Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்புழுக்களும் நானும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Worm-and-farming.jpg

எனக்குப் பூங்கன்றுகள் செடி கொடிகள் என்றால் பயித்தியம் என்று உங்களுக்குத் தெரியும் தானே.

இருவாரங்களுக்கு முன்னர் இணையத்தில் இயற்கை உரம் பற்றிப் பார்த்தபோது மரக்கறிக் கழிவுகளை மண்ணின் மேல் கொட்டி ஒரு ஐந்து மண்புழுக்களை விட்டால் அவை அவற்றை உண்டு வெளிவரும் கழிவுகள்  நல்ல இயற்கை உரம் என்று போட்டிருந்ததை நம்பி ஒரு வாளியில் அரைவாசிக்கு மண்ணை நிரப்பி ஒரு ஆறு மண்புழுக்களையம் போட்டு மரக்கறிக்கழிவுகளையும் போட்டுவிட்டு ஒவ்வொரு நாளும் எட்டிப் பார்த்தால் புழுக்கள் எதையுமே உண்டதாகத் தெரியவில்லை. மரக்கறித் தோல்கள் தான் வரவர வாடிச் சுருங்கிக் கிடக்கின்றன.

ஏன் அவை அவற்றை உண்ணவில்லை என்று தெரியவில்லை. கிளறிப் பார்த்தால் மண்புழுக்களும் மயங்கிக் கிடப்பதுபோல் கிடக்கின்றன. யாராவது தெரிந்தால்  என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள்.???

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வைச்ச சாப்பாடு பிடிக்கேலயோ!
மண்புழுக்கள் மண்ணைத்தானே உண்டு கழிப்பவை? 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பக்கற்றில் சிறு துளைகள் இருக்கவேண்டும் ( காற்றோட்டத்துக்கு) இரண்டு நாளைக்கு ஒருக்கா கிளற வேண்டும். மண்ணும் மரக்கறி கழிவுகளும் மாறி மாறி போடவேண்டும். மூடி வைத்தால் தான் சூடாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏன் அவை அவற்றை உண்ணவில்லை என்று தெரியவில்லை. கிளறிப் பார்த்தால் மண்புழுக்களும் மயங்கிக் கிடப்பதுபோல் கிடக்கின்றன. யாராவது தெரிந்தால்  என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள்.???

மண்புழுவுக்கும் புதிய மரக்கறி தான் பிடிக்கும் போல.

இப்போ கொம்போசுக்கு என்று நல்ல வடிவாக செய்து விற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் குளிர் சரியா முடியவில்லை. இதற்குள் மண் புழுவை மனிதர்கள் ரேஜ்ஜில் வைச்சு.. பார்க்கக் கூடாது. அது தனக்கு சாதகமான தட்பவெப்ப சூழலில் தான் செயற்பட முடியும். இன்றேல்.. அது இறக்க நேரிடும் அல்லது உறங்கு நிலைக்குப் போய்விட்டும்.. மண்ணில் குறிப்பிட்ட ஆழத்தில். 

எதுவும் இயற்கையாக நிகழ அனுமதிப்பதே சிறந்தது. செயற்கையாக நாம் உயிரினங்களை கையாள ஆரம்பித்து இறுதியில் உயிர் பன்மைத்துவம் மற்றும் உயிர்ச் சமநிலை எல்லாத்தையும் இழந்து கொண்டிருக்கிறோம்.

இன்று தேனீக்களில் பல வகைகளை காணவில்லை. அதனால்... உணவு...பயிர்களின்.. பழங்களின்... உற்பத்திகள் பாதிக்கப்படும் நிலை. 

இந்த தேனீக்களின் இழப்பில்.. புகுத்தப்பட்ட சில வண்டுவகைகள் மற்றும் பாவிக்கப்படும் பூச்சி கொல்லிகள் என்பனவும் சூழல் மாற்றமும்.. செல்வாக்குச் செலுத்துவதாக கருதப்படுகிறது. 

