் ஞானமே எனக்கு வேண்டாம் எனும்போது, புத்தருக்கும் மேலான ஞானத்தை வைத்து என்ன செய்வது, சகோதரரே ? 

உங்களுக்கு புற்றுநோய் வரும் என்பதை நீங்கள் நம்பவில்லை போலும்.  வந்த பின்னர் வாருங்கள்,  தொடர்ந்தும் பேசலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

உங்களுக்கு புற்றுநோய் வரும் என்பதை நீங்கள் நம்பவில்லை போலும்.  வந்த பின்னர் வாருங்கள்,  தொடர்ந்தும் பேசலாம்.

எனக்கு உறுதியாக புற்றுநோய் வரும் என்ற நம்பிக்கை உண்டு. காரணங்களைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. முதிர்ச்சியின்றி சிறுபிள்ளைத்தனமாக (சின்னத்தனமாக என்பதன் இடக்கரடக்கலாக பயன்படுத்தியுள்ளேன்) வாழ்வதை விட புற்றுநோய் வந்து சாவது மேல். உங்களுடன்(I address Mr.Jude) வாதம் செய்யும்போது "அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்" என்ற வள்ளுவம் நினைவுக்கு வருகிறது.

6 hours ago, Jude said:

உங்களுக்கு புற்றுநோய் வரும் என்பதை நீங்கள் நம்பவில்லை போலும்.  வந்த பின்னர் வாருங்கள்,  தொடர்ந்தும் பேசலாம்.

என்னவொரு மூடநம்பிக்கை? நீங்கள் எந்த நாட்டில் வாழ்கிறீர்கள்?

சாவு நிச்சயம். கோழைக்கு நித்தம் சாவு. வீரனுக்கு ஒரு சாவு. 

தேங்காய் தலையில் விழுந்து சாவோம் என்று பயந்தால், இளனி குடிக்கலாம் என்று, தென்னை மரத்தின் கீழ் போவது எங்கனம்? 

Edited by Nathamuni

சிறுமை கண்டு பொங்கும் "தம் கணத்தார் முன் கோட்டிக்கொளல்" நிகழ்த்திய அண்ணலுக்கு வள்ளுவர் சொன்ன அங்கணம் நினைவுக்கு வந்திருக்கலாம். 

நம் கணத்தார் அல்லாத அங்கணத்து அழுக்குத் தின்னும் சிறுநரி கண்டு என் நினைவுக்கு வந்ததோ கம்பனின் பின்வரும் பாடலே:

"வரி சிலை ஒருவன் அல்லால், மைந்தர் என் மருங்கு வந்தார் எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ? அரசுக்கு ஏற்ற அரியொடும் வாழ்ந்த பேடை, அங்கணத்து அழுக்குத் தின்னும் நரியொடும் வாழ்வது உண்டோ -நாயினும் கடைப்பட்டோ னே!"

அங்கணத்து அழுக்குத் தின்னும் நாயினும் கடைப்பட்ட சிறுநரிகள் அழையா விருந்தாக அவ்வப்போது தலைகாட்டவே செய்யும். வெள்ளம் போல் தமிழர் கூட்டம் அந்த நரிகளை விரட்டியடித்து, சங்காரம் செய்து வீரச் சங்கினை முழங்குவர்.

Edited by பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்

  • கருத்துக்கள உறவுகள்
On 3/28/2019 at 4:33 PM, சுப.சோமசுந்தரம் said:

பரவாயில்லையே ! சில சமயங்களில் கொடிய நோய்களும் தாக்க வேண்டிய ஆட்களைத் தாக்கும் எனத் தோன்றுகிறது 

On 3/28/2019 at 4:41 PM, Nathamuni said:

சட்டத்தை ஏமாத்தலாம்... 

நீராவியடிப் பிள்ளையார் விளையாடிக் போட்டார்.... 

இனி பயப்படுவினம்...

