Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று தமிழ்ப்புத்தாண்டா? அது உண்மையா?

Featured Replies

இன்று தமிழப்புத்தாண்டு என்று எல்லோரும் வாழ்தது சொல்கிறோம்.  இந்த 60 ஆண்டுகளில் ஒரு பெயர் கூட தமிழில் இல்லை.  பிளைகளுக்கு தமிழ்பெயர் வையுங்கள். தமிழில் பேசுங்கள்  என்று புலம்பெயர் நாடுகளில் அறிவுரை கூறும் தமிழ் அபிமானிகள் கூட இதைப்பற்றி சிந்திப்பதே இல்லை   

பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய 
சர்வஜித்த, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ 
பிலவங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள, பீங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரவுத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரத்தாக்ஷி, குரோதன், அக்ஷய  

ஒரு தமிழ் பெயரும் இல்லாத தமிழ்புத்தாண்டு. இது எப்படி சாத்தியப்பட்டது. 

Edited by tulpen

  • Replies 89
  • Views 9.3k
  • Created
  • Last Reply
1 hour ago, tulpen said:

ஒரு தமிழ் பெயரும் இல்லாத தமிழ்புத்தாண்டு. இது எப்படி சாத்தியப்பட்டது. 

என்ன செய்வது... ஆங்கிலக் கலண்டர், மேலைத்தேய உடை இப்படியானவை எல்லாம் எப்படி நம்மால் தவிர்க்க முடியாத விடயங்கள் ஆகிவிட்டனவோ இவ்வாறான பண்டிகைகளும் அப்படியே.

காலங்காலமாக நிகழ்ந்த கலாச்சாரக் கலப்புகளின் விளைவே இன்றைய நமது கலாச்சாரம் ஆகிவிட்டது. பல நூற்றாண்டுகளாகப் படிப்படியாக நிகழ்ந்த இந்த கலாச்சார மாற்றங்களை ஆராய்வதே இடியப்பச்சிக்கலான விடயம். நூல்நூலாக இழுத்து ஆராய நம் ஆயுள் போதாது.

பண்டிகைகளைக் கொண்டாடி வாழ்த்தி மகிழாமல் எதிர்வினையாற்றுதல் எதிர்மறையான, ஆரோக்கியமற்ற அதிர்வலைகளை மனிதர்களிடையே விதைத்துவிடும் என்பது என் அபிப்பிராயம். 😊

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மாதங்களாக நாம் எண்ணுபவை வடமொழிப் பெயர்களால் ஆனவை. சித்திரை மாதம் தமிழ்ப் புத்தாண்டு சோழ மன்னர் காலத்தில் ஆரியர்களால் உருவாக்கப்பட்டதாகத்தான் கூறுகின்றனர். கோயில்களில் மருத்து நீர் வாங்குவது தொடங்கி எல்லாம் அவர்களின் முறைதான். ஆதித் தமிழர்கள்  இயற்கையை வணங்கினார்கள் என்பதுதானே வரலாறு. நான் கோயில்களுக்குச் செல்வதுமில்லை. இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவதுமில்லை.

இங்கு நம் மொழியையும் மதவிழாக்களையும் தவறாகக் கலந்து குழப்பிக்கொள்கிறோம். சித்திரைப் புத்தாண்டு தமிழ்ப்புத்தாண்டா என்ற விவாதம் ஒருபுறமிருக்க, சித்திரைப் புத்தாண்டைத் தமிழர்களாகிய நாம் கொண்டாடுவது தவறு என்பது தமிழ்க் கிறிஸ்தவ நண்பர்கள் ஆங்கிலப்புத்தாண்டு, நத்தார், ஈஸ்டர் பண்டிகைகளைக் கொண்டாடுவது தவறு என்று சொல்வதற்கு ஒப்பானது. அதைத் தவறாக நான் கருதவில்லை - அந்த நம்பிக்கையை நான் மதிக்கிறேன்.

ஆனால், நமது தமிழ் கலாச்சாரத்தில் இவ்வாறான மேலைத்தேய மதப் பண்டிகைகள் கொண்டாடப்படுவதை ஆதரிக்கும் நாம் அதற்கு முதலே பலநூற்றாண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வந்த சித்திரைப் புத்தாண்டை, தீபாவளியைக் கொண்டாடுவது தவறு என்று சொல்வது நம்மை நாமே இழிவுபடுத்தும் செயலாகும். ஏன் இந்த முரண்பாடு? 