மண்புழுக்கள் சரியாக இயற்கையாக தொழிற்பட அவைக்கு தகுந்த வெப்பமான சூழல்.. போதிய மண்ணின் காற்றடக்கம்.. மற்றும் ஈரப்பதன் அவசியம். இவை இல்லாத சூழலில்.. அவற்றை திணிப்பதும் அவற்றிடம் பயனை எதிர்பார்ப்பதும்.. உயிர் வன்கொடுமைக்கு நிகரானது. 🙄

  • கருத்துக்கள உறவுகள்

There may be differences in vermicomposting method depending on the climate. ... The most common worms used in composting systems, redworms (Eisenia foetida, Eisenia andrei, and Lumbricus rubellus) feed most rapidly at temperatures of 15–25 °C (59-77 °F). They can survive at 10 °C (50 °F).

https://en.wikipedia.org/wiki/Vermicompost

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

சுமே ஏதோ ஆசைக்கு ஆறு மண்புழு மட்டும்தான் எடுத்து மண் வாளிக்குள் விட்டு மரக்கறியும் போட்டிருக்கிறா. ஒவ்வொரு நாளும் எட்டிப் பார்த்திருக்கிறா. அதுகள் உண்ணாவிரதம் இருந்து மயங்கி கிடப்பதற்கு அவ என்ன செய்வா பாவம். அதுக்காக காணாமல் போன தேனீக்கள் எல்லாவற்றையும் அவ எடுத்து ஒளிச்சு வைத்திருக்கிறது மாதிரி சொல்ல கூடாது. நீங்கள் சுலபமாய் சொல்லி விட்டீர்கள். இனி சுமே சமையலிலும் தேன் சேர்க்க மாட்டா....... பார்த்தேன் சிரித்தேன் என்னும் பாட்டும் கூட பாட மாட்டா....!   🙂 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2019 at 2:36 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

...ஏன் அவை அவற்றை உண்ணவில்லை என்று தெரியவில்லை. கிளறிப் பார்த்தால் மண்புழுக்களும் மயங்கிக் கிடப்பதுபோல் கிடக்கின்றன. யாராவது தெரிந்தால்  என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள்.???

ஏம்மா ஆட்கள் தான் தங்களை பார்த்து ஓடி ஒளிகிறார்களென்றால் பாழாய்ப்போன இந்த மண் புழுக்களுமா மயங்கிவிழுகின்றன..?

கரகரத்த குரலை விட்டொழித்து இனிமையான குரலில் ஏதாவது பாட்டு பாடுங்கம்மா, சுதாரித்து எழுந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

ஏம்மா ஆட்கள் தான் தங்களை பார்த்து ஓடி ஒளிகிறார்களென்றால் பாழாய்ப்போன இந்த மண் புழுக்களுமா மயங்கிவிழுகின்றன..?

கரகரத்த குரலை விட்டொழித்து இனிமையான குரலில் ஏதாவது பாட்டு பாடுங்கம்மா, சுதாரித்து எழுந்துவிடும்.

உந்தாள்,சுமோவை பார்த்திட்டு ஓடாமல் நின்று கொண்டு தான் இல்லை என்று மழுப்பினவர்...நான் என்டால் இவவை கண்டவுடன் மற்றப் பக்கத்தால் ஓடி இருப்பன்🤨

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2019 at 12:00 PM, ஏராளன் said:

நீங்க வைச்ச சாப்பாடு பிடிக்கேலயோ!
மண்புழுக்கள் மண்ணைத்தானே உண்டு கழிப்பவை? 

அதுகளுக்கு என்ன பிடிக்கும் எண்டு நான் எப்பிடிக் கேட்பது ??? இணையத்தில் மரக்கறிக் கழிவுகளை போடுங்கள் என்று போட்டிருந்ததால் போட்டேன்.

On 4/7/2019 at 3:46 PM, nilmini said:

பக்கற்றில் சிறு துளைகள் இருக்கவேண்டும் ( காற்றோட்டத்துக்கு) இரண்டு நாளைக்கு ஒருக்கா கிளற வேண்டும். மண்ணும் மரக்கறி கழிவுகளும் மாறி மாறி போடவேண்டும். மூடி வைத்தால் தான் சூடாக இருக்கும். 

ஓ அவற்றுக்குச் சூடு தேவையா??? குளிரில் வெளியே இருப்பவைதானே???

On 4/7/2019 at 3:47 PM, ஈழப்பிரியன் said:

மண்புழுவுக்கும் புதிய மரக்கறி தான் பிடிக்கும் போல.

இப்போ கொம்போசுக்கு என்று நல்ல வடிவாக செய்து விற்கிறார்கள்.

நான் என்ன பழைய அழுகிய மரக்கறியா போட்டேன் ???? எமக்குச் சமைக்க வாங்கியதன் தோல்கள் தானே ???

கொம்போசுக்கென்று இதைச் செய்து விற்கிறார்கள் ???? மரக்கறிகளையா ???