3 hours ago, பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் said:

நம் கணத்தார் அல்லாத அங்கணத்து அழுக்குத் தின்னும் சிறுநரி கண்டு என் நினைவுக்கு வந்ததோ கம்பனின் பின்வரும் பாடலே:

அங்கணத்து அழுக்குத் தின்னும் நாயினும் கடைப்பட்ட சிறுநரிகள் அழையா விருந்தாக அவ்வப்போது தலைகாட்டவே செய்யும். வெள்ளம் போல் தமிழர் கூட்டம் அந்த நரிகளை விரட்டியடித்து, சங்காரம் செய்து வீரச் சங்கினை முழங்குவர்.

உங்கள் தரத்து ஏற்ற அழுக்கு தின்னும் கற்பனையில் அழிந்தி நீங்கள் தாரளமாக வாழுங்கள். "வெள்ளம் போல் தமிழர் கூட்டம்" சங்காரம் செய்யப்பட்டது உங்களை போன்றவர்களின் கற்பனைகளால் தான். வீரச் சங்கு முழங்கவில்லை -முழங்கும் சாத்தியமும் இல்லை. ஏன் வெள்ளம் போல் தமிழர் கூட்டத்துக்கு மரண சடங்குகள் கூட நடக்காமல் போனது உங்களின் அழிந்து போகும் மனப்பான்மையால் தான். தொடருங்கள் - முடிவு தூரத்தில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Jude said:

எதோ சொல்ல வந்து, குழம்பி, என்னவோ சொல்லி முடிகிறீர்கள்.

அப்படி இப்படி சுத்தி வளைக்காம, பிள்ளையார் கோவிலில், புத்தர் ஒக்காருவதில் வந்த தடை உங்களுக்கு பெரிய மனக்கவலை என்று சொல்லிட்டு அமைதியாகுங்கள்.

Edited by Nathamuni

உம்போன்றோருக்கு இலக்கிய உவமை காட்ட வேண்டிய நனி நாகரிகம் இனித் தேவையில்லை. வெளிப்படையாக நீவிர் தின்னும் அங்கணத்து அழுக்கு எது என்பதைச் சொன்னால் அன்றி நீவிர் அடங்கப் போவதும் இல்லை.

சொல்கிறேன்! அடாது செய்த பிக்குவின் செயலைக் கூறினால் உமக்கேன் பொத்துக்கொண்டு வருகின்றது?

உம் தவறை மென்மையாகச் சுட்டிக்காட்டிய அண்ணலுக்கு நீவிர் தந்த பதில் 'உமக்கும் புற்றுநோய் வரும்' என்பது. ஏன், உமக்கு (Read as Mr.Jude) புற்றுநோய் வராதா? உம் மன அழுக்கை விடவும் கொடிய புற்றுநோய் ஒன்று இவ்வுலகில் உண்டா?

பொருளாதாரத் துன்பமோ, உடல் நோய் துன்பமோ உள்ளவர்களைக் கண்டுவிட்டால், உடனேயே மதம் மாற்றும் நோக்குடன் ஜபம் செய்யக் கிளம்பும் உம் போன்ற அங்கணத்து அழுக்குத் தின்னும் நாயினும் கடைப்பட்ட நரிகளின் அழுக்குக் கூட்டத்தை அடையாளம் காட்டித்தான் எங்கள் நாட்டில் இந்துமத வெறியைத் தூண்டி மத வெறுப்பை விதைத்து, சர்வாதிகாரம் செலுத்துகின்றன, சிங்களப் பேரினவாத சக்திகளைப் போன்ற இந்துமத ஆரியப் பேரினவாத ஆதிக்க சக்திகள்.

இந்துமதவெறியர்கள்  வேட்டையாடுவது  'மாட்டுக்கறி வைத்திருந்தான், ஆட்டுக்கறி வைத்திருந்தான்' என்று கூவி, ஒன்றுமறியாத நேர்மையாக வாழும் சிறுபான்மையினரை.

துன்பத்தில் இருக்கும் அப்பாவி இந்துக்களை மதம் மாற்றி, வெளிநாட்டில் இருந்து பணம் தின்னும் உம்போன்ற நரிகள், இந்துப் பேரினவாதிகளின் காலடியில் வீழ்ந்து உம்மைக் காப்பாற்றிக் கொள்வீர்கள். தேவைப்பட்டால், மீண்டும் மதம் மாறி, மந்திரம் ஓதவும் தயங்க மாட்டீர்கள். வெட்கக்கேடு! உம் தரத்துக்கு இறங்கவேண்டிய தேவையை உருவாக்கியது நீவிரே!