(மீண்டும் சொல்கிறேன், நான் பிற மதங்களுக்கு எதிரானவன் அல்ல. எல்லாப் பண்டிகைகளையும் மதிப்பவன். ஆனால், நமது கலாச்சார விழுமியங்களைக் கேள்வி கேட்கும் போது ஓர் நடுநிலைப் பார்வை அவசியம் என நம்புகிறேன்.) 😊

3 hours ago, tulpen said:

பிள்ளைகளுக்கு தமிழ்பெயர் வையுங்கள்

நியாயமான கோரிக்கை தான். ஆனால் இந்துக்கள் அல்லாத தமிழர்கள் ஆங்கிலேய மற்றும் பிற ஐரோப்பிய நாட்டு மத / கலாச்சார வழி வந்த பெயர்களை வைத்தால் அவர்கள் தமிழர் இல்லையா? வடமொழிப்பெயர்கள் மட்டுமே தமிழரிடையே கலந்து காணப்படுகிறது என்கிறீர்களா? 😊

பண்டிகைகளைக் கொண்டாடுவதில் குறைபிடிப்பது அதைக் கொண்டாடுபவர்களின் நம்பிக்கையைப் புண்படுத்துவதாகும். நம்மில் அனேகர் பல்லினக் கலாச்சார நாடுகளில் வாழ்கிறோம் என நினைக்கிறேன். அங்கெல்லாம் மதங்களுக்கிடையே, மக்களிடையே நல்லிணக்கம் இருக்கிறதென்றால் பரஸ்பரம் மத நம்பிக்கைகளை மதித்து நடத்தலால் தான் என நம்புகிறேன். பாரபட்சமாகக் குறைகண்டுபிடித்தலால் அல்ல! 😊

1 hour ago, மல்லிகை வாசம் said:

இங்கு நம் மொழியையும் மதவிழாக்களையும் தவறாகக் கலந்து குழப்பிக்கொள்கிறோம். சித்திரைப் புத்தாண்டு தமிழ்ப்புத்தாண்டா என்ற விவாதம் ஒருபுறமிருக்க, சித்திரைப் புத்தாண்டைத் தமிழர்களாகிய நாம் கொண்டாடுவது தவறு என்பது தமிழ்க் கிறிஸ்தவ நண்பர்கள் ஆங்கிலப்புத்தாண்டு, நத்தார், ஈஸ்டர் பண்டிகைகளைக் கொண்டாடுவது தவறு என்று சொல்வதற்கு ஒப்பானது. அதைத் தவறாக நான் கருதவில்லை - அந்த நம்பிக்கையை நான் மதிக்கிறேன்.

ஆனால், நமது தமிழ் கலாச்சாரத்தில் இவ்வாறான மேலைத்தேய மதப் பண்டிகைகள் கொண்டாடப்படுவதை ஆதரிக்கும் நாம் அதற்கு முதலே பலநூற்றாண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வந்த சித்திரைப் புத்தாண்டை, தீபாவளியைக் கொண்டாடுவது தவறு என்று சொல்வது நம்மை நாமே இழிவுபடுத்தும் செயலாகும். ஏன் இந்த முரண்பாடு? 

(மீண்டும் சொல்கிறேன், நான் பிற மதங்களுக்கு எதிரானவன் அல்ல. எல்லாப் பண்டிகைகளையும் மதிப்பவன். ஆனால், நமது கலாச்சார விழுமியங்களைக் கேள்வி கேட்கும் போது ஓர் நடுநிலைப் பார்வை அவசியம் என நம்புகிறேன்.) 😊

நீங்கள் குறிப்பிட்டவாறு கிறிஸ்தவர்கள் ஆங்கிலப் புத்தாண்டு, நத்தார், ஈஸ்டர் என்பனவற்றை மத பண்டிகைகளாகவே கொண்டாடுகின்றனர். தம் இனத்தின் கொண்டாட்டமாக அல்ல.