On 4/7/2019 at 10:53 PM, nedukkalapoovan said:

மண்புழுக்கள் சரியாக இயற்கையாக தொழிற்பட அவைக்கு தகுந்த வெப்பமான சூழல்.. போதிய மண்ணின் காற்றடக்கம்.. மற்றும் ஈரப்பதன் அவசியம். இவை இல்லாத சூழலில்.. அவற்றை திணிப்பதும் அவற்றிடம் பயனை எதிர்பார்ப்பதும்.. உயிர் வன்கொடுமைக்கு நிகரானது. 🙄

உண்மைதான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2019 at 11:27 PM, nedukkalapoovan said:

There may be differences in vermicomposting method depending on the climate. ... The most common worms used in composting systems, redworms (Eisenia foetida, Eisenia andrei, and Lumbricus rubellus) feed most rapidly at temperatures of 15–25 °C (59-77 °F). They can survive at 10 °C (50 °F).

https://en.wikipedia.org/wiki/Vermicompost

இது இந்தளவு வேலை என்று தெரியாமல் போச்சு.பகிர்வுக்கு நன்றி நெடுக்ஸ்.

பகிர்தலுக்கு நன்றி.

21 hours ago, suvy said:

சுமே ஏதோ ஆசைக்கு ஆறு மண்புழு மட்டும்தான் எடுத்து மண் வாளிக்குள் விட்டு மரக்கறியும் போட்டிருக்கிறா. ஒவ்வொரு நாளும் எட்டிப் பார்த்திருக்கிறா. அதுகள் உண்ணாவிரதம் இருந்து மயங்கி கிடப்பதற்கு அவ என்ன செய்வா பாவம். அதுக்காக காணாமல் போன தேனீக்கள் எல்லாவற்றையும் அவ எடுத்து ஒளிச்சு வைத்திருக்கிறது மாதிரி சொல்ல கூடாது. நீங்கள் சுலபமாய் சொல்லி விட்டீர்கள். இனி சுமே சமையலிலும் தேன் சேர்க்க மாட்டா....... பார்த்தேன் சிரித்தேன் என்னும் பாட்டும் கூட பாட மாட்டா....!   🙂 

ஐயோ அண்ணா. சிரித்து முடியவில்லை. வன்னியில இருந்து இப்பதான் கொண்டுவந்த காட்டுத்தேன் வீண்.😁

20 hours ago, ராசவன்னியன் said:

ஏம்மா ஆட்கள் தான் தங்களை பார்த்து ஓடி ஒளிகிறார்களென்றால் பாழாய்ப்போன இந்த மண் புழுக்களுமா மயங்கிவிழுகின்றன..?

கரகரத்த குரலை விட்டொழித்து இனிமையான குரலில் ஏதாவது பாட்டு பாடுங்கம்மா, சுதாரித்து எழுந்துவிடும்.

என் குரல் துல்லியமான கணீர் குரல் என்றுதான் எல்லோரும் சொல்வது. நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். இனிமைக் குரலுக்கு நான் யாரைக் கூப்பிட்டுப் பாடுவது ??????பிள்ளைகளைக் கேட்கலாம் என்றால் பாக்கிற வேலையைப் பாரம்மா என்பார்கள்.🙄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

உந்தாள்,சுமோவை பார்த்திட்டு ஓடாமல் நின்று கொண்டு தான் இல்லை என்று மழுப்பினவர்...நான் என்டால் இவவை கண்டவுடன் மற்றப் பக்கத்தால் ஓடி இருப்பன்🤨

என்னைக் கெட்டவள் ஆக்கிறதே எல்லாருக்கும் வேலையாய் போச்சு. 🤔

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்பக்கம் வந்தால் நல்ல பசு சாணி இருக்கிறது நல்ல உரம் இந்த புழுக்களுக்க இருந்து   ஏன் மெனக்கெடுவான் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

ஊர்பக்கம் வந்தால் நல்ல பசு சாணி இருக்கிறது நல்ல உரம் இந்த புழுக்களுக்க இருந்து   ஏன் மெனக்கெடுவான் 

ஆட்டுப் பிழுக்கைக்கும்  சாணிக்கும் இரண்டு மூன்று பாமுக்கு அலைந்து அவர்கள் தரவில்லை. ஒன்லயினில் வாங்கலாம் என்றால் இந்தியாவின் விபரம் தான் வருகிறது . அவர்களை நம்பி காசைக் கொடுக்க முடியாது. ஏனெனில் கடந்த ஆண்டு நீல அல்லி விதைகள் என்று அமசோனில் பணம் செலுத்தினால் வந்தவை புற்களின் விதைகள் தான். இப்ப குதிரை லத்திதான் வாங்கியிருக்கிறேன்.