  • கருத்துக்கள உறவுகள்

Jude said

 "வெள்ளம் போல் தமிழர் கூட்டம்" சங்காரம் செய்யப்பட்டது உங்களை போன்றவர்களின் கற்பனைகளால் தான். வீரச் சங்கு முழங்கவில்லை -முழங்கும் உங்களுக்கு புற்றுநோய் வரும் என்பதை நீங்கள் நம்பவில்லை போலும்.  வந்த பின்னர் வாருங்கள்,  தொடர்ந்தும் பேசலாம்.சாத்தியமும் இல்லை.ஏன் வெள்ளம் போல் தமிழர் கூட்டத்துக்கு மரண சடங்குகள் கூட நடக்காமல் போனது உங்களின்மனப்பான்மையால் . தொடருங்கள் - முடிவு தூரத்தில் இல்லை."

தமிழர் அழிந்துபோனதில் திருப்தி ????????  tw_angry:

Jude said

"உங்களுக்கு புற்றுநோய் வரும் என்பதை நீங்கள் நம்பவில்லை போலும்.  வந்த பின்னர் வாருங்கள்,  தொடர்ந்தும் பேசலாம்."

tw_dissapointed: tw_fearful:   👎👎👎

பேராசிரியர்.ந.கிருஷ்ணன் said

"உம் தவறை மென்மையாகச் சுட்டிக்காட்டிய அண்ணலுக்கு நீவிர் தந்த பதில் 'உமக்கும் புற்றுநோய் வரும்' என்பது. ஏன், உமக்கு (Read as Mr.Jude) புற்றுநோய் வராதா? உம் மன அழுக்கை விடவும் கொடிய புற்றுநோய் ஒன்று இவ்வுலகில் உண்டா?"

:96_ok_hand::96_ok_hand:

  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2019 at 4:11 AM, பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் said:

உம்போன்றோருக்கு இலக்கிய உவமை காட்ட வேண்டிய நனி நாகரிகம் இனித் தேவையில்லை. வெளிப்படையாக நீவிர் தின்னும் அங்கணத்து அழுக்கு எது என்பதைச் சொன்னால் அன்றி நீவிர் அடங்கப் போவதும் இல்லை.

சொல்கிறேன்! அடாது செய்த பிக்குவின் செயலைக் கூறினால் உமக்கேன் பொத்துக்கொண்டு வருகின்றது?

உம் தவறை மென்மையாகச் சுட்டிக்காட்டிய அண்ணலுக்கு நீவிர் தந்த பதில் 'உமக்கும் புற்றுநோய் வரும்' என்பது. ஏன், உமக்கு (Read as Mr.Jude) புற்றுநோய் வராதா? உம் மன அழுக்கை விடவும் கொடிய புற்றுநோய் ஒன்று இவ்வுலகில் உண்டா?

பொருளாதாரத் துன்பமோ, உடல் நோய் துன்பமோ உள்ளவர்களைக் கண்டுவிட்டால், உடனேயே மதம் மாற்றும் நோக்குடன் ஜபம் செய்யக் கிளம்பும் உம் போன்ற அங்கணத்து அழுக்குத் தின்னும் நாயினும் கடைப்பட்ட நரிகளின் அழுக்குக் கூட்டத்தை அடையாளம் காட்டித்தான் எங்கள் நாட்டில் இந்துமத வெறியைத் தூண்டி மத வெறுப்பை விதைத்து, சர்வாதிகாரம் செலுத்துகின்றன, சிங்களப் பேரினவாத சக்திகளைப் போன்ற இந்துமத ஆரியப் பேரினவாத ஆதிக்க சக்திகள்.

இந்துமதவெறியர்கள்  வேட்டையாடுவது  'மாட்டுக்கறி வைத்திருந்தான், ஆட்டுக்கறி வைத்திருந்தான்' என்று கூவி, ஒன்றுமறியாத நேர்மையாக வாழும் சிறுபான்மையினரை.

