Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரிஸிலுள்ள நோட்ரே டாம் தேவாலயத்தில் பாரிய தீ விபத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரிஸில் 850 வருடங்கள் பழைமையான கட்டிடத்தில் தீ

paris-fire-720x450.jpg

பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள நோட்ரே டாம் தேவாலயத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

850 வருடங்கள் பழைமையான குறித்த கட்டிடம் ஐரோப்பிய கட்டிட கலையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் வானுயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில், சற்றுமுன்னர் இந்த தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ கொளுந்துவிட்டு எரிந்துவரும் நிலையில், தீயை அணைக்க மீட்புப் படையினர் போராடி வருகின்றனர். தீ ஏற்பட்ட சில நிமிடங்களில் கூரை சரிந்து விழுந்துள்ளது. பின்னர் ஏனைய பகுதிகள் கட்டிம் கட்டிமாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

தீ விபத்தினால் பரிஸின் பெரும்பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கின்றது. தீ ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

12ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட குறித்த கட்டிடம் வரலாற்று பொக்கிஷமாக காணப்பட்டது. வருடந்தோறும் மில்லியன் கணக்காக பார்வையாளர்கள் இங்கு பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டு மக்களுக்கு ஆற்றவிருந்த உரையை ரத்துசெய்த ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், தீ ஏற்பட்ட பகுதிக்கு பயணித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

http://athavannews.com/பரிஸில்-850-வருடங்கள்-பழையா/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில நேரம் முஸ்லீம் தீவிரவாதிகளின் செயலாக இருக்குமென்று இங்கு ஒருசிலர் கதைக்கின்றனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

சில நேரம் முஸ்லீம் தீவிரவாதிகளின் செயலாக இருக்குமென்று இங்கு ஒருசிலர் கதைக்கின்றனர்.

இப்படியான  வதந்திகள் உலாவருவதில் ஆச்சரியமில்லை.

ஆனால் தேவாலாயத்தில் திருத்தவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் அங்கு தீப்பிடிக்க சாத்தியங்கள் அதிகம் இருந்திருக்கலாம். விசாரணை நடந்து எல்லாம் வெளிவரும்தானே.

இத்தீ விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. இன்று அதிகாலை 4 மணியளவில் தீயணைப்பு வீரர்களின் பெரும் முயற்சியின் பலனால் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆலயத்தின் பிரதானமாக பகுதிசேதமடைய வில்லை என கூறுகிறார்கள் .
 ஆலயத்தின் கூரையொன்று தீயினால் கருகி விழும் காட்சியைப் பார்க்கும்போது  கவலையாக  இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலை தரும் ஒரு அழிவு! இரு நூற்றாண்டுகளாக மூன்று நான்கு தலைமுறைகளுக்குரிய மக்கள் கட்டிய அற்புதமான மத்திய கால ஐரோப்பாவின் கட்டிடக் கலை சின்னம் இந்த ஆலயம்!. சில ஆண்டுகள் முன்பு கள உறவு கலைஞன் Ken Follett எனும் வெல்ஷ் எழுத்தாளரின் வரலாற்று நாவல்களை இங்கு அறிமுகம் செய்தார். இந்த எழுத்தாளர் எழுதிய  "Pillars of the Earth" என்ற நாவலில் எவ்வாறு நொட்ரே டாம் போன்ற ஒரு பேராலயத்தை மத்திய கால ஐரோப்பாவில் கட்டுகிறார்கள் என அழகாக விபரித்திருப்பார். Rib vault, flying buttresses எனப் பல மத்திய ஐரோப்பிய கால பொறியியல் சாதனைகளுக்கு உதாரணமாக விளங்கியது இந்த ஆலயம்.

உலகிலேயே அதிக மக்களைக் கவரும் பழமைவாய்த கட்டிடங்களில் முதல் நிலையில் (வருடாந்தம் 12 மில்லியன் பேர் இங்கு வருகின்றனர்) இருந்த கட்டடம். உலகிலேயே மிகப் பழமையான கூரையைக் கொண்ட கட்டடம். மத பேதங்களைத் தாண்டி அனைவரையும் கவலையடைய வைத்தது.