எங்கள் ஊர்ப் பக்கமும் இப்ப மாடுகள் ஆடுகள் இல்லை. நான் வரும்போது கொண்டுவரவேண்டும் என்றுதான் நினைத்தேன். கிடைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆட்டுப் பிழுக்கைக்கும்  சாணிக்கும் இரண்டு மூன்று பாமுக்கு அலைந்து அவர்கள் தரவில்லை. ஒன்லயினில் வாங்கலாம் என்றால் இந்தியாவின் விபரம் தான் வருகிறது . அவர்களை நம்பி காசைக் கொடுக்க முடியாது. ஏனெனில் கடந்த ஆண்டு நீல அல்லி விதைகள் என்று அமசோனில் பணம் செலுத்தினால் வந்தவை புற்களின் விதைகள் தான். இப்ப குதிரை லத்திதான் வாங்கியிருக்கிறேன்.

எங்கள் ஊர்ப் பக்கமும் இப்ப மாடுகள் ஆடுகள் இல்லை. நான் வரும்போது கொண்டுவரவேண்டும் என்றுதான் நினைத்தேன். கிடைக்கவில்லை.

ஒன்லைனை நம்பி கன சனம் ஏமாந்து இருக்கு கண்டியளோ 

மண் புழுக்கு பாம்பை அனுப்பாதவரைக்கும் ஓகே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒன்லைனை நம்பி கன சனம் ஏமாந்து இருக்கு கண்டியளோ 

மண் புழுக்கு பாம்பை அனுப்பாதவரைக்கும் ஓகே

ஐயோ அதுவும் நடக்கும் 😟

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஐயோ அதுவும் நடக்கும் 😟

ஒரு காட் டிஸ்க் ஒன்றுக்கு ஓடர் கொடுக்க ஒர் அழகான செங்கல் பார்சலாக  வந்தது இடயில் யார் மாற்றினார்கள் என்பது இதுவரைக்கும் தெரியாது நண்பனுக்கு ஒன் லைன் கம்பனிகள் விளையாட்டுக்கள் அவை

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதுகளுக்கு என்ன பிடிக்கும் எண்டு நான் எப்பிடிக் கேட்பது ??? இணையத்தில் மரக்கறிக் கழிவுகளை போடுங்கள் என்று போட்டிருந்ததால் போட்டேன்.

ஓ அவற்றுக்குச் சூடு தேவையா??? குளிரில் வெளியே இருப்பவைதானே???

நான் என்ன பழைய அழுகிய மரக்கறியா போட்டேன் ???? எமக்குச் சமைக்க வாங்கியதன் தோல்கள் தானே ???

கொம்போசுக்கென்று இதைச் செய்து விற்கிறார்கள் ???? மரக்கறிகளையா ???

உண்மைதான்

கொஞ்சம் சூடு இருக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கொம்போசுக்கென்று இதைச் செய்து விற்கிறார்கள் ???? மரக்கறிகளையா ???

Try Compost buckets.

  • கருத்துக்கள உறவுகள்

சூடு வேண்டும் என்றால் 100 வாட்ஸ் பல்ப் ஒன்றை அதற்குள் மாட்டி விடுங்கள்......!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஈழப்பிரியன் said:

Try Compost buckets.

இத்தனை நாட்கள் அதைத்தான் பயன்படுத்தியது. ஆனால் அதற்குள்ளும் புற்கள் எல்லாம் வளர்கிறது

52 minutes ago, suvy said:

சூடு வேண்டும் என்றால் 100 வாட்ஸ் பல்ப் ஒன்றை அதற்குள் மாட்டி விடுங்கள்......!   👍

கீற்றறைப் போடச்சொல்லாதவரை ஓகே

சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய குப்பை கூளங்களை எல்லாம் மண்புழுக்களை பயன்படுத்தி கம்போஸ்ட் உரமாக மாற்றி விட முடியும். இந்த வகையில் தோட்டத்தில் கிடைக்கும் இலைதழைகள், காகிதங்கள் உள்பட மக்கும் அனைத்து இயற்கை கழிவுகளையும் மண்புழுவைக் கொண்டு கம்போஸ்ட் உரமாக தயாரிக்கலாம். ஆனாலும் இன்று அதிகம் இயற்கையை நம்  நிலத்தில் இருக்கும் மண் புழுக்களை பயன்படுத்தாமல் எய்சீனியா பிப்டியா மற்றும் யூடிரலஸ்யூஜிசினே ஆகிய இரண்டு வகை இனங்களை பயன் படுத்தி மண் புழு உரம் தயாரித்து விற்பனைக்கு வருகிறது. இதை தான் இயற்கை உரம் இரண்டும் அழைத்து கொள்கிறார்கள் .