இங்கு நாம் சித்திரை புத்தாண்டு என்று கொண்டாடப்படுவது தமிழர் பண்டிகை என்ற அடிப்படையில் என்று ஏனைவர்கள் குறிப்பிடும் போதுதான் அது தமிழ் பண்டிகையா என கேள்வி எழுகின்றது. தமிழர் பண்டிகை என்றால் அது என்றிலிருந்து கொண்டாடப்பட்டு வருகின்ற என்ற கேள்வி எழுகின்றது? ஏன் அதற்கு தமிழ் அல்லாத பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றது என ஆராய வேண்டி வருகின்றது. அவ்வாறு ஆராயும் போது அப்பெயர்கள் எல்லாம் வக்கிரமான காரணங்களினூடாக கதைகளினூடாக வருகின்றது என்பதை அறியக் கூடியதாக இருக்கின்றது. நாம் இப்படியான வக்கிரமான கதைகளினூடாகவா எம் கலாச்சாரத்தினை பேணுகின்றோம் என அதிர்ச்சிக்குள்ளாகும் போது 'இல்லை' இது இடையில் புகுத்தப்பட்டது என கண்டறியப்படுகின்றது. இடையில் யாரால் / எவரா/ ஏன் / எதற்காக / எப்படி என்று கேள்விகளினூடாக அணுகும் போது நாம் / தமிழர்கள் ஆரியர்களாலும் அடிமைகளாக்கப்பட்டதன் வரலாறு முன்னால் விரிகின்றது.

தமிழர் வரலாறு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் என்று ஆதிச்சநல்லூர் அகழ்வாராச்சி அண்மையில் கூட விஞ்ஞான பூர்வமாக நிறுவிக் கொண்டு இருக்கும் காலகட்டத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் புகுத்தப்பட்ட ஒன்றை கேள்வி கேட்பது தவறாகாது.

அவ்வாறு கேள்வி கேட்கும் போது அதை கொண்டாடுகின்றவர்களின் மனம் புண்படும் என்பது சிறுபிள்ளைத்தனமானது. அந்தளவுக்கு பூஞ்சையான மனதா அவர்களிடம் இருக்கின்றது? விமர்சனங்களை கண்டு மனம் புண்படும் என்பது ஆரோக்கியமான ஒரு சமூகத்திடம் இருக்க முடியாத ஒரு பண்பு. அப்படிப்பட்ட பண்பு இருக்குமாயின் அதுவும் களைந்தெடுக்கப்பட வேண்டியதே.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இப்படி கொள்ளுபட கோவில்கள் பக்கம் கொஞ்சம் எட்டி பார்த்தால் சப்பாத்துக்கள் கழட்டி வைக்கும் ராக்குகள் நிரம்பி வழிகின்றன வெம்பிளி ஈழபதீஸ்வரர்க்கு அய்யர் மார் விழுந்து விழுந்து மணி அடிச்சு பூசை செய்வது வெளியில் இருந்தே பார்க்க கூடியதாக இருக்கு .

நாங்கள் என்ன குத்தி முறிந்தாலும் சனம் கோவிலுக்கு தீபாவளிக்கும் போகுதுகள்  ஆங்கில வருடபிறப்புக்கும் போகுதுகள் தைபொங்கலுக்கும் போகினம் சித்திரை வருசமான இன்றும் அய்யர் கூட்டத்தின் கல்லாவை நிரப்ப அடிபட்டுக்கொண்டு வரிசையில் நிக்குதுகள் . இதுகளை திருத்த நூறு சீமான் வந்தாலும் காணாது . போற போக்கிலை குருக்கள் எனும் ஐயரிடம் தைப்பூசம் எண்ணத்துக்கு கொண்டாடுறாங்கள் என்று கேட்டு துலைக்க ஐயர் எஸ்கேப் எனக்கும் உண்மயில் எனக்கும் தெரியாது இங்கு யாருக்கும் தெரியுமா ?

மொரிசியஸ் தமிழை மறந்த தமிழர் ஒவ்வொரு வருடமும் ஆர்ச்வே முருகனுக்கு காவடி எடுப்பார் அவரிடமும் கேட்டன் அவரும் தனக்கு தெரியாது தன் பெற்றோர் தைபூசம் நாளில் கும்பிடுறவை நானும் கும்பிடுறன் என்கிறார் . இப்படித்தான் எங்கடை எதிர்கால சந்ததியும் இருக்கும் போல் தென்படுது . உங்களின் வருடபிறப்பு எப்ப என்று கேட்டால் முழித்துகொண்டு நிக்க வேண்டியது தான் .

