Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Featured Replies

நான் கிரிக்கட் பார்ப்பதில்லை. எனவே பார்வையாளராக இணைந்திருக்கிறேன். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • Replies 1.4k
  • Views 120.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Lara said:

நான் கிரிக்கட் பார்ப்பதில்லை. எனவே பார்வையாளராக இணைந்திருக்கிறேன். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நீங்கள் கிரிக்கெட் பிரியராக இருப்பீர்கள் என்று உங்கள் பெயரை வைத்து நினைத்திருந்தேன்.

brian-m.jpg

ஆனால் நீங்கள் இந்த லாராவா??😁

043bd4e2-4653-465a-92bf-bed9d61bbad3?bas

1 minute ago, கிருபன் said:

நீங்கள் கிரிக்கெட் பிரியராக இருப்பீர்கள் என்று உங்கள் பெயரை வைத்து நினைத்திருந்தேன்.

brian-m.jpg

ஆனால் நீங்கள் இந்த லாராவா??😁

043bd4e2-4653-465a-92bf-bed9d61bbad3?bas

நான் முன்னர் கிரிக்கெட் பிரியையாக இருந்தேன். ஆனால் பல வருடங்களாக கிரிக்கெட் பார்க்கவில்லை. 😊

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Lara said:

நான் முன்னர் கிரிக்கெட் பிரியையாக இருந்தேன். ஆனால் பல வருடங்களாக கிரிக்கெட் பார்க்கவில்லை. 😊

உலகக்கோப்பையில் இருந்து மீண்டும் பார்க்க ஆரம்பிக்கலாமே!

நான் அவுஸ்திரேலியா- சிறிலங்கா மட்சை பார்ப்பதற்கு ரிக்கற் வாங்கியுள்ளேன்😀

ஆதரவு கட்டாயம் அவுஸ்திரேலியாவுக்குத்தான்😎

3 minutes ago, கிருபன் said:

உலகக்கோப்பையில் இருந்து மீண்டும் பார்க்க ஆரம்பிக்கலாமே!

நான் அவுஸ்திரேலியா- சிறிலங்கா மட்சை பார்ப்பதற்கு ரிக்கற் வாங்கியுள்ளேன்😀

ஆதரவு கட்டாயம் அவுஸ்திரேலியாவுக்குத்தான்😎

ம்ம்ம், நேரம் கிடைத்தால் பார்க்கிறேன். நன்றி. நானும் ஆதரவு அவுஸ்திரேலியாவுக்கு தான்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கிருபன் said:

உலகக்கோப்பையில் இருந்து மீண்டும் பார்க்க ஆரம்பிக்கலாமே!

நான் அவுஸ்திரேலியா- சிறிலங்கா மட்சை பார்ப்பதற்கு ரிக்கற் வாங்கியுள்ளேன்😀

ஆதரவு கட்டாயம் அவுஸ்திரேலியாவுக்குத்தான்😎

கிருபன், முகத்தை துடையுங்கோ😀 வழியுது.😅..அவர் பெண் இல்லை 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

ம்ம்ம், நேரம் கிடைத்தால் பார்க்கிறேன். நன்றி. நானும் ஆதரவு அவுஸ்திரேலியாவுக்கு தான்.

நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் ஆதரவு குடுங்கோ ஆனால் போட்டியில் சும்மா பங்கு பற்றுங்கோ, பிறகு அதது அதன் விதிப்படி நடக்கட்டும்......!   😁

3 hours ago, suvy said:

நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் ஆதரவு குடுங்கோ ஆனால் போட்டியில் சும்மா பங்கு பற்றுங்கோ, பிறகு அதது அதன் விதிப்படி நடக்கட்டும்......!   😁

இந்த விபரீத விளையாட்டுக்கு நான் வரவில்லை. 😊

திருத்தம்: யார் யார் விளையாடுகிறார்கள் என்ற தகவலை முன்னரே பகிர்ந்துள்ளதால் அதுபற்றிய கருத்தை நீக்கியுள்ளேன்.

Edited by Lara

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/30/2019 at 9:24 AM, சுவைப்பிரியன் said:

தலை சுத்துது.என்டாலும் பார்ப்பம்.