துன்பத்தில் இருக்கும் அப்பாவி இந்துக்களை மதம் மாற்றி, வெளிநாட்டில் இருந்து பணம் தின்னும் உம்போன்ற நரிகள், இந்துப் பேரினவாதிகளின் காலடியில் வீழ்ந்து உம்மைக் காப்பாற்றிக் கொள்வீர்கள். தேவைப்பட்டால், மீண்டும் மதம் மாறி, மந்திரம் ஓதவும் தயங்க மாட்டீர்கள். வெட்கக்கேடு! உம் தரத்துக்கு இறங்கவேண்டிய தேவையை உருவாக்கியது நீவிரே!

நூறு பச்சைப்புள்ளி போடலாம். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ஆனால் இதுகளுக்கு ஆயிரம் சூடு போட்டாலும் திருந்தாதுகள் !! *******

Edited by நியானி
தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

வேறு ஒரு திரியில் மேல்படியான் பதிவு:

///

ஐம்பெரும் காப்பிய காலத்து தமிழரின் மதமான பௌத்தத்தை மணிமேகலை காலத்தின் மணிபல்லவத்தில் மீண்டும் புதுப்பிக்கும் ஆளுனரின் முயற்சிக்கு வாழ்த்துகள். அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் ஆதிக்கத்தில் உள்ள பௌத்தத்தை விடுவித்து உண்மையான பௌத்தத்தை ஏனைய பௌத்த நாடுகளின் ஆதரவுடன் வட கிழக்கில் வளர்ச்சி அடைய செய்து சிங்கள இனவாத பிக்குகளின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள முடியும்.

பெரும்பாலான சிங்கள மக்கள் பிக்குகளுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக நம்பி அவர்களுக்கு அஞ்சுகிறார்கள் இந்து கடவுள்களிடமும் தெய்வீக சக்தி இருப்பதாக நினைக்கிறார்கள். தமிழ் பௌத்தம் இரெண்டையும் இணைக்கும்.

///

நான் நினைக்கிறேன்: தமிழ் பௌத்தம் ஆக்ரோஷமாக எழுந்து, சிங்கள பௌத்தத்தினை எதிர்க்க வேண்டும் என நினைக்கிறாரோ?

ஜனனாயக காலத்தில், மதத்திணிப்பு சாத்தியமில்லாதது.

உலகம் முழுவதும் அசோகன் முதல் எட்டாம் ஹென்றி மன்னர் வரை, அரசர்கள் காலத்தில் தான் குடிகளின் மதம் மாத்தப் பட்டது.

இருந்தாலும், எட்டாம் ஹென்றி மன்னர் மூத்த மகள், மேரி (Queen Mary) பட்டத்துக்கு வந்த போது தனது தந்தை அறிமுகப் படுத்திய இங்கிலாந்து திருச்சபை மார்க்கத்தினை தடுத்து, இங்கிலாந்தை கத்தோலிக்கத்துக்கு திருப்பினார்.

காரணம் எதேச்ச அதிகாரம்.

இவரோ, மூட நம்பிக்கையினை சொல்லி, பௌத்தத்தினை வளர்க்கவேண்டும் என்கிறார்... அதுவும் மக்களுக்கு, இறை நம்பிக்கை குறைந்து வரும்ஜனநாயக காலத்தில்.

Edited by Nathamuni

பிள்ளையார், என்ன நினைத்தார் அந்த பிக்கு ...அதன் வலி தெரிகிறதா ...
தெய்வம் நின்றறுக்கும் ....

On 3/30/2019 at 1:52 PM, Jude said:

உங்களுக்கு புற்றுநோய் வரும் என்பதை நீங்கள் நம்பவில்லை போலும்.  வந்த பின்னர் வாருங்கள்,  தொடர்ந்தும் பேசலாம்.

உங்கள் அபிமானம் தான் என்ன ? பிக்கு, பிள்ளையாரின் இருப்பிடத்தை அபகரித்தார் பிள்ளையார் தண்டனை கொடுத்தார் ...உங்களது குழப்பம் என்ன ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.