  • கருத்துக்கள உறவுகள்

பாரம்பரியங்களை வரலாற்றை தொலைத்த சமூகமாக மாறிவிட்டோம், தமிழ் முதல் மாதம் தை முதலாம் நாளில் வருவதே தமிழர்களின் புத்தாண்டு என்று நான் கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தமிழ் மாதங்களாக நாம் எண்ணுபவை வடமொழிப் பெயர்களால் ஆனவை. சித்திரை மாதம் தமிழ்ப் புத்தாண்டு சோழ மன்னர் காலத்தில் ஆரியர்களால் உருவாக்கப்பட்டதாகத்தான் கூறுகின்றனர். கோயில்களில் மருத்து நீர் வாங்குவது தொடங்கி எல்லாம் அவர்களின் முறைதான். ஆதித் தமிழர்கள்  இயற்கையை வணங்கினார்கள் என்பதுதானே வரலாறு. நான் கோயில்களுக்குச் செல்வதுமில்லை. இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவதுமில்லை.

இது எல்லோராலும் முடியாது, குறிப்பாக தமிழ் பெண்கள் மத்தியில். பச்சை முடிந்துவிட்டது.  

  • தொடங்கியவர்
3 hours ago, மல்லிகை வாசம் said:

ஆனால், நமது தமிழ் கலாச்சாரத்தில் இவ்வாறான மேலைத்தேய மதப் பண்டிகைகள் கொண்டாடப்படுவதை ஆதரிக்கும் நாம் அதற்கு முதலே பலநூற்றாண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வந்த சித்திரைப் புத்தாண்டை, தீபாவளியைக் கொண்டாடுவது தவறு என்று சொல்வது நம்மை நாமே இழிவுபடுத்தும் செயலாகும். ஏன் இந்த முரண்பாடு? 

(மீண்டும் சொல்கிறேன், நான் பிற மதங்களுக்கு எதிரானவன் அல்ல. எல்லாப் பண்டிகைகளையும் மதிப்பவன். ஆனால், நமது கலாச்சார விழுமியங்களைக் கேள்வி கேட்கும் போது ஓர் நடுநிலைப் பார்வை அவசியம் என நம்புகிறேன்.) 😊

மல்லிகை வாசம் நீங்கள்  எமது  கலாச்சாரம் விழுமியங்கள் என்று  ஒரு விடயத்தை கூறும் போது அதன் வரலாறு என்ன என்று தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் உலகில் வாழும் எல்லா இனங்களும் தமது கலாச்சாரத்திற்கு ஏதோ ஒரு வரலாற்றை வைத்திருக்கிறார்கள். அப்படி எமக்கும் ஒரு வரலாறு நிச்சயம் இருந்திருக்கும். 

 தற்போது கொண்டாடப்பட்டு வரும் தமிழ் புத்தாண்டு எந்த வருடத்தில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது?

அதன் வரலாறு என்ன? ஆண்டு காலம் என்ன?

அதை கவலை பட தேவையில்லை . ஏதே நாம் வாழும் காலத்தில் இப்படி தான் சொல்லி கொடுக்க பட்டிருக்கிறது. அதை கேள்வி கேக்காமல் நாமும் பின்பற்றுவோம் என்று நீங்கள் சொல்லுவீர்களாக இருந்தால் கலாச்சார விழுமியங்கள் என்ற வார்த்தைகளை பிரயோகிகாகமல் தமிழராகிய எமக்கு சொந்தமாக எந்த கலாச்சார வரலாறும் இல்லை என்று ஏற்று கொள்ள வேண்டி இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம் இன்று சமஸ்கிரத புத்தாண்டு என்டால் அதை வட இந்தியர்களும்,,சமஸ்கிரதம் பேசுபவர்கள் புத்தாண்டாய் கொண்டாடுகிறார்களா  ?

  • தொடங்கியவர்
14 minutes ago, ரதி said:

எனக்கு ஒரு சந்தேகம் இன்று சமஸ்கிரத புத்தாண்டு என்டால் அதை வட இந்தியர்களும்,,சமஸ்கிரதம் பேசுபவர்கள் புத்தாண்டாய் கொண்டாடுகிறார்களா  ?