குதிரை சாணம் கூட தேங்காய் நார் கலந்து பயன் படுத்தலாம் .

நன்றி 
பண்ணையார் 

Just now, Pannaiyar said:

மேலும் விவரங்கள் அறிய இங்கு  https://www.pannaiyar.com/மண்புழு-உங்களுக்கு-தரும்/     விளக்கமாக பதிந்து உள்ளேன். பயன் படும் எனில்  படிக்கவும் .

நான் புதியவன் இங்கு இப்படி பதியலாமா என்று தெரியவில்லை. 
 
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Pannaiyar said:

பண்ணையார் 

மேலும் விவரங்கள் அறிய இங்கு  https://www.pannaiyar.com/மண்புழு-உங்களுக்கு-தரும்/     விளக்கமாக பதிந்து உள்ளேன். பயன் படும் எனில்  படிக்கவும் .

நான் புதியவன் இங்கு இப்படி பதியலாமா என்று தெரியவில்லை. 
 
வணக்கம் பண்ணையார்.நான் உங்கள் எனது தோட்டம் என்னும் ஆக்கத்தை தொடர்ந்து படித்தவன்.இப்பொழுது உங்கள் தொட்டம் என்னமாதிரி உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2019 at 4:52 PM, Pannaiyar said:

சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய குப்பை கூளங்களை எல்லாம் மண்புழுக்களை பயன்படுத்தி கம்போஸ்ட் உரமாக மாற்றி விட முடியும். இந்த வகையில் தோட்டத்தில் கிடைக்கும் இலைதழைகள், காகிதங்கள் உள்பட மக்கும் அனைத்து இயற்கை கழிவுகளையும் மண்புழுவைக் கொண்டு கம்போஸ்ட் உரமாக தயாரிக்கலாம். ஆனாலும் இன்று அதிகம் இயற்கையை நம்  நிலத்தில் இருக்கும் மண் புழுக்களை பயன்படுத்தாமல் எய்சீனியா பிப்டியா மற்றும் யூடிரலஸ்யூஜிசினே ஆகிய இரண்டு வகை இனங்களை பயன் படுத்தி மண் புழு உரம் தயாரித்து விற்பனைக்கு வருகிறது. இதை தான் இயற்கை உரம் இரண்டும் அழைத்து கொள்கிறார்கள் .

குதிரை சாணம் கூட தேங்காய் நார் கலந்து பயன் படுத்தலாம் .

நன்றி 
பண்ணையார் 

மேலும் விவரங்கள் அறிய இங்கு  https://www.pannaiyar.com/மண்புழு-உங்களுக்கு-தரும்/     விளக்கமாக பதிந்து உள்ளேன். பயன் படும் எனில்  படிக்கவும் .

நான் புதியவன் இங்கு இப்படி பதியலாமா என்று தெரியவில்லை. 
 
தாராளமாகப் பதியலாம். நான் இன்றுதான் உங்களை பார்க்கிறேன். வேறு பெயரில் இருந்தீர்களா முன்னர்.
நன்றி உங்கள் கருத்துக் பகிர்வுக்கு.

குதிரைச் சாணம் என்று வாங்கினேன். ஆனால் அதற்குள் வேறு என்ன போட்டார்களோ  தெரியவில்லை.

மண் புழுக்களைக்  நான் கையால் கூட தொட மாட்டன். இதில் ஆயிரம் மண்புழுக்களை விடுவதா ?? ஐயோ கடவுளே வாசிக்கவே முள்ளந்தண்டு சில்லிடுது.

10 hours ago, சுவைப்பிரியன் said:

வணக்கம் பண்ணையார்.நான் உங்கள் எனது தோட்டம் என்னும் ஆக்கத்தை தொடர்ந்து படித்தவன்.இப்பொழுது உங்கள் தொட்டம் என்னமாதிரி உள்ளது.

இவர்தான் விவசாயி என்ற பெயரில் வந்தவரோ சுவைப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இவர்தான் விவசாயி என்ற பெயரில் வந்தவரோ சுவைப்பிரியன்

இவர் அவர் இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.