யோவ்...  மெல்லமாய் கதையுங்கப்பா...... உங்களுக்கு தலைதான் சுத்துது.....எனக்கு எல்லாமே சுத்துது..... அமைதி அமைதி.....என்னட்டை மணி ஐடியா இருக்கு 😎....  எல்லாம் வெட்டியாடலாம் ....ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம்.😆

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2019 at 11:54 PM, குமாரசாமி said:

யோவ்...  மெல்லமாய் கதையுங்கப்பா...... உங்களுக்கு தலைதான் சுத்துது.....எனக்கு எல்லாமே சுத்துது..... அமைதி அமைதி.....என்னட்டை மணி ஐடியா இருக்கு 😎....  எல்லாம் வெட்டியாடலாம் ....ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம்.😆

பயபுள்ளைங்க ரெடியாகத்தான் இருக்காங்க!

இரவு முழுதும் மண்டையை குடைந்து கணிப்புக்களை உருவாக்கியிருக்கின்றேன். இனி அதை AI algorithm, weather prediction எல்லாத்தையும் போட்டு கலக்கி இறுதி முடிவுகளை எடுக்கவேண்டும்😬

  • கருத்துக்கள உறவுகள்

14 minutes ago, கிருபன் said:

பயபுள்ளைங்க ரெடியாகத்தான் இருக்காங்க!

இரவு முழுதும் மண்டையை குடைந்து கணிப்புக்களை உருவாக்கியிருக்கின்றேன். இனி அதை AI algorithm, weather prediction எல்லாத்தையும் போட்டு கலக்கி இறுதி முடிவுகளை எடுக்கவேண்டும்😬

                                   Image associée

                    இவரை பாரடி எட்டாவதா வாறத்துக்கு எவ்வளவு பில்டப் கொடுக்கிறார்.......!   😋

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

                                   Image associée

                    இவரை பாரடி எட்டாவதா வாறத்துக்கு எவ்வளவு பில்டப் கொடுக்கிறார்.......!   😋

எட்டாவது வருபவர் கிரிக்கெட்டை எட்டியும் பார்க்காதவராக இருக்கவேண்டும். நான் தினமும் பார்க்கின்றேனே!

  • கருத்துக்கள உறவுகள்
On 4/29/2019 at 2:02 PM, ஈழப்பிரியன் said:

2019 உலக கிண்ண கிரிக்கட் விளையாட்டுப் போட்டி இம்முறை இங்கிலாந்தில் மே 30இல் தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறுகிறது.

இதில் 10 அணிகள் பங்குபற்றுகின்றன.

அவையாவன:
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பங்காளாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், மேற்கு இந்தியத்தீவுகள் 

ஆரம்பச் சுற்றுப் போட்டிகள்
கீழே உள்ள ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்
வெற்றி (Win)  - 2, தோல்வி  (Loss)- 0, சமநிலை (Tie) - 1, முடிவில்லை (No Result) - 1
வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் சமநிலை அல்லது முடிவில்லை என்று குறிப்பிடவேண்டும்.
அதிக பட்சம் 90 புள்ளிகள் மொத்தமாகக் கிடைக்கலாம்.

1) மே 30.  இங்கிலாந்து எதிர்  தென்னாபிரிக்கா

2) மே 31. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் பாகிஸ்தான்

3) ஜூன் 1. நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா

4) ஜூன் 1. ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

5) ஜூன் 2. தென்னாபிரிக்கா எதிர் பங்காளாதேஷ்

6) ஜூன் 3. இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்

7) ஜூன் 4. ஆப்கானிஸ்தான் எதிர் சிறிலங்கா

8)ஜூன் 5. தென்னாபிரிக்கா எதிர்  இந்தியா

9) ஜூன் 5. பங்காளாதேஷ் எதிர்  நியூஸிலாந்து

10) ஜூன் 6. அவுஸ்திரேலியா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

11) ஜூன் 7. பாகிஸ்தான் எதிர்  சிறிலங்கா

12) ஜூன் 8. இங்கிலாந்து  எதிர்  பங்காளாதேஷ்

13) ஜூன் 8. ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து

14) ஜூன் 9. இந்தியா  எதிர்  அவுஸ்திரேலியா

15) ஜூன் 10. தென்னாபிரிக்கா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

16) ஜூன் 11. பங்காளாதேஷ்  எதிர்  சிறிலங்கா

17) ஜூன் 12. அவுஸ்திரேலியா  எதிர்  பாகிஸ்தான்.

18) ஜூன் 13.இந்தியா  எதிர்  நியூஸிலாந்து

19) ஜூன் 14. இங்கிலாந்து  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

20) ஜூன் 15. சிறிலங்கா  எதிர்  அவுஸ்திரேலியா

21) ஜூன் 15. தென்னாபிரிக்கா எதிர்  ஆப்கானிஸ்தான்.