 புத்தாண்டின் பெயர்களில் ஒரு தமிழ் பெயர் கூட இல்லை என்பதால் நகைச்சசுவையான அப்படி குறிப்பிட்டேன்.  ஆதி காலத்தில் எமது முன்னோர்கள் சிறந்த நாகரீகத்துடன் வாழ்ந்தார்கள் என்று அகழ்வு ஆராய்ச்சிகளில் எடுக்கபட்ட பொருட்களில் இருந்து கூறபட்டாலும் இடைக்காலத்தில் வாழ்ந்த எமது முன்னோர்கள் வடிகட்டிய முட்டாள்களாக இருந்த‍தால் தமது பெருமை மிக்க கலாச்சார பெருமையை மறந்து அதன் வரலாற்றை கூட பாதுகாக்கமால்  ஆரியரின் கலாச்சசாரத்தை  அப்படியே ஏற்றுகொண்ளுள்ளார்கள் என்று நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் யாதும் ஊரே யாவரும் கேளீர் என பெரிய மனதுடன் செயற்பட இடையில் வந்தவர்கள் எம் தலை மீது மிளகாய் அரைத்து விட்டார்கள். விழித்தெழ் வேண்டியவர்கள் நாங்கள் தான்.

  • தொடங்கியவர்

1832  ம் ஆண்டு கலண்டர். 1832 ம் ஆண்டு பிராமணிய புது வருடமாக கொண்டாடப் பட்ட புதுவருடம் இன்று தமிழ் புதுவருடமாக மாறியது ஏன்? 

8-F7-F8-E1-B-4-E87-4-D73-8-C35-A0-AB0-A2-BB850.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தமிழ் மாதங்களாக நாம் எண்ணுபவை வடமொழிப் பெயர்களால் ஆனவை. சித்திரை மாதம் தமிழ்ப் புத்தாண்டு சோழ மன்னர் காலத்தில் ஆரியர்களால் உருவாக்கப்பட்டதாகத்தான் கூறுகின்றனர். கோயில்களில் மருத்து நீர் வாங்குவது தொடங்கி எல்லாம் அவர்களின் முறைதான். ஆதித் தமிழர்கள்  இயற்கையை வணங்கினார்கள் என்பதுதானே வரலாறு. நான் கோயில்களுக்குச் செல்வதுமில்லை. இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவதுமில்லை.

வருடா வருடம் நீங்கள் கொண்டாடும் பண்டிகைகளை சொல்ல முடியுமா?

20 hours ago, நிழலி said:

நீங்கள் குறிப்பிட்டவாறு கிறிஸ்தவர்கள் ஆங்கிலப் புத்தாண்டு, நத்தார், ஈஸ்டர் என்பனவற்றை மத பண்டிகைகளாகவே கொண்டாடுகின்றனர். தம் இனத்தின் கொண்டாட்டமாக அல்ல.

இந்து தமிழரும் மதக் கொண்டாடமாகத் தான் தமிழ் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்தவக் கொண்டாட்டங்கள் தவறில்லை என்றால் இதுவும் தவறில்லை. 

20 hours ago, நிழலி said:

இங்கு நாம் சித்திரை புத்தாண்டு என்று கொண்டாடப்படுவது தமிழர் பண்டிகை என்ற அடிப்படையில் என்று ஏனைவர்கள் குறிப்பிடும் போதுதான் அது தமிழ் பண்டிகையா என கேள்வி எழுகின்றது. 

கி.பி 1505க்கு முன்னர் ஐரோப்பியர் ஈழத்தில் தமது மதத்தைத் திணிக்கும் முன்னர் அங்கு வாழ்ந்த இந்துத் தமிழர் கொண்டாடிய புத்தாண்டு என்பதால் தமிழ்ப் புத்தாண்டு என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. அக் காலத்தில் இப்போது நாமெல்லாம் வாயைப் பொத்திக்கொண்டு பின்பற்றும் ஆங்கில கலண்டரின் சனவரி 1ஆம் திகதியைக் கொண்டா டியது இல்லை தானே? இப்போது அதையும் கொண்டாடுவதால் அன்றைய தமிழர் கொண்டாடிய புத்தாண்டை தமிழ்ப் புத்தாண்டு என்று வேறுபடுத்திக் காட்டவேண்டியிருக்கிறது.

20 hours ago, நிழலி said:

நாம் இப்படியான வக்கிரமான கதைகளினூடாகவா எம் கலாச்சாரத்தினை பேணுகின்றோம் என அதிர்ச்சிக்குள்ளாகும் போது 'இல்லை' இது இடையில் புகுத்தப்பட்டது என கண்டறியப்படுகின்றது. இடையில் யாரால் / எவரா/ ஏன் / எதற்காக / எப்படி என்று கேள்விகளினூடாக அணுகும் போது நாம் / தமிழர்கள் ஆரியர்களாலும் அடிமைகளாக்கப்பட்டதன் வரலாறு முன்னால் விரிகின்றது.

இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் சிக்கலான முடிவு காணமுடியா ஆராய்ச்சிகள். (ஆராய்ச்சி தவறு என்று சொல்லவில்லை). ஆரியர்கள் மட்டுமே தமிழரை அடிமைப்படுத்தினார்களா? 

கி.பி 1505-1948 வரை ஈழத்தை ஆக்கிரமித்த ஐரோப்பியர் அப்போது இந்துக்களாக இருந்த ஈழத் தமிழரை அடிமைப்படுத்தவில்லையா? அவர்கள் செய்த அட்டூழியங்கள் மறைக்கப்படுகின்றனவா? மக்களின் மதச் சுதந்திரம் பறிக்கப்பட்டு அவர்களின் மதம் திணிக்கப்பட அவர்கள் செய்த கொடுமைகள் எத்தனை. இவை எல்லாம் அண்மைய வரலாறுகள். நமது பாட்டன், முப்பாட்டனைக் கேட்டாலும் சொல்வார்கள். இப்படியான அந்நியர் பரப்பிய மத விழாக்களைக் கொண்டாடுவதும் தவறு என்று சொல்லுவீீீ்ர்களா? பழைய ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டி இந்துமதப் பண்டிகைகளை எதிர்க்கும் நீங்கள் இவற்றை மட்டும் நியாயப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

20 hours ago, நிழலி said:

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் புகுத்தப்பட்ட ஒன்றை கேள்வி கேட்பது தவறாகாது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது. ஐரோப்பியர் மதம் பரப்ப வந்த காலத்துக்கும் மிக மிக மிகத் தொன்மையானது.

20 hours ago, நிழலி said:

அவ்வாறு கேள்வி கேட்கும் போது அதை கொண்டாடுகின்றவர்களின் மனம் புண்படும் என்பது சிறுபிள்ளைத்தனமானது. அந்தளவுக்கு பூஞ்சையான மனதா அவர்களிடம் இருக்கின்றது? விமர்சனங்களை கண்டு மனம் புண்படும் என்பது ஆரோக்கியமான ஒரு சமூகத்திடம் இருக்க முடியாத ஒரு பண்பு. அப்படிப்பட்ட பண்பு இருக்குமாயின் அதுவும் களைந்தெடுக்கப்பட வேண்டியதே.

ஒருவரது / ஒரு குழுவினது மத நம்பிக்கையை அவமதிப்பது நாகரீகமடைந்த முன்னேறிய சமுதாயத்தின் நற்பண்பு அல்ல. அது மிருகத்தனமானது. மற்றவர்கள் சுதந்திரத்தில் அநாவசியமாக மூக்கை நுழைப்பது. அன்று ஆரியர் செய்வதாக நீங்கள் கூறும் அநியாயத்துக்கு ஒப்பானது. அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் செய்த கொடுமையை சீர்திருத்தம் என்று போர்வையில் இந்து தமிழர்களின் நம்பிக்கையை புண்படுத்துவது கேவலமானது. எனவே களையப்பட வேண்டியது உங்களைப் போன்றவர்களின் மூக்கு நுழைத்தல்கள் தான்!😊

நான் முன்பு குறிப்பிட்ட படி சிக்கலான முடிவு காண முடியா ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டி தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது தவறு என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. கொண்டாடுவது அவர்களின் உரிமை. வரலாற்று ஆராய்ச்சிகளில் இருந்து நாம் கற்க வேண்டியது, காலம் காலமாக பேணிய நல்ல கலாச்சார அம்சங்களை தூக்கியெறிவதல்ல. கொண்டாடுவதும், வாழ்த்தி மகிழ்தலும் நல்ல பண்புகள்.

நாம் கற்க வேண்டியது என்னவென்றால் எந்த மதங்களிலுமுள்ள நற்பண்புகளை மட்டும் இனங்கண்டு மதிப்பதே ஆகும். அதை விடுத்து இவ்வாறான குற்றச்சாட்டுகள்தேவையற்ற மதத் துவேஷங்களுக்கே வழிகோலும். 

எம்மதமும் சம்மதமே! 😊

கொண்டாடிய அனைவருக்கும் மீண்டும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! நன்றி 😊

2 hours ago, மல்லிகை வாசம் said:

இந்து தமிழரும் மதக் கொண்டாடமாகத் தான் தமிழ் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்தவக் கொண்டாட்டங்கள் தவறில்லை என்றால் இதுவும் தவறில்லை. 