நேற்றுத் தொலைக்காட்சியில் நேரடியாக எரியும் காட்சியைப் பார்த்துப் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். அதில் ஒருவரது கருத்து, ‘பல நூற்றாண்டுகளாகப் பலதரப்பட்ட போர்களையும் பிரெஞ்சுப் புரட்சி புரட்சியையும் உலகப் போரின் குண்டு வீச்சுக்களையும் தாண்டி வாழ்ந்த கட்டடத்தை இவ்வளவு வசதிகள் உள்ள 21 ஆம் நூற்றாண்டில் பலிகொடுக்கிறோம். தொலைக்காட்சியில் நேரடியாக அது எரிவதைப் பார்த்து அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாதவர்களாகத் தவிக்கிறோம் ’ என்றார்.

இக் கருத்து முள்ளிவாய்க்கால் முடிவை நினைவுபடுத்தியது.
ஆனால் ஒரே வித்தியாசம், அடுத்த நாளே மக்கள் முழுவதும் ஒன்றுதிரண்டு அக் கோயிலை மீண்டும் கட்டியெழுப்ப முன்வந்துள்ளனர். மரப் பலகை வினியோகித்தர்கள் ஒன்றுசேர்ந்து கட்டுமானத்துக்குத் தேவையான அத்தனை மரங்களையும் தருகிறோம் என்றனர். பலதரப்பட்டவர்களின் உதவித் தொகை ஒரே நாளில் 700 மில்லியன் யூராக்களைத் தாண்டியுள்ளது. தோல்வியிலும் அழிவிலும் இருந்துதான் பல நாடுகளும் இனங்களும் வேகமாக முன்னேறியுள்ளன. எம்மால் மட்டும் இது முடியாமல் போனது.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, இணையவன் said:

உண்மைதான் அந்த விபத்தை தொலைக்காடசியில் பார்க்கும்போதும் உயர்ந்த கோபுரம் உடைந்து விழும்போதும் மனம் பேதலித்துப்போய் கிடந்தது......!  

  • கருத்துக்கள உறவுகள்

நெப்போலியன் முடி சூடிக் கொண்டதும், 
10,000  மக்கள் உள்ளே இருக்கும் அளவிற்கு பெரிதானதும்... இந்தத் தேவாலயம்  என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, இணையவன் said:

இக் கருத்து முள்ளிவாய்க்கால் முடிவை நினைவுபடுத்தியது.
ஆனால் ஒரே வித்தியாசம், அடுத்த நாளே மக்கள் முழுவதும் ஒன்றுதிரண்டு அக் கோயிலை மீண்டும் கட்டியெழுப்ப முன்வந்துள்ளனர். மரப் பலகை வினியோகித்தர்கள் ஒன்றுசேர்ந்து கட்டுமானத்துக்குத் தேவையான அத்தனை மரங்களையும் தருகிறோம் என்றனர். பலதரப்பட்டவர்களின் உதவித் தொகை ஒரே நாளில் 700 மில்லியன் யூராக்களைத் தாண்டியுள்ளது. தோல்வியிலும் அழிவிலும் இருந்துதான் பல நாடுகளும் இனங்களும் வேகமாக முன்னேறியுள்ளன. எம்மால் மட்டும் இது முடியாமல் போனது.

பகிரங்கமாக ஒரு தலைமை அல்லது கழகம் நேரடியாக ஈடுபட்டால் சகலதும் சாத்தியம்.

  • கருத்துக்கள உறவுகள்

கவலை தரக் கூடிய விடயம்...எப்படித் தான் திருத்தி அமைத்தாலும் பழைய கட்டிட கலைக்கு ஈடாகாது...இதே எங்கள் புகழ் பெற்ற சைவ கோயிலுக்கு ஏதாவது நடந்திருந்தது எம் மக்கள் திருத்த வெளிக்கிட்டால் இங்கிருப்பவர்கள் துள்ளி குதிச்சசிருப்பினம்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிதான் பிரான்சின் நோர்மண்டி பகுதியில் இருந்து வந்த வில்லியம் என்ற குறுநில மன்னன் 1066 ஆண்டில் இங்கிலாந்தினை கைப்பற்றி, கட்டிய வின்சர் கோட்டை ஒரு 27 வருசத்துக்கு முன்னர் 1992ல் எரிந்தது. 

பிரிட்டிஷ் ராணியம்மாவின் வீடு எரிஞ்சு போட்டுதே என்று  குயோ, முறையோ எண்டு, உலகெங்கும் இருந்து காசு கொட்டியது.

அந்த மாதிரி கட்டி விட்டினம்.

அதேபோல தான், உதையும் கட்டுவினம். 

Image result for when windsor castle burned

Image result for windsor castle

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

உது உண்மையான விபத்தா அல்லது திருத்தி கட்ட காசு காணாததால் இப்படி ஒரு விபத்தை அவர்களே ஏற்படுத்தினார்களோ தெரியவில்லை...எது எப்படி இருந்தாலும் இந்த ஆலயம் எரிஞ்சது என்று ஒப்பாரி வைக்கும் பிரென்ஞ் மக்களை பார்க்கும் போது இங்கிருக்கும் சிலருக்கு மூட  நம்பிக்கையாய் தெரியாது 
"எனக்கு வந்தால் இரத்தம் உனக்கு வந்தால் தக்காளி சட்னி".

  • கருத்துக்கள உறவுகள்
On 4/17/2019 at 2:33 PM, ரதி said:

கவலை தரக் கூடிய விடயம்...எப்படித் தான் திருத்தி அமைத்தாலும் பழைய கட்டிட கலைக்கு ஈடாகாது...இதே எங்கள் புகழ் பெற்ற சைவ கோயிலுக்கு ஏதாவது நடந்திருந்தது எம் மக்கள் திருத்த வெளிக்கிட்டால் இங்கிருப்பவர்கள் துள்ளி குதிச்சசிருப்பினம்

உங்களுக்கு பிரச்சினைகள் பலதும் பத்தும் கூடிப் போயிட்டுது.. 😁

On 4/17/2019 at 2:33 PM, ரதி said:

கவலை தரக் கூடிய விடயம்...எப்படித் தான் திருத்தி அமைத்தாலும் பழைய கட்டிட கலைக்கு ஈடாகாது...இதே எங்கள் புகழ் பெற்ற சைவ கோயிலுக்கு ஏதாவது நடந்திருந்தது எம் மக்கள் திருத்த வெளிக்கிட்டால் இங்கிருப்பவர்கள் துள்ளி குதிச்சசிருப்பினம்

பிரெஞ்சு மக்களுக்கு என தேசம் இருக்கின்றது. அவர்கள் போரிட்டு வென்ற விடுதலை இருக்கின்றது. மற்ற நாடுகளில் இருந்து பிழைப்புக்கு வரும் மக்களுக்கும் அகதிகளுக்கும் மீள் வாழ்வு கொடுக்கும் அளவுக்கு வளம் இருக்கின்றது, எனவே அவர்கள் மீள கட்டுவதில் பிரச்சனை இல்லை.

கோவில்களுக்கு முன் பிச்சை எடுக்கும் நிலையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களும் இருக்க வீடு அற்ற நிலையில் அகதிகளாக எம்மவரும் இருக்கும் நிலையில் ஓர் கோவிலுக்கோ அல்லது தேவாலயத்துக்கோ வீணாக வளம் கொட்டப்படுமாயின் துள்ளி குதித்து எதிர்க்க தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 இங்கிருக்கும் பல சிரியா அகதிகள் பிரெஞ்சு விமானப்படை  குண்டுவீசி அழித்த நகரங்களின் படங்களை என்னிடம் காட்டினார்கள். அதை விட இந்த தேவாலய அழிவு எனக்கு பெரிதாக தெரியவில்லை.

தேன் கூடுமாதிரி இருந்த இனத்தை சிதறடித்த பெருமை பிரான்ஸ் மற்றும் வல்லரசுகளுக்கு உண்டு.

 இங்கே இரத்தக்கண்ணீர் வடிப்பவர்கள் ஈராக் சிரியா லிபியா போன்ற நாடுகளில் குண்டு வீசி தாக்கிய இடங்களையும் பாருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.