22) ஜூன் 16. இந்தியா  எதிர்  பாகிஸ்தான்.

23) ஜூன் 17. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  பங்காளாதேஷ்.

24) ஜூன் 18. இங்கிலாந்து  எதிர்  ஆப்கானிஸ்தான்.

25) ஜூன் 19. நியூஸிலாந்து  எதிர்  தென்னாபிரிக்கா.

26) ஜூன் 20. அவுஸ்திரேலியா  எதிர்  பங்காளாதேஷ்.

27) ஜூன் 21. இங்கிலாந்து  எதிர்  சிறிலங்கா.

28)  ஜூன் 22. இந்தியா  எதிர்  ஆப்கானிஸ்தான்.

29)  ஜூன் 22. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  நியூஸிலாந்து.

30) ஜூன் 23. பாகிஸ்தான்  எதிர்  தென்னாபிரிக்கா.

31) ஜூன் 24. பங்காளாதேஷ்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

32) ஜூன் 25. இங்கிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

33) ஜூன் 26. நியூஸிலாந்து  எதிர்  பாகிஸ்தான்.

34) ஜூன் 27.மேற்கு இந்தியத்தீவுகள் எதிர்  இந்தியா.

35) ஜூன் 28. சிறிலங்கா  எதிர்  தென்னாபிரிக்கா.

36) ஜூன் 29. பாகிஸ்தான்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

37) ஜூன் 29. நியூஸிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

38) ஜூன் 30. இங்கிலாந்து  எதிர்  இந்தியா.

39) ஜூலை 1. சிறிலங்கா  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.

40 ) ஜூலை 2. பங்காளாதேஷ்  எதிர்  இந்தியா.

41) ஜூலை 3.இங்கிலாந்து  எதிர்  நியூஸிலாந்து

42) ஜூலை 4. ஆப்கானிஸ்தான்  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.

43) ஜூலை 5. பாகிஸ்தான்  எதிர்  பங்காளாதேஷ்.

44) ஜூலை 6. சிறிலங்கா  எதிர்  இந்தியா.

45) ஜூலை 6. அவுஸ்திரேலியா  எதிர்  தென்னாபிரிக்கா.

46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)

47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - ? (3 புள்ளிகள்)
#2 - ? (2 புள்ளிகள்)
#3 - ? (1 புள்ளி)
#4 - ? (0)

48) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

இறுதிச் சுற்றுப் போட்டிகள்

49) முதலாவதாகவும்  நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.

52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

போட்டி விதிகள்

1) போட்டி முடிவு மே 29 இங்கிலாந்து நேரப்படி நள்ளிரவு 12 மணி

2) ஒருவர் ஒருமுறை தான் பங்கு கொள்ளலாம்.

3) பதில் அளித்த பின்பு திருத்தம் ஏதாவது செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4) ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால் முதலில் பங்குபற்றியவருக்கு முதலிடம் வழங்கப்படும்.
 
நான் கிரிக்கெட் பார்த்து 15 வருடங்களுக்கு மேலாகிறது. உங்கள் முயற்சிக்கு ஆதரவாக நானும் பங்கு கொள்கிறேன். எனது தெரிவுகளை எப்போது, எப்பிடி தெரிவிக்க வேண்டும்? ஏதாவது Excel அல்லது Google Sheet இருக்கிறதா?  இதுவரை யாழ் களத்தில் இப்பிடியான போட்டிகளில் பங்கு கொண்டதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி நிச்சயம் என்று சொல்லும் எனது கணிப்புக்கள்:

மழை பெரிதாக ஆட்டங்களைத் தடைபண்ணாதாம்!😎😎

1) மே 30.  இங்கிலாந்து எதிர்  தென்னாபிரிக்கா

இங்கிலாந்து

2) மே 31. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் பாகிஸ்தான்

பாகிஸ்தான்

3) ஜூன் 1. நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா

நியூஸிலாந்து

4) ஜூன் 1. ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா

5) ஜூன் 2. தென்னாபிரிக்கா எதிர் பங்காளாதேஷ்

தென்னாபிரிக்கா

6) ஜூன் 3. இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்

பாகிஸ்தான்

7) ஜூன் 4. ஆப்கானிஸ்தான் எதிர் சிறிலங்கா

சிறிலங்கா

8)ஜூன் 5. தென்னாபிரிக்கா எதிர்  இந்தியா

இந்தியா

9) ஜூன் 5. பங்காளாதேஷ் எதிர்  நியூஸிலாந்து

நியூஸிலாந்து

10) ஜூன் 6. அவுஸ்திரேலியா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

மேற்கு இந்தியத்தீவுகள்

11) ஜூன் 7. பாகிஸ்தான் எதிர்  சிறிலங்கா

பாகிஸ்தான்

12) ஜூன் 8. இங்கிலாந்து  எதிர்  பங்காளாதேஷ்

இங்கிலாந்து

13) ஜூன் 8. ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து

நியூஸிலாந்து

14) ஜூன் 9. இந்தியா  எதிர்  அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா

15) ஜூன் 10. தென்னாபிரிக்கா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

தென்னாபிரிக்கா

16) ஜூன் 11. பங்காளாதேஷ்  எதிர்  சிறிலங்கா

பங்காளாதேஷ்

17) ஜூன் 12. அவுஸ்திரேலியா  எதிர்  பாகிஸ்தான்.

அவுஸ்திரேலியா

18) ஜூன் 13.இந்தியா  எதிர்  நியூஸிலாந்து

இந்தியா

19) ஜூன் 14. இங்கிலாந்து  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

இங்கிலாந்து

20) ஜூன் 15. சிறிலங்கா  எதிர்  அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா

21) ஜூன் 15. தென்னாபிரிக்கா எதிர்  ஆப்கானிஸ்தான்.

தென்னாபிரிக்கா

22) ஜூன் 16. இந்தியா  எதிர்  பாகிஸ்தான்.

இந்தியா

23) ஜூன் 17. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  பங்காளாதேஷ்.

மேற்கு இந்தியத்தீவுகள்

24) ஜூன் 18. இங்கிலாந்து  எதிர்  ஆப்கானிஸ்தான்.

இங்கிலாந்து

25) ஜூன் 19. நியூஸிலாந்து  எதிர்  தென்னாபிரிக்கா.

தென்னாபிரிக்கா

26) ஜூன் 20. அவுஸ்திரேலியா  எதிர்  பங்காளாதேஷ்.

அவுஸ்திரேலியா

27) ஜூன் 21. இங்கிலாந்து  எதிர்  சிறிலங்கா.

இங்கிலாந்து

28)  ஜூன் 22. இந்தியா  எதிர்  ஆப்கானிஸ்தான்.

இந்தியா

29)  ஜூன் 22. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  நியூஸிலாந்து.

மேற்கு இந்தியத்தீவுகள்

30) ஜூன் 23. பாகிஸ்தான்  எதிர்  தென்னாபிரிக்கா.

தென்னாபிரிக்கா

31) ஜூன் 24. பங்காளாதேஷ்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

பங்காளாதேஷ்

32) ஜூன் 25. இங்கிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

இங்கிலாந்து

33) ஜூன் 26. நியூஸிலாந்து  எதிர்  பாகிஸ்தான்.

பாகிஸ்தான்

34) ஜூன் 27.மேற்கு இந்தியத்தீவுகள் எதிர்  இந்தியா.

இந்தியா

35) ஜூன் 28. சிறிலங்கா  எதிர்  தென்னாபிரிக்கா.

தென்னாபிரிக்கா

36) ஜூன் 29. பாகிஸ்தான்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

பாகிஸ்தான்

37) ஜூன் 29. நியூஸிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

அவுஸ்திரேலியா

38) ஜூன் 30. இங்கிலாந்து  எதிர்  இந்தியா.

இந்தியா

39) ஜூலை 1. சிறிலங்கா  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.

மேற்கு இந்தியத்தீவுகள்

40 ) ஜூலை 2. பங்காளாதேஷ்  எதிர்  இந்தியா.

இந்தியா

41) ஜூலை 3.இங்கிலாந்து  எதிர்  நியூஸிலாந்து

இங்கிலாந்து

42) ஜூலை 4. ஆப்கானிஸ்தான்  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.

மேற்கு இந்தியத்தீவுகள்

43) ஜூலை 5. பாகிஸ்தான்  எதிர்  பங்காளாதேஷ்.

பாகிஸ்தான்

44) ஜூலை 6. சிறிலங்கா  எதிர்  இந்தியா.

இந்தியா

45) ஜூலை 6. அவுஸ்திரேலியா  எதிர்  தென்னாபிரிக்கா.

தென்னாபிரிக்கா

46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? 

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா, தென்னாபிரிக்கா
 
47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - இந்தியா
#2 - இங்கிலாந்து
#3 - தென்னாபிரிக்கா
#4 - அவுஸ்திரேலியா

48) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

ஆப்கானிஸ்தான்

49) முதலாவதாகவும்  நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

இந்தியா
 
50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

இங்கிலாந்து
 
51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.

இந்தியா
 
52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.

இந்தியா

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

இங்கிலாந்து

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

சிறிலங்கா

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

இந்தியா

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

இந்தியா

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

தென்னாபிரிக்கா
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/29/2019 at 12:43 AM, ஈழப்பிரியன் said:

1200px-ICC_Cricket_World_Cup_2019_logo.s

 போட்டி ஒழுங்கமைப்பாளர் எல்லாருக்கும் அடியேனின் ஒரு சிறு வேண்டுகோள்.
போட்டியிலை பங்கு பற்றுற ஆக்களுக்கு கடுமையான சட்டவிதிகள் குடுக்க வேணும்.....உந்த ஈயடிச்சான் மற்றது  ரோசம் மானமில்லாமல் கொப்பியடிக்கிற ஆக்கள் எல்லாருக்கும் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி வெளியாலை அனுப்பவேணும்....😎

செய்வீர்களா? செய்வீர்களா? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நீர்வேலியான் said:

நான் கிரிக்கெட் பார்த்து 15 வருடங்களுக்கு மேலாகிறது. உங்கள் முயற்சிக்கு ஆதரவாக நானும் பங்கு கொள்கிறேன். எனது தெரிவுகளை எப்போது, எப்பிடி தெரிவிக்க வேண்டும்? ஏதாவது Excel அல்லது Google Sheet இருக்கிறதா?  இதுவரை யாழ் களத்தில் இப்பிடியான போட்டிகளில் பங்கு கொண்டதில்லை. 

அப்படியே கேள்விகளை கொப்பி பண்ணி அவற்றுக்குக் கீழே விடைகளைக் கொடுத்தால் போதும். Google sheet, Excel sheet எல்லாம் தேவையில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

 போட்டி ஒழுங்கமைப்பாளர் எல்லாருக்கும் அடியேனின் ஒரு சிறு வேண்டுகோள்.
போட்டியிலை பங்கு பற்றுற ஆக்களுக்கு கடுமையான சட்டவிதிகள் குடுக்க வேணும்.....உந்த ஈயடிச்சான் மற்றது  ரோசம் மானமில்லாமல் கொப்பியடிக்கிற ஆக்கள் எல்லாருக்கும் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி வெளியாலை அனுப்பவேணும்....😎

செய்வீர்களா? செய்வீர்களா? :cool:

முதல்ல களத்துக்கு வாங்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, நந்தன் said:

முதல்ல களத்துக்கு வாங்க

நாங்கள் களத்திலைதான் நிக்கிறம்...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

அப்படியே கேள்விகளை கொப்பி பண்ணி அவற்றுக்குக் கீழே விடைகளைக் கொடுத்தால் போதும். Google sheet, Excel sheet எல்லாம் தேவையில்லை!

நன்றி கிருபன் , இன்னும் சில கேள்விகள். 
இதை அறிவிக்க வேண்டிய முடிவு திகதி என்ன? ஒரேதடவையில் எல்லா கேள்விகளுக்கும்/போட்டிகளுக்கும் எமது தெரிவை செய்யவேண்டுமா? அல்லது ஒவ்வொரு போட்டிக்கும் முதலில் அந்த போட்டிக்குரிய தெரிவை செய்யலாமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நீர்வேலியான் said:

நான் கிரிக்கெட் பார்த்து 15 வருடங்களுக்கு மேலாகிறது. உங்கள் முயற்சிக்கு ஆதரவாக நானும் பங்கு கொள்கிறேன். எனது தெரிவுகளை எப்போது, எப்பிடி தெரிவிக்க வேண்டும்? ஏதாவது Excel அல்லது Google Sheet இருக்கிறதா?  இதுவரை யாழ் களத்தில் இப்பிடியான போட்டிகளில் பங்கு கொண்டதில்லை. 

நீர்வேலியான் ஏற்கனவே பதிந்தவர்களைப் பார்த்தா எப்படி பதிய வேண்டும் என்பதை ஊகிக்க முடியும்.

5 hours ago, நீர்வேலியான் said:

நன்றி கிருபன் , இன்னும் சில கேள்விகள். 
இதை அறிவிக்க வேண்டிய முடிவு திகதி என்ன? ஒரேதடவையில் எல்லா கேள்விகளுக்கும்/போட்டிகளுக்கும் எமது தெரிவை செய்யவேண்டுமா? அல்லது ஒவ்வொரு போட்டிக்கும் முதலில் அந்த போட்டிக்குரிய தெரிவை செய்யலாமா?

5 hours ago, நீர்வேலியான் said:

போட்டி விதிகள்

1) போட்டி முடிவு மே 29 இங்கிலாந்து நேரப்படி நள்ளிரவு 12 மணி

 2) ஒருவர் ஒருமுறை தான் பங்கு கொள்ளலாம்.

3) பதில் அளித்த பின்பு திருத்தம் ஏதாவது செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

 4) ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால் முதலில் பங்குபற்றியவருக்கு முதலிடம் வழங்கப்படும்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

போட்டி ஒழுங்கமைப்பாளர் எல்லாருக்கும் அடியேனின் ஒரு சிறு வேண்டுகோள்.
போட்டியிலை பங்கு பற்றுற ஆக்களுக்கு கடுமையான சட்டவிதிகள் குடுக்க வேணும்.....உந்த ஈயடிச்சான் மற்றது  ரோசம் மானமில்லாமல் கொப்பியடிக்கிற ஆக்கள் எல்லாருக்கும் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி வெளியாலை அனுப்பவேணும்....😎

 செய்வீர்களா? செய்வீர்களா:cool:

இது ஒன்றே போதும்.நன்றி.

கிருபன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மண்ணும் புரியலை..

எந்த அணியின் பின்புலமும் தெரியலை..

அலுவலக வேலையால் நேரமும் பத்தலை..

அதனால் எந்த அணிகளுக்கும் புள்ளிகள் குத்தலை..

ஓய்வான நேரத்தில் சிந்திப்பதை நிறுத்தலை.. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

ஒரு மண்ணும் புரியலை..

எந்த அணியின் பின்புலமும் தெரியலை..

அலுவலக வேலையால் நேரமும் பத்தலை..

அதனால் எந்த அணிகளுக்கும் புள்ளிகள் குத்தலை..

ஓய்வான நேரத்தில் சிந்திப்பதை நிறுத்தலை.. 

                Résultat de recherche d'images pour "vivek memes gif"

தெய்வமே ! என்ன இப்படி சொல்லிப் போட்டீங்கள்....... நான் உங்களைத்தான் நம்பி இருக்கிறன். எனக்கு நான் கடைசியாய் வந்தாலும் பரவாயில்லை நீங்கள் கிருபனுக்கு முன்னால் வந்தாலே போதும்.......!

இந்த விளையாட்டை  மாற்றும் காரணிகள் பல உள்ளன......!

----  காலநிலை குழப்பி விடும்......!

---- நடுவர்கள் விளையாடி விடுவார்கள்......!

---- எதிர்பார்க்கும் வீரர் முதல் பந்திலேயே போய் விடுவார்.....!

----- சில சமயம் மேலே இருப்பவர்கள் விளையாடி விடுவார்கள்....!

----  பிட்சுகள் சொதப்பி விடும்......!

இப்படி ஏகப்பட்ட  விடயங்கள் இருக்கு....... இதெல்லாம் சும்மா லாட்டரீ  போலத்தான் , கொப்பி அடிச்சால் கூட வேலைக்கு ஆகாது. தயங்காமல் பங்கு பற்றவும். தினமும் மனிசிமாரிடம் தோற்றுப்போகிறம் அதுக்கு நண்பர்களிடம் தோற்றால் பரவாய் இல்லை.....!   👍😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

இது ஒன்றே போதும்.நன்றி.

கிருபன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நானும் வாழ்த்துறன்....😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

  .... தினமும் மனிசிமாரிடம் தோற்றுப்போகிறம் அதுக்கு நண்பர்களிடம் தோற்றால் பரவாய் இல்லை.....!   👍😁

இது என்னவோ உண்மைதான்..  அதுவும் ஒரு இன்பமான 'துயரம்'தான்..! :)

அதுவும் 60க்கு மேலே தாண்டிவிட்டால் சொல்லி வேலையில்லை..! 😋

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.