உங்களின் பிரச்சனை என்னவெனில் கிறித்தவ மதத்துக்கு எதிரான மனனிலையுடன் என் கருத்துக்களை அணுகுவதே.

மல்லிகை வாசம் இதை இந்து மதம் சார்ந்து கொண்டாடுகின்றார் என்பதற்காக இப் பண்டிகை இந்துப் பண்டிகை ஆக உலகம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. 

இது இலங்கை யிலும் தமிழ் சிங்கள புதுவருடப் பிறப்பாகத் தான் அடையாளபடுத்தப்படுகின்றது. பெளத்த இந்து பண்டிகையாக அல்ல. மகிந்தவும் அவ்வாறு தான் சொல்கிறார், அவுஸ்திரேலிய பிரதமரும் இதை தமிழ் புதுவருட பிறப்பாக கருதிதான் வாழ்த்துகள் தெரிவிக்கின்றார்.

கிறிஸ்தவ பண்டிகை ஒன்றை அல்லது தமிழ் பேசும் முஸ்லிம்கள் தம் பண்டிகை ஒன்றை தமிழர் பண்டிகை என அடையாளப்படுத்த முயன்றால், அப்பவும் இதே போன்ற எதிர்வினை தான் என்னிடமும் என்னை போன்றவர்களிடமும் இருந்து வெளிப்படும்.

2 hours ago, மல்லிகை வாசம் said:

கி.பி 1505க்கு முன்னர் ஐரோப்பியர் ஈழத்தில் தமது மதத்தைத் திணிக்கும் முன்னர் அங்கு வாழ்ந்த இந்துத் தமிழர் கொண்டாடிய புத்தாண்டு என்பதால் தமிழ்ப் புத்தாண்டு என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. அக் காலத்தில் இப்போது நாமெல்லாம் வாயைப் பொத்திக்கொண்டு பின்பற்றும் ஆங்கில கலண்டரின் சனவரி 1ஆம் திகதியைக் கொண்டா டியது இல்லை தானே? இப்போது அதையும் கொண்டாடுவதால் அன்றைய தமிழர் கொண்டாடிய புத்தாண்டை தமிழ்ப் புத்தாண்டு என்று வேறுபடுத்திக் காட்டவேண்டியிருக்கிறது.

கடந்த ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததை திணிப்பு என சொல்லும் நீங்கள் அதற்கும் முன் நிகழ்ந்த ஆரியத் திணிப்பை பற்றி கதைக்கும் போது மட்டும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றீர்கள்.

நீங்கள் வாயை பொத்திக் கொண்டு ஆங்கில காலண்டரை ஏற்க வேண்டும் என எவரும் வற்புறுத்தவில்லை. இன்னும் காலம் கடக்கவில்லை, இன்றிலிருந்து தாரளமாக ஆரிய காலண்டரை பின்பற்றி நேற்றில் இருந்துதான் இவ் வருடம் பிறந்தது என பின்பற்றுங்கள்.

நான் தமிழர் நாகரீகம் முப்பது நூற்றாண்டுகளுக்கும் முற்பட்டது, தொன்மையானது, முதல் நாகரிகங்களில் ஒன்று என்பதை உணர்ந்து அந்த தொன்மையை உலகிற்கு சொல்ல முற்படுகின்றவர்களுடன் என்னை இணைத்துக் கொள்கின்றேன், நீங்கள் தமிழர் நாகரீகம் என்பது ஆரியரது நாகரீகத்திற்கு பிறகானது என்கின்றீர்கள். 

2 hours ago, மல்லிகை வாசம் said:

இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் சிக்கலான முடிவு காணமுடியா ஆராய்ச்சிகள். (ஆராய்ச்சி தவறு என்று சொல்லவில்லை). ஆரியர்கள் மட்டுமே தமிழரை அடிமைப்படுத்தினார்களா? 

கி.பி 1505-1948 வரை ஈழத்தை ஆக்கிரமித்த ஐரோப்பியர் அப்போது இந்துக்களாக இருந்த ஈழத் தமிழரை அடிமைப்படுத்தவில்லையா? அவர்கள் செய்த அட்டூழியங்கள் மறைக்கப்படுகின்றனவா? மக்களின் மதச் சுதந்திரம் பறிக்கப்பட்டு அவர்களின் மதம் திணிக்கப்பட அவர்கள் செய்த கொடுமைகள் எத்தனை. இவை எல்லாம் அண்மைய வரலாறுகள். நமது பாட்டன், முப்பாட்டனைக் கேட்டாலும் சொல்வார்கள். இப்படியான அந்நியர் பரப்பிய மத விழாக்களைக் கொண்டாடுவதும் தவறு என்று சொல்லுவீீீ்ர்களா? பழைய ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டி இந்துமதப் பண்டிகைகளை எதிர்க்கும் நீங்கள் இவற்றை மட்டும் நியாயப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது. ஐரோப்பியர் மதம் பரப்ப வந்த காலத்துக்கும் மிக மிக மிகத் தொன்மையானது.

நான் எழுதியவற்றின் அடிப்படையை கூட புரிந்து கொள்ள முடியாதளவுக்கு உங்கள் புரிதல் இருக்கின்றது.

எந்த பண்டிகையை கொண்டாடுவது தவறு என்று குறிப்பிட்டு இருக்கின்றேன் என சான்று காட்டவும்.

நீங்கள் எந்த பண்டிகையும் தாரளமாக கொண்டாடுங்கள். ஆனால் அதை தமிழர் பண்டிகை என குறிப்பிடும் போது, அது தமிழர்களின் பண்டிகையாக இல்லாத ஒன்றாயின் கண்டிப்பாக கேள்விகுட்படுத்துவோம்.

தமிழர் நாகரீகம் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தையது, அதை வெறும் ஆயிரத்தில் சுருக்க வேண்டாம். இந்த சுருக்கல்களை தான் இந்திய மத்திய அரசுகளும், வட மானிலத்தவரும், சிங்களமும் செய்கின்றது...நீங்களும் செய்கின்றீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

கடந்த ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததை திணிப்பு என சொல்லும் நீங்கள் அதற்கும் முன் நிகழ்ந்த ஆரியத் திணிப்பை பற்றி கதைக்கும் போது மட்டும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றீர்கள்.

நீங்கள் வாயை பொத்திக் கொண்டு ஆங்கில காலண்டரை ஏற்க வேண்டும் என எவரும் வற்புறுத்தவில்லை. இன்னும் காலம் கடக்கவில்லை, இன்றிலிருந்து தாரளமாக ஆரிய காலண்டரை பின்பற்றி நேற்றில் இருந்துதான் இவ் வருடம் பிறந்தது என பின்பற்றுங்கள்.

நான் தமிழர் நாகரீகம் முப்பது நூற்றாண்டுகளுக்கும் முற்பட்டது, தொன்மையானது, முதல் நாகரிகங்களில் ஒன்று என்பதை உணர்ந்து அந்த தொன்மையை உலகிற்கு சொல்ல முற்படுகின்றவர்களுடன் என்னை இணைத்துக் கொள்கின்றேன், நீங்கள் தமிழர் நாகரீகம் என்பது ஆரியரது நாகரீகத்திற்கு பிறகானது என்கின்றீர்கள். 

நான் தமிழர் நாகரீகம் முப்பது நூற்றாண்டுகளுக்கும் முற்பட்டது, தொன்மையானது, முதல் நாகரிகங்களில் ஒன்று என்பதை உணர்ந்து அந்த தொன்மையை உலகிற்கு சொல்ல முற்படுகின்றவர்களுடன் என்னை இணைத்துக் கொள்கின்றேன், நீங்கள் தமிழர் நாகரீகம் என்பது ஆரியரது நாகரீகத்திற்கு பிறகானது என்கின்றீர்கள். 

2 hours ago, மல்லிகை வாசம் said:

ஒருவரது / ஒரு குழுவினது மத நம்பிக்கையை அவமதிப்பது நாகரீகமடைந்த முன்னேறிய சமுதாயத்தின் நற்பண்பு அல்ல. அது மிருகத்தனமானது. மற்றவர்கள் சுதந்திரத்தில் அநாவசியமாக மூக்கை நுழைப்பது. அன்று ஆரியர் செய்வதாக நீங்கள் கூறும் அநியாயத்துக்கு ஒப்பானது. அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் செய்த கொடுமையை சீர்திருத்தம் என்று போர்வையில் இந்து தமிழர்களின் நம்பிக்கையை புண்படுத்துவது கேவலமானது. எனவே களையப்பட வேண்டியது உங்களைப் போன்றவர்களின் மூக்கு நுழைத்தல்கள் தான்!😊

மீண்டும் என் கருத்துகளை வாசிக்